Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் மறுப்பு

Featured Replies

யாழில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் மறுப்பு

 

article_1475741135-IMG_5781.JPG

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் பிரம்படி 2 ஆம் ஒழுங்கைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (06) அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் கூறினர். எனினும் துப்பாக்கிச் சூடு சம்பவம் எதுவும் இடம்பெறவில்லையென யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்தார்.

மேற்படி பகுதியில் புதன்கிழமை (05) மாலை நபர் ஒருவரை பொலிஸார் துரத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இன்று காலையில் அப்பகுதியில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று நடந்துள்ளது. காலையில் பார்த்த போது, பொலிஸார் தேடி வந்ததாக கூறப்படும் சந்தேகநபரின் வீட்டின் மதில் சுவரில் துப்பாக்கியால் சுட்ட அடையாளமும், சன்னமும் காணப்பட்டுள்ளது.

article_1475741705-IMG_5779.JPG

article_1475741717-IMG_5782.JPG

http://www.tamilmirror.lk/183357/ய-ழ-ல-த-ப-ப-க-க-ச-ச-ட-ப-ல-ஸ-ர-மற-ப-ப-

  • தொடங்கியவர்
முச்சக்கரவண்டியில் வந்தோர் கொக்குவிலில்வீடு துப்பாக்கிச் சூடு
முச்சக்கரவண்டியில் வந்தோர் கொக்குவிலில்வீடு துப்பாக்கிச் சூடு
கொக்குவில் பிரம்படிப் பகுதியில் உள்ள வீட்டின் மீது நேற்று  அதிகாலை 3 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த இனம்தெரியாதோர்த  துப்பாக்கி சூடு மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் உயிரிழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை. இருப்பினும் பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. 
 
துப்பாக்கிச்சூட்டைப் பொலிஸாரே மேற்கொண்டிருக்க வேண்டும் என்று பலமான சந்தேகம் உள்ளதென அந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். 
 
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில்
 
வீட்டிலுள்ள இளைஞன் ஒருவருக்கு எதிராக வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. 
photo-2.jpg
நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை 5.45 மணிக்கு பொலிஸ் உடையில் சிலர் வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கதவைத் திறக்குமாறு கோரினர். அந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் 14 வயது சிறுமியும் அவரது இளைய சகோதரர்களுமே இருந்தனர். பொலிஸ் உடையில் வந்தவர்கள் வீட்டுக் கதவைத் திறக்குமாறு வற்புறுத்தவே வீட்டுக் கதவை சிறுமி திறந்துள்ளார். பொலிஸ் உடையில் வந்தவர்கள் வீட்டைச் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர். 
 
வீட்டின் அலுமாரியில் இருந்த அல்பத்தில் ஒரு படத்தை எடுத்தனர். அதன்பின்னர் அல்பத்தைத் துாக்கி எறிந்தனர். வீட்டில் இருந்து வெளியேறும் போது பொலிஸ் உடையில் வந்தவர்கள் நாளை அண்ணா சுடப்பட்டு பிணமாக இருப்பார் என்று சொல்லிக்கொண்டு கைத்துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டிச் சென்றனர். இந்த சம்பவம் நடைபெற்று முடிந்த பின்னணியிலேயே நேற்று அதிகாலை 3 மணிக்கு முச்சக்ககர வண்டியில் வந்த சிலர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனைப் பொலிஸாரே மேற்கொ ண்டிருக்க வேண்டும் என்று பலமாகச் சந்தேகிக்கின்றோம்- என்றார்.

http://onlineuthayan.com/news/18618

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.