Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திரக்கட்சி குறித்த அமெரிக்காவின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்தார் ஜனாதிபதி

Featured Replies

சுதந்திரக்கட்சி குறித்த அமெரிக்காவின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்தார் ஜனாதிபதி
 
 
சுதந்திரக்கட்சி குறித்த  அமெரிக்காவின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்தார் ஜனாதிபதி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி முன்வைத்திருந்த குற்றச்சாட்டை அக்கட்சி யின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முற்றாக நிராகரித்துள்ளார்.
 
இலங்கையின் நல்லிணக்கச் செயன்முறைகள் தாமதமடைவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நிலவிவரும் இனவாதக் கொள்கையே காரணம் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.
 
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு சென்றிருந்தார்.இந்த விஜயத்தின் ஓரங்கமாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளரை ஜனாதிபதி மைத்திரிபால சந்தித்து கலந்து ரையாடினார்.
 
இதன்போது அரசியலமைப்பு உருவாக்கம், அதிகாரப் பரவல், யுத்தக் குற்ற விசாரணை போன்ற விடயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்று இந்தக் கலந்துரையாடலின்போது ஜோன் கெரி குறிப்பிட்டிருந்தார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் காணப்படுகின்ற உள்ளக இனவாத நிலையே இவற்றிற்குக் காரணம் என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
 
எனினும் இந்தக் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படுத்தும் விடயங்களை தேசிய அளவில் முன்னெடுக்க முடியாது என்று ஜோன் கெரியிடம் விளங்கப்படுத்தியுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது

http://onlineuthayan.com/news/18668

ஜோன் கெரியின் குற்றச்சாட்டை மறுத்தார் மைத்திரிபாலசிறிசேன!

சிறீலங்காவில் தற்போது ஆட்சியிலிருக்கும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்பாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வெளியிட்ட குற்றச்சாட்டினை அக்கட்சியின் தலைவரும், சிறீலங்காவின் அதிபருமான மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

சிறீலங்காவில் நல்லிணக்கம் தாமதமடைவதற்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவியுள்ள இனவாதக் கொள்கையே காரணம் என ஜோன் கெரி குற்றம் சுமத்தியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்குப் பயணம் செய்திருந்தார்.

இந்நிலையில், அவரின் அமெரிக்கப் பயணத்தின் ஓரங்கமாக அமெரிக்க இராஜாங்கச் செயலரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார்.

இதன்போது, புதிய அரசியலமைப்பு உருவாக்கம், அதிகாரப் பரவலாக்கம் மற்றும் யுத்தக் குற்ற விசாரணை தொடர்பாக முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லையென ஜோன் கெரி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்திருந்தார்.

இதற்கு, மைத்திரிபாலசிறிசேன தலைமையில் உள்ள சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உள்ளக இனவாத நிலமையே காரணம் எனவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

ஜோன் கெரியின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்த மைத்திரிபால சிறிசேன, சிறீலங்காவின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்தும் விடயங்களை தேசிய அளவில் முன்னெடுக்கமுடியாது என ஜோன் கெரிக்கு மைத்திரிபால சிறிசேன விளக்கமளித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

http://thuliyam.com/?p=43945

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.