Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையக மக்களுக்கு ஆதரவாக யாழிலும் போராட்டம்

Featured Replies

மலையக மக்களுக்கு ஆதரவாக யாழிலும் போராட்டம்
 
 
மலையக மக்களுக்கு ஆதரவாக யாழிலும் போராட்டம்
மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துமாறு கோரி சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாண பேருந்து நிலையத்தின் முன்பாக   கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியது. 
 
' முதலாளிகளே! நல்லாட்சியே! மாடாக உழைத்து ஓடாகிப்போன தொழிலாளர்களை வதைக்காதே! 1000 ரூபாய் சம்பளம் வழங்கு!', ' தொழிலாளர்கள் கேட்பது 1000 ரூபாய் முதலாளிகள் முன்வைப்பது பிச்சைக் காசு', ' மலையக  தலைவர்களுக்கு மந்திரிப் பதவி தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள மறுப்பு' , ' தோட்ட முதலாளிகளுக்கு நல்லாட்சி தோட்ட தொழிலாளர்களுக்கு ஏமாற்று ஆட்சி' போன்ற கோசங்களை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், துண்டுப் பிரசுரங்களும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. 
01.JPG
 
02.JPG
 
03.JPG
 
04.JPG
 

http://onlineuthayan.com/news/18793

 

 

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரம் : யாழ்ப்பாணத்தில் போராட்டம்.!

 

 

yal.jpg

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாகவும் அதை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை இடம்பெற்றது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் சமூக அமைப்புக்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

yal2.jpg

தோட்டத் தொழிலாளர்களின் விடயத்தில் முதலாளிகளின் பக்கம் அல்லாமல் தொழிலாளிகளின் சார்பில் சிந்தித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையை எடுக்கவேண்டும்  என்று இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தவறும் பட்சத்தில் இதேபோல் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக வட பகுதி முழுவதும் பாரிய போராட்டங்களை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். 

yal11.jpg

இப்போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி நவ சமாஜ கட்சிய ஆகியனவும் ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/12282

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.