Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

நிலத்திலிருந்து உப்பை அகற்றும் நுட்பம்


Recommended Posts

பதியப்பட்டது

அந்தமான் விவசாயம் 04: நிலத்திலிருந்து உப்பை அகற்றும் நுட்பம்

andaman_3038535f.jpg

 

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட கடலோர, தாழ்வான பகுதிகளில் உள்ள உவர் நிலப்பகுதியை அடுத்தடுத்து அமைக்கப்பட்ட அகலமான வாய்க்காலாகவும் பாத்திகளாகவும் மாற்றி வடிவமைப்பதே அகலப் பாத்தி - வாய்க்கால் (நாழி) முறை.

இதில் இயந்திரங்களின் உதவியுடன் 5-6 மீட்டர் அகலமும் 1.5 2.0 மீட்டர் ஆழமும் கொண்ட வாய்க்கால்கள் கோடைக் காலத்தில் வெட்டப்படுகின்றன. அவ்வாறு வெட்டி எடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு அதே வரிசையில் (மேல் புற மண் பாத்தியின் மேலும், ஆழத்தில் வெட்டப்பட்ட மண் பாத்தியின் கீழ்ப் பகுதியில் இருக்குமாறும் போடப்படுகிறது) நான்கு மீட்டர் அகலமுள்ள பாத்திகள் வாய்க்காலின் விளிம்பில் இருந்து ஒரு மீட்டர் தள்ளி 1:1 என்னும் சரிவு விகிதத்தில் உருவாக்கப்படுகின்றன. நிலத்தின் அமைப்புக்கு ஏற்றதுபோல் 40-80 மீட்டர்வரை நீளம் இருக்கலாம். இவ்வாறு தொடர்ச்சியாக ஒரே இடத்தில் மூன்று முதல் ஆறு அகலப் பாத்தியும் வாய்க்காலும் உருவாக்கப்படுகின்றன.

andaman_2_3038534a.jpg

உப்புத்தன்மை குறைய

பின்னர் பாத்திகளைச் சமன் செய்து, நான்கு புறமும் ஒரு அடி அளவில் சிறிய மேடுகள் அமைத்து மழைநீர் சேகரிக்கப்படுகிறது. இந்த மழைநீர் மண்ணில் உள்ள உப்பு, மற்ற நச்சுப்பொருட்களை மழைக்காலத்தில் அடித்துச் சென்று அகல வாய்க்காலில் சேர்க்கிறது. இதனால் மண்ணின் உப்புத்தன்மை குறைகிறது. அதேவேளையில், வாய்க்காலில் சேமிக்கப்பட்ட நீரின் உவர்ப்புத்தன்மை அதிகரிக்கிறது. ஆகவே, முதலாண்டு இறுதியில் வாய்க்காலில் உள்ள நீரை வடித்துவிடுவது நல்லது. இரண்டாம் ஆண்டு முதல் வாய்க்காலில் சேகரிக்கப்படும் மழை நீரின் உப்புத்தன்மை வெகுவாகக் குறைந்துவிடும் என்பதால், பாசனம் செய்யவும் மீன் வளர்க்கவும் உகந்ததாக அது மாறுகிறது. அந்தமானில் அதிக அளவு மழை பெய்வதால் இம்முறை சாத்தியமாகிறது.

அந்தமான் தீவுகளில் இவ்வாறு சேகரிக்கப்பட்ட மழை நீரைக் கொண்டு பாத்திகளில் ஆண்டுக்கு மூன்று முறை காய்கறிகள் பயிரிடப்பட்டுவருகின்றன. இத்துடன் அகலப் பாத்திகள் தரைமட்டத்திலிருந்து 1- 1.5 மீட்டர் உயரத்தில் இருப்பதால் வெள்ளநீரால் சூழப்பட்ட போதும் பயிர்கள் பாதிக்கப்படுவதில்லை. அதேவேளையில் வாய்க்காலில் நெல்லும் மீனும் மீன் குஞ்சுகளும் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. இதனால் ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட தாழ்ந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹெக்டேர் நிலத்தில் இருந்து, ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய்வரை வருவாய் கிடைக்கிறது.

(அடுத்த வாரம்: நெல்லும் மீனும் - இரட்டை லாபம்) 
கட்டுரையாளர், அரசு வேளாண் அலுவலர் 
தொடர்புக்கு: velu2171@gmail.com

http://tamil.thehindu.com/general/environment/அந்தமான்-விவசாயம்-04-நிலத்திலிருந்து-உப்பை-அகற்றும்-நுட்பம்/article9201532.ece?widget-art=four-rel

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு கல்லில்... இரண்டு மாங்காய், என்று இதனைத் தான் சொல்வது.
நிலத்திருந்த உப்பு அகற்றப் பட்டு விவசாயமும், மீன் வளர்ப்பும், நிலத்தடி நீரும் சேகரிக்கப் படுகின்ற நல்ல முறையாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு வழிமுறை . அதிக மழை கிடைக்கும் கடலோரக் கிராமங்களிலும் பயன்படுத்தி விவசாயமும் செய்யலாம் போல ....!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழர் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும். அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தரப்புக்களும் ஒண்றிணைந்து செயற்பட வேண்டும் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இடதுசாரிகளுக்கு என பண்பியல்வு இருக்கிறது. அவர்கள் தமக்கு ஏற்றவாறு சட்டங்களை மாற்றி தமது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருப்பார்கள்.  இதனை உணர்ந்து கொண்டு தமிழர்தரப்பு ஒற்றைமைப்பட வேண்டும். வடக்கையும் கிழக்கையும் பறிகொடுத்து விட்டு, எங்கள் மீது திணிக்கப்பட போகும் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட போகும் என்பதனை உணர்ந்து கொண்டும், உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்களிலும் அவற்றினை தமிழர் தரப்பு பறிக்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இதனை உணர்ந்து தமிழர் தரப்புக்கள் ஒற்றுமைப்பட வேண்டும். இதனை நாம் அழைப்பாக கூட விடுகின்றோம். தேர்தலில் தோற்றுபோனவன் என   பலர்  எள்ளி நகையாடலாம். அவ்வாறில்லாமல் தமிழ் தலைமைகள் ஒன்றுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிளவுபட்ட தமிழர்களாக தொடர்ந்தும் இருக்க வேண்டும் என விரும்பவில்லை. கூட்டு இப்படித்தான் இருக்க வேண்டும் என கூறவில்லை. ஆசன மோதல்களை கைவிட்டு தமிழ் தரப்பு ஒன்றிணைய வேண்டும். தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து விட்டார்கள் என தமிழ் வாக்களர்களை மலினப்படுத்த விரும்பவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் ஒண்றிணைந்து செயற்பட வேண்டும். பொதுக்கட்டமைப்பின் உடைவுக்கு, பொது அமைப்புக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தான் உடைத்தார்கள். அதனை தொடர்ந்து கட்சி தலைவர்களின் ஈகோ மற்றும் ஆசன பங்கீடும் காரணமாக அமைந்திருந்தது என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/208342/
    • எமது நோக்கம் மற்றும் இலக்கின் அடிப்படையில் அனைத்து தரப்பையும் அரவணைத்துச் செல்ல நாங்கள் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சில கருத்தியல் ரீதியான வேறுபாடுகளை களைந்து மன்னார் வவுனியா மாவட்டங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள வெற்றிடங்களையும் கருத்தில்கொண்டு தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு தீர்மானம் எடுத்தோம். இந்த பிரதேசத்தில் வேறுவகையான ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுவதையும் கருத்தில் கொண்டே ஒரு ஒத்த முடிவிற்கு வந்துள்ளோம்.  அத்துடன் 2001 ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் இலக்கின் அடிப்படையில் அனைவரையும் அரவணைத்துச் செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதில் அதிக கரிசனையும் விருப்பமும் எங்களுக்கு இருக்கிறது.  எனது தேர்தல் பிரச்சாரங்களிலும் கூட அந்த ஆணையை வழங்குமாறு மக்களிடம் கேட்டிருக்கிறேன்.  எனவே நாங்கள் ஒன்றாக பலமாக இணைந்து செல்லவேண்டிய தேவையை உணர்ந்திருக்கிறோம். அதற்காக நாங்கள் தொடர்ந்து செயற்படுவோம். நான் தமிழரசுக்கட்சியின் தெரிவுசெய்யப்பட்ட தலைவர். நீதிமன்ற தடையுத்தரவு நீக்கப்பட்டால் நான் தலைவராக செயற்படுவேன்.  அதற்கான காலம் கனிந்துகொண்டிருப்பதாக உணர்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/199019
    • அது உள்ளூராட்சி சபையாகவும் இருக்கலாம், அதை தமிழ் மக்களால் தெரிவு செய்த எம்பிகள், மாகாண சபை ஆதரிக்கும் என்றால் ஐ எம் எவ் அல்ல ஆண்டவனே எதுவும் செய்ய முடியாது. புலிகள் மிகவும் முயன்று பாதியளவு வெற்றியடைந்த விடயம் எமது பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியது. நாமே என் பி பி எம்பிகளை தேர்ந்து அனுப்புவது - அதை அப்படியே ரிவர்ஸ் ஆக்கி விடும்.
    • நிலத்தில் வடிந்திருக்கும்  இரத்தத்த, (புலம்பெயர்ஸ் போலித்  டமில் தேசிய வியாபார) நாய்கள் நக்குவதாகப் போட்டிருந்தால் இன்னும் சிறப்பு.   100% ✅
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.