Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவலில் இருந்த இளைஞன் மரணம்: பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

Featured Replies

காவலில் இருந்த இளைஞன் மரணம்: பொலிஸ் பொறுப்பதிகாரி கைது
 
 

article_1476417340-Police-Arrest.jpg-சொர்ணகுமார் சொரூபன்

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்து, சடலத்தை இரணைமடுக் குளத்தில் போட்ட வழக்குத் தொடர்பில் சந்தேகநபர்களாக அடையாளங் காணப்பட்ட பொலிஸாரில், கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக பண்டார மற்றும் இரண்டு பொலிஸார் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி நீதிமன்றத்தினால் கடந்த 10ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பிரகாரம், சட்டமா அதிபர் திணைக்கள உத்தரவுக்கமைய கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு பொலிஸாரால் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரில் ஒருவர், கடந்த வழக்குத் தவணையில் மன்றில் ஆஜராகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். ஏனைய 4 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் 3 பேர், வியாழக்கிழமை (13) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிந்தக பண்டார, சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஐந்து இளைஞர்கள் மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு சுன்னாகம் பொலிஸார் கைது செய்து இருந்தனர். அது  தொடர்பான வழக்கு விசாரணை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.

அந்நிலையில், கடந்த மாதம் ஜூலை மாதம் 25 ஆம் திகதி குறித்த வழக்கு மல்லாகம் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர்கள் மன்றில் ஆஜராகி இருந்தனர்.

அன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது குற்றச்சாட்டப்பட்ட இளைஞர்கள் மன்றில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தனர்.

தம் மீது பொய்குற்றச்சாட்டு சுமத்தி சுன்னாக பொலிஸார் கைது செய்தனர் எனவும், கைது செய்த பின்னர் தம்மை சுன்னாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து அடித்து மின்சாரம் பாய்ச்சி சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும்,  அதில்  தம்முடன் கைதான சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் தமது நண்பன் சித்திரவதை காரணமாக உயிரிழந்ததாகவும், பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். இந்தச் சம்பவம் 2011 நவம்பர் மாதம் 25ஆம் திகதி நடைபெற்றதாகவும் கூறினர்.

மேலும், உயிரிழந்த தமது நண்பனின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி விட்டு தமது நண்பன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என பொலிஸார் தெரிவித்ததாக நீதவானிடம் தெரிவித்தனர்.
அப்போது சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த சிந்திக்க பண்டார என்பவர் தலைமையிலான மூன்று தமிழ் பொலிஸார் உட்பட எட்டு பேர் இதனுடன் தொடர்புபட்டவர்கள் என என பொலிஸாரின் பெயர் குறிப்பிட்டு மன்றில் வாக்குமூலம் அளித்தனர்.

அதனை அடுத்து நீதிவான் இளைஞர்கள் பெயர் குறிப்பிட்ட பொலிஸார் அனைவரையும் கைது செய்யுமாறும், மூன்று மாத கால பகுதிக்குள் பூரண விசாரணைகளை முன்னெடுத்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், 5 பொலிஸ் சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை, குற்றப்புலனாய்வுப் பொலிஸார், (சடலம் கண்டெடுக்கப்பட்டமை கிளிநொச்சி என்ற அடிப்படையில்) கிளிநொச்சி நீதிமன்றத்தில் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் அவர்களைக் கைது செய்ய நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

http://www.tamilmirror.lk/183902/க-வல-ல-இர-ந-த-இள-ஞன-மரணம-ப-ல-ஸ-ப-ற-ப-பத-க-ர-க-த-

  • தொடங்கியவர்

பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

 

(எஸ்.என்.நிபோஜன்)

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி ஐ.எம்.பண்டார உட்பட நால்வரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா உத்தரவிட்டுள்ளார்.

law-court_2900691b.jpg

2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான புன்னாலைக்கட்டுவான் தெற்கு சுன்னாகத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராசா சுமன்  என்பவர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு உயிரிழந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட சுன்னாகம் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி ஐ.எம்.பண்டார உட்பட நால்வருக்குமே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

 

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை சுன்னாகம் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி ஐ.எம்.பண்டார உட்பட நால்வருக்கும் எதிராக தொடரப்பட்டுள்ள மற்றுமொரு சித்திரவதை தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 19 ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில்,  குறித்த நால்வரும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/12377

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.