Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில்அறிவுத் திருக்கோயில் திறப்பு

Featured Replies

யாழில்அறிவுத் திருக்கோயில் திறப்பு
 
 
 
யாழில்அறிவுத் திருக்கோயில் திறப்பு
யாழ் பிறவுண் வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையினரின் அறிவுத்திருக்கோயில் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.
 
அருட்தந்தை வேதாந்திரி மகரிஷி அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து காயகல்பம், உடற்பயிற்சி, தியானம், அகத்தாய்வு பயிற்சிகள் ஊடாக மனிதன் உடல்நலம், உளநலம், உயிர்வளம் பெற்று உயர்வாழ்வு வாழ ' மனவளக்கலை யோகா' என்னும் அருங்கலையை அளித்துள்ளார்கள். அவற்றை ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் பயிற்சி, தவம், யோகா மூலம் தனது மேன்மையை தானே அனுபவிக்க உதவும் ஞானக்கல்விக் கூடமே அறிவுத் திருக்கோயில்.
 
இவ் அறிவுத் திருக்கோயில் நேற்று முன்தினம் அருள்நிதி பத்மஸ்ரீ  S.K.M. மயிலானந்தம் தலைவர், உலக சமுதாய சேவா சங்கம் அவர்களால் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. யாழ் மனவளக்கலை பேராசிரியர் அருள்நிதி சி.முருகானந்தவேல் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் உப தலைவர் அருள்நிதி த. குழந்தைவேல் வரவேற்புரை நிகழ்த்தினார்
1476614121_14657679_1224345327612193_2146718113_n.jpg
இந் நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த மனவளக்கலை பேராசிரியர்கள் பலரும் உரையாற்றினார்கள். சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட செஞ்சொற் செல்வர் சுகி-சிவம் அவர்களின் சிறப்புரை இரண்டு தினங்களும் நடைபெற்றன. “வேதாத்திரிய வேதம்" எனும் அறிவுலக சங்கமத்திற்கான நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இவ் அறிவுத் திருக்கோயிலை யாழ் மக்கள் பயன்படுத்தத் தவறக் கூடாது எனவும் இங்கு நடைபெறும் பயிற்சி, தியானம், தவம் ஆகியவற்றிலும் கலந்து கொள்ளுமாறு அருள்நிதி சி.முருகானந்த வேல் மற்றும் அறக்கட்டளையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
1476614146_14694767_1224345330945526_1951052528_n.jpg
 
1476614170_14694700_1224345347612191_1073515010_n.jpg
 
1476614196_14686308_1224345337612192_116267977_n.jpg

http://onlineuthayan.com/news/19026

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.