Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாவுக்கு பின்னால் சீனா?

Featured Replies

கோத்தாவுக்கு பின்னால் சீனா?

03a32a8a3a-d9ce862aeac63d8201ea7855829cd2a47b7e21af.jpg

 

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷவை கூட்டு எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக கள­மி­றக்கும் முனைப்­புகள், காணப்­ப­டு­கின்ற சூழலில், அவர் சீனா­வுக்­கான சர்ச்­சைக்­கு­ரிய பய­ணத்தை ஆரம்­பித்­தி­ருக்­கிறார்.

ஏழா­வது ஷியாங்சான் பாது­காப்புக் கருத்­த­ரங்கில் பங்­கேற்­ப­தற்கே முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷ சீனா­வுக்­கான பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்தார்.

இந்த மாநாடு பீஜிங்கில் உள்ள ஷியாங்சான் விடு­தியில் கடந்த 10ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை இடம்­பெற்­றி­ருந்­தது.

இரா­ணுவ விஞ்­ஞா­னத்­துக்­கான சீன சங்கம் மற்றும் சர்­வ­தேச மூலோ­பாய கற்­கை­க­ளுக்­கான சீன நிறு­வகம் ஆகி­யன இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த இந்தக் கருத்­த­ரங்கில் சுமார் 64 நாடு­களின் பிர­தி­நி­திகள் பங்­கேற்­றி­ருந்­தனர்.

சேவையில் உள்ள பாது­காப்­புத்­துறை சார் அதி­கா­ரிகள், பல்­வேறு அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள், பாது­காப்பு நிபு­ணர்கள் மற்றும் புல­மை­யா­ளர்கள் என்று 400 பேர் வரையில் இந்த மாநாட்­டுக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இலங்­கையின் சார்பில் பாது­காப்புச் செயலர் கரு­ணா­சேன ஹெற்­றி­யா­ராச்சி தலை­மை­யி­லான குழு­வொன்று இந்த கருத்­த­ரங்கில் பங்­கேற்­றி­ருந்த நிலையில் தான், கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷ தோல்­வி­ய­டைந்­த­தை­ய­டுத்து, பாது­காப்புச் செயலர் பத­வியை இழந்த பின்னர், கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு வெளி­நாட்டு அர­சாங்கம் ஒன்­றிடமிருந்து விடுக்­கப்­பட்ட முதல் அழைப்பு இது­வாகும்.

சீனா­விடம் இருந்து அவ­ருக்கு இந்த அழைப்பு கிடைத்­தது ஒன்றும் ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரிய விட­ய­மல்ல.

ஏனென்றால், மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இருந்த போது, சீனா­வுக்கு மிகவும் வேண்­டி­ய­வ­ரா­கவே அவர் இருந்தார். கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கும் சீனா­வுக்கும் கூட அதி­க­ளவு நெருக்கம் இருந்­தது.

இந்த பாது­காப்புக் கருத்­த­ரங்கில் பங்­கேற்­ப­தற்­காக, கோத்­தா­பய ராஜபக் ஷ கடந்த 5ஆம் திகதி சீனா­வுக்­கான இரண்டு வார­காலப் பய­ணத்தை ஆரம்­பிப்­ப­தற்குத் திட்­ட­மிட்­டி­ருந்த நிலையில் தான், அவன்ட் கார்ட் வழக்கில் குற்­றம்­சாட்­டப்­பட்டு நாட்டை விட்டு வெளி­யேற நீதி­மன்றம் தடை விதித்­தது.

அந்த தடையை விலக்­கு­மாறு கோரி சமர்ப்­பிக்­கப்­பட்ட மனு மீது கடந்த 3ஆம் திகதி விசா­ரணை நடத்­திய கொழும்பு மாவட்ட மேல­திக நீதிவான் நீதி­மன்றம் ஒக்­டோபர் 5ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை சீனா­வுக்குப் பயணம் மேற்­கொள்ள அனு­மதி அளித்­தது.

இதன் பின்­னரே கோத்­தா­பய ராஜபக் ஷ சீனா­வுக்குப் புறப்­பட்டுச் சென்றார்.

பாது­காப்புக் கருத்­த­ரங்கு கடந்த 12ஆம் திகதி முடிந்து விட்ட போதிலும், கோத்­தா­பய ராஜபக் ஷ இரண்டு வாரங்கள் அல்­லது அதற்குக் கூடு­த­லான நாட்கள் அங்கு தங்­கி­யி­ருக்­க­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

25 நாட்கள் அவர் சீனாவில் தங்­க­வுள்­ள­தா­கவும் சில ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

எனவே கோத்­தா­பய ராஜபக் ஷவின் இந்தப் பய­ணத்தின் அடிப்­படை நோக்கம், பாது­காப்புக் கருத்­த­ரங்கில் பங்­கேற்­பது மாத்­திரம் அல்ல என்­பது உறு­தி­யா­கி­றது.

ஒன்றில் அவர் விடு­மு­றையைக் கழிப்­ப­தற்­காக அங்கு தங்­கி­யி­ருக்க வேண்டும். அல்­லது வேறேதும், இர­க­சிய சந்­திப்­புகள், பேச்­சுக்கள் உள்­ளிட்ட அர­சியல் நிகழ்ச்சி நிரல் ஒன்­றுக்­காக தங்­கி­யி­ருக்க வேண்டும்.

சீனாவில் சுற்றுப் பயணம் மேற்­கொள்­வ­வ­தற்கு சுற்­றுலாப் பய­ணிகள் அதிகம் விரும்பும் மாத­மாக ஒக்­டோபர் மாதமே இருந்­தாலும், கோத்­தா­பய ராஜபக் ஷவின் நோக்கம் அதுவா என்­பதில் சந்­தே­கங்கள் உள்­ளன.

கூட்டு எதி­ர­ணியின் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கோத்­தா­பய ராஜபக் ஷவே போட்­டி­யி­டுவார் என்று, முன்னாள் அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும சில நாட்­க­ளுக்கு முன்னர் கூறி­யி­ருந்த நிலையில், கோத்­தா­பய ராஜபக் ஷவின் சீனப் பயணம் கூடுதல் முக்­கி­யத்­து­வத்தைப் பெற்­றி­ருக்­கி­றது.

கோத்­தா­பய ராஜபக் ஷ அர­சி­ய­லுக்கு வரு­வாரா என்­பது தொடர்­பாக கடந்த ஆண்டில் இருந்தே அவ்­வப்­போது ஊகங்கள் வெளி­யாகி வந்­தன. முதலில் அத்­த­கைய ஊகங்­க­ளுக்குச் சாத­க­மா­கவே கருத்து வெளி­யிட்டு வந்த கோத்­தா­பய ராஜபக் ஷ, பின்னர் ஒரு கட்­டத்தில், தமக்கு அர­சி­ய­லுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் கூறி­யி­ருந்தார். ஆனால் சில வாரங்­க­ளுக்கு முன்னர் ஒரு ஊடகப் பேட்­டியின் போது, ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகப் போட்­டி­யி­டு­வ­தற்­கான அத்­தனை தகு­தி­களும் தமக்கு இருப்­ப­தாக அவர் வெளி­யிட்ட கருத்து கூடுதல் கவ­னத்தைப் பெற்­றி­ருக்­கி­றது.

தாம் அர­சி­ய­லுக்கு வரு­வது தொடர்­பாக எந்த முடி­வையும் எடுக்­க­வில்லை என்றும், எனினும் நாட்டு மக்­க­ளுக்கு எவ்­வாறு சேவை­யாற்­றலாம் என்று சிந்­தித்து வரு­வ­தா­கவும் அவர் கூறி­யி­ருந்­தமை, குறிப்­பி­டத்­தக்­கது.

தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பின் கீழ் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடும் வாய்ப்பு மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைக்­காது. எனவே, கூட்டு எதி­ர­ணி­யிடம், மஹிந்­த­வுக்கு அடுத்த தெரி­வாக கோத்­தா­பய ராஜபக் ஷவே இருப்­பது ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரிய விட­ய­மல்ல.

பசில் ராஜ­பக்ச இருந்­தாலும், அவர் தனது பெயரை மகிந்த ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே கெடுத்து விட்டார். எனவே சிங்­கள மக்கள் மத்­தியில் இன்­னமும் கவர்ச்சி மிக்­க­வ­ராக உள்ள கோத்­தா­பய ராஜபக் ஷவைக் கள­மி­றக்­கு­வதே, கூட்டு எதி­ர­ணியின் ஒரே தெரி­வாக இருக்க முடியும். அதனால் தான், ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு இன்­னமும் நான்கு ஆண்­டுகள் இருக்­கின்ற நிலை­யி­லேயே, கூட்டு எதி­ரணி அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் பற்­றிய பேச்­சுக்­களை ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

இன்­னொரு பக்­கத்தில், கோத்­தா­பய ராஜபக் ஷவை அடுத்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வ­தற்­கான முனைப்­பு­களில் சீனா ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் கூட சில தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

எனினும், இது­தொ­டர்­பாக சீனா எந்தக் கருத்­தையும் அண்­மைக்­கா­லங்­களில் வெளி­யி­ட­வில்லை. ஏற்­க­னவே, கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது, மஹிந்த ராஜபக் ஷவை வெற்­றி­பெற வைப்­ப­தற்கு சீனா பெருந்­தொ­கை­யான நிதியை செல­விட்­ட­தாக செய்­திகள் வெளி­யான போது அதனை சீன அதி­கா­ரிகள் மறுத்­தி­ருந்­தனர்.

எந்த நாட்­டி­னதும் உள்­நாட்டு அர­சியல் விவ­கா­ரங்­களில் சீனா தலை­யீடு செய்­வ­தில்லை என்றும், அந்தக் கொள்­கை­யையே இலங்­கை­யிலும் கடைப்­பி­டிப்­ப­தா­கவும் அப்­போது சீனா கூறி­யி­ருந்­தது.

உள்­நாட்டு தேர்தல் மற்றும் அர­சியல் விவ­கா­ரங்­களில் சீனாவின் தலை­யீ­டுகள் ஏனைய நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் குறை­வா­கவே இருந்­தாலும், இலங்கை விட­யத்தில் சீனா அவ்­வாறு ஒதுங்கி நிற்கும் என்று எதிர்­பார்ப்­ப­தற்­கில்லை.

இந்­தியப் பெருங்­க­டலின் கேந்­திர மைய­மாக விளங்கும் இலங்கை சீனாவின் முத்­து­மாலை வியூ­கத்தின் ஒரு அங்­க­மா­கவே இருந்­தது. இன்­னமும் இருக்­கி­றது.

இலங்­கையில் தனது மூலோ­பாய நலன்­களை முழு­மை­யாக அனு­ப­விக்க வேண்­டு­மாயின், தமக்குச் சாத­க­மான அர­சாங்கம் ஒன்று கொழும்பில் அமைந்­தி­ருக்க வேண்டும் என்றே சீனா விரும்பும்.

சீனாவைப் பொறுத்­த­வ­ரையில், மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லமே அத்­த­கைய வாய்ப்­பு­களை அள்ளிக் கொடுத்த பொற்­கா­ல­மாக இருந்­தது. எனவே, மீண்டும் தமக்குச் சார்­பான ஒரு ஆட்சி கொழும்பில் அமை­வதை சீனா விரும்­பாது என்று ஒரு­போதும் எதிர்­பார்க்க முடி­யாது.

கோத்­தா­பய ராஜபக் ஷவை, ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றக்­கு­வ­தற்­கான வாய்ப்­பு­களை சீனா தட்­டிக்­க­ழிக்­காது. அத்­த­கை­ய­தொரு வாய்ப்பை உரு­வாக்கிக் கொடுக்கவும் சீனா தயங்காது. அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குத் தயாராதல் என்பது சீனாவுக்கும், கோத்தாபய ராஜபக் ஷவுக்கும் அவசியமான ஒன்றாக இருந்தாலும், இத்தகைய கட்டத்தில் அதற்கான முயற்சிகள் தேவையா என்பது கேள்விக்குரிய விடயம் தான்.

இத்தகைய முயற்சிகளில் இறங்குவதற்கு இது காலம் முந்திய செயலாகும்.

எவ்வாறாயினும், கோத்தாபய ராஜபக் ஷவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தும் கூட்டு எதிரணியின் கனவு, சீனாவுக்கு சாதகமானதாக இருக்கும் நிலையில் அத்தகைய வாய்ப்புகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு சீனா ஒருபோதும் தயங்காது என்பது உண்மை.

எனவே, கோத்தாபய ராஜபக் ஷவின் சீனப் பயணத்தின் பின்னால் இரகசிய நிகழ்ச்சி நிரல்கள் இருந்தால் அது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-10-16#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.