Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பு அதிகரிக்கும் சந்தேகங்கள்

Featured Replies

புதிய அரசியலமைப்பு அதிகரிக்கும் சந்தேகங்கள்

presidentmy30081-978c5384746f56b009a63dd9f522043ee32a0c7d.jpg

 

புதிய அர­சி­ய­ல­மைப்பு இலங்­கையின் தேசியப் பிரச்­சி­னைகள் அனைத்­துக்கும் தீர்வு காண்­ப­தாக அமையும் என்ற நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டுகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற ஒரு சூழலில், புதிய அர­சி­ய­ல­மைப்பு சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்­களை எவ்­வாறு அணுகப் போகி­றது என்ற கேள்­வி­களும் எழுந்­தி­ருக்­கின்­றன.

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான மக்­களின் கருத்­த­றியும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட அதே­வேளை, பாரா­ளு­மன்ற வழி­ந­டத்தல் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு ஆரா­யப்­பட்டு வரு­கி­றது.

இது­வ­ரையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு எவ்­வா­றா­ன­தாக இருக்க வேண்டும் என்­பது பற்­றிய எந்த வரைவும் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. இதனை கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

ஆனாலும், புதிய அர­சி­ய­ல­மைப்பு மக்­களின் கருத்­துக்­களை அறிந்து வரை­யப்­ப­டுமா? அல்­லது ஆட்சி அதி­கா­ரத்தில் உள்ள தரப்­பி­னரின் நிலைப்­பா­டு­க­ளுக்கு அமை­வாகத் தயா­ரிக்­கப்­ப­டுமா? என்ற சந்­தே­கங்கள் எழுந்­தி­ருக்­கின்­றன.

ஏனென்றால், சமஷ்டி முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டாது, ஒற்­றை­யாட்­சியே தொடரும், வடக்கு-, கிழக்கு இணைப்­புக்கு இட­மில்லை, பௌத்த மதத்­துக்கே முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என்­பன போன்ற முக்­கி­ய­மான விட­யங்­களில் தீர்க்­க­மான முடிவு ஏற்­க­னவே எடுக்­கப்­பட்டு விட்­டது.

திறந்த மன­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை வரையும் தேவையே இருப்­ப­தாகச் சொல்லிக் கொண்ட அர­சாங்கம், ஏற்­க­னவே இருக்கும் அர­சி­ய­ல­மைப்பில் உள்ள விட­யங்­களில் எந்த மாற்­றத்­தையும் செய்ய முடி­யாது என்று அடம்­பி­டித்து வரு­கி­றது.

தமி­ழர்கள் தரப்பில் சமஷ்டிக் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்ட போதிலும், அதற்கு இணங்க முடி­யாது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தெளி­வாகக் கூறி விட்­டனர்.

அவ்­வா­றாயின் இந்த அர­சி­ய­ல­மைப்பு எவ்­வாறு இருக்க வேண்டும் என்று மக்­களின் கருத்­துக்­களை அர­சாங்கம் எதற்­காகப் பெற்றுக் கொண்­டது? ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சேர்ந்து தீர்­மா­னங்­களை எடுத்­தி­ருக்­க­லாமே?

ஒற்­றை­யாட்­சியைக் கைவிட முடி­யாது என்ற பிடி­வா­தத்தில் இருக்கும் அர­சாங்கம், எதற்­காக புதிய அர­சி­ய­ல­மைப்பில் தமிழ் மக்­களின் பங்­க­ளிப்பை எதிர்­பார்க்­கி­றது?

இப்­போது பௌத்த மதத்­துக்­கான முன்­னு­ரி­மையை ஒரு­போதும் விட்டுக் கொடுக்க முடி­யாது என்­பதை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

அர­சி­ய­ல­மைப்பு வரை­வுக்­கான வழி­ந­டத்தல் குழுவில் மதம் சார்ந்த விவ­கா­ரங்கள் குறித்து இன்­னமும் எந்தக் கலந்­து­ரை­யா­டலும் நடத்­தப்­ப­ட­வில்லை.

அப்­ப­டி­யி­ருக்கும் போது, தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் பௌத்த மதத்­துக்கு உள்ள முன்­னு­ரிமை புதிய அர­சி­ய­ல­மைப்­பிலும் தொடர்­வ­தற்கு, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட கட்­சிகள் இணக்கம் தெரி­வித்து விட்­ட­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யதின் உள்­நோக்கம் இருக்­கி­றது.

ஒரு தவ­றான செய்­தியை சிங்­கள பௌத்த மக்கள் மத்­தியில் வெளி­யிட்டு, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யாரை தவ­றாக வழி நடத்த முயன்­றி­ருக்­கிறார்? என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை கொடுக்க இணங்கி விட்­டது என்ற செய்தி வெளி­யாகும் போது, தமிழ் மக்கள் மத்­தியில் அந்தக் கட்சி, எத்­த­கைய நெருக்­க­டி­களை எதிர்­கொள்ளும் என்­பது ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு தெரி­யாத விட­ய­மல்ல.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை நெருக்­க­டிக்குள் தள்­ளு­வ­தற்­காக, ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவ்­வாறு கூறி­யி­ருப்­பா­ரே­யானால், அவர் சிங்­கள பௌத்த மக்­க­ளுக்கு துரோகம் இழைக்­கிறார் - அவர்­களை ஏமாற்றப் பார்க்­கிறார் என்றே அர்த்தம்.

இலங்கை ஒரு பௌத்த நாடு என்று அர­சி­ய­ல­மைப்பு வழி­யாக செய்­யப்­பட்­டுள்ள பிர­க­டனம் தான், இலங்கைத் தீவில் சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் கோலோச்­சு­வ­தற்கும், தமி­ழர்கள் மீதான அடக்­கு­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­ப­டு­வ­தற்கும் அடிப்­ப­டை­யாக இருந்து வந்­துள்­ளது.

பல மதங்­களைப் பின்­பற்றும் ஒரு நாட்டில் பௌத்த மதத்­துக்கு மாத்­திரம் முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­வது ஏனைய மதங்­களைப் பின்­பற்­று­வோரின் உரி­மை­களை பறிப்­ப­தாக அல்­லது சிறு­மைப்­ப­டுத்­து­வ­தா­கவே இருக்கும்.

பௌத்த மதத்தைப் பின்­பற்றும் மக்கள் இலங்­கையில் அதி­க­ளவில் வாழ்­கின்­றனர். அதை ஏற்­கத்தான் வேண்டும். அவ்­வாறு பெரும்­பான்­மை­யாக வாழும் மக்கள் அந்த பெரும்­பான்மை பலத்தின் மூலம் தமது அர­சியல் அதி­கா­ரத்தை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் அதையே அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக செய்ய முனையும் போது, ஏனைய மதங்­களைப் பின்­பற்­று­வோ­ருக்கு அநீதி இழைப்­ப­தாக அமையும்.

இதனால் தான், புதிய அர­சி­ய­ல­மைப்பு மதச்­சார்­பற்ற ஒன்­றாக அமைய வேண்டும் என்ற கருத்தை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைத்­தி­ருக்­கி­றது.

எல்லா மக்­களும் சம­மா­ன­வர்கள், எல்லா மக்­க­ளுக்கும் சம­மான உரி­மைகள் உள்­ளன, விரும்­பிய மதத்தை பின்­பற்றும் உரி­மைகள் உள்­ளன என்று கூறும் ஒரு அர­சி­ய­ல­மைப்பில், ஒரு மதத்­துக்கு மாத்­திரம் முன்­னு­ரிமை கொடுப்­பது அடிப்­படை முரண்­பா­டான விடயம் என்­பதை கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதனால் மதச்­சார்­பற்ற- சமஷ்டி அர­சி­ய­ல­மைப்பு ஒன்றின் மூலம் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடியும் என்று அண்­மையில், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க கூறி­யி­ருந்தார். அதனால் தான் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று உதய கம்­மன்­பில போன்ற சிங்­கள பௌத்த கடும்­போக்­கா­ளர்கள் கோரி வரு­கின்­றனர்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு மதச்­சார்­பற்ற ஒன்­றாக அமைய வேண்டும் என்ற எதிர்­பார்ப்பு, சிறு­பான்­மை­யின மக்­க­ளிடம் இருந்­தாலும், ஆட்­சி­யா­ளர்கள் அதற்கு இணங்கப் போவ­தில்லை என்­ப­தையே பிர­தமர் மற்றும் ஜனா­தி­ப­தியின் கருத்­துக்­களில் இருந்து தெளி­வா­கி­யி­ருக்­கி­றது.

இந்­த­நி­லையில், புதிய அர­சி­ய­ல­மைப்பு எல்லாப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வைத் தரும் என்று எதிர்­பார்ப்­பது எந்­த­ள­வுக்கு பொருத்­த­மா­னது?

புதிய அர­சி­ய­ல­மைப்பு தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு தரு­வ­தாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் அடிக்­கடி நம்­பிக்­கை­யூட்டி வரு­கிறார்.

ஆனால், கூட்­ட­மைப்பு முன்­வைக்கும் சமஷ்டி, மதச்­சார்­பின்மை, உள்­ளிட்ட விட­யங்­க­ளுக்கு இணங்­காத ஒரு அர­சி­ய­ல­மைப்பு மூலம், எவ்­வாறு தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கிடைக்கப் போகி­றது என்­பது அவ­ருக்கே வெளிச்சம்.

பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இணங்கிக் கொண்­ட­தாக தகவல் வெளி­யிட்­டதன் மூலம், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, கூட்­ட­மைப்பை எந்த நிலையில் வைத்­தி­ருக்­கிறார் என்ற கேள்­வி­யையும் எழுப்பி விட்­டுள்­ளது.

வழி­ந­டத்தல் குழுவில் இன்­னமும் கலந்­து­ரை­யாடப்ப­டாத ஒரு விட­யத்­துக்கு கூட்­ட­மைப்பு இணங்கி விட்­ட­தாக அவர் வெளி­யிட்ட தகவல், ஆபத்­தா­னது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை தாம் நினைத்­த­படி ஆட்­டு­விக்­கலாம் என்ற அவ­ரது நினைப்பு தான் இத்­த­கைய கருத்தை வெளி­யிடும் நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தகைய கட்டத்திலாவது சுதாகரித்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத ஒரு அரசியலமைப்புக்கு முண்டு கொடுப்பதா? அல்லது தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசியலமைப்பை உருவாக்குவதா? என்று தீர்மானிக்க வேண்டும்.

சர்வதேச அரசியல் சூழ்நிலைகளைச் சாதகமாக்கிக் கொண்டு தமிழ் மக்களை தாம் விரும்பிய ஒரு வட்டத்துக்குள் தள்ளிச் செல்வதற்கே அரசாங்கம் முனைவதாகத் தெரிகிறது.

அதற்கு கூட்டமைப்பு துணைபோகப் போகிறதா? அல்லது ரணில் விக்கிரமசிங்க – மைத்திரிபால சிறிசேன கூட்டு அரசாங்கத்துடன் முட்டி மோதி, புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்குவதற்கு முயற்சிக்கப் போகிறதா?  

virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.