Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழினில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி நாளைஆர்ப்பாட்டம்!

Featured Replies

யாழினில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி நாளைஆர்ப்பாட்டம்!

14632827_1378467532181279_1811424914854104900_n
படுகொலையான ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16வது ஆண்டு நினைவு நாளான நாளை புதன்கிழமை ஊடக சுதந்திரத்திற்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பதாக நாளை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டினில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
 
 
படுகொலையான மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியார்களிற்கு சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையினில் காலதாமதமின்றிய விசாரணை!
 
 
-ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக ஆற்றுவதற்கான சுதந்திரத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தல்!
 
தகவல் அறியும் உரிமை சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தல்!
 
 
ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளினை முன்னிறுத்தி வடக்கு –கிழக்கிலுள்ள அனைத்து ஊடக அமைப்புக்களும் அணிதிரண்டு இப்போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளன.
 
 
முன்னதாக காலை 10 மணியளவினில் படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி பகுதியினில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.தென்னிலங்கையை சேர்ந்த ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழு மற்றும் சிவில் சமூக அமையம்,அரசியல் கட்சிகள் என பல தரப்புக்களும் தமது ஆதரவை வழங்கி இன்றைய போராட்டத்தினில் பங்கெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.ஊடக சுதந்திரத்திற்கான ஆர்ப்பாட்டத்தினில் அனைத்து தரப்பினரையும் அணிதிரள அழைப்பு விடுப்பதாக யாழ்.ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது.

http://globaltamilnews.net/archives/3502

  • தொடங்கியவர்

நிமலராஜனின் நினைவு தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின்  16 ஆம் ஆண்டு நினைவு தினத்தன்று, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ,  நீதி கோரி  கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபிக்கு மலர் மாலை அனுவித்து நிமலராஜனின் நினைவு தின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப் பட்டது.
img_2966

அதனை தொடர்ந்து யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக  இன்று காலை  10.30 மணியளவில், அளவில்  கவனயீர்ப்பு  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

படுகொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்களுக்கு, சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையில் காலதாமதமின்றிய விசாரணை வேண்டும். ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக ஆற்றுவதற்கான சுதந்திரத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தல், வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தை உடனடியாக அமுல்ப்படுத்தல் வேண்டும். ஆகிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

img_2918

 img_2945img_2966img_2990img_3040img_3046img_3095

Edited by நவீனன்

நல்லாட்சியிலும் ஊடக அடக்குமுறை தொடர்கிறது : தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்

நல்லாட்சியிலும் தொடரும் மறைமுகமான ஊடக அடக்குமுறையை தடுத்து நிறுத்தி ஊடகசுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பினது சிறுபான்மையினர் பிரச்சினைகளை ஆராயும் விசேட பிரதிநிதி இஸாக் றீட்டாவிடம் வேண்டுகோளை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் விடுத்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான தினமான இன்று (19) விசேட பிரதிநிதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்தவேண்டுகோளை விடுத்துள்ளனர்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊடகவியலாளர் படுகொலை தினமாகிய இந்த நாளில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினருக்கான பிரதிநிதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரும் விடயம் யாதெனில்.

இலங்கை நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டு ஒருவருடங்கள் தாண்டியுள்ள நிலையில் ஊடகவியலாளர்கள் மீதான அழுத்தங்களும் தாக்குதல்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன ஊடகவியலாளர்கள் இன்றும் பாதுகாப்பு தரப்பினரால் கண்காணிக்கப்படுவதுடன் அவர்களுக்காக பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

அத்துடன் அரச அதிகாரவர்க்கத்தின் அநீதிகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதோடு பெலிஸ்விசாரணைகள் ஊடாகவும் இனந்தெரியாத நபர்களின் மூலமும் அச்சுறுத்தப்படுகின்றனர்.

ஊடகசுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழுவின் அமைப்பாளரும் ஊடகவியலாளருமான பேடிகமகே என்பவர் மீது தாக்குதல்.கிளிநொச்சி ஊடகவியலாளர் மீதான இராணுவ அச்சுறுத்தல் மட்டக்களப்பு சுயாதீன ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான பொலிஸ்விசாரணை போன்றவற்றுடன் மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களை அரசாங்க அதிகாரிகள் மிக கடுமையாக விமர்சிக்கின்ற ஊடகங்களை எச்சரிக்கின்ற ஊடகவியலாளர்களை அவகௌரவப்படுத்தி புறக்கணிக்கின்ற பல சம்பவங்கள் இந்த நல்லாட்சி அரசில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.

இந்த நாட்டில் பெரும்பான்மை ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க படுகொலை ,ஏக்நெலிகொட காணாமல“ ஆக்கப்பட்டமை போன்ற பல விசாரணைகளில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் கொலையாளிகளை பாதுகாப்பதாக அமைந்துள்ளதுடன் ஊடகவியலாளர்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டியவர்களே உயிர்களை பறித்துள்ளார்களா? என்ற ஐயத்தை உருவாக்கியுள்ளது.

இதேநேரம் பெரும்பான்மையின ஊடகவியலாளர்களின் படுகொலைகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நல்லாட்சி அரசு இது வரை ஒரு சிறுபான்மையின ஊடகவியலாளரின் படுகொலை விசாரணையை கூட ஆரம்பிக்கவில்லை.

இலங்கையில் இன்று வரை 43 ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 05 சிங்கள ஊடகவியலாளர்களும் 03 முஸ்லீம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் ஆட்சிக்காலத்தில் 01 ஊடகவியலாளரும் ரணசிங்க பிரேமதாச அவர்களின் ஆட்சிக்காலத்தில் 02 ஊடகவியலாளரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 26 ஊடகவியலாளர்களும் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

1985ம் ஆண்டு தொடங்கிய தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் 2010ம் ஆண்டுவரை தொடர்ந்துகொண்டே இருந்தது.

இன்நிலையில் இலங்கையில் நடைபெற்றுவந்த படுகொலை ஆட்சியை ஊடகத்துறையின் பெரும்பங்குடன் முடிவுக்கு கொண்டுவந்த நல்லாட்சி அரசாங்கம் இன்றுவரை சிறுபான்மையின ஊடகவியலாளர்களின் படுகொலை விசாரணைனையில் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை.

எனவே இந்த நாட்டில் சிறுபான்மையின ஊடகவியலாளர்களை படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்படும்வரை சிறுபான்மையின ஊடகவியலாளர்களின் ஆழ்மனதில் பதிந்துகிடக்கின்ற அச்சமூட்டும் மனநிலை உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கான சுதந்திரமான ஊடக செயற்பாட்டிற்கு இடமளிக்காது என்பதோடு ஊடகவியலாளர்களை சுயகட்டுப்பாட்டை அதிகரிக்கவே செய்யும்.

எனவே உடனடியாக மிக விரைவாக சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் படுகொலைகைகான விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும்.

அத்துடன் இலங்கையில் இன்றுவரை சுட்டுக்கொல்லப்பட்ட காணாமல்போன சிறுபான்மையின ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிடவேண்டும்.

நல்லாட்சியிலும் தொடரும் மறைமுகமான ஊடக அடக்குமுறையை தடுத்து நிறுத்தி ஊடகசுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும். என்ற வேண்டுகோளை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் விடுக்கின்றது.

http://www.tamilwin.com/statements/01/121554?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.