Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் கடத்தப்பட்ட 5மாணவர்களுக்கும் புலிகளுடன் தொடர்பில்லை-கடற்படை சிப்பாய் நீதிமன்றில் சாட்சியம்

Featured Replies

கொழும்பில் கடத்தப்பட்ட 5மாணவர்களுக்கும் புலிகளுடன் தொடர்பில்லை-கடற்படை சிப்பாய் நீதிமன்றில் சாட்சியம்
 
 
கொழும்பில் கடத்தப்பட்ட 5மாணவர்களுக்கும் புலிகளுடன் தொடர்பில்லை-கடற்படை சிப்பாய் நீதிமன்றில் சாட்சியம்
கொழும்பு மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்ட காணாமல் போகச்செய்யப்பட்ட 5 மாண வர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என  கடற்படைப் புலனாய்வு பிரி வின் சிப்பாய் அளுத் கெதர உப்புல் பண்டார நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.
 
2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள 5 மாணவர்களில் மூவர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னி லையில் இடம்பெற்றது.
 
குறித்த 5 மாணவர்களும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற குற்றச்சாட்டில் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் என்றும், அவர்களுக்கு தாமே உணவு வழங்கியதாகவும், அவர்களுடன் உரையாடியிருப்பதாகவும் மன்றில் சாட்சியமளிக்கையில் அவர் கூறியுள்ளார்.
 
மாணவர்களுடனான உரையாடலின்போது விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்பும் இருந்திருக்கவில்லை என்பதை தாம் புரிந்துகொண்டதாகவும் குறித்த கடற்படை புலனாய்வுப் பிரிவின் சிப்பாய் மன்றில் தெரிவித்துள்ளார்.  
 
கடத்தப்பட்ட மறுதினமே கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு வான் ஒன்றில் குறித்த 5 மாணவர்களும் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களுடன் மென்டிஸ் எனும் கடற்படை சிப்பாயும், அம்பாறை காமினி எனும் நபரும் சென்றிருந்ததாகவும் சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடத்தப்பட்ட ஐவரில் கொழும்பு - கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், மற்றும் திகலேஸ்வரன் ராமலிங்கம் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஊடாக இந்த ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
நேற்றைய சாட்சியங்கள் முடிந்த பின்னர் அரச சட்டவாதிக்கு சாட்சியிடம் குறுக்கு விசாரணை செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.
 
எனினும் குறுக்கு விசாரணை செய்வதற்கு அரச சட்டவாதி கால அவகாசம் கோரியிருந்தார்.
இதனைக் கவனத்திற்கு எடுத்த நீதிமன்றம், இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

http://onlineuthayan.com/news/19158

கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்­களும் புலி­க­ளுடன் எது­வித தொடர்­பையும் கொண்­டி­ருக்­க­வில்லை -அவர்­க­ளுடன் நான் கதைத்தேன்; கடற்­படை சிப்பாய் சாட்­சியம்

கொழும்பின் புறநகர்ப் பகு­தி­யான தெஹி­வ­ளையில் வைத்து வெள்­ளை­வேனில் வந்­தோரால் 2008 ஆம் ஆண்டு கடத்­தப்பட்டு காணாமல் போகச் செய்­யப்­பட்­டுள்ள ஐந்து மாண­வர்­களும் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுடன் எவ்­வித தொடர்­பு­களையும் கொண்­டி­ருக்­க­வில்லை என கடற்­படை புல­னாய்வு பிரிவின் சிப்­பா­யான அளுத் கெதர உபுல் பண்­டார நேற்று நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளித்தார்.

கடத்­தப்பட்டு காணாமல் போகச் செய்­யப்பட்­டுள்ள ஐந்து மாண­வர்­களில் மூவர் சார்பில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள ஆட்­கொ­ணர்வு மனு மீதான விசா­ர­ணைகள் நேற்று கொழும்பு பிர­தான நீதிவான் கிஹன் பில­பிட்­டிய முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்பட்டபோதே சாட்­சி­ய­ம­ளித்த மேற்­படி கடற்­படை உத்­தி­யோ­கத்தர் இவ்வாறு சாட்­சி­யமளித்தார். 

குறித்த ஐந்து மாண­வர்­களும் புலி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் எனக் கூறி கைது செய்­யப்பட்­ட­வர்கள் என்ற பெயரில் கடத்தி வரப்­பட்­டி­ருந்­த­தா­கவும், அவர்­க­ளுக்கு தான் உணவு வழங்­கி­ய­தா­கவும் அவர்­க­ளுடன் உரை­யா­டி­ய­தா­கவும், அதன் போது தனது புல­னாய்வு அறிவின் ஊடாக அவர்­க­ளுக்கு புலி­க­ளுடன் எவ்­வித தொடர்பும் இல்லை என்­பதைப் புரிந்­து­கொன்­ட­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

கடத்­தப்பட்ட ஐவரில் கொட்டாஞ்ச்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன் மற்றும் தில­கேஸ்­வரன் ராம­லிங்கம் ஆகியோர் சார்பில் சட்­டத்­த­ரணி கெளரி சங்கரி தவ­ராசா ஊடாக இந்த ஆட்­கொ­ணர்வு மனு தாக்கல் செய்யப்பட்­டி­ருந்­தது. இது தொடர்பில் மனு­தா­ரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான கே.வி. தவ­ராசா, ஜே.சி. வெலியமுன மற்றும் அச்­சலா சென­வி­ரத்ன ஆகியோர் ஆஜ­ரா­கி­வந்த நிலையில் நேற்று ஜெ.சி. வெலியமுன மற்றும் அச்­சலா சென­வி­ரத்ன ஆகியோர் ஆஜ­ரா­கினர்.

சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட சட்­ட­வாதி துசித் முத­லிகே ஆஜ­ரா­கி­யி­ருந்தார். குற்றப் புல­னாய்வுப் பிரிவு சார்பில் சிறப்பு விசா­ரணை அதி­கா­ரி­யான நிஸாந்த டி சில்­வாவும் ஆஜ­ரா­கி­யி­ருந்தார். இந் நிலையில் நீதி­மன்றின் அறி­வித்தல் பிர­காரம் நேற்று கடற்­படை புல­னாய்வுப் பிரிவு உறுப்­பி­னர்­க­ளான அலுத் கெதர உபுல் பண்­டார மற்றும் பந்து குமார ஆகியோர் மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தர்.

இந்த நிலையில் சாட்­சி­ய­ம­ளிக்கும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­ப­மா­கின. சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஜே.சி. வெலியமு­னவின் நெறிப்­ப­டுத்­தலில் சாட்சிப் பதிவு இடம்­பெற்­றது. சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஜே.சி. வெலியமு­னவின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்­த­வாறு சாட்­சி­யா­ள­ரான அலுத் கெதர உபுல் பண்­டார பின்­வ­ரு­மாறு நீதி­மன்­றுக்கு சாட்­சி­ய­ம­ளித்தார்.

2005 முதல் 2009 ஆம் ஆண்டு வரை­யி­லான காலப்­ப­கு­தியில் நான் கடற்­ப­டையின் தள­பதி வசந்த கரன்­னா­கொ­டவின் பாது­காப்பு தொடர்­பி­லான குழுவில் லெப்­டினன் கொமாண்டர் சம்பத் முன­சிங்­கவின் கீழ் செயற்­பட்டேன். என்­னுடன் இருந்த மேலும் சில­ருடன் சேர்ந்து நான் கடற்­படை தள­பதி கரன்­னா­கொ­டவின் உத்­தி­யோ­க­பூர்வ நிகழ்­வுகள், அவர் செல்லம் இடங்கள் உள்­ளிட்­டவை தொடர்பில் பாதுகாப்பு விட­யங்­களை ஆராய்வேன். அவர் அதி­க­மாக கொச்­சி­கடை தேவா­லயம் மற்றும் தெஹி­வளைப் பகு­திக்கு அடிக்­கடிச் செல்வார்.

இந்த நிலையில் 2008.9.17 அன்று தெஹி­வ­ளையில் வைத்து ஹெட்டி ஆராச்சி உள்­ளிட்­ட­வர்­க­ளினால் ரஜீவ் நாக­நாதன், பிரதீப் விஸ்வநாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் டிலான் மொஹம்மட் சாஜித் ஆகிய மாண­வர்கள் கைது செய்­யப்பட்டு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்­கப்பட்­டி­ருந்­தனர்.

நாம் கேட்ட போது அவர்கள் புலி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என கூறினர். அவர்கள் கடற்­படை தலை­மை­ய­கத்தின் கடற்­படை தள­பதி வசந்த கரன்­னா­கொ­டவின் மேற்­பார்­வையில் இருந்த பிட்டு பம்பு எனும் இடத்­தி­லேயே தடுத்து வைக்­கப்பட்­டி­ருந்­தனர். பிட்டு பம்­பு முகாம் 2 ஆம் மாடியில் லெப்­டினன் கொமண்டர் ஹெட்டி ஆராச்சி முதி­யன்­ச­லாகே பிரசாத் சந்­தன ஹெட்டி ஆராச்­சியின் கீழ் இருந்­தது. அங்கு லெப்­டினன் கொமண்டர் சம்பத் முன­சிங்­கவும் அவ­ரது குழுவும் கூட இருந்­தது.

இதன்போது அவர்­க­ளுக்கு நான் உணவு கொடுத்தேன். அவர்­க­ளுடன் நான் உரை­யா­டினேன். அவர்கள் அனை­வரும் நன்­றாக சிங்­க­ளத்தில் கதைத்­தனர். அவர்கள் அனை­வரும் கொழும்பு பகு­தியைச் சேர்ந்­த­வர்கள். எனது புல­னாய்வு அறிவின் படி அவர்களுக்கு எவ்­வித தொடர்பும் புலி­க­ளுடன் இருக்­க­வில்லை என்­பது தெளி­வா­னது.

அவர்கள் மறு நாள் ஹெட்டி ஆராச்சி ஊடாக திரு­கோ­ண­ம­லைக்கு வேன் ஒன்றில் அழைத்து செல்­லப்பட்­டனர். அவர்­க­ளுடன் மென்டிஸ் எனும் கடற்­படை சிப்­பாயும் அம்­பாறை காமினி எனும் நபரும் சென்­றனர்.

இது தொடர்பில் கடந்த 2009 ஜூன் மாதம் குற்றப் புல­ன­யவுப் பிரிவு என்­னையும் மற்­றொரு கடற்­படை அதி­கா­ரி­யையும் விசா­ரித்­தது. இதன் போது நாம் அவர்­க­ளிடம் பொய்­யான சாட்­சி­யத்­தையே வழங்­கினோம். அப்­போது கடற்­படை புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பா­ள­ராக இருந்த ஆந்த குருகே எங்கள் இரு­வ­ருக்கும் ஒரே மாதி­ரி­யான வாக்கு மூலத்தை வழங்­கு­மாறு நிர்­பந்­தித்தார்.

அதன்­ப­டியே நாம் அவ்­வாறு வழங்­கினோம். எனினும் பின்னர் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் அதி­காரி நிசாந்த எனது தொலை­பேசி இலக்­கத்தை ஒரு வாறு தேடி, எனது வாக்கு மூலத்தில் பரஸ்­ப­ரங்கள் காணப்­ப­டு­வ­தாக கூறி மீள விசா­ர­ணைக்கு அழைத்தார். இதன் போது நான் அனைத்­தையும் அவ­ரிடம் வாக்கு மூல­மாக வழக்­கி­யுள்ளேன்.

திரு­கோ­ண­ம­லை­யிலும் மாண­வர்கள் தடுத்து வைக்­கப்பட்ட இடம் உள்ளிட்டவற்றை நான் புலனாய்வுப் பிரிவுக்கு அடையாளம் காட்டினேன். அது தொடர்பிலான விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கினேன் என்றார்.

இதனையடுத்து அரச சட்டவாதிக்கு சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடத்த அவகாசம் வழங்கப்பட்டது. எனினும் இதன் போது குறுக்கு விசாரணைக்கு அரச சட்டவாதி கால அவகாசம் கோரவே வழக்கானது எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் சாட்சியாளர்களை மன்றில் மீள ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.