Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தேரவாத பௌத்த மதத்தை அழிக்க அமெரிக்கா சதி-மல்வத்துபீட துணை மகாநாயக்கர் திம்பு ல்கும்புரே விமலதம்ம தேரர் குற்றச்சாட்டு

Featured Replies

இலங்கையில் தேரவாத பௌத்த மதத்தை அழிக்க அமெரிக்கா சதி-மல்வத்துபீட துணை மகாநாயக்கர் திம்பு ல்கும்புரே விமலதம்ம தேரர் குற்றச்சாட்டு
 
 
 
இலங்கையில்  தேரவாத பௌத்த மதத்தை அழிக்க அமெரிக்கா சதி-மல்வத்துபீட துணை மகாநாயக்கர் திம்பு ல்கும்புரே விமலதம்ம தேரர்  குற்றச்சாட்டு
இலங்கையில் தேரவாத பௌத்த மதத்தையும், பௌத்த புனிதத் தலங்களையும் அழித்துவிட்டு வேற்றுமதத் தலங்களை நிர்மாணி ப்பதற்கான சதியில் அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ ஈடுபட்டுவருவதாக மல்வத்துபீட துணை மகாநாயக்கர் திம்பு ல்கும்புரே விமலதம்ம தேரர் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
 
கொரியாவில் மஹாயான பௌத்த மதத்தை அழிப்பதற்கு அமெரிக்க உளவுத்துறை மேற்கொண்ட அதே முயற்சிகளை தற்போது இலங்கையிலும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய மல்வத்துபீட துணை மகாநாயக்கர், இந்த விவகாரம் தொடர்பாக கூர்மையான புலனாய்வு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நூல் வெளியீட்டு நிகழ்வொன்று இடம்பெற்றது. இதில் மல்வத்து, அஸ்கிரி பீடங்களின் முக்கிய மதத் தலைவர்கள், தலதா மாளிகையின் தியவடன நிலமே, மத்திய மாகாண ஆளுநர், முதலமைச்சர் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
 
இங்கு உரையாற்றிய மல்வத்துபீட துணை மகாநாயக்கர், இலங்கையில் தேரவாத பௌத்த மதத்தையும், அதன் புனிதத் தளங்க ளையும் அழிக்க அமெரிக்க உளவுத்துறை ரகசியமாக பாரிய சதித்திட்டத்தை அரங்கேற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.
 
“கொரியாவில் மஹாயான பெளத்த மதத்தை அழிப்பதற்கு அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏயினர் முயற்சிகளை மேற்கொண்டனர். அதேபோன்று அந்த உளவுத்துறையின் ஊடாக இலங்கையில் தேரவாத பௌத்த மதத்தை அழிப்பதற்காக குறிப்பாக மல்வத்துப்பீடம் மற்றும் அஸ்கிரிப் பீடம் என்பவற்றை இல்லாதொழித்து அதை விடவும் மிகப்பெரிய மதத்தலங்களை நிர்மாணித்து இவைதான் புனிதத் தலங்கள் என உலகத்திற்குக் காண்பித்து, தலதா மாளிகை, உபய மகா விகாரை என்பவற்றை அழித்துவிட்டு தேரவாத பௌத்த மதத்தையும் அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த முயற்சிகள் தொடர்பாக எனக்கு இரகசியமாக அறியக்கிடைத்துள்ளது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து தலைகுனிந்து வணங்கி, பழத்தட்டு வழங்கி ஆசிபெற்று கலந்துரையாடிவிட்டுச் சென்றாலும் இந்த விவகாரங்கள் தொடர்பாகவும் அதிகமான கவனம் செலுத்த வேண்டும். இதுதொடர்பாக கூர்மையாக புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்”- என்றார்.

http://onlineuthayan.com/news/19230

51 minutes ago, நவீனன் said:

இங்கு உரையாற்றிய மல்வத்துபீட துணை மகாநாயக்கர், இலங்கையில் தேரவாத பௌத்த மதத்தையும், அதன் புனிதத் தளங்க ளையும் அழிக்க அமெரிக்க உளவுத்துறை ரகசியமாக பாரிய சதித்திட்டத்தை அரங்கேற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.

பூர்விக குடிகளான ஈழத் தமிழர்களை இலட்சக் கணக்கில் படுகொலை செய்த, ஈழத் தமிழர்களின் சொத்துக்களை அழித்த, ஈழத் தமிழர்களின் சொத்துக்களை அபகரித்துள்ள, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட  சிங்கள-பௌத்த போர்க்குற்றவாளிகளையும், சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளையும் காப்பாற்ற முயலும், காப்பாற்றும் மத பீடங்கள் அனைத்துமே பயங்கரவாத முகாம்களாகவே கருதப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.