Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காட்டுவதில் கடற்படை தடுமாற்றம் அறுவருக்கு பிணை வழங்கியது மன்னார் நீதிமன்று

Featured Replies

தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காட்டுவதில் கடற்படை தடுமாற்றம் அறுவருக்கு பிணை வழங்கியது மன்னார் நீதிமன்று
 
 
தாக்குதல் நடத்தியவர்களை  அடையாளம் காட்டுவதில் கடற்படை தடுமாற்றம்  அறுவருக்கு பிணை வழங்கியது மன்னார் நீதிமன்று
மன்னார் - முத்தரிப்புத்துறையில் கடற்படை சிப்பாய்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபர்களை அடையாளம் காட்டுவதில் கடற்படையினர் தடுமாற்றம் அடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
 
கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் பெயர் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம் முத்தரிப்புதுறையைச் சேர்ந்த ஆறு பேர் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தனர்.
 
இதனையடுத்து குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற போது ஒக்டோபர் 24 ஆம் திகதி அடையாள அணிவகுப்பை நடத்துவதற்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
 
எனினும் மக்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் கடற்படையினர் சிகிச்சை பெற்று வரு வதால் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காட்டுவதற்கு அவர்கள் நீதிமன்றத்தில் பிரசன்னமாகவில்லை.
 
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான அடையாள அணிவகுப்பை இன்று 27 ஆம் திகதி வியாழக்கிழமை நடத்துவதற்கு மன்னார் நீதிபதி ஆசிர்வாதம் கிரேஷியன் அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டிருந்தார்.
 
இதன்பிரகாரம் மன்னார் பதில் நீதவான் கயஸ் பெல்டானோ முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணி வகுப்பிற்கு, தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காட்டுவதற்காக கடற்படைசார்பில் ஐவர் பிரசன்னமாகியிருந்ததுடன், தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவருவதால் கடற்படைவீரர் ஒருவர் அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலையாக வில்லை.
 
தாக்குதலுக்கு உள்ளான கடற்படைவீரர் ஒருவர் பிரசன்னமாகவில்லை என தெரிவித்து அடையாள அணிவகுப்பை மற்றுமொரு தினத்திற்கு பிற்போடுமாறு கடற்படை சார்பில் பிர சன்னமான சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
 
எனினும் கடற்படை சார்பாக முன்னிலையான சட்டத்தரணியின் கோரிக்கையை நிராகரித்த மன்னார் நீதிபதி, இன்றைய தினமே அடையாள அணிவகுப்பை நடத்த வேண்டும் என உத்தர விட்டார்.
 
இந்த அடையாள அணிவகுப்பின் போது தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காட்டுவதில் கடற்படையினர் திணறியிருந்ததுடன், தாக்குதல் நடத்தியவர்கள் என பொலி ஸாரால் பெயர் குறிப்பிடப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரை எந்தவொரு கடற்படைவீரரும் அடையாளம் காட்டவில்லை என பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.
 
தாக்குதல் நடத்தினார்கள் என பொலிஸாரால் பெயர் குறிப்பிடப்பட்ட ஏனைய நால்வரையும் ஐந்து கடற்படை வீரர்களும் சரியான முறையில் அடையாளம் காட்டத் தவறியுள்ளனர்.
 
இந்ந நிலையில்  இந்த அடையாள அணிவகுப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த கடற்ப டை தரப்பு சட்டத்தரணி, சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் எனவும் புதிய அடை யாள அணிவகுப்பை நடத்துமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
 
எனினும் கடற்படை தரப்பு சட்டத்தரணியின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, தாக்குதல் நடத்தினார்கள் என பொலிஸாரால் பெயர் குறிப்பிடப்பட்ட ஆறு பேருக்கும் நிபந்தனையுடன் கூடிய ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கிய நீதிபதி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் அவர்கள் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
 
அத்துடன் பொலிஸாரால் தாக்கல் செய்த பி அறிக்கையின் படி பெயர் குறிப்பிடப்பட்ட மேலும் மூன்று சந்தேகநபர்களும் இன்றைய தினம் சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்ததுடன், அவர்களையும் பிணையில் செல்வதற்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
 
குறித்த மூவரையும் பொலிஸ் நிலையத்தில் சென்று வாக்குமூலம் அளிக்குமாறு உத்தர விட்ட நீதிபதி அலெக்ஸ்ராஜா, இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தார்.
 
கடந்த 24 ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெற்ற  மிக முக்கியமான ஒர் விடயத்தை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்த சந்தேகநபர்கள் ஆறு பேரும், தாம் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த போது சிறைச்சாலை அதிகாரிகள் தம்மை புகைப்படம் எடுத்த தாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
 
சந்தேகநபர்களை புகைப்படம் எடுத்த சம்பவம் குறித்து சிறைச்சாலை அதிகாரிகளிடம் மன்னார் நீதிபதி ஆசிர்வாதம் கிரேஷியன் அலெக்ஸ்ராஜா விளக்கம் கோரியிருந்தமை குறி ப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/news/19455

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.