Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

Featured Replies

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

 

இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

இந்தப் போட்டி ஹராரே நகரில் இன்று நடைபெறுகிறது.

குறித்த போட்டியில் இலங்கை அணியின் புதிய தலைவராக ரங்கன ஹேரத் செயற்படுகின்றார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=84871

  • தொடங்கியவர்
டெஸ்ட் போட்டியில் கன்னிச் சதம் குவித்தார் குசல் பெரேரா
2016-10-29 20:07:06

ஸிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை வீரர் குசல் பெரேரா சதம் குவித்துள்ளார்.

 

20277kusal-Perera-century-600.jpg


ஸிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெறும் இப்போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

 

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கௌஷால் சில்வா  94 ஓட்டங்களுடனும் திமுத் கருணாரட்ன  56 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

 

எனினும் குசல் ஜனித் பெரேரா   சதம் குவித்தார். அவர் 121 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 15 பவுண்ட்றிகள் உட்பட  110 ஓட்டங்களைக் குவித்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவர் பெற்ற முதலாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

 


இன்றைய ஆட்டமுடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 317 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

http://www.metronews.lk/article.php?category=sports&news=20277

  • தொடங்கியவர்

குசல் பெரேராவின் கன்னி சதத்துடன் முதல் நாள் முடிவில் இலங்கை அணி வலுவான நிலையில்

 

 

சிம்பாப்வேயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி ரங்கன ஹெரத்தின் அணி தலைமையில்  இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. 

இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று ஹராரே நகரில் உள்ள ஹராரே விளையாட்டு கழக சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். 

நேற்றைய நாள் ஆட்டத்தில் இலங்கை அணி சார்பாக சகலதுறை வீரர் அசேல குணரத்னவும்,பந்து வீச்சாளர் லஹிரு குமாரவும் தங்களது கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கினர். சிம்பாப்வே அணியன் பந்து வீச்சாளர் கார்ல் மும்பாவிற்கும் இது முதலாவது போட்டியாகும்.

254183.4.jpg

இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன, கெளஷல் சில்வா ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களுடன் போட்டி ஆரம்பமானது.ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை அணிக்கு சிறப்பான ஆரம்பம் ஒன்றினை மதிய உணவு இடைவேளை வரை கொடுத்தனர். மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 29 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்த இடைவேளையின் பின்னர் ஆரம்பித்த போட்டியின் இரண்டாவது பகுதிநேரத்தின் போது 37.3 ஓவர்கள் நிறைவில் 123 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் இலங்கை அணி தனது முதலாவது விக்கெட்டினை பறிகொடுத்தது.

254169.jpg

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன தனது அரைச்சதத்தைக் கடந்து 7 பவுண்டரிகள் உள்ளடங்களாக சிறப்பான டெஸ்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தி 110 பந்துகளுக்கு 56 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது சுழல் பந்து வீச்சாளர் கிரேம் கிரம்மரின் பந்தில் டினோ மாவோயோவிடம் பிடிகொடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினார். 

254170.jpg

இதனைத் தொடர்ந்து களத்திற்கு வந்து இலங்கை அணியின் விக்கட் காப்பாளர் குசல் பெரேரா உடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கெளஷல் சில்வா இணைந்து மிகவும் நல்லதொரு இணைப்பாட்டத்தை இரண்டாவது விக்கெட்டுக்காக வழங்கினார்கள். இந்த நிலையில் தேநீர் இடைவேளையின் பின்னர் 11 பவுண்டரிகள் உடன் 194 பந்துகளுக்கு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 94 ஓட்டங்களைப் பெற்றிருந்த கெளஷல் சில்வா மல்கோம் வல்லரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து தனது சதத்தை தவற விட்டார்.

இவருடன் துடுப்பாட்ட வீரராக நின்றிருந்த குசல் பெரேரா மிகவும் சிறப்பான ஆட்டம் ஒன்றினை வெளிப்படுத்தி தனது கன்னி டெஸ்ட் சதத்தினை 104 பந்துகளில் பூர்த்தி செய்தார். 

254187.3.jpg

இந்த நிலையிலேயே கெளஷல் சில்வாவின் பின்னர் களமிறங்கிய குசல் மெண்டிஸின் விக்கெட் பறிபோனது. கிரேமரின் பந்தில் விக்காட் காப்பாளர் பீட்டர் மூரிடம் பிடிகொடுத்து 1 சிக்ஸர் 5 பவுண்டரிகள் உள்ளடங்களாக 50 பந்துகளுக்கு 34 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை அணி 300 ஓட்டங்களைக் கடந்த நிலையில் 2 சிக்ஸர்கள் 15 பவுண்டரிகள் உடன் 121 பந்துகளுக்கு 110 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது குசல் பெரேரா கிரேமரின் பந்து வீச்சில் நான்காவது விக்கட்டாக ஆட்டமிழந்து சென்றார். 

254182.jpg

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களின் சிறப்பான ஆட்டம் மற்றும் குசல் பெரேராவின் சதம் என்பவற்றின் துணையுடன் இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 90 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களைப் பெற்று மிகவும் வலுவான நிலையிலுள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது ஆட்டமிழக்காமல் உபுல் தரங்க 13 ஓட்டங்களுடனும், தனன்ஜய டி சில்வா 10 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக கிரேம் கிரமர் 21 ஓவர்களை வீசி 82 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், மல்கோம் வால்கர் 6 ஓவர்களை வீசி 1 விக்கெட்டினையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/12889

  • தொடங்கியவர்
இலங்கையின் சிம்பாப்வே சுற்றுப் பயணம்
 
 

-ச.விமல்

article_1477762823-250199%20-%20Copy%20%

இலங்கை அணி, சிம்பாப்வே நாட்டுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளது. சிம்பாப்வே அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் முக்கோண ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் விளையாடவுள்ளது. இலங்கை அணி 12 வருடங்களுக்கு பின்னர் சிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் தொடர் ஒன்றில் விளையாடவுளள்து.

மார்வன் அத்தப்பத்துவின் தலைமையில்யில், இலங்கை அணி மிகப்பலமாக இருந்த வேளையில், சிம்பாப்வே சென்று சிம்பாப்வே அணியைப் பிரித்து மேய்ந்து விட்டு வந்திருந்தனர். ஆனால் தற்போது அது சாத்தியமா? சிம்பாப்வே அணியும் கூட கொஞ்சம் சவால் விடும் நிலையில் உள்ளது. அவுஸ்திரேலிய அணியை இலங்கையில் வைத்து வெள்ளையடிப்புச் செய்து வெற்றியீட்டி இலங்கை பலமாகவே உள்ளது. சிம்பாப்வே அணியிடம் தோல்விகளைச் சந்தித்து வருமளவுக்கு இலங்கை அணி ஒன்றும் மோசமாக இல்லை.

உபாதையடைந்த வீரர்களைத் தவிர்த்து  பலமான அணியாகவே அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் உபாதையடைந்துள்ள நிலையில் அணிக்கு பாதிப்பு என்றே கூறலாம். ஏனெனில் தினேஷ் சந்திமாலும் உபாதையிலிருந்து குணமாகி வருவததால் தலைமையிடம் பின்னடைவாகவே உள்ளது. இவர்களைத்   தவிர்த்து மற்றைய முக்கிய வீரர்கள் யாவரும் இந்த தொடரில் விளையாடவுள்ளனர். இந்தத் தொடர் இலங்கை அணிக்கு நல்லதொரு பயிற்சித்  தொடராக அமையவுள்ளது. இந்தத் தொடர் நிறைவடைந்த பின்னர் இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கான தொடரை  மேற்கொள்ளவுள்ளது. இது நல்ல களத்தினை இலங்கை அணிக்கு வழங்கும். தென்னாபிரிக்காவின் அண்டைய நாட்டில் இந்த்த தொடர்  நடைபெறுவதனால் இலங்கை அணி வீரர்கள் காலநிலையை பழகிக் கொள்ளும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன. அத்துடன் ஒரு நாள் சர்வதேசப்போட்டி தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியும் பங்குபற்றுவதானால் இலங்கை அணி நல்ல பயிற்சிகளை மேற்கொள்ள முடியும்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி ஓரளவு வீரர்கள் தயார் செய்யப்பட்டு விட்டாலும் பந்துவீச்சாளர்கள் இன்னமும் முழுமையாகத் தயாராகவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தென்னாபிரிக்காவில் நடைபெறும் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய இடம் பிடிப்பார்கள். இந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் தயாராக இல்லை என்பது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவே. தம்மிக்க பிராசத், துஸ்மந்த சமீர ஆகியோர் உபாதையடைந்துள்ள நிலையில் இவர்கள் இந்தத் தொடரிலும் மீள முடியவில்லை. எனவே இவர்கள் இருவரும் அடுத்த தொடரில் விளையாட முடியுமா என்பது கேள்வியே. மீண்டும் அணிக்குள் வந்தாலும் மேலதிகமாக இன்னுமொரு வேகப்பந்து வீச்சாளர் தேவை. மேலதிகமாக அணியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்ற நிலையில் தெரிவுக்குகுழுவினர் அதற்கேற்றபடி அணியை தெரிவு செய்துள்ளனர். 

இலங்கை அணி விபரம்

குஷால் பெரேரா, குஷால் மென்டிஸ், கெஷால் சில்வா, திமுத் கருணாரட்ன, தனஞ்சய டி சில்வா, நிரோஷான் டிக்கவெல்ல, ரங்கன ஹேரத்(தலைவர்), டில்ருவான் பெரேரா, லக்ஷான் சன்டகான், கஸூன் மதுசங்க, லஹிரு குமார, சுரங்க லக்மால், அசேல குணரட்ன, உப்புல் தரங்க  

இரு முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அஞ்செலோ மத்தியுஸுக்கு காலில் ஏற்பட்டுள்ள உபாதைகள் காரணமாக,  அணியில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக உப்புல் தரங்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தரங்க மத்திய வரிசையில் விளையாடுவார் என நம்பலாம். தினேஷ் சந்திமால் அணியில் இடம் பிடிக்கவில்லை. அவரின் பெருவிரலில் செய்துகொண்ட சத்திர சிகிச்சை முழுமையாக குணமடையாத நிலையில் அவருக்கு பதிலாக நிரோஷான் டிக்கவெல்ல அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். துடுப்பாட்ட வீரர். அத்துடன் விக்கெட் காப்பாளர். விக்கெட் காப்பாளர் அணிக்கு தேவையில்லை. ஏற்கனவே  3 விக்கெட் காப்பளர்கள் அணியில் உள்ளனர். இவர் அணியில் தொடர்ச்சியாக அணியில் இடம் பிடித்துவரும் ஒருவர். ஆனால் இவரின் தெரிவில் குழப்பங்கள் இல்லாமல் இல்லை. இவரிலும் பார்க்க சிறப்பாக ஓட்டங்களை குவித்து வரும் வீரர்கள் உள்ள போதும் இவருக்கு இடம் வழங்கப்படுகின்றது. அண்மையில் இடம்பெற்ற முதற் தரப்போட்டிகளிலும் ஓட்டங்களை பெரிதாக இவர் பெறவில்லை. இப்படி எல்லாம் எழுதியபடி கொஞ்சம் கடந்த முதற்தர போட்டிகளில் ஓட்டங்களை பெற்றவர்களை பார்த்தால் இவரே கூடிய ஓட்டங்களை பெற்றவர் இவரே.

திமுத் கருணாரட்ன அடுத்த வீரர். அவர் அணியில் தொடர்கிறார். ஆக மத்திய வரிசையின் முக்கிய இரு வீரர்களும், இலங்கை அணியின் முக்கியமான இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் இல்லாத நிலையில் இலங்கை அணியின் துடுப்பாட்ட பலம் இழந்துள்ளதாகவே கூற வேண்டும். தலைவராக முதற் தடவையாக ரங்கன ஹேரத் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு எல்லாமே காலம் தாமதமாகியே கிடைத்து வந்துளளது. தலைமைப் பொறுப்பை இவாறு செய்து காட்டப் போகின்றார்? பொறுத்து இருந்து பார்க்கலாம்.

திமுத் கருணாரட்ன டெஸ்ட் போட்டிகளில் அண்மைய போட்டிகளில் மோசமாகவே துடுப்பாடியுளார். ஆனாலும் கடந்த காலங்களில் இவர் சிறப்பாக செயற்பட்டமையும், அண்மைய முதற் தர போட்டிகளில் சதமடித்துள்ளமையும் இவருக்கு வாய்ப்புகளை தந்துள்ளது. இவரை விட வேற எந்த தெரிவும் தெரிவுக்குழுவினருக்கு இல்லை. மற்றைய துடுப்பாட்ட இடங்கள் சரியாக இருக்கின்றன. தினேஷ் சந்திமாலின் இடத்திற்கு டிக்வெல்ல விளையாடுவார். ஆனாலும் அணியில் இடம் பிடித்துள்ள அசேல குணரட்ன அந்த இடத்தில விளையாடுவது இலங்கை அணிக்கு பலமாக அமையும். மித வேகப்பந்து வீசும் சகலதுறை வீரர் இவர்.  மத்தியூஸ் இல்லாத நிலையில் சகலதுறை வீரர் அணிக்கு தேவை என்ற நிலையில் அசேல குணரட்ன விளையாடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அப்படி பார்த்தல் டிக்வெல்ல, தரங்க ஆகியோருக்கிடையில் ஒரு போட்டி நிலவலாம். 

பந்துவீச்சில் ரங்கன ஹேரத் , டில்ருவான் பெரேரா ஆகியோர் அணியில் நிச்சயம் விளையாடக் கூடியவர்கள். ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடுவதாக இருந்தால் ரங்கன ஹேரத் மட்டும் விளையாடுவார்.மூன்றாவது சுழற் பந்துவீச்சாளர் லக்ஷான் சன்டகான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.   வேகப்பந்து வீச்சாளர்களில் சுரங்க லக்மால் நிச்சயமானவர். அவுஸ்திரேலிய அணியுடன்  அறிமுகத்தை மேற்கொண்ட விஸ்வ பெர்னாண்டோ அணியால் நீக்கப்பட்டுள்ளார். 2 ஓவர்கள் பந்து வீசி 1 விக்கெட்டை கைபப்ற்றினார். பின்னர் இவருக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. சுழற் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றினர். மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த தொடரில் அணியில் இல்லை. என்ன தெரிவு இதுவென புரியவில்லை. இந்த நிலையில் புதிய பந்துவீச்சாளர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். விஸ்வ பெர்னாண்டோ இடதுகர வேகப்பந்து வீச்சாளர். இது இன்னுமொரு பலம். ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் விளையாடியுள்ள லஹிரு கமகே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அண்மைய முதற் தர போட்டிகளில் ஓரளவு சிறப்பாக பந்துவீசியுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளராக அணியில் இணைக்கப்பட்டுள்ள லஹிரு குமார அதிகம் பேசபப்டுபவராக உள்ளார். 19 வயதான கண்டியை சேர்ந்த இவர் அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட டெஸ்ட் போட்டிகளில்   மிக சிறப்பாக பந்துவீசியுளார். இங்கிலாந்து 19 வயதுக்குட்ப்பட்ட அணிக்கெதிராக 7 விக்கெட்டுகளையும்,  நான்கு விக்கெட்களையும் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளார். இதனை தொடர்ந்து இலங்கை A அணியில் இவர் இணைக்கப்பட்டார். ஆனால் 2 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை மாத்திரமே கைப்பற்றினார். ஆனாலும் இவர் மீது தெரிவுக்குழுவினர் நம்பிக்கை வைத்து தெரிவு செய்துள்ளனர். இவரின்  உடல்வாகும் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றால் போல் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. சிம்பாப்வே அணியுடன் இவருக்கு அறிமுகம் நிச்சசயம் வழங்கப்படும். சிறப்பாக செயற்பட்டால் அவருக்கு அணியில் வாய்ப்புகள் தொடரும். 19 வயதுக்குட்பட்ட ஒரு நாள் போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசியுள்ளமையினால் ஒரு நாள் தொடரிலும் கூட இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம்.

வேகப்பந்து வீச்சாளர்களில் கஸூன் மதுசங்கவும் அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் 86 முதற் தர இனிங்சில் 139 விக்கெட்டுகளை கைப்பற்றியுளார். 25 வயதான இலங்கை அணியின் தெரிவில் நம்பிககையை ஏற்படுத்தியுள்ள ஒருவர். சுரங்க லக்மாலுடன் இன்னுமிருவர் விளையாடும் வாய்ப்புகள் உள்ளனவென்றால் இவர்கள் இருவருக்கும் அறிமுகம் கிடைக்கும். அசேல குணரட்ன அணியில் இணைக்கப்பட்டால் இவர்களில் ஒருவர் மட்டும் விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கும்.

இலங்கை அணி  துடுப்பாட்டத்தில் சிறந்த நிலையை அடைந்து வருகின்றது. வேகப்பந்து வீச்சு மட்டுமே இலங்கை அணிக்கு பிரச்சினை தரும் விடயமாக இருந்துளளது. இந்த தொடரில் அதனை சீர்செய்த்துக்கொண்டாள் பலமான தென்னாபிரிக்கா அணியை அவர்கள் நாட்டில் நம்பிக்கையாக எதிர்கொள்ள முடியும்.

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையில் இதுவரையில் 15 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றுள் 10 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுளளது. 5 போட்டிகள் சமநிலையில் நிறைவைடைந்துள்ளன. இந்த 5 போட்டிகளைத்தான் கவனிக்க வேண்டும். சிம்பாப்வே தங்கள் நாட்டில் கொஞ்சம் பலமாகவே செயற்படுவார்கள். அண்மைக்காலங்களில் நியூசிலாந்து, தென்னாபிரிக்கா அணிகள் சிம்பாப்வே சென்ற வேளைகளில் சிம்பாப்வே அணி தோல்விகளையே சந்தித்தது.

 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியுடன் 1-1 என்ற தொடர் சமநிலை முடிவை 3 போட்டிகளால் பெற்றுக்கொண்டது. 1994ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் சென்ற முதற் தொடரில் மழை குறுக்கிட, சிம்பாப்வே அணி ஆதிக்கம் செலுத்தி தொடரை சமன் செய்தது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 1-0 என்ற வெற்றியை இலங்கை அணி பெற்றுக் கொண்டது. 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 2-0 என்ற வெற்றியினை இலங்கை அணி மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. எனவே கடந்த கால தொடர்களின் பாடங்களின் அடிப்படையில் இலங்கை அணி செயற்படவேண்டும்.

போட்டி அட்டவணை

முதற் போட்டி - ஒக்டோபர் 29 - நவம்பர் 02 - பிற்பகல் 1.00 மணி

ஹராரே விளையாட்டுக்கழக மைதானம்.

இரண்டாவது போட்டி - நவம்பர் 06  - நவம்பர் 10 - பிற்பகல் 1.00 மணி

ஹராரே விளையாட்டுக்கழக மைதானம்.

http://www.tamilmirror.lk/184973/இலங-க-ய-ன-ச-ம-ப-ப-வ-ச-ற-ற-ப-பயணம-

  • தொடங்கியவர்
குசல் பெரேரா, உப்புல் தரங்க அபார சதங்கள்; இலங்கை முதல் இன்னிங்ஸில் 537 ஓட்டங்கள்
2016-10-30 20:42:15

ஸிம்பாப்வேக்கு எதிராக ஹராரேயில் சனிக்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா, உப்புல் தரங்க ஆகியோரின் அபார சதங்களின் உதவியுடன் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 537 ஓட்டங்களைப் பெற்றது.

 

20287upul-tharanga.jpg

 


சனிக்கிழமை தொடங்கிய இப் போடடியில் ஆரம்ப வீரர்களான திமுத் கருணாரட்ன (56 ஓட்டங்கள்), கௌஷால் சில்வா (94) ஆகிய இருவரும் முதலாவது விக்கட்டில் 123 ஓட்டங்களைப் பகிர்ந்து கொடுத்தனர்.

 

தொடர்ந்து துடுப்பாட்டத்தில் அபரா ஆற்றலை வெளிப்படுத்திய குசல் ஜனித் பெரேரா தனது எட்டாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது சதத்தைப் பூர்த்திசெய்தார். 121 பந்துகளை எதிர்கொண்ட குசல் ஜனித் பெரேரா  110 ஓட்டங்களைக் குவித்தார்.


 உப்புல் தரங்க மிக நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றார்.


குசல் மெண்டிஸ் (34), உப்புல் தரங்க (110 ஆ.இ.), அறிமுக வீரர் அசேல குணரட்ன (54) ஆகியோரும் இலங்கை அணியின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்துக்கொடுத்தனர்.


பந்துவீச்சில் கிறேம் கிரேமர் 142 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

http://www.metronews.lk/article.php?category=sports&news=20287

  • தொடங்கியவர்
இலங்கையுடனான முதல் டெஸ்ட்டில் 373ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது ஸிம்பாப்வே
2016-10-31 20:35:48

இலங்கையுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் ஸிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸில் 373 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

20311rangana.jpg

 

 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 537 ஓட்டங்களைக் குவித்தமை குறிப்பிடத்தக்கது.

 


ஸிம்பாப்வே அணியின் சார்பில் பீட்டர் முவர், கிறேம் கிரேமர் ஆகிய இருவரும் மிகத் திறமையாகவும் நிதானமாகவும் துடுப்பெடுத்தாடி ஸிம்பாம்வே அணிக்கு பலம் சேர்த்தனர்.  கிறேம் கிரேமர் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றார்.

 

எண்ணிக்கை சுருக்கம் :

 

இலங்கை 1வது இன்: சகலரும் ஆட்டமிழந்து 537 (குசல் ஜனித் பெரேரா 110, உப்புல் தரங்க 110, கௌஷால் சில்வா 94, திமுத் கருணாரட்ன 56, அசேல குணரட்ன 54, கிறேம் கிரேமர் 142 க்கு 4 விக்.)

 

ஸிம்பாப்வே 1வது இன்: 373 விக். (கிறேம் கிரேமர்  102 ஆ.இ., பீட்டர் முவர் 79, டினோ மவோயோ 45, ஹமில்டன் மஸகட்ஸா 33, டில்ருவன் பெரேரா 66 க்கு 2 விக்., சுரங்க லக்மால் 69 க்கு 3 விக்., ரங்கன ஹேரத் 97 க்கு 3 விக்.)

http://www.metronews.lk/article.php?category=sports&news=20311

  • தொடங்கியவர்

கிரேமர் சதம் ; சிம்பாப்வே முதல் இன்னிங்ஸில்  373 ஓட்டங்கள் (படங்கள் இணைப்பு)

Published by Pradhap on 2016-10-31 21:30:44

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிம்பாப்வே அணி சகல விக்கட்டுகளையும் இழந்து  373 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

254339.jpg

சிம்பாப்வே அணி சார்பில் அணித்தலைர் கிரேமர் ஆட்டமிழக்காமல் 102 ஒட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், மூர்  79 ஒட்டங்க பெற்றுக்கொடுத்தார்.

254337.jpg

பந்துவீச்சில் லக்மால் மற்றும் ஹேரத் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

இதேவேளை 164 ஒட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி இன்றை ஆட்ட நேர முடிவில் விக்கட் இழப்பின்றி 5 ஒட்டங்களை பெற்றுள்ளது.

254336.jpg

254333.jpg

254332.jpg

254327.jpg

254312.jpg

http://www.virakesari.lk/article/12981

  • தொடங்கியவர்
திமுத் கருணாரட்ன சதம் ; இலங்கை அணி 411 ஓட்டங்களால் முன்னிலையில்; 4 ஆம் நாள் மழையினால் ஆட்டம் பாதிப்பு
2016-11-01 20:49:41

இலங்கைக்கும் ஸிம்பாப்வேக்கும் இடையில் ஹராரே விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் மீதமிருக்க 411 ஓட்டங்களால் இலங்கை முன்னிலையில் இருந்தது.

 

20339dimuth-Karunaratne.jpg


போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை விக்கட் இழப்பின்றி 5 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த இலங்கை 6 விக்கெட்களை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.


தனது 32ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆரம்ப வீரர் திமுத் கருணாரட்ன மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி நான்காவது சதத்தைப் பூர்த்திசெய்தார்.

 

எனினும் முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த கௌஷால் சில்வா, சதங்களைக் குவித்த குசல் ஜனித் பெரேரா மற்றும் உப்புல் தரங்க ஆகியோர் துவண்டுபோயினர்.


திமுத் கருணாரட்னவும் அரைச் சதம் பெற்ற தனஞ்செய டி சில்வாவும் ஐந்தாவது விக்கெட்டில் 94 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.


ஸிம்பாப்வே சார்பாக அணித் தலைவர் கிறேம் கிரேமர் 260 நிமிடங்கள் மிகுந்த நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி தனது கன்னிச் சதத்தைப் பூர்த்தி செய்தார். இவருடன் 8ஆவது விக்கட்டில் ஜோடி சேர்ந்த டொனல்ட் திரிபானோ 92 ஓட்டங்களைப் பகிர்ந்தமை விசேட அம்சமாகும்.

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1வது இன்: சகலரும் ஆட்டமிழந்து 537 (குசல் ஜனித் பெரேரா 110, உப்புல் தரங்க 110, கௌஷால் சில்வா 94, திமுத் கருணாரட்ன 56, அசேல குணரட்ன 54, கிறேம் கிரேமர் 142 க்கு 4 விக்.)


ஸிம்பாப்வே 1வது இன்: சகலரும் ஆட்டமிழந்து 373 (கிறேம் கிரேமர் 102 * , பீட்டர் முவர் 79, டொனல்ட் திரிபானோ 46, டினோ மவோயோ 45, சுரங்க லக்மால் 69 க்கு 3 விக்., ரங்கன ஹேரத் 97 க்கு 3 விக்.)


இலங்கை 2வது இன்: 247 க்கு 6 விக். டிக். (திமுத் கருணாரட்ன 110, தனஞ்செய டி சில்வா 64, கார்ல் மும்பா 50 க்கு 4 விக்.)

http://www.metronews.lk/article.php?category=sports&news=20339

  • தொடங்கியவர்

412 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது இலங்கை 

 

 

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிக்களுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 247 ஒட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டுள்ளது.

254424.jpg

இந்நிலையில் சிம்பப்வே அணியின் வெற்றியிலக்காக 412 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 537 ஓட்டங்களை பெற்றதுடன், சிம்பாப்வே அணி 373 ஓட்டங்களை பெற்றது.

இதேவேளை இலங்கை அணி 6 விக்கட்டுகளை இழந்து 247 ஒட்டங்களை பெற்றிருந்த போது மழைக்குறுக்கிட்ட நிலையில், இலங்கை அணி ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இந்நிலையில் 5 ஆம் நாள் ஆட்டமான இன்று சிம்பாப்வே அணிக்கு வெற்றியிலக்காக 412 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/13040

  • தொடங்கியவர்
Sri Lanka 537 & 247/6d
Zimbabwe 373 & 74/5 (34.0 ov)
Zimbabwe require another 338 runs with 5 wickets remaining
  • தொடங்கியவர்
ஸிம்பாப்வேயுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 225 ஓட்டங்களால் இலங்கை வெற்றி
2016-11-02 20:31:53

ஸிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 225 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

 

20370sri-lanka-vs-zimbabwe.jpg

 

ஸிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெற்ற இப்போட்டியில் ஸிம்பாப்வே அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் 415 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், அவ்வணி 186 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

 

9 ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த கிரேம் கிரேமரும் கார்ல் மும்பாவும் தோல்வியைத் தவிர்ப்பதற்காக நிதானமாக துடுப்பெடுத்தாடினர். கிரேம் கிரேமர் 144 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பெற்றார். அவர் ஆட்டமிழந்த பின்னர் ஸிம்பாப்வே அணி மீண்டும் ஆட்டம் கண்டது.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் தில்ருவன் பெரேரா 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ரங்கன ஹேரத் 38 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=20370#sthash.tSccOrIa.dpuf
  • தொடங்கியவர்

போராடி வீழ்ந்து சிம்பாப்வே : 225 ஓட்டங்களால் இலங்கை அபார வெற்றி

 

 

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 225 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை- சிம்பாப்வே அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹாரரேவில் நடைபெற்றது.

இதில் இலங்கை அணி உபுல் தரங்கா (110), குசால் பெரேரா (110) ஆகியோரின் அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 537 ஓட்டங்களை குவித்தது.

254471.jpg

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய சிம்பாப்வே அணி அணித்தலைவர் கிரிமர் (102) சதத்தால் 373 ஓட்டங்கள் குவித்தது.

இதைத் தொடரந்து 164 ஓட்டங்கள் முன்னிலையில் 2வது இன்னிசை தொடங்கிய இலங்கை அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 247 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தனது ஆட்டத்தினை இடை நிறுத்திக் கொண்டது.

இதில் தொடக்க வீரர் திமுத் கருணாரத்னே 110 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். தவிர, தனஞ்ஜெய டி சில்வா 64 ஓட்டங்கள் எடுத்தார்.

412 ஓட்டங்களை  வெற்றியிலக்காக கொண்டு இன்றைய நாளில் களமிறங்கிய சிம்பாப்வே அணி ஆரம்பம் முதலே துடுப்பாட்டத்தில் தடுமாறியது.

32.5 ஓவர்களில் 100 ஓட்டங்களுக்கு  6 விக்கட்டுக்களை இழந்த சிம்பாப்வே அணி இப்போட்டியினை சமநிலை செய்யும் முயற்சியில் இறங்கியது.

சுமார் 57.8 ஓவர்கள் வரை தன்வசமிருந்த 4 விக்கட்டுக்களை கொண்டு இப்போட்டியினை சமநிலை செய்ய இலங்கை பந்து வீச்சாளர்களிடம் கடுமையாக போராடியது, இருந்தும் இலங்கை அணி பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு சிம்பாப்வே அணியின் முயற்சி தோல்வியுற்றது.

254468.jpg

சிம்பாப்வே அணி 2 ஆவது இனிங்ஸில் 186 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதனடிப்படையில் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனாக சிம்பாப்வே அணி தலைவர் கிரிமர் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை அணி தலைவராக முதல் முறையாக செயற்படும் ரங்கன ஹெரத் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

254469.jpg

http://www.virakesari.lk/article/13064

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.