Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாக செயற்பாடுகள் மாணவர்களால் முடக்கம் : பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

Featured Replies

யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாக செயற்பாடுகள் மாணவர்களால் முடக்கம் : பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

 

 

D00150--Jaffna.jpgயாழ். பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததை அடுத்து யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் தொடர்ந்தும் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்று பல்கலைகழகத்தின் நிர்வாக செய்பாடுகளை மாணவர்கள் முடக்கியுள்ளனர்.

D0fs1dfdf.jpg

 

 

Fdfdfsdfdf.jpg

http://www.virakesari.lk/article/12937

  • தொடங்கியவர்

யாழ்.பல்கலையில் குழப்பம்.

img_2309
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

யாழ்.பல்கலைகழக வாயிலை திறக்குமாறு கோரி மாணவர்களை துணைவேந்தர் கோரியதை அடுத்து மாணவர்களுக்கும் துணைவேந்தருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது. யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவரின் படுகொலைக்கு நீதி கோரி சக மாணவர்கள் இன்று காலை முதல் பல்கலைகழக வாயில் கதவினை மூடி நிர்வாக செயற்பாட்டை முடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் பல்கலைகழக நிர்வாக உத்தியோகஸ்தர்கள் பல்கலைகழகத்தினுள் செல்ல முடியாத நிலை பல்கலை கழக சூழலில் நிற்கின்றனர். அந்நிலையில் காலை 9.30 மணியளவில் பல்கலைகழகத்திற்கு வருகை தந்த துணைவேந்தர் சகலரையும் பல்கலைகழகத்தினுள் செல்ல அனுமதிக்குமாறு கோரினார்.

இதனால் மாணவர்களும் துணைவேந்தருக்கும் இடையில் நீண்ட கருத்து மோதல் இடம்பெற்றது.  அதனை தொடர்ந்து துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளை மாத்திரம் பல்கலைகழத்தினுள் செல்வதற்கு மாணவர்கள் அனுமதித்தனர். ஏனையவர்களை தொடர்ந்து பல்கலைகழகத்தினுள் செல்ல மாணவர்கள் அனுமதிக்கவில்லை.

img_2307

இதேவேளை இன்றைய தினம் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் யாழ்.பல்கலைகழகத்திற்கு நேரில் விஜயம் மேற்கொண்டு பல்கலைகழக நிர்வாகம் மற்றும் மாணவ பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

img_2308

 

  • தொடங்கியவர்
மாணவர்களின் உயிரிழப்பிற்கு நீதி கோரி யாழ் பல்கலை நிர்வாக செயற்பாடுகள் முடக்கம்
மாணவர்களின் உயிரிழப்பிற்கு நீதி கோரி யாழ் பல்கலை நிர்வாக செயற்பாடுகள் முடக்கம்
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில்  உயிரிழந்த நிலையில் அவர்களி்ன்  மரணத்திற்கு நீதி கோரி யாழ் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள்   இன்று காலை முதல் நிர்வாக செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.
 
இதனால் நிர்வாக ஊழியர்கள் பல்கலைக்கழகத்திற்குள் செல்ல முடியாதவாறு வாயிற் கதவுகள் மூடப்பட்டுள்ளன.
 
யாழ் பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன்  இருவர் கடந்த 21 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லையெனத் தெரிவித்தே கற்றல் மற்றும் நிர்வாக செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
14914694_790113037794447_647507792_n.jpg
மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவொரு அரச அதிகாரிகளும் தம்மை அழைத்து கருத்துக்களை கேட்டறிந்து கொள்ளவில்லையெனவும் மாணவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
 
இதேவேளை இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள் ஒன்றியம் மற்றும் பீடாதிபதிகளை இன்று காலை 10 மணிக்கு சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
14885826_790108851128199_126591995_n.jpg
அதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யும் ஜனாதிபதி உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.
 
14914711_790122601126824_337720538_n.jpg

http://onlineuthayan.com/news/19557

  • தொடங்கியவர்

போராட்டத்தை கைவிட்டனர் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்;நாளை கொழும்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பு

 

 

(ஆர்.வி.கே.)

போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீள்குடியேற்ற இந்துமத சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதன் உடனான சந்திப்பின் பின்னர் போராட்டத்தை கைவிட்டதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாளை கொழும்பில் சந்தித்து பேசவுள்ளனர்.

unnamed-_29_.jpg
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொண்டு வந்த எதிர்ப்புப் போராட்டம்  அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான கலந்துரையாடலின் பின்னர் கைவிடப்பட்டுள்ளது. 


யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இன்று காலை விஜயம் செய்த மீள்குடியேற்ற இந்துமத சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையிலான குழுவினருடன்  பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.


இக் கலந்துரையாடலில் அமைச்சரினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளையடுத்து  தமது போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதியுடன்  நாளை பகல்  கொழும்பில் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர் ஒன்றியம் ஆகியவற்றுடனான சந்திப்பொன்று  இடம்பெறவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


எனினும் காலை யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவரின் படுகொலைக்கு நீதிகோரி சக மாணவர்கள் பல்கலைகழக வாயில் கதவினை மூடி நிர்வாக செயற்பாட்டை முடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/12959

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.