Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நவீனன் said:

2012 அணி வேறு, தற்போதைய அணி வேறு: குக் சொல்கிறார்

 

2012-ம் ஆண்டு இந்தியா வந்த இங்கிலாந்து அணி வேறு, தற்போது இந்தியாவில் விளையாடும் அணி வேறு என்று அந்த அணியின் கேப்டன் குக் கூறியுள்ளார்.

 
 
 
 
2012 அணி வேறு, தற்போதைய அணி வேறு: குக் சொல்கிறார்
 


2012-ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த இங்கிலாந்து அணி தொடரை 2-1 எனக்கைப்பற்றியது. இந்தியா அணியில் சச்சின், சேவாக், காம்பீர், ஹர்பஜன் சிங் மற்றும் டோனி போன்ற ஜாம்பவான்கள் இருந்த போதிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

 

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/29211931/1053412/In-2012-India-were-old-side-in-2016-we-are-inexperienced.vpf

எல்லாம் சரி பிரதர் ஆனால் அப்ப அஷ்வின் இல்லையே.அத தானே பிரச்சனை.(எனது தகவல் பிழையாக இருந்தால் மன்னிக்கவும்)

  • Replies 157
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இங்கிலாந்து வீரர் ஹமீத் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகல்

19 வயதே ஆன இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஹசீப் ஹமீத் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய இரண்டு டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

 
இங்கிலாந்து வீரர் ஹமீத் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகல்
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்றது. இன்றுடன் முடிவடைந்த இந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்னில் ஆல் அவுட் அனது.

அந்த அணியின் தொடக்க வீரர் ஹசீப் ஹமீத். 19 வயதே ஆன இவர் இந்திய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டார். ரன்கள் அதிக அளவில் குவிக்கவில்லை என்றாலும், சமாளித்து விளையாடினார். அவரது ஆட்டம் அனைவரையும் ஈர்த்தது. ராஜ்கோட் டெஸ்டில் அறிமுகமான அவர் அந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் 31 ரன்னும், 2-வத இன்னிங்சில் 82 ரன்களும் சேர்த்தார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 13 ரன்னும், 25 ரன்னும் எடுத்தார்.

மொகாலி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். உமேஷ் யாதவ் வீசிய பந்து ஹமீத்தின் இடது கை சுண்டு விரலில் பட்டு ரகானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சுண்டு விரலில் பந்து வேகமாக பட்டதால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் தொடக்க வீரராக களம் இறங்கவில்லை. 8-வது வீரரா களம் இறங்கிய அவர் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

அவரது காயத்தின் தன்மை வீரியம் உள்ளதாக இருப்பதால் இங்கிலாந்து அணி அவரை சிகிச்சைக்காக உடனடியாக இங்கிலாந்து அனுப்புகிறது. இதனால் இந்தியாவிற்கு எதிராக மும்பை மற்றும் சென்னையில் நடக்க இருக்கம் எஞ்சிய இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து அணி புதிய தொடக்க வீரரை தேடவேண்டியுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/29174011/1053392/Haseeb-Hameed-ruled-out-of-the-remainder-of-India.vpf

  • தொடங்கியவர்

அப்பவும் அஷ்வின் விளையாடினார்..:)

http://www.espncricinfo.com/india-v-england-2012/engine/match/565806.html

http://www.espncricinfo.com/india-v-england-2012/engine/match/565807.html

http://www.espncricinfo.com/india-v-england-2012/engine/match/565808.html

http://www.espncricinfo.com/india-v-england-2012/engine/match/565809.html

 

 

17 minutes ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி பிரதர் ஆனால் அப்ப அஷ்வின் இல்லையே.அத தானே பிரச்சனை.(எனது தகவல் பிழையாக இருந்தால் மன்னிக்கவும்)

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

நனறி நவீனன் தகவலுக்கு.

  • தொடங்கியவர்

இந்தியா - இங்கிலாந்து 3 வது டெஸ்ட் போட்டி: கேப்டன்களின் குரல்

 

 
விராட் கோலி.| கோப்புப் படம்.
விராட் கோலி.| கோப்புப் படம்.
 
 

விராட் கோலி:

சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களிலேயே விளையாடி வெற்றி பெறுகிறீர்கள். இப்படி இருந்தால் சிறந்த ஆடுகளத்தில் விளையாடி எப்படி வெற்றி பெற முடியும் என கடந்த 12 மாதங்களாக என்னிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன. தற்போதுதான் அந்த கேள்வி ஓய்ந்துள்ளது. சிறந்த கிரிக்கெட்டை விளையாடி ஒரு அணி யாக நாங்கள் வெற்றி பெறுகிறோம். மொகாலி மைதானம் வேகப்பந்து வீச்சுக்கே ஒத்துழைத்தது. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறனும், உலகில் எந்த அணியையும் வீழ்த்தும் திறமையும் எங்களிடம் உள்ளது.

ஆடுகளத்தில் பந்து அதிகம் சுழல வில்லை. இங்கிலாந்து அணி டாஸ் வென்றதும் அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இது எங்களுக்கு ஆச்சர்ய மாக இருந்தது. நாங்கள் சிறந்த கிரிக் கெட்டை விளையாடி வருகிறோம். இது எங்களுக்கு மேலும் மேலும் நம்பிக் கையை அளித்து வருகிறது. டாஸில் தோற்ற போதிலும் இங்கிலாந்து அணியை 280 ரன்களுக்குள் ஆட்ட மிழக்க செய்தோம். உண்மையில் டாஸில் தோல்வியடைந்ததுதான் எங்களை மேலும் ஊக்கப்படுத்தியது.

அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ் ஆகிய 3 பேரும் பின்கள பேட்டிங்கில் அளித்த பங்களிப்பு பெரிய சாதனையாகும். இவர்களது பேட்டிங்தான் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை கொடுத்தது. அஸ்வின் ஒரு சாம்பியன், நம்பர் ஒன் ஆல்ரவுண்டராகவும் திகழ்கிறார். ஜடேஜா தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறார். ஜெயந்த் யாதவ் அறிமுக டெஸ்ட்டிலேயே ஆட்டத்தில் முதிர்ச்சி நிலையை வெளிப்படுத்தினார். வேகப்பந்து வீச்சில் ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் விரைவாக செயல்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. கருண் நாயருக்கு இந்த ஆட்டம் மோசமாக அமைந்தது. எனினும் அடுத்த போட்டி அவருக்கு சிறந்ததாக அமையும்.

அலாஸ்டர் குக்:

டாஸில் வெற்றி பெற்றது சிறப்பான அம்சம்தான். ஆனால் 280 ரன்களுக்குள் ஆட்டமிழந்தால் வெற்றி பெற முடியாது. இதுபோன்ற ஆடுகளத்தில் குறைந்தது 400 ரன்களாவது குவிக்க வேண்டும். வெற்றியின் பெருமை இந்திய அணிக்கே சேரும். அவர்கள் எங்களைவிட சிறப்பாக விளையாடினார்கள். ஹசிப் ஹமீது காயம் அடைந்துள்ளதால் தாயகம் திரும்புகிறார்.

http://tamil.thehindu.com/sports/இந்தியா-இங்கிலாந்து-2வது-டெஸ்ட்-போட்டி-கேப்டன்களின்-குரல்/article9401398.ece

  • தொடங்கியவர்

காயத்தால் ஹமீத், அன்சாரி விலகல்: இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ், டாவ்சன் சேர்ப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி காயத்தால் விலகியுள்ள ஹமீத், அன்சாரிக்கு பதிலாக புதுமுக பேட்ஸ்மேன் கீடான் ஜென்னிங்ஸ், சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாவ்சன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 
காயத்தால் ஹமீத், அன்சாரி விலகல்: இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ், டாவ்சன் சேர்ப்பு
 
லண்டன் :

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் ‘டிரா’ ஆன நிலையில், விசாகப்பட்டினம் மற்றும் மொகாலி டெஸ்டுகளில் படுதோல்வியை தழுவிய இங்கிலாந்து தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 8-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு மேலும் ஒரு பின்னடைவாக இரு வீரர்கள் காயத்தில் சிக்கியுள்ளனர். இந்த தொடரில் அறிமுக வீரராக அடியெடுத்து வைத்த 19 வயதான ஹசீப் ஹமீத், இந்திய சுழற்பந்து வீச்சை சமாளித்து நிலைத்து நின்று ஆடுவதில் அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தார். 3-வது டெஸ்டின் போது அவருக்கு இடது கை சுண்டு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் தொடரை விட்டு விலகியுள்ள அவர் உடனடியாக தாயகம் திரும்புகிறார். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட உள்ளது. இதே போல் முதுகுவலியால் அவதிப்படும் சுழற்பந்து வீச்சாளர் ஜாபர் அன்சாரியாலும் எஞ்சிய போட்டிகளில் ஆட முடியாது.

இவர்களுக்கு பதிலாக புதுமுக பேட்ஸ்மேன் கீடான் ஜென்னிங்ஸ், சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாவ்சன் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில் 24 வயதான இடக்கை ஆட்டக்காரர் ஜென்னிங்ஸ், தென்ஆப்பிரிக்காவில் பிறந்தவர். 72 முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி 12 சதம் உள்பட 4,272 ரன்கள் எடுத்துள்ளார். இவரது தந்தை ராய் ஜென்னிங்ஸ் தென்ஆப்பிரிக்காவில் முதல்தர கிரிக்கெட்டில் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடக்கை சுழற்பந்து வீச்சாளர் டாவ்சன் இங்கிலாந்து அணிக்காக ஏற்கனவே ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் ஆடியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு இன்னொரு பிரச்சினையாக, ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்சும் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். மொகாலி டெஸ்டின் போது ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில் விரலில் காயம் அடைந்த அவர் அடுத்த டெஸ்டில் ஆடுவது சந்தேகம் தான்.

இதற்கிடையே ஹசீத் ஹமீத் நேற்று முன்தினம் இந்திய கேப்டன் விராட் கோலியை சந்தித்து பேசினார். காயத்தையும் பொருட்படுத்தாமல் மொகாலி டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 8-வது வரிசையில் களம் இறங்கிய ஹமீத் 159 பந்துகள் (59 ரன்) தாக்குப்பிடித்து போராடிய விதத்தை கோலி பாராட்டினார். பேட்டிங் ஆலோசனைகளையும் கோலியிடம் இருந்து ஹமீத் பெற்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/01093459/1053688/England-team-Keaton-Jennings-and-Liam-Dawson-include.vpf

  • தொடங்கியவர்

4-வது டெஸ்ட்: இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் பிராட் விளையாடுவது சந்தேகம்

 

 
 

காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று தெரிகிறது.

 
 
 
 
4-வது டெஸ்ட்: இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் பிராட் விளையாடுவது சந்தேகம்
 
மும்பை:

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3 டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. 2-வது மற்றும் 3-வது டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றது.

விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் காயம் அடைந்தார். கணுகாலில் ஏற்பட்ட காயத்தால் அவர் மொகாலியில் நடந்த 3-வது டெஸ்டில் விளையாடவில்லை.

இந்த நிலையில் வருகிற 8-ந்தேதி மும்பையில் தொடங்கும் 4-வது டெஸ்ட் போட்டியிலும் ஸ்டூவர்ட் பிராட் விளையாடுவது சந்தேகம் என்று தெரிகிறது.

காயம் குணமடைய அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் காயத்தில் இருந்து முழுமையாக அவர் குணமடையவில்லை.

இதுபற்றி இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பெய்லிஸ் கூறுகையில், 4-வது டெஸ்ட் போட்டி தொங்குவதறகுள் ஸ்டூவர்ட் பிராட் உடல் தகுதி பெறுவார் என்று நூறு சதவீதம் என்னால் கூற முடியாது. பயிற்சியில் அவர் செயல்பாட்டை பார்த்து தான் கூற முடியும் என்றார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருந்திமான் சகா காயம் காரணமாக 3-வது டெஸ்ட்டில் விளையாடவில்லை. அவருக்கு பதில் இடம் பெற்ற பார்த்தீவ் பட்டேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சகா காயத்தில் இருந்து மீண்டு வராததால் 4-வது டெஸ்ட் அவர் இடம் பெறுவது மிக குறைவு. இதனால் பார்த்தீவ் பட்டேல் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/04101908/1054337/England-bowler-Stuart-Broad-doubt-for-playing-against.vpf

  • தொடங்கியவர்

மும்பை டெஸ்டில் ஆடும் லெவனில் பார்தீவ் பட்டேலுக்கு இடம்

 

சகா உடற்தகுதி பெறாத காரணத்தினால் மும்பையில் நடக்க இருக்கும் 4-வது டெஸ்டிலும் பார்தீவ் பட்டேல் இடம் பிடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

 
மும்பை டெஸ்டில் ஆடும் லெவனில் பார்தீவ் பட்டேலுக்கு இடம்
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது போட்டி மும்பையில் 8-ந்தேதி தொடங்குகிறது.

விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது போட்டியின்போது விக்கெட் கீப்பர் சஹாவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் மொகாலியில் நடைபெற்ற 3-வது போட்டியில் பார்தீவ் பட்டேல் சேர்க்கப்பட்டார். அவர் முதல் இன்னிங்சில் 42 ரன்களும், 2-வது இன்னிங்சில் 54 பந்துகளை சந்தித்து 67 ரன்களும் சேர்த்தார்.

தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பார்தீவ் பட்டேலுக்கு மும்பை டெஸ்டில் இடம்கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், தற்போது சகா தனது தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்று தெரிகிறது. இதனால் 8-ந்தேதி நடைபெற இருக்கும் 4-வது டெஸ்டில் பார்தீவ் பட்டேல் இடம்பெறுவர் உறுதி என தேர்வாளர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/04193921/1054439/India-vs-England-Parthiv-Patel-to-continue-as-keeper.vpf

  • தொடங்கியவர்

மும்பை வான்கடே மைதானம்: 3-வது நாளில் இருந்து சுழலுக்கு கைகொடுக்கும் - ஆடுகள பராமரிப்பாளர் தகவல்

 

 
 

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோத உள்ள 4-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் மும்பை வான்கடே மைதானம் 3-வது நாளில் இருந்து சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அலாஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

விசாகப்பட்டினத்தில் நடை பெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து மொகாலியில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்திய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி வரும் 8-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இங்கிலாந்து அணி வீரர்கள் 3-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்தும் புத்து ணர்ச்சி பெறுவதற்காக தங்களது குடும்பத்தினருடன் துபையில் சிலநாட்கள் நேரத்தை செலவிட்டு மும்பை திரும்பி உள்ளனர்.

வான்கடே மைதானத்தில் இரு அணி வீரர்களும் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர். தொடரில் 0-2 என பின்தங்கி உள்ள இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட்டிலும், சென்னையில் 16-ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட்டிலும் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என நெருக்கடியில் உள்ளது.

இந்நிலையில் இந்த மைதானம் 3-வது நாளில் இருந்து சுழலுக்கு சாதகமாக இருக்கும் என ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆடுகள பராமரிப்பாளர் கூறும்போது, ‘‘4-வது போட்டிக்கான ஆடுகளம் சாதாரண முறையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே பந்துகள் சுழலாது. 3-வது நாளில் இருந்து சுழற்பந்து வீச்சுக்கு உதவியாக இருக்கும்.

ஆடுகள தயாரிப்பில் சிறப்பு ஏற்பாடுகள் ஒன்றும் இல்லை. உலக டி 20 ஆட்டம், ரஞ்சி கோப்பை போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளது. சர்வதேச போட்டிக்கு தகுந்தவாறு ஆடுகளத்தை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இங்கு நடைபெற இருந்த ரஞ்சி கோப்பை ஆட்டம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதால் ஆடுகளம் தயார் செய்ய 20 நாட்கள் எடுத்துக்கொண்டோம். எங்களது கருத்துப்படி, பந்துகள் சற்று எழும்பி வரக்கூடும்’’ என்றார்.

மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘ஆடுகளம் சிறந்ததாக இருக்கும். நல்ல கிரிக்கெட் போட்டியை எதிர்பார்க்கலாம். 60 முதல் 65 சதவீதம் வரையிலான சீசன் டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளன. ஆடுகள தயாரிப்பு குறித்து அணி நிர்வாகத்திடம் இருந்து எங்களது எந்தவித குறிப்பும் வழங்கப்படவில்லை’’ என்றார்.

வான்கடே மைதானத்தில் இந்திய அணி 24 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இந்திய அணி 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 ஆட்டத்தில் தோல்வி கண்டுள்ளது. 6 ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது. இங்கிலாந்து அணி கடைசியாக இங்கு விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

வான்கடே மைதானத்தில் கடைசியாக 2013-ம் ஆண்டு இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. 200-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய சச்சின் இந்த ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு வழியனுப்பு விழா நடத்திய நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை யில் இந்திய அணி தற்போது விளையாட உள்ளது.

http://tamil.thehindu.com/sports/மும்பை-வான்கடே-மைதானம்-3வது-நாளில்-இருந்து-சுழலுக்கு-கைகொடுக்கும்-ஆடுகள-பராமரிப்பாளர்-தகவல்/article9412270.ece

  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இவர்கள் கிடையாது!

 

indian_team_test_16155.jpg

இங்கிலாந்து எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரஹானே, முகமதுசமி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் மணிஷ்பாண்டே, ஷர்துல்தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் தோல்வியை தழுவியது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது.

இந்த நிலையில் 4வது போட்டி மும்பையில் நாளை நடக்கிறது. காயம் காரமணாக ரஹானே, முகமது சமி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் கர்நாடகாவை சேர்ந்த மணிஷ் பாண்டே, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். ரஹானேவுக்கு கை விரலிலும், முகமதுசமிக்கு முழங்காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

http://www.vikatan.com/news/sports/74394-rahane-to-miss-last-two-tests-due-to-finger-injury.art

  • தொடங்கியவர்

#INDvsENG - நான்காவது டெஸ்ட்டில் இங்கிலாந்து பேட்டிங்

400_09443.jpg

மும்பையில் இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று முதல் நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் அலெஸ்டர் குக் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரஹானேவுக்கு பதிலாக மனிஷ் பாண்டேவும், ஷமிக்கு பதிலாக ஷர்துல் தகூரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

http://www.vikatan.com/news/sports/74434-indvseng---england-wins-toss-and-chooses-to-bat-first-in-4th-test.art

  • தொடங்கியவர்

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: மும்பை வான்கடே மைதான கண்ணோட்டம்

 

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

 
 
 
 
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: மும்பை வான்கடே மைதான கண்ணோட்டம்
 
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் 1975-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய அணி இதுவரை 24 டெஸ்டில் விளையாடி அதில் 10-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டுள்ளது. இங்கிலாந்து அணி இங்கு 7 டெஸ்டில் ஆடி 3-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. ஒரு போட்டி ‘டிரா’ ஆனது.

இங்கிலாந்து அணி இங்கு விளையாடிய கடைசி இரு டெஸ்டுகளில் முறையே 212 ரன்கள் (2006-ம் ஆண்டு) 10 விக்கெட் (2012) வித்தியாசங்களில் இந்தியாவை தோற்கடித்து இருந்தது. இந்த மைதானத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த வெளிநாட்டு அணி இங்கிலாந்து தான்.

1975-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி குவித்த 604 ரன்களே மும்பை வான்கடே மைதானத்தில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். 1993-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சேர்த்த 591 ரன்கள் இங்கு இந்தியாவின் சிறந்த ஸ்கோராகும். 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியா 93 ரன்களில் சுருண்டது குறைந்த ஸ்கோராகும்.

இந்தியாவின் சுனில் கவாஸ்கர் 11 ஆட்டங்களில் விளையாடி 5 சதம் உள்பட 1,122 ரன்கள் எடுத்து ரன் குவிப்பில் முதலிடம் வகிக்கிறார். விக்கெட் வீழ்த்தியதில் இந்தியாவின் கும்பிளே 38 விக்கெட்டுகளுடன் (7 டெஸ்ட்) முதலிடத்தில் உள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/08092431/1054905/India-England-Test-match-Mumbai-wankhede-Ground.vpf

  • தொடங்கியவர்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி ; முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இங்கிலாந்து

Published by Pradhap on 2016-12-08 11:47:32

 

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டி வான்கடே மைதானத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

sdfsfasf1.jpg

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி உணவு இடைவேளைக்கு போட்டி நிறுத்தப்படும் போது 117 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டினை இழந்துள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் கியோடன் ஜென்னிங்ஸ் 65 ஓட்டங்களையும், ஜோ ரூட் 5 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடி வருவதுடன், அணித்தலைவர் குக் 46 ஓட்டங்களை பெற்றவேளை ஜடேஜாவின் பந்துவீச்சில் ஸ்டம்ப் முறையில் ஆட்டமிழந்தார்.

இரு அணிகளுக்கும் இடையில் 3 டெஸ்ட் போட்டிகள் நிறைவுபெற்ற நிலையில் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

மும்பை டெஸ்ட்: இங்கிலாந்தின் அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் சதம்

 

மும்பை வான்கடே டெஸ்டில் இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் சதம் அடித்து அசத்தினார். அறிமுக போட்டியில் சதம் அடித்த 19-வது வீரர் இவராவார்.

 
 
மும்பை டெஸ்ட்: இங்கிலாந்தின் அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் சதம்
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியி்ல் இரண்டு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பேட்டி, ஹமீத் ஆகியோர் நீக்கப்பட்டு ஜேக் பால், ஜென்னிங்ஸ் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர். தொடக்க பேட்ஸ்மேன் ஜென்னிசுக்கு இது அறிமுக போட்டியாகும். இந்திய அணியில் ரகானே, முகமது சமி ஆகியோர் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல், புவனவேஸ்வர் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஜென்னிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் 89 பந்தில் 50 ரன்கள் அடித்து தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இந்த அரைசதத்தை சதமாக்கும் முயற்சியில் விளையாடினார்.

மறுமுனையில் குக் அரைசதத்தை நெருங்கிய நிலையில் 46 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 1 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களாக இருந்தது. அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். இங்கிலாந்து அணி முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 31 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது. ஜென்னிங்ஸ் 65 ரன்னுடனும்,  ஜோ ரூட் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
 
F4A04E32-76C9-4E6D-B739-DD0BCA659395_L_s


மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஜோ ரூட் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு ஜென்னிங்ஸ் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மதிய தேனீர் இடைவேளைக்கு சற்று முன் ஜென்னிங்ஸ் சதம் அடித்தார். இதனால் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 19-வது வீரர் என்ற பெருமையை ஜென்னிங்ஸ் பெற்றார்.

மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. ஜென்னிங்ஸ் 103 ரன்னுடனும், மொயீன் அலி 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்தபின்பு இருவரும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/12/08144723/1054988/Mumbai-Test-jennings-century-in-debut-match.vpf

  • தொடங்கியவர்

மும்பை டெஸ்டில் நடுவரைப் பதம் பார்த்த பந்து!

 

 
paul9018181

 

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது.

மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்துள்ளது. எனவே, தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் வான்கடே டெஸ்டில் இந்தியா களமிறங்கியுள்ளது. மறுமுனையில், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ரஹானே, சமிக்குப் பதிலாக ராகுல், புவனேஸ்வர் குமார் இடம்பெற்றுள்ளார்கள். இங்கிலாந்து அணியில் கீட்டன் ஜென்னிங்ஸ், ஜேக் பால் புதிதாக இடம்பெற்றுள்ளார்கள். 

paul981.jpg

49-வது ஓவரில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்றது. ஜென்னிங்ஸ் அடித்த பந்தை ஃபீல்டிங் செய்த இந்திய வீரர் த்ரோ செய்யும்போது அது நடுவர் பால் ரீஃபிள் தலையில் தவறுதலாகப் பட்டது. இதனால் நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார். உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. வலி தொடர்ந்து இருந்ததால், அவர் சிகிச்சைக்காக மைதானத்திலிருந்து வெளியேறினார். பிறகு மூன்றாம் நடுவர் எராஸ்மஸ், ஆட்ட நடுவராகப் பணியாற்றினார். ஷம்சுதீன் மூன்றாம் நடுவராக நியமிக்கப்பட்டார். 

http://www.dinamani.com/sports/sports-news/2016/dec/08/மும்பை-டெஸ்டில்-நடுவரைப்-பதம்-பார்த்த-பந்து-வீடியோ-2612164.html

  • தொடங்கியவர்

மும்பை டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 288/5

 

மும்பை வான்கடே டெஸ்டில் இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் ஜென்னிங்ஸ் சதத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்துள்ளது.

 
 
மும்பை டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 288/5
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியி்ல் இரண்டு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பேட்டி, ஹமீத் ஆகியோர் நீக்கப்பட்டு ஜேக் பால், ஜென்னிங்ஸ் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர். தொடக்க பேட்ஸ்மேன் ஜென்னிசுக்கு இது அறிமுக போட்டியாகும். இந்திய அணியில் ரகானே, முகமது சமி ஆகியோர் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் 89 பந்தில் 50 ரன்கள் அடித்து தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இந்த அரைசதத்தை சதமாக்கும் முயற்சியில் விளையாடினார்.

மறுமுனையில் குக் அரைசதத்தை நெருங்கிய நிலையில் 46 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 1 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களாக இருந்தது. அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். இங்கிலாந்து அணி முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 31 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது. ஜென்னிங்ஸ் 65 ரன்னுடனும்,  ஜோ ரூட் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஜோ ரூட் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு ஜென்னிங்ஸ் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மதிய தேனீர் இடைவேளைக்கு சற்று முன் ஜென்னிங்ஸ் சதம் அடித்தார். இதனால் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 19-வது வீரர் என்ற பெருமையை ஜென்னிங்ஸ் பெற்றார்.

மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. ஜென்னிங்ஸ் 103 ரன்னுடனும், மொயீன் அலி 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்தபின்பு இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அரைசதம் அடித்த நிலையில் மொயீன் அலி அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். அதே ஓவரில் அடுத்த இரண்டாவது பந்தில் ஜென்னிங்ஸ் 112 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பேர்ஸ்டோவ் 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் வீழ்த்தினார்.
 
6A29E722-122B-4CAA-97FC-DE86FB26556E_L_s


இதனால் 230-க்கு 2 விக்கெட்டுக்களை இழந்திருந்த இங்கிலாந்து, அடுத்த 19 ரன்களுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல் நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட்டுக்கள் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.
 
F6C2A2D9-D7E7-4544-BE64-CE00CC5329F6_L_s


முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 94 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் 25 ரன்னுடனும், பட்லர் 18 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். நாளை இன்னும் 100 ரன்களுக்குள் இங்கிலாந்தை கட்டுப்படுத்தி விட்டால், இந்த டெஸ்ட் மிகவும் பரபரப்பானதாக இருக்கும்.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/12/08164957/1055034/Mumbai-Test-1st-dat-Stump-england-288-for-5.vpf

  • தொடங்கியவர்

டெஸ்ட் சாதனை: இந்தியாவுக்கு எதிராக 2000 ரன்களைக் கடந்த குக்

 

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி கேப்டன் அலஸ்டயர் குக், இந்தியாவுக்கு எதிராக 2000 ரன்களைக் கடந்துள்ளார்.

 
 
 
 
டெஸ்ட் சாதனை: இந்தியாவுக்கு எதிராக 2000 ரன்களைக் கடந்த குக்
 
மும்பை:

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி கேப்டன் அலஸ்டயர் குக், இந்தியாவுக்கு எதிராக 2000 ரன்களைக் கடந்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. பேட்டிக்கு பதில் ஜேக் பால் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஹமீதுக்குப் பதில் ஜென்னிங்சுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமாக விளையாடி வருகிறது. தேநீர் இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி இவர்கள் 49 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து ஆடிய ஜென்னிங்ஸ் அரை சதம் அடிக்க, அணியின் ஸ்கோர் 100ஐ எட்டியது.

முன்னதாக, 11-வது ஓவரின் கடைசி பந்தில் குக், பவுண்டரி அடித்தார். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்தார். இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ரிக்கி பாண்டிங் 2555 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து லாயிட் (2344), மியான்தத் (2228), சந்தர்பால் (2171), கிளார்க் (2049) ஆகியோர் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/12/08112250/1054937/With-a-sumptuous-boundary-Alastair-Cook-records-2000.vpf

  • தொடங்கியவர்
அசத்தினார் அஷ்வின்: கபில் சாதனை சமன்
 
 
 
Tamil_News_large_1665665_318_219.jpg
 

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டில் அசத்திய இந்தியாவின் அஷ்வின் 5 விக்கெட் வீழ்த்தி, கபில் சாதனையை சமன் செய்தார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட் மும்பையில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டோக்ஸ் (25), பட்லர் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
 

அஷ்வின் அபாரம்:

 


இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது. அஷ்வின் 'சுழலில்' ஸ்டோக்ஸ் (31) சிக்கினார். வோக்ஸ் 11 ரன்களில் அவுட்டானார். உணவு இடைவேளைக்குமுன், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 325 ரன்கள் எடுத்திருந்தது. பட்லர் (33), ரஷித் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
 

கபில் சாதனை சமன்:

 

ஸ்டோக்சை அவுட்டாக்கிய அஷ்வின் முதல் இன்னிங்சில் 5வது விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் ஒரே இன்னிங்சில் அதிக முறை (23) 5 விக்கெட் கைப்பற்றிய மூன்றாவது இந்திய பவுலர் என்ற சாதனையை கபில் தேவுடன் பகிர்ந்து கொண்டார். முதலிரண்டு இடங்களில் கும்ளே (35), ஹர்பஜன் (25) உள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1665665

  • தொடங்கியவர்

#IndvEng - இங்கிலாந்து 400 ரன்களுக்கு அவுட்!

 

                                                       400_12546.jpg

மும்பையில் நடந்து வருகிறது இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 130.1 ஓவர்களில் 400 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது. பட்லர் அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்துள்ளார். கியாட்டன் ஜென்னிங்ஸ் 112 ரன்கள் எடுத்துள்ளார். அஷ்வின் 6 விக்கெட்கள்!

  • தொடங்கியவர்

4-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 400 ரன்கள் குவிப்ப

மும்பையில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 400 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

 
4-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 400 ரன்கள் குவிப்பு
 
மும்பை:

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் சதம் அடித்தார். அவர் 112 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் குக் 46 ரன்னும், மொயின் அலி 50 ரன்னும் எடுத்தனர்.

நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்தது. அஸ்வின் 4 விக்கெட் கைப்பற்றினார். பென்ஸ்டோக்ஸ் 25 ரன்னுடனும், ஜோஸ் பட்லர் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் தொடர்ந்து விளையாடினார்கள். கேப்டன் விராட் கோலி வேகப்பந்து வீச்சை பயன்படுத்தாமல் சுழற்பந்து மூலம் தாக்குதல் தொடுத்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

அஸ்வின் வீசிய 97-வது ஓவரின் கடைசி பந்தில் பென் ஸ்டோக்ஸ் ஸ்லிப் பகுதியில் நின்ற கோலியிடம் கேட்ச் ஆனார். இந்திய வீரர்கள் அப்பீல் செய்தனர். ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததால் கோலி டி.ஆர்.எஸ். முறையில் அப்பீல் செய்தார். இதில் பந்து பேட்டில் பட்டது தெளிவானது. இதையடுத்து பென் ஸ்டோக்சுக்கு அவுட் கொடுக்கப்பட்டது. அவர் 31 ரன் எடுத்தார். அப்போது ஸ்கோர் 297 ரன்னாக இருந்தது.

இதன்மூலம் அஸ்வின் 5-வது விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து கிறிஸ் வோக்ஸ் களம் வந்தார். இங்கிலாந்து 98.1 ஓவரில் 300 ரன்னை கடந்தது. தொடர்ந்து ஆடிய பட்லர் அரை சதம் கடக்க, மறுமுனையில் கிறிஸ் வோக்ஸ் 11 ரன்கள், ரஷித் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் என்ற நிலையை எட்டியது.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஜேக் பால் 31 ரன்களிலும், பட்லர் 76 ரன்களிலும் அவுட் ஆக, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் சரியாக 400 ரன்களில் முடிவுக்கு வந்தது. 9-வது விக்கெட்டுக்கு ஜேக் பால், பட்லர் இருவரும் சேர்ந்து 54 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தரப்பில் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், முரளி விஜய் ஆகியோர் விளையாடி வருகின்றனர். 

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/09130155/1055184/england-scored-400-runs-in-first-innings-of-fourth.vpf

  • தொடங்கியவர்

மும்பை டெஸ்ட்: 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 146/1

மும்பை வான்கடே டெஸ்டில் இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.

 
மும்பை டெஸ்ட்: 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 146/1
 
மும்பை:

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் சதம் அடித்தார். அவர் 112 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் குக் 46 ரன்னும், மொயின் அலி 50 ரன்னும் எடுத்தனர். இவர்களது ஆட்டத்தால் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஜோஸ் பட்லரின் அரை சதத்தால், இங்கிலாந்து அணி சரியாக 400 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது. பட்லர் 76 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டாக ஜடேஜா பந்தில் க்ளீன் போல்டானார். இந்திய அணி சார்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், ஜடேஜா 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
 
4FC7F879-B79C-4A50-BDEA-AA1EA84028CB_L_s


இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், முரளி விஜய் ஆகியோர் களம் இறங்கினார்கள். முரளி விஜய் நிதானமாக விளையாட லோகேஷ் ராகுல் அதிரடியாக விளையாட முடிவு செய்தார். ஆனால், அணியின் ஸ்கோர் 39 ரன்னாக இருக்கும்போது ராகுல் 24 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் க்ளீன் போல்டானார்.
 
A7975847-CBF6-47FE-B1C5-4626AC885A63_L_s


அடுத்து முரளி விஜய் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நங்கூரம் போன்று நிலைத்து நின்று விளையாடினார்கள். முரளி விஜய் 126 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். இந்தியா 52 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. முரளி விஜய் 70 ரன்னுடனும், புஜாரா 47 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை இந்தியா 254 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த ஜோடி நாளை காலை உணவு இடைவேளை வரை நிலைத்து நின்று விளையாடிவி்ட்டால், இந்த டெஸ்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/09170549/1055280/Mumbai-Test-2nd-day-Stumps-india-146-for-one-vijay.vpf

  • தொடங்கியவர்

இன்னும் நன்றாக பேட்டிங் செய்யும் வகையில்தான் ஆடுகளம் உள்ளது: பட்லர்

 

மும்பை வான்கடே மைதானம் இரண்டு நாட்களுக்குப்பின் இன்னும் நன்றாக பேட்டிங் செய்யும் வகையில்தான் ஆடுகளம் உள்ளது என்று பட்லர் கூறியுள்ளார்.

 
 
இன்னும் நன்றாக பேட்டிங் செய்யும் வகையில்தான் ஆடுகளம் உள்ளது: பட்லர்
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் 2-வது நாளுக்குப்பின் பேட்டிங் செய்ய மிகவும் கடினமாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 350 ரன்களுக்குள் இங்கிலாந்து சுருண்டு விடும் என்று நினைக்கையில் பட்லரின் அபார பேட்டிங்கால் இங்கிலாந்து அணி 400 ரன்னில் சுருண்டது.

பட்லர் 137 பந்தில் 76 ரன்கள் சேர்த்தார். 2-வது நாள் ஆட்டம் முடிந்த நிலையிலும் ஆடுகளம் பேட்டிங் செய்ய நன்றாக உள்ளது என்று பட்லர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பட்லர் கூறுகையில் ‘‘தற்போது வரை பேட்டிங் செய்ய நல்ல வகையில்தான் உள்ளது. ஒன்றிரண்டு அளவுக்கு அதிகமான டர்ன் ஆனதைத் தவிர மற்றபடி பந்தில் ஒன்றுமில்லை. பந்து திடீரென டர்ன் ஆகும் என்ற சிந்தனையை மனதில் இருந்து விரட்டி விட்டு விளையாடினால் நன்றாக பேட்டிங் செய்யலாம்’’ என்றார்.

விஜய் மற்றும் புஜாரா ஆகியோர் இந்தியாவிற்காக சிறந்த முறையில் பேட்டிங் செய்தார்கள். ஆனால், இன்னும் நாங்கள் 250 ரன்கள் முன்னிலைப் பெற்றிருக்கிறோம். பந்து அதிக அளவு டர்னிங் ஆகும்போது ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்ப முடியும் என்பதை முந்தைய கால உலக கிரிக்கெட்டில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நாங்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அதிக நெருக்கடி கொடுக்கும்பொழுது விக்கெட் விழ வாய்ப்புள்ளது.

தொடர்ச்சியாக நன்றாக பந்து வீசி அதிக அளவில் ரன்கொடுக்கமால் பந்து வீசுவது முக்கியமானதாகும்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/09212410/1055317/Wicket-still-good-for-batting-Buttler.vpf

  • தொடங்கியவர்

டெஸ்ட் போட்டி : முரளிவிஜய் சதம் அடித்தார்

  • தொடங்கியவர்

4-வது டெஸ்ட் போட்டி முரளி விஜய் அபார சதம்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் தனது 8-வது சதத்தை பூர்த்தி செய்தார்

 
4-வது டெஸ்ட் போட்டி முரளி விஜய் அபார சதம்
 

மும்பை, டிச. 10-

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 400 ரன் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இந்தியா தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், ஜடேஜா 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை விளையா டியது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 24 ரன்னில் அவுட் ஆனார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த முரளி விஜய்-புஜாரா இருவரும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நேர்த்தியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 52 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்தது.

முரளி விஜய் 70 ரன்களுடனும், புஜாரா 47 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து விளை யாடினார்கள்.

இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே புஜாரா மேலும் ரன் எடுக்காமல் அவுட் ஆனார். ஜாக்பால் வீசிய அந்த ஓவரின் 2-வது பந்தில் போல்டு ஆகி வெளியேறினார். அவர் 47 ரன் எடுத்தார்.

அடுத்து முரளி விஜய்யுடன் கேப்டன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். பவுண்டரி அடித்து ரன் கணக்கை வீராட் கோலி தொடங்கினார்.

இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா 54.5 ஓவரில் 150 ரன்னை தொட்டது.

அதன்பின்னர் வீராட் கோலி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனால் ஸ்கோர் மளமளவென்று உயர்ந்தது. இருவரும் 73 பந்துகளில் 50 ரன் சேர்த்தனர். 65.5-வது ஓவரில் இந்தியா 200 ரன்னை தொட்டது.

மறுமுனையில் இருந்த முரளிவிஜய்யும் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தினார். அவர் சதம் அடித்தார். 46-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 8-வது சதமாகும்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/10130134/1055411/Murali-Vijay-gets-century-against-England.vpf

  • தொடங்கியவர்

நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தற்போது மும்பையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். மேலும் டெஸ்ட் போட்டியில் 4000 ரன்களையும் கடந்தார்.

 
 
நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி
 
மும்பை:

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்று விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்கள் என்ற இலக்கை கடந்து சாதனை படைத்தார்.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், கோலி தனது முதல் இன்னிங்சில் 41 ரன்னைத் தொட்டபோது டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களைக் கடந்தார். 52-வது டெஸ்ட் போட்டியில் இந்த இலக்கை எட்டியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 4000 ரன்களைக் கடந்த 14-வது இந்திய வீரர் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, இப்போட்டியில் கோலி 35 ரன்களை எட்டியபோது, இந்த ஆண்டில் 1000 ரன்கள் என்ற சாதனையை எட்டினார்.

தொடர்ந்து ஆடிய விராட் கோலி டெஸ்ட் போட்டியில் தனது 15-வது சதத்தை நிறைவு செய்தார். 187 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் அவர் இந்த இலக்கை எட்டினார்.

இந்த தொடரில் தொடர்ந்து முத்திரை பதித்து வரும் விராட் கோலி சராசரியாக 100 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் 40, 49 நாட் அவுட், 167, 81, 62 ரன்கள் அடித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/12/10152516/1055452/Virat-Kohli-simply-unstoppable-crosses-4-000-Test.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.