Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆவாவை உருவாக்கியது கடந்த ஆட்சியில் இருந்த இரு முக்கியஸ்தர்களே! ராஜித

Featured Replies

புலம்பெயர் தமிழர்கள் தங்களது குடியுரிமையை தக்கவைத்துக்கொள்வதற்காக நாட்டிற்குள் வன்முறையை ஏற்படுத்துகிறார்கள் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்,

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,புலம்பெயர் தமிழர்கள் தங்களது குடியுரிமையை பாதுகாத்து கொள்வதற்காக நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதோடு, தமிழ் அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட வைக்க முனைகிறார்கள்.மற்றும் புலம்பெயர்ந்து வாழும் இனவாதிகள் அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு சதிமுயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என குறிப்பிட்டார்.

இரகசிய முகாம்கள் தொடர்பாக இதுவரையில் எந்த விடயங்களும் அறியக்கிடைக்கவில்லை. நல்லாட்சியில் மக்கள் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பான எந்தவித பதிவுகளும் இல்லை. இந்த விடயம் தொடர்பில் எந்தவித பதிவுகளோ சாட்சிகளோ இல்லாமை குறிப்பிடத்தக்கது எனவும் குற்றம் சுமத்தினார்.

ஆவா குழுவானது முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் திட்டத்திற்கு அமைய அப்போதிருந்த இராணுவ தளபதியால் யுத்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும்.

யுத்தகாலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இக்குழுவானது தற்போது இனவாதத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த முயற்சியில் அந்த இருவருமே ஈடுபட்டு வருவதென்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். ஆவா குழுவிற்கு அடிப்படை மற்றும் ஆயுத வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பது இவர்கள் இருவருமே.

மேலும், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. கோப் குழுவின் அறிக்கை இந்த விடயத்தை உறுதி செய்துள்ளது என தெரிவித்தார்.

எனினும் இதனுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.

 

 

http://www.tamilwin.com/community/01/123079?ref=home

வடக்கை அச்சுறுத்தும் ஹாவா குழு முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் தேவைகளுக்கு ஏற்ப அவருக்கு  தெரிந்தே உருவாக்கப்பட்ட கொள்ளைக் குழு என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.   குறித்த குழுவினர் இன்று வரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் தேவைகளுக்கு அமையவே செயற்படுவதாகவும் மேலும் குறித்த குழுவை கட்டியெழுப்பிய பிரிகேடியரை தனக்குத் தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். அக் காலப் பகுதியில் இருந்த வேறு சில தமிழ் குழுக்களை அழிக்க இந்தக் குழு உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும் தற்போது இந்தக்குழு வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/5679

  • தொடங்கியவர்

வடக்கில் தோன்றிய ஆவா என்பதன் பொருள் என்ன தெரியுமா?

காலத்திற்கு காலம்இலங்கை அரசாங்கம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஏதோவொரு வகையிலான மாற்றத்தை தேடிக்கொண்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளின்ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னர், வடக்கில் ஒரு வகையான தகிப்பு நிலையை உருவாக்கி, அதன்மூலமாக வடமாகாணம் முழுவதையும், அச்சம் கலந்த, மக்களை இராணுவப் பாதுகாப்பு சூழலுக்குள்வைத்திருப்பது தான் இலங்கை அரசின் பிரதான இலக்கு.

அதற்காக அது பல்வேறு மார்க்கங்களையும், வழி வகைகளையும் தேடிக் கொண்டிருக்கிறது.

யுத்தத்திற்குபின்னர் வடக்கில் இராணுவத்தினரின் தேவை அதிகம் இல்லை என அடிக்கடி வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டிக்கொண்டிருக்கும் சூழலில் அந்த கோரிக்கையை மழுங்கடிக்கச் செய்து, ஆயுதம் தரித்த இராணுவத்தினரின்சேவை வடக்கிற்கு நிச்சயம் தேவை என்பதைக் காட்ட அவர்கள் எடுத்த முயற்சி கண்டிப்பாக இப்பொழுதுபலனளித்துக் கொண்டு தான் இருக்கிறது.

சர்வதேச சமூகத்திற்குக்காட்டவே அரசாங்கம் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தது. தவிரவும், வடக்கில் இவ்வாறான வாள் வெட்டுக்குழுக்களின் அட்டகாசம் அதிகரித்தால் வட பகுதி மக்களே எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துக்கள் என்று அரசைக் கோருவர்.

அதன் மூலமாகவும் வடக்கில் இராணுவத்தினரையும், காவல்த்துறையினரையும் நிலை நிறுத்தி வைக்க உதவும் என்பது கணிப்பு. அந்தக் கணிப்பு தவறவில்லை.

இந்த ஆயுதம்தாங்கிய குழுக்களை உருவாக்கியதில் முதல் முக்கிய பங்கு வகித்தது மகிந்த ராஜபக்சவும்அவர், சகோதரன் கோத்தபாய ராஜபக்சவும் தான் என்பது வரலாறாகி விட்டது. எனினும் அவர்கள் பயன்படுத்திய உத்திகளைத் தான் தற்போதைய அரசாங்கமும் பயன்படுத்தி வருகின்றது.

வடக்கில் நிலைகொண்டிருக்கும் ஆவா குழுவின் செயற்பாடுகளில் தற்போதைய அரசாங்கத்திற்கும் பங்கிருப்பதாகவும், இராணுவத்தினரின் முழு ஆதரவு இந்தக் குழுவிற்கு இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இதனை சட்ட ஒழுங்குஅமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் கேட்டபோது, குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் எழுந்து சென்று இருக்கிறார் அமைச்சர்.

இதேவேளை கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, கடந்த ஆட்சியில் போர் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவரின் தேவைக்கு ஏற்பவே ஆவா குழு யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், இராணுவப்பிரதானி ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

அது மாத்திரமல்லாது தமிழ்க் கட்சிகளை அடக்குவதற்காகவும் இது போன்ற குழுக்கள் வடக்கில் உருவாக்கப்பட்டதாகவும் அமைச்சர் தன்னுடைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறார்.

ஆனால், இந்த ஆவாக்குழுவை வைத்து, தெற்கில் அரசியல் செய்யும் இனவாதக் கட்சிகள், இது விடுதலைப் புலிகளின்மீள் உருவாக்கம் என்று கதைவிடும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள். அதற்காக அவர்கள்இப்பொழுதே களத்தில் இறங்கி வேலை செய்கின்றார்கள்.

உண்மையில் இந்தஆவா என்னும் பெயர் எதைக் குறிக்கிறது என்று ஆராய்ந்தால், வந்துவிட்டோம் என்று பொருள்படுகின்றது.

இதை இரண்டு வகையாகப்பயன்படுத்தலாம். அதாவது வடக்கில் 2009ம் ஆண்டில் தோற்றுப்போன புலிகள் மீண்டும் வந்துவிட்டார்கள் என்று கூறுவதற்கு. அல்லது மீண்டும் தமிழ் மக்களை அடக்க வந்துவிட்டோம் என்று பொருள் கொள்ளலாம்.

எதுவாயினும் இரண்டிலும்தமிழ் மக்களுக்கு ஆபத்து தான் காத்திருக்கிறது என்பது பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்நிலையில் தான்தெற்கில் இனவாதத்தை முதன்மையாகக் கொண்டு செயற்படும் ராவண பல அமைப்பு நீங்கள் வடக்கில்ஆவாவை உருவாக்கிய அதாவது வந்துவிட்டோம் என்பதை உருவாக்கினால் நாங்கள் தெற்கில் வாங்க குழு என்ற அமைப்பை ஆரம்பிப்போம் என்று அறைகூவல் விடுத்திருக்கிறது.

ஆக, மொத்ததில் இந்த வாள் வெட்டுக்குழுக்களை வைத்து இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது இன்னுமொரு இனவெறி அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டிருப்பதை உணரமுடிகின்றது.

இதுவொருபுறமிருக்க,முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்குள் வருவது வடக்கில் ஆவா குழு வந்துபோவதைப் போன்று இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நக்கலாக கூறியிருப்பதாக நாடாளுமன்றத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படியிருப்பினும்,ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்விற்கு தெற்கு அரசியல்வாதிகள் இப்பொழுதுவேட்டு வைத்துவிட்டார்கள் என்றே தோன்றுகின்றது. அதற்கு தமிழ் அரசியல்வாதிகள் சிலரும்துணைபோவது தமிழ் மக்களின் வாழ்வின் மீட்க முடியாத சாபம்.

http://www.tamilwin.com/security/01/123130?ref=morenews

வடக்கில் தோன்றிய ஆவா என்பதன் பொருள் என்ன தெரியுமா?

 ஆவா குழு!

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ தீனி போடுவது யார் என்பதையும் சொல்லலாமே

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, போல் said:

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,புலம்பெயர் தமிழர்கள் தங்களது குடியுரிமையை பாதுகாத்து கொள்வதற்காக நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதோடு, தமிழ் அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட வைக்க முனைகிறார்கள்

கொடுத்த குடியுரிமையை எந்த நாடு திருப்பி எடுக்காது அமைச்சரே,,,,,,சிறிலங்காவை தவிர ....சொந்தநாட்டு மக்களை இந்தியாவுக்கு போ,சவுதிக்கு போ என்று சொல்வதை போன்று...

  • தொடங்கியவர்

என் தலைமையில் ஆவா குழுவா? பதறும் கோத்தபாய

வடக்கில் செயற்படும் ஆவா குழு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் செயற்படுத்தப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த குற்றச்சாட்டை கோத்தபாய மறுத்துள்ளார்.

அமைச்சரின் இவ்வாறான கருத்துக்களின் ஊடாக தனக்கு அல்ல முழு இராணுவத்திற்கே அவமதிப்பு என இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ரீதியில் என் மீது தாக்குதல் மேற்கொள்ளுங்கள், இவ்வாறான கருத்துக்கள் வெளியிட்டால் அது முழு இராணுவத்தையும் தாக்கும். இராணுவம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் உத்தரவின் கீழ் ஆவா குழு ஆரம்பிக்கப்பட்டதாகவும், தற்போதைக்கும் அவர்களின் அவசியத்திற்கமைய இந்த குழு செயற்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்திருந்தார்.

http://www.tamilwin.com/security/01/123167?ref=youmaylike1

  • தொடங்கியவர்

ஆவா குழுவின் பின்­னணி - வீரகேசரி ஆசிரியர்

யாழ். ­கு­டா­நாட்டில் பெரும் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் ஆவா குழு­ தொ­டர்­பாக அர­சாங்­க­மா­னது தனது நிலைப்­பாட்டை பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்துத் தெரி­வித்த அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன வடக்கில் மக்கள் மத்­தியில் அச்­சத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­படும் ஆவா குழு­வா­னது கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் அறிவு­றுத்­த­லுக்கு அமை­வாக ஒரு சில மேஜர் தர அதி­கா­ரி­க­ளினால் உரு­வாக்­கப்­பட்­டது.

இந்த ஆவா குழு­வா­னது தற்­போது வடக்கில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் நோக்கில் முன்னாள் பாது­காப்பு செய­லா­ளரின் ஊக்­கு­விப்­புடன் செயற்­ப­டு­கின்­றதா? என்ற சந்­தேகம் அர­சாங்­கத்­திற்கு ஏற்­ப­டு­கின்­றது. இந்த ஆவா கு­ழுவை அர­சாங்கம் முழு­மை­யாக அடக்­கியே தீரும் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இந்த விவ­கா­ரத்தில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை கைது செய்­ய­வேண்­டிய தேவை ஏற்­பட்டால் சட்டம் அதனை செய்யும். இந்தக் குழுவை முழு­மை­யாக அடக்­கும்­போது அதனை உரு­வாக்­கி­யது யார் என்று எங்­க­ளுக்குத் தெரி­ய­வரும். அந்­தக்­கு­ழு­விற்கு ஆயுதம் வழங்­கி­யது யார்? இடம் வழங்­கி­யது யார்? மோட்டார் சைக்கிள் வழங்­கி­யது யார்? வச­திகள் செய்து கொடுத்­தது யார்? என்­ப­தெல்லாம் தெரி­ய­வரும். இந்த நட­வ­டிக்­கைகள் மூலம் அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இத­னை­விட இந்தக் குழுவில் புலிகள் இல்லை. சிங்­க­ள­வர்­களும் இல்லை. தமி­ழர்­களே இருக்­கின்­றனர். இந்தக் குழுவை கடந்த அர­சாங்க காலத்தில் முன்னாள் பாது­காப்பு செய­லா­ளரின் அறி­வு­றுத்­த­லுக்கு அமை­யவே உரு­வாக்­கி­யுள்­ளனர் என்றும் அமைச்சர் எடுத்­துக்­ கூ­றி­யி­ருக்­கின்றார். அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரின் இந்தக் குற்­றச்­சாட்­டினை முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­

ப­க் ஷ மறுத்­துள்ளார். இத்­த­கைய குற்­றச்­சாட்டு பொய்­யா­னது என்றும் அமைச்சர் ராஜித சேனா­ரட்ன தனது அமைச்சின் கட­மை­களை கவ­னிப்­பதை விடுத்து வேறு வேலை­களில் ஈடு­ப­டு­கின்றார் என்றும் அவர் குற்­றம் ­சாட்­டி­யுள்ளார்.

ஆனாலும் அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும், அமைச்­ச­ரு­மான ராஜி­த­ சே­னா­ரட்ண அர­சாங்­கத்தின் பேச்­சா­ள­ரா­கவே கரு­தப்­ப­ட­ வேண்­டிய ஒருவர் ஆவார். இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஆட்­சியில் அமர்த்­து­வ­தற்கு பெரும் பங்­காற்­றி­ய­வர்­களில் அவரும் ஒரு­வ­ராவார்.

கடந்த ஜன­வரி மாதம் 8 ஆம்­ தி­கதி நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது எதி­ரணி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சிறி­லங்கா சுதந்­தி­ரக் ­கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேறி பொது எதி­ர­ணி­யுடன் இணைந்து கொண்ட போது அவ­ருடன் தோளோடு தோள் கொடுத்து வெளியே வந்­த­வர்­களில் முதன்­மை­யா­னவர் அமைச்சர் ராஜித சேனா­ரட்ன ஆவார்.

இவ­ரது முக்­கி­யஸ்­தத்தை கருத்தில் கொண்டே அவ­ருக்கு அமைச்­ச­ரவை பேச்­சாளர் என்ற அந்­தஸ்து வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான ஒருவர் ஆவா குழுவின் பின்­ன­ணியில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவே இருப்­ப­தாக குற்றம் சாட்­டி­யுள்­ளமை தட்­டிக்­க­ழிக்­கக்­ கூ­டிய ஒரு விட­ய­மல்ல. ஏனெனில் அமைச்சர் ராஜித சேனா­ரட்­னவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் முக்­கிய அமைச்­ச­ராக விளங்­கி­யவர். இவ்­வா­றான ஒருவர் முன்­னைய அர­சாங்க காலத்தில் இடம்­பெற்ற சகல நட­வ­டிக்­கை­க­ளையும் அறிந்தே இருப்பார் என்­பதில் ஐயம் எதுவும் இல்லை.

எனவே அமைச்சர் ராஜித சேனா­ரட்­னவின் கருத்தில் உண்மைத் தன்மை இருக்­கு­மென்றே எதிர்­வு­கூ­ற ­வேண்­டி­யுள்­ளது. உண்­மை­யி­லேயே கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் குடா­நாட்டில் ஆவா குழு உட்­பட ஆயு­தக்­கு­ழுக்­களின் அட்­ட­கா­சங்கள் அதி­க­ரித்து காணப்­பட்­டன. ஆவா குழு என்றும் வேறு பெயர்­க­ளிலும் வாள்­வெட்­டுக்­கு­ழுக்கள் இயங்­கி­யி­ருந்­தன. இதனால் அன்­றைய காலப்­ப­கு­தியில் குடா­நாட்டு மக்கள் பெரும் அச்­சத்­திற்­குள்­ளேயே வாழும் நிலை ஏற்­பட்­டி­ருந்­தது.

நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வா­ன­தை­ய­டுத்து இந்தக் குழுவின் செயற்­பா­டுகள் சற்று குறைந்­தி­ருந்­தன. ஆனால் தற்­போது ஆவா குழு என்ற பெய­ரிலும் வேறு பெயர்­க­ளிலும் வாள் வெட்­டுக்­கு­ழுக்­களின் செயற்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ளன. கடந்த 22 ஆம்­ தி­கதி யாழ்ப்­பாணம் கொக்­குவில் குளப்­பிட்டிப் பகு­தியில் பொலி­ஸாரின் துப்­பாக்­கிச்­சூட்டில் இரண்டு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர். இந்த மாண­வர்­களின் உயி­ரி­ழப்­பா­னது யாழ். குடா­நாட்டில் பெரும் பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அத்­துடன் பொலிஸார் மீதும் படை­யினர் மீதும் பெரும் அதி­ருப்­தி­யையும் ஏற்­ப­டுத்­தி­யது. இதனால் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் கொந்­த­ளித்­தனர். இந்­தப் ­ப­டு­கொ­லை­யா­னது சர்­வ­தே­சத்­திலும் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அப்­பாவி மாண­வர்­களை படு­கொலை செய்­து­விட்டு அந்தச் சம்­ப­வத்தை விபத்து எனக்­ கூறி மறைப்­ப­தற்கும் பொலிஸார் முயற்­சித்­த­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தி­ருந்­தது.

இவ்­வா­றான நிலையில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மீதான துப்­பாக்­கிச்­சூட்டு சம்­பவம் இடம்­பெற்று மூன்று தினங்­க­ளுக்குப் பின்னர் யாழ். குடா­நாடு பெரும் பதற்­றத்­திற்கு மத்­தியில் இருந்த வேளையில் சுன்­னாகம் நகரில் பட்­டப்­ப­கலில் மூன்று மோட்டார் சைக்­கிளில் முகத்தை துணி­களால் மூடி­ய­வாறு மோட்டார் சைக்­கிள்­களின் இலக்கத் தக­டு­களை மறைத்­த­வாறும் வந்த ஆறுபேர் கொண்ட கும்­ப­லொன்று அங்­குள்ள புடைவை வியா­பார நிலை­யத்­திற்குள் புகுந்து அட்ட­காசம் செய்­த­துடன் கடைக்கு வெளியில் சிவில் உடையில் நின்ற இரண்டு பொலிஸார் மீதும் வாள் வெட்­டுத் ­தாக்­கு­தலை நடத்­தி­விட்டு தப்பி சென்­றுள்­ளது.

இந்தச் சம்­பவம் இடம்­பெற்ற மறுநாள் பொலிஸார் மீது தாமே தாக்­குதல் நடத்­தி­ய­தாக ஆவா குழு எனும் பெயரில் உரிமை கோரப்­பட்­டி­ருந்­தது. குடா­நாட்டில் உள்ள பத்­தி­ரிகை காரி­யா­ல­யங்கள் மற்றும் சில பாட­சா­லை­க­ளுக்கு முன்னால் மோட்டார் சைக்­கிளில் வந்த சிலர் இந்த உரி­மை­கோரும் துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை வீசி விட்டு சென்­றி­ருந்­தனர். இந்தச் சம்­ப­வ­மா­னது குடா­நாட்டில் மீண்டும் ஏதோ ஒரு சக்தி தனது தேவைக்­காக ஆவா குழு என்ற பெயரில் இயங்­கு­வது புல­னா­கி­யது.

குடா­நாட்டில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மீதான துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்­தினால் ஏற்­பட்­டி­ருந்த சூழ்­நி­லையை மாற்­றி­ய­மைப்­ப­தற்­கா­கவே ஆவா குழு என்ற பெயரில் ஒரு உரிமை கோரல் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக சந்­தேகம் எழுந்­தி­ருந்­தது. இத­னை­ய­டுத்து குடா­நாட்டில் மேலும் சில இடங்­க­ளிலும் வாள்­வெட்டு சம்­ப­வங்­களும் குழு­மோ­தல்­களும் இடம்­பெற்­றி­ருந்­தன.

இந்தப் பின்­ன­ணி­யில்தான் தற்­போது அர­சாங்­க­மா­னது ஆவா குழு தொடர்­பான தமது நிலைப்­பாட்டை தெரி­வித்­தி­ருக்­கின்­றது. கடந்த வாரம் அமைச்­ச­ரவை கூட்ட முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ரான சாகல ரத்­னா­யக்­க­விடம் ஆவா குழு தொடர்பில் கேள்வி எழுப்­பப்­பட்­டது. ஆனால் அதற்கு அவர் பதில் எதுவும் அளிக்­காமல் நழுவிச் சென்­றி­ருந்தார். இந்த நிலை­யில்தான் அமைச்சர் ராஜித சேனா­ரட்ன ஆவா குழு தொடர்பில் கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

சில தினங்­க­ளுக்கு முன்னர் முல்­லைத்­தீவில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­றிய வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனும் ஆவா உள்­ளிட்ட ஆயு­தக்­கு­ழுக்­களின் செயற்­பா­டுகள் குறித்து இரா­ணுவம் ஏற்­க­னவே அறிந்­துள்­ளதா? ஆவா குழு, சன்­னாக்­குழு என்பவை இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட குழுக்களாகும். அவற்றைக் கட்டுப்படுத்த இராணுவத்தினரால் முடியும் என்றால் அவர்கள் பற்றியும் சகல விபரங்களும் இராணுவத்தினரிடம் உண்டு என்பதே உண்மையாகும் என தெரிவித்திருந்தார்.

தற்போது முதலமைச்சரின் கருத்தும் அமைச்சரவை பேச்சாளரின் கருத்தும் ஒன்றுபட்டதாகவே அமைந்திருக்கின்றன. எனவே ஆவா குழுவின் பின்னணி தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இனியும் காலம் தாமதிக்காமல் இந்தக் குழுவின் செயற்பாட்டை அடக்குவதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் சாக்குப் போக்குகளை கூறிக்கொண்டு யாழ். குடாநாட்டில் பதற்றத்தை ஏற்படுத்துவதற்கு எவருக்கும் அனுமதிக்க முடியாது. அரசாங்கத்தின் துரிதகதியான செயற்பாடே தற்போதைய நிலையில் தேவை என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-04#page-4

Edited by போல்

  • தொடங்கியவர்

பொலிஸாருக்கு எதிராக ஆவா குழு! அதன் பின்னால் செயற்படும் இராணுவம்!

வடக்கில் இராணுவத்தினரின் ஆதிக்கத்தை மீண்டும் வலுப்படுத்த அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்துள்ளார்.

வடக்கில் அதிகமான இராணுவத்தினரை தடுத்து வைப்பதன் ஊடாக தமிழ் மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்கதை இல்லாமல் செய்வதே இதன் நோக்கமாகும்.

ஆவா குழு இராணுவத்தினரின் உதவியுடன் சமூக விரோத குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், இந்த குழுவினர் பொலிஸாருக்கு எதிராக செயற்பாடுகளை மேற்கொண்டு மீண்டும் வடக்கில் குழப்பகரமான சூழ்நிலை ஒன்றை மேற்கொள்வதற்கு முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆவா குழுவுக்கு பின்னால் இராணுவத்தினர் உள்ளதாக நாங்கள் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டோம். எனினும் அதனை புரிந்து கொள்ளாதவர்கள் தற்போது அந்த குழுவுக்கு இராணுவத்திற்கும் இடையில் காணப்படுகின்ற உறவு தொடர்பில் கருத்து வெளியிடுகின்றனர். முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் ஆவா குழு உருவாக்கப்பட்டதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இராணுவ தொடர்புடன் செயற்படுகின்ற அவ்வாறான சமூக விரோத குழுக்கள் அரசாங்கத்தை எப்படி செயற்படுத்தும் என்பது தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுளள்து. அத்துடன் இராணுவம் பொலிஸாருக்கு எதிராக பல்வேறு முறையில் செயற்பட்டு, வடக்கில் மீண்டும் குழப்பமான சூழல் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் வடக்கு மக்களுக்கு சுதந்திர அனுபவிப்பதற்காக ஆவா குழுவுக்கு எதிராக முழுமையான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/security/01/123384?ref=home

  • தொடங்கியவர்

ஆவா குழுவை கோத்தா உருவாக்கி இருக்கலாம் - சாத்தியமுள்ளது என்கிறது ஹெலஉறுமய

p15-df8943cb95da7ec803264285627b4e52716bf446.jpg


"ஆவா" குழுவை கோத்­த­பாய உரு­வாக்­கினார் என்று அமைச்சர் ராஜித சேனா­ரத்ன குறிப்­பிட்­டுள்ளார். அந்த தகவல் உறு­தி­யா­னது அல்ல. இருப்­பினும் அந்த விடயம் உண்­மை­யாக இருக்கும் வாய்ப்­புள்­ள­தாக  ஜாதிக ஹெல உறு­மய தெரி­விக்­கின்­றது. 

வடக்கில் சூடு பிடிக்கும் விவ­கா­ரங்­களை சாத­மாக பயன்­ப­டுத்திக் கொள்­ப­வர்கள் யார் என்­பதை அறிந்­து­கொண்டால் குறித்த விட­யத்தின் பின்­ன­ணியில் உள்­ளவர் யாரென தெரி­ய­வரும் என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் ஊட­கப்­பேச்­சாளர் நிஷாந்த வர்­ண­சிங்க தெரி­வித்தார்

ஜாதிக ஹெல உறு­மை­யவின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­க­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

"ஆவா" குழுவை கோத்­தா­பாய உரு­வாக்­கினார் என்று அமைச்சர் ராஜித சேனா­ரத்ன குறிப்­பிட்­டுள்ளார். ஆனால் எமக்கு இது­வ­ரையில் அது தொடர்பில் உறு­தி­யான தக­வல்கள் கிடைக்­க­வில்லை. ஆனால் அவ்­வாறு செய்­தி­ருக்க வாய்ப்­புக்கள் உள்­ளன.

அண்­மையில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தனது உரையில் 250 முன்னாள் விடு­தலை புலிகள் அமைப்பின் உறுப்­பி­னர்­களை வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்­பி­வைக்க பாது­காப்பு அமைச்சின் முன்னாள் செய­லாளர் கோத்­த­பாய உத­வி­யுள்­ள­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதனால் அவ்­வா­றன விட­யங்கள் இடம்­பெற்­றி­ருக்­கலாம். அதனால் ஆவா குழு இவ்­வா­றான பின்­ன­ணியில் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்க முடியும் அதன் உண்மை தன்­மைகள் தொடர்பில் தீர்க்­க­மாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

அதே­நேரம் வடக்கில் சில விவ­கா­ரங்கள் சூடு பிடிக்­கின்ற போது அது தொடர்பில் பெரி­தாக அலட்­டிக்­கொண்டு அந்த சந்­தர்ப்­பங்­களில் பய­னெ­டுப்­ப­வர்கள் எங்கு உள்­ளனர் என்­பது தொடர்பில் சிந்­தித்து பார்த்தால் இந்த விட­யங்­களில் இருக்­கின்ற உள்­ளார்ந்த தொடர்­பு­களை புரிந்­து­கொள்ள முடியும்.

மத்­திய வங்கி விவ­காரம்

மத்­திய வங்கி பிணை முறிகள் வழங்கல் விவ­கா­ரத்தில் ஏற்­பட்ட மோசடி செயற்­பாட்­டுக்கு எதி­ராக உரிய நிறு­வ­னங்கள் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும்.

இன்று இந்த விவ­காரம் குறித்து பாரிய அளவில் கோஷங்­களை எழுப்­பு­கின்ற கூட்டு எதி­ர­ணி­யினர் பாரா­ளு­மன்­றத்தில் மெளனம் சாதிக்­கின்­றமை வேடிக்­கை­யா­னது. குறிப்­பாக முன்னாள் ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தில் மௌனம் சாதிப்­பது கேள்­விக்­கு­ரி­யா­கவே உள்­ளது.

அதே­நேரம் அண்­மையில் இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வுக்கு முன்­பாக ஏற்­பாடு செய்­தி­ருந்த எதிர்ப்பு ஆர்­பாட்டம் கைவி­டப்­பட்­டதன் பின்­னணி என்­ன­வென்­பதும் கேள்­விக்­கு­ரி­யா­கவே உள்­ளது.

 பாரா­ளு­மன்­றத்தில் குறித்த விவ­காரம் தொடர்பில் விவாதம் செய்­யப்­பட்ட போது விமல் வீர­வன்ச பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை மிஸ்டர் டேர்ட்டி என்று கூறி சத்­த­மிட்டார். அதனை தொடர்ந்து கூட்டு எதி­ர­ணியின் உறுப்­பி­னர்கள் சக­லரும் அந்த சொல்லை உச்­ச­ரிக்க ஆரம்­பித்­தனர்.

இதனை வேடிக்கை பார்த்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தனது ஆச­னத்­தி­லி­ருந்­த­வாறு கூட்டு எதி­ர­ணி­யினர் பக்கம் திரும்பி பார்த்­ததும் அவர்கள் அனை­வரும் பூனைகள் போன்று வாயை மூடி அமர்ந்­தமை வேடிக்­கை­யாக இருந்­தது.

 பிரதமரை நிந்திக்கும் போது கூட்டு எதிரணியினரை மௌனிக்குமாறு சமிக்ஞை வழங்க வேண்டிய அவசியம் முன்னாள் ஜனாதிபதிக்கு ஏன் ஏற்பட்டது. என்பதும் சிந்தித்து பார்க்க வேண்டிய விடயம்.

அதனால்கூட்டு எதிரணியினர் நம்பிக்கையில்லா பிரேரணையை உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று அவர்களுக்கு சவால் விடுக்கின்றோம் .

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-04#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.