Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்கவர் பொதிகளை கண்டு ஏமாறாதீர்கள் - வியக்கவைக்கும் விபரங்கள் உள்ளே!

Featured Replies

பொதி செய்யப்பட்ட உணவுகளை நுகர்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். கலப்படம், சேதமடைந்த பொதிகள், அதிக விலை, குறைவான நிறை என்பவற்றினால் நுகர்வோர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இவற்றுக்கு காரணம் நுகர்வோரின் மத்தியில் போதியளவு தெளிவு இல்லாமையே ஆகும். அதனால் பொதி செய்யப்பட்ட உணவுகளின் பொதிகளில் காணப்படும் இலட்சினைகள் மற்றும் உணவுகளின் தரத்தினை உறுதிப்படுத்தும் இலட்சினைகள் தொடர்பில் அறிந்து வைத்திருத்தல் கட்டாயமானதாகும்.

பொதி செய்யப்பட்ட உணவுப்பொருளொன்றை நுகரும் போது பின்வரும் விடயங்களை நாம் அவதானித்தல் வேண்டும்.

• உற்பத்தி திகதி

• காலாவதியாகும் திகதி

• அடங்கியுள்ள சத்துக்களின் அளவு

• நிகர எடை

• சேர்க்கப்பட்டுள்ள சேர்மானங்கள் (இரசாயன பதார்த்தங்கள்)

• சைவ உணவு/அசைவ உணவு இலட்சினைகள்

• பொதியிடும் பதார்த்தங்களின் இயல்புகள்

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

பொதியிடுவதற்கு பல்வேறு பதார்த்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை உணவுப் பொருட்களுக்கு ஏற்றவாறு மாற்றமடைகின்றன. உதாரணமாக

  • வெள்ளீயம் பூசப்பட்ட இரும்புக் கொள்கலம் - தகரத்திலடைத்த மீன், பழவகை, மரக்கறி வித்துக்கள் போன்றவை
  • பொலித்தீன் மேற்பூச்சிடப்பட்ட - பால்மா, விசுக்கோத்து, தேயிலைத் தூள் போன்றவற்றைப் பொதியிடுவதற்குப் பயன்படும்.
  • பல்பகுதிய உறைகளும் - எமல்சன் நிறப் பூச்சு வகைகள், குடிநீர், யோகட், ஐஸ்கிறீம் உணவு வகைகள் போன்றவற்றை அடைப்பதற்குப் பயன்படும்.

 

இவ்வாறு பொதியிடப்பட்ட பொருட்களை வாங்கும் போது சேதமடைந்த பொதிகளை கொண்டவற்றை வாங்கக் கூடாது மற்றும் துருப்பிடித்த, கீறல்கள் உள்ள சேதமடைந்த கொள்கலனில் பொதி செய்யப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

அடுத்ததாக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் e-சேர்மானங்கள். e-சேர்மானங்களை பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். இது உணவுகளில் பயன்படுத்தப்படும் நிறங்களையும், சுவையூட்டிகளையும் மற்றும் பாதுகாப்பு சேர்மானங்களையும் வேறுபடுத்திக்காட்ட அவற்றில் தரப்படும் எண்கள் உதவுகின்றன.

அவ்வாறான e-சேர்மானங்கள் சில

உணவுகளில் சேர்க்கப்படும் நிறங்களுக்கான எண்கள்

  • 100–109 yellows
  • 110–119 oranges
  • 120–129 reds
  • 130–139 blues & violets
  • 140–149 greens
  • 150–159 browns & blacks
  • 160–199 gold and others

 

உணவுகளில் சேர்க்கப்படும் பாதுகாப்பு சேர்மானங்களுக்கான எண்கள்

  • 200–209 sorbates
  • 210–219 benzoates
  • 220–229 sulphites
  • 230–239 phenols & formates (methanoates)
  • 240–259 nitrates
  • 260–269 acetates (ethanoates)
  • 270–279 lactates
  • 280–289 propionates (propanoates)
  • 290–299 others

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

சேர்க்கப்படும் தடிப்பாக்கிகளின் எண்கள்

  • 400–409 alginates
  • 410–419 natural gums
  • 420–429 other natural agents
  • 430–439 polyoxyethene compounds
  • 440–449 natural emulsifiers
  • 450–459 phosphates
  • 460–469 cellulose compounds
  • 470–489 fatty acids & compounds
  • 490–499 others

 

சுவையூட்டி எண்கள்

  • 620–629 glutamates & guanylates
  • 630–639 inosinates
  • 640–649 others

 

சைவ உணவுகளுக்கான குறியீடு

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

அசைவ உணவுகளுக்கான குறியீடு

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

நுகர்வோருக்கு பல்வேறு உரிமைகள் காணப்படுகின்றன. நுகர்வோர் பாதுகாப்பு அதில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொள்வனவு செய்வதைத் தவிர்த்துக்கொள்வது நுகர்வோர் பாதுகாப்பு ஆகும்.

வர்த்தகச் சந்தையில் நிலவும் போட்டி காரணமாக சில வர்த்தகரகள் தரம் குறைந்த பொருட்களை நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்காக பல தந்திரோபாயங்களை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே நுகர்வோர்கள் பொதி செய்த உணவுகளை நுகரும் போது அவதானமாகவும், விழிப்புடனும் செயற்படுதல் அவசியமாகும்.

http://www.tamilwin.com/food/01/123110?ref=morenews

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்துக்கும் மேலாக, Expiry Date எங்க அடிச்சிருச்கு என்று பாருங்கள்.

ரின்னில், பிளாஸ்ரிக் கொன்ரெயிராயின் அவைமீது எனில் ஓக்கே.

லேபிலில் அடித்திருந்தால் கவனம். புது திகதியுடன் புது லேபிலை, பழசைக் கழட்டி கடாசிவிட்டு, ஒட்டி வித்தத் தள்ளிவிடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.