இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
மேலே உள்ள இரு தலைப்புகளும் இந்தத் திரியுடன் சம்பந்தப் பட்டுள்ளதால் இங்கு இணைத்துள்ளேன். -
By ஏராளன் · பதியப்பட்டது
தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கையூடியுள்ளார். நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஈ.பி.டி.பி. கட்சியின் அடுத்த கட்ட நகர்விற்கு சிறந்த வலுவூட்டலை தந்துள்ளது என தெரிவித்துள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கம் குறித்த தெளிவூட்டல் மக்களுக்கு சரிவர வழங்கப்படாமையும், எமது கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளுமே பின்னடைவிற்கு காரணம் எனவும் தெரிவித்தார். அத்துடன், இந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணங்களை கட்சி செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் விமர்சனம் சுயவிமர்சனம் செய்து திருத்திக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தை நோக்கி இன்னமும் வலிமையுடன் பயணிக்க தயாராக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி. கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன், கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் ஏனைய மவட்டங்களைச் சேர்ந்த கட்சிப் பிரதி நிதிகளும் கலந்துகொண்ட நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மன வலிமையோடு எமக்கு வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்க நினைத்திருந்த மக்களுக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலுக்கு முன்னர் ஈ.பி.டி.பி. க்கு எதிராக முனனெடுக்கப்பட்ட பிரச்சாரங்களுக்கு அப்பால், தேர்தலுக்கு பின்னரும் வெளியாகின்ற காழ்ப்புணர்வு மற்றும் போலிப் பிரசாரங்கள் குறித்த உண்மைகளை, நாடளாவிய ரீதியில் தெளிபடுத்த வேண்டிய கட்டாய கடமை கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு இருப்பதாகவும் வலியுறுத்தினார். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள ஈ பி டி பி யின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானாந்தா அலைகள் அடித்தாலும், கார்முகில்கள் சூழ்ந்தாலும் எமது கடும் பயணம் ஒருபோதும் நிற்பதில்லை என்றும் எந்தப் பின்னடைவுகளும் ஓரடி பின்னால் ஈரடி முன்னால் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199017 -
By goshan_che · Posted
காலம் கட்டாயம் பதில் சொல்லும். சதுரங்க்க ஆட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் வைத்த பொறியில் நாம் கச்சிதமாக வீழ்ந்தோம் என. -
@goshan_che ஒரு உதாரணம் மட்டுமே. இப்படியான தமிழ தேசியத்தை விட அநுரவுக்கு வாக்களிப்பது தவறா?
-
By ஏராளன் · பதியப்பட்டது
மட்டக்குளிய பிரதேசத்தில் 16ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கடத்தல் சம்பவம் தொடர்பில் தனிபட்ட தகவல் வழங்குநரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் புதுக்குடியிருப்பு, கொட்டாஞ்சேனை, எச்சிலம்பற்று மற்றும் தோபூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் எச்சிலம்பற்று மற்றும் தோபூர் பிரதேசங்களில் வசிக்கும் சந்தேகநபர்கள் இருவரும் வடகிழக்கு பகுதியில் சில சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மற்றைய இரு சந்தேக நபர்களும் கடந்த ஒக்டோபர் மாதம் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர். டுபாயில் உள்ள ஒருவரின் ஆலோசனையின் பேரில் மேற்கண்ட 'ஆவா' கும்பலைச் சேர்ந்த இருவரையும் திருகோணமலையில் இருந்து மட்டக்குளிக்கு அழைத்து வந்ததாக தெரியவந்துள்ளது. மேற்படி 'ஆவா' கும்பலைச் சேர்ந்த இருவர் துபாயில் உள்ள ஒருவருக்கு 'டிக் டாக்' மூலம் மிரட்டல் விடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரையும் பெண் ஒருவர் ஊடாக மட்டக்குளிய பிரதேசத்திற்கு அழைத்து வந்து தாக்கி வீடியோ எடுத்து டுபாயில் உள்ள ஒருவரிடம் காண்பித்துள்ளமை அவர்களின் தொலைபேசி அலசலில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199015
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.