Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகே அழகு...

Featured Replies

லேயர் கட், ஸ்ட்ரெயிட் கட், யூ கட் தவிர இந்தியன் ஹேர் ஸ்டைலில் புதுசா வேறென்ன இருக்கு?

 
 
teeen_indian_hair_style

தொடர்ந்து ஒரே விதமான ஹேர் ஸ்டைல் போரடித்தது. சரி ஹேர் ஸ்டைலை மாற்றித் தான் பார்ப்போமே என்று பிரபல பியூட்டி பார்லர் போனால் அங்கே விதம் விதமான ஹேர் கட்களை தேர்ந்தெடுக்க பொருத்தமான கேட்டலாக்குகள் என்று எதையும் காணோம். என்ன ஹேர் கட் வேண்டும் என்று  பெயரை  மட்டும் சொன்னால் அவர்களுக்குத் தெரியுமாம், அவர்களாக நமது முகத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்றும் ஏதோ சில பெயர்களை சொன்னார்கள். ஒரு வேளை ஹேர் கட் செய்த பிறகு அந்த ஸ்டைல் பிடிக்காமல் போய் விட்டால் என்ன செய்வது? எதற்கு வம்பென்று எப்போதும் போல லேயர் கட் செய்து கொண்டு திரும்பி வந்தோம். எப்போதும் பெண்களுக்கு என்றால் இந்த ஸ்ட்ரெயிட் கட், யூ கட், டீப் யூ கட், லேயர் கட் மட்டும் தானா? அதிலும் பெண் குழந்தைகளுக்கானால் மஷ்ரூம் கட், சம்மர் கட், டயானா கட் இவ்வளவு தானா?! அலுப்பாகத் தான் இருக்கிறதில்லையா? இன்னும் வேறு என்னென்ன விதமான இந்தியன் ஸ்டைல் ஹேர் கட்கள் இருக்கின்றன என்று தேடிப் பார்க்கும் ஆர்வம் அப்போது தான் உயிர்த்தெழுந்தது. 

ஹேர் ஸ்டைலுக்காக முதலில் நம் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தது யாரென்றால் அது வாணிஸ்ரீ யாகத்தான் இருக்கும். வசந்த மாளிகையில் உயரத்
தூக்கிப் போடப்பட்ட அந்த  ’பம்’ கொண்டையோடு வாணிஸ்ரீயை  யாராலும் மறக்க முடியாது. வாணிஸ்ரீ க்குப் பின் நதியா ஹேர் ஸ்டைலில் மட்டுமல்ல நதியா கம்மல், நதியா மிடி, நதியா கொண்டை, நதியா பொட்டு என்று ஃபேஷன் உலகில் புது டிரெண்ட் செட்டராகவே அவதரித்தார்.  அவருக்குப் பின் 80 களில் பெண்குழந்தைகளுக்கு முடி வெட்டிக் கொள்ள சலூனுக்கு வரும் பெரும்பான்மையான பெற்றோர்கள்  'ஷாலினி கட்' பண்ணுங்க என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்வார்கள். ஷாலினி ஸ்டைல் ஹேர் கட் அப்போது அத்தனை பாப்புலர். இவர்களுக்குப் பின் தர்மத்தின் தலைவன் படத்தில் அறிமுகமான நடிகை கௌதமியின் கர்லி(சுருள்) முடிக் கொண்டைக்கு அநேக ரசிகர்கள் இருந்தார்கள். சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலிலும் கௌதமியின் கர்லி ஹேர் ஸ்டைல் அழகாகவே இருந்தது. நடுவில் 90 களில் மறைந்த மலையாள நடிகை மோனிகாவின் நீளக் கூந்தலுக்கும் ரசிகர்கள் இருந்தார்கள். பிறகு டைட்டானிக் பட ஹீரோயின் ரோஸ், படையப்பா நீலாம்பரி என்று சிலரது ஹேர் ஸ்டைல்கள் பெண்களால் பெரிதும் விரும்பப்பட்டன. அதற்குப் பின் சில காலம் ஹேர் ஸ்டைல் உலகில் கொஞ்சம் வறட்சி! குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எவருடைய ஹேர் ஸ்டைலும் மனதில் பதிந்ததாக நினைவில்லை. 

நீண்ட இடைவெளிக்குப் பின் சில்லுனு ஒரு காதல் படத்தில் ஜோதிகாவின் ஹேர் ஸ்டைல் கல்லூரி மற்றும் ஐ.டி துறைப் பெண்களால் பெரிதும் நேசிக்கப்பட்டது. ஆனால் அந்த விதமான ஹேர் ஸ்டைல் எல்லோருக்கும் எளிதில் பொருந்தாது என்பது  அதிலுள்ள மைனஸ் பாயிண்ட். ஜோதிகாவுக்குப் பின் அதிக ரசிகர்களை ஈர்த்துக் கொண்டது ’நீ தானே என் பொன் வசந்தம்’ படத்தில் வரும் சமந்தாவின் ஹேர் ஸ்டைல். அவருக்குப் பின் ’நானும் ரவுடி தான்’ படத்தில் பள்ளிக் குழந்தைகள் போல ஹேர் போ மாட்டிக் கொண்டு நடமாடிய நயன்தாராவின் ஹேர் ஸ்டைலுக்கும் பெருவாரியான ரசிகர்கள் இருக்கின்றனராம். இவர்கள் மட்டுமல்ல சமீப காலமாக ஏர்டெல் 4G விளம்பரங்களில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் இளம்பெண் சாஷாவின் ஹேர் ஸ்டைல்க்கும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்களாம். இவ்வளவு சொல்லி விட்டு லேட்டஸ்ட் இந்தியன் ஹேர் ஸ்டைல் படங்களை கண்ணில் காட்டாமல் கட்டுரையை முடிக்க முடியுமா? இதோ உங்களுக்காக சில பல லேட்டஸ்ட் இந்தியன் ஹேர் ஸ்டைல்கள். இதில் உங்களுக்குப் பொருத்தமானது எதுவோ அதை நீங்களே தேர்ந்தெடுங்கள்.

ஷார்ட் & சிம்பிள் பாப் கட்

short_simple_bop_1.jpg

கியூட் பாப் கட்

cute_bop_11.jpg

இன்வெர்டட் பாப் கட்

inverted_bop_1.jpg

ஸ்மார்ட் லுக் மீடியம் பாப்

smart_look_medium_bop.jpg

மொழி ஜோதிகா கட்

mozhi_jyothika_cut.jpg

ஷாஃப்ட் கர்ல்ஸ் வித் லாங் பேங்ஸ் கட்

soft_curl_with_long_bangs_cut.jpg

ஃபுல் லெங்த் கர்ல் கட்

 

ironed_curls_1.jpg

மீடியம் வேவி ஹேர் கட்

medium_weavy_hair_cut_1.jpg

லாங் லேயர் கட்

long_layer_cut.jpg

கூகுளில் தேடியதில் இந்த ஹேர் ஸ்டைல்கள் மட்டும் தான் சற்று இந்தியத் தனத்துடன் இருப்பதாக தோன்றியது. இவற்றில் பொருத்தமான ஒன்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.

http://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2016/sep/12/லேயர்-கட்-ஸ்ட்ரெயிட்-கட்-யூ-கட்-தவிர-இந்தியன்-ஹேர்-ஸ்டைலில்-புதுசா-வேறென்ன-இருக்கு-2562449--2.html

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

என்ன உடை? எங்கு வாங்கலாம்?

ஷாப்பிங் என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் தீபாவளி ஷாப்பிங் என்றால் கேட்கவே வேண்டாம். புதுசா என்ன டிரஸ் வாங்கலாம் என்பதைத் தாண்டி புதுசா புதுசா என்னென்ன டிசைன், என்னென்ன வெரைட்டி வந்திருக்கு? இப்போ என்ன டிரெண்ட்? என பார்த்து பார்த்து வாங்குவதே தனி உற்சாகம்தான். இந்த தீபாவளிக்கு புடவை தொடங்கி நவீன ஆடைகள் வரை புதுசா என்னென்ன வந்திருக்குன்னு உங்களுக்கு அறிமுகம் செய்றோம். புதுசு புதுசா வாங்குங்க... தீபாவளியை சந்தோஷமா கொண்டாடுங்க.

2.jpg

சென்னை சில்க்ஸ்

டிசைனர் புடவைகளில் விபன்ஜி லைட் சில்க், விவாகா ஸ்வரோவஸ்கி, பட்டுப் புடவைகளில், நவநாகரிக இக்கத் சாஃப்ட் சில்க், போச்சம்பள்ளி  போன்றவை  புது வரவாக உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டு நூலால் செய்யப்பட்டதால்  லேசாக இருப்பது இதன் சிறப்பம்சம். சாஹித்யம் ஸ்ெபன் சில்க் மென்மையாக ஜரிகை நெசவு செய்யப்பட்டுள்ளதால் கிராண்ட் லுக் கிடைக்கிறது. சென்த்தெரிக் கட் ஒர்க் மற்றும் ஃபேன்சி பேட்ச் வொர்க் பொருத்தப்பட்ட கதானா புடவைகள் இளம் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை அணியக்கூடிய டிசைன்களில் கிடைக்கின்றன.

2a.jpg

சாகம்பரி சில்க்ஸ்

சர்வ லட்சணம் நிறைந்த டபுள் வார்ப்பு செய்யப்பட்ட ஐஸ்வர்யம் பட்டு, காஞ்சிபுர கலைவண்ணத்தைக் காட்டும் பண்டோரா பட்டு, மென்மையாகவும் 16 வயது முதல் அனைத்து பெண்களும் அணியக் கூடிய வகையில் இருக்கும் மேகதூது, முந்தானையிலும் கொசுவத்திலும் ஒரேமாதிரியான டிசைன் கொண்ட பாட்லி பட்டு இதெல்லாம் இந்த தீபாவளி ஸ்பெஷல். லெனின், மணிப்பூரி, நேகமன், கலம்கரி, பட்டோலா, சர்ட்வால் போன்ற வகை சல்வாரிலும் புது டிசைன்கள் கிடைக்கின்றன.

சுந்தரி சில்க்ஸ்

பட்டுப் புடவைகளில் தங்க சரிகை, வெள்ளி சரிகை நாம் அறிந்தது. இந்த தீபாவளிக்கு பெண்களை கவரும் வண்ணம் காப்பர் ஜரிகை  புடவைகள் அறிமுகம் ஆகியுள்ளன. பட்டோலா, பனாரஸ், ேகாட்டா, சந்தேரி காட்டன், பிரின்டட் சில்க், சுங்கிடி காட்டன்  ேபான்ற வகைகளில் வித விதமான வண்ணங்களில் வித்தியாசமான டிசைனர் புடவைகள் கிடைக்கின்றன. டாப்ஸ், சல்வார், அனார்கலி சல்வார், தாவணி, பிளாசோ பேன்ட்ஸ் என ஏற்கனவே நமக்கு அறிமுகமான வெரைட்டியிலும் புது டிசைன்கள் வந்துள்ளன.

பாக்டம் வியர்ஸ்

குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை அனைவரும் விரும்பும் லெக்கிங்ஸிலும் பல ரகங்கள் இந்த தீபாவளிக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காட்டன் லெக்கிங்ஸ், ஆங்கிள் லென்த் ஸ்ட்ரெச் லெக்கிங்ஸ், பிரிமியர் விஸ்கோஸ் லெக்கிங்ஸ்கள் என லெக்கிங்ஸ்கள் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஸ்டைலான  அற்புதமான உணர்வை தருகின்றன. ஜீன்ஸ் கிளாத்தில் தைக்கப்பட்ட லெக்கிங்ஸ் வகையான ஜெக்கிங்ஸ், டெனிம் கிளாத் ஜெக்கிங்ஸ் ஆகியவையும் கூட பாக்கெட்டுகளுடன் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

த்ரீ ஃபோர்த் கப்ரி  ஜெக்கிங்ஸ் விளையாடும்பொழுது அணிவதற்கு ஏற்றது போல வடிவமைக்கப்பட்டுள்ளதோடு கண்களைக் கவரும் பலவண்ண நிறங்களிலும் கிடைக்கிறது. நவீன ஆடையான லெக்கிங்ஸுக்கு ஏற்ற புது வகையான டாப்ஸ்களும் பல விதமான மாடல்களில் கிடைக்கிறது.

ரதி சில்க்ஸ்

குழந்தைங்க இல்லாம கொண்டாட்டமா? இதோ குழந்தைகளுக்கான வாவ் கலெக்‌ஷன்ஸ். பெண் குழந்தைகளுக்கான மினி புடவை ரகங்கள் எல்லோருக்கும் அறிமுகமானதுதான். ஆனால், அதிலும் கொஞ்சம் வித்தியாசமா, புதுசா இந்த தீபாவளிக்கு, பிரத்யேகமான முறையில் வடிவமைக்கப்பட்ட நக்ஹத்ரா, சன்ஃபிளவர் வகை மினி புடவை ரகங்கள் அறிமுகமாகி உள்ளன. பல்வேறான வண்ணங்களில் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதோடு பேட்ச் ஒர்க், லேஸ் ஒர்க் என இந்த ரகம் கண்களை கவர்கிறது.

பெண் குழந்தைகளுக்கு அழகு சேர்க்கும் பாவாடை ரகங்கள் முன்பைவிட அழகாக விதவிதமாக வந்துள்ளன. கரிஸ்பா, சிலாப் மற்றும் வாரணாசி பார்டர், ஜோதிகா பாவாடை, தைனிகா பாவாடை, ஷிவானி, கீர்த்தி, சுசி பட்டர்ஃபிளை பாவாடைகள் என இந்த தீபாவளிக்கு கலெக்‌ஷன் ஏராளம்.

போத்தீஸ்

பெண்களின் இதயம் கவர்ந்த வசுந்தரா பட்டு இப்போது புது டிசைன்களில் வந்துள்ளது. டிசைனர் புடவை ரகங்களில் சைனா நெட் சாரி, த்ரீ டி சாரி, சனா சில்க், சாரியட் பிராஸோ இந்த தீபாவளிக்குப் புதுசு. இளம் பெண்களின் சூப்பர் ஸ்டார் குர்தீயில் இந்த ஆண்டு புதுசு சிந்து குர்தீ. மஸ்தானி மற்றும் மஸ்தகலி சுடிதாரிலும் தீபாவளி கலெக்‌ஷனாக புது டிசைன்கள் வந்துள்ளன.

ராம்ராஜ்

ஆண்களுக்கான கடையாக இருந்த ராம்ராஜ் இப்போது பெண்களுக்கென முதன்முறையாக துணிரகங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. கேரள பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ரசாயனக் கலவை இல்லாத, சாயமற்ற முறையில் தயாரிக்கப்படும் ரம்யம் எக்கோ சாரீஸ் இந்த தீபாவளி ஸ்பெஷல். இதே ரகத்தில் புதிதாக சுடிதார் மற்றும் பாவாடை ரகங்கள் வந்திருப்பது இளம்பெண்கள் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ். நவீன ஆடைகளிலும் புது ரகங்கள் வந்துள்ளன. 

http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3473&id1=118&issue=20161016

  • தொடங்கியவர்

மாடர்ன் மங்கையர் அணிய ஏற்ற புதிய துலிப் பேண்ட்கள்

இளம்பெண்கள் அணிகின்ற நவீன ஆடைகள் என்பவை பிரத்யோக வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன. இவை அன்றைய கால டிரெண்ட் மற்றும் அணிய லகுவான வடிவுடன் உருவாக்கப்படுகின்றது. இன்றைய கால கட்டத்தில் பெண்கள் அலுவலகம், கல்லூரி மற்றும் வெளி பணிகள் என்றவாறு நாளும் புதிய புதிய ஆடைகளை அணிய வேண்டியதில்லை.

mkl


அதற்கேற்ப ஆடைகள் தனித்தனி சிறப்பு வடிவமைப்பு டிசைன், பேட்டர்ன், வண்ணங்கள் கொண்டவாறு வலம் வருகின்றன. நவீன யுக்திகள் மாடர்ன் மங்கையர் அணியக்கூடிய ஆடைகளான சுடிதார், பைஜாமா, ரசகளி போன்ற ஆடைகளுக்கு ஏற்ற பேன்ட்கள் தனிப்பட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகிறது.

மேல் சட்டை அமைப்புக்கு ஏற்ற பிரதான பேண்ட் வகைகள் முன்பு ஒரே மாதிரியாக இருந்தன. இன்று லெக்கின்ஸ், இறுக்கமான பேண்ட், பலகோ, ஜெக்கிங்ஸ் போன்றவை வந்துள்ளன. குர்தீஸ் மற்றும் குர்தா அணிவதற்கேற்ற பேண்ட் வகையில் லெக்கின்ஸ் என்ற உடலோடு ஒட்டிகொள்ள கூடிய பேண்ட் தற்போது முதலிடம் பிடிக்கின்றது.

அதுபோல் லாங் சுடிதார், பேன்ஸி சுடிதார் போன்றவைகளுக்கு பேண்ட் என்பது குறுகிய கால் பகுதியும், அகலமான மேற்பகுதியும் கொண்ட பேண்ட்கள் தயாரிக்கப்படுகிறது. மேல்சட்டையில் செய்யப்படும் டிசைன் பார்டர் கால்பகுதியில் பார்டர் ஆக வடிவமைக்கப்படுகிறது.

இறுக்கமான பேண்ட்களுக்கு மாற்றான பலசோ பேண்ட்கள்

இறுக்கமான வகையில் உருவான பேண்ட்களுக்கு மாற்றாக வித்தியாசமான வடிவில் தளர்ந்த வகையிலான ஆடையாக பலசோ பேண்ட்கள் அறிமுகமாயின. இவை அணிய சுலபமானது எந்த பயணத்திற்கும், விழாக்களுக்கும் அணிய ஏற்றவாறு வித்தியாசமான வடிவமைப்பு, வண்ண கலவையுடன் உருவாக்கப்படுகிறது. இடுப்பிலிருந்து கணுக்கால் வரை ஒரே அலகமான விரிந்த பேண்ட்கள் அமைப்பு. முந்தையகால அகல பேண்ட் அமைப்பில் சில வித்தியாசங்கள் மட்டும் செய்யப்பட்டு நவீன மங்கையர் அணிய ஏற்றவாறு உருவாக்கப்படுகிறது. இதில் பெரும்பாலும் பூ டிசைன், ஜியோ மெட்ரிக் பேட்டர்ன் முதலிடத்தை பிடிக்கிறது.

புத்தம் புதிய துலிப் பேண்ட்கள்:-

ஆண்டிற்கு ஓர் பேண்ட் வகை அறிமுகமாவது உண்டு. இந்த ஆண்டின் அறிமுகம் துலிப் பேண்ட். அழகிய மேல்சட்டைக்கு ஏற்ற அதே வண்ணம் மற்றும் மாறுபட்ட வண்ண கலவையுடன் துலிப் பேண்ட்கள் உருவாகின்றன. துலிப் பேண்ட்கள் மற்ற பேண்ட்களை விட மாறுபட்ட வடிவமைப்பு, அணிய ஏற்ற சுலபமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் விழாக்காலத்திற்கு பெண்கள் விரும்பி வாங்கி அணியும் பேண்ட் வகையாக துலிப் சிறந்த இடம் பிடிக்கும் என நம்பலாம்.

வித்தியாசமான புதிய வடிவமைப்பில் துலிப் பேண்ட்கள்:-

பார்க்க பஞ்சகஞ்ச வேஷ்டி அமைப்பிலான இந்த பேண்ட் கூடுதல் வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது. கணுக்கால் நீண்ட பேண்ட் அமைப்பில் இருந்து மாறுபட்ட கணுக்கால் மேல் பகுதியுடன் பேண்ட் முடிவடைந்து விடும். இந்த பேண்ட் கீழ்பகுதி முக்கோண வடிவில் வெட்டப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இதன் காலி பகுதி முதல் கீழ் கால் பகுதி வரை சுருக்கம் சுருக்கமாய் இணைப்பு செய்யப்பட்டன. கணுக்கால் பட்டை பகுதியில் மேல்சட்டையின் அதே பார்டர் அல்லது மணிகள், லேஸ் போன்றவை வைக்கப்பட்டிருக்கும். இந்த பேண்ட்டிற்கு ஏற்ற மேல் சட்டை என்பது தொடை பகுதி வரை நீண்ட குர்தீஸ் மற்றும் குர்தாக்கள் பொருத்தமானது.

துலிப் பேண்ட்கள் பெரும்பாலும் மென்மையான வண்ணங்களில் தான் உருவாக்கப்படுகிறது. இளம் பச்சை, இளஞ்சிவப்பு, மஞ்சள், லைட்ப்ளூ போன்ற வண்ணங்களும் அதன் மேற்புறம் பேட்ச் மற்றும் எம்பிராய்டரி செய்யப்படும் பேண்ட்கள் கிடைக்கின்றன. துலிப் பேண்ட்கள் பெண்கள் கணுக்கால் அழகை பொலிவுடன் வெளிபடுத்தும் விதமான தனித்துவத்துடன் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

http://vijaytamil.net/மாடர்ன்-மங்கையர்-அணிய-ஏற/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யுவதிகள் விரும்பும் குர்தீஸ்

KURTI-3.jpg

சந்தை பொருட்களில் எதை எடுத்துக்கொண்டாலும் அவை,அதிக அளவில் பெண்கள் பயன்படுத்தும் பொருளாகவே இருக்கும். வீட்டு உபயோகப்பொருட்களில் இருந்து, நாம் அன்றாடம் பயன்படுத்தும் நவீன சாதனங்கள் ஆனாலும் பெண்களுக்கு என்று தனி முக்கியத்துவமும் அதில் அதிக வகைகளும் இருக்கும். அதேபோல்தான் அணியும் ஆடையிலும். ஆண்களுக்கு என்று எடுத்துக்கொண்டால், பேண்ட், சட்டை, டி-சர்ட், ஜீன்ஸ் , வேட்டி என்று பட்டியல் சீக்கிரம் முடிந்துவிடும். ஆனால் அதே பெண்கள் அணியும் ஆடை வகை என்று எடுத்துக்கொண்டால் பட்டியல் நீளும். போதாதற்கு மேற்குறிப்பிட்ட பேண்ட் ,சட்டை என்று எல்லாவற்றையும் பெண்களும் அணியத்துவங்கி விட்டார்கள், வேட்டி தவிர(கேரளாவில் அதையும் அபகரித்துக்கொண்டார்கள்). அந்த வகையில் குர்தீஸ் என்பது நவீன யுக பெண்கள் அணியும் மற்றுமொறு ஆடை வகை.

குர்தீஸ் என்பது பெண்கள் அணிகின்ற குர்தா வடிவிலான மேல்சட்டை. ஜீன்ஸ் பேண்ட், சுடிதார் மற்றும் லெக்கிங்ஸ்க்கு ஏற்ப அணிகின்ற குர்தீஸ் இன்றைய நாளில் விதவிதமாக வருகின்றன. எண்ணற்ற வண்ணம், வடிவமைப்பு, கூடுதல் கட்டிங்ஸ் மற்றும் அழகிய நெக்குகள் என பலமாடல்கள் வருகின்றன. பருத்தியிலான காட்டன் குர்தீஸ் முதல் ஜார்ஜெட், டஸ்ஸர், காட்டன், பட்டு மற்றும் பூனம் துணிகளில் குர்தீஸ் உருவாக்கப்படுகின்றன.

LEGINS AND KURTI

குர்தா என்பது நீள்சதுரவடிவிலான ஆடையாகும், அரேபிய நாடுகளில் உடுத்தப்பட்ட தாவாப் என்ற ஆண்கள் ஆடையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. பெண்களுக்கு எனும் போது அதுவே குர்தீஸ் என்று அழைக்கப்படுகிறது. இது நீண்ட மற்றும் குட்டை வடிவில் கிடைக்கின்றது. பெண்கள் தினமும் அணிகின்றவாறு இலகுவான அதேசமயம் கச்சிதமான வடிவமைப்பில் குர்தீஸ்-களின் வகைகள் உலகளவில் பிரபலமாக உள்ளன. பருத்தி, ஷிப்பான், பட்டு, கதர் குர்தீஸ்கள் அனைத்து காலங்களிலும் அணிய  ஏற்றவாறு உள்ளன. மேலும் உல்லன் குர்தீஸ்கள் குளிர்காலத்தில் அணிய சிறந்த ஆடையாக விளங்குகிறது.

குர்தீஸ் வடிவமைப்பும், வண்ணங்களும் :

குர்தீஸ் முன்பு பூக்கள் அதிகம் நிறைந்த வாறு உருவாக்கப்பட்டன. மேலும் டை & டை மற்றும் மலைவாழ் மக்கள் அச்சு பதிவு ஆடையாக உலா வந்தன. தற்போது. ஏராளமான எம்பிராய்டரி மற்றும் சரிகை, பூ வேலைப்பாடு நிறைந்தவாறும் வருகின்றன.

ஜீன்ஸ்-க்கு ஏற்ற குர்தீஸ் :KUTI EMBRODARY

KUTI EMBRODARY

பெண்கள் அணிகின்ற அனைத்து வகை ஜீன்ஸ் பேண்ட் –க்கு ஏற்ற மேலாடையாக குர்தீஸ் விளங்குகிறது. முன்பு டி-ஷர்ட் தான் ஜின்ஸ்-க்கு நல்ல இணையாக இருந்தது. ஜீன்ஸ் க்கு ஏற்ற குர்தீஸ் என்பது அடர்த்தியான மற்றும் இலகு நிற குர்தீஸ் நன்றாக இருக்கும்.

ரேஷம் எம்பிராய்டரி லாங் குர்தீஸ் :

இவை லெக்கிங்ஸ் மற்றும் ஜீன்ஸ்க்கு அணிய ஏற்ற பிரத்யேகமான நீண்ட குர்திஸ். இதில் ரேஷம் எம்பிராய்டரியில் ஏராளமான பூ மற்றும் ஜிரிகை எம்பிராய்டரி செய்யப்பட்டு வருகின்றன. கழுத்து பகுதியில் ஆடை முழுவதும் எம்பிராய்டரி செய்யப்பட்டு கிடைக்கின்றன. இதில் பல வண்ணத்தில் பிரிண்ட் செய்யப்பட்ட குர்தீஸ் மற்றும் கண்ணாடி எம்பிராய்டரி செய்த குர்தீஸ்களும் வருகின்றன.

அழகிய டிசைனர் குர்தீஸ் :Long-Embroidered-Kurti

Long-Embroidered-Kurti

டிசைனர் குர்தீஸ் என்பதில் சந்தேரி ஸிலிவ்ஸ், டாப்ஸ்டிட்ச், மடிப்பு கொண்ட யோக் ஷார்ட் குர்தா, டிரிம், சைடு டை, பார்டர் வைக்கப்பட்ட கப், பிளைன் குர்தீஸ், ஸ்கூப் நெக் ஷார்ட் குர்தா என்று பல வகைகளில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

யோக் ஷார்ட் குர்தா என்பது ரவுண்ட் நெக் மற்றும் மார்பு பகுதியில் சிறுசிறு மடிப்புகள் கொண்டவாறு தைக்கப்பட்டிருக்கும் குர்தாவின் கீழ் பகுதி இரு ஓரமும் சற்று வளைந்தவாறு இருக்கும்.  டஸ்ஸர் காட்டன் ஷார்ட் குர்தா என்பதில் அழகிய கண்ணாடி எம்பிராய்டரி செய்யப்பட்டு பளபளவென உள்ளது. சந்தேரி பிரிண்ட் மற்றும் ஜெய்பூர் பிரிண்ட் ஷார்ட் குர்தீஸ் வருகின்றன. ஜரிகை பார்டர் கொண்ட குர்தீஸ்களும் விதவிதமான டிசைன்களில் வருகின்றன.

காதி குர்தீஸ் :

சுத்தமான பருத்தி நூலால் நெய்யப்பட்ட காதி துணிகளில் உருவாக்கப்பட்ட குர்தீஸ் என்பது அன்றாட வெளிப்பணிகளுக்கு அணிந்து செல்ல ஏற்றதாக உள்ளது. வெயில்காலத்திலும் , மழைகாலத்திலும் அணிய ஏற்றது.

http://tamil.a2zmedia.in/இளைஞிகள்-விரும்பும்-குர்/

 

  • கருத்துக்கள உறவுகள்

+++   பாவாடை தாவணியில், பார்த்த உருவத்தை, வாழ்க்கையில் மறக்கவே முடியாதுள்ளது.   +++  :grin:

தலை முறை,   இடை  வெளியாய் இருக்குமோ.......  ஆர்  கண்டது. tw_blush:

Edited by தமிழ் சிறி

  • 3 months later...
  • தொடங்கியவர்

 

பெண்களுக்கான ஆடை வகைகள் சிலவற்றின் தொகுப்பு

Outfits for Smart Occasions

 

 

Comfy Yet Stylish Clothes for Women 

 

 

Guide to Party Dressing For Your Body Type

 

Weekend Outfits for Women

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.