Jump to content

Recommended Posts

Posted

*1581-ம் ஆண்டு லண்டன் டவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தாமஸ் ஓவர் பரி என்பவருக்கு கொடுக்கப்பட்ட உணவு என்ன தெரியுமா?...

நைட்ரிக் அமிலம், விஷச்செடிகள், அரைக்கப்பட்ட வைரம். இந்த மூன்றில் எந்த ஒன்றைச் சாப்பிட்டாலும் மனிதன் இறந்து விடுவான். ஆனால் இந்தக் கைதியோ இதையெல்லாம் சாப்பிட்டு 100 நாட்கள் வரை உயிர் வாழ்ந்திருக்கிறார்.

***

*இங்கிலாந்தில் ஆடுகளை மேய்ப்பதற்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே ஆடு மேய்க்க நாய்களை பயன்படுத்துகின்றனர். நாய்களுக்கு பயிற்சி அளித்து மேய்ப்பனாக அனுப்புகின்றனர். இவை காலையில் ஆடுகளை ஓட்டிச் சென்று மாலையில் பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்க்கின்றன. இப்படி ஒரு நாய், இரண்டு நாய் அல்ல 2 லட்சம் நாய்கள் மேய்ப்பனாக வேலை செய்கின்றன. ஒரு நாய் 12 ஆட்களின் வேலையைச் செய்கின்றன என ஆட்டு மந்தையின் எஜமானர்கள் கூறுகிறார்கள்.

***

*பேப்பர் கிளிப்பை மூன்று பேர் கண்டு பிடித்தனர். 1899-ம் ஆண்டு வில்லியம் மிடில்புரூக்கும் 1900-ம் ஆண்டு பிராஸ்னனும் 1901-ம் ஆண்டு ஜோகன் வாலெரும் கண்டுபிடித்தனர். மூவருமே தங்களது தயாரிப்பிற்கு காப்புரிமை பெற்றனர். இதனால் பேப்பர் கிளிப்பை யார் கண்டுபிடித்தது என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது.

ஆனால் மூன்றாவதாக கண்டுபிடித்த ஜோகன் வாலெர்தான் பேப்பர் கிளிப்பைக் கண்டுபிடித்தவர் என்று அங்கீகாரம் தரப்பட்டது. காரணம்,1899-ம் ஆண்டே ஜோகன் வாலெர் பேப்பர் கிளிப்பைக் கண்டுபிடித்து விட்டார். ஆனால் அவர் பிறந்த நாடான நார்வேயில் அப்போது காப்புரிமைச் சட்டம் கிடையாது. இதனால் அவர் ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் தனது கண்டு பிடிப்பிற்கு காப்புரிமை கோரினார். இது தவிர மற்ற இருவரையும் விட வயதில் ஜோகன் இளையவராக இருந்தார். அவர் பிறந்த ஆண்டு 1866. இதனால் ஜோகன் வாலெரே பேப்பர் கிளிப்பின் கண்டுபிடிப்பாளராக அங்கீகரிக்கப்பட்டார்.

***

*ஒவ்வொரு ஆண்டும் உலகில் 19 மிகப் பெரிய பூகம்பங்கள் ஏற்படுகின்றன. 6.5 ரிக்டர் ஸ்கேல் அள விற்கு அதிகமாக ஏற்படும் பூகம்பங்கள் மனிதர்களின் உயிருக்கும் கட்டிடங்களுக்கும் பெரும் ஆபத்தை உருவாக்கக் கூடியவை. 1999-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தின் அளவு 7.4 ரிக்டர் ஸ்கேல் ஆகும். இதில் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தார்கள். இதே ஆண்டு தைவான்,மெக்சிகோ ஆகிய நாடுகளில் 7.6 ரிக்டர் ஸ்கேல் அளவு பூகம்பம் தாக் கியது. 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் ஏற் பட்ட பூகம்பம் 8.7 ரிக்டர் ஆகும்.

ஆனால் இதையெல்லாம் விட மிகப்பெரிய பூகம்பம் 1960-ம் ஆண்டு சிலி நாட்டில் ஏற்பட்டது. இது 9.5 ரிக்டர் அளவாக பதிவானது.

***

*பறவை என்றால் அது `கீச் கீச்'என்று சத்தம் போடும். அல்லது கத்தும். ஆனால் நாய் மாதிரி குரைக்குமா?... அப்படியொரு பறவையும் இருக்கிறது. அந்தப் பறவையின் பெயர் ஆன்ட்பிட்டா. வாத்து இனத்தைச் சேர்ந்த இந்தப் பறவை நாய் மாதிரி குரைக்கிறது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் 1998-ம் ஆண்டுதான் இந்தப் பறவை இருப்பதே கண்டுபிடிக்கப்பட்டது.

பறவையின ஆராய்ச்சியாளர் ராபர்ட் எஸ்.ரிக்லே, ஈகுவடார் நாட்டின் ஆன்டிஸ் மலைத் தொடரில் இந்தப் பறவை இருப்பதைக் கண்டறிந்தார். இப்போது இந்த இனப் பறவைகள் மொத்தம் 30 இருக்கின்றன.

குரைப்பது என்கிற போது இன்னொரு விஷயமும் உண்டு. நாய் கள் குரைக்கும் எனபது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் குரைக்காத நாய்களும் இருக்கின்றன. பாசென்ஜி,ஸ்மாலிஷ் இன நாய்கள் குரைப்பதில்லை. இதோ போல் ஆப்பிரிக்கா கண்டத்தில் காணப்படும் காட்டு நாய்களும் குரைப்பதில்லை.

***

*ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி கிரேயான் பென்சில்கள் தயாரிக்கப்படு கின்றன. இது வரை 10 ஆயிரம் கிரேயான் பென்சில்கள் தயாரிக்கப்பட் டுள்ளன. கார்பன் மற்றும் எண்ணை யிலிருந்து கிரேயான் தயாரிக்கப்படு கிறது. எட்வின் பின்னி மற்றும் ஹரால்ட் ஸ்மித் என்னும் இருவர் நச்சுத் தன்மையில்லாத கிரேயானை 1900-ம் ஆண்டு வாக்கில் உருவாக்கினர். பின்னியின் மனைவி ஆலிஸ்தான் இந்தக் கலர் பென்சிலுக்கு கிரேயான் என்று பெயர் சூட்டியவர். சாக்பீஸ் போன்று இதன் வடிவம் இருப்பதால் இதற்கு அதனையொட்டி பெயர் சூட்டப்பட்டது. கிரேயான் என்பது பிரெஞ்சு சொல் ஆகும். சாக்பீசிற்கு பிரெஞ்சு மொழியில் கிரை என்று பெயர். ஓலா என்றால் எண்ணை. இந்த இரண்டு வார்த்தைகளையும் சேர்த்துதான் ஆலிஸ் கிரேயான் என்ற பெயரை உருவாக்கி அதற்குச் சூட்டி விட்டார்.

1957-ம் ஆண்டு ஒரு பெட்டியில் 8 கிரேயான் பென்சில்தான் வைக்கப்பட்டன. அப்போது மொத்தம் 40 வண்ண கிரேயான் பென்சில்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது 120 வண்ணங்களில் கிரேயான்கள் தயாரிக்கப்படுகின்றன.

***

*ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள நீர் வாழ் உயிரி கள் அருங்காட்சியகம் ஒன்றில் முதல் முறையாக எறும்புத் தின்னி குட்டி போட்டுள்ளது. அந்தக் குட்டிக்கு இப்போது 5 மாதங்கள் ஆகிறது. காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள் இதைப் பார்ப்பதற்கு முதன்முறையாக அனுமதிக்கப்பட்டனர். அந்தக் குட்டிதான் தனது இரண்டு கால்களால் இப்படி நடந்து வருகிறது.

ஜப்பானிய மொழியில் எறும்புத் தின்னிகளுக்கு `தமாண்டுவா' என்று பெயர். ஜப்பானிய நீர்வாழ் உயிரிகள் அருங்காட்சியகம் அல்லது விலங்கியல் பூங்கா ஒன்றில் எறும்புத் தின்னி குட்டி போட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

***

*ஆர்டிக், அலாஸ்கா (அமெரிக்கா), கனடா, ரஷியா, இங்கிலாந்து, நார்வே, கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் துருவக் கரடிகள் அதிகம் காணப்படுகின்றன. ஆண் துருவக் கரடி 10 அடி உயரம் வரை வளரும். எடை 650 கிலோ இருக்கும். பெண் துருவக் கரடி 7 அடி உயரம் வரை வளரும். எடை 300 கிலோ வரையே இருக்கும்.

25 வருடங்கள் வரை இவை வாழும். நீண்ட தூர நீச்சலில் துருவக் கரடிகள்தான் சாம்பியன் என்று சொல்லலாம். ஏனெனில் ஓய்வெடுக்காமல் ஒரே வீச்சில் 161 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்தும். கடல் நீருக்குள் வாழாத ஒரு விலங்கு இவ்வளவு தூரம் நீந்துவது ஆச்சர்யமானது. தற்போது 40 ஆயிரம் துருவக் கரடிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை வேட்டையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

***

*சுறா மீன்களுக்கு அதன் ஆயுட்காலம் முழுவதற்கும் பற்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.

ஒரு சுறா மீனுக்கு அதன் ஆயுட்காலத்தில் 20 ஆயிரம் பற் கள் முளைத்து விடுகின்றன.

ஒரு பல் விழுந்தால் அந்த இடத்தில் இன்னொரு பல் உட னடியாக முளைத்துவிடுவதே இதற்குக் காரணமாகும்.

இரையைக் கைப்பற்றும் சுறாமீன்கள் முதல் கீழ்தாடை பற்களைக் கொண்டே இரையைக் கடிக்க ஆரம்பிக்கும். பின்னர் அப்படியே மேல் தாடைக்கு அந்த இரையை தூக்கி வீசும். இப்படியே மேலும் கீழும் தூக்கி வீசித்தான் இரையை அது தின்னுகிறது. எத்தனை பெரிய இரையாக இருந்தாலும் அதை 10 நிமிடத்திற்குள் மென்று விழுங்கி விடும். அத்தனை கூர்மையானது அதன் பற்கள்.

*கழுதைப் புலி ஒரு வேடிக்கையான விலங்கு. இறந்து போன விலங்குகளின் இறைச்சியைத்தான் இது விரும்பித் தின்பதாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள࠯?. உண்மையில் கழுதைப் புலிகள் 95 சதவீதம் தனது இரையைத் தானே வேட்டையாடி வயிற்றை நிரப்பிக் கொள்கிறது. பெரும்பாலும் இது இரவு நேரத்தில்தான் வேட்டைக்குச் செல்லும். பெரிய விலங்குகளை அடித்துச் சாப்பிடவேண்டும் என்றால் தனது கூட்டத்தினரோடு செல்லும். மான்,வரிக்குதிரை, காட்டெருமை ஆகியவை இதன் விருப்பமான இரைகளாகும்.

உடல் முழுக்க பெரும் திட்டுக்களைக் கொண்ட கழுதைப் புலியும் உண்டு. இவை ஆப்பிரிக்க கண்டத்தில் அதிகம் காணப்படுகின்றன. காடுகளில் வாழும்போது இவை 40 வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன. ஆனால் மிருககாட்சி சாலைகளில் வளர்த்தால் 20 வருடங்கள் வரையே வாழும். கழுதை என்ற பெயருடன் இருப்பதால் இது கழுதையின் உறவு இனமும் அல்ல. புலி என்ற பெயர் இருப்பதால் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்ததும் கிடையாது. இது எலி பாரம்பரியத்தைச் சேர்ந்தது.

***

*நீர்யானைகள் ஆப்பிரிக்கா கண்டத்தில்தான் பெரிதும் காணப்படுகின்றன. நிலத்தில் வாழும் விலங்கு களில் யானைக்கு அடுத்து இதுதான் மிகப்பெரிய விலங்கு. பெரும்பாலும் ஏரிகளில்தான் இவற்றைப் பார்க்க முடியும். ஆனால் நதி, நீரோடைகளில் வாழ்கிற நீர்யானைகளும் உண்டு. இந்த நீர் யானைகளை குள்ள நீர்யானைகள் என்பார்கள். இவை 1.5 மீட்டர் நீளமும் 0.8 மீட்டர் உயரமும் கொண்டவை. இவற்றின் மொத்த எடை 300 கிலோவுக்குள் இருக்கும். இவை லைபீரியா நாட்டில்தான் அதிகம் காணப்படுகிறது. பெரிய நீர் யானைகள் 4 மீட்டர் நீளம் கொண்டவை. தோள் பட்டை வரை 1,4 மீட்டர் உயரம் கொண்டது. அதிக பட்சம் வளரும் நீர்யானை 4 ஆயிரம் கிலோ எடை கொண்டதாக இருக்கும்.

நீர் யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்பவை. ஒரு கூட்டத்தில் 20 முதல் 100 வரையிலான நீர் யானைகள் இருக்கும். இவை கொட்டாவி விட்டால் அது டேஞ்சர் என்று அர்த்தம். அது எதிரியைத் எந்த நேரத்திலும் தாக்கலாம்.

***

*சராசரி மனிதர்களைப் போல் 3 மடங்கு உயரம் வளரும் ஒட்டகச்சிவிங்களால் தண்ணீர் குடிக்காமல் இரண்டு வாரம் வரை உயிர் வாழ முடியும். ஆழ்ந்த தூக்கம் என்றால் அது ஒட்டகச் சிவிங்கிகளுக்கு மிகக் குறைவுதான். நின்று கொண்டே அவற்றால் தூங்க முடியாது. இதனால் அவ்வப்போது தூங்கி எழுந்து கொள்ளும். தரையில் நான்கு கால்களையும் பரப்பி வைத்து தலையைக் கீழே வைத்த நிலையில்தான் ஒட்டகச் சிவிங்கிகள் தூங்க முடியும். அந்தத் தூக்கமும் கூட சில நிமிடங்கள்தான். குட்டி பிறந்த ஒரு சில மணி நேரங்களில் எழுந்து நிற்க முடியும். தாயுடன் குட்டி 15 மாதங்கள் வரைசேர்ந்தே வாழும்.

சிங்கமும், சிறுத்தையும்தான் ஒட்டகச் சிவிங்கிகளுக்கு கிலி தருபவை. தனியாக இருந்தால் இந்த இரண்டு மிருகங்களும் தங்களை வேட்டையாடித் தின்று விடும் என்பதால் புத்திசாலித் தனமாக வரிக்குதிரை மான் போன்ற பிராணிகளின் கூட்டத்தினருடன் சேர்ந்தே காணப்படும்.

***

*பூச்சிகளின் உடலிலிருந்து `பெரமோன்' என்னும் மணம் தரும் பொருள் தோன்றுகிறது. இப்பொருள் தரும் மணத்தின் மூலம் அவை ஒன்றோடு ஒன்று தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. பெரமோன் ரசாயனங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ள. இந்த மணத்தின் மூலம் வரும் ஆணைகளை பூச்சிகள் மீறுவதே கிடையாது.

வண்ணத்துப் பூச்சிகள், விட்டில்கள்,சிலந்திகள், தட்டான் பூச்சிகள், சில வகை வண்டுகள்,கொசுக்கள், முதுகெலும்பற்ற சில விலங்கினங்கள் ஆகியவை பெரமோன் மணத்தின் மூலம்தொடர்பு கொள்கின்றன. இத்தகைய ரசாயன சமிக்ஞைகள் பல மீட்டர் தூரத்திற்குக் கூட பரவும் சக்தி கொண்டது.

***

*தாமஸ் ஆல்வர் எடிசன் மாதத்திற்கு இரண்டு கண்டுபிடிப்புகள் வீதம் 40 ஆண்டுகள் தொடர்ந்து ஆயிரத்து 39 புதிய பொருள்களைக் கண்டுபிடித்து அவற்றிற்கான கண்டுபிடிப்பு உரிமையையும் பெற்றார். உலகில் வேறு எந்தக் கண்டுபிடிப்பாளருக்கும் இத்தகைய பெருமை இல்லை. மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளி சென்ற இவரின் 12-ஆவது வயது முதல் எடிசனுக்கு காதும் கேட்காமல் போய் விட்டது குறிப்பிடத்தக்கது.

***

* எல்லா வகைப் பறவைளுக்கும் இறக்கை இருந்தாலும் சில வகைகள் பறக்க முடிவதில்லை. கோழிகள் பறக்க முடியாத பறவை இனத்தைச் சேர்ந்தவை. பறக்க முடியாத பறவைகளில் மிகப்பெரியது நெருப்புக்கோழி. இரண்டாவது மிகப் பெரிய பறவை எமு. நிïசிலாந்தில் காணப்படும் கிவி பறவையாலும் பறக்க முடியாது.

***

*எறும்பில் பல இனம் உண்டு. ஒவ்வொரு வகையிலும் மூன்று சந்ததிகள். பார்த்தால் எறும்பு மாதிரி இருக்காது. நீண்ட பெரிய வயிறு இருக்கும். இதுதான் எறும்பு. ஒரு புற்றில் ஒரு ராணிதான் இருக்கும். இரண்டாவதாக வீரர்கள். இதன் வேலை புற்றைக் காப்பாற்றுவது. இவைதான் நம்மை நறுக்கென்று கடிப்பது. இதன் வாயில் பார்மிக் அமிலம் இருப்பதால், தோலில் பட்டதும் அரிப்பு எடுக்கும். மூன்றாவது வேலைக்கார எறும்புகள். இதுதான் எண்ணிக்கையில் அதிகம்.

இரை தேடுவது, முட்டைகளை எடுத்துச் செல்வது, புற்றை விரிவாக்கம் செய்வது என்று சகல வேலைகளையும் யார் கட்டளையும் இல்லாமல் செய்யும். இவை மனிதர்களை கடிப்பதில்லை. பாவம் வாயில்லா பூச்சிகள்.

***

*1960-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து கடல் பொறியியல் வல்லுனர்கள் பிக்கார்ட்,லெப்டினன்ட் வெல்ஸ், ஆகிய இரண்டு பேரும் கடலில் 35 ஆயிரத்து 800 அடி ஆழத்தில் வாளைமீன்கள் போன்ற உயிரினங்கள் இருப்பதை படம் பிடித்து வந்துள்ளனர். அது நாள்வரை பெரும்பாலான கடல் ஆய்வாளர்கள் ஆயிரத்து 800 அடி வரை மட்டுமே உயிரினங்கள் வாழ முடியும் என்று நம்பி இருந்தனர்.

Posted

குரங்குகள் மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படும் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். ஆனால் மிக அதிகமான மலைப் பகுதியில் குரங்குகளை பார்க்க முடியுமா?... முடியும். சீனா திபெத்திய பீட பூமியின் தென்பகுதிகளில் காணப்படும் தங்க நிறக் குரங்குகள் 10 ஆயிரம் அடி உயரமான மலையில் அதிகம் வசிக்கின்றன. இது அபூர்வ வகை இனக் குரங்காகும். பனி காலத்தில் இவை கடும் குளிரைத் தாங்க முடியாமல் மலையடிவாரத்திற்கு வந்து விடும். இதன் உடல் நீள அளவிற்கு வாலின் நீளமும் இருக்கும். வால் இரண்டரை அடி நீளம் வரை வளரும்.

அண்மையில் சீனாவின் சான்டோங் நகரில் உள்ள மிருககாட்சி சாலையில் தங்க நிற பெண் குரங்கு ஒரு குட்டியை ஈன்றெடுத்தது. அந்தக் குட்டியை முதன் முறையாக பொதுமக்களின் பார்வைக்கு அனுமதித்தார்கள்.

***

முதன் முதலில் தென் ஆப்பிரிக்க நாட்டில்தான் வெள்ளைச் சிங்கங்கள் இருப்பது வெளி யுலகிற்குத் தெரிய வந்தது. அங்குள்ள டிம்பாவதி பகுதியில் வெள்ளைச் சிங்கம் இருப்பதை உறுதி செய்தனர். ஆனால் உண்மையில் அவை வெள்ளை நிறம் அல்ல, பிறவிக் கோளாறு காரணமாக இப்படி இவை பிறந்திருக்கலாம் என்று கருதினார்கள்.

ஆனால் உண்மையில் வெள்ளைச் சிங்கங்கள் இருப்பது 1975-ம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது. இதேபோல் இந்தியாவிலும் வெள்ளைச் சிங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றுக்கு வெள்ளைச் சிங்கம் என்று பொதுவான பெயர் இருந்தாலும் கூட அவற்றின் மீது மெல்லிய சாம்பல் நிறம் இருக்கிறது.

இந்த வெள்ளைச் சிங்கங்களை பிடித்து வளர்ப்பது சிரமமாக இருந்தது. இதனால் மிருககாட்சி சாலையில் இவற்றை வளர்க்க முடியாமல் இருந்தது. ஆனால் கடந்த 5 வருடங்களாக வெள்ளைச் சிங்கங்களை மிருககாட்சி சாலையில் இனப்பெருக்கம் செய்வதில் வெற்றி கிடைத்து விட்டது. அண்மையில் ஜெர்மனியின் நூரம்பெர்க் நகரில் ஒரு பெண் வெள்ளைச் சிங்கம் குட்டியொன்றை ஈன்றெடுத்தது.

***

அமெரிக்கா, கனடா நாடுகளில் மஞ்சள் நிற ராபின் குருவியை அதிக அளவில் பார்க்க முடியும். அண்மையில் இந்த பறவையை இங்கிலாந்து மக்கள் தங்களது நாட்டின் பெரும்பாலான இடங்களில் பார்க்க நேர்ந்தது. அவர்களில் பெரும்பாலானோர் இந்தக் குருவி நமது நாட்டிற்கு எப்படி வந்தது என்று புரியாமல் குழம்பினார்கள்.

வட அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக வீசிய சூறாவளிக் காற்றில் இந்தப் பறவை அட்லாண்டிக் கடலையும் தாண்டி வந்திருப்பது தெரிந்தது. காற்றின் போக்கிலேயே இங்கிலாந்து வந்து சேர்ந்த மஞ்சள் வயிற்று ராபின் குருவிகள் தற்போது தங்களின் புதிய இடத்தில் எந்த வித ஆபத்துமின்றி வாழ்கின்றன.

***

நமது நாட்டில் 1921-ம் ஆண்டு தீப்பெட்டி தயாரிக்கும் முதல் தொழிற்சாலை கொல்கத்தா நகரில் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு தீப்பெட்டிகள் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

***

தோன்றியதிலிருந்து அன்று முதல் இன்று வரை எந்த வித பரிணாம வளர்ச்சியும் அடையாத ஒரே உயிரினம் கரப்பான் பூச்சிதான்.

***

விளக்குகளில் இருந்து வெளியாகும் ஒரு வித இன்பாஸ்டிரேட் கதிரியக்கம்தான் விட்டில் பூச்சிகள் விளக்குகளை நோக்கி வரக்காரணமாக உள்ளது.

***

ஆப்பிரிக்க காடுகளில் வாழும் சிறுத்தை புலிகள் மான்களை விரட்டிப் பிடிக்கும்போது மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். அப்போது 125 அடி தூரத்தைக் கூட ஒரே துள்ளலில் தாண்டிவிடும். அகப்பட்டுக் கொண்ட மானின் எடை வாயில் கவ்வி தூக்கிச்செல்லக் கூடிய அளவில் இருந்தால் அப்படி மரத்தின் மீது ஏறி அங்கேயே உட்கார்ந்து கொண்டு இரையைத் தின்னும்.

கழுதைப் புலி போன்ற சிறிய விலங்குகளின் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காகவே இவ்வாறு இரையை மரத்தின் உச்சிக்கு சிறுத்தைகள் கொண்டு செல்கின்றன.

***

உலகப் புகழ்பெற்ற பாபா பிளாக் ஷீப் என்ற மழலையர் ஆங்கிலப் பாடலின் சில வரிகளை மாற்றியமைக்கப்போகிறார்க࠮?். பிளாக்ஷீப் என்பது கறுப்பர் இனத்தைக் குறிப்பதாக புகார் வந்ததால் இந்த முடிவு. பிளாக் என்பதற்குபதில் ரெயின்போ என மாற்றப்போகிறார்கள். இனிமேல் இந்தப் பாடல் பாபா பாபா ரெயின்போ என்று பாடப்படும்.

இப்போது இந்தப் பாடல் இங்கிலாந்தில் பாபா பாபா கிரீன்ஷீப் எனவும் ஸ்காட்லாந்தில் பாபா பாபா ஹேப்பிஷீப் எனவும் பாடப்படுகிறது.

***

புகைப்பட காமிரா உருவத்தின் நீள, அகலத்தை மட்டுமே படம்பிடிக்கும். ஆனால் உருவத்தின் ஆழத்தைக் காட்ட இயலாது. நம் இரண்டு கண்களும் வெவ்வேறு இரண்டு உருவங்களைப் பார்க்கும்போது மூன்றாவது பரிமாணம் ஏற்படுகிறது. எனவேதான் பார்க்கும் பொருளின் ஆழத்தை நம் கண்களால் காண முடிகிறது.

***

ஆழ்கடலில் மலர்ச்செடி போல் அழகாக இருப்பது கடல் அனிமோன். இது இருந்த இடத்தை விட்டு நகராமலேயே இரையைப் பிடிக்கும். இதன் உடலில் இழைகள் மொட்டுகள் போன்ற அமைப்புகள் உண்டு.

இரையைப் கண்டதும் தன் மொட்டுக்களை வெடிக்கச் செய்து ஒரு வித விஷத்தை அதன் உடலில் பாய்ச்சிவிடும். பிறகு அவற்றை உண்ணும்.

***

* உலகிலேயே மிகவும் சிறிய மரம் குட்டை வில்லோ என்னும் மரமாகும். இந்த மரத்தின் மொத்த உயரம் இரண்டே அங்குலம்தான்.

* ஆகாயத் துப்புரவு தொழிலாளி என்று காக்கையை அழைப்பார்கள்.

*விவசாயியின் நண்பன் மண் புழு என்பது உங்களுக்குத் தெரியும். பகைவன் யார் என்று தெரியுமா?... வெட்டுக்கிளிதான் அந்த புண்ணியவான். பெருமளவு பயிர்களை வெட்டுக் கிளிகள் வளரவிடாமல் அழிப்பதால்தான் அதற்கு இந்தப் பெயர்.

* கடல் நீரில் உப்பு 3.5 சதவீதம் கலந்துள்ளது.

* கடலின் சராசரி ஆழம் 3.75 கிலோ மீட்டர்கள்.

Posted

*மின்சார பல்பைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம்.

*நான்கு அமெரிக்கர்களில் ஒருவர் டெலிவிஷனில் தோன்றிவிடுகிறார்.

*ஒரு மனிதன் வருடத்தில் சராசரியாக 1,460 தடவை கனவு காண்கிறான்.

*மனித உடலில் ஒரு வினாடிக்கு 1 கோடி சிவப்பு ரத்த செல்கள் உருவாகவும் கொல்லவும்படுகின்றன

காட்டு நாய்களிடமிருந்து கம்பளி ஆடுகளை காப்பாற்றுவதற்கு ஆஸ்திரேலியா அரசாங்கம் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 3 ஆயிரத்து 437 மைல் நீளமுள்ள வேலியை அமைத்துள்ளது. இதுதான் உலகின் மிகப் பெரிய வேலியாகும்.

***

*பிறந்தது முதல் இறக்கும் வரை தன் வாயைத் திறந்தவாறே வைத்திருக்கும் கடல் மீன் எது தெரியுமா?... விரியன் என்னும் மீன். இதற்குக் காரணம் வாயை மூட முடியாதபடி அதன் பற்கள் மிக நீளமாக இருப்பதுதான்.

***

*உலகில் தினமும் 80 லட்சம் மின்னல்கள் பூமியைத் தாக்குகின்றன. இடி மின்னல் ஏற்படுத்தும் மேகங்களோ உலகில் சுமார் 44. ஒரு தடவை மின்னல் தாக்கினால், தோன்றுகிற மின்சாரம் பத்துக் கோடி மின்சார பல்புகளை எரிய வைக்க போதுமானதாக இருக்கும்.

***

*இரவில் கூட்டமாக அமைந்திருக்கும் நட்சத்திரங்களை நாம் பார்க்கும்போது அவை அருகருகே இருப்பது போல் தோன்றும். அது உண்மையல்ல. அவற்றுக்கு இடையே காணப்படும் தூரம் பல ஒளியாண்டுகள் ஆகும். ஆனால் நம்முடைய பார்வை கோணத்தில் அவை ஒன்றன் பின் ஒன்றாக இருப்பது போல் காட்சியளிக்கின்றன.

***

*வானம் தெளிவாக இருக்கும் இரவுகளை விட மேகமூட்டமுள்ள இரவுகளில் சற்று வெப்பம் அதிகமாக இருக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா?... பூமி வெளிப்படுத்தும் வானத்தை அடைய முடியாமல் மேக மூட்டம் தடுத்து விடுவது தான். இதன் காரணமாகத் தான் மேக மூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் அதிக வெப்பம் காணப்படுகிறது.

***

*தெகான் பெக் என்றொரு வகைப் பூ மரம். இந்த மரம் பார்ப்பதற்கு கொய்யா மரம் போலவே இருக்கும். இது பூக்கும் பூ காலையில் வெள்ளை நிறமாகவும், நண்பகல் நேரத்தில் சிவப்பாகவும், இரவில் நீல நிறமாகவும் இருக்கும்.

***

Posted

உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்கள் இமயமலையில் உள்ள கார கோரம் மலைத்தொடரில் உள்ளது. உலகில் 24 ஆயிரம் அடிக்கு மேல் உயரமுள்ள 109 மலைச் சிகரங்கள் இந்த காரகோரம் மலைத் தொடரில் இருக்கின்றன.

***

கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகரம் வென்சுவான் என்ற நகரமே. திபெத்தைச் சேர்ந்த இந்த நகரம் 1955-ம் ஆண்டு 16 ஆயிரத்து 732 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது.

***

ஆட்டு ரோம ஆடைகள் பண்டைய காலம் தொட்டே மனி தனுக்கு பரிச்சயமான ஒன்று. ஆட்டு ரோமத்தால் செய்த ஆடை களை 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியர்கள் விதவிதமாகத் தயாரித்து அணிந்தனர்.

அமெரிக்காவில் கி.மு.140 ஆண்டுக்குப் பிறகுதான் ஆட்டு ரோம ஆடைகள் அறிமுகம் ஆயின.

***

நமது நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் தரகர்கள் மூலம் திரு மணம் நிச்சயம் செய்வது இன்றும் நடக்கிறது. ஆப்பிரிக்க கண் டத்தில் சில நாடுகளிலும் தரகர்கள் மூலம் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. என்றாலும் இந்தியா, ஜப்பான் போல வேறு எந்த நாட்டிலும் அதிக அளவில் திருமணத் தரகர்கள் கிடையாது.

***

சீனர்கள் மலேசியாவில் உள்ள பினாங்கில் குடியேறியபோது குவான் யுன் டிங் என்ற தங்களது பெண் தெய்வத்திற்கு ஒரு கோயிலைக் கட்டினார்கள். பிற்காலத்தில் சுருக்கமாக இந்த தெய் வத்தை குவான்யின் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

சீனர்களுடன் புத்த மதத்தினர், டாவோ மதத்தினர், கன்பூஷியஸ் மதத்தினர் என பலதரப்பட்டவர்களும் தங்களுக்கு உள்ள மனக் குறை முதலியவற்றை இந்த தெய்வத்திடம் வந்து சொல்லி பிரார்த்தனை செய்கிறார்கள். புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டால் ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டம்தான் என்று சீனர்கள் நம்பு கிறார்கள்.

***

1880-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஹன்னே என்ற விஞ்ஞானியும் 1893-ல் பிரான்ஸ் நாட்டின் ஹென்றி மாய்சன் என்னும் விஞ்ஞானியும் 1906-ல் சர் வில்லியம் கிருக்ஸ் என்னும் இன் னொரு இங்கிலாந்து விஞ்ஞானியும் செயற்கை வைர தயாரிப்பில் தனித் தனியாக ஆராய்ச்சி நடத்தி ஓரளவு வெற்றி கண்டார்கள்.

ஆனால், அப்படி உருவான வைரம் தரமானதாக இருக்கவில்லை. 1954-ம் ஆண்டு ஒரு சில மாற்றங்களுடன் செயற்கை வைரம் உருவாகத் தொடங்கியது. என்றாலும் 1960-ம் ஆண்டு தான் விற்பனைக்கு வந்தது.

***

உலகின் மிக நீளமான ஆறு எது என்பதில் தென் அமெரிக் காவில் உள்ள அமேசான் நதியா அல்லது ஆப்பிரிக்க கண்டத் தில் உள்ள நைல் நதியா என்ற சர்ச்சை நீண்ட கால மாகவே இருந்து வந்தது.

கடைசியாக அது கடந்த நூற்றாண்டின் மத்தியில்தான் தீர்த்து வைக்கப்பட்டது. நைல் நதியின் நீளம் 4 ஆயிரத்து 146 மைல் என்றும் அமேசான் நதியின் நீளம் 4 ஆயிரத்து 7 மைல் என்று இறுதியாக நிர்ணயிக்கப்பட்டு, நைல் நதியே இந்தப் போட்டியில் வென்றது.

***

பாட்டில், மற்றும் டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மையான குளிர்பானங் களில் கார்பன் வாயு நிரப்பப் பட்டிருக்கும். இந்த வாயுவுடன் குளிர்பானத்தைச் சேர்ந்து குடித்தால் உடலுக்குத் தீங்குதான் ஏற்படும். எனவே அதில் இருக்கும் வாயுக்கள் முற்றிலுமாக வெளியேறியப் பின் குடிப்பதே நல்லது. வாயுக்கள் வெளியேற குறைந்த பட்சம் இரண்டு நிமிடங்களாவது ஆகும். ஆகவே அதன் பின் இந்தக் குளிர்பானங்களைக் குடித்தால் உடலுக்கு எந்தத் தீங்கும் இருக்காது.

_________________

*உங்களுக்கு தெரியுமா ஒரு பவுண்ட் தேன் எடுப்பதற்கு ஏறக்குறைய இரண்டு மில்லியன் பூக்களிலிருந்து மகரந்தத்தை தேனீக்கள் சேகரிக்க வேண்டும் என்பது. இந்த வேலையை வேலைக்கார தேனீக்கள் தான் செய்யும். இவை மிகவும் கடினப்பட்டு உழைத்து பூவிலுள்ள மகரந்தத்தை கொண்டு வந்து தேன் கூட்டில் வைத்து பாதுகாத்து தேனை உருவாக்கும். பூவின் மகரந்தம் மற்றும் தேனீக்களின் எச்சில் சேர்ந்து உருவாவதே தேனாகும்.

=================

*ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் டேவ் ராபட்ஸ் என்பவர் 1976ம் ஆண்டு கலந்து கொண்டார். அப்போது போட்டியின் போது தன்னுடைய போல்வால்ட் குச்சிகளை எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்து திகிலுற்றார். தன்னை எப்படியும் போட்டியிலிருந்து நீக்கிவிடுவர் என்று பயந்தார். அப்போது உலக சாம்பியனாக இருந்தார் ஈல்பெல். 18 அடி 71/4 இன்ச்சஸ் என்ற முறையில் சாதனை படைத்திருந்தார். இவரது சங்கடத்தை உணர்ந்து உதவிக்கு வந்தார். தன்னுடைய போல்ஸ்ஸை கொடுத்து விளையாடும்படி கூறினார்.

ஈலின் போல்ஸ்ஸை கொண்டு விளையாடிய டேவ் ராபெட்ஸ் அவரது உலக சாதனையை முறியடித்தார். 18 அடிக்கு 81/4 இன்ச்சஸ் தாண்டி ஈல்பெல்லின் சாதனையை முறியடித்தார்!

================

* டார்டர் என்ற பறவை இந்தியாவிலுள்ள துணை கண்டங்களில் எல்லாம் வசிக்கிறது. இதன் கழுத்து பாம்பை போன்று இருக்கும். கூரிய அலகை உடையது. கருப்பு நிறத்தில் உள்ள இதன் உடல் முழுவதும் சில்வர் க்ரே கலர் கோடுகள் காணப்படும் உள்ள. இதன் தலையும், கழுத்தும் வெல்வெட் ப்ரவுன் கலரில் இருக்கும். தாடையும் தொண்டையும் வெள்ளை கலரில் இருக்கும். நீந்தும் பொழுது இதன் உடல் முழுவதும் தண்ணீரில் இருக்கும். கழுத்தும் மூக்கும் மட்டுமே பாம்பு போல் வெளியில் தெரியும். இதன் விருப்ப உணவு மீன். இப்பறவை குஞ்சு பொறிக்கும் காலங்கள் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை. தண்ணீர் ஓரம் உள்ள மரங்களில் கூடுகள் அமைத்து குஞ்சு பொறிக்கும். ஒரே சமயத்தில் முட்டைகளை இடும். முட்டைகள் கிரீனிஷ் புளூ கலரில் இருக்கும்.

===============

*ராபின்சன் குரூஸே என்ற நாவல் டேனியல் டிபோ என்வரால் எழுதப்பட்டது. இது மிகவும் புகழ்பெற்ற ஒரு நாவல். ஒரு தனிமையான தீவில் விடப்பட்ட மனிதனை பற்றிய கதை இது. படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் ராபின்சன் குரூஸே என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் ஒரு தீவில் தனியாக மாட்டிக் கொள்வான். நர மாமிசம் தின்னும் அந்த தீவில் ஒரு ஆதிவாசியை நண்பனாக்கிக் கொண்டு அவனுக்கு பிரைடே என பெயர் சூட்டி பல வருடங்கள் அந்த தீவிலேயே வாழ்வார்கள். இந்த நாவல் 1719ம் ஆண்டு வெளியாகி உலக மக்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இது உண்மையிலேயே நடந்த சம்பவம்.

ஸ்காட்டிஷ் ஸ்ய்லர் அலெக்சாண்டர் என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் சிலி என் தீவில் மாட்டிக் கொண்டார். அங்கே நான்கு வருடங்கள் வாழ்ந்தார். அவரை பிரிட்டிஷ் கேப்டன் ஒருவர் காப்பாற்றினார். அலெக்சாண்டர் சொன்ன தீவு அனுபவங்களை கேப்டன் எழுதி வைத்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான் ராபின்சன் குரூஸே என்ற நாவல்.

_________________

உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்கள் இமயமலையில் உள்ள கார கோரம் மலைத்தொடரில் உள்ளது. உலகில் 24 ஆயிரம் அடிக்கு மேல் உயரமுள்ள 109 மலைச் சிகரங்கள் இந்த காரகோரம் மலைத் தொடரில் இருக்கின்றன.

***

கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகரம் வென்சுவான் என்ற நகரமே. திபெத்தைச் சேர்ந்த இந்த நகரம் 1955-ம் ஆண்டு 16 ஆயிரத்து 732 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது.

***

ஆட்டு ரோம ஆடைகள் பண்டைய காலம் தொட்டே மனி தனுக்கு பரிச்சயமான ஒன்று. ஆட்டு ரோமத்தால் செய்த ஆடை களை 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியர்கள் விதவிதமாகத் தயாரித்து அணிந்தனர்.

அமெரிக்காவில் கி.மு.140 ஆண்டுக்குப் பிறகுதான் ஆட்டு ரோம ஆடைகள் அறிமுகம் ஆயின.

***

நமது நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் தரகர்கள் மூலம் திரு மணம் நிச்சயம் செய்வது இன்றும் நடக்கிறது. ஆப்பிரிக்க கண் டத்தில் சில நாடுகளிலும் தரகர்கள் மூலம் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. என்றாலும் இந்தியா, ஜப்பான் போல வேறு எந்த நாட்டிலும் அதிக அளவில் திருமணத் தரகர்கள் கிடையாது.

***

சீனர்கள் மலேசியாவில் உள்ள பினாங்கில் குடியேறியபோது குவான் யுன் டிங் என்ற தங்களது பெண் தெய்வத்திற்கு ஒரு கோயிலைக் கட்டினார்கள். பிற்காலத்தில் சுருக்கமாக இந்த தெய் வத்தை குவான்யின் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

சீனர்களுடன் புத்த மதத்தினர், டாவோ மதத்தினர், கன்பூஷியஸ் மதத்தினர் என பலதரப்பட்டவர்களும் தங்களுக்கு உள்ள மனக் குறை முதலியவற்றை இந்த தெய்வத்திடம் வந்து சொல்லி பிரார்த்தனை செய்கிறார்கள். புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டால் ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டம்தான் என்று சீனர்கள் நம்பு கிறார்கள்.

***

1880-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஹன்னே என்ற விஞ்ஞானியும் 1893-ல் பிரான்ஸ் நாட்டின் ஹென்றி மாய்சன் என்னும் விஞ்ஞானியும் 1906-ல் சர் வில்லியம் கிருக்ஸ் என்னும் இன் னொரு இங்கிலாந்து விஞ்ஞானியும் செயற்கை வைர தயாரிப்பில் தனித் தனியாக ஆராய்ச்சி நடத்தி ஓரளவு வெற்றி கண்டார்கள்.

ஆனால், அப்படி உருவான வைரம் தரமானதாக இருக்கவில்லை. 1954-ம் ஆண்டு ஒரு சில மாற்றங்களுடன் செயற்கை வைரம் உருவாகத் தொடங்கியது. என்றாலும் 1960-ம் ஆண்டு தான் விற்பனைக்கு வந்தது.

***

உலகின் மிக நீளமான ஆறு எது என்பதில் தென் அமெரிக் காவில் உள்ள அமேசான் நதியா அல்லது ஆப்பிரிக்க கண்டத் தில் உள்ள நைல் நதியா என்ற சர்ச்சை நீண்ட கால மாகவே இருந்து வந்தது.

கடைசியாக அது கடந்த நூற்றாண்டின் மத்தியில்தான் தீர்த்து வைக்கப்பட்டது. நைல் நதியின் நீளம் 4 ஆயிரத்து 146 மைல் என்றும் அமேசான் நதியின் நீளம் 4 ஆயிரத்து 7 மைல் என்று இறுதியாக நிர்ணயிக்கப்பட்டு, நைல் நதியே இந்தப் போட்டியில் வென்றது.

***

பாட்டில், மற்றும் டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மையான குளிர்பானங் களில் கார்பன் வாயு நிரப்பப் பட்டிருக்கும். இந்த வாயுவுடன் குளிர்பானத்தைச் சேர்ந்து குடித்தால் உடலுக்குத் தீங்குதான் ஏற்படும். எனவே அதில் இருக்கும் வாயுக்கள் முற்றிலுமாக வெளியேறியப் பின் குடிப்பதே நல்லது. வாயுக்கள் வெளியேற குறைந்த பட்சம் இரண்டு நிமிடங்களாவது ஆகும். ஆகவே அதன் பின் இந்தக் குளிர்பானங்களைக் குடித்தால் உடலுக்கு எந்தத் தீங்கும் இருக்காது.

_________________

*உங்களுக்கு தெரியுமா ஒரு பவுண்ட் தேன் எடுப்பதற்கு ஏறக்குறைய இரண்டு மில்லியன் பூக்களிலிருந்து மகரந்தத்தை தேனீக்கள் சேகரிக்க வேண்டும் என்பது. இந்த வேலையை வேலைக்கார தேனீக்கள் தான் செய்யும். இவை மிகவும் கடினப்பட்டு உழைத்து பூவிலுள்ள மகரந்தத்தை கொண்டு வந்து தேன் கூட்டில் வைத்து பாதுகாத்து தேனை உருவாக்கும். பூவின் மகரந்தம் மற்றும் தேனீக்களின் எச்சில் சேர்ந்து உருவாவதே தேனாகும்.

=================

*ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் டேவ் ராபட்ஸ் என்பவர் 1976ம் ஆண்டு கலந்து கொண்டார். அப்போது போட்டியின் போது தன்னுடைய போல்வால்ட் குச்சிகளை எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்து திகிலுற்றார். தன்னை எப்படியும் போட்டியிலிருந்து நீக்கிவிடுவர் என்று பயந்தார். அப்போது உலக சாம்பியனாக இருந்தார் ஈல்பெல். 18 அடி 71/4 இன்ச்சஸ் என்ற முறையில் சாதனை படைத்திருந்தார். இவரது சங்கடத்தை உணர்ந்து உதவிக்கு வந்தார். தன்னுடைய போல்ஸ்ஸை கொடுத்து விளையாடும்படி கூறினார்.

ஈலின் போல்ஸ்ஸை கொண்டு விளையாடிய டேவ் ராபெட்ஸ் அவரது உலக சாதனையை முறியடித்தார். 18 அடிக்கு 81/4 இன்ச்சஸ் தாண்டி ஈல்பெல்லின் சாதனையை முறியடித்தார்!

================

* டார்டர் என்ற பறவை இந்தியாவிலுள்ள துணை கண்டங்களில் எல்லாம் வசிக்கிறது. இதன் கழுத்து பாம்பை போன்று இருக்கும். கூரிய அலகை உடையது. கருப்பு நிறத்தில் உள்ள இதன் உடல் முழுவதும் சில்வர் க்ரே கலர் கோடுகள் காணப்படும் உள்ள. இதன் தலையும், கழுத்தும் வெல்வெட் ப்ரவுன் கலரில் இருக்கும். தாடையும் தொண்டையும் வெள்ளை கலரில் இருக்கும். நீந்தும் பொழுது இதன் உடல் முழுவதும் தண்ணீரில் இருக்கும். கழுத்தும் மூக்கும் மட்டுமே பாம்பு போல் வெளியில் தெரியும். இதன் விருப்ப உணவு மீன். இப்பறவை குஞ்சு பொறிக்கும் காலங்கள் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை. தண்ணீர் ஓரம் உள்ள மரங்களில் கூடுகள் அமைத்து குஞ்சு பொறிக்கும். ஒரே சமயத்தில் முட்டைகளை இடும். முட்டைகள் கிரீனிஷ் புளூ கலரில் இருக்கும்.

===============

*ராபின்சன் குரூஸே என்ற நாவல் டேனியல் டிபோ என்வரால் எழுதப்பட்டது. இது மிகவும் புகழ்பெற்ற ஒரு நாவல். ஒரு தனிமையான தீவில் விடப்பட்ட மனிதனை பற்றிய கதை இது. படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் ராபின்சன் குரூஸே என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் ஒரு தீவில் தனியாக மாட்டிக் கொள்வான். நர மாமிசம் தின்னும் அந்த தீவில் ஒரு ஆதிவாசியை நண்பனாக்கிக் கொண்டு அவனுக்கு பிரைடே என பெயர் சூட்டி பல வருடங்கள் அந்த தீவிலேயே வாழ்வார்கள். இந்த நாவல் 1719ம் ஆண்டு வெளியாகி உலக மக்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இது உண்மையிலேயே நடந்த சம்பவம்.

ஸ்காட்டிஷ் ஸ்ய்லர் அலெக்சாண்டர் என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் சிலி என் தீவில் மாட்டிக் கொண்டார். அங்கே நான்கு வருடங்கள் வாழ்ந்தார். அவரை பிரிட்டிஷ் கேப்டன் ஒருவர் காப்பாற்றினார். அலெக்சாண்டர் சொன்ன தீவு அனுபவங்களை கேப்டன் எழுதி வைத்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான் ராபின்சன் குரூஸே என்ற நாவல்.

_________________

Posted

1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)

2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.

3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு

4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.

5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.

7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.

9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.

10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.

11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.

12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.

13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.

15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.

16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.

18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.

19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.

20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).

23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).

24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.

26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.

30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்.

Posted

*மிகப்பெரிய யானைச் சந்தை பீகார் மாநிலம் சோனேப் பூரில் நடக்கிறது.

*யானையின் சுவடு அதன் பாதத்தைவிடப் பெரியதாகும்.

*யானை, குதிரை, ஒட்டகச் சிவிங்கி இவை மூன்றும் நின்று கொண்டே தூங்கக் கூடியவை.

*ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறது.

*பாம்புகள் கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும்.

*இந்தியா, மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே மயிலினம் உண்டு. மயிலினத்தின் பரம விரோதி பூனை. புலி, சிறுத்தைக்கு மயில் இறைச்சி என்றால் ரொம்பவும் பிரியம். புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வண்ணத் தோகை கொண்ட மயில்களைப் பார்த்ததும், அவைகளின் விழிகளையே இமை கொட்டாமல் பரிவுடன் பார்த்தே வசியப்படுத்திவிடுமாம். மயில் சுயநினைவை இழந்து சிலை போல் நின்றபடியே இருக்கும்போது அவை மயிலைப் பாய்ந்து கடித்து ருசி பார்த்து விடும்.

*பராகுவே நாட்டில் கைபிமெண்டி என்னும் பள்ளத்தாக்கில் வாழும் சென் என்னும் பழங்குடி இன மக்கள் தண்ணீர் அருந்துவதே இல்லை. காரணம் இங்குள்ள ஏரியில் உள்ள தண்ணீர் அதிக உப்பாக இருப்பதுதான். தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக இங்கு பயிராகும் சோளத்தில் இருந்து பீர் தயாரித்து அதையே தண்ணீருக்குப் பதிலாக அருந்துகிறார்கள்.

*நியூசிலாந்து நாட்டின் தேசியப் பறவை கிவி ஆகும். இப்பறவையால் பறக்க முடியாது. ஆனால் தரையில் படு ஸ்பீடாக நடந்து செல்லும். பகலில் கூட்டில் தங்கும். இரவுதான் இரை தேடக் கிளம்பும். இது ஒரு தூங்கு மூஞ்சிப் பறவை என்பது குறிப்பிடத்தக்கது.

*நாம் வாழும் பூமியில் கடல் பகுதி மட்டும் 70 சதவீதம் உள்ளது. கடல் பகுதியின் மொத்தப் பரப்பளவு மட்டும் 36 கோடியே 20 லட்சம் சதுர கிலோ மீட்டர் ஆகும். உலகம் முழுவதும் இருப்பது ஒரே கடல்தான் என்றாலும் புவியியல் அறிஞர்கள் அவை சார்ந்துள்ள நிலப்பகுதிகளைக் கொண்டு அவற்றைப் பல பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவ்வாறு பிரிக்கப் பட்டவைதான் பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல் ஆகியன.

இவை தவிர மத்திய தரைக் கடல்,பால்டிக் கடல்,கருங்கடல், கரீபியன் கடல், செங்கடல் போன்று நான்கு பக்கமும் நிலப்பகுதியால் சூழப்பட்ட உள்நாட்டுக் கடல்கள் உட்பட 16 கடல்கள் உண்டு. கடலின் அடியில் பல மலைகள், மலைத் தொடர்கள், பள்ளத்தாக்குகள் இருக்கின்றன.

*உலகில் உள்ள அத்தனை கடல்களின் நீரில் இருந்தும் உப்பை தனியே பிரித்து எடுத்து விட்டால் அப்போது கடல் மட்டத்தில் சுமார் 100 அடி தாழ்ந்து விடும். ஏனெனில் கடல் நீரில் சராசரியாக 35 சதவீதம் உப்புத் தன்மை உள்ளது.

Posted

*முதன் முதலில் மின்சாரம் தாக்கி இறந்தவர் யார் தெரியுமா?... அமெரிக்காவின் டபிள்யூ. ரிச்மேன் ஆவார். பெஞ்சமின் பிராங்கிளின் 1749-ம் ஆண்டு மின்னலுக்கு மின்சக்தி உண்டு என்ற உண்மையை உலகிற்கு கண்டறிந்து சொன்ன போது அதை உண் மையா, பொய்யா என நிரூபிக்கிறேன் என தைரியமாகக் கூறிய ரிச்மேன் பரிசோதனையில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி உயிரை இழந்தார்.

***

*சீனாவில் சைக்கிள்களைப் பயன்படுத்தும் அலுவலக ஊழியர்களுக்கும் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் சைக்கிள் அலவன்ஸ் தரப்படுகிறது. இதற்காக ஒரு சட்டமே இயற்றப் பட்டிருக்கிறது. எல்லா அலுவலகங்களிலும் சைக்கிள்களை நிறுத்துவதற்கு கட்டாயமாக இட வசதி செய்து தரப்படவேண்டும் என்பதே அது. ஒவ்வொரு அலுவலகத்திலும் 500 முதல் 2 ஆயிரம் சைக்கிள்கள் வரை நிறுத்துவதற்கு ஏற்ப ஸ்டாண்டுகள் அங்கே கட்டப்பட்டிருக்கின்றன.

***

*தென் அமெரிக்க கண்டத்தில் கான்டோர் என்னும் ராட்சத பருந்து காணப்படுகிறது. இதை தென் அமெரிக்க நாடுகளில் வசிக்கும் ஸ்பானிஷ்காரர்கள் தெய்வமாகக் கருதுகிறார்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜுலைமாதம் 29-ந்தேதி கான்டோர் தினம் என்னும் நாளையும் கடைப் பிடிக்கிறார்கள். அன்று இந்த பருந்தை எருதின் முதுகில் கட்டி விடுவார்கள். பருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எருதைக் குத்திக் குத்திக் காயமாக்கும். முடிவில் எருது இறந்து போகும். எருது சொர்க்கத்திற்குப் போகும் என எண்ணி விழாவை நடத்துவோர் மகிழ்ச்சி அடைவார்கள்.

இப்படி எருதைக் கொல்வதற்கு மிருகவதை சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததையொட்டி இப்போது இந்தப் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

***

*அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அல்டமெண்ட் கணவாய் பகுதியில் நூற்றுக்கணக்கான காற் றாலைகள் உள்ளன. இதன் மூலம் உற்பத்தியாகும் மின் சாரத்தின் மூலம் கலிபோர்னியா மாகாணத்தின் தேவையில் 10 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு விடுகிறது.

இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் உலக காற்று சக்தி மின்சாரத்தில் 85 சதவீதத்தை கலிபோர்னியா மாகாணம் பயன்படுத்திக் கொள்கிறது.

***

*மிக வேகமாக ஓடக் கூடிய குதிரையையும் மிஞ்சி சாதனை படைத்து உலக சாதனை புத்தகமான கின்னசிலும் இடம் பிடித்திருக்கிறார், ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த ஐப்பால் லூம் என்னும் ஓட்டப் பந்தய வீரர்.

குதிரையுடனான 10 ஆயிரம் மீட்டர் தூரப் போட்டியில் அவர் கலந்து கொண்டார். இந்த பந்தயத்தில் அவர் குதிரையை விட 20 செகண்டுகள் முன்னதாக ஓடி வந்து வெற்றிக் கம்பத்தைத் தொட்டு வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தினார்.

***

*ஒலிம்பிக்கில் ஒரே விளையாட்டில் தொடர்ந்து நான்கு தடவை தனி ஒருவரே தங்கப்பதக்கத்தை வென்றவர் என்ற பெருமை ஒரே ஒரு வருக்கு மட்டுமே உண்டு. அவர் அமெரிக்காவின் ஆல்பிரட் அடால்ப் ஆர்ட்டர். 1956-ம் ஆண்டு முதல் 1968- ம் ஆண்டு வரை நடந்த நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் வட்டு எறியும் போட்டியில் தொடர்ந்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

*****

"ஹான்ஃபில்" என்பது அமேசான் காடுகளில் காணப்படும் ஒருவகை சிலந்தி. இவற்றின் முக்கிய உணவு என்ன

தெரியுமா? மீன்கள்தான். இந்த சிலந்திகள், மீன்களைப் பிடித்துத் தின்பதற்காகக் குளம், குட்டைகளில் மூழ்கும். நீரிலும் வாழக்கூடிய தன்மை கொண்டிருந்தாலும் இவ்வகை சிலந்திகள் இரைக்காக மட்டுமே தண்ணீருக்குள் செல்லும். எப்படி தெரியுமா?

கனமான பொருள் ஒன்றைக் கவ்விக் கொண்டு நீரில் மூழ்கும். தண்ணீருக்குள் இரை தின்றதும், கவ்விய கனப்பொருளை விட்டு விடும். உடல் கனம் குறைவதால் தானாக நீரின் மேற்பரப்புக்கு வந்து சேர்ந்து விடுமாம்.

****

*வெனிஸ் நகரில் கோமாளி கல்லூரி அமைந்துள்ளது. கோமாளிகளுக்குப் பயிற்சியளிக்கும் இக்கல்லூரியில் 50 மாணவர்களுக்கு மட்டுமே இடமுண்டு. எட்டு வாரப் பயிற்சியில் கழைக் கூத்தாடுதல், பொய்க்கால் கட்டி ஆடுதல் போன்ற பல வித்தைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

* எறும்புகள் பூமிக்கு அடியில் கூடுகள் கட்டிக் கொள்கின்றன. சில வகை எறும்புகள் மட்டும் உயர்ந்த மரங்களில் கூடுகளை உருவாக்கிக் கொள்கின்றன.

* எறும்பு, பூச்சி வகைகளில் ஹைமனாப்டிரா என்ற வகையைச் சேர்ந்தது.

* ஹனி ஆன்ட்ஸ் என்ற அழைக்கப்படும் தேன் எறும்புகள் தங்கள் வயிற்றிலேயே தேன் போன்ற பொருள்களைச் சேகரித்து வைக்கின்றன. இதனால், இவற்றின் வயிறு பருத்து உருண்டு தேன் குடமாகக் காட்சியளிக்கும். தேன் கிடைக்காத காலங்களில் வாய் வழியே தேனைத் துப்பி மற்ற எறும்புகளுக்குக் கொடுக்கின்றன.

* எறும்புகளுக்கு பார்வை தெரியாது. தன்னுடைய உணர்வுத் திறனால் மோப்பம் பிடித்து வழியை அறிந்துக் கொள்கின்றன.

*

Posted

* பன்னீர்ப் பூ இரவில் மலரும்.

* கார்த்திகைப் பூ என்றழைக்கப்படுவது காந்தள் மலர்.

* இரு குரங்கின் கை எனப்படுவது முசுமுசுக்கை.

* உலகின் மிகப் பழைய மரம் தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம். இதன் வயது 4,130 ஆண்டுகள்.

* உலகின் மிகப் பெரிய மரம் கலிபோர்னியாவில் ùஸகோயா பூங்காவில் உள்ள ஷெர்மன் மரம்.

*உலகிலேயே மிகப் பெரிய பள்ளிக் கூடம் நம் இந்தியாவில் தான் இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்ள சிட்டி மாண்டிசேரி பள்ளிதான் உலகிலேயே மிகப் பெரிய பள்ளி என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில், சுமார் 22,612 மாணவர்கள் பயில்கின்றனர்.

*ஒட்டகத்துக்கு மூன்று இரைப்பைகள் உள்ளன.

* பெயர்கள் பற்றிய படிப்புக்கு ஓனோமாஸ்டிக் என்று பெயர்.

* இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ராஜாஜி.

* தங்கம் அதிகளவில் வெட்டி எடுக்கப்படும் நாடு தென்னாப்ரிக்கா.

* உலகின் மிகப் பெரிய பாலைவனம் சகாரா பாலைவனம். 90 லட்சம் சதுர பரப்பளவு கொண்டது இந்தப் பாலைவனம்.

* சாதாரணமாக ஒரு பல்ப்பின் ஆயுள்காலம் 3,000 மணி நேரம் ஆகும்.

* சிலந்திப் பூச்சிகளில் குண்டு வீசும் வண்டு என்ற ஒரு வகை வண்டு உண்டு. இவ்வண்டுகளின் வயிற்று அடிப்பாகத்தில் சிறிய சுரப்பி உண்டு. இந்தச் சுரப்பியில் உள்ள ஒரு வகை திரவமும் வெடிக்கம் தன்மை கொண்டது. அதனால் இதற்கு இப்பெயர் வந்தது.

* டென்னிஸ் மட்டைகள் மகாகனி, சிக்மோர், பீச் ஆகிய மூன்றுவித மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

* நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கணினி மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா ஆகும்.

* ஆஸ்ட்ரிச் என்னும் பறவை கல்லை தின்னும் தன்மை உடையது.

* உராங் உடான் என்ற குரங்கினத்தை "கானகத்தில் கிழவன்' என்று மலேசிய மக்கள் அழைக்கின்றனர்.

* ஒரே கவிஞர் இரு நாடுகளுக்குத் தேசிய கீதம் எழுதிய பெருமையைப் பெற்றவர் ரவீந்தரநாத் தாகூர். இவர் இந்தியா மற்றும் வங்கதேசத் தேசிய கீதங்களை எழுதியுள்ளார்.

* பத்திரிகைகளில் மலர், இதழ் என்று போடுகிறார்கள் எதற்கு தெரியுமா? மலர் என்றால் ஆண்டு என்றும், இதழ் என்றால் அந்த ஆண்டில் அது எத்தனையாவது இதழ் என்ற தகவலையும் தரும்.

* ரோஜா மலரின் வாசனை இதயத்துக்கு பலம் சேர்க்கும்.

* பாரி, ஆய் அண்டிரான், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடையேழு வள்ளல்கள் ஆவர்.

* தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாமல் இருப்பது போலவே, திருக்கோட்டியூர் மாதவன் கோயில் கோபுரத்தின் நிழலும் கீழே விழுவதில்லை.

* கவிச் சக்கரவர்த்தி கம்பரின் சமாதி இராமநாதபுரத்திலுள்ள நாட்டரசன் கோட்டையில் உள்ளது.

* சீதையின் தந்தை பெயர் ஜனகர். தாயின் பெயர் சுநயனீ.

* துப்பாக்கியை ஏமப்பூட்டு, துமிக்கி என்றும், பீரங்கியை குண்டு குழாய் என்றும், ரிவால்வரை சுழலி என்றும் அழகிய தமிழ்ப் பெயர்கள் சூட்டி அழைத்தவர் தேவநேயப் பாவாணர்.

Posted

monkey-cup-pitcher-plant.jpg

மாமிசம் உண்ணும் தாவரம் இந்த பிட்சர் தாவரம். சிறு பூச்சிகளைப் பிடித்து தின்னும். இந்தத் தாவரம் ஆசியாவில் உள்ளது. பிட்சர் தாவரத்தின் இலைகள் ஜாடி போல் வளைந்து காணப்படும். இது மிகவும் இனிப்பான சாறு ஒன்றை சுரக்கும். இந்தச் சுவை மிகுந்த சாறை குடிக்கச் செல்லும் பூச்சிகள், இந்த ஜாடிக்குள் மாட்டிக் கொள்ளும். ஜாடியின் அடியில் ஜீரணம் செய்யும் அமிலங்கள் சுரக்கும். அங்கே அப்படியே இந்தப் பூவினால் விழுங்கப்பட்டு விடும் பூச்சிகள். அய்யோ பாவம்!

Posted

வானவில் தோன்றிய சில மணிநேரத்தில் மறைந்து விடுகிறதே ஏன்?

ஆகாயத்தில் நீராவி ரூபத்தில் நீர்த்துளிகள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டுள்ளன. அதன் மீது எதிர் திசையிலிருந்து சூரிய ஒளி படுகிறது. இதனால் நிறப்பிரிகை அடையும் ஒளி, நம் கண்களில் படும் போது வானவில் தோன்றும். சூரியனின் ஒளிக்கோணம் மாறினாலோ, அல்லது நீர்த்திவளைகள் ஆகாயத்திலிருந்து நீராவியாக மறைந்துவிட்டாலோ வானவில் மறைந்துவிடும். சூரியன், நீர்த்திவளைகள், நமது கண் மூன்றும் சரியான கோணத்திலிருக்கும் போது மட்டுமே வானவில் தெரியும்.

Posted

அணுகுண்டு

பூசணிக்காயை விடப் பெரிய சைஸில் இரும்பினால் ஆன உருண்டை இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த இரும்புக் குண்டு தன் பாட்டுக்கு ஒரு மூலையில் கிடக்கும். ஆனால் அதுவே புளூட்டோனியம் என்ற உலோகத்தால் ஆன உருண்டையாக இருந்தால் அதுதான் அணுகுண்டு.

ஆனால் ஒரு முக்கிய விஷயம். இந்தியா மற்றும் வல்லரசு நாடுகளைத் தவிர வேறு யாராலும் புளூட்டோனியத்தை உற்பத்தி செய்ய முடியாது. தவிர, புளூட்டோனியத்தை அப்படி உருண்டையாக உருட்டி வைத்த அடுத்த கணமே அது வெடித்து விடும். ஆகவே அதை அந்த வடிவில் வைக்க முற்படமாட்டார்கள்.

யுரேனியம் என்ற உலோகம் உள்ளது. யுரேனியக் கட்டி ஒன்றில் யுரேனியம்-238 அணுக்கள் என்று, யுரேனியம்-235 அணுக்கள் என்றும் இரண்டு வகை அணுக்கள் உள்ளன. யுரேனியத்திலிருந்து மிகச் சிரமமான முறையில் யுரேனியம்-235 அணுக்களை மட்டும் தனியே திரட்டி அதைக் கொண்டு பெரிய உருண்டை செய்தால் அதுவும் அணுகுண்டுதான்.

யுரேனியம்-235 ஆகட்டும், புளூட்டோனியம் ஆகட்டும், அவற்றை குறிப்பிட்ட சைஸுக்கு உருண்டையாகத் தயாரித்தால் அணுகுண்டாக வெடிப்பதற்குக் காரணம் உண்டு. இந்த இரண்டுமே கதிரியக்கத்தை வெளிப்படுத்துகிற பொருட்கள், தவிர, இவற்றின் அணுக்களை நோக்கி நியூட்ரானை செலுத்தினால் இவை பிளவுபடும்.

உதாரணமாக புளூட்டோனிய அணு ஒன்றின் மீது நியூட்ரான் மோதினால் அந்த அணு பிளவுபடும் போது அந்த அணுவிலிருந்து உபரியாக நியூட்ரான்கள் வெளிப்படும். அந்த நியூட்ரான்கள் அருகில் உள்ள இதர நியூட்ரான்களைத் தாக்கும். அப்போது மேலும் நியூட்ரான்கள் வெளிப்பட்டு அவையும் பிற புளூட்டோனிய அணுக்களைத் தாக்கும். இதுவே தொடர் அணுப்பிளப்பு ஆகும். இப்படி ஒரு கணத்துக்குள் கோடானு கோடி புளூட்டோனிய அணுக்கள் தொடர்ந்து பிளவுபடும். இதன் விளைவாக பிரும்மாண்டமான சக்தி வெளிப்படும். இது தான் அணுகுண்டு வெடிப்பு.

அணுகுண்டு ஒன்று வெடிக்கும் போது பயங்கரமான அளவுக்கு வெப்பம் உண்டாகும். கடும் அதிர்ச்சி அலைகள் தோன்றும். உடலைப் பாதிக்கிற ஆபத்தான கதிர்வீச்சு வெளிப்படும்.

யுரேனியம்-233 என்ற அணுக்களைத் தனியே பிரித்தும் அணுகுண்டு செய்ய முடியும். ஆனால் இவ்வித அணுகுண்டுகளை சேமித்து வைப்பதில் பிரச்சினை உள்ளது.

யுரேனியம், புளூட்டோனியம் ஆகிய இரு உலோகங்களையும் மிக சுத்தமான அளவுக்குத் தயாரித்து குறிப்பிட்ட அளவுள்ள உருண்டையாக ஆக்கினால் அவை வெடித்து விடும் என்பதால் அவற்றை சிறு சிறு துண்டுகளாகத் தயாரிக்கிறார்கள். அணுகுண்டு ஒன்றினுள் இந்த சிறு துண்டுகள் பொருத்தப்பட்டு அணுகுண்டாக வெடிக்க வேண்டிய கட்டத்தில் இந்த துண்டுகள் ஒன்றுசேர்ந்து முழு உருண்டையாகும்படி செய்கிறார்கள். அணுகுண்டு ஒன்றினுள் இதற்கான ஏற்பாடு இருக்கும். முழு உருண்டையாக வடிவம் பெறும்படி செய்வதற்கான சாதனம் அணுகுண்டுக்குள் பொருத்தப்படாதவரையில் அணுகுண்டினால் ஆபத்து இல்லை.

கடந்த காலத்தில் பல தடவை அமெரிக்க ராணுவ விமானங்களிலிருந்து தற்செயலாக அணுகுண்டுகள் கீழே கடலில் விழுந்த போது அவை வெடிக்காததற்கு இதுவே காரணம்.

வீடுகளில் பயன்படுத்தப்படுகிற காஸ் சிலிண்டர் தீப்பற்றினால் ஒரேயடியாக வெடிக்கிறது. அப்படி இன்றி அடுப்புக்கு சமையல் காஸ் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் சீராக வெளிவரும்போது பிரச்சினை கிடையாது. அது போலவே அணுமின்சார நிலையங்களில் இவ்விதம் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் தொடர் அணுப்பிளப்பு நிகழ்வதால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிகிறது. அந்த வகையில் அணுசக்தி ஆக்கப் பணிகளுக்கும் பயனாகிறது.

பொதுவில் - குறிப்பாக இந்தியாவில் - அணுமின்சார நிலையங்களில் சாதாரண யுரேனியம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வித அணுமின் நிலையங்களில் ஓரளவு எரிந்து தீர்ந்த யுரேனியத்திலிருந்து விசேஷ முறைகள் மூலம் அணுகுண்டு தயாரிப்புக்கான புளூட்டோனியத்தைப் பெற இயலும்.

Posted

*திமிங்கலம், சீல், வால்ரஸ்,கடல்யானை, டால்பின், டூகாங், போர்ப் பாய்ஸ், கடல் சிங்கம் ஆகிய கடல் வாழ்பிராணிகளுக்கிடையே ஒரு மிகப் பெரிய ஒற்றுமை இருக்கிறது. அது என்ன தெரி யுமா?... இவையெல்லாமே, கடலில் வாழும் பாலூட்டி இனங்கள் ஆகும்.

*மீன்கள் ஊமை, ஒலி எழுப்பாது என்பது நியதி. ஆனால் ஒரு வகை கடல் மீன்கள் மணி யோசையைப் போல் ஒலியை எழுப்புகின்றன. அதன் பெயர் அமெரிக்கன் பபின்ஸ்.

*கண்பார்வை கிடையாது, ஆகவே பார்வை இல்லை. மூக்கில்லை, நுகர முடியாது. கால்கள் இல்லை நடக்க முடியாது. ஆனாலும் இது ஒரு கடல் வாழ்பிராணி. அதன் பெயர் கடல் பஞ்சு மீன்.

*உருவத்தில் ஒரே மாதிரியாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் தவளைக்கும் தேரைக்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறுவார்கள். சரி, இந்த இரண்டில் எது தேரை, எது தவளை என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? இது ரொம்ப ரொம்ப சுலபம். தவளையின் தோல் மெல்லியதாகவும் ஈரப்பதம் மிகுந்தும் காணப்படும். தேரைக்கு உலர்ந்த தடித்த தோலாக இருக்கும்.

*கிரிக்கெட் விளையாட்டில் ஒரு ஓவரில் தொடர்ந்து மூன்று பந்துகளை வீசி மூன்று ஆட்டக்காரர்களை வீழ்த்தும் பந்து வீச்சாளர்களுக்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட தொப்பியை பரிசளித்தனர். அந்தத் தொப்பிகளை பெறுவதற்கு பந்து வீச்சாளர்கள் தந்திரமாக பந்து வீசுவதைத்தான் ஹாட்ரிக் என்று குறிப்பிட்டார்கள். அதுவே இப்போதும் தொடர்கிறது.

*வால் நட்சத்திரங்கள் உண்மையில் நட்சத்திரங்கள் அல்ல. உறைந்த நீர், கரியமில வாயு, மீத்தேன், சிலி கேட்டுகள், தூசி முதலியவை அடங்கிய கோள வடிவ நடுப்பகுதி இவற்றில் உண்டு. ஒவ்வொரு முறை சூரியனை நெருங்கும் பொழுதும் அது ஆவியாகி வால் போலத் தெரியும்.

* எவ்வளவு பெரிய காகிதம் என்றாலும் அதை ஏழு மடிப்பிற்கு மேல் மடிக்க இயலாது.

* கடலின் மேற்பரப்பில் மழை பெய்தாலும் அங்கே இடி விழும் சப்தத்தைக் கேட்க இயலாது.

* ஆப்பிரிக்க யானைகளின் தந்தம் அதிக பட்சமாக 100 கிலோ எடை வரை இருக்கும்.

* தரையில் முதுகுப்புறம் முழுவதையும் கிடத்தி தூங்கும் ஒரே உயிரினம் மனிதன் மட்டுமே.

* நல்ல தேன் புளிப்புச் சுவையுடையது. அதை நாய் நக்காது. அந்தத் தேன் நீரில் கரையாது.

Posted

*சுனில் ரான்டே என்பவர் பம்பாயில் உள்ள "நேச்சுரல் கிஸ்ட்ரி சொஸைட்டி' என்ற இடத்தில் பாம்பு பிடிப்பவராக வேலை செய்கிறார். இவர் தன்னுடைய ஆறாவது வயதில் ஒரு பாம்பை பிடித்தார். அன்றிலிருந்து இன்று வரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ளார். இவர் பிடித்த பாம்புகளிலேயே மிகவும் பெரியது 15 அடி நீளமுள்ள பைத்தான் என்ற மலைப் பாம்பு.

*டில்லியிலுள்ள முனிசிபல் கார்ப்பரேஷனில் எலிகளுக்கு என்றே ஒரு தனி பிரிவு உள்ளது. அதில் 97 பேர் வேலை செய்கின்றனர். அதில் 74 பேர் எலி பிடிப்பவர்கள்; மற்றவர்கள் அவர்களை சூப்பர்வைஸர் செய்யும் அதிகாரிகள் ஆவர். இந்த டிபார்ட்மென்ட்டில் எலிப்பிடிப்பதற்கான கருவிகள் எதுவுமே இல்லை என்பதுதான் விசேஷமே!

*சுவீடன் நாட்டை சேர்ந்த 19 வயது பெண் ஒரு ரெஸ்டாரென்ட் ஒன்றில் வெயிட்ரஸ் ஆகப் பணி புரிகிறார். ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி இவருக்கு கொடுத்த டிப்ஸ் தொகையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 30 ஆயிரம் ரூபாயை கொடுத்திருந்தார் அந்த பணக்காரக் கிழவி.

*ஒன்பது வயது சிறுவன் அருப்மன்னா வெஸ்ட் பெங்காலைச் சேர்ந்தவன். இவன் 2004 செப்டம்பர் மாதம் தூங்க ஆரம்பித்தான். அன்று முதல் இன்று வரை தூங்கிக் கொண்டே இருக்கிறான். இவனுக்கு சாப்பாடு கொடுப்பதற்கும், பாத்ரூம் அழைத்துசெல்வதற்கு மட்டுமே பெற்றோர் இவனை எழுப்புவர். மற்ற நேரங்களில் எல்லாம் இவனை எழுப்பவே முடியாது. பல மருத்துவர்களிடம் காட்டியும் எந்த மருத்துவராலும் இவனது நிலைக்கு காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை

*மரங்கொத்திப்பறவையின் நாக்கு மிகவும் நீளமாக இருக்கும். அது ஏன் தெரியுமா?

மரங்கொத்தி தனது அலகு மூலம் மரத்தை கொத்தும் போது அதன் மூளையில் அதிர்வு ஏற்படாமல் இருக்க இயற்கையாகவே அதன் நாக்கு நீளமாக படைக்கப் பட்டுள்ளது. மரங்கொத்தி யின் நீளமான நாக்கு அதன் மூளையைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போல இருக்கும். இதனால் அதிர்வில் இருந்து மூளை பாதுகாக்கப்படுகிறது.

*பழங்கால கிரேக்க நாட்டில் பெண்கள் வயதை திருமணத்துக்குப்பிறகு தான் ஒன்று, இரண்டு , மூன்று... என எண்ணத் தொடங்குவார்கள்.

*மின்சார பல்பை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் மிகவும் பயமாம்.

*வயது ஏறஏற சிலருக்கு அதுவே பயமாக இருக்கும். நமக்கு வயது அதிகமாகிக் கொண்டு போகிறதே என்று பயப்படுவார்கள். இது ஒரு விதமான நோயாகும். இந்த நோய்க்கு ஜெராஸ்கோபோபியா என்று பெயராகும்.

*வவ்வால்கள் தங்களது குகையில் இருந்து வெளியேறும் போது இடது புறமாகத்தான் பறந்து செல்லும்.

*பெண் பெங்குயின் போடும் முட்டைகளை ஆண் இனம் தான் அடைகாக்கும்.

Posted

கின்னஸ் சாதனை!

==================

கின்னஸ் புத்தகத்தில் என்னென்ன சாதனைகள் இடம் பெற்றிருக்கும் என்பதை இப்பகுதியின் மூலமாக நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம். இதை படித்து விட்டு நீங்களும் சாதனைகள் செய்ய முயற்சி செய்யுங்களேன்.

மிக மெல்லிதான மனித தலை முடியிலேயே ஓவியம் வரைவது, முடியைப் பல பாகங்களாகப் பிரிப்பது போன்ற சாதனைகளை இதுவரை உலகில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் செய்துள்ளனர்.

ஆனால், ரஷ்யாவில் உக்ரைனைச் சேர்ந்த மைக்கேல் மகல்யுக் என்பவர் எல்லாரையும் கீழே தள்ளிவிட்டு முன் நிற்கிறார். தலைமுடி ஒன்றைக் குடைந்து குகைப் பாதையை உருவாக்கியுள்ளார். பின்னர் அந்தக் குகைக்குள் செல்லக்கூடிய, உலகிலேயே மிகச் சிறிய ரயில் ஒன்றையும் உருவாக்கி உள்ளார். அந்த ரயிலில் 15 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மைக்கேலின் இந்த இரண்டு சாதனைகளையும் மைக்ரோ ஸ்கோப் மூலம்தான் பார்க்க முடியும்.

_________________

ஸ்கிப்பிங்க் செய்து கொண்டே மாரத்தான் ஓட்டம் செய்து சாதனை படைக்கப்ட்டிருக்கிறது. இந்த சாதனைக்கு எடுத்துகொண்ட நேரம் 4மணி நேரங்களும் 49 நிமிடங்கள் 39 வினாடிகள்.

மாரத்தான் ஓட்டதின் போது 3 பொருடகளை உபயோகப்படுத்தியபடி ஓடி சாதனை புரிந்திருக்கிறார்கள். அதற்காக எடுத்துகொண்ட நேரம் 3மணி நேரம் 7நிமிடங்களும் 5 வினாடிகளும்

ஆண்களுக்கான் குழந்தையை மூன்று சக்கர வாகனத்தில் வைத்து தள்ளியபடி மாரத்தான் ஓட்டத்தை 2மணி 49நிமிடங்களும் 43வினாடிகளில் கடந்து சாதனை புரிந்து சாதனை படைக்கப்ட்டிருக்கிறது.

_________________

Posted

முழுவதுமாக இடமாற்றம் செய்யப்பட்ட கட்டிடம்

heaviestBilding.jpg

2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உள்ள ஃபு காங்க் கட்டிடம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு முழுவதுமாக சீர்குலையாமல் மாற்றம் செய்யப்பட்டது. அந்த கட்டிடம் தான் நீங்கள் படத்தில் பார்ப்பது. இந்த கட்டிடத்தின் எடை 15,140 மெட்ரிக் டன்கள். சுமார் 34 மீட்டர் உயரம் உடையது இந்த கட்டிடம். கட்டிடம் சரியாக 35.62 மீட்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது. இதை செய்து முடிக்க 11 நாட்கள் தேவைப்பட்டது.

மிகவும் உயரமான இடத்தில் இருக்கும் நூலகம்

GuinnesLibrary99005.jpg

சீனாவில் இருக்கும் JW மாரியாட் ஹோட்டலில் 60 வது மாடியில் தான் சாதனை படைத்த இந்த நூலகம் இருக்கிறது. தரை மட்டத்தில் இருந்து 757 அடி 6 அங்குலம் உயரத்தில் இது அமைந்துள்ளது. சீன மற்றும் ஆங்கில புத்தகங்கள் இந்த நூலகத்தில் கிடைக்கும். இந்த நூலகம் 614 சதுர அடி பரப்பளவு கொண்டது. நடந்தே செல்லவேண்டும் என்றால் நீங்கள் 1435 படிகள் ஏற வேண்டும். தயாரா?

மிகப்பெரிய திரைப்பட நகரம்

GuinnesFilmCity100721.jpg

ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி திரைப்பட நகரம் தான் உலகிலேயே மிகபெரிய திரைப்படநகரமாகும். இதன் பரப்பளவு 1666 ஏக்கர்.

அதிக வருடங்கள் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும

Posted

*சுனில் ரான்டே என்பவர் பம்பாயில் உள்ள "நேச்சுரல் கிஸ்ட்ரி சொஸைட்டி' என்ற இடத்தில் பாம்பு பிடிப்பவராக வேலை செய்கிறார். இவர் தன்னுடைய ஆறாவது வயதில் ஒரு பாம்பை பிடித்தார். அன்றிலிருந்து இன்று வரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ளார். இவர் பிடித்த பாம்புகளிலேயே மிகவும் பெரியது 15 அடி நீளமுள்ள பைத்தான் என்ற மலைப் பாம்பு.

*டில்லியிலுள்ள முனிசிபல் கார்ப்பரேஷனில் எலிகளுக்கு என்றே ஒரு தனி பிரிவு உள்ளது. அதில் 97 பேர் வேலை செய்கின்றனர். அதில் 74 பேர் எலி பிடிப்பவர்கள்; மற்றவர்கள் அவர்களை சூப்பர்வைஸர் செய்யும் அதிகாரிகள் ஆவர். இந்த டிபார்ட்மென்ட்டில் எலிப்பிடிப்பதற்கான கருவிகள் எதுவுமே இல்லை என்பதுதான் விசேஷமே!

*சுவீடன் நாட்டை சேர்ந்த 19 வயது பெண் ஒரு ரெஸ்டாரென்ட் ஒன்றில் வெயிட்ரஸ் ஆகப் பணி புரிகிறார். ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி இவருக்கு கொடுத்த டிப்ஸ் தொகையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 30 ஆயிரம் ரூபாயை கொடுத்திருந்தார் அந்த பணக்காரக் கிழவி.

*ஒன்பது வயது சிறுவன் அருப்மன்னா வெஸ்ட் பெங்காலைச் சேர்ந்தவன். இவன் 2004 செப்டம்பர் மாதம் தூங்க ஆரம்பித்தான். அன்று முதல் இன்று வரை தூங்கிக் கொண்டே இருக்கிறான். இவனுக்கு சாப்பாடு கொடுப்பதற்கும், பாத்ரூம் அழைத்துசெல்வதற்கு மட்டுமே பெற்றோர் இவனை எழுப்புவர். மற்ற நேரங்களில் எல்லாம் இவனை எழுப்பவே முடியாது. பல மருத்துவர்களிடம் காட்டியும் எந்த மருத்துவராலும் இவனது நிலைக்கு காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை.

* பாம்பு, பல்லி, ஆமை, முதலை போன்ற ஊர்வனவற்றில் ஏறத்தாழ ஐந்தாயிரம் வகைகள் உள்ளன.

* உலகில் ஏறத்தாழ 500 எரிமலைகள் உள்ளன.

* ஒட்டகம் ஒரே நேரத்தில் 90 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.

* ஏப்ரல் என்ற பெயர் "ஏப்பிரிரே' என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. "எல்லாம் இனிதே நிகழும்' என்பது இதன் அர்த்தம்.

* பாரதியார் "பாரதி' என்ற பட்டம் பெற்ற போது அவருக்கு வயது 11.

* ஆங்கிலப் பாடல்கள் எழுதத் துவங்கிய போது சரோஜினி நாயுடுவுக்கு வயது 13.

* அரசியலில் முழு மூச்சுடன் ஈடுபடத் துவங்கிய போது காமராஜருக்கு வயது 17.

* பல்லிகளில் 2,500 வகைகள் உண்டு.

* பாம்பு போல பல்லியும் தனது மேல் தோலை உரிக்கும்.

* பல்லிகள் மாதக் கணக்கில் உணவின்றி உயிர் வாழும் இயல்பு கொண்டது.

* வாழும் இடத்துக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை பல்லிகளுக்கு உண்டு.

* வீட்டுப் பல்லிகள் இரண்டு ஆண்டுகளே உயிர் வாழும்.

*பத்திரிகைச் செய்தியாளர்களை நிருபர்கள் என்கிறோம். ஏன் தெரியுமா? முன்பெல்லாம் செய்தியாளர்கள் கடிதங்கள் மூலமே பத்திரிகைகளுக்குச் செய்திகளை அனுப்பி வந்தனர். வடமொழியில் "நிருபம்' என்றால் கடிதம் என்று பொருள். நிருபங்கள் எழுதி வந்ததால் செய்தியாளர்களும் நிருபர்கள் என அழைக்கப்பட்டனர்.

* வெட்டுக் கிளிக்கு கால்களில் தான் காதுகள் உள்ளன.

* நியூசிலாந்தில் காகமே கிடையாது.

* காகத்திற்கு காதுகள் கிடையாது. கண்ணின் பின்புறமுள்ள துளையின் வழியே கேட்கிறது.

* சவுதி அரேபியா நாட்டில் நதிகளே கிடையாது.

* சீனாவின் புனித விலங்காக வணங்கப்படும் விலங்கு பன்றி.

* உலகிலேயே அதிகமாக முட்டையிடும் உயிரினம் கரையான் தான்.

* எலி, கங்காரு ஆகியவை மிக குறைந்த அளவே தண்ணீர் அருந்துகின்றன.

* ஆஸ்திரேலியாவில் இருக்கும் கங்காருவின் உயரம் 6 அடி. உடலில் பையை உடைய ஒரே விலங்கினம் கங்காரு. கங்காருவின் வால் 4 அடிக்கு மேல் நீளமானது. ஒரே தாவலில் இது 25 முதல் 30 அடிவரை தாண்டி விடும். இதன் குட்டிகள் பிறக்கும் போது கருஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். கங்காருகள் பொதுவாக பயந்த சுபாவம் கொண்டவை. கங்காருகளின் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.

Posted

ஜாம்பிய நாட்டுப் பெண்களின் திருமணத்தின் போது அவர்களுக்கு யானைத் தந்தத்திலான வளையல்களை அணிவிப்பது வழக்கம். இதே போல் தந்தக் காலணிகளும் அணிவார்கள்.

இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் திருமணத் திற்குப் பிறகு எவ்வளவுதான் பண நெருக்கடி என்றாலும் இவர்கள் தந்த வளையல் களையோ, காதணிகளையோ விற்பதில்லை. ஜாம்பியர்கள் அணில்களைக் கொல்வதைப் பாவமாக கருகிறார்கள்.

***

*முதன் முதலில் சீனர்கள்தான் மரப்படுக்கைகளைத் தயாரித்து பயன்படுத்தினார்கள். மரத்தினால் தலையணையையும் செய்தார்கள். ஒவ்வொருவரின் தலைக்கு ஏற்ப அளவெடுத்தும் அதில் பள்ளம் தோண்டப்படும்.

படுக்கையில் படுத்ததும் ஒருவரது தலை அந்தப் பள்ளத்திற்குள் சரியாகச் சென்று பொருந்திவிடும். அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ திரும்ப முடியாது. மல்லாந்த படியே தலையை அசைக்காமல்தான் தூங்க வேண்டும். இன்றும் கூட துறவிகளிடம் மரத் தலையணையில் படுத்து உறங்கும் பழக்கம் இருக்கிறது.

***

*தவளை கத்தினால் மழை வரும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கை நமது நாட்டில் மட்டுமின்றி சீனாவிலும் இருக்கிறது. ஆனால் சீனர்கள் அதை விஞ்ஞானப் பூர்வமாகவே நிரூபித்ததோடு தவளைச் சத்தத்தை வைத்து துல்லியமாக மழை வரும் நாள் மற்றும் நேரத்தைக் கணிக்கிறார்கள். தவளை எழுப்பும் ஒவ்வொரு விதமான சத்தத்தை வைத்தே மழைபெய்யவிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.

அதன்படி விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் பயிர் செய்யவும் தொடங்கி விடுகிறார்கள். இந்தப் பழக்கம் சீனாவின் கிழக்கு மாகாணப்பகுதிகளில் அதிக அளவில் இருக்கிறது.

***

*ப்ராங்க் ஏம்ஸ் என்பவர் நியூயார்க்கை சேர்ந்தவர். இவர் வயது 43. இவரது புருவ முடி தான் உலகிலேயே மிகவும் நீளமானது. இதன் நீளம் 9.6 செ.மீ., இது கின்னஸ் ரிக்கார்டில் இடம் பெற்றுள்ளது.

*விட்டாலி என்பவர் ரஷ்யாவை சேர்ந்தவர். இவர் புது வகையான ஒரு நோயால் 15 வருடங்களாக துன்பப்படுகிறார். இவரால் 5டிகிரி சி வெப்பத்திற்கு மேல் தாங்க முடியாது. இவரே ராட்சஷ வடிவ பிரிஜ் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் தான் வசிக்கிறார். இவர் இரவு நேரத்தில் மட்டுமே வெளியே செல்வார்.

*சீனாவிலுள்ள பீஜிங் என்ற நகரத்தில் உள்ளது மேக் டோனால்ட் என்ற ரெஸ்டாரென்ட். இது தான் உலகிலேயே மிகப் பெரியது. இது 28 ஆயிரம் சதுர அடி பரப்பில் 700 இருக்கைகள் கொண்டது. இதில் 29 கேஷ் கவுண்டர்கள் உள்ளன. ஏப்ரல் 23, 1992ம் ஆண்டு திறக்கப்பட்டது

*மைக் பேஷன் என்பவர் அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் என்ற மாநிலத்தின் மேயராக பொறுப்பேற்றுள்ளார். இவர் தான் மிகவும் இளம் வயதிலேயே மேயராகி உள்ளவர். தனது 18வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு 2005ம் ஆண்டு நடைபெற்ற எலெக்ஷனில், நின்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட 51வயது டக்லஸ் என்பவரை இரண்டு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து வெற்றி பெற்றுவிட்டார். இந்த இளம் மேயர் தன்னுடைய படிப்பை தொடர முடிவு செய்துள்ளார்.

*கவுதம் பட்டேல் என்பவர் உலகிலுள்ள உயர்ந்த மலைகளான ஏழு மலைகளில் ஐந்தில் ஏறி சாதனை படைத்துள்ள முதல் இந்தியர் ஆவார். இவர் 1998ம் ஆண்டு ஆப்பிரிக்காவிலுள்ள கிளிமஞ்ஜாரோ என்ற மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

*ஜெர்மனியிலுள்ள ஹேம்பர்க் என்ற இடத்தில் உள்ள குளம் ஒன்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தவளைகள் வயிறு வெடித்து இறந்து போயிருந்தன. இவ்வகை தவளைகளின் உடம்பு திடீரென்று இதன் உருவத்தை விட 3 அல்லது 4 மடங்காக பெரிதாகி வயிறு வெடித்து இறந்துவிடுகிறது. விஞ்ஞானிகள் ஏதோ ஒரு வைரஸ் அல்லது பங்கஸ்தான் இந்த தவளைகளின் இறப்பிற்கு காரணம் என்று கருதுகின்றனர்.

*ஸ்காட் ரிட்டர் என்பவர் அமெரிக்காவில் உள்ள ஓஹியோ பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார். இவர் உலகிலேயே மிகப் பெரிய போட்டியான மியூஸிக்கல் சேர் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் எத்தனை பேர்கள் கலந்து கொண்டனர் தெரியுமா? 4,514 பேர். இதில் இவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

Posted

*பனானா எண்ணை என்பது எதிலிருந்து எடுக்கப்படுகிறது? - கச்சா எண்ணையி லிருந்து.

*வெள்ளரிக்காயில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது? - 96 சதவீதம்.

*உலகம் முழுவதும் பரவலாக சாகுபடி செய்யப்படும் பழமையான பருப்பு ரகம்? - பாதாம் பருப்பு

*ஆரஞ்சு, தக்காளி, தர்பீஸ், எலுமிச்சம் பழம் இவற்றுக்கு உள்ள பொதுவான ஒற்றுமை? - இவை பெர்ரி பழ வகையைச் சேர்ந்தவை

*அமெரிக்கர்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடும் பழம்? - வாழைப்பழம்

*முட்டைச் செடி என்று எந்தச் செடி அழைக்கப்படுகிறது? - கத்தரிக்காய்

*ஓக் மரம் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பழங்கள் தரும்?- 50 வருடங்கள்.

*ரெட்வுட் என அழைக்கப்படும் மரத்தின் இன்னொரு பெயர்? - ராட்சத செகுவாயா

*அண்டார்டிகா கண்டம் தவிர அத்தனை கண்டங்களிலும் சாகுபடி செய்யப்படும் தானியம்? - கோதுமை.

*புதிய காபிச் செடியில் காபிக்கொட்டை எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும்? - 5 ஆண்டுக்குப் பின்.

*வில்லோ பார்க் மரத்திலிருந்து கிடைக்கும் மருத்துவ அமில - சாலிசிலிக்

*உலகிலேயே மிக உயரமாக வளரும் புல்? - மூங்கில்

*உலகிலேயே மிகப் பெரிய பூ எது? - ரப்லேசியா

*ஆப்பிளில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது? - 84 சதவீதம்.

Posted

*காந்தியடிகளை முதன்முதலில் "மகாத்மா' என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.

*உலகின் 17 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன்.

*யானையின் நீண்ட மூக்கை தும்பிக்கை என்று அழைக்கிறோம். இதில் ஒரு சிறு எலும்பு கூட கிடையாது. இது 40,000 தசை நார்களால் ஆனது.

*உலகில் பாம்புகளே இல்லாத நாடு அயர்லாந்து. 1,500 ஆண்டுகளாக அங்கு எவரும் பாம்பைப் பார்த்தது இல்லையாம்.

*அஜந்தாவில் உள்ள 27 குகைகளையும் செதுக்கி முடிக்க 700 ஆண்டுகள் ஆயின.

*இஞ்சியின் சமஸ்கிருதப் பெயர் "ஸ்ரீங்கவேரம்'. இதன் பொருள் மான் கொம்பைப் போன்று என்பதாகும்.

*உலகிலேயே நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. ஒரு கிலோ கிராம் தோலுக்கு 20-22 லிட்டர் தண்ணீரையே பயன்படுத்துகின்றனர். உலக அளவு 40-42 லிட்டர் தண்ணீராகும்.

*சென்னையில் 1876-ம் ஆண்டு கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போதைய கவர்னர் பக்கிங்காம் மக்களுக்கு வேலை கொடுப்பதற்காக அடையாற்றையும், கூவம் ஆற்றையும் இணைக்கும் கால்வாய் ஒன்றை வெட்டினார். அவர் நினைவாக இது பக்கிங்காம் கால்வாய் எனப்படுகிறது.

*உலகிலேயே முதன்முதலாக பிஷப்பான பெண்மணி பார்பரா சிஹரிஸ். இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.

*உலகிலேயே மிகப் பெரிய பல்கலைக்கழகம் மாஸ்கோவில் உள்ளது. அறைகளின் எண்ணிக்கை 49,000.

*உலகின் மிகப் பெரிய கதவுகள் அமெரிக்காவிலுள்ள அசெம்பிளி மாளிகையின் கதவுகள். இதன் உயரம் 400 அடிகள்.

*உலகின் கூரை எனப்படுவது பாமீர் பீடபூமி.

*உலகின் பெரிய கண்டம் ஆசியா.

*உலகிலுள்ள 181 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

*உலகின் மிகப் பெரிய தீவு கிரீன்லாந்து.

*உயரமான மிருகம் ஒட்டகச் சிவிங்கி.

*மிகப் பெரிய பறவை நெருப்புக் கோழி.

*மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டன் அருங்காட்சியகம்.

*மிக நீளமான நதி மிஸெளரி மிஸிஸிப்பி (4,500 மைல் நீளம்).

*டாக்டர்.அன்னி பெசன்ட் அம்மையார், கஸ்தூரிபாய் காந்தி, தில்லையாடி வள்ளியம்மை, சரோஜினி நாயுடு, ராஜ்குமாரி அமிர்த கௌர், சுதேசா கிருபளானி ஆகியோர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணிகள்.

*பேகம் ரொக்கயா ஷெகாவத் ஹூசைன், பண்டித ரமாபாய், சுப்புலட்சுமி, ருக்மணி தேவி அருண்டேல் ஆகியோர் கல்விப் பணியில் ஈடுபட்ட பெண்மணிகள்.

*டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி, டாக்டர்.ஜடா சோஃபியா ஸ்கட்டர், அம்புஜம்மாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆகியோர் சமூகப் பணியில் ஈடுபட்ட பெண்மணிகள்.

*அமெரிக்க சுதந்திர தேவி சிலை கையின் நீளம் 16 அடிகள்.

*கார் திருட்டு அதிகம் நடப்பது அமெரிக்காவில்.

*அமெரிக்காவில் சிறைக் கைதிகள் "சிறைக் கண்ணாடி' என்ற பத்திரிகையை நடத்துகின்றனர்.

*அமெரிக்காவில் ஹெலிகாப்டர் டாக்ஸிகள் உள்ளன.

*அமெரிக்காவில் தான் முதன்முதலில் குதிரைப் பந்தயம் தோன்றியது.

*அலுமினியத்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்கா.

*இன்று நாம் வாக்கியங்களுக்கு இடையே பயன்படுத்தும் கமா, செமிகோலன், முற்றுப்புள்ளி போன்ற குறியீடுகளை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர்.

*கர்ஸன் பிரபு காலத்தில் தான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முறை அமலுக்கு வந்தது.

*அகாதெமி என்பது ஒரு கிரேக்க மொழிச் சொல். புகழ் பெற்ற கிரேக்கத் தத்துவஞானி பிளாட்டோ தமது சீடர்களுக்கு பாடம் கற்பித்த கோப்புகளைக் குறித்த சொல் இது. பின்னர் உயர் கல்வி போதிக்கும் கல்விக் கழகங்களை இச் சொல் குறிக்கத் தொடங்கியது.

*தார் எனும் ஸ்காண்டிநேவிய கடவுளின் பெயரால் உருவானது தான் வியாழக்கிழமை.

*பிப்ரவரி மாதத்தை நியூமா எனும் சக்கரவர்த்திதான் முதன் முதலில் கி.மு.713-ல் ரோமன் காலண்டரில் அறிமுகப்படுத்தினார். அப்போது இது வருடத்தின் கடைசி மாதம். பின்னர், கி.மு.450-ல் தான் வருடத்தின் இரண்டாம் மாதமாயிற்று.

* மின்துடிப்புகளை ரேடியோ அலை மூலம் ஒரு மைல் தூரம் அனுப்பக் கூடிய ரேடியோ கருவியைக் கண்டுபிடித்தவர் மார்கோனி. முதன்முதலில் கோன் ஐஸ்கிரீமை தயாரித்த வரும் இவரே.

* புகழ்பெற்ற புன்னகை ஓவியமான மோனலிசா ஓவியத்தை வரைந்த லியானார்டோ டாவின்சியின் கற்பனைத் திறன் அறிவியலுக்கு ஒரு சவாலாக இருந்தது. அது எப்படித் தெரியுமா? முதன்முதலில் இதயத்தின் நிஜ வடிவம் இதுதான் என்பதை தத்ரூபமாக வரைந்து காட்டினார். பூக்களில் ஆண், பெண் உண்டு என கண்டுபிடித்துக் கூறினார். தாவரங்கள் சூரியனை நோக்கி வளர்வது போன்ற இவரது ஓவியங்கள் இயற்கை குறித்த ஆய்விற்கு பேருதவியாக இருந்தன.

*ஜான் டோமினிக் பாபி என்ற எழுத்தாளருக்கு பக்கவாதத்தால் கைகளும், கால்களும் பாதிக்கப்பட்டன. வாயால் பேசவும் முடியவில்லை. தனது நெருங்கிய உதவியாளரிடம் வெறுமனே கண்களை அசைத்து ஒவ்வொரு எழுத்து, வார்த்தை மற்றும் வாக்கியங்களைப் புரிய வைத்தார். இதன் மூலம் "தி டைவிங் பெல் அண்டு தி பட்டர்ஃபிளை' என்ற புத்தகத்தை எழுதினார். அவர் இறப்பதற்கு முன் 1996-ம் ஆண்டு இது வெளிவந்தது. இப்புத்தகம் மிக அதிகமாக விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக அமைந்தது.

*எந்தக் கருவியின் உதவியும் இல்லாமல் இதுவரை மக்கள் கேட்ட ஒலிகளிலேயே மிகப் பெரிய ஒலி 1833-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ம் நாள் கேட்டது. கனடா நாட்டில் உள்ள கிராக்டோ எரிமலையின் சீற்றம் தான் அது. அந்த ஒலி 3,000 மைல் தொலைவிற்குக் கேட்டது. அந்த எரிமலையின் கிளர்ச்சி அத்தீவின் தோற்றத்தையே மாற்றியதுடன், அதன் விளைவுகள் ஆங்கிலக் கால்வாயிலும் தாக்கத்தை ஏற்படுத்தின.

* கைரேகை போல் காலில் காணப்படும் ரேகைகளும் மனிதனின் ஆயுள் முழுவதும் மாறுவதில்லை.

* கோபி பாலைவனம் குளுமை நிறைந்த பகுதியாகும்.

* நெருப்புக் கோழி தண்ணீரில் நீந்தும்.

* மீனின் செதில்கள் மூலம் அதன் வயதை அறியலாம்.

* மிக வெப்பமான நட்சத்திரத்தின் நிறம் நீல நிறம்.

* காந்தியடிகள் தன் வாழ்நாளில் ஒரு முறை கூட விமானப் பயணம் மேற்கொண்டது கிடையாது.

* சீன நாட்டின் மீது படையெடுத்த ஒரே இந்திய மன்னர் முகம்மது-பின்-துக்ளக்.

* இந்திய தேசப்படத்தை முதன்முதலாக வரைந்தவர் ஆன்வின் என்ற பிரெஞ்சு நாட்டுக்காரர்.

* இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட உலோகப் பற்றாக்குறையினால் ஆஸ்கர் விருதுகள் மரத்தினால் செய்து வழங்கப்பட்டன.

* டார்வின் மண்புழுக்களைப் பற்றி ஆராய்ந்து 1881-ல் புத்தகம் எழுதினார்.

* மழைக் காலங்களில் திடீரென அதிகமான அளவில் ஈசல்கள் தோன்றுவதுண்டு. இதன் விலங்கியல் பெயர் எஃபமெரோப்டெரா.

* சாதாரணமாக எல்லா இடத்திலும் காணப்படும் 1.25 செ.மீ. நீளமுள்ள மண்புழுவானது 24 மணி நேரத்தில் சுமார் 900 செ.மீ. நீளத்திற்கு மண்ணைக் குடைந்து விடும்.

* சிலவகை நத்தைகள் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் தூங்கும் தன்மை கொண்டவை.

* வீட்டில் காணப்படும் ஈக்கள் சுமார் மணிக்கு 7 முதல் 8 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

* பிடரியுடன் உள்ள ஆண் சிங்கத்தை வீரமுள்ளது என நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும், உண்மையில் 90 விழுக்காடு விலங்குகளை வேட்டையாடிக் கொல்வது பெண் சிங்கம் தான்.

* நீண்ட ஆயுள் உடைய உயிரினம் ஆமை.

* முதலை, திமிங்கலம் ஆகியவற்றால் நீரில் மூச்சு விட முடியாது.

* துறவை விட இல்லறமே சிறந்தது எனக் கூறுவது சீக்கிய மதமாகும்.

* சுபாஷ் சந்திரபோஸ் ஒரிசாவில் உள்ள கட்டாக் நகரில் 1897-ம் ஆண்டு பிறந்தார்.

* உலகில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட செல் போனை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் மோட்டோரோலா.

* மனித உடலின் வேதியியல் ஆய்வுக்கூடமாகக் கருதப்படும் உறுப்பு ஈரல் தான்.

* சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுவது வைட்டமின் "சி' ஆகும்.

* தாதா சாகேப் விருது பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிருத்விராஜ் கபூர், ராஜ்கபூர்.

_________________

Posted

* சிலந்திகள் ஒரு வார காலம் வரை உணவு இல்லாமல் வாழ்கின்றன.

* மண்புழுவிற்கு 5 ஜோடி இதயங்கள் உள்ளன.

* தேனீயால் பச்சை, நீலம், ஊதா நிறங்களை பிரித்தறிய முடியும்.

* பூச்சி இனங்களில் தும்பியின் கண்கள் கூர்மையானவை.

* பட்டாம் பூச்சிக்கு நூரையீரல் இல்லை. அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள `ஸ்பிராக்கிள்' என்னும் துளைகள் வழியாக சுவாசிக்கின்றன.

* ஆண், பெண் இரண்டின் இனப் பெருக்க உறுப்புகளும் நத்தையில் காணப் படுகிறது. இதனால் அவை ஹெர்மப்ரோடைட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

* யானையின்துதிக்கை ஒரு லட்சம் தசைகளால் ஆனது. அதன் இதயம் நிமிடத்திற்கு 28 தடவை மட்டுமே துடிக்கின்றன.

ஆஸ்திரேலியாவிற்கு அருகில் நவ்ரு என்னும் மிகச் சிறிய தீவு இருக்கிறது. இந்நாட்டின் மக்கள் எதற்காகவும் கவலைப்படத் தேவையில்லை. வசிப் பதற்கு வீடு, உண்ண உணவு, உடுக்க உடை போன்ற அத்தியாவசியத் தேவை அனைத்தையும் அரசாங்கமே கவனித்துக் கொள்கிறது. பாஸ்பேட் உரம் இயற்கையாகவே நவ்ரு நாட்டில் கிடைப்பதால் அதை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருமானத்தை ஈட்டுகிறது. வெளிநாட்டுக்குச் செல்லவேண்டும் என்றால் கூட அரசாங்கமே எல்லாச்செலவுகளையும் ஏற்று குடிமக்களை அனுப்பி வைக்கிறது.

***

மத்திய தரைக் கடல் பகுதியில் தென் கிழக்கு பிரான்ஸ் எல்லையோரம் அமைந்துள்ள மிகச் சிறிய தீவு மோனாகோ. இது மொத்தமே அரை மைல் சதுர பரப்பளவு கொண்டதாகும். ஆனால் அளவை வைத்து இந்த தீவின் பொருளாதாரத்தை எடை போட்டு விட வேண்டாம். ஏனெனில் உலக கோடீஸ்வரர்களின் சொர்க்க புரியாக இந்த தீவு திகழ்கிறது. இங்கே ஒவ்வொரு கோடீஸ்வரரும் அவரவருக்குச் சொந்தமான ஆடம்பர, அலங்காரப் படகுகள் மூலம்தான் மதிக்கப்படுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளின் வரு மானத்தைக் கொண்டே இந்தத் தீவில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது.

***

சுவீடன் நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் அந்நாட்டு அரசாங்கம் தனித்தனி எண்களைக் கொடுத்துள்ளது. அரசு நிறுவனங்கள் அவர்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் அவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள எண்களைக் கொண்டுதான் குறிப்பிட்டு வருகிறது. ஆண்களுக்கு இரட்டைப் படை எண்களும், பெண் களுக்கு ஒற்றைப்படை எண்களையும் கொடுத்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்து சில காலம் தங்குவோருக்கும் கூட இது போன்ற எண்கள் கொண்ட அடையாள அட்டையை தருகிறார்கள். இதன் மூலம் ஒவ்வொருவரது தேவையும் நடவடிக்கையும் கவனிக்கப்படுகிறது.

***

60 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கர் அணிந்திருக்கும் டையின் நிறத்தை வைத்தே அவர் எந்த ஊர்க்காரர் என்பதை அடையாளம் கண்டு கொள்ள முடியும். பச்சைநிற டை கட்டியிருந்தால் அவர் பாஸ்டனைச் சேர்ந்தவர். சிவப்பு நிறம் என்றால் அவர் சிகாகோகாரர். இப்படி ஒவ்வொரு பெரிய நகரத்துவாசிகளும் தங்க ளுக்கென்று விசேஷமாக டை தயாரித்துக் கொண்டார்கள். அதில் குறிப்பிட்ட கோடு நம்பர்களையும் குறிப்பிட்டு வைத்தார்கள். அப்போதுதான் நவீன டை அறிமுகமாகியிருந்ததால் அதை இரவில் கூட பலர் எறியாமல் அணிந்து கொண்டே தூங் கினார்கள்.

***

வியர்வையை வெளியேற்றவே நாய்கள் நாக்கை தொங்க விடுகின்றன. ஏனெனில் நாய்களுக்கு மற்ற இடங்களில் வியர்வைச் சுரப்பிகள் இல்லை.

* பூசணிக்கொடியின் வேர்கள் 2.4 கி.மீ. நீளம் வரை வளரும்.

* நத்தைக்கு 25 ஆயிரம் பற்கள் உண்டு.

* சாம்பிராணி ஒரு மரத்தின் பிசின் ஆகும்.

* அன்னாசிப் பழத்திற்கு விதைகள் கிடையாது.

* கரப்பான் பூச்சியின் இதயம் 13 அறைகளைக் கொண்டது.

* தேனீ நம்மைக் கொட்டியதுமே வலி ஏற்படக் காரணம் அது பார்மிக் என்னும் அமிலத்தை நம் உடம்பில் செலுத்துவதாகும்.

* மண்புழு தோல்மூலம் சுவாசிக்கும்.

* தவளையின் இதயத்தில் மூன்று அறைகள் உள்ளன.

* பன்றி இறைச்சி சாப்பிடுவதால் மனிதனுக்கு நாடாப்புழு உருவாகிறது.

*ஈசலுக்கு ஜீரண உறுப்பு கிடையாது. அதனுடைய ஆயுட்காலம் ஒரே ஒரு நாள் மட்டுமே. 24 மணி நேரத்திற்கு மேல் அதனால் வாழ முடியாது.

*கறையான் வெப்பம் மிகுந்தநாடுகளில் இருக்கும். ஆண்,பெண் கறையான், ஆணும் பெண்ணும் அல்லாத கறையான் என அவற்றில் மூன்று வகை உண்டு.

*திருக்குறளை முதன் முதலில் ஓலைச் சுவடியிலிருந்து அச்சேற்றிய வர்கள் இரண்டு புலவர்கள். திருத்தணி விசாகப் பெருமாளையர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர். இந்த ஒப்பற்ற தொண்டினை இவர்கள் செய்யாவிடில் திருக்குறள் அழிந்தே போயிருக்கும்.

*பச்சோந்தி அடிக்கடி தன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் காற்றை நிறைய உள்ளிழுத்து சுய உருவை விட பல மடங்கு பருத்துக் காணப்படும். இத னுடைய நாக்கு மிகவும் நீளமானது. 10 அங்குலத்திற்கு அப்பால் உள்ள பூச்சியை ஒரேயொரு நொடியில் கவரக்கூடிய சக்தி படைத்தது. இவையெல்லாவற் றையும் விட மிகவும் வியப்பை ஏற்படுத்துவது பச்சோந்தியின் கண்கள்தான். ஒரு கண் நேரில் இருப்பதை உற்று நோக்க, மற்றொரு கண் பின்னால் இருப்பதை பார்க் கும். அற்புதமான அமைப்பை உடையது. உலகில் வேறு எந்த உயிரினத்திற்கும் இந்த அமைப்பு கிடையாது.

Posted

* கரையான்களால் அரிக்க முடியாத மரம் தேக்கு மரம்.

* ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும் நீர்யானை உள்ளது.

* ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள் ஆகும்.

* பாரி, ஆய், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடை ஏழு வள்ளல்கள்.

* அக்குரன், அந்திமான், கண்ணன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் ஆகியோர் இடை ஏழு வள்ளல்கள்.

* அக்டோபர் 8-ம் தேதி விமானப்படை தினம்.

****************

* உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை தரும் நாடு தென்னாப்பிரிக்கா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).

* முத்துத் தீவு என அழைக்கப்படும் நாடு பஹ்ரெய்ன்.

* அரசாங்கமே வட்டிக் கடை நடத்தும் நாடு மலேசியா.

*************************

விலங்குகளின் சத்தம் பற்றி...

* யானை பிளிரும்.

* நரி ஊளையிடும்.

* எருது எக்காளமிடும்.

* சிங்கம் கர்ஜிக்கும்.

* குதிரை கனைக்கும்.

* குயில் அகவும்.

* கோட்டான் கூப்பிடும்.

**********************

* தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்க்க வந்தால் அந்த பெண் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது வழக்கமாக இருந்தது. அந்த ஆண் தன் மனத்திற்கு பிடித்தவனாக இருந்தால் நீளமான மெழுகுவர்த்தியும், பிடிக்காதவனாக இருந்தால் சிறிய மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைப்பாள்.

* காண்டா மிருகத்தின் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகளிலிருந்து வேறுபடுகிறது. இதன் கொம்பு எலும்பால் ஆனது அல்ல. தோலிலிருந்தே உருவானது.

* நாகபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.

* சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக்காவில் மட்டும் தான்.

* பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.

* நீரை உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறாதான்.

* நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.

* பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.

* இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 648 வங்கிகளும், 4,819 கிளைகளும் இருந்தன.

* காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பதே நல்லது. காரணம், பூமிக்கும், காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.

* நிலத்தில் ஒரு மைல் என்பது 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6,080 அடி.

* ஆஸ்திரேலியாவில் ஒரு பாறை உள்ளது. 300 மீட்டர் உயரமும், 11 கி.மீட்டர் சுற்றளவும்கொண்ட இப்பாறை எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் சிவப்புக் கூடாரம் போல் காட்சியளிக்கும். இப்பாறையின் சிறப்பு என்னவெனில், வெய்யிலில் சிவப்பு நிறமாகவும், நண்பகலில் பழுப்பு நிறமாகவும் மாலையில் நீலம் கலந்த சிவப்பாகவும் தோன்றும். எனவே, இதை பச்சோந்திப் பாறை என அழைக்கப்படுகிறது

*வெளவால்களில் மொத்தம் 2,000 வகைகள் உள்ளன.

*கொசுவில் 2,700 வகைகள் உள்ளன.

*யானையின் தும்பிக்கையில் 40,000 தசைகள் உள்ளன.

*குரங்குகளில் அழகானது மர்மோசைட் என்ற வகை குரங்கு.

*நம் கண்களில் லாக்ரிமல் கிளாண்ட் என்ற சுரப்பியால் சுரக்கப்படும் லாக்ரிமா என்ற திரவத்தைத்தான் பொதுவாக கண்ணீர் என்கிறோம்.

*ஆந்தையில் மொத்தம் 133 வகை உண்டு. மற்ற பறவைகளின் கண்களைப் போல ஆந்தைகளின் கண்கள் அதன் விழிக்குள் இலகுவாக அசைவதில்லை. கண்கள் இரண்டும் முகத்தின் முன்னாலேயே பக்கவாட்டில் இல்லாமல் இருக்கின்றன. இந்தக் குறையை ஈடு செய்ய தன் தலையை 180 டிகிரி வரைப் சுற்றி பார்க்க முடியும்.

*மாட்டுக்கு பற்கள் தேய ஆரம்பித்து விட்டால் அது பத்து வயதிற்கு மேற்பட்டது.

*எவரெஸ்ட் சிகரத்தை சாகர் மாதா என்று நேபாள நாட்டினர் அழைக்கின்றனர்.

*ரீசன்டோலியா என்ற ஆஸ்திரேலியத் தாவரம் மண்ணுக்குள் மணம் வீசும் மலரைக் கொண்டது.

*பவ்டக் என்ற பர்மியச் செடி மூன்று முறை தொடர்ந்து பூத்தால் பருவமழை தொடங்கி விடும்.

*கோட்ஸ்பியர்டு என்ற ஆப்பிரிக்க நாட்டுப் பூச்செடியில் ஒவ்வொரு கொத்திலும் பத்தாயிரம் மொட்டுக்கள் வரை இருக்கும்.

*ஒரு இதழோ அல்லது ஒன்பது இதழ்களோ உள்ள பூக்களை எங்கும் காண முடியாதாம்.

*ஆஸ்திரேலிய மலரான கேண்டிஸ் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும். கற்றாழை எனப்படும் கள்ளி 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும்.

*இந்தியாவில் வீரச் செயலுக்காகக் கொடுக்கப்படும் இரண்டாவது உயர்ந்த விருது மகாவீர் சக்ரா.

*ஜனாதிபதி நெருக்கடி நிலை பிரகடனம் செய்தால், மக்களின் அடிப்படை உரிமை தற்காலிகமாக நீக்கப்படும்.

*இங்கிலாந்து நாட்டின் புக்கர் பரிசை முதன்முதலாகப் பெற்ற இந்தியர் சல்மான் ருஷ்டி.

*ரத்தச் சிவப்பணுக்கள் முதிர்ச்சிக்கு காரணமாய் அமைவது சயனா கோபலமின்.

*இந்தியா, பாகிஸ்தானை பிரித்து இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் திட்டத்தை வெளியிட்டவர் மவுன்ட் பேட்டன்.

*நார் தயாரிக்க பயன்படும் பாக்டீரியா கிளாஸ்டரியம்.

*லெகோஸ் என்ற ஒன்றுடன் ஒன்று செருகிக் கொள்ளும் வண்ண பிளாஸ்டிக் துண்டுகள் 1949-ம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த கிறிஸ்டியான்ஸன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவர்கள் இவற்றைக் கூட்டி வைத்து பொம்மை நகரங்கள் கட்ட உதவிய இந்தத் துண்டுகள் இதுவரை இரண்டாயிரம் கோடிக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டன. இன்றும் மாறாமல் முதலிடம் பெற்றிருக்கும் சிறுவர்களுக்கான இந்த விளையாட்டுப் பொருள்களில் இரண்டாயிரம் வகைத் துண்டுகள் உள்ளன.

*நாய் உணவில்லாமல் கூட இருந்து விடும். ஆனால், தூக்கம் இல்லாவிட்டால் விரைவில் இறந்து விடும்.

*கரப்பான் பூச்சிகள், பல்லிகள், விஷப் பாம்புகளை சாப்பிடும் ஒருவகை எட்டுக்கால் பூச்சி டாரண்டுலாவாகும்.

*ஒரு தேனீ 4,000 பூக்களிலிருந்து சேகரிக்கும் தேன் ஒரு ஸ்பூன் அளவே ஆகும்.

*காண்டாமிருகம் சுத்தமான சைவ விலங்கு.

*காலில் கண் உள்ள பூச்சி வெட்டுக்கிளி.

*முதன்முதலில் அலுமினியத்தை கண்டறிந்த நாடு பிரான்ஸ்.

Posted

* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்ப்ïட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறார்.

* அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் 50 டன் உணவைச் சாப்பிடுகிறார்கள். 13 ஆயிரம் கேலன் திரவப் பொருளைச் சாப்பிடுகிறார்கள்.

* ஒரு கண்ணில் பார்வை போய்விட்டால் பாதி கண் பார்வை போய்விட்டது என்று அர்த்தம் அல்ல. பார்வைத் திறனில் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது.

* அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 6 டிரைவர்கள் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனர்.

* கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.

* ஜெடி என்றொரு மதம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. 70 ஆயிரம்பேர் இந்த மதத்தில் இருக்கிறார்கள்.

* எலித்தொல்லை அமெரிக்காவில் பெருந்தொல்லையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 24 ஆயிரம் பேர் அங்கே எலியால் கடிபடுகிறார்கள்.

* இளம் பருவ ஆண்-பெண்களின் முடியில் 25 சதவீத நீளம் எந்த வித முறிவும் இல்லாமல் இருக்கும்.

* பெரும்பாலான கனவுகள் 5 முதல் 20 நிமிடம் வரை நீடிக்கின்றன.

* பெண் ஒட்டகச்சிவிங்கி குட்டியை ஈன்றெடுக்கும்போது 6 அடி கீழ் நோக்கி விழுகின்றன. ஆனாலும் குட்டிகளுக்கு எந்தக் காயமும் ஏற்படுவதில்லை.

* சுறாமீன்கள் எதிரே வரும் மீன்களை அறிந்து வேட்டையாடுவது எப்படி என்பது தெரியுமா?... வெகு தூரத்தில் இருக்கும் மீனின் இதயத்துடிப்பைக் கூட சுறா மீன்களால் கேட்க முடியும். இதனால் சுறாமீனிடமிருந்து எந்த மீனாலும் தப்பிக்க முடியாமல் போகிறது.

*பெங்குவின் பறவைக்கு ஒரு அபூர்வ மகிமை உண்டு. உப்புத் தண்ணீரைக் கூட அது நன்னீராக மாற்றிவிடும்.

*10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயு தங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத் துகிறது.

*உலகில் 50 சதவீதம் பேருக்கு தொலைபேசி அழைப்பு வரு வதில்லை. அவர்கள் வேறு யாருடனும் தொலைபேசியில் பேசு வதும் கிடையாது.

*ஒவ்வொரு காரும் தனது ஆயுள்காலத்தில் விடும் புகை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை உரு வாக்கும்.

அண்டார்டிகா கண்டத்தின் நிலம் மட்டும்தான் இந்த உலகில் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாத இடமாகும்.

*மிக அதிகமாக மின்சக்தியை வெளிப் படுத்தும் ஈல் மீன்கள் பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில் காணப் படுகிறது. இந்த ஈல் மீன்கள் வெளிப்படுத்தும் மின்சக்தியின் அளவு 400-முதல் 650 வோல்ட்டுகள் ஆகும்.

*உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 22 ஆயிரம் செக்குகள் உரியவர்களின் பெயர்களில் வரவு வைக்கப்படாமல் வேற்று நபர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகின் றன.

*மற்ற எந்த மாதங்களையும் விட ஜுலை மாதத்தில்தான் உலகம் முழுவதும் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன.

*வவ்வால்கள் குகைக்குள் இருந்து வெளியேறும்போது இடது பக்கமாகவே வெளியேறும்.

Posted

* சீனா தலைநகர் பீஜிங் நகரிலிருந்து வெளிவரும் "சீங்பாவோ' என்ற பத்திரிகை 103 ஆண்டுகளாக வெளிவருகிறது. அச்சு இயந்திரம் வருவதற்கு முன் இதைக் கையால் எழுதி நகல் எடுத்தார்களாம்.

* உலகிலேயே முதன்முதலில் தலைப்புடன் செய்தி வந்தது 1777-ம் ஆண்டில் "நியூயார்க் கெஜட்' என்ற பத்திரிகையில்.

*உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் முதல் கோலைப் போட்டவர் என்ற பெருமை பிரான்ஸ் நாட்டு அணியைச் சேர்ந்த லூசியனண்ட் லூரான் என்ற வீரர் பெற்றார். 1930-ம் ஆண்டு முதல் கோலை மெக்ஸிகோவிற்கு எதிராகப் போட்டார்.

* தமிழ்நாட்டிலிருந்து முதன் முதலில் வெளிவந்த வார இதழ் பத்திரிகை 12.10.1785-ம் ஆண்டு வெளியான "மெட்ராஸ் கொரியர்' என்னும் வார இதழ் தான். இதன் ஆசிரியர் ரிச்சர்ட் ஜான்சன்.

* 1841-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட "ஜனசிநேகிதன்' என்ற இதழ்தான் தமிழில் வெளியான முதல் மாதமிருமுறை இதழ்.

* இந்தியில் வெளியான முதல் பெண்கள் பத்திரிகை "சுக்ரினி'. இதை வெளியிட்டவர் ஹேமந்த் குமாரி என்ற வங்காளப் பெண்.

* இந்தியாவில் முதலில் தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு 1854 மே 6-ம் தேதி. அன்றைய கமிஷனர் பென்னி பிளாக் என்பவரால் வெளியிடப்பட்டது.

*எவரெஸ்ட் சிகரத்திற்கு 1865-ம் ஆண்டில் தான் அப்பெயர் வந்தது. அதற்கு முன்பு சிகரம்-15 என்னும் பெயர் தான் வழங்கப்பட்டது. வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆட்சி செய்த நேரம், இந்தியாவில் எவரெஸ்ட் என்பவர் சர்வேயர் ஜெனரலாக இருந்தார். அவர் இமயமலைத் தொடரில் உள்ள சிகரங்களுள் சிகரம்-15 தான் உயரமான சிகரம் எனக் கண்டறிந்தார். அதனால், அவர் பெயரையே அந்த சிகரத்திற்கு சூட்டிவிட்டனர்

* ஒரு புற்றிலுள்ள எறும்பு அடுத்த புற்றில் நுழைவதில்லை.

* தலை துண்டிக்கப்பட்டாலும் எறும்புகள் 20 நாட்கள் உயிருடன் இருக்குமாம்.

* வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து 106 நாட்கள் வரை உயிர் வாழுமாம்.

* ஒரு வாரம் வரை நீருக்கடியில் உயிருடன் வாழும்.

* சர்க்கஸ் நடத்தும் வழக்கம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்களிடம் உள்ளது.

* கி.மு.13-ம் நூற்றாண்டிலேயே சீனாவில் குடைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

* உலகில் 181 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்

*சாலையோர உணவு விடுதி யாரால், எப்போது தொடங்கி வைக்கப்பட்டது? -ஆர்தர் ஹெய்ன்மென் (1925-ம் ஆண்டு)

*நீருக்கடியில் தங்குமிடத்தைக் கட்டிய முதல் நாடு? - சுவீடன்

*உலகின் மிகப் பழமையான தங்கும் விடுதியின் பெயர் என்ன? அது எந்த நாட்டில் கட்டப்பட்டது? -ஹோசி ரியாகோன், ஜப்பான்.

*தனது வாழ்நாளை தங்கும் விடுதியிலேயே கழித்த அமெரிக்க கோடீஸ்வரர்? -ஹோவர்ட் ஹக்ஸ்

*உலகின் மிகப்பெரிய தங்கும் விடுதி? -பர்ஜ் அல்-அராப்

*அதிகமான அறைகளைக் கொண்ட மிகப்பெரிய தங்கும் விடுதி எந்த நகரில் உள்ளது? -பர்ஸ்ட் வேர்ல்ட் ஹோட்டல்(அமெரிக்கா)

*அமேசான் காடுகளுக்குள் அமைந்த ஹோட்டலின் பெயர்? -அரிஸ் டவர்ஸ்

*உலகிலேயே மிகவும் சிறந்த உணவகம் ? -எல் புல்லி (ஸ்பெயின்)

*அமெரிக்காவிலேயே முதலிடத்தில் இருக்கும் உணவகம்?-பெர் சி

*தி பேட் டக் என்பது எந்த நாட்டின் பிரபல உணவகம்? -இங்கிலாந்து

*பாஸ்தா என்பது எந்த நாட்டின் பிரபல உணவு? - இத்தாலி.

*சால்சா என்ற உணவு எந்த நாட்டில் மிகவும் பிரபலமானது? -மெக்சிகோ

*தென்னிந்தியர்கள் காலை உணவாக அதிகம் சாப்பிடுவது? -இட்லி

*காலை உணவில் சாக்லெட்டை அதிகம் சேர்த்துக் கொள்ளும் ஐரோப்பிய நாட்டவர்? -ஸ்பெயின்

Posted

*பெங்குவின் நின்ற நிலையிலிருந்தே முட்டையிடும். உப்பு நீரிலிருந்து நல்ல நீரைப் பிரிக்கும் அமைப்பு பெங்குவினின் மூக்கில் அமைந்திருக்கிறது. பெங்குவின் பறவை இனத்தைச் சேர்ந்தது. மேலும் அதனால் பறக்க முடியாது. ஆனால் நன்றாக நீந்தும்.

*கண்கள் காதுகளை போல பத்து மடங்கு உணர்வும், மூக்கைப் போல் முப்பது மடங்கு உணர்வும் கொண்டவை. பார்க்கும் பொருளின் ஒளியில் நூறில் ஒரு பங்கு கூடினாலும், குறைந்தாலும் அந்த வேறுபாட்டை கண்கள் உணர்ந்து விடும்.

*தென் அமெரிக்க பாலை வனங்களில் காணப்படும் ஒரு செடியில் நீளமான கிளை மட்டுமே இருக்கும். கிளையின் உச்சியில் பூக்கள் பூக்கும். இந்த நீளமான தண்டு எப்போதும் வடக்கு திசை பக்கமே சாய்ந்து நிற்கும்.இதனைப் பார்த்துதான் பாலை வனப் பயணிகள் திசையை அறிந்து பயணத்தை தொடர்கிறார்கள்.

*பாக்டீரியா என்பது ஒரே செல் உயிரி. ஒரு சொட்டு திரிந்த பாலில் பத்து கோடி பாக்டீரியாக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர்.

*இரவு நேரத்தில் ஆந்தைக்கு கண்கள் மனிதனை விட பத்து மடங்கு தெளிவாகத் தெரியும். அது தன் இரையை ஒரு கிலோ மீட்டர் பார்க்கும்.

*ரீங்காரப்பறவையின் முட்டை உலகிலேயே சிறிய முட்டை அதன் எடை சுமார் 0.24 கிராம்.

* புதுதில்லியில் 2010-ம் ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஷேரா என்ற புலி நினைவுச் சின்னமாக இருக்கும்.

*சுவிஸ் நாட்டு வங்கியில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்திற்கு வட்டி கட்டவேண்டும். வட்டி கட்ட முடியாமல் மொத்த தொகையையும் பலர் இழந்துள்ளனர். அதுமட்டுமல்ல, கணக்கு எண்ணை மறந்திருந்தாலும் அவர்கள் தங்கள் முதலை இழக்க நேரிடும். இதனால், சுவிஸ் நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டின் வங்கிகளையே பெரும் பகுதி சாரும்.

* இமயமலை என்ற சொல்லுக்கு பனியின் இருப்பிடம் என்று பொருள். இமயமலையின் மொத்த பரப்பளவு 5,00,000 சதுர கி.மீட்டர்.

* ஹோலி பண்டிகையின் இன்னொரு பெயர் வண்ணங்களின் பண்டிகை. இந்த வண்ணப் பொடி தேசு என்ற மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.

* 25.1.1944-ம் தேதி மாஸ்கோவுக்குத் தூது என்ற ஆங்கில சினிமாப் படம் காந்தி அடிகளுக்கு விசேஷமாகத் திரையிடப்பட்டது. பாபுஜி தன் வாழ்நாளில் பார்த்த ஒரே திரைப்படம் இது தான்.

* காந்திஜி இங்கிலாந்தில் பாரிஸ்டர் பரீட்சையில் தேறிய பிறகு 10.6.1891-ம் தேதி பாரிஸ்டர் ஜாபிதாவில் சேர்க்கப்பட்டார். லண்டன் உயர்நீதிமன்றத்தில் 11.6.1891-ம் தேதி தன்னை பாரிஸ்டராகப் பதிவு செய்து கொண்டு 12.6.1891-ம் தேதி இந்தியாவுக்கு கப்பலில் புறப்பட்டார்.

* விண்வெளி ஆய்வைத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை வானில் பறக்கவிடப்பட்டுள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 4,700-க்கும் மேல் ஆகும்.

* ஜெர்மன் சர்வாதிகாரி இட்லரை சந்தித்த ஒரே தமிழர் மறைந்த அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு தான்.

எலிக்காது வவ்வால்கள் அதிகம் காணப்படுவது ஐரோப்பா கண்டத்தில். குட்டிகள் பிறந்து சில நாட்கள் வரை தாய் இரை தேடச் செல்லும்போது குட்டியை சுமந்து செல்கின்றன. குட்டி வளர்ச்சியடைந்ததும் தாய், தனது இருப்பிடத்திலேயே தலை கீழாக தொங்கவிட்டுச் சென்றுவிடும். அதன் பிறகு குட்டிதான் இரைக்காக தனியே பறக்கவேண்டும்.

*********************

*வரிக்குதிரையானது தனது பலம் வாய்ந்த பின்னங்கால்களினால் தன்னைத் தாக்க வரும் சிங்கத்தை உதைத்து தள்ளிவிடும். ஆப்பிரிக்க மானும் காட்டு எருமையும் கூட தங்களது கூரிய கொம்புகளால் சிங்கத்தை தாக்கும். ஒட்டகச் சிவிங்கியும் சிங்கத்தை தனது பின்னங்கால்களால் உதைத்து தாக்கும்.

*********************

*ஆண் சிறுத்தைக்கும் பெண் சிங்கத்திற்கும் பிறக்கும் குட்டிக்குப் பெயர் `லியோன்பான்'. ஆண் சிங்கத்திற்கும் பெண் சிறுத்தைக்கும் பிறக்கும் குட்டிக்கு `லிபார்ட்' என்று பெயர். `டைகான்'. ஒரு பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறப்பது கோவேறுக் கழுதை.

********************

Posted

* ஒரிசா மாநிலத்தில் யானை சந்தை உள்ளது.

* பைசா நகர சாய்வு கோபுரம் வட்ட வடிவிலானது. எட்டு அடுக்குகளைக் கொண்டது.

* ஆண் கழுதைக்கும், பெண் குதிரைக்கும் பிறக்கும் குட்டி கோவேரி கழுதை எனப்படும்.

* பெண் நீர் யானைகளை விட, ஆண் நீர் யானைகள் அதிக எடை உடையவை.

* தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆண்டுதோறும் 660 டன்கள் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.

* 22 காரட் தங்கம் என்பது 91.67 சதவீதம் தூய்மையானது.

* சோழ மன்னர்களுக்குரிய பட்டப் பெயர்கள் கிள்ளி, செம்பியன், வளவன், சோழன், காவிரி நாடன், கண்டர் என்பதாகும்.

* பாண்டியருக்குரிய பட்டப் பெயர்கள் வழுதி, மாறன், பாண்டியன், பொருப்பின், செழியன்.

* சேரர்களுக்குரிய பட்டப் பெயர்கள் சேரன், வானவன், மலையன், பொறையன், உழியன்.

* ஆப்பிரிக்காவில் உள்ள யானைகளில் சில கறுப்பு நிறத் தந்தம் உடையனவாக இருக்கின்றன.

* கோழியின் உடலில் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட சிறகுகள் உள்ளன.

* சிங்கம் ஒரே பாய்ச்சலில் 24 அடி தூரம் பாயும்.

* மூங்கில் ஒரு நாளைக்கு 3 அடி உயரம் வளரும்.

* முந்திரிச் செடி 1660-ம் ஆண்டில் முதன்முதலில் இந்தியாவில் பயிரிடப்பட்டது. இச் செடி பிரேசில் நாட்டில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.

* கழுதைகள் காதை வீசி ஆட்டினால் விடியும் முன்பு மழை பெய்யும் என்பது ஃபிரான்ஸ் நாட்டு மக்களின் நம்பிக்கை.

* நண்பகலில் சிலந்தி வலை பின்னுவது மழை வருவதற்கான அறிகுறி என ஜப்பான் நாட்டு மக்கள் நம்புகின்றனர்.

* தங்கம் உலகம் முழுவதும் 60 நாடுகளில் வெட்டி எடுக்கப்படுகின்றன.

* இங்கிலாந்து நாட்டு மக்கள் 9 காரட் தங்க நகைகளே அணிகிறார்கள்.

* சுத்தமான தங்கம் 99.99 சதவீதம் தூய்மையானது.

* தங்கம் அதிகமாக விற்பனையாகும் நாடு

இந்தியா.

* அதிக அளவில் வெள்ளி எடுக்கப்படும் நாடு மெக்சிகோ ஆகும்.

* பிறந்த முயல் குட்டியின் எடை 49 முதல் 50 கிராம் வரை இருக்கும்.

நீர் யானைகள் இரண்டு வகைப்படும். ஒன்று சாதாரண நீர் யானை. இதன் எடை 3,600 கிலோவாகும். இன்னொன்று, சைபீரிய நீர்யானை. இவை அதிக பட்சம் 2,500 கிலோ எடை வரை இருக்கும்.

பெண் நீர் யானை 210 முதல் 255 நாட்களுக்குள் குட்டி போடுகிறது. ஒரு கூட்டத்தில் 20 முதல் 100 நீர்யானைகள் வரை இருக்கும்.

கனத்த எடை கொண்டது என்றாலும் நீர்யானைகள் ஓடுவதில் வல்லவை. அவை மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக் கூடியவை. இவற்றின் ஒருவேளை உணவு 45 கிலோ புல் ஆகும்.

***

*மாடுகளைப் போல் நாய்களும் நிறக்குருடுகள் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நாய்கள் நிறக் குருடுகள் அல்ல. அவற்றாலும் சில நிறங்களை அடையாளம் கண்டு கொள்ள இயலும். இப்படி நாய்கள் நிறத்தை அடையாளம் காண்பது நாய்க்கு நாய் வேறுபடும். இதனால்தான் நாய்கள் சில நேரம் அழுக்கு ஆடை அணிந்தவர்களைக் கண்டால் குரைக்கின்றன.

***

*பாம்புகளை விட மீன்களில்தான் அதிக விஷம் கொண்டவை இருக்கின்றன. உலகில் மொத்தம் 1,200 வகையான விஷ மீன்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் மீன்கடியால் 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகள் வரை 300-க்கும் சற்று குறைவான மீன்கள்தான் விஷத் தன்மை கொண்டவை என்று கூறப்பட்டு வந்தது.

***

*யானை மணிக்கு 24 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். அப்படி ஓடும்போது அதன் ஏதாவது ஒரு காலோ இரண்டு கால்களோ தரையில் இருக்கும்படிதான் அது ஓடும். இல்லாவிட்டால் யானையால் ஓட முடியாது.

***

*வண்ணத்துப் பூச்சியின் கூட்டுப் புழுக்கள் இலைகளை மட்டுமே தின்னுகின்றன என்று நினைத்தால் தவறு. இவை பட்டுப்போன்ற மென்மையான வலையையும் பின்னுகின்றன. இதில் சிக்கிக் கொள்ளும் நத்தையைக் கூட இவை தின்று விடுகின்றன.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.