Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தரின் போதனையை பரப்புவதற்கு பதிலாக ஒருசிலர் மதம் பிடித்து செயற்படுகிறார்கள்

Featured Replies

புத்தரின் போதனையை பரப்புவதற்கு பதிலாக ஒருசிலர் மதம் பிடித்து செயற்படுகிறார்கள்
 
 
புத்தரின் போதனையை பரப்புவதற்கு பதிலாக ஒருசிலர் மதம் பிடித்து செயற்படுகிறார்கள்
காவியுடை அணிந்து, புத்தரின் போதனையை மக்களுக்குப் பரப்ப வேண்டிய பௌத்த பிக்குகளுள் ஒரு சிலர் மதம் பிடித்து செயற்படுவதால் அவர்கள் பிக்கு என்று கூறுவதற்கே அருகதையில்லாதவர்கள். - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரி வித்துள்ளார்.
 
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கு உலக தரிசன நிறுவன த்தின் உதவியுடன் இலவசமாக பால் கொள்கலன்களை வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
பிக்கு என்றால் மரியாதைக்குரியவர், ஆனால் மட்டக்களப்பிலுள்ள அடாவடித்தனம் கொண்ட பிக்குவை, பிக்கு என்று சொல்வதற்கு நாக்கு கூசுவதாக தெரிவித்த அவர் 
 
மாடுகளை மேய்ப்பதற்கு இடங்களைத் தேடிச் சென்றால், குடியிருப்புக்களிலும் மேய்ச்சல் தரைகளிலும் புத்த விகாரை அமைப்பதற்கு முயற்சித்து வருவதாகவும்  சுட்டிக்காட்டியுள்ளார். 
 
அரசமரத்துப் பிள்ளையார் என சொல்கின்றோம், ஆனால் அரச மரத்தைக் கண்டால் புத்தர் சிலை வைக்கி ன்றார்கள் இந்த புத்த குருக்கள் என்றும், இதுபோன்ற பல சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல் தரைப் பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு உரிய தீர்வை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
தமிழ் மக்களின் காணியை அத்துமீறிப் பிடிப்பதற்குச் சண்டித்தனம் காட்டி வரும் இவர்கள் சுதந்திரமாக மாடுகள் மேய்ப்பவர்களைக்கூட பிடித்து அடைத்து அவர்களுக்குத் தண்டனை வழங்குகின்ற செய ற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். 
 
மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் அடாவடித்தனங்கள், மேச்சல்தரைப் பிரச்சி னைகள் உள்ளிட்ட இவ்வாறான பிரச்சனைகள் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் ஜானதிபதியுடனும்,பிரதமருடனும் பேச்சுவார்த்தை நடாத்தி உரிய தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
 
எமது கால்நடைகளை விற்றுவிடவோ, விகாரைகளை அமைக்கவோ விட முடியாது எனக் குறிப்பிட்ட அவர், பெரும்பான்மை மக்களை குடியேற்றும் திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லவிட்டாலும் இவ்வாறான பிக்கு களினூடாக சில சம்பவங்கள் அரங்கேறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.onlineuthayan.com/news/20335

Edited by நவீனன்

10 hours ago, நவீனன் said:

புத்தரின் போதனையை பரப்புவதற்கு பதிலாக ஒருசிலர் மதம் பிடித்து செயற்படுகிறார்கள்

ஒருசிலர் என்று உலகை ஏமாற்றக் கூடாது.

90% க்கு மேற்பட்ட பௌத்தர்கள் புத்தரின் போதனையை பின்பற்றுவதற்கு பதிலாக இனமதவெறி பிடித்து செயற்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"புத்தம் சரணம் கச்சாமி... புத்தரின் கச்சைக்குள்,  இரும்பாணி....."
இது தான்.... நான்  இதுவரை  அறிந்த, சொறிலங்கா  புத்த தர்மம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.