Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய பௌத்த பீடத்தை ஏற்படுத்த தயாராகி வரும் பௌத்த பிக்கு அமைப்புகள்

Featured Replies

கடந்த காலத்தில் தனித்து பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்ட பௌத்த பிக்குகளின் அமைப்புகள் இணைந்து தமக்கென தனியான பௌத்த பீடம் ஒன்றை ஏற்படுத்த தயாராகி வருகின்றன.

புதிய பௌத்த பீடத்தை ஏற்படுத்த தயாராகி வரும் பௌத்த பிக்கு அமைப்புகள்

இந்த அமைப்புகள் கடந்த காலத்தில் நாடு, சிங்கள இனம் மற்றும் பௌத்த மாதம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த அமைப்புகள் எனக் கூறப்படுகிறது.

தனித்து போராட்டங்களில் ஈடுபடும் போது கிடைக்கும் பலன்களை விட இணைத்து புதிய பீடத்தை ஏற்படுத்தி தமது நிலைப்பாடுகளை முன்னெடுத்தால், அதிக பலன் கிடைக்கும் என்ற காரணத்தில் இந்த பௌத்த பிக்கு அமைப்புகள் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளன.

குறித்த பௌத்த பிக்கு அமைப்புகள் கடந்த இரண்டு மாதங்களாக இணைந்து இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளன.

பிரதேச மட்டத்தில் பல்வேறு சமூக விரோத செயல்களுக்காக குரல் கொடுக்கும் சிறிய பிக்கு அமைப்புகள் மாத்திரமல்லாது தேசிய மட்டத்தில் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளை கொண்ட அமைப்புகளும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கு எடுத்துள்ளன.

புதிய பௌத்த பீடம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அதற்கான மாநாயக்க தேரரை தெரிவு செய்வது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

தேசிய மட்டத்தில் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சில அமைப்புகளின் பிக்குமார் சிலரது பெயர்கள், மாநாயக்க தேரர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பௌத்த பீடம் தொடர்பான அறிவிப்பு வெளியிட்ட பின்னர், அதற்கான பதிவாளர் தேரர் மற்றும் சங்க தெரிவுக்குழுவும் நியமிக்கப்பட உள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்க தேரர்களை சாடும் வகையில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

மாநாயக்க தேரர்கள் நித்திரை செய்து கொண்டிப்பதாகவும் அவர்கள் பௌத்தர்களுக்கு எதிரான விடயங்களின் போது குரல் கொடுப்பதில்லை எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்தார்.

http://www.tamilwin.com/politics/01/125038?ref=home

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற..  "அரியண்டம்"  காணாது என்று, இது வேறையா.... !!!!!!! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

இருக்கிற..  "அரியண்டம்"  காணாது என்று, இது வேறையா.... !!!!!!! :unsure:

புதிய பௌத்த பீடம் அமைக்கப் படுகிறது. 'மல் வத்தை' பீடத்துக்கு மறுத்தான் கொடுக்கும் வகையில், மட்டக்களப்பு தூசணப் பிக்கர் தலைமையில் 'கள் வத்தை' என்று ஆரம்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

புதிய பௌத்த பீடம் அமைக்கப் படுகிறது. 'மல் வத்தை' பீடத்துக்கு மறுத்தான் கொடுக்கும் வகையில், மட்டக்களப்பு தூசணப் பிக்கர் தலைமையில் 'கள் வத்தை' என்று ஆரம்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

15107259_10202309655220648_7743846434296342283_n.jpg?oh=372af4f65d348a73355dd28fd6f00f2d&oe=58C6385D

எனக்கு மல்வத்தை பீடத்தை விட....
மட்டக் களப்பு, சுமனரத்ன தேரர் நல்லவர், வல்லவர் போல் தெரிகிறார். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

15107259_10202309655220648_7743846434296342283_n.jpg?oh=372af4f65d348a73355dd28fd6f00f2d&oe=58C6385D

எனக்கு மல்வத்தை பீடத்தை விட....
மட்டக் களப்பு, சுமனரத்ன தேரர் நல்லவர், வல்லவர் போல் தெரிகிறார். :grin:

அஸ்கிரிய பீடத்துக்கு காரர், தனியார் வீட்டில் பியருடன் இலண்டனில் பார்த்து இருக்கிறேன், சிறியர்.

தூசணப் பிக்கர், விசய காரர் தான்.

அரச அதிபருக்கு மகஜர் கொடுக்க வரேக்க, பொம்பிளையைக் காட்டுறார்.. தகப்பன் இல்லை... கைப்பிள்ளையோட... அதுதான் உதவுறாராம்...

தகப்பன் இவரா இருக்குமோ எண்ட யோசனை வந்தது. :grin: 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

அஸ்கிரிய பீடத்துக்கு காரர், தனியார் வீட்டில் பியருடன் இலண்டனில் பார்த்து இருக்கிறேன், சிறியர்.

தூசணப் பிக்கர், விசய காரர் தான்.

அரச அதிபருக்கு மகஜர் கொடுக்க வரேக்க, பொம்பிளையைக் காட்டுறார்.. தகப்பன் இல்லை... கைப்பிள்ளையோட... அதுதான் உதவுறாராம்...

தகப்பன் இவரா இருக்குமோ எண்ட யோசனை வந்தது. :grin: 

14993539_1686249691687343_5594796145552908244_n.jpg?oh=abbcd2887155db26f77a49805087a8ad&oe=58CBEB3D

பசிக்குது.....  :grin: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.