Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன, மத ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்த பாரிய சதி?

Featured Replies

இன, மத ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்த பாரிய சதி?

 

அர­சியல் போட்டா போட்­டிகள் கார­ண­மா­கவே இந்த நாட்டில் பல்­வேறு முரண்­பா­டு­களும் இன முறுகல் நிலையும் கல­வ­ரங்­களும் அவ்­வப்­போது வெடிக்­கின்­றன. பத­வி­யி­லி­ருக்கும் அர­சாங்­கத்தை கவிழ்க்­கவும் அதே­போன்று ஆட்­சியை கைப்­பற்­றவும் அர­சி­யல்­வா­திகள் இன ரீதி­யான செயற்­பா­டு­க­ளையே தமது ஒரே ஆயு­த­மாக கொண்­டுள்­ளனர். இதற்கு ஏற்­றாற்­போன்று கடும் போக்­கா­ளர்­களும் மத­வா­தி­களும் ஒத்­தூ­து­வதை காண­மு­டி­கி­றது.

அர­சி­யல்­வா­தி­களின் மறை­மு­க­மான நிகழ்ச்சி நிரலின் அடிப்­ப­டையில் தூண்­டப்­படும் ஒருசில மத­வா­திகள் நாட்டை குழப்­பு­வது மாத்­தி­ர­மின்றி இனங்­க­ளுக்­கி­டையே மோதல்­களை உரு­வாக்கி பதற்­ற­மா­னதோர் சூழ்­நி­லைக்கு வித்­தி­டு­கின்­றனர். ஆன்­மி­கத்­தையும் அமை­தி­யையும் சகோ­த­ரத்­து­வத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் பரப்ப வேண்­டிய மதத் தலை­வர்­களே பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் மக்­க­ளி­டையே கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்­தவும் நாட்டில் அமை­தி­யின்­மைக்கு வழிவகுக்­கவும் இரத்தக் கள­ரிக்கு இட்டுச் செல்­லவும் கார­ண­மாக அமை­வ­தாக மக்கள் மிகுந்த விசனம் தெரி­விக்­கின்­றனர்.

சிறு­பான்மை மக்­களின் உணர்­வு­களை மலி­னப்­ப­டுத்தும் வகை­யிலும் அவர்­களின் மதச் சுதந்­தி­ரத்தை எள்ளி நகை­யாடும் வகை­யிலும் கருத்­துக்­களை தெரி­விப்­பது மாத்­தி­ர­மன்றி, சிறு­பான்மை மக்­களின் வணக்­கஸ்­த­லங்­க­ளுக்கும் வழி­பாட்டு இடங்­க­ளுக்கும் அத்­து­மீறி நுழைந்து காடைத்­த­ன­மான செயற்­பா­டு­களில் ஒருசில பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த மத­வாத சக்­திகள் ஈடு­ப­டு­கின்­றன. இதனால் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்கம் கேள்­விக்­கு­றி­யா­வ­துடன் அநா­வ­சி­ய­மான நெருக்­க­டி­களும் உரு­வா­கின்­றன.

அஹிம்­சையை போதிக்க வேண்­டிய மதத் தலை­வர்கள் சிலர் ஆயு­த­தா­ரிகள் போன்றும் கட்­டு­மீறி நடந்துகொள்ளும் போக்கும் அவர்கள் சார்ந்த மதத்­துக்கு மாத்­தி­ர­மன்றி இந்த நாட்­டுக்கும் பெரும் அப­கீர்த்­தியை சர்வதேச ரீதியில் ஏற்­ப­டுத்தி வரு­வது குறித்து எவரும் சிந்­திப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. இலங்­கையில் கடந்த காலங்­களில் ஏற்­பட்ட பல்­வேறு கல­வ­ரங்­களின் பின்­ன­ணியில் இத்­த­கைய மத­வா­தி­களின் தாக்கம் பாரி­ய­ளவில் இருந்­ததை எவ­ராலும் மறுக்கமுடி­யாது.

அர­சாங்கம் மற்றும் பாது­காப்புத் தரப்­பினர் கூட குறித்த மதத் தலை­வர்கள் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்கத் தயக்கம் காட்­டு­வ­தா­கவும் அதன் கார­ண­மா­கவே அவர்­களின் செயற்­பா­டுகள் கட்­டு­மீறிச் செல்­வ­தா­கவும் பொதுமக்கள் மிகுந்த விசனம் தெரி­விக்­கின்­றனர். அண்மைக் கால­மாக பௌத்த துற­விகள் சிலர் வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களில் புதிது புதி­தாக பௌத்த வழி­பாட்டு சின்­னங்­களை நிறுவி அதன் மூலம் குறித்த பிர­தே­சங்­களில் அநா­வ­சி­ய­மான கல­வ­ரங்­க­ளுக்கும் நெருக்­க­டி­க­ளுக்கும் வித்­திட்டு வரு­கின்­றனர். இவர்கள் எதற்­காக திடீ­ரென இவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்­றனர் என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே இருந்து வரு­கின்­றது. நாட்டில் நில­விய மூன்று தசாப்த கால யுத்தம் முடி­வுக்கு வந்து அமைதி குடி­கொண்­டுள்ள இவ் வேளையில் அவற்றை குழப்­பி­ய­டிக்கும் வகை­யிலும் அர­சாங்­கத்­துக்கு நெருக்­க­டி­யையும் அச்­சு­றுத்­தலையும் ஏற்­ப­டுத்தும் முக­மா­கவே இத்­த­கைய செயற்­பா­டு­களில் ஒரு சிறு மத­வாதக் குழு­வினர் ஈடு­ப­டு­கின்­ற­னரா என்ற சந்­தேகம் பர­வ­லாக எழுந்­துள்­ளது.

தமிழ் பிர­தே­சங்­களை ஆக்­கி­ர­மித்து தனியார் காணி­க­ளுக்குள் அத்­து­மீறி நுழைந்து அதற்குள் மதஸ்­த­லங்­களை நிறு­வு­வது எந்த வகையில் நியாயம் என்­பதை சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் நினைவில் கொள்­வது அவ­சி­ய­மாகும். வெறு­மனே மதத்தின் பெயரால் மக்­களை மோத­விடும் இவ்­வா­றான சக்­தி­களின் செயற்­பா­டு­களை நாட்­டி­லி­ருந்து முற்­று­மு­ழு­தாக ஒடுக்க அர­சாங்கம் காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

இலங்கை ஒரு பல்­லின, பல் கலா­சார நாடு என்ற வகையில் அனைத்து மதங்­க­ளுக்கும் சம சந்­தர்ப்பம் வழங்­கு­வதும் ஒரு தரப்பு மறு தரப்பை அடக்கி ஒடுக்கும் காரி­யங்­களில் ஈடு­ப­டா­தி­ருப்­பதும் மிகவும் அத்­தி­ய­ாவ­சி­ய­மாகும். கடந்த அர­சியல் காலத்தில் சிறு­பான்மை முஸ்லிம் மக்­களின் வணக்­கஸ்­த­லங்கள் பல இனந்­தெ­ரி­யாத சக்­தி­க­ளினால் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­ன­துடன் அவை தீ வைத்தும் கொளுத்­தப்­பட்­டன. இதனால் இளை­ஞர்கள் வீதியில் இறங்கி தமது வெறுப்பை காட்ட முனைந்­தனர். இந்­நி­லையில் அநா­வ­சி­ய­மான கல­வ­ரங்கள் ஆங்­காங்கே தலை தூக்­கின. இறு­தியில் அதனை ஒடுக்­கு­வ­தற்கு அர­சாங்கம் மிகுந்த பிர­யத்­த­னத்தில் ஈடு­பட வேண்­டிய நிலையும் ஏற்­பட்­டது. அதன் தொடர்ச்­சி­யாக நாடு பாரிய சவால்­க­ளுக்கு முகங்­கொடுக்க நேர்ந்­த­துடன் ஆட்சி மாற்­றத்­திற்கும் அது வழி­வ­குத்­தது.

எவ்­வா­றெ­னினும் அத்­த­கை­யதோர் விரும்­பத்­த­காத சூழல் மீண்டும் ஏற்­ப­டா­தி­ருப்­பதை உறுதி செய்­வது மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மாகும். எனினும் கடந்த சில வார­ங்களாக அம்­பா­றை­யிலும் மட்­டக்­க­ளப்­பிலும் இடம்­பெற்று வரும் சம்­ப­வங்கள் தமிழ் பேசும் மக்­களின் மனங்­களைப் புண்­ப­டுத்தும் வகை­யிலும் அமை­திக்குப் பங்கம் ஏற்­ப­டுத்தும் வகை­யிலும் அமைந்­தி­ருப்­ப­தாக மக்கள் மிகுந்த விசனம் தெரி­விக்­கின்­றனர். குறிப்­பாக மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­ப­தியின் செயற்­பா­டுகள் தொடர்பில் மக்கள் தமது அதி­ருப்­தியை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

தமிழ் பேசும் சிறு­பான்மை மக்­களின் உணர்­வு­களை மலி­னப்­ப­டுத்தும் வகையில் அவர் தெரி­வித்­தி­ருந்த அவ­தூ­றான கருத்­துக்கள் தமிழ் பேசும் மக்கள் மத்­தியில் மிகுந்த கொந்­த­ளிப்­பான நிலைக்கு வித்­திட்­டுள்­ளது. இதனை கண்­டித்தும் எதிர்ப்பு தெரி­வித்தும் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு பட்­டிப்­பளை பிர­தேச செய­லகம் உட்­பட பல்­வேறு இடங்­களில் ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­றன. கிழக்கு மாகாண பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரும் இதனைக் கண்­டித்­தி­ருந்­தனர். மேலும் இனங்­க­ளுக்­கி­டையே மோதல்­களை ஏற்­ப­டுத்தும் வகையில் அவ­ரு­டைய பேச்­சுக்கள் இடம் பெற்­றுள்­ள­தா­கவும் அதற்­கெ­தி­ராக அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மெ­னவும் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர் சுமந்­திரன் எம்.பி. வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் மீண்டும் மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி செங்­க­லடி – பதுளை வீதியில் பன்­கு­டா­வீதி பிர­தே­சத்தில் தனியார் காணி ஒன்­றுக்குள் அத்­து­மீறி நுழைந்து அங்கு பௌத்த விகா­ரை­களை அமைக்கப் போவ­தாகக் கூறி­ய­தை­ய­டுத்து பெரும் பதற்றம் உரு­வா­கி­யுள்­ளது. சட்டம் ஒழுங்­குக்கு சவால் விடும் வகையில் அவ­ரது செயற்­பா­டுகள் அமைந்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்டும் பிர­தே­ச­வா­சிகள், இது தொடர்பில் காத்­தி­ர­மான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மெ­னவும் கேட்­டுள்­ளனர்.

 நாட்டில் மத­ரீ­தி­யா­கவும் இன­ரீ­தி­யா­கவும் விரி­சல்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் ஏற்­ப­டுத்தி நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டுசெல்ல சில சக்­திகள் சதி முயற்­சியில் ஈடு­பட்டு வரு­கின்­றமை தொடர்பில் அர­சாங்கம் அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தாக இணை அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்­துள்ளார்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு களங்கம் ஏற்­ப­டுத்தி தேசிய நல்­லி­ணக்­கத்தை முறி­ய­டித்து நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்ல சில தரப்­பினர் முயற்­சித்து வரு­கின்­றனர். இதற்கு அர­சாங்கம் ஒரு­போதும் இட­ம­ளிக்­காது. இது தொடர்பில் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்து நாட்டை முன்­னேற்­று­வ­தற்கு நாங்கள் தேவை­யான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்போம் என்று தெரி­வித்­துள்ள அவர், அழிவை ஏற்­ப­டுத்தும் முயற்­சி­க­ளுக்கும் இன­வாத சக்­தி­க­ளுக்கும் ஊக்­க­ம­ளிக்க வேண்­டா­மெ­னவும் ஊட­கத்­து­றை­யி­னரை கேட்­டுள்ளார்.

எவ்­வா­றெ­னினும், இத்­த­கைய விரும்பத்தகாத செயல்­களின் மூலம் நாட்டை குழப்­பி­ய­டிக்க முயலும் சக்­தி­க­ளுக்கு இடம் கொடுக்­காமல் மக்கள் தமது செயற்­பா­டு­களை நிதா­ன­மாக முன்­னெ­டுப்­பது அவ­சி­ய­மாகும். வெறு­மனே ஏட்­டிக்குப் போட்­டி­யான செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு நாட்டில் நிலவும் அமை­தியை சீர்­கு­லைக்க எத்­த­ரப்­பி­னரும் முய­லக்­கூ­டாது. தமிழ் பேசும் மக்­களை பொறுத்­த­மட்டில் பாரிய இழப்­பு­க­ளுக்கும் துன்­பங்­க­ளுக்கும் பின்னர், தற்­பொ­ழுதே சற்று நிம்­மதிப் பெரு­மூச்­சு­விட ஆரம்பித்துள்ளனர். அரசாங்கம் அதனை உணர்ந்து தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் புதிய புதிய மதச்சின்னங்களை நிறுவி அதன் மூலம் பிரச்சினையை உருவாக்கும் சக்திகளுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

இதனிடையே வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் அமைதியை சீர்குலைக்க மதவாத சக்திகள் பயன்படுத்தப்படுகின்றார்களா? என்ற சந்தேகமும் பரவலாகத் தோன்றியுள்ளது. இது தொடர்பில் அவதானத்தை செலுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் சார்ந்ததாகும். வெறுமனே கண்துடைப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளும் செயற்பாடுகள் எந்த வகையிலும் வடக்கு, கிழக்கில் அமைதியை தோற்றுவிக்கப் போவதில்லை. மாறாக மீண்டும் புதியதோர் வடிவில் அமைதியீனங்கள் உருவாக வழிவகுப்பதாக இருக்கும். அந்தவகையில் வடக்கு, கிழக்கில் தோன்றியுள்ள மத ரீதியான முறுகல் நிலைக்கு முடிவுகட்ட அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-20#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.