Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதி அமைச்சர் கிளப்பிய ' பீதி'

Featured Replies

நீதி அமைச்சர் கிளப்பிய ' பீதி'

 

நாட்டில் இன­வா­திகள் மீண்டும் வீதிக்கு இறங்கி தமது  நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­தி­ருக்கும் கால­கட்­டத்தில் நீதி அமைச்சர் இவ்­வாறு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வலை வெளியிட்­ட­மை­ முஸ்­லிம்­களை அதிர்ச்­சி­யிலும் கவ­லை­யிலும் ஆழ்த்­தி­யுள்­ள­து

 

நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரை முஸ்­லிம்கள் மத்­தியில் பலத்த சல­ச­லப்பைத் தோற்­று­வித்­தி­ருந்­தது. நாட்டில் சமீப கால­மாக தோற்றம் பெற்­றுள்ள அடிப்­ப­டை­வாத, இன­வாத நகர்­வு­களை முன்­வைத்து அவர் ஆற்­றிய உரை பொதுவில் வர­வேற்­கத்­தக்­க­தாக இருந்த போதிலும் சில இடங்க ளில் அவர் முன்­வைத்த குற்­றச்­சாட்­டுக்­களே பெரிதும் சர்ச்­சைக்­கு­ரி­ய­ன­வா­கின.

"முஸ்லிம் ,சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வா­தங்­க­ளையோ அல்­லது வேறு எந்த அடிப்­ப­டை­வா­தங்­க­ளையோ நாட் டில் செயற்­ப­டுத்த எவ­ரா­வது முயற்­சிப்­பா­ராயின் அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது. எமது நல்­லாட்­சியை பல­வீ­ன­மாகக் கரு­தி­விட வேண்டாம். நாம் சட்­டத்தை தேவைக்கு அதி­க­மாக கடு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தாமல் இருப்­பதை எமது இய­லாமை என்று கரு­தி­விட வேண்டாம். சர்­வ­தேசம் என்ன கூறி­னாலும், எமது நாட்டில் இது­போன்ற இன­வாத பிரச்­சி­னைகள், மீண்­டு­மொரு இரத்­தக்­க­ளரி நிலை­மையை உரு­வாக்க மேற்­கொள்ளும் முயற்­சி­களை முறி­ய­டிக்க அவ­சி­ய­மெனில், இது­வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டா­தி­ருந்த பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை இனி­வரும் காலங்­களில் நடை­மு­றைப்­ப­டுத்­துவோம்" என்­பதே நீதி­ய­மைச்­சரின் உரையின் மையக் கருத்­தாக இருந்­தது. ஆனாலும் இந்த நாட்டில் தீவி­ர­வாத அல்­லது அடிப்­ப­டை­வாத சக்­திகள் தலை­தூக்கி வரு­கின்­றன என்­பதை நிரூ­பிக்க முற்­பட்ட சம­யமே அவர் தவ­றான தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

அவ­ரது உரையில் முஸ்­லிம்கள் தொடர்பில் குறிப்­பிட்ட பின்­வரும் விட­யங்­களே பிரச்­சி­னைக்­கு­ரி­ய­வை­யாகும். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொடர்பில் எமது நாட்டு மக்கள் மத்­தியில் பெரும் அச்­ச­மொன்று காணப்­ப­டு­கி­றது. எமது நாட்டில் இது­வரை 4 குடும்­பங்­களைச் சேர்ந்த 32 பேர் சிரி­யா­வுக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பு­பட்­டுள்­ளனர். இவர்கள் அனை­வரும் சாதா­ரண முஸ்லிம் குடும்­பங்­களை சேர்ந்­த­வர்கள் கிடை­யாது. கல்­வி­ய­றி­வு­டை­ய­வர்கள், சமூ­கத்தில் முக்­கி­ய­மா­ன­வர்கள் என்று அங்­கீ­காரம் கொண்ட 4 முஸ்லிம் குடும்­பங்கள் இதில் சம்­பந்­தப்­பட்­டுள்­ளன. இந்த குடும்­பங்­களைச் சேர்ந்த 32 பேர் சிரி­யா­வுக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்­ளனர். 

சில முஸ்லிம் சர்­வ­தேச பாட­சா­லை­க­ளுக்கு விரி­வுரை நிகழ்த்த சிலர் வரு­கின்­றனர். இவர்கள் சுற்­றுலா விசா­வில்தான் இங்கு வரு­கின்­றனர். பேரு­வளை, கல்­முனை, கல்­ எ­லிய, குரு­நாகல் போன்ற இடங்­க­ளி­லுள்ள சில நிறு­வ­னங்­க­ளுக்குச் சென்று அடிப்­ப­டை­வா­தத்தை போதித்து பிள்­ளை­களை மூளைச்­ச­லவை செய்­கின்­றனர். இதனால் எமது நாட்டில் பார­தூ­ர­மான சிக்கல் ஏற்­பட்டு வரு­கி­றது.

மேற்­படி இரண்டு விட­யங்­க­ளுமே முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து விஜே­தாஸ ராஜ­பக் ஷ எதிர்ப்பைச் சம்­பா­தித்துக் கொள்ள பிர­தான கார­ண­மாக அமைந்த விட­யங்­க­ளாகும்.

நீதி­ய­மைச்­சரின் உரை பற்­றிய தக­வல்கள் ஊட­கங்­களில் வெளி­வந்த சில மணி நேரங்­களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் உட­ன­டி­யாக அறி க்கை ஒன்றை வெளி­யிட்­டது. அதில் அமைச்­சரின் உரை நாட்டு மக்­களைத் தவ­றாக வழி­ந­டத்­து­வ­தாக அமைந்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

" கடந்த ஆண்டு ஐ.எஸ். அமைப்பில் இணைந்து உயி­ரி­ழந்த இலங்­கையர் தொடர்பில் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. எனினும் அதன் பின்னர் ஐ.எஸ். உடன் தொடர்­பு­டைய இலங்­கையர் குறித்த எவ்­வித உறு­தி­யான தக­வல்­களும் இல்லை. இந் நிலையில் அமைச்சர் குறிப்­பிட்­டது போன்று ஐ.எஸ். அமைப்பில் இணைந்­துள்ள இலங்­கை­யர்கள் தொடர்­பான தக­வல்­களை பெற்றுக் கொள்­வ­தற்கு அகில இலங்கை ஜம்­இ­யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஆகி­யன இணைந்து புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யி­ருந்­த­ன. ஒரு வருட காலத்­திற்கு முன்னர் இடம்­பெற்ற, பழ­மை­யான விட­யத்தை விஜே­ய­தாஸ ராஜ­பக் ஷ தற்­போது கூறி­யி­ருப்­ப­தா­னது இன­வா­தி­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தா­கவே அமையும். இது தொடர்பில் அர­சாங்கம் முழு­மை­யான விசா­ரணை ஒன்றை நடத்தி நாட்டு மக்­களை தெளி­வு­ப­டுத்த வேண்டும்" என முஸ்லிம் கவுன்ஸில் கோரி­யி­ருந்­தது.

அதே­போன்­றுதான் தேசிய ஷூரா கவுன்­ஸிலும் நீதி­ய­மைச்­ச­ருக்கு பகி­ரங்க கடிதம் ஒன்றை அனுப்­பி­யது. அதில் அவ­ரது உரையில் பல்­வேறு தவ­றான விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­தாகவும் அவை இன­வா­தி­களின் செயற்­பா­டு­க­ளுக்கு உர­மூட்­டு­வ­தாக அமைந்­தி­ருந்­த­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது.

" தீர விசா­ரிக்­காமல், முஸ்லிம் சமூ­கத்­தினர் மத்­தியில் நன்­ம­திப்பைப் பெற்­றுள்ள சில அமைப்­புக்­களின் பெயர்­களை குறிப்­பிட்டு, வரவு – செலவு திட்டம் தொடர்­பான உரை யின் போது அத­னுடன் எந்தவித சம்­பந்­த­மு­மில்­லாத ஒரு விட­யத்தை பற்றி தவ­றான தக­வல்­களை தாங்கள் வெளி­யிட்­டுள்­ளமை நம் சமூ­கத்­தினர் மத்­தியில் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அமை­தியை சீர்­கு­லைப்­ப­தற்கு சந்­தர்ப்பம் பார்த்துக் கொண்­டி­ருக்கும் அரச விரோத சக்­திகள் பௌத்த - முஸ்லிம் கல­வரம் ஒன்றை தூண்­டி­விட சதி செய்து வரு­கின்­றனர் என அண்­மையில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ள நிலையில் தாங்கள் மேற்­கொண்ட மேற்­படி பொறுப்­பற்ற கூற்று அமை­தி­யையும் ஐக்­கி­யத்­தையும் விரும்பும் இலங்­கையர் மத்­தியில் பெரும் மன உளைச்­சலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

 குழப்­பங்­களை விரும்பும், தீவி­ர­வாத மற்றும் இன­வாத சக்­தி­க­ளுக்கு தங்­க­ளு­டைய கூற்று மேலும் எரி­பொ­ருளை வழங்­கி­யி­ருக்கும் என்­பதில் எவ்­வித ஐய­மு­மில்லை. தங்­க­ளு­டைய அக்­கூற்றின் பின்னர் கண்டி போன்ற பகு­தி­களில் மத­வா­தி­களும் இன­வா­தி­களும் ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொண்டு இனக் கல­வ­ரத்தைத் தூண்டக் கூடிய கோஷங்­களை எழுப்­பி­யமை இதற்கு ஒரு நல்ல உதா­ர­ண­மாகும். இந்த நிலை பூதா­கரம் பெறும் பட்­சத்தில் நல்­லாட்­சியின் வீழ்ச்­சிக்கு வித்­திட்­ட­வ­ராக தாங்கள் குற்றம் சாட்­டப்­ப­டலாம்.

நீங்கள் குற்றம் சாட்டும் விட­யங்கள் தொடர்­பான திக­திகள், பெயர்கள், இடங்கள் உள்­ளிட்ட அசைக்க முடி­ யாத ஆதா­ரங்­களை முன்­வைக்­கு­மாறு நீங்கள் அப்­பி­ர­தி­நி­தி­களால் வலி­யு­றுத்­தப்­படும் பட்­சத்தில் உங்கள் நிலை என்­ன­வாகும் என நீங்கள் சற்று சிந்­தித்­தி­ருக்க வேண்டும்.

நான்கு இலங்கை முஸ்லிம் குடும்­பங்­களைச் சேர்ந்த பெண்கள், சிறு­மி கள் உட்­பட 32 பேர் ஐ.எஸ்.­ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­புடன் இணை­வ­தற்­காக நாட்டை விட்டுச் சென்­றுள்­ளார்கள் என்றும் நீங்கள் ‘தகவல்’ வெளி­யிட்­டுள்­ளீர்கள்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புப் பற்றி நம் நாட்டு ஊட­கங்கள் அதிக அக்­க­றை­யுடன் தக­வல்­களை வெளி­யிட்டு வந்த 2015 காலக் கெடுவில் நாட்டின் முக்­கிய முஸ்லிம் அமைப்­புக்கள், பாது­காப்பு செய­லாளர், முப்­படை பிர­தா­னிகள், பொலிஸ் மாஅ­திபர், உள­வுப்­பி­ரிவின் முக்­கிய அதி­கா­ரிகள் ஆகி­யோரை பிர­தமர் அழைத்து அவ்­வ­மைப்பு மற்றும் இலங்கை முஸ்­லிம்கள் தொடர்­பாக எழுப்­பப்­பட்ட வதந்­திகள் பற்றி விசா­ரித்தார். அதன்­போது பங்­கேற்ற அனை­வ­ரதும் மெச்­சத்­தகு ஒத்­து­ழைப்பு, தொடர்­பாடல், ஒருங்­கி­ணைப்பின் பய­னாக, நாட்டின் பாது­காப்பு மற்றும் நிர்­வா­கத்­துடன் தொடர்­பான உயர் அதி­கா­ரிகள் மற்றும் அரசின் பிர­தா­னி­க­ளுடன் மேற்­கொள்­ளப்­பட்ட அந்த கலந்­தா­லோ­சிப்பின் பின் அப்­போது முஸ்­லிம்கள் பற்றி எழுப்­பப்­பட்ட பல வீண் சந்­தே­கங்கள் முற்­றாக நீக்­கப்­பட்­டன. இதற்­காக அர­சாங்கம் காட்­டிய அக்­கறை மற்றும் உளவு அமைப்­புக்கள் உள்­ளிட்ட அரச நிறு­வ­னங்­களின் அறிவு, அனு­பவம் மற்றும் நிபு­ணத்­துவம் ஆகி­ய­வற்றை நாம் பெரிதும் போற்­றினோம்.

உண்மை நிலை இவ்­வா­றி­ருக்க மக்கள் பிர­தி­நி­திகள் முன் எழுந்து நின்று எவ்­வித ஆதா­ரமும் இன்றி மடை திறந்தாற் போல அர்த்­த­மற்ற குற்­றச்­சாட்­டுக்­களை தாங்கள் முன்­வைத்­துள்­ளீர்கள். பல­மான ஆதா­ரங்­க­ளு­டனும் அசைக்க முடி­யாத சாட்­சி­க­ளு­டனும் உளவுத் துறையின் அறிக்­கை­க­ளு­ட­னேயே அதை நீங்கள் செய்­தி­ருக்க வேண்டும். அவ்­வா­றின்றி இது போன்ற சிறு பிள்­ளைத்­த­ன­மான கூற்­றுக்­களால் பாரா­ளு­மன்றம் போன்ற ஒரு உயர்­வான சபைக்கு எவ்­விதப் பிர­யோ­ச­னமும் கிடை­யாது. இருப்­பினும் நாட்டில் பிரச்­சி­னை­களை உரு­வாக்கி குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த தருணம் பார்ப்­ப­வர்­க­ளுக்கு இது நிச்­சயம் ஒரு தூண்­டு­த­லா­கவே இருக்கும்" என அக் கடி­தத்தில் மிகக் காட்­ட­மாகக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அதே­போன்று அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவும் அமைச்சர் விஜே­தா­ஸவின் கருத்­துக்­களை கண்­டித்­தி­ருந்­தது. இது குறித்து ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்ட உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி " ஐ.எஸ். அமைப்­புடன் இலங்கை முஸ்­லிம்கள் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ தெரி­வித்த கருத்­துகள் முஸ்­லிம்­களை கவலை கொள்ளச் செய்­துள்­ளன. ஐ.எஸ். அமைப்பு ஒரு கடு­மை­யான தீவி­ர­வாத இஸ்­லா­மிய விழு­மி­யங்­க­ளுக்கு எதி­ரான அமைப்­பாகும். இவ் அமைப்பை 2014 இலி­ருந்தே உலமா சபை கண்­டித்து வரு­கி­றது.

 ஒரு சில தனி நபர்கள் தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வ­ராக இருந்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்­கையை எடுக்­கு­மாறு உலமா சபை வேண்­டுகோள் விடுக்­கி­றது. மாறாக முழு சமு­தா­யத்­தையும் தீவி­ர­வாத முத்­திரை பொறிக்க வேண்­டா­மெ­னவும் கோரு­கி­றது என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை அர­சாங்­கத்தை கோரி­யுள்­ளது. இவ்­வா­றான அமைப்­பு­க­ளுக்கும் இஸ்­லா­மிய அடிப்­படை விழு­மி­யங்­க­ளுக்கும் எவ்­வித தொடர்பும் கிடை­யாது என்­பதை உறு­தி­யாகக் குறிப்­பி­டு­கின்றோம்.

நீதி­ய­மைச்சர் இலங்­கையின் முஸ்லிம் சர்­வ­தேச பாட­சா­லை­களில் மாண­வர்கள் வெளி­நாட்­டி­லி­ருந்து வருகை தரும் இஸ்­லா­மிய விரி­வு­ரை­யா­ளர்­களால் மூளைச் சலவை செய்­யப்­ப­டு­வ­தாகக் கூறி­யுள்ளார். இது தவ­றான கருத்­தாகும். இலங்­கைக்கு அர­பிகள் வந்து போவது ஒன்றும் புதி­தல்ல. 2000 வரு­டத்­துக்கு முன்­பி­ருந்தே இலங்­கைக்கு அர­பிகள் வந்து போயுள்­ளனர்.

இலங்­கைக்கு சுற்­றுலா விசாவில் வருகை தரும் அவர்கள் மத்­ர­ஸாக்கள், சர்­வ­தேச பாட­சா­லை­க­ளுக்கும் போகி­றார்கள். வேறு மதத் தலை­வர்கள் வருகை தந்தால் அவர்கள் பௌத்த விஹா­ரைக­ளுக்கும் ஆல­யங்­க­ளுக்கும் விஜயம் செய்­கி­றார்கள். இதில் தவ­றே தும் இல்லை.

இலங்­கையின் உல­மாக்­களில் 95 வீத­மானோர் இலங்­கை­யி­லேயே படித்­த­வர்கள். அவர்கள் வெளி­நா­டு­களில் படிக்­க­வில்லை. இலங்­கையின் மத்­ர­ஸாக்­களில் மற்றும் பாட­சா­லை­களில் தீவி­ர­வாதம் போதிக்­கப்­ப­ட­வில்லை. நீதி அமைச்­சரின் கருத்­துகள் ஏனைய மதத்­த­வர்கள் மத்­தியில் இலங்கை முஸ்­லிம்கள் தொடர்­பாக தவ­றான கருத்­து­களை உரு­வாக்­கு­வ­தாக அமைந்­துள்­ளது" எனக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இவ்­வா­றான கண்­டன அறிக்­கைகள் வெளி­வந்த அதே நேரம் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா உட­ன­டி­யாக முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை அழைத்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது. இதன்­போது தற்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேலெ­ழுந்­துள்ள இன­வா­தத்தை எதிர்­கொள்­வது தொடர்பில் ஆரா­யப்­பட்­ட­துடன் நீதி­ய­மைச்­சரின் உரையில் குறிப்­பிட்ட விட­யங்கள் தவ­றா­னவை என்­ப­தனை முஸ்லிம் எம்.பி.க்கள் அமைச்­சரைச் சந்­தித்து தெளி­வு­ப­டுத்த வேண்டும் எனவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இதனைத் தொடர்ந்து முஸ்லிம் சிவில் அமைப்­புகள் கடந்த புதன்­கி­ழமை நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தின. இதில் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் உட்­பட பல முஸ் லிம் சிவில் நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டனர். இதன்­போதும் முஸ்­லிம்கள் தரப்பில் நீதி­ய­மைச்­ச­ருக்கும் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­ டது.

நீதிய­மைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ முஸ்­லிம்கள் தொடர்பில் மேற்­படி குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்துக் கொண்­டி­ருந்த சமயம் பல முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அத னைக் கேட்டுக் கொண்டு சபையில் இருந்­தனர். திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஐ.எம். மன்சூர் மாத்­தி­ரமே நீதி­ய­மைச்­சரின் உரையில் முஸ்­லிம்­களைப் பற்றி தவ­றான விட­யங்கள் குறிப்­பி­டப்­ப­டு­வ­தாக அந்த இடத்­தி­லேயே சுட்­டிக்­காட்­டினார். ஏனைய எவரும் குறித்த உரையைக் குறுக்­கீடு செய்து அதே இடத்தில் பதி­ல­ளிக்க முனை­ய­வில்லை.

எனினும் மறுநாள் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்­கீமும் ரிஷாத் பதி­யு­தீனும் நீதி­ய­மைச்­சரின் உரையை முன்­வைத்து சபையில் கருத்து வெளி­யிட்­டனர். இதன்­போது ரிஷாத் பதி­யுதீன் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கும் ஐ.எஸ். அமைப்­புக்­கு­மி­டையில் எந்­த­வி­த­மான சம்­பந்­தமும் இல்லை என்றும் நீதி­ய­மை­மைச்­சரின் உரை­யினால் சமூ­கத்தில் பாரிய குழப்ப நிலை தோன்­றி­யுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார். அமைச்சர் ஹக்கீம் தன­து­ரையில் நீதி­ய­மைச்­சரின் உரை சிறப்­பானதாக இருந்­த­போ­திலும் ஊட­கங்கள் ஐ.எஸ். விவ­கா­ரத்­துக்கு மாத்­தி­ரமே முன்­னு­ரி­மை­ய­ளித்து செய்தி வெளி­யிட்­ட­தா­கவும் குறிப்­பிட்டார். எனினும் அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம் சமூகம் தொடர்­பி­லான விஜே­தா­ஸவின் கருத்தை வலு­வாக மறு­த­லிக்­காமல் ஊட­கங்­க­ளையே குற்­றம்­பி­டித்­தமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

முஸ்­லிம்­களின் அதி­க­பட்ச ஆத­ரவைப் பெற்ற கட்சி என்ற வகையில் இது­வி­ட­யத்தில் பாரா­ளு­மன்­றத்தில் குரல் கொடுப்­ப­தற்கு அமைச்சர் ஹக்­கீ­முக்கே கூடுதல் கடப்­பாடு உண்டு என்­பதை இங்கு சுட்­டிக்­காட்­ட­வி­ரும்­பு­கிறோம்.

இதே­வேளை விஜே­தா­ஸவின் உரை யைக் கண்­டித்து கொழும்பு மாவட்ட ஐ.தே.கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மானும் சபையில் உரை­யாற்­றினார். நாட்டின் மிகவும் பொறுப்­பு­வாய்ந்த அமைச்­ச­ரான நீதி­ய­மைச்சர் இன ஐக்­கி­யத்­திற்கு பங்கம் ஏற்­படும் விதத்தில் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத ஒரு தக­வலை இந்த சபையில் கூறி­யமை பெரும் தவ­றாகும் என அவர் குறிப்­பிட்டார்.

நாட்டில் இன­வா­திகள் மீண்டும் வீதிக்கு இறங்கி தமது நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­தி­ருக்கும் கால­கட்­டத்தில் இவ்­வாறு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வலை வெளியிட்­ட­மை­யை­யிட்டு எனது வருத்­தத்தை தெரி­வித்­துக்­கொள்­கிறேன் என்றும் முஜிபுர் ரஹ்மான் சுட்­டிக்­காட்­டினார்.

இவ்­வாறு முஸ்லிம் தரப்­பி­லி­ருந்து நீதி­ய­மைச்சர் விஜே­தா­ஸவின் உரைக்கு எதிர்ப்­புகள் கிளம்­பிய அதே­நேரம் பெளத்த இன­வா­தி­க­ளி­ட­மி­ருந்து மாத்­திரம் வர­வேற்புக் கிடைத்­தது. விஜே­தாஸவின் கருத்­துக்­களை உட­ன­டி­யா­கவே வர­வேற்ற பொது பல சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலாந்த விதா­னகே தாம் நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர் குறிப்­பிட்ட விட­யங்­களை இப்­போ­துதான் நீதி­ய­மைச்சர் உணர்ந்து கொண்­டுள்­ள­தா­கவும் எவ்­வா­றெ­னினும் அவ­ரது உரையில் குறிப்­பிட்ட விட­யங்­களை வர­வேற்­ப­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார்.

நீதி­ய­மைச்­சரின் உரையைத் தொடர்ந்து பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் பொது பல சேனா உள்­ளிட்ட பெளத்த கடும்­போக்கு அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் நீதி­ய­மைச்­ச­ருக்­கு­மி­டையில் சந்­திப்பு ஒன்று இடம்­பெற்­றது. இதன்­போது பல விட­யங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தா­கவும் விட­யங்­களை கலந்­து­ரை­யாடல் மூலம் தீர்த்துக் கொள்ள தாம் தயார் என குறித்த பெளத்த அமைப்­புகள் தன்­னிடம் தெரி­வித்­துள்­ள­தா­கவும் விஜே­தாஸ ராஜ­பக் ஷ குறிப்­பிட்­டி­ருந்தார். இக் கூட்­டத்தின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்ட ஞான­சார தேரர் தாம் பேச்­சு­வார்த்­தைகள் மூல­மாக பிரச்­சி­னை­களைத் தீர்த்துக் கொள்ளத் தயார் எனக் கூறி­யி­ருந்­த­மையும் இங்கு கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

எனினும் அதற்கு முன்­ன­ராக கடந்த சனிக்­கி­ழமை கண்­டியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பாரிய பேரணி ஒன்றை பொது பல சேனா தலை­மையில் பல பௌத்த கடும்­போக்கு அமைப்­புகள் ஒன்­றி­ணைந்து நடத்­தி­யி­ருந்­தன. இதன்­போது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மிக மோச­மான இன­வாதக் கருத்­துக்கள் பேர­ணியில் கலந்து கொண்­ட­வர்­களால் முன்­வைக்­கப்­பட்­டன. கண்டி நக­ரி­லி­ருந்து தலதா மாளி­கைக்கு பேர­ணி­யாகச் சென்ற சமயம் வழியில் தென்­பட்ட கண்டி லைன் பள்­ளி­வா­ச­லுக்குச் செல்லும் 'பள்ளி வீதி'யின் பெயர்ப்­ப­ல­கையை உடைத்­தெ­றிந்­த­துடன் அதில் பௌத்த கொடி­யையும் நட்­டு­விட்டுச் சென்­றனர்.

இதே தினம் இரவு பெப்­பி­லி­யா­ன வில் அமைந்­துள்ள பெஷன் பக் ஆடை­ய­கத்தின் தலை­மை­ய­கமும் களஞ்­சி­ய­சா­லையும் தீப்­பற்றி எரிந்­தன. ஏற்­க­னவே 2013 ஆம் ஆண்டு இன­வா­தி­களின் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கி­யி­ருந்த அதே நிறு­வனம் தீப் பிடித்­த­மை­யா­னது பலத்த சந்­தே­கத்தை தோற்­று­வித்­துள்­ளது. இதன் மூலம் சுமார் 40 கோடி ரூபா­வுக்கு மேல் நஷ்டம் ஏற்­பட்­டுள்­ள­தாக அதன் உரி­மை­யாளர் தெரி­வித்­துள்ளார். இச் சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் இது­வரை காரணம் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.

வெள்ளிக்­கி­ழமை நீதி­ய­மைச்சர் தனது உரையில் ஐ.எஸ். ஐ.எஸ். பற்றி குறிப்­பிட்­டி­ருந்த நிலையில் சனிக்­கி­ழமை கண்­டியில் ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­பட்­டது. அதே இரவில் பெஷன் பக் தீப்­பற்­றி­யது. அதே­போன்று முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­களை பகிஷ்­க­ரிக்­கு­மாறு கோரும் பிர­சா­ரங்­களும் முளை­விட ஆரம்­பித்­தன. இவை­யெல்லாம் அர­சாங்­கத்­திற்கு பெரும் தலை­யி­டியைக் கொடுக்க ஆரம்­பிக்­கவே உட­ன­டி­யாக உயர்­மட்டக் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டன.

ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் தலை­மையில் சிரேஷ்ட அதி­கா­ரி­களை உள்­ள­டக்­கிய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இக் குழு அண்­மைக்­கா­ல­மாக நடை­பெற்று வரும் சம்­ப­வங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்­றையும் விரைவில் சமர்ப்­பிக்­க­வுள்­ளது. இதே­வேளை பெளத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்­தவ சம­யங்­க­ளுக்குப் பொறுப்­பாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள அமைச்­சர்­களை உள்­ள­டக்கி மற்­று­மொரு குழுவும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. 

இக் குழு தத்­த­மது சமூக பிர­தி­நி­தி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி அறிக்கை ஒன்றை தயா­ரித்து ஜனா­தி­பதி மற்றும் ­ பிர­த­ம­ருக்கு சமர்ப்­பிக்­க­வுள்­ளது. நமது நாட்டைப் பொறுத்­த­வரை பிரச்­சினைகள் தலை­தூக்கும் போதெல்லாம் குழுக்கள் நிய­மிக்­கப்­ப­­டு­வதும் பின்னர் அவை செய­லி­ழந்து போவதும் நாம் அறி­யா­த­வை­யல்ல. அவ்­வா­றா­ன­தொரு கண்­து­டைப்­புக் குழுக்­க­ளாக இவை அமைந்­து­வி­டக் கூடாது என்­பதே மக்­களின் எதிர்­பார்ப்­பாகும். 

இன­வா­திகள் ஒரு புறம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக விஷமப் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலையில் அமைச்­சர்­களும் இன­வா­தி­க­ளுக்கு தீனி போடும் வித­மா­க பொறுப்­­பு­வாய்ந்­த சபை­களில் கருத்து வெளியி­டு­வது எரிகிற நெருப்பில் எண்­ணெய் ஊற்றுவதா­கவே அமை­­யும்.

என­வேதான் நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ தனது உரையில் குறிப்­பிட்ட ஐ.எஸ். விடயம் மற்றும் முஸ்­லிம் சர்­வ­தேச பாட­சா­­லை­களில் தீவி­ர­வாதம் போதிக்­கப்­ப­டு­கி­றது எனும் கூற்­றுக்­களை வாபஸ் பெற வேண்டும். இன்றேல் அதற்­கான ஆதா­ரங்­களை வெ ளியிட வேண்டும். அப்­போ­துதான் இந்த விவ­கா­ரத்­துக்கு முற்றுப் புள்ளி வைக்க முடி­­யும்.

- பைஸ் -

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-11-26#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.