Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஷில்பா'பிரதர்' தந்த 45 கோடி!

Featured Replies

பிரிட்டனின் சானல் 4 நிறுவனம் நடத்திய பிக் பிரதர் நிகழ்ச்சியில் வென்றதன் மூலம் ஷில்பா ஷெட்டிக்கு ரூ. 45 கோடி அளவுக்குப் வருவாய் கிடைக்கவுள்ளதாம்.

63 சதவீத ரசிகர்களின் ஆதரவுடன் நேற்று ஷில்பா ஷெட்டி பிக் பிரதர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் ஒரே நிகழ்ச்சியில், ஷில்பா ஷெட்டி சர்வதேச அளவில் பிரபலமாகி விட்டார்.

சர்வதேச அளவில் பிரபலமான ஷில்பாவுக்கு உள்ளூரில் பெரிய பெயர் கிடையாது என்பதுதான் இதில் காமெடி. அவர் இதுவரை நடித்துள்ள 37 படங்களில் முக்கால்வாசிப் படங்கள் தோல்விப் படங்கள்தான்.

ராசியில்லாத நடிகையாகத்தான் ஷில்பா இந்தித் திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தார். அப்படிப்பட்டவருக்கு பிக் பிரதர் மூலம் பெரிய ரிலீப் கிடைத்துள்ளது.

கிட்டத்தட்ட ரூ. 45 கோடி அளவுக்கு ஷில்பாவுக்கு வருவாய் கிடைக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிட்டத்தட்ட 5 கோடி அளவுக்கு பரிசு கிடைத்துள்ளது. இதுதவிர பல்வேறு விளம்பர நிறுவனங்களில் நடிக்க அட்வான்ஸ் தொகைகளை அள்ளிக் கொடுத்த வண்ணம் உள்ளன. அப்படிப்பட்ட வருவாய் மட்டும் 10 கோடியாம்.

புதிய ஹாலிவுட் பட வாய்ப்பும் ஷில்பாவுக்கு வந்துள்ளது. இதுதவிர பிபிசி தொலைக்காட்சியில் காமெடி தொடர் ஒன்றில் நடிக்கவும் ஷில்பாவை அணுகியுள்ளனர். இதற்காக பெரும் தொகையை சம்பளமாகக் கொடுக்கவும் அவர்கள் முன் வந்துள்ளனராம்.

கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, விருது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என சரமாரியாக நிகழ்ச்சிகள் வந்தவண்ணம் இருக்கிறதாம். பிக் பிரதர் நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்தது 5 கோடிதான் என்றாலும் அதை வைத்து சில வருடங்களில் கிட்டத்தட்ட 45 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தங்கள் ஷில்பாவுக்கு கிடைக்கவுள்ளன.

http://thatstamil.oneindia.in/specials/cin...lpa_070130.html

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் காலம் தான். இதைத்தான் சொல்லுறது குடுக்கிற தெய்வம் கூரையைப்பித்துக்கொன்டு கொடுக்கும் என்றா :)

இதுதவிர பிபிசி தொலைக்காட்சியில் காமெடி தொடர் ஒன்றில் நடிக்கவும் ஷில்பாவை அணுகியுள்ளனர். இதற்காக பெரும் தொகையை சம்பளமாகக் கொடுக்கவும் அவர்கள் முன் வந்துள்ளனராம்.

பிபிசி தமிழ் ஓசையோ?ஏன்னென்றால் இப்ப அந்தநிலையில்தான் அதுபோகுதாம்.

ஷில்பா ஷில்பா இந்ந உடம்பும் ஒருநாளைக்கு மண்ணுக்கதான்....சப்பா தலைசுத்துதடா சாமி

  • கருத்துக்கள உறவுகள்

ராணி எலிசபெத், பிரதமர் பிளேரை சந்திக்கிறார் ஷில்பா ஷெட்டி வைரங்கள் வாங்கி தருபவர் கணவராக வேண்டும் என பேட்டி

fpn06je9.jpg

லண்டன்:பிரிட்டனில் "பிக் பிரதர்' நிகழ்ச்சியில் வெற்றிவாகை சூடிய ஷில்பா ஷெட்டி, பிரிட்டன் ராணி எலிசபெத் மற்றும் பிரதமர் டோனி பிளேர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

தமிழகத்தில் பிறந்த ஷில்பா ஷெட்டி, மாடலாக இருந்து பாலிவுட்டுக்குள் நுழைந்தவர். ராணி முகர்ஜி, பிரீத்தி ஜிந்தா, கரீனா கபூர் போன்ற இளமைப் பட்டாளத்தின் வரவால் சமீபகாலமாக அவருக்கு திரை வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு சில படங்களில் பாடல் காட்சிகளில் மட்டும் தலையைக் காட்டி வந்தார்.

பிரிட்டனை சேர்ந்த சேனல் 4 "டிவி' நிறுவனத்தின் "பிக் பிரதர்' நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அதிர்ஷ்ட தேவதையின் பார்வை ஷில்பா பக்கம் திரும்பியது. இந்த நிகழ்ச்சியின்போது ஜேட் கூடி உள்ளிட்ட சக போட்டியாளர்கள் இன வெறி காட்டி ஷில்பாவை அவமானப் படுத்தியதால், உலகம் முழுவதும் ஷில்பாவின் புகழ் பரவத் துவங்கியது.நிகழ்ச்சியின் இறுதியில் ஷில்பா ஷெட்டி நேயர்களின் அதிக ஓட்டுக்களை பெற்று வெற்றி வாகை சூடினார். புகழுடன் சேர்த்து ரூ. பல கோடி பரிசுகளும் அவருக்கு கிடைத்தன."காசு மேலே காசு வந்து கொட்டுவதால்' மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து வருகிறார் ஷில்பா.

இவரின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் பிரிட்டன் ராணி எலிசபெத், பிரதமர் டோனி பிளேர் ஆகியோரை அவர் சந்திக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து பிரிட்டனின் "டெய்லி மிரர்' பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில்,"ஷில்பா ஷெட்டி, மார்ச் 12ல் லண்டனில் நடக்கவுள்ள காமன்வெல்த் தின விழாவில் சிறப்பு வரவேற்பாளராக பங்கேற்கவுள்ளார். அப்போது, பிரிட்டன் ராணியை சந்தித்து பேசுகிறார். வரும் 7ம் தேதி, பிரிட்டன் பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் டோனி பிளேர் மற்றும் அமைச்சர்களையும் ஷில்பா சந்தித்து பேசுகிறார்,'என செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து பிரிட்டன் அரச குடும்பம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், "டெய்லி மிரர்' பத்திரிகைக்கு ஷில்பா அளித்த பேட்டியில்,"பிரிட்டன் ராணியை சந்திக்கப்போவதாக செய்தி வெளியானதில் இருந்து எனது மனது மகிழ்ச்சியில் ரெக்கை கட்டி பறக்கிறது. இதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். பிரிட்டனில் மேலும் சில நாட்கள் தங்கப்போகிறேன். இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டுள்ளது. இதனால் டோனி பிளேரை நான் சந்திப்பதற்கு தடை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. நான் தற்போது தனியாகத் தான் இருக்கிறேன். திருமணம் செய்து கொள்வதற்கும் தயார்.

ஆனால், என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புபவர், அதற்கு முன்பாக எனது தந்தையாரின் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் தகுதியைப் பெற்று இருக்க வேண்டும். அவரின் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். எனது பராமரிப்பிற்கு குறைவாகவே செலவாகும். ஆனால், எனது கணவராக வருபவர் எனக்கு வைரங்களாக வாங்கித் தர வேண்டும்,'என கூறியுள்ளார்.

http://www.dinamalar.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ்வளவுக்கு முக்கியமானவராய் விட்டார் சிலுப்பா செட்டி!பெண்ணென்றால் பேயும் இரங்குமாம். எம் பெருமானே இந்த உலகை நீதான் காப்பாத்த வேணும்.இந்த மூக்கி போல ஆக்களெல்லாம்............................என்ரை சிவனே.

யாழ் களத்தில் யாரும் வைரங்கள் வாங்கிக் கொடுக்கத் தயாரா?

அவ்வளவுக்கு முக்கியமானவராய் விட்டார் சிலுப்பா செட்டி!பெண்ணென்றால் பேயும் இரங்குமாம். எம் பெருமானே இந்த உலகை நீதான் காப்பாத்த வேணும்.இந்த மூக்கி போல ஆக்களெல்லாம்............................என்ரை சிவனே.

என்னை ஏன் இப்ப இதுக்குள்ள வம்புக்கு இழுக்குறிங்க? :angry: பின்னால துரத்திக்கொன்டு மற்றவரும் வந்திடுவார் வரிஞ்சு கட்டி கொண்டு...கு.ச தாத்தாவுக்கு இதல் முதல் எச்சரிக்கை..மீறினால் உங்களையும் எமது தாக்குதல் இலக்கு பட்டியலில் சேர்த்து விடுவோம்..முதலாவதாக நெடுக்க்ஸ் இருகிறார்..இரண்டாவதாக உங்களது பெயரையும் இணைக்க எமது பாதுகாப்பு சபை தீவிர ஆலோசனை செய்கிறார்கள்..உயிர் மேல் ஆசை இருந்தால்..பேசாமல் இருங்கள்! <_<

இனி ஷில்பாவைத் திட்டினால் சந்தோசப்படுவார் ஏனென்றால் கோடிகள் கிடைக்குமல்லவா.

வாருங்கள் ஷில்பாவைத் திட்டுவோம்.

செம்மரி ********** *********** ********* (சில சொற்களை நானே தடை செய்துவிட்டேன்)

இனி ஷில்பாவைத் திட்டினால் சந்தோசப்படுவார் ஏனென்றால் கோடிகள் கிடைக்குமல்லவா.

வாருங்கள் ஷில்பாவைத் திட்டுவோம்.

செம்மரி ********** *********** ********* (சில சொற்களை நானே தடை செய்துவிட்டேன்)

இது, ஒரு பெண் சாதித்து விட்டாள் என்ற பொறாமையில் கிடந்து திட்டி தீர்க்கிறார்கள்...னீங்களும் சேர்ந்து கொண்டு திட்டுறிங்களா?

இவர்களை முதலில் போட்டு தள்ள வேண்டும்..எமது படையணியில் வந்து சேர்ந்து எமது கரங்களை பலபடுத்துங்கள்!

ஷில்பா எதைச் சாதித்தார் என்று சொல்கிறீர்கள்.

அழுது கண்ணீர் வடித்து (நடித்து) அனுதாபத்தின் மூலம் இங்கிலாந்திலுள்ள இந்தியர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதா ?

ஷில்பா எதைச் சாதித்தார் என்று சொல்கிறீர்கள்.

அழுது கண்ணீர் வடித்து (நடித்து) அனுதாபத்தின் மூலம் இங்கிலாந்திலுள்ள இந்தியர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதா ?

சுத்தம்.. <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஷில்பா எதைச் சாதித்தார் என்று சொல்கிறீர்கள்.

அழுது கண்ணீர் வடித்து (நடித்து) அனுதாபத்தின் மூலம் இங்கிலாந்திலுள்ள இந்தியர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதா ?

உதைத்தனே எலலாரும் செயியினம் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை ஏன் இப்ப இதுக்குள்ள வம்புக்கு இழுக்குறிங்க? :angry: பின்னால துரத்திக்கொன்டு மற்றவரும் வந்திடுவார் வரிஞ்சு கட்டி கொண்டு...கு.ச தாத்தாவுக்கு இதல் முதல் எச்சரிக்கை..மீறினால் உங்களையும் எமது தாக்குதல் இலக்கு பட்டியலில் சேர்த்து விடுவோம்..முதலாவதாக நெடுக்க்ஸ் இருகிறார்..இரண்டாவதாக உங்களது பெயரையும் இணைக்க எமது பாதுகாப்பு சபை தீவிர ஆலோசனை செய்கிறார்கள்..உயிர் மேல் ஆசை இருந்தால்..பேசாமல் இருங்கள்! :rolleyes:

:D:lol::D:lol::lol:

பெண்கள் விவகாரமெண்டால் உவர் குமாரசுவாமி வருவார் எண்டு கண்கொத்திப்பாம்பாக காத்திருந்தேன். வந்திட்டார் சீ நீங்க ரொம்ப மோசமுங்க... :rolleyes:

  • தொடங்கியவர்

இது, ஒரு பெண் சாதித்து விட்டாள் என்ற பொறாமையில் கிடந்து திட்டி தீர்க்கிறார்கள்...னீங்களும் சேர்ந்து கொண்டு திட்டுறிங்களா?

இவர்களை முதலில் போட்டு தள்ள வேண்டும்..எமது படையணியில் வந்து சேர்ந்து எமது கரங்களை பலபடுத்துங்கள்!

இதற்குள்ளும் பெண்ணியமா எங்கே நெடுக்ஸ் ????? :P :P :P

வந்தது காலம் கண்டதுக்கெல்லாம் கவனிப்பாரற்று கிட்டந்ததுக்கெல்லாம் இப்ப வைரம் வாங்கிதாறவர் வேணுமாம் இந்தப்பக்கம் ஒரு கிசு கிசு பிக்ப்பிரதரில் கலந்து கொண்ட இயனுக்கும் இவாக்கும் பத்திக்கிச்சாம் உண்மையா

சபாஸ் அழகான தலைப்பு தலைப்போடு இணைந்த கு சா வாழ்க

கூடவே தம்பீ மூக்கியும் வாழ்க

அருமையான தலைப்பை இணைத்த ஈழவன்85 வாழ்க

:angry: :angry: :angry:

:D:lol::lol::rolleyes::lol:

கட்டையில போற வயசெண்டாலும், உயிர் மேல் ஆசை இருக்குது போல! :D

சபாஸ் அழகான தலைப்பு தலைப்போடு இணைந்த கு சா வாழ்க

கூடவே தம்பீ மூக்கியும் வாழ்க

அருமையான தலைப்பை இணைத்த ஈழவன்85 வாழ்க

:angry: :angry: :angry:

உங்களுக்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் தெரியாதோ சின்னப்பு? :angry: இதனால் தான் உங்களை எல்லோரும் வெறிக்குட்டி சின்னப்பு என்று கூப்புடுறினமோ? :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டையில போற வயசெண்டாலும், உயிர் மேல் ஆசை இருக்குது போல! :lol:

அதொண்டும் இல்லை ராசத்தி.உம்மை நினைக்கத்தான் கவலையாய் கிடக்கு.வாழுற வயசிலை உப்பிடி சண்டித்தனக்கதையெல்லாம் கதைக்க வெளிக்கிட்டுட்டியள். எப்பிடித்தான் ஒருத்தன்ரை கையைபுடிச்சு வாழப்போறியளோ?உங்களுக்கெண்டு பிறந்த அந்த அப்பாவி எங்கை இருக்கிறானோ.அந்தப்பொடியனை எம்பெருமான் தான் காப்பாத்தோனும்.என்ரை முருகா......ஏறுமயில் ஏறுவிளையா....................... :(

  • தொடங்கியவர்

அதொண்டும் இல்லை ராசத்தி.உம்மை நினைக்கத்தான் கவலையாய் கிடக்கு.வாழுற வயசிலை உப்பிடி சண்டித்தனக்கதையெல்லாம் கதைக்க வெளிக்கிட்டுட்டியள். எப்பிடித்தான் ஒருத்தன்ரை கையைபுடிச்சு வாழப்போறியளோ? உங்களுக்கெண்டு பிறந்த அந்த அப்பாவி எங்கை இருக்கிறானோ.அந்தப்பொடியனை எம்பெருமான் தான் காப்பாத்தோனும்.என்ரை முருகா......ஏறுமயில் ஏறுவிளையா....................... :(

:lol::(:D:D :P :P :P :P :P :lol::lol::lol::lol::lol:

அதொண்டும் இல்லை ராசத்தி.உம்மை நினைக்கத்தான் கவலையாய் கிடக்கு.வாழுற வயசிலை உப்பிடி சண்டித்தனக்கதையெல்லாம் கதைக்க வெளிக்கிட்டுட்டியள். எப்பிடித்தான் ஒருத்தன்ரை கையைபுடிச்சு வாழப்போறியளோ?உங்களுக்கெண்டு பிறந்த அந்த அப்பாவி எங்கை இருக்கிறானோ.அந்தப்பொடியனை எம்பெருமான் தான் காப்பாத்தோனும்.என்ரை முருகா......ஏறுமயில் ஏறுவிளையா....................... :lol:

கு.சா தாத்தா, ஈழவன்..நீங்க 2 பேரும் என்னை பற்றி ஒரு தவறான வதந்தியை கிளப்பி விடிருங்கீங்க,

இது நல்லதுக்கல்ல..இப்படியே போச்சுதெண்டால், .......... :angry:

உங்களுக்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் தெரியாதோ சின்னப்பு? :angry: இதனால் தான் உங்களை எல்லோரும் வெறிக்குட்டி சின்னப்பு என்று கூப்புடுறினமோ? :P

ஓமடா தம்பீ நீ சொன்னா சரி தானப்பு

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் தெரியாதோ சின்னப்பு? :angry: இதனால் தான் உங்களை எல்லோரும் வெறிக்குட்டி சின்னப்பு என்று கூப்புடுறினமோ? :P

எவன் சொல்லுவான் உம்மை பார்த்து பொம்புளை எண்டு.உங்கடை நடவடிக்கையள் எல்லாம் ஆம்பிளையளை மாதிரித்தானே இருக்கு.நடை,உடை,பாவனை எல்லாம் ஆம்பிளையளை மிஞ்சிட்டுது.அதை விட இப்ப நாயோடை திரியிறியள்.என்ன மாதிரி நாய் வைச்சிருக்கிறது காவலுக்கோ இல்லாட்டி வேட்டைக்கோ?நீங்கள் ஆருக்கும் கொலை மிரட்டல் விட்டுட்டு இப்ப நாயோடை பாதுகாப்பாய் திரியிறியள்.நல்ல முசுப்பாத்திதான். :P

  • கருத்துக்கள உறவுகள்
fpnmixlr7.jpg

ஓமடா தம்பீ நீ சொன்னா சரி தானப்பு

:P

இங்கெ ஒரு முழு மன நோயாளியும், ஒரு அரை மனனோயாளியும் தான் இருகிறார்கள் என்று நினைத்தேன்..ஆனால் நிறைய பேர் இருக்கினம் போல( யார் அந்த அரை மன நோயாளி என்று தயவு செய்து கேக்க வேண்டாம், நான் அது நம்ம கு.சா தாத்தா என்று கடைசி மட்டும் சொல்ல மாட்டன்) :icon_idea: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.