Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியத் கூட்டமைப்பு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இன்றும் சாட்சியம் பதிவு

Featured Replies

தமிழ் தேசியத் கூட்டமைப்பு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இன்றும் சாட்சியம் பதிவு

 

தமிழ் தேசியத் கூட்டமைப்பு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இன்றும் சாட்சியம் பதிவு

யாழ்.தீவகத்தில் தமிழ் தேசியத் கூட்டமைப்பு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக இன்றும் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தீவகப் பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் நாரந்தனை எனுமிடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 20 பேர் வரையில் காயமடைந்தனர்.

இந்த வழக்கு விசாரணை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் இன்று சாட்சியம் பதிவு செய்தனர்.

இந்த தாக்குதலின் போது யாழ். பல்கலைகழகத்தின் ஊழியர் பேரம்பலம் மற்றும் கட்சி ஆதரவாளர் கமல்ஸ்டான் ஆகியோர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாக எம்.கே.சிவாஜிலிங்கம் சாட்சியமளித்துள்ளார்.

ரி- 56 ரக துப்பாக்கியுடன் வருகை தந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சாட்சியளித்துள்ளார்.

இந்த வழக்கின் மூன்றாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜீவன் தனது வாகனத்தை சூழ்ந்து தாக்குதல் நடத்தியதாகவும், வால் போன்ற கோடறியால் வெட்டித் தாக்கியதாக எம்.கே.சிவாஜிலிங்கம் நீதிமன்றத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தேகநபரான நெப்போலியனின் கட்டளைக்கு அமைய துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தனது வாகனம் நான்காவதாக பயனித்ததாகவும், தாக்குதல் மேற்கொண்டவர்கள் தங்களை சூழ்ந்து நின்று தாக்குதல் நடத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று நீதிபதி முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார்.

சுமார் நாற்பது பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தான் காயமடைந்த பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் தன்னையும், சம்பவத்தின் போது உயிரிழந்த பேரம்பலத்தையும் அவருடைய காரில் ஏற்றி யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இந்த வழக்கு விசாரணையை நாளை 9.30 இற்கு விசாரிப்பதற்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

யாழ் தீவகப் பகுதியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை நான்கு பேரின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://newsfirst.lk/tamil/2016/11/தமிழ்-தேசியத்-கூட்டமைப்ப/

  • தொடங்கியவர்
காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலும் கலைத்து கலைத்து தாக்கினர்- தீவக தாக்குதல் வழக்கில் சிவாஜிலிங்கம் சாட்சியம்
 
 
காயமடைந்து  வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லும் வழியிலும் கலைத்து கலைத்து தாக்கினர்- தீவக தாக்குதல் வழக்கில் சிவாஜிலிங்கம் சாட்சியம்
தீவக கொலைச் சம்பவ வழக்கு விசாரணையில் போது ரவிராஜ் இன் சாட்சியினை 13 ஆவது சான்றாக மன்று ஏற்றுக்கொண்டுள்ளது. 
 
யாழ் தீவகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ்த்தேசிய உறுப்பினர்கள் மீது ஈ.பி.டி.பி யினர் மீது 2001/11/28 அன்று மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக தொடர் வழக்கில். ஆறாம் நாளான இன்றைய தினம் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு கொண்டு நடாத்தப்பட்டது. 
 
சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைய விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ப்பட்ட இவ்வழக்கினை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன்  விசாரணை செய்தார்  அரச தரப்பு சட்டத்தரணியாக நிஷாந்தன் ஆஜராகி இருந்தார். 
 
வழக்கின் 7 ஆவது சாட்சியான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, 8 ஆவது சாட்சியான வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் சாட்சிகள் நீதிமன்றினால் அனு மதிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. 
 
அந்த வகையில் இன்றையதினம் மாலை 1:30 மணியளவில் ஆரம்பமான வழக்கு விசார ணையில் முதலாவதாக 8 ஆவது சாட்சியான சிவாஜிலிங்கம்  அவர்கள் சாட்சியமளித்தார்.
 
அந்த வகையில் சிவாஜிலிங்கம் . வழங்கிய சாட்சியில் முக்கியமாக தான் இந்த குற்றச் சம்ப வத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராகவும். இந்த சம்பவத்தை நேரில் பார்த்து அனுபவித்ததாகவும் சம்பவம் நடந்த இடத்திலும்,காயமடைந்து வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழிலும் தொடர்சியான தாக்குதல்களுக்கு உள்ளானதாக தெரிவித்தார். 
 
அத்தோடு தன்னை ஈ.பி.டி.பி. இன் நெப்போலியன் தலைமையிலான குழு தாக்கியதாகவும். அக் குழுவைச் சேர்ந்தவர்கள் தனது இடது காலில் சுட்டதாகவும் உடம்பில் பல இடங்களில் வாளால் வெட்டியதாகவும், இரும்புச் சட்டங்களால் தாக்கியதாகவும் தெரிவித்தார். 
 
அது மட்டுமல்லாமல் இன்றையதினம் எதிரிகள் கூண்டில் இருக்கும் ஜீவன் அவர்கள் இறந்து போனவர்களான ஏரம்பு பேரம்பலம், மற்றும் கமல்ஸ்ரோன் கமல் போன்றோரை வெட்டி யதாகவும். சம்பவ இடத்தில் நெப்போலியன் தகாத வார்த்தைகளால் கத்திக்கொண்டு தாக்கி யதாகவும் தெரிவித்தார். 
 
சிவாஜி சிவப்பு சேட்டோடு ஓடுகிறான் விடாதேங்கோ என்று கூறியபடி தாக்கியதாக தெரி வித்த சிவாஜிலிங்கம். தனது கால் தற்போது ஓர் இஞ்சி சிறிதாக இருப்பதற்கு காரணமும் அன்றைய தாக்குதல் சம்பவம் தான் எனத் தெரிவித்தார். 
 
அத்தோடு சம்பவ இடத்தில் அதாவது இந்த சம்பவம் நடந்து முடிந்த சில நிமிடங்களுக்குப் பின்னர் இவ் வழக்கின் இரண்டாம் எதிரியான மதன் என்னும் மதனராசாவை வாக்கி டோக்கி யுடன் கண்டதாகவும். அது மட்டுமல்லாமல் தான் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் கடற்படை காவலரணுக்கு அண்மையில் கடற்படையினர் இருவருடன் பேசியபடி வந்த தாகவும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் இன்றைய தினம் 4ஆம் எதிரியாக இருக்கும் கருணாகரமூர்த்தி கையில் இரும்புக் கம்பியுடன் வைத்தியசாலைக்கு வரும்வழியில் தான் சென்ற ஆட்டோவை தாக்கி அச்சுறு த்தியதையும் கண்டதாகவும்  அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார். 
 
 
மேலும் இவ் வழக்கின் தொடர் விசாரணை மற்றும் சாட்சிகளின் பதிவுகள் நாளைய தினம் 29 ஆம் திகதி செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறுவதோடு எதிர்வரும் 4 ஆம் 5 ஆம் திகதிகளில்  இவ் வழக்கு விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க படுகின்றது. 

http://www.onlineuthayan.com/news/20765

  • தொடங்கியவர்
வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்-தீவக தாக்குதல் குறித்த சாட்சியத்தில் மாவை
 
 
வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்-தீவக தாக்குதல் குறித்த சாட்சியத்தில் மாவை
தீவக தாக்குதல் சம்பவத்தை வாழ் நாளில் என்றுமே மறக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் இன்றையதினம்யாழ்.மேல்நீதிமன்றில் இடம்பெற்ற சாட்சியத்தில் தெரிவித்தார்.
 
தீவக தாக்குதல் தொடர்பில் இன்றைய வழக்கின் 7 ஆவது சாட்சியான நாடாளுமன்ற உறு ப்பினர் மாவை சேனாதிராசா, 8 ஆவது சாட்சியான வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலி ங்கத்தின் சாட்சிகள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. 
 
அந்த வகையில் இன்றையதினம் மாலை 1:30 மணியளவில் ஆரம்பமான வழக்கு விசார ணையில் இரண்டாவதாக 8 ஆவது சாட்சியான மாவை சேனாதிராசா  அவர்கள் சாட்சி யமளி த்திருந்தார். 
 
அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா  வழங்கிய சாட்சியில், வாழ்நாளில் மறக்கமுடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்றெனவும். இந்த சம்பவத்தினை தான் நேரில் கண்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் தானும் ஒருவன் என தெரிவித்ததோடு. தன்னைத் தாக்கியவர் கறுத்த நிறத்தோற்றமுடைய குள்ளமானவர் எனத் தெரிவித்ததோடு எதிரிக் கூண்டில் நின்ற மூன்றாம் எதிரியான ஜீவனைக் சுட்டிக்காட்டி அடையாளப்படுத்தி னார்.  
 
அத்தோடு அத் தாக்குதல் சம்பவத்தினை முன்னின்று நாடாத்திய நெப்போலியனை தனக்கு நன்கு தெரியும் எனவும் சம்பவ இடத்தில் நெப்போலியன் உட்பட சுமார் 50இற்கும் மேற்பட்ட நபர்கள் தங்களைத் தாக்கியதாகவும், அதில் நெப்போலியன் இவன்தான் மாவை, இவன்தான் சேனாதிராசா என தெரிவித்தவாறு தம்மைத் தாக்கியதாகவும்,என்னைத் தாக்கியபோதுஎனது மெய்ப்பாதுகாவலரான தமிழ்வேந்தன் என்னை கட்டிப் பிடித்து காப்பாற்ற முற்பட்ட வேளை தமிழ் வேந்தனை ஜீவன் உள்ளிட்டோர் இழுத்துச் சென்றனர். அச் சந்தர்ப்பத்தில் எனக்கு நெற்றிக்கு மேலே தலைப்பகுதியில் பலமான அடி இரும்புக் கம்பியினால் விழுந்ததாகவும். இரத்தம் கண்ணை மூடி உடம்பை நனைத்ததாகவும் தெரிவித்தார் 
 
நெப்போலியனை எனக்கு நன்கு தெரியும் அவர் சம்பவ இடத்தில் நின்றதாகவும், கையில் இரும்புக் கம்பியோ அலவாங்கோ போன்ற ஒன்றை வைத்திருந்ததோடு அவரின் தோளில் T56 ரக துப்பாக்கி இருந்ததாகவும். அச் சம்பவம் நடந்த இடத்தில் சம்பவ நேரம் பல துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார். 
 
அத்தோடு இத் தாக்குதல் சம்பவத்தில்எனக்கு தலையில் பாரிய காயங்கள் ஏற்பட்டதுடன், வலது கையில் முறிவும், இடது தோள் பட்டையில் காயமும் ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் ரவிராஜ் அவர்களது வாகனத்திலேயே தான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்ப ட்டாகவும் தன்னுடன் ஏரம்பு பேரம்பலம் அவர்கள் பலத்த காயங்களுடன் வந்ததாகவும். அவர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாகவும் அறிய முடிந்தது என்றார். 
 
மேலும் மாவை அவர்கள் கூறும்போது தக்குதல் சம்பவம் நடந்த இடத்தின் அருகில் கடற்ப்படை காவலரன் இருந்தது. ஒரு பச்சை நிற ரக் வண்டி மெதுவாக சென்றது. என்பதனையும் அவர் அங்கு நினைவுபடுத்தியதோடு, இத் தாக்குதல் சம்பவம் வேண்டும் என்றே செய்யப்பட்ட நன்கு திட்டமிடப்பட்டு செயலாகும் இதற்காக நீதி வாசாரணையானது விரைவில் தீர்கப்படவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 
 
மேலும் இவ் விளக்கு விசாணையில் போது எரித்தரப்பி சட்டத்தரணி றெமிடியஸ் அவர்கள்  நீண்ட நேரமாக சாட்சிகளை குறுக்கு விசாரனை செய்தமையையும் அவமாணிக்க முடிந்தது.  
மேலும் இவ் வழக்கின் தொடர் விசாரணை மற்றும் சாட்சிகளின் பதிவுகள் நாளைய தினம் 29 ஆம் திகதி செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறுவதோடு எதிர்வரும் 4 ஆம் 5 ஆம் திகதிகளில்  இவ் வழக்கு விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க படுகின்றது. 

http://www.onlineuthayan.com/news/20767

  • தொடங்கியவர்
ஆக்ரோசமாக தாக்கினார் மதனராசா - தீவக தாக்குதல் வழக்கில் சுரேஸ் சாட்சியமளிப்பு
 
ஆக்ரோசமாக தாக்கினார் மதனராசா - தீவக தாக்குதல் வழக்கில்  சுரேஸ் சாட்சியமளிப்பு
மதனராசா தகாத வார்த்தைகளால் பேசியபடி கையில் வைத்திருந்த கொட்டனால் ஆக்ரோசமாக தாக்கி னார்உன சுரேஸ்  பிரேமச்சந்திரன்   சாட்சியமளித்தார்.  
 
யாழ் தீவகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ்த்தேசிய உறுப்பினர்கள் மீது ஈ.பி.டி.பி யினர் 2001/11/28 அன்று மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக தொடர் வழக்கு விசாரனையின் ஏழாவது  நாளான இன்றைய தினம் வழக்கின் 25 ஆவது சாட்சியான நவரட்ணம் கணேஸ்வரன் மற்றும் 31 ஆவது சாட்சியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தையா பிறேமச்சந்திரன் அதாவது சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் அழைக்கப்பட்டு அவர்களது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. 
 
அந்த வகையில் இன்று காலை 10:30 மணியளவில் ஆரம்பமான வழக்கு விசாரணையில் இரண்டாவதாக இவ் வழக்கின் 31 ஆவது சாட்சியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சாட்சி யமளித்திருந்தார். அப்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கையில் 
 
இந்த சம்பவம் என் வாழ்வில் நடந்த மிக முக்கியமான சம்பவமாகும் எனவே அங்கு நடந்தவை அனைத்தும் நூற்றுக்கு நூறு வீதம் எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் தேர்தல் பரப்புரைக்காக ஊர்காவற்துறையை நோக்கி சென்று கொண்டிருந்த வழியில் நாரந்தனை என்னும் இடத்தில் வழிமறித்து தக்கினார்கள். வெள்ளை நிற கன்டர் வாகனத்தில் வந்த சுமார் 40-50 பேர் நான் சென்ற வாகனத் தொடரணியில் முன்னால் சென்ற வாகனங்களை தாக்கியதை என்னால் காணக்கூடியதாக இருந்து. 
 
அந்த சம்பவம் நடந்த இடத்தில் பெருமளவிலான துப்பக்கி வேட்டுக்களும், வாகனங்களை அடித்து நொருக்கும் சத்தமும் கேட்டது. அது மட்டுமல்லாமல் இவர்களை கொல்லுங்கள், வெட்டுங்கள், அடியுங்கள் விடாதையுங்கோ,என சந்தங்கள் கேட்டதுடன் காப்பாற்றுங்கள் என்று கத்தும் சத்தமும் பலமாக கேட்டது. 
 
இந்த சம்பவத்தில் சம்பவ இடத்தில் காயத்துக்கு இலக்கான மாவை சேனாதிராசாவை சம்பவம். நடந்த 20-30 நிமிடங்களில் அந்த இடத்தில் இருந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும். அவரை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வாகனம் ரவிராஜ் இன் உடையது.. நான் வந்த கார் அந்த நேரத்தில் தாக்கப்படாத  போதும் அதனை திருப்பி கொண்டுவர முடியவில்லை ஆதலால் நானும் ரவிராஜ் வாகனத்தி லேயே  யாழ்ப்பாணம் வந்துவிட்டேன். 
 
சம்பவ இடத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த முதல் வாகனம் அதுதான். அந்த வாகனத்தில் மாவை, நான், ஏரம்பு உட்பட காயப்பட்ட வேறு சிலரும் இருந்தனர். 
 
அச்சம்பவம் நடந்த இடத்தில் மதனராசா நின்றது எனக்கு நன்கு தெரியும். அது மட்டுமல்ல மதனராசா அவர்கள் என்னுடன் நன்கு அறிமுகமானவர். அவர் EPRLF இல் என்னுடன் இருந்தே பின்னர் EPDP இல் இணைந்தவர் என்பதால் அவரை இலகுவில் என்னால் அடையாளம் காண முடிந்தது. நான் சம்பவ இடத்தில் சம்பவம் நடந்த நேரம் மதனராசாவைக் கண்டேன். எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது சாட்சியத்தின் போது தெரிவித்திருந்தார். 
 
மேலும் இத் தொடர் வழக்கு விசாரணையில் அடுத்த விசாரணை நாளைய தினம் மாலை 1:30 மணியளவில் இடம்பெறும் என நீதிபதி மா. இளஞ்செழியன் அவர்களால் அறிவிக்கப்பட்டது. 

http://www.onlineuthayan.com/news/20802

  • தொடங்கியவர்
வாகனத்தில் இருந்து இறங்குபவர்களை தாக்கினார் நெப்போலியன்-தீவக தாக்குதல் வழக்கில் கணேஸ்வரன் சாட்சியம்
 
 
வாகனத்தில் இருந்து இறங்குபவர்களை தாக்கினார் நெப்போலியன்-தீவக தாக்குதல் வழக்கில் கணேஸ்வரன் சாட்சியம்
நாங்கள் வாகனத்தில் இருந்து இறங்க இறங்க நெப்போலியன் எங்களைத் தாக்கினார் என கணேஸ்வரன் இன்றையதினம்   சாட்சி யமளித்தார். 
 
யாழ் தீவகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது ஈ.பி.டி.பி யினர்  2001/11/28 அன்று மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக தொடர் வழக்கு விசாரணையின் ஏழாவது  நாளான இன்றைய தினம் வழக்கின் 25 ஆவது சாட்சியான நவரட்ணம் கணேஸ்வரன் மற்றும் 31 ஆவது சாட்சியான முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் கந்தையா பிறேமச்சந்திரன் அதாவது சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் அழைக்கப்பட்டு அவர்களது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. 
 
அந்த வகையில் இன்று காலை 10:30 மணியளவில் ஆரம்பமான வழக்கு விசாரணையில் முதலாவதாக இவ் வழக்கின் 25 ஆவது சாட்சியான நவரட்ணம் கணேஸ்வரன் சாட்சியளித்தார். 
 
அந்த வகையில் கண்கட்ட சாட்சிகளில் ஒருவரான கணேஸ்வரன்  தான் அந்த தாக்குதலில் பலத்த தாக்குதல்களுக்கு உட்பட்டு மயக்கமடைந்த நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர். 
 
நெப்போலியன் தலைமையிலான சுமார் 30-40 பேர் வரையான குழுவினர் தாக்கினார்கள் என்றும் அத் தாக்குதல் சம்பவத்தில் நெப்போலியனை தான் கண்டதாகவும், நெப்போலியன் அந்தக் குழுவிற்கு தம்மை அடிக்குமாறும், கொல்லுமாறும் கட்டளை யிட்டபடி தாக்கினார் எனவும் நெப்போலியனிடம் T56 துப்பாக்கி மற்றும் இரும்புக் கம்பி இருந்ததாகவும், நாங்கள் சென்ற முதலாவது வாகனத்தில் கண்ணாடிகளை அவர்கள் நொருக்கினார்கள் எனத் தெரிவித்தார். 
 
வாகனத்தில் இருந்து எல்லோரும் வேகமாக அந்தரப்ப்பட்டு இறங்கியவேளை   என்னால் இறங்க முடியவில்லை. காரணம் என்மீது உடைந்த கண்ணாடிகள்  பட்டு காயமடைந்து இருந்தேன். ஒருவாறாக வாகனத்தில் இருந்து இறுதியாக நான் இறங்கிய போது கமல்ஸ்ரோன் முகங்குப்புற விழுந்து கிடந்ததையும், ஏரம்பு பேரம்பலத்தை யாரோ தாங்கிப்பிடித்தபடி கூட்டிச் சென்றதையும், சிவாஜிலிங்கம் வெட்டுக் காயங்கள் மற்றும் சுடப்பட்ட நிலையில் நடக்க முடியாமல் பற்றைக்குள் கிடந்ததையும் கண்டேன் என்றார். 
 
நெப்போலியனை எனக்கு நன்கு அடையாளம் காட்டமுடியும். அவர் இன்று இங்கு இல்லை எனவும் தெரிவித்த அவர் தான் வாக னத்தில் இருந்து இறங்கியவுடன் எனது இரண்டு கால் தொடைப்பகுதி பலமாக வெட்டப்பட்டும், வலது கை மற்றும் தோள்பட்டையில் இரும்புக் கம்பியால் தாக்கினார்கள் எனவும்  தெரிவித்தார். 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.