Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலனாய்வுத்துறையினர் எமது வீட்டில் கஞ்சாவை வைத்துவிட்டு எனது கணவரை கைது செய்ய முற்படுகிறார்கள்.

Featured Replies

எனது குடும்பத்துக்கு பாதுகாப்புத் தேவை! உண்மையைக் கூறும் குழுமத்திடம் பெண் கோரிக்கை

12565.jpg

புலனாய்வுத்துறையினர் எமது வீட்டில் கஞ்சாவை வைத்துவிட்டு எனது கணவரை கைது செய்ய முற்படுகிறார்கள்.எனது குடும்பத்துக்கு பாதுகாப்புத் தேவை என குடும்பப் பெண் ஒருவர் உண்மையைக் கூறும் குழுமம் முன்னிலையில் கோரிக்கை விடுத்துள்ளார். 

வட மாகாண உண்மையைக் கூறும் குழுமத்தின் அமர்வு நேற்றைய தினம் யாழ்.சரஸ்வதி மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு சாட்சியம் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் தொடர்ந்து சாட்சியம் அளிக்கையில்

நான் அல்லாரை வடக்கு கொடிகாமம் பகுதியில் வசித்துவருகிறேன்.  தனது கணவன் தமிழீழ காவல் துறையில்  கடமையாற்றி இருந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு எனது கணவர் சந்தேகத்தின் பேரில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பின்னர் தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு தற்போது என்னுடன் உள்ளர். 

அவர் கடும்  சித்திரவதைகளுக்குள்ளான காரணமாக அவர் உடல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். செல்லமுடியாத நிலையிலும் சில வேளைகளில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். 

அண்மையில் எமது வீட்டுக்கு பொலிஸ் புலனாய்வு துறையினர் என தெரிவித்து வந்த சிலர் கஞ்சாவை கொண்டு வந்து எமது வீட்டில் வைத்துவிட்டு எனது கணவரை கைது செய்ய முற்பட்டார்கள். கஞ்சா என்றாலே எவ்வாறு இருக்கும் என்று அன்றுதான் எமக்கு தெரியும். நாம் அனைவரும் கூக்குரல் இட்டு மிகவும் போராடியதில் எனது கணவரை விட்டுச்சென்றார்கள் .

இந்த விடயத்தை வெளியில் சொல்லக்கூடாது என சொன்னார்கள். அதனால் நான் இது தொடர்பாக யாரிடமும் முறைப்பாடு செய்யவில்லை. பயத்தின் காரணமாகவே இத்தனை நாளாக வெளியில் சொல்லாமல் இருந்தோம். 

இவ்வாறான அச்சுறுத்தல் காரணமாக எனது கணவர்  பயத்தில் வேலைகளுக்கு வெளியில் போவதில்லை. எமக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத காரணத்தினால் நான் கூலிவேலைக்கு சென்று வருகிறேன்.

பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பமான நிலையில் இருந்து மீண்டு வந்த போதிலும் மீண்டும் மீண்டும் எம்மை இராணுவத்தினர் துன்புறுத்திக்கொண்டு இருக்கிறார்கள். எமக்கு  உதவி செய்வதாக கூறி எனது கணவர் இருப்பதை  உறுதி செய்வதற்காகவே அடிக்கடி தொலைபேசியில்  விரட்டுகிறார்கள்.அண்மையில் நடைபெற்ற  மாவீரர் தினத்தில் அன்றும் எமக்கு அவர்களிடம் இருந்து எனது கணவனை தேடி தொலைபேசி அழைப்பு வந்திருந்தது.  

எமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது.எனது கணவருக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு வேவைப்படுவதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் எமக்கான வாழ்வாதார உதவிகளையும்  பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=12565&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குடும்பத்தின் அச்சத்தைப் போக்க, வட  மாகாண முதல்வர் நேரடியாக  தலையிட்டு, 
அவர்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு உறுதி கொடுக்க வேண்டும்.
 

On 30/11/2016 at 11:13 AM, Athavan CH said:

அண்மையில் எமது வீட்டுக்கு பொலிஸ் புலனாய்வு துறையினர் என தெரிவித்து வந்த சிலர் கஞ்சாவை கொண்டு வந்து எமது வீட்டில் வைத்துவிட்டு எனது கணவரை கைது செய்ய முற்பட்டார்கள். கஞ்சா என்றாலே எவ்வாறு இருக்கும் என்று அன்றுதான் எமக்கு தெரியும். நாம் அனைவரும் கூக்குரல் இட்டு மிகவும் போராடியதில் எனது கணவரை விட்டுச்சென்றார்கள் .

கேரளா கஞ்சா என்பது சிங்கள - ஹிந்திய பயங்கரவாதிகளின் நீண்டகால கூட்டுச் சதியாக இருந்து வருகிறது.
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 30.11.2016 at 6:43 AM, Athavan CH said:

புலனாய்வுத்துறையினர் எமது வீட்டில் கஞ்சாவை வைத்துவிட்டு எனது கணவரை கைது செய்ய முற்படுகிறார்கள்.

இது இந்தியன் ஸ்டைல் எல்லோ??!?!?!?!?!?!?!?!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.