Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் இன்று

Featured Replies

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் இன்று
2016-12-01 10:17:37

21005World-AIDS-day.jpgஉலக எய்ட்ஸ் தினம் இன்று அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி. வைரஸ் தொடர்­பான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தவும், பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு ஆத­ரவுக் கரம் நீட்­டவும், வரு­டாந்தம் டிசம்பர் முதலாம் திகதி உலக எய்ட்ஸ் தின­மாக அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது.


எய்ட்ஸ் நோய்


பல்­வேறு நோய்கள் தாக்­கப்­பட்ட ஒரு­வ­ருக்கு, அவ­ரு­டைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்­கி­யி­ருக்கும் நிலைதான் எய்ட்ஸ் ((Acquired Immune Deficiency Syndrome -AIDS ).


எச்.ஐ.வி (Human Hmmunodeficiency Virus -HIV)  எனும் வைர­ஸால்தான் எய்ட்ஸ் ஏற்­ப­டு­கி­றது. இது மனி­தர்­களின் இயற்­கை­யான நோய் எதிர்ப்புத் தன்­மையில் நிரந்­தர பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கி­றது.


ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்­டு­காலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய்­களை இழக்கும் தன்­மையைப் பெறும் போதுதான் எய்ட்ஸ் நோயா­ளி­யா­கிறார். ஓர் ஆண்­டுக்குள் அவ­ருக்கு ஏரா­ள­மான நோய்கள் ஒன்றன் பின் ஒன்­றாக தொற்றிக் கொள்ளும் நிலை ஏற்­ப­டு­கி­றது.


பாது­காப்­பற்ற உறவு, எச்.ஐ.வி. உள்ள தாய் மூலம் குழந்­தைக்கு, பரி­சோ­திக்­கப்­ப­டாத இரத்தம், சுத்­தி­க­ரிக்­கப்­ப­டாத ஊசி ஆகிய கார­ணங்­களால் எச்.ஐ.வி., தாக்­கு­கி­றது. இதைத்­த­விர அவர்­களின் பொருட்­களை பயன்­ப­டுத்­து­வது, அவர்­களை தொடு­வது ஆகி­ய­வற்றால் எச்.ஐ.வி., பர­வாது என விஞ்­ஞா­னிகள் கூறு­கின்­றனர்.

 

21005_aids-600.jpg


உலகில் 7.8 கோடி பேருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்­பட்­டுள்­ளது. எய்ட்ஸ் நோயினால் 3.6 கோடி இறந்­துள்­ளனர் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.


ஜெனீ­வா­வி­லுள்ள உலக சுகா­தார ஸ்தாப­னத்தில் எய்ட்ஸ் கட்­டுப்­பாட்டுத் திட்­டத்தின் தக­வல்­துறை அதி­கா­ரி­க­ளாக பணி­யாற்­றிய ஜேம்ஸ் டபிள்யூ பண் மற்றும் தோமஸ் நெட்டர் ஆகியோர் உலக எய்ட்ஸ் விழிப்­பு­ணர்வு தினம் குறித்து யோச­னையை 1987 ஆம் ஆண்டு முன்­வைத்­தனர்.


இவர்­களின் யோச­னையை, எய்ட்ஸ் தொடர்­பான பூகோள செயற்­திட்டப் பணிப்­பா­ள­ராக விளங்­கிய டாக்டர் ஜொனதன் மான் அங்­கீ­க­ரித்தார். 1988 டிசம்பர் முதலாம் திக­தியை உலக எய்ட்ஸ் விழிப்­பு­ணர்வு தின­மாக அனுஷ்­டிப்­ப­தற்கும் இணக்கம் காணப்­பட்­டது.


அப்­போ­தி­ருந்து வரு­டாந்தம் டிசெம்பர் முதலாம் திகதி உலகின் அனைத்து பாகங்­க­ளிலும் எய்ட்ஸ் விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.


2007 ஆம் ஆண்டு முதல் அமெ­ரிக்க வெள்ளை மாளிகை கட்­ட­டத்தில் எய்ட்ஸ் விழிப்­பு­ணர்வை குறிக்கும் பாரிய சிவப்பு நாடாக காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

21005_2016-World-AIDS-Day-theme.jpg


2016 ஆம் ஆண்டின் உலக எய்ட்ஸ் தினத்­துக்­கான தொனிப்­பொருள் எச்.ஐ.வி. தடுப்­புக்­காக கரம் உயர்த்­துங்கள் (Hands up for HIV prevention) என்பதாகும்.


ஐ.நாவின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் ஒரு பகுதியாக, 2030 ஆம் ஆண்டு எச்.ஐ.வி. பரவலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=21005#sthash.7DIaaAp9.dpuf

 

  • தொடங்கியவர்

''17 வயதில் இருந்தே ஆண்களுடன் செல்ல பழகினேன், 2 ஆண்கள் வந்து விட்டால் வீட்டிற்கு வருவதற்கு மறுநாளாகிவிடும்'' : எச்.ஐ.வி கைதியின் வாக்குமூலம்

 

 

வாழ்க்கையில் அவல நிலையை யாரும் தேடிப்போவதில்லை. ஆனால் சில சமயம் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு அவர்கள் ஆட்பட்டுவிடுகின்றார்கள். 

அவ்வாறு, தான் எடுத்த பிழையான தீர்மானத்தால்  எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகி, தனது வாழ்கையை தொலைத்த பெண் ஒருவரின் நியாயப்பாடுகளுக்கு அப்பாலான சோகக் கதையே இது,

HIV-sri-lanka-world.jpg

வவுனியா வளமிக்க நிலப்பரப்பில் விவசாயத்தை ஜீவனோபாயமாகக் கொண்ட மக்கள் வாழும் மிகவும் ரம்மியமான குக்கிராமம். மூன்று தசாப்தகால ஆயுதப் போராட்டம் வடிந்து போன பின்னர் செழுமை பயிரில் மக்கள் வாழ்வை மீள் எழுப்பப் பாடு பட்ட தருணம். ஆனால் பின் தங்கிய சூழல் , வறுமை , அடிப்படை வசதிகள் போய்ச் சேராத நிலை . இவை இந்த குக்கிராமத்தின் அடையாளங்களாகும். சிறார்கள் கல்வியைத் தேடி கூரையற்ற பள்ளி அறைகளுக்கு ஓடினார்கள். ஒரு வேளை உணவு, கொஞ்சம் கல்வி இதுவே அந்த சிறார்களின் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.

அவ்வாறு குறித்த பாடசாலைக்கு அனுப்பப்பட்ட - மாணவியே நவலக் ஷி

தனது வாழ்வில் இடம்பெற்ற இன்னல்கள் அழைத்துச் செல்லப்பட்ட இடங்கள் என்பவற்றை நவலக் ஷி

இவ்வாறு விபரிக்கின்றார்,

 

 

ஆண்கள் அழைப்பார்கள். நான் செல்வேன். அவ்வாறு சென்று பொலிஸாரிடம் பிடிபட்ட பின்னர் இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

இந்த இடம் நன்றாக உள்ளது. காலையில் எழுவது , வேலைகளைச் செய்வது , வழிபாடுகளில் ஈடுபடுவது , சிகிச்சைக்குச் செல்வது அதன் பின்னர் புத்தகங்களை வாசிப்பது , நித்திரைக்குச் செல்வது என்பது எமது அன்றாட செயற்பாடுகளாகும்.

வரலாற்று நூல்கள் , தமிழ் புத்தகங்கள் மற்றும் ஒரு சில சிறிய ஆங்கில மொழி புத்தகங்களையும் விரும்பி வாசிப்பேன்.

அம்மா , அப்பா , அண்ணா , இரண்டு சகோதரிகள் . தம்பி உயிரிழந்து விட்டார். நான் குடும்பத்தில் இரண்டாவது.

தற்போது எனக்கு 25 வயது. ஒரு மகன் இருக்கின்றான். 10 ஆம் வகுப்பு வரை பாடசாலைக் கல்வியை கற்றேன்.

எமது கிராமத்தில் இருந்த அக்கா தான் எனக்கு பல்வேறு ஆசைகள் காண்பித்து இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டேன். பின்னர் அடிமையாகி போனேன். 17 வயதில் இருந்தே ஆண்களுடன் செல்ல பழகினேன். அவர்கள் எனக்கு பணம் தருவார்கள்.

அம்மா , அப்பா போதைக்கு அடிமையானவர்கள். வறுமை , பணம் இல்லை. சாப்பிட உணவு இல்லை. தம்பிக்கும் தங்கைக்கும் புத்தகம் வாங்க பணம் தேவைப்பட்டது. எனவே தான் ஆண்களுடன் போனேன்.

ஆரம்பத்தில் எனக்கு மிகவும் வேதனையாகவும் கஷ்டமாகவும் இருந்தது . ஒரு வகையான மருந்தினை அந்த அக்கா எனக்கு கொடுத்தார். அதன் பின்னர் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. என்னை கட்டுப்படுத்த முடியாது அந்த தொழில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

ஆரம்பத்தில் அம்மா அமைதியாக இருந்தார். ஆனால் பின்னர் என்னை கண்டித்து நிறுத்தினார். ஆனால் என்னால் நிறுத்த முடியாமல் போனது. பல சந்தர்ப்பங்களில் அம்மாவுடன் சண்டை பிடித்துக் கொண்டு ஆண்களுடன் சென்றேன்.

அம்மா , அப்பா போதைக்கு அடிமையானவர்கள். எனவே அவர்கள் எமது தேவைகளை நிறைவேற்றவில்லை. ஆகவே ஒரு கட்டத்தில் ஆண்களுடன் செல்வதை என்னை அறியாமலேயே தொழிலாக்கிக் கொண்டேன்.

இவ்வாறு செல்லும் போது ஒரு ஆணிடம் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் வரை பணம் கிடைக்கும். ஒரு நாளைக்கு இரண்டு பேருடன் செல்லும் சந்தர்ப்பங்களும் உண்டு.

பாடசாலை 2 மணிக்கு விட்ட உடன் நான் வீட்டிற்கு வந்து விடுவேன் . அதன் பின்னர் ஆண்கள் என்னைத் தேடி வந்து வீட்டிற்கு சற்றுத் தொலைவில் இருந்து கொண்டு பணத்தை காண்பிப்பார்கள். அப்போது நான் செல்வேன்.

இவ்வாறு வரும் ஆண்கள் என்னை யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் வவுனியா போன்ற நகர்ப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வார்கள். இவ்வாறு சென்றால் மாலை 6 மணியளவில் வீட்டிற்கு வந்து விடுவேன். இரண்டு ஆண்கள் வந்து விட்டால் வீட்டிற்கு வருவதற்கு மறுநாளாகிவிடும்.

இவ்வாறு ஆண்களுடன் செல்கின்ற விடயம் எனது அம்மாவிற்கு தெரியும் . ஆனால் தந்தைக்கு தெரியாது. அதே போன்று நான் கல்வி பயின்ற பாடசாலையில் குறிப்பிட்ட ஓரிரு ஆசிரியர்கள் என்மீது சந்தேகப்பட்டிருந்தார்கள்.

ஆனால் அவர்கள் என்னிடம் கேட்கவோ அது குறித்து விசாரிக்கவோ இல்லை. எவ்விதமான கட்டுப்பாடுகளோ கண்டிப்புகளோ எனக்கு இருக்க வில்லை. கிடைக்கும் பணத்தில் தம்பி தங்கைகளுக்கும் வீட்டுத் தேவை களுக்கும் செலவிட்டேன். அம்மாவிற்கும் கொடுத்தேன். நாளுக்கு நாள் என்னை அழைத்துச் செல்லும் ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 11 ஆம் வகுப்பு கல்வியுடன் பாடசாலை செல்வதை நிறுத்திக்கொண்டு முழு நேரமும் பணத்திற்காக ஆண்களுடன் செல்வதை வழமையாக்கிக் கொண்டேன்.IMG_2507000.jpg

இவ்வாறான தீரா நோய்கள் மற்றும் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படும் நிலை , உறவினர்களை பிரிந்திருக்கும் அவலம் ஏற்படும் என்பதை அன்று நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்று எனது விதி தலைகீழாகியுள்ளது.

எனது வாழ்வில் மறக்க முடியாத நாள் அன்று....

ஒரு 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் வழமைபோல் எனது வீட்டிற்கு அருகில் வந்து பணத்தைக் காட்டினார். காலையில் 9.30 மணி இருக்கும் . வீட்டில் யாரும் இல்லை. முல்லைத்தீவு போவோம் என்று அழைத்தான். அவசரமாக வேறு ஆடை அணிந்து கொண்டு அந்த ஆணுடன் சென்றேன். 11.45 மணியிருக்கும் முல்லைத்தீவு நகருக்குச் சென்று இறங்கினோம். என்னை அழைத்து வந்தவர் தான் முன்னே முதலில் செல்வதாகவும் அவரை பின்தொடருமாறும் கூறினார் . அதன் பிரகாரம் நானும் அவரை தொடர்ந்தேன்.

குறித்த விடுதிக்கு அருகில் சற்றும் எதிர்பாராதவாறு பொலிஸ் உத்தியோகஸ்தர் இருந்தார். அவர் என்னை நன்றாக பார்த்தார். எங்கே ? போகின்றீர்கள் என என்னிடம் கேட்டார். அவருடன் போகின்றேன் என்றேன். எங்கே ? என்றார். அங்கு என்றேன். ஏன் ? என்றார். ஆண்கள் அழைத்து செல்வார்கள் , நான் போவேன் பணம் தருவார்கள் என்றேன்.

பின்னர் அவர்கள் என்னை பிடித்து கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று நீதி மன்றில் ஆஜர்படுத்திய பின்னர் இங்கு அனுப்பப்பட்டேன். கடந்த ஒன்றரை வருட காலத்திற்கும் அதிகமான காலங்களாக இந்த மறுவாழ்வு இல்லத்தில் வாழ்கின்றேன். தனிமையின் உச்ச கொடூரங்களைப் பல சந்தர்ப்பங்களில் அனுபவித்துள்ளேன். விடுவிக்கப்படுவேனா ? அதன் பின்னரா வாழ்க்கை என்பவை தொடர்பில் சிந்திக்கவே முடியாதுள்ளது.

அதற்கு ஆழமான காரணம் உள்ளது. அதாவது நவலக் ஷி என்ற இந்த பெண் ஒரு இளம் தாய் என்பதை ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன். அறியாத வயதில் பாலியலை தொழிலாக கொண்டிருந்தார். பள்ளிக்குச் செல்லும் போதும் கூட பணத்திற்காக ஆண்களுடன் சென்றதாக குறிப்பிட்ட நிலையில் ஏன் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டது என்ற கேள்வி கூறிய வாளாக காணாப்பட்டாலும் அதற்கான விடைகள் சமூகத்தைச் சார்ந்து சிதறிக்கிடக்கின்றன.

பணத்திற்காக ஆண்களுடன் செல்வதும் பள்ளிக்குச் செல்வதுமாக இருந்த நவலக் ஷி

வாழ்வில் திருமணம் என்ற பகுதியும் காணப்பட்டது .

வவுனியா நகரில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக தாயுடன் நவலக் ஷி செல்வது வழக்கம் . அந்த வியாபார நிலையத்தில் வேலை செய்த இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டு அது பதிவுத் திருமணம் வரை சென்றது. அதன் பலன் ஒரு மகனுக்கு தாயாகும் நிலைமை நவலக் ஷி ஏற்பட்டது.

ஆனால் இந்த திருமண பந்தம் நீடிக்க வில்லை. பல ஆண்களுடன் நவலக் ஷி

தொடர்புகளை வைத்துள்ளார். பணத்திற்காக செல்கின்றார் என்பதை அறிந்த பின்னர் திருமணம் செய்து கொண்ட இளைஞனும் விட்டுச் சென் றான். ஏற்கனவே வீட்டில் வறுமையின் சுமைகள் போதாதற்கு குழந்தை வேறு. செலவிற்கு பணம் தேவை . அதனை எளிதில் எவ்வாறு அடைவது ?

ஆண்களுடன் செல்வதை தவிர வேறு வழியில்லை என்ற குறுகிய வட்டத்திற்குள்ளான தீர்மானத்தினால் முழு பாலியல் தொழிலாளியானால் நவலக் ஷி...

அதன் விளைவாக இன்று கொடிய பாலியல் சார் நோயினால் சிக்கி அனைத்தையும் இழந்தவளாக வாழ்கின்றார். தனது தாயின் பராமரிப்பில் உள்ள தனது மகனுடன் இறுதிவரை வாழ வேண்டும். மீண்டும் குடும்ப வாழ்விற்கு திரும்ப வேண்டும் என்பதே இந்த நவலக் ஷியின் எதிர்பார்ப்பாகும்.

இதே போன்று எத்தனையோ பெண்களும் ஆண்களும் பாலியல் சார் நோய்களில் சிக்குண்டு மரணிக்கின்றனர். அதே போன்று முழு சீவிய காலத்திலும் தனிமைப்படுகின்றனர். சந்தர்ப்பம், பாதுகாப்பற்ற சூழல் என்பன எந்தளவு குழந்தைகளை தவறான வழிகளுக்கு கொண்டு செல்கின்றதோ அதை விட பன்மடங்கு பெற்றோர்களின் கவனயீனத்தினால் அறியா வயதிலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலை ஏற்படுகின்றது.

இலங்கையைப் பொறுத்த வரையில் பாரம்பரிய பண்பாடுகள் மற்றும் ஒழுக்கமிக்க கட்டுக்கோப்பான மக்கள் வாழும் நாடாகும். இங்கு எவ்வாறு முறையற்ற பாலியல் ரீதியிலான நோய்கள் ஏற்படுகின்றது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்று பாலியல் சார்ந்த நோய்கள் உலகிலும் எமது நாட்டிலும் தீவிரமாகப் பரவி வருகின்றது. இதில் மிகவும் கொடுமையானது என்றால் அது எயிட்ஸ் நோயாகும் . பிறக்கும் குழந்தைக்கும் தாய் வழியாக ஏய்ட்ஸ் தொற்றுகின்றமை மிகவும் மோசமானதாகும்.

பாரம்பரியம் பண்பாடு என ஒழுக்கத்தோடு வாழும் இலங்கை தேசத்தில் இன்று எச்.ஐ.வி. தொற்று பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

பிறக்கும் குழந்தை கூட தாய் வழியாக எச்.ஐ.வி. தொற்குக்கு உள்ளாகி இந்த மண்ணில் கால்பதிக்கும் அவநிலைக்கு இந்த சமூகம் தள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச எயிட்ஸ் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் இலங்கையில் இதுவரையிலான காலப்பகுதியில் 2502 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதில் 1597 ஆண்களும் 905 பெண்களும் உள்ளடங்குகின்றர்.

குறிப்பாக  2016 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டு  வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 647 பேர் புதிய எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களாக இனங் காணப்பட்டுள்ளனர். 

இதில் 450 ஆண்களும் 197 பெண்களும் அடங்குவதோடு  11 பேர் மரணித்துள்ளனர். 

2015 ஆம் ஆண்டு தரவுகளுக்கமைய மொத்தமாக பாதிப்படைந்தவர்களில் ஆண் - பெண் உறவின் மூலம் 49 சதவீதமானோர் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.IMG_25340000.jpg

 37 சதவீதமானோர் ஓரின சேர்க்கையின் மூலமாக  தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

7.3 வீதமான குழந்தைகளுக்கு தாயிடமிருந்தும் 2.1 வீதமானோருக்கு தடுப்பூசிகள் மூலமாகவும் எச்.ஐ.வி. தொற்றியுள்ளது.

 14 தொடக்கம் 50 வயது வரையானவர்களே அதிகமாக பாதிப்படைந்துள்ளனர்.

தாயின் மூலம் பரவும் முறை அதிகமாக இருந்த நிலை மாறி தற்போது புதிய நோயாளர்களாக 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் உருவாகி வரும் நிலை அதிகமாகவே காணப்படுகின்றது. 

இவை பாதுகாப்பற்ற பாலியல் தொழிலாளர்கள் மூலமே அதிகமாக பரவுவதாக தரவுகள் குறிப்பிடுகின்றன. 

கடந்த 10 வருட எச்.ஐ.வி. பாதிப்பு தரவுகளின் படி பெண்களின் பாதிப்பு வீதம் சீராக இருக்கின்றது. 

எனினும் ஆண்களின் தொற்று விகிதம் மிக அதிகமான அளவில் உள்ளது.

இந்த தரவுகளுக்குள் ஒரு புள்ளியாகவே வவுனியாவைச் சேர்ந்த நவலக்ஷ்மியின் வாழ்க்கையும் அமைந்துள்ளது. 

ஆகவே மற்றுமொரு நவலக்ஷ்மி. இந்த சமூகத்தில் உருவாகாமல் இருக்க பெற்றோர்கள் உட்பட ஒவ்வொரு மனிதனும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

http://www.virakesari.lk/article/14053

 

  • தொடங்கியவர்
அதிக பணத்துக்கு ஆசைப்பட்டேன் எச். ஐ..வி தொற்றியது
 

(சிலாபம் திண்­ண­னூரான்)

டிசம்பர் 1 ஆம் திகதி உலக எய்ட்ஸ் விழிப்­பு­ணர்வு தினம் அனுஷ்­டி­க்கப்­பட்­டது. இந்­நி­லை­யில், பணத்­தா­சையால் தவ­றான வழியில் சென்­று, எச்.ஐ.வி. தொற்­றுக்­குள்­ளான பெண் தனது அவலக் கதையை கூறு­கிறார்.

 


1691ff50aff9412766aa08412e9f3319b16.jpg'செல்­வத்தை இழந்தால் கேடு இல்லை. உடல் நலத்தை இழந்தால் கேடு விளையும். ஒழுக்­கத்தை இழந்தால் எல்­லா­வற்­றையும் இழக்க வேண்­டி­ய­து தான்.

 

இது நான் கற்றுக் கொண்ட பாடம். வாழ்க்­கையை பல­முறை இழந்து புத்­தி­கெட்டுப் போய் இன்று காய்ந்­து­ போன கரு­வாடைப் போலா­கி­விட்டேன்.

 

எனது பெயர் கௌரி. (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) வயது 43. இரண்டு கண­வர்­கள், முதல் கண­வ­ருக்கு மூன்று பிள்­ளைகள். மூத்­தவள் திரு­மணம் முடித்­து­விட்டாள். இளை­யவள் பாட­சாலைக் கல்­வியை முடித்­து­விட்டாள். மகன் கல்வி கற்­கின்றான்.

 

எனது கணவர் (முத­லா­வது) எனது 35 ஆவது வயதில் மர­ண­மானார். இவர் பழ வர்த்­த­கர­ாகவும் வீட்டு தர­க­ரா­கவும் பணி­யாற்­றி­யவர். எனது 19 வயதில் இவரைக் காதலித்து திரு­மணம் செய்து கொண்டேன்.

 

எனது அழகு அவரை வசீ­க­ரித்­தது. அப்­போ­து, எனது கூந்தல் எனது குதிக்­கால்­வரை நீண்டு குதி­ரையின் வாலைப் போன்று இருக்கும். வீதியில் நடந்து சென்றால் எல்­லோ­ரையும் எனது கூந்தல் நின்று பார்க்க வைக்கும்.

 

பல பெண்கள் பொறா­மைப்­ப­டு­வார்கள். எனது முதல் கணவர் எனக்கு எந்தக் குறையும் வைக்­க­வில்லை. நன்­றா­கவே கவ­னித்து என்னை சிங்­கா­ரி­யாக வாழ­வைத்தார்.

 

அந்த சிங்­கார வாழ்க்­கையின் அறு­வ­டை­யாக அடுத்­த­டுத்து மூன்று பிள்­ளை­களை இவ்­வு­ல­குக்கு கொண்டு வந்தோம். இடையில் அவர் சர்க்­கரை வியா­தி யால் அவ­திப்­பட்டார்.

 

பல வைத்­தியம் செய்தும் பலன் கிடைக்­க­வில்லை. இறு­தியில் 2007 இல் அவர் கால­மானார். அவரின் மர­ணத்தை அடுத்து எனது வாழ்க்கை புரண்­டது.

 

இரு பிள்­ளைகள் பாட­சாலை சென்­றனர். ஒரு வயதில் ஆண் மகன். பொரு­ளா­தார நெருக்­கடி என்னை நெருக்­கி­யது. வீட்டு வாட­கை, பிள்­ளை­களின் கல்விச் செலவு என செலவுப் பட்­டியல் நீண்டு வளர எனது கண­வரின் சேமிப்பும் கரைந்­தது.

 

நான் சிறு வய­தி­லி­ருந்தே எனது இயற்கை அழகை பாது­காத்து வந்தேன். 'மேக் அப்' செய்து அழகைச் சீர­ழித்­துக்­கொள்ள மாட்டேன். இந்­நி­லையில், அடுத்த வீட்டு மாமி­யி­ட­மி­ருந்து சகோ­தர மொழி ஞாயிற்­றுக்­கி­ழமை பத்­தி­ரிகை ஒன்றை பொழுது போக்­கு­வ­தற்­காக வாங்­கினேன்.

 

சுமார் ஒரு மணித்­தி­யா­லம் வரை பத்­தி­ரி­கையை வாசித்­ததன் பின்னர் விளம்­பரப் பகு­தியை கையி­லெ­டுத்தேன். அந்த விளம்­பரம் என் வாழ்க்­கை­யையே புரட்டிப் போட்­டு­விட்­டது.

 

ஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்ட நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­
உள்­ள, பயிற்­சி­யற்ற தெர­பிஸ்ட்­டுகள் தேவை எனவும் மாதம் 75 ஆயி­ரத்­துக்கு மேல் சம்­பா­திக்­கலாம் எனவும் அந்த விளம்­ப­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

 

இந்த விளம்­ப­ரத்தில் காணப்­பட்ட '75 ஆயிரம்' என் மன­திற்குள் தலை தூக்கி கூத்­தா­டி­யது. இக் ­கூத்து மறுநாள் என்னை குறிப்­பிட்ட நிறு­வ­னத்­திற்கு அழைத்துச் சென்­றது.

 

அந்­ நி­று­வ­னத்­துக்கு சென்றேன். நல்ல மரி­யா­தை­யுடன் நிர்­வாகி என்னை அழைத்து விப­ரங்­களை பெற்றார். என் அழகு அவரை சொக்க வைத்­து­ விட்­டது.

 

அங்­குள்ள மற்­றைய இளம் யுவ­திகள் சிங்­கா­ரமாய் இருந்­தனர். அவர்கள் என்­னுடன் பேச்சைத் தொடுத்­தனர். நாங்கள் எல்லாம் உண்­ணு­வ­தற்கே வசதி இல்­லாது மர­வள்ளிக் கிழங்கை தின்­ற­வர்கள்.

 

இங்கு வந்த பின் பெரும் வச­தி­யோடு வாழ்­கின்றோம் என ஆசை வார்த்­தை­களை கொட்­டினர். நான் அப்­போது சொர்க்­கத்­துக்கே போய்­விட்டேன். அவர்­களின் கைகளில் ஒரு இலட்ச ரூபா பெறு­ம­தி­யான கைய­டக்கத் தொலை­பே­சி கள் இருந்­தன.

 

இதுவும் என்னை ஆசைக்குள் தள்­ளி­விட்­டது. ஆனால், என்­ன­வி­த­மான தொழில் என எவரும் தெரி­விக்­க­வில்லை. நானும் முதலில் சம்­ம­தித்­து­விட்டு மறுநாள் தொழி­லுக்குச் சென்றேன். அது 2008 ஆம் ஆண்டு.

 

முதல்நாள் ஆயுர்­வேத முறைப்­படி உடல் பிடித்­து­வி­டல், தேய்த்­தல், சிகிச்சை முறைகள் எனக்குப் பயிற்­று­விக்­கப்­பட்­டன. இரண்­டொரு நாட்­களின் பின்பே அங்கு இடம்­பெறும் தொழில் முறைகள் எனக்கு தெரி­ய ­வந்­தது.

அதிர்ந்து போய்­விட்டேன். குடும்ப வறுமை என்னை அதற்குள் தள்­ளி­யது.

 

பல நாட்கள் மனத் துய­ரத்­துடன் இத் தொழிலை புரி­கையில் ஏனைய பழைய தெர­பிஸ்ட்கள் தங்­களின் வரு­மா­னத்தை தினம் தினம் காட்டி என்னை ஊக்­கப்­ப­டுத்­தினர்.

 

மனம் மாறி­யது. நானும் அவர்கள் வெட்­டிய குழிக்குள் விழுந்தேன். குழிக்குள் விழுந்த என்னால் பழைய வாழ்க்­கைக்குத் திரும்ப இய­ல­வில்லை. எனது அழகு பலரை பர­வ­சப்­ப­டுத்­தி­யது.

 

மூட்டை சுமக்கும் நாட்­டாமை முதல் பல தரப்­பட்ட வர்த்­த­கர்­கள், உயர்­மட்ட அதி­கா­ரிகள் என அனைத்துத் தரப்­பி­னரும் இங்கு வரு­வார்கள்.

 

எனக்கு வாடிக்­கை­யாளர்கள் பெருகப் பெருக பணம் என் கைகளில் தவழத் தொடங்­கி­யது. இதனால் இந்­ நி­று­வ­னத்தில் எனக்கு பெரும் மௌசும், நல்ல கிராக்­கியும் வளரத் தொடங்­கி­ன.

 

இந்நிலையில் உடல் பிடித்­து­விடும் இத் தொழிலை மேலும் நான் வளப்­ப­டுத்திக் கொள்ள ஆயுர்­வேத திணைக்­க­ளத்தின் ஊடாக பயிற்சி பெற்று சான்­றி­த­ழையும் பெற்றேன்.

 

இவ்­வா­றான வாழ்க்கைப் போராட்டம் இடம்­பெ­று­கையில், எனது வீட்­டுக்கும் அடுத்த வீட்டில் வசிக்கும் இளைஞன் தினமும் என்னைப் பார்த்து மெல்­லிய சிரிப்பு சிரித்து கண் சிமிட்­டுவான்.

 

நான் கண் சிமிட்ட மாட்டேன். இரவு 9, 10 மணி­ய­ளவில் தொழில் முடிந்து எனது உடல் எல்லாம் வலி எடுக்க 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை உழைத்த பணத்­துடன் களைப்­போடு வீடு திரும்­புவேன்.

 

அந்நேரத்­தில் எனக்­காக வீதியில் காத்து நிற்பான்' என்ற கௌரியின் பேச்சை நிறுத்தி நெடு நேர காத்­தி­ருப்­புக்குப் பின் நங்­கூ­ரத்தை போட்டோம்.

 

'ஏன் அந்த இளைஞன் உங்­களின் மீது கண் வைத்தான். பணத்தை பறிக்­கவா?' என்றதும், வயிற்றில் புழு நெளி­வதைப் போன்று நெளிந்து 'ச்சே! அதெல்லாம் ஒன்றும் இல்லை எனக் கூறிய கௌரி, தன் முகத்தை விரலால் தடவிக் கொண்­டு, தொடர்ந்து பேசினார்.

 

'சங்கர் எனும் இளைஞர் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) என்னை திரு­மணம் செய்து கொள்­ளு­மாறு வற்­பு­றுத்­தினார். அப்­போது அவ­ருக்கு வயது 20. எனக்கு வயது 35.

 

அவர் வயதளவில் வீட்டில் மகள் இருந்தாள். அந்த இளை­ஞனின் பிடி­வாதம் என்னை சிந்­திக்கத் தூண்­டி­யது. எனக்கு இப்­போது துணை தேவை. பாது­காப்புத் தேவை. மூன்று பிள்­ளைகள் இவர்­களின் எதிர்­காலம் எல்லாம் என்னை சிந்­திக்க வைத்­தது.

 

அந்த இளை­ஞனின் பிடி­வாதம் ஒரு புறம். மறு­புறம் காலை­யி­லி­ருந்து உடலை வருடி உடல் வலி­யுடன் வீட்­டுக்கு வந்தால் இரவில் தூக்கம் இல்லை. என்­னோடு இருந்த தெர­பிஸ்ட்­களும் என்னைப் போன்றே கண­வனை இழந்­த­வர்­களும் கண­வனால் கைவி­டப்­பட்­ட­வர்­க­ளுமே. அவர்­க­ளிடம் ஆலோ­சனை கேட்டேன்.

 

'போடி முட்டாள். நாங்கள் எல்­லோரும் ஓர் ஆணை பாது­காப்­புக்­காக வைத்­தி­ருக்­கிறோம். உழைக்கும் பணத்தை அவனின் கண்ணில் காட்­டக்­கூ­டாது.

 

அவனை அதட்­டி, பயம் காட்டி நமக்கு அடி­மை­யாக வைத்துக் கொள்ள வேண்டும்' என்­றனர். அவர்­களின் பதில் என்னை உசுப்பி விட்­டது. எனக்கும் அந்த இளை­ஞ­னுக்­கு­மான காத­லையோ திரு­ம­ணத்­தையோ சமூகம் ஏற்க மறுக்கும்.

 

எனக்கு குரூ­ர­மான தண்­ட­னையை சமூகம் வழங்கும். துணிந்து சங்­கரை 2008  இல் எனது வீட்­டுக்குள் நுழைந்து குடும்பம் நடத்த உரிமை வழங்­கினேன். பலர் கேலி செய்­வார்கள் என்ற பய­மின்றி வீதியில் இரு­வரும் பய­ணித்தோம்.

 

169hiv_blood_vial_800x6002.jpgஎன்னை மறு­மணம் செய்ய முனைந்த பலர் திகைப்­புற்­றனர். எனது தொழில் எல்லாம் அந்த இளை­ஞ­ருக்குத் தெரியும். ஏனை­யோ­ருக்கு நான் தனியார் மருத்­து­வ­ம­னை­ ஒன்றில் நேர்ஸ் (தாதி) வேலை செய்­வ­தாக கூறி வந்தேன்.

 

சங்கர் கல்­வி­ய­றிவு இல்­லா­தவர். அவர் வேலைக்குப் போக மாட்டார். கெட்ட பழக்கம் எதுவும் இல்லை. நான் வேலைக்கு போனதும் எனது ஒன்­றரை வயது மகனை அவரே பார்த்துக் கொள்வார்.

எனது உழைப்பின் மூல­மாக பிள்­ளை­களை படிக்க வைத்தேன். குடும்ப அங்­கத்­த­வர்­க­ளுக்கு உத­வினேன். இதனால் சங்கர் என்­னுடன் வாழ்­வ­தற்கு குறைந்­த­ளவே எதிர்ப்புக் காட்­டினார்.

 

பணம் அவர்­களின் வாயை மூட வைத்­தது. இரு­வரும் குடும்­ப­மாக வாழ்ந்­தாலும் அவரை நான் பதிவு திரு­ம­ணமோ எனக்குத் தாலி கட்­டவோ அனு­ம­திக்­க­வில்லை.

 

எங்கள் இரு­வ­ருக்­குள்ளும் நல்ல பாசம் இருந்­தது. என் மீது பெரும் பாசத்தை சங்கர் பொழிய அதை­விட இரு மடங்கு பாசத்தை நான் பொழிந்தேன். இருந்­தாலும் எனது தெரபிஸ்ட் தொழிலை கைவிட மனம் இடம் கொடுக்­க­வில்லை. காரணம் பண ஆசையே.

 

2008 ஆம் ஆண்­டு ­வரை ஐந்து முறை இரத்த தானம் செய்­துள்ளேன். 2009 ஆம் ஆண்டு இரத்த தானம் செய்தேன். இந்த இரத்­தத்தை பரி­சோ­தனை செய்­த­போது ஏதோ கிருமி உள்­ளமை தெரி­ய­ வந்­தது.

 

இந்த  இரத்த மாதி­ரி­யை தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் தடுப்பு வேலைத் திட்டப் பிரிவு மீளவும் பரி­சோ­த­னையை மேற்­கொண்­ட­போது எனது இரத்­தத்தில் எச்.ஐ.வி. தொற்று இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

 

சங்கரின் இரத்­தமும் சோத­னைக்­குட்­பட்­டது. அப்­போது அவ­ருக்கும் எச்.ஐ.வி. தொற்று இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இரு­வரும் இர­க­சி­ய­மாக எச்.ஐ.வி. தொற்று இருப்­பதை வெளி­வி­டாது மறைத்து வாழ்ந்தோம்.

 

எச்.ஐ.வி. தொற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­போதும் எனது வறுமை என்னை விட­வில்லை. தொடர்ந்தும் மசாஜ் கிளினிக் தொழிலை செய்தேன். அப்­போது கொழும்பு 5 இல் ஒரு மசாஜ் நிலை­யத்தில் தொழில் புரிந்தேன்.

 

169woman-shadow-reaching-up.jpgஇது பாவம் இல்­லையா? எனக் கேட்டோம். படார் என மின்­சா­ரத்தில் கைபட்­டது போல் துடி­து­டித்து எங்­களைப் பார்த்த கௌரி, 'எனக்கு பணம் தேவை என்ற நோக்­கமே கார­ண­மாகும்.

 

பிள்­ளை­களின் எதிர்­காலம் இதை­யெல்லாம் நினைக்­கும்­போது பயம் என்னை கௌவிக் கொள்­கின்­றது. எச்.ஐ.வி. தொற்றை பரவ விடும் எண்ணம் கொஞ்சம் கூட இருக்­க­வில்லை.

 

எனக்கு எவரின் துணையும் இல்லை. முத­லா­வது கணவர் இறந்தப் பின்னர் எனது மாமி­யா­ரான அவரும் என்னை கண்டுகொள்­வ­தில்லை. நான் செய்­வது பாவம் தான் அதை ஏற்றுக் கொள்­கின்றேன்.

 

எவ்­வாறு இரு­வ­ருக்கும் எச்.ஐ.வி. தொற்று ஏற்­பட்­டது? எனக் கேட்டோம். எங்­க­ளது கேள்­வியின் வலி கௌரிக்கு அமி­லத்தின் கொதிப்பை விட அதி­க­மாக இருப்­பது அவ­ரது முகத்தில் வெளிச்சம் போட்டுக் காட்­டி­யது.

 

எச்.ஐ.வி. தொற்று எங்­க­ளுக்குள் எவ்­வாறு தொற்­றி­யது என்­பது இது­வரை தெரி­ய­வில்லை. சங்கர் மீது முழு­மை­யான நம்­பிக்கை உள்­ளது. எனக்கும் என் மீது நம்­பிக்கை உண்டு.

 

உண்­மையில் மசாஜ் கிளி­னிக்கில் உடம்பை பிடித்­து­விடும் சிகிச்சை இடம்­பெற்­றாலும் எங்­களின் மேல­திக வரு­மா­னத்­துக்­காக அதா­வது டிப்ஸ் பெறு­வ­தற்­காக மறை­மு­க­மான பாலியல் செயல்­க­ளிலும் ஈடு­பட்டோம்.

 

இதன்மூல­மா­கவே நாம் மேல­திக வரு­மானம் பெற்றோம். இது ஆயுர்­வேத சிகிச்சை சட்­ட­வி­தி­க­ளுக்கு விரோ­த­மான செய­லாகும்' என்றார்.

 

பாலியல் தொழிலில் ஈடு­ப­டு­வீர்­களா? எனக் கேட்டோம். அவர் எவ்­வித பயமும் இல்­லாது சில அதி­ர­டி­யான பதிலை எம் ­மீது வீசினார். 'என்னை நாடி மசாஜ் கிளினிக் வரும் வழ­மை­யான வாடிக்­கை­யா­ளர்கள் அழைக்­கும்­போது ஹோட்­டல்­களில் அறை எடுத்து தங்­குவேன்.

 

என்னை அழைத்துச் செல்லும் நபரே முழுச் செல­வையும் ஏற்றுக் கொள்வார்.
கனடா தமி­ழர்கள் பலர் எனக்கு நிரந்­தர வாடிக்­கை­யாளர்­க­ளாக உள்­ளனர்.

 

எனது தொலை­பேசி இலக்­கத்தை இங்கு வரும்­போது முதலில் பெற்றுச் செல்­வார்கள். பின் இலங்கை வரு­கையில் தொலை­பேசி மூல­மாக தொடர்பு கொள்­வார்கள்.

 

இவர்கள் ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளுக்கே அழைத்துச் செல்­வார்கள். சுமார் 4, 5 நாட்கள் தொடர்ச்­சி­யாக இவர்­க­ளுடன் இருப்பேன். இரு­ப­தா­யி­ரத்­திற்கும் மேல் பணம் தரு­வார்கள்.

 

ஒரு வாடிக்­கை­யா­ள­ருடன் 5 நட்­சத்­திர ஹோட்­டலில் 14 தினங்கள் இருந்தேன். பின் திக­தி­யிட்ட ஐம்­ப­தா­யி­ரத்­திற்­கான காசோ­லையை வழங்கிச் சென்றார்.

 

காசோ­லையை பண­மாக வங்­கியில் மாற்ற வேண்­டிய திக­திக்கு முதல் நாள் அவர் எனக்கு பணத்தை கொடுத்­து­விட்டார். இவரும் கன­டாவைச் சேர்ந்த வட பகுதி இளைஞர்.

 

இத்­த­கை­ய­வர்கள் மூல­மாக எச்.ஐ.வி. தொற்று எனக்குள் தொற்றி சங்­க­ருக்கு பரவி இருக்­கலாம் என சந்­தே­கிக்­கின்றேன். சங்கர் முறை­யாக சிகிச்சைப் பெறா­ததால் கடந்த வருடம் மர­ண­மானார்.

 

சங்கர் மர­ணிக்கும் தரு­ணத்தில் தொழில் செய்தேன். சங்­கரின் மர­ணத்தின் பின்னர் எனக்கும் எச்.ஐ.வி. தொற்று இருப்­பது தெரி­ய­வரவே வீட்டை விட்டு துரத்­தப்­பட்டேன்.

 

நான் இன்­னொ­ரு­வரை பணத்­துக்­காக மகிழ்­வித்து தேடிய ஆடம்­பர பொருட்கள் அனைத்­தையும் குறைந்த விலைக்கு விற்று பிள்­ளை­க­ளுக்கு கொடுத்தேன்.

 

எனது மூத்த மகள் அவரின் கண­வ­ரோடு இணைந்­து, தனது வீட்­டுக்கு நான் வரு­வ­தற்கு தடை விதித்­து­விட்டாள். பிள்­ளைகள் எனது அம்­மா­வி­டமும் மாமி­யி­டமும் வாழ்­கின்­றனர்.

 

இப்­போது நான் மசாஜ் நிலை­யத்­திலும் தொழில் செய்ய இயலாது தடை விதிக் கப்பட்டுள்ளது' என்றார் கௌரி.

 

வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? தவறான விளம்பரம் மூலம் என்னைப் போன்று எத்தனையோ இளம் பெண்கள் வாழ்க்கையை சீரழித்து கொள்கின்றனர்.

 

இவ்­வாறு உழைக்கும் பணமும் நிரந்­த­ர­மாக நிற்­ப­தில்லை. பலர் என்னைப் போன்று எச்.ஐ.வி. தொற்­றுடன் மசாஜ் நிலை­யங்­களில் தொழில் புரி­யக்­கூடும். எச்.ஐ.வி. நோயா­ளர்­களை குடும்பம் ஒதுக்கக் கூடாது.

 

இவ்­வா­றா­ன­வர்­க­ளுடன் உட­லு­றவு கொள்­ளக்­கூ­டாது. இந்­நோ­யினால் முழுக் குடும்­பமும் பாதிக்­கப்­ப­டு­கி­றது. இன்று என் பிள்­ளை­களே ஒதுக்கி விட்­டனர்.

 

என் அழகைக் காட்டி பணம் பணமாய் உழைத்த நான் இன்று இருக்க இட­மில்­லாது பணம் இல்­லாது நிம்­ம­தியைத் தொலைத்து எங்­களைப் போன்­ற­வர்­க­ளுக்கு அடைக்­கலம் தரும் திரு­மதி பிரின்சி மங்­க­லிக்­காவின் 'பொசிட்டிவ் வுமன்ஸ் நெட்வேர்க் (Positive Women's Network) நிறு­வ­னத்தில் அடைக்­கலம் பெற்­றுள்ளேன்' என கௌரி தன்னை மீறிய உள்­ளார்ந்த வலியை அவரால் தாங்கி கொள்ள முடியாத நிலையில் எம்மிடம் தெரிவித்தார்.

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=169&display=0#sthash.h7cgqYo3.dpuf

Edited by நவீனன்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 08/12/2016 at 5:51 PM, நவீனன் said:

கனடா தமி­ழர்கள் பலர் எனக்கு நிரந்­தர வாடிக்­கை­யாளர்­க­ளாக உள்­ளனர்.
 

உந்த கனடாக் காரர் பெரும் மோசம் போல கிடக்கு.

ஒரு பக்கமா கியூபா பிரச்சனை.

இன்னொரு பக்கம் ஊர்ல பிரச்னை..

கனடா பொம்பிளையளுக்கு விபரம் பத்தாது. யாபாரம் எண்டு வெளிக்கிடுற மனிசன் மார, உண்டு இல்லை எண்டு பார்க்க மாட்டினமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.