Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையக பல்கலைக்கழக கனவு நனவாகுமா?

Featured Replies

மலையக பல்கலைக்கழக கனவு நனவாகுமா?

 

ஒரு நாட்டில் அபி­வி­ருத்தி செய்­யப்­பட வேண்­டிய பல்­வேறு துறை­களுள் கல்­வித்­துறை மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக கரு­தப்­ப­டு­கின்­றது. கல்­வித்­து­றையின் அபி­வி­ருத்­தி­யினால் பல்­வேறு சாதக விளை­வுகள் ஏற்­படும். எனவே தான் உலக கல்வித் துறையின் அபி­வி­ருத்தி கருதி முக்­கிய கவனம் செலுத்தி வரு­கின்­றன. இந்த வகையில் உயர்­கல்வி குறித்து நாம் பேசு­கின்­ற­போது பல்­க­லைக்­க­ழ­கங்கள் உயர்­கல்­விக்கு உந்து சக்­தி­யாக அமை­கின்­றன. எமது நாட்டில் பல பல்­க­லைக்­க­ழ­கங்கள் காணப்­ப­டு­கின்­றன. எனினும் மலை­யக அடை­யா­ளத்­துடன் கூடிய பல்­க­லைக்­க­ழகம் ஒன்று இல்­லாத நிலையில், மலை­யக பல்­க­லைக்­க­ழகம் என்ற ஒன்று ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்று சம­கா­லத்தில் தொடர்ச்­சி­யான வலி­யு­றுத்­தல்கள் இடம்­பெற்று வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

உயர்­கல்­வியை வழங்­கு­வ­தற்­கென்று பல உயர்கல்வி நிறு­வ­னங்கள் காணப்­ப­டு­கின்­றன. அவற்றுள் தனித்­து­வ­மான ஒரு இடத்­தினை பெற்று பல்­க­லைக்­க­ழ­கங்கள் விளங்­கு­கின்­றன. எல்லா உயர்கல்வி நிறு­வ­னங்­களும் பல்­க­லைக்­க­ழ­கங்கள் அல்ல. பல்­க­லைக்­க­ழ­கங்­களை நாங்கள் வேறு­ப­டுத்­தியே நோக்க வேண்டும். ஏனைய உயர்­கல்வி நிறு­வ­னங்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது பல்­க­லைக்­க­ழகம் என்­பது சுயா­தீ­ன­மாக இயங்­கு­கின்­றது. கல்விச் சுதந்­திரம் காணப்­ப­டு­கின்­றது. ஆராய்ச்­சிகள் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பல்­வேறாக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. பின் பட்­டங்­க­ளையும் மேலும் உயர் பட்­டங்­க­ளையும் பல்­க­லைக்­க­ழ­கங்கள் வழங்­கு­கின்­றன. இப்­படிப் பார்க்­கையில் ஒரு வித்­தி­யா­ச­மான உயர்­கல்வி நிறு­வ­னங்­க­ளா­கவே பல்­க­லைக்­க­ழ­கங்­களை நாம் நோக்க வேண்டி இருக்­கின்­றது. தொழி­ல் நுட்ப கல்வி நிலை­யங்கள், மூன்றாம் நிலை கல்வி நிலை­யங்கள் என்று ஏரா­ள­மாக இருக்­கின்­றன. எனினும் எல்­லா­வற்­றிலும் தலை­யா­ன­தாக பல்­க­லைக்­க­ழ­கங்கள் விளங்­கப்­ப­டு­கின்­றமை ஒரு சிறப்­பம்­ச­மாக காணப்­ப­டு­கின்­றது.

 

பல்­க­லைக்­க­ழ­கங்­களின் வடி­வங்கள்

பல்­க­லைக்­க­ழ­கங்­களை பொறுத்­த­வ­ரையில் ஆரம்ப காலத்­தையும் சம­கா­லத்­தையும் எடுத்து நோக்­கு­கையில், சம­கால பல்­க­லைக்­க­ழ­கங்கள் பல வடி­வங்­களை எடுத்­துள்­ள­தாக புத்தி ஜீவிகள் எடுத்­தி­யம்­பு­கின்­றனர். பல்­க­லைக்­க­ழ­கங்­களின் வர­லாற்றை நாம் நோக்­கு­கின்­ற­போது ஒரு பெரிய பரி­ணாம வளர்ச்­சி­யினை எம்மால் காண முடியும். ஆரம்­ப­கால பல்­க­லைக்­க­ழ­கங்கள் ஒரு சில­ருக்கு கல்வி வழங்­கு­கின்ற நிலை­யங்­க­ளாக மட்­டுமே இருந்து வந்­தன. ஆராய்ச்சி என்ற ஒரு விட­யத்­தினை நாம் நோக்­கும்­போது 1800 ஆம் ஆண்டின் பின்னர் தான் பெரும்­பாலும் பல்­க­லைக்­க­ழ­கங்­களின் பணி­யாக இது அமைந்­தது என்று கூற முடியும். 1800 ஆம் ஆண்டு வரையில் பல்­க­லைக்­க­ழ­கங்கள் ஆராய்ச்­சித்­து­றையில் அவ்­வ­ள­வாக ஈடு­ப­ட­வில்லை. வர­லாற்று ரீதி­யாக பார்த்தால் விஞ்­ஞான பீடங்கள் கூட பல்­க­லைக்­க­ழ­கங்­களில் அவ்­வ­ள­வாக காணப்­ப­ட­வில்லை. காலப்­போக்கில் பல்­க­லைக்­க­ழ­கங்கள் விஞ்­ஞான கூடங்­களை இணைத்துக் கொண்­டன. ஆராய்ச்சி நிறு­வ­னங்­க­ளா­கவும் பல்­க­லைக்­க­ழ­கங்கள் மாற்றம் பெற்­றன. ஆரம்ப காலங்­களை காட்­டிலும் பல்­வேறு வளர்ச்சிப் படி­க­ளையும் பல்­க­லைக்­க­ழ­கங்கள் பெற்­றுக்­கொண்­டன என்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். அந்த வளர்ச்சிக் கட்­டத்தின் ஒரு அம்­ச­மா­கவே நாம் மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்­தையும் நோக்க வேண்­டி­யுள்­ளது.

பல்­வ­கை­யான பல்­க­லைக்­க­ழ­கங்கள் காணப்­ப­டு­கின்­ற­மைக்கு நாம் இந்­தி­யாவை உதா­ர­ண­மாக கூற முடியும். மத்­திய அர­சாங்கம் மற்றும் மாநில அர­சாங்க பல்­க­லைக்­க­ழ­கங்கள் இங்கு காணப்­ப­டு­கின்­றன. பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு அப்பால் இந்­தி­யாவில் ஏரா­ள­மான பல்­க­லைக்­க­ழக கல்­லூ­ரிகள் காணப்­ப­டு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். கல்­லூ­ரிகள் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுடன் இணைக்­கப்­பட்டு விளங்­கு­கின்­றன. சுமார் முப்­ப­தா­யிரம் கல்­லூ­ரிகள் வரையில் இந்­தி­யாவில் உயர் கல்­வி­யினை வழங்கி வரு­கின்­றன. பல்­க­லைக்­க­ழ­கங்­களின் தொகையும் இங்கு அதி­க­மாக உள்­ளது. இணையப் பல்­க­லைக்­க­ழ­கங்­களும் இருக்­கின்­றன. இலங்­கையைப் போன்றே இந்­தி­யா­விலும் திறந்த பல்­க­லைக்­க­ழ­கங்கள் இருக்­கின்­றன. துணை சார்ந்த பல்­க­லைக்­க­ழ­கங்­களும் இருக்­கின்­றன. விளை­யாட்­டுத்­துறை உட்­பட மற்றும் பல துறை­க­ளையும் சார்ந்த பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளையும் நாம் குறிப்­பிட்டுக் கூற முடியும். திரா­விட மொழி­களை ஆராய்­வ­தற்­கான பல்­க­லைக்­க­ழ­கங்கள் காணப்­ப­டு­கின்­றன. பல்­வேறு வகை­யான பல்­க­லைக்­க­ழ­கங்கள் இந்­தி­யா­விலும் மற்றும் உலகின் ஏனைய நாடு­க­ளிலும் வளர்ச்­சி­ய­டைந்­தி­ருக்­கின்­றன.

 

இலங்­கையில் பல்­க­லைக்­க­ழ­கங்கள்

இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் 1942 ஆம் ஆண்டில் முதன் முத­லாக பல்­க­லைக்­க­ழகம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இப்­போது15 பல்­க­லைக்­க­ழ­கங்கள் வரையில் காணப்­ப­டு­கின்­றன. திறந்த பல்­க­லைக்­க­ழ­கத்­துடன் பிராந்­திய ரீதியில் பல்­க­லைக்­க­ழ­கங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஒவ்­வொரு மாகா­ணத்­திலும் பல்­க­லைக்­க­ழ­கங்கள் உள்­ளன. மேல் மாகாணம் எமது நாட்டை பொறுத்­த­வ­ரையில் செல்­வாக்­கான ஒரு மாவட்­ட­மாகும். இங்கும் முக்­கிய பல்­க­லைக்­க­ழ­கங்கள் காணப்­ப­டு­கின்­றமை தெரிந்த விட­ய­மாகும். கொழும்பு பல்­க­லைக்­க­ழகம், கோட்டே ஸ்ரீஜ­ய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழகம், களனி பல்­க­லைக்­க­ழகம், மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழகம், திறந்த பல்­க­லைக்­க­ழகம் என்று பலவும் இங்கு காணப்­ப­டு­கின்­றன. அர­சாங்க பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளா­கவும் இவை காணப்­ப­டு­கின்­றன. ஊவா, கிழக்கு மாகாணம், யாழ்ப்­பாணம் போன்ற பல இடங்­க­ளிலும் பல்­க­லைக்­க­ழ­கங்கள் இருக்­கின்­றன. சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழ­கமும் முக்­கி­யத்­துவம் மிக்க ஒன்­றாக விளங்­கு­கின்­றது.

வட­ப­குதி மக்­களின் கல்வித் தேவை­களை கருத்திற் கொண்டு யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழகம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. கிழக்­கி­லங்கை பல்­க­லைக்­க­ழகம் இன்­னு­மொரு குறிப்­பி­டத்­தக்க சிறப்­பு­மிக்க பல்­க­லைக்­க­ழ­க­மாக இருக்­கின்­றது. அஷ்ரப் முன்­னின்று உழைத்து தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தை அமைத்தார். இவை அனைத்தும் தேசிய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளாக காணப்­ப­டு­கின்­றன. தேசிய ரீதி­யாக மத்­திய அர­சினால் இவைகள் அனைத்தும் அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இப்­பல்­க­லைக்­க­ழ­கங்­களில் எல்லா இனத்தைச் சேர்ந்த மாண­வர்­களும் கல்வி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். எனினும் இப்­பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்­கென்று ஓர் அடை­யாளம் காணப்­ப­டு­கின்­றன.

தனி­யாக தேசிய பல்­க­லைக்­க­ழகம் என்றோ அல்­லது இன­ரீ­தி­யான அல்­லது பிராந்­திய ரீதி­யான பல்­க­லைக்­க­ழகம் என்றோ கூறி­விட முடி­யாது. இந்த நிலை­மையில் இப்­போது இருக்கும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளோடு இன்­றைய அர­சாங்­கமோ அல்­லது இனி­வரும் அர­சாங்­கமோ இருந்­து­விடப் போவ­தில்லை. இன்­னு­மின்னும் புதிய பல பல்­க­லைக்­க­ழ­கங்கள் உரு­வாக்கும் நிலை­மையே ஏற்­பட உள்­ளது. இந்த நிலையில் புதிய பல்­க­லைக்­க­ழ­கங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மி­டத்து மலை­ய­கத்­த­வர்­களின் நலன்­க­ருதி மலை­யக பல்­க­லைக்­க­ழகம் ஒன்று ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்­கின்­றன. மலை­யக பல்­க­லைக்­க­ழகம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மி­டத்து பல்­வேறு சாதக விளை­வு­களும் ஏற்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. மலை­யக பல்­க­லைக்­க­ழகம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­கிற கோரிக்கை நீண்ட கால­மா­கவே இருந்து வரு­கின்­றன. புத்­தி­ஜீ­விகள், அர­சி­யல்­வா­திகள், சமூக ஆர்­வ­லர்கள் என்று பல்­துறை சார்ந்­த­வர்­களும் மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்தின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். எனினும் மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான முனைப்­புகள் இடம்­பெற்­ற­தாக இல்லை. இதற்­கி­டையில் மலை­யக பல்­க­லைக்­க­ழகம் அவ­சியம் என்ற கரு­து­கோ­லுக்கு மத்­தியில் இவ்­வா­றான ஒரு பல்­க­லைக்­க­ழகம் அவ­சி­ய­மில்லை என்றும் சிலர் வலி­யு­றுத்­தி­யுள்­ள­தையும் குறிப்­பிட்­டாதல் வேண்டும்.

இத்­த­கைய கருத்­து­ பே­தங்­க­ளுக்கும் மத்­தியில் மலை­யக பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் முக்­கி­யஸ்­தர்கள் சில­ரிடம் கருத்து வின­வினேன். எமது கேசரி வாச­கர்­க­ளுக்­காக அவர்கள் தெரி­வித்த கருத்­துக்­களை இங்கே தொகுத்துத் தரு­கின்றேன்.

 

எம்.ரமேஷ் (மத்­திய மாகாண அமைச்சர்)  

சமூக அபி­வி­ருத்­தியில் கல்வி அச்­சா­ணி­யாக விளங்­கு­கின்­றது. சமூ­கத்தின் வர­லா­று­களை கல்­வி­யா­னது மாற்­றி­ய­மைத்­தி­ருக்­கின்­றது. உலக வர­லா­று­களும் கல்வி அபி­வி­ருத்­தியால் மாற்­ற­ம­டைந்­தி­ருக்­கின்­றன என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. இந்த வகையில் மலை­யக சமூ­கத்தின் கல்வி அபி­வி­ருத்தி கருதி இ.தொ.கா. பல்­வேறு முயற்­சி­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றது. அமரர் தொண்­டமான் மலை­ய­கத்தின் அபி­வி­ருத்­திக்­காக முன்­னின்று செயற்­பட்டார். இவ­ரது வழி­காட்­டலில் பல பாட­சா­லைகள் தர­மு­யர்த்­தப்­பட்­டன. பாட­சா­லை­க­ளுக்­கு­ரிய பெள­தீக வளங்கள் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டன. ஆசி­ரிய நிய­ம­னங்கள் உள்­ளிட்ட கல்­வித்­து­றைசார் நிய­ம­னங்கள் பலவும் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டன. இத­ன­டிப்­ப­டையில் தற்­போது மலை­யக சமூ­கத்தின் கல்வி அபி­வி­ருத்தி கருதி பல்­வேறு திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மலை­ய­கத்தின் உயர்­கல்வி நிலை­மைகள் இன்னும் விருத்தி செய்­யப்­ப­டுதல் வேண்டும். கல்விச் சமூ­க­மாக மலை­யக சமூ­கத்தை மாற்­றி­ய­மைக்­கவும் வேண்டும். கல்­வியின் ஊடாக மலை­யக சமூ­கத்தின் எழுச்­சிக்கு வித்­தி­டுதல் வேண்டும். தேசிய நீரோட்­டத்தில் இம்­மக்கள் இணைந்து கொள்ள கல்­வியே உந்து சக்­தி­யாக அமையும். இப்­படிப் பார்க்­கையில், மலை­யக சமூ­கத்தின் அபி­வி­ருத்­திக்கு வலு­ச்சேர்ப்­ப­தற்கு மலை­யக பல்­க­லைக்­க­ழகம் கை கொடுப்­ப­தாக அமையும். பட்­ட­தா­ரிகள் எண்­ணிக்­கையை மேம்­ப­டுத்­தவும், கல்­வியில் நாட்­டத்தை ஏற்­ப­டுத்­தவும், தொழில் தேர்ச்சி தொடர்­பான விட­யங்­களை மேம்­ப­டுத்திக் கொள்­வ­தற்கும் மலை­யக பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டு­வ­தென்­பது உந்து சக்­தி­யா­கவே அமையும். மலை­யக பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டு­வ­தென்­பது காலத்தின் மிக முக்­கிய தேவை­யாக உள்­ளது.

 

ஆர்.இரா­ஜாராம் (மத்­திய மாகா­ண­சபை உறுப்­பினர்)

மலை­யக பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­பட வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மாகும். இதற்கு முன்­ன­தாக பல்­க­லைக்­க­ழக கல்­லூ­ரிகள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். இவற்­றோடு திறந்த பல்­க­லைக்­க­ழ­கங்கள் மேலும் மலை­ய­கத்தில் விஸ்­த­ரிக்­கப்­ப­டுதல் வேண்டும். மலை­ய­கத்தின் உயர்­கல்வித் தேவை­களை கருத்­திற்­கொண்டு நோக்கும் போது மலை­யக பல்­க­லைக்­க­ழகம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பது பெரும்­பா­லா­ன­வர்­களின் தாக­மாக இருக்­கின்­றது. இந்த தாகம் நியா­ய­மா­ன­தே­யாகும். மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்தின் உரு­வாக்­க­மா­னது பல்­வேறு எழுச்­சி­க­ளுக்கும் வித்­திடும் என்­ப­தனை எவ­ராலும் மறுத்­து­விட முடி­யாது. இதனால் கல்வி விருத்தி மட்­டு­மல்­லாது சமூக, கலா­சார ரீதி­யான மேம்­பா­டு­களும் ஏற்­படும்.

நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது கல்­வித்­து­றையின் அபி­வி­ருத்தி கருதி பல மில்­லியன் கணக்­கான ரூபாய்­களை வர­வு–­செ­லவு திட்­டத்தில் ஒதுக்­கீடு செய்­தி­ருக்­கின்­றது. பாட­சா­லை­களை தர­மு­யர்த்தும் நோக்கில் பல திட்­டங்­களும் அமுல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. எல்லா பாட­சா­லை­க­ளுக்கும் உத­வி­களை வழங்கி கல்வி நிலை­மை­களை மேம்­ப­டுத்­து­வது அரசின் பிர­தான குறிக்­கோ­ளாக இருந்து வரு­கின்­றது. எந்த ஒரு பாட­சா­லையும் புறக்­க­ணிப்­புக்கு உள்­ளா­க­வில்லை. உரிய வளங்கள் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. மலை­யக பாட­சா­லை­களை பொறுத்­த­வ­ரை­யிலும் பல மில்­லியன் ரூபா செலவில் பாட­சாலை அபி­வி­ருத்­திகள் ஏற்­பட்டு வரு­கின்­றன. இதன் விளை­வாக மலை­யக பாட­சா­லை­களும் தர ரீதியில் விருத்­தி­ய­டையும். மேலும் கல்விப் பெறு­பே­று­களும் அதி­க­ரிக்கும் நிலை­மையும் உரு­வாகும். இக்­கல்விப் பெறு­பேறு மற்றும் தர ரீதி­யி­லான விருத்தி என்­பன மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்தின் அவ­சி­யத்­திற்கு வித்­தி­டு­வ­தா­கவே அமையும் என்­பதே உண்மை. தொழில் ரீதி­யான மேன்­மைக்கும் மலை­யக பல்­க­லைக்­க­ழகம் வித்­திடும் என்று திட­மாக நம்ப முடியும்.

 

பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன்

மலை­யக பல்­க­லைக்­க­ழகம் ஒன்று ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று நான் தொடர்ச்­சி­யா­கவே வலி­யு­றுத்தி வரு­கின்றேன். இதனால் ஏற்­படும் நன்­மை­க­ளையும், சமூக ரீதி­யி­லான மாற்­றங்­க­ளையும் நான் நன்­றாக உணர்ந்து கொண்­டுள்ளேன். கிழக்­கி­லங்கை பல்­க­லைக்­க­ழகம் போன்றும் ஒலுவில் பல்­க­லைக்­க­ழகம் போன்றும் யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழகம் போன்றும் மலை­யக மக்­களின் அடை­யா­ளத்தை பிர­தி­ப­லிக்­கக்­கூ­டிய ஒரு பல்­க­லைக்­க­ழகம் அவ­சி­ய­மாகும். பிராந்­திய மற்றும் தேசிய அம்­சங்­களைக் கொண்ட பல்­க­லைக்­க­ழ­க­மா­கவும் இது இருக்கும். மலை­யக மாண­வர்கள் மட்­டு­மல்­லாது ஏனைய பல மாண­வர்­களும் இப்­பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்பர். எவ்­வா­றெ­னினும் மலை­யக பல்­க­லைக்­க­ழகம் மலை­யக மக்­களின் அடை­யா­ளத்தைக் கொண்­ட­தாக இருக்க வேண்­டி­யது மிகவும் முக்­கி­ய­மாகும். பெளத்த பாளி பல்­க­லைக்­க­ழ­கமும் இலங்­கையில் உண்டு. எந்த ஒரு விட­யத்­தையும் நிரா­க­ரிப்­பது சுல­ப­மான விட­ய­மாகும். ஆனால் உள்­ளார்ந்த ரீதி­யாக சிந்­தித்துப் பார்த்து செயற்­ப­டுதல் வேண்டும். மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்தை எம்­ம­வர்கள் சிலரே நிரா­க­ரிப்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். இவர்கள் இனத்­து­வ­மான பல்­க­லைக்­க­ழகம் அமைக்க முடி­யா­தென்று வாதி­டு­கின்­றனர். இலங்­கையில் உள்ள ஏனைய பல்­க­லைக்­க­ழ­கங்­களை நினை­வுப்­ப­டுத்திக் கொள்­ளுங்கள். எல்லா பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் தேசிய அம்­சத்­துடன் இனத்­துவ அம்­சங்­களும் காணப்­ப­டு­கின்­றன என்­ப­தனை உணர்ந்து கொள்­வார்­களா? இலங்­கையில் தமிழ், முஸ்லிம், சிங்­கள பாட­சா­லைகள் காணப்­ப­டு­கின்­றன. இவற்றுள் இனத்­துவ அம்சம் காணப்­ப­ட­வில்­லையா? எதிர்­கா­லத்தில் பல்­க­லைக்­க­ழ­கங்­களை அமைக்­கையில் மலை­யக அடை­யா­ளத்­துடன் கூடிய பல்­க­லைக்­க­ழ­கத்தை ஏன் அமைக்கக் கூடாது? எல்லா நாட்டு பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் இனத்­துவ அடை­யா­ளங்கள் காணப்­ப­டு­கின்­றன.

மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்தில் பல்­வேறு கற்கை நெறி­களும் இடம்­பெறும். பெருந்­தோட்ட விவ­சாயம், தோட்­டத்­துறை சார்ந்த மேலும் பல கற்கை நெறி­க­ளையும் ஏற்­ப­டுத்­தலாம். தேயிலை ஆராய்ச்சி நிலையம், இறப்பர் ஆராய்ச்சி நிலையம் என்­றெல்லாம் இருக்­கின்­றன. எனவே தேயி­லையும், இறப்­பரும் ஆராய்ச்­சிக்கு உட்­பட்­ட­ன­வாக விளங்­கு­கின்­றன. எனவே இவை தொடர்­பான கற்கை நெறி­க­ளையும் மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஏற்­ப­டுத்த முடியும். மலை­யக கலை­களை மேம்­ப­டுத்த பாட­நெ­றி­களை ஏற்­ப­டுத்­தலாம். மலை­யக சிறு­கதை, நாவல், இலக்­கியம் என்­ப­வற்­றுக்கு ஒரு வர­லாறு இருக்­கின்­றது. பதி­னைந்து இலட்சம் இந்­திய வம்­சா­வ­ளி­யினர் வாழ்­கின்­றனர். இந்­நி­லையில் இம்­மக்கள் குறித்த அடை­யா­ளத்­துடன் கூடிய மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்தை ஏன் ஆரம்­பிக்கக் கூடாது? பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் மலை­யக மண்­வா­சனை இருக்­கின்­றதா? இல்­லையேல் ஊவா, சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழ­கங்­களில் மலை­யக மண் வாசனை ஏதேனும் உள்­ளதா? மலை­யக அம்­சங்கள் எந்த ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் கிடை­யாது. மலை­ய­கத்தில் உள்ள மூன்று பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் இது இல்லை. என­வேதான் மலை­யக மக்­களின் அடை­யா­ளத்­துடன் கூடிய தேசிய பல்­க­லைக்­க­ழகம் வேண்டும் என்­கிறோம்.

 

கலா­நிதி ஏ.எஸ்.சந்­தி­ரபோஸ்

மலை­யக பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­ட­வேண்டும் என்­பது இன்று பிர­ப­ல­மான கோரிக்­கை­யாக முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தில் அர­சி­யல்­வா­தி­களும் இது தொடர்பில் குரல் எழுப்பி வரு­கின்­றனர். இத­னு­டைய பிர­வாகம் மிக நெருங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. மலை­யக பல்­க­லைக்­க­ழகம் அமை­வ­தற்­கான பிர­வாகம் மிகத் தொலைவில் இல்லை. இது தெளி­வா­கவே எமக்கு தெரி­கின்­றது. எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தியில் கிடைக்­கப்­பெ­று­கின்ற ஒரு விட­யமே மிகவும் பய­னுள்­ள­தா­கவும் முக்­கி­யத்­துவம் மிக்­க­தா­கவும் இருக்கும். மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்­தினை ஆரம்­பிப்­ப­தற்­கான ஒழுங்­க­மைக்­கப்­பட்ட முழு­மை­யான ஆவணம் ஒன்று எமக்கு இப்­போது தேவை­யாக உள்­ளது. இதனை நாம் இப்­போது தயார் செய்து கொள்­ளுதல் வேண்டும். அமைச்சு மட்­டத்தில் இதற்­கான குழு ஒன்று நிய­மிக்­கப்­ப­டுதல் வேண்டும். இவ்­வாறு நிய­மிக்­கப்­ப­டு­மி­டத்து நாம் பேசி­ய­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான முத­லா­வது வேலைத்­திட்­ட­மாக அமையும். மலை­யக பல்­க­லைக்­க­ழகம் வேண்­டுமா? வேண்­டாமா? என்று இரண்டு பக்க விவா­தங்­களும் உள்­ளன. இந்த நிலையில் இது குறித்த ஒரு முழு­மை­யான ஆவ­ணத்தை தயா­ரித்து சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு கைய­ளித்தல் வேண்டும். மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்தை ஏற்­ப­டுத்தும் வாய்ப்பு இதனால் உரு­வாகும் என்­பதால் இதனை உட­ன­டி­யாக செய்தல் வேண்டும்.

இதே­வேளை மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்தை ஏற்­ப­டுத்­து­வது குறித்த சாத்­தி­ய­மான ஆய்வு தொடர்­பாக முக்­கி­யஸ்­த­ர்கள் நிதி­ய­மைச்­ச­ருடன் கலந்­து­ரை­யாடி உள்­ளனர். இதன்­போது இன ரீதி­யான, பிர­தேச ரீதி­யான பல்­க­லைக்­க­ழ­கங்­களை அமைக்கக் கூடாது. தேசிய பல்­க­லைக்­க­ழ­கமே அமைக்­கப்­பட வேண்டும் என்று மலை­யக பல்­க­லைக்­க­ழகம் குறித்த கருத்து உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. வர­வு–­செ­லவு திட்­டத்தில் மலை­யக பல்­க­லைக்­க­ழகம் ஒன்­றினை உரு­வாக்­கு­வது தொடர்பில் கள ஆய்வு நடாத்­து­வ­தற்­கான பணத்­தினை ஒதுக்­கீடு செய்ய முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனால் இது பல­ன­ளிக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

 

பழனி முத்து ஸ்ரீதரன் (வலயக் கல்விப் பணிப்­பாளர் – ஹட்டன்)

யாழ்ப்­பாண, தென்­கி­ழக்கு மற்றும் கிழக்­கி­லங்கை பல்­க­லைக்­க­ழ­கங்கள் அப்­பி­ர­தேச சிறு­பான்மை மக்­களின் கல்வி அபி­வி­ருத்தி கருதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. எனினும் மலை­யக மாண­வர்­களில் பெரும்­பா­லானோர் இடம்­பெ­யர்ந்து ஏனைய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு செல்ல வேண்­டிய சூழ்­நிலை காணப்­ப­டு­கின்­றது. மலை­ய­கத்தில் இருந்து விரல்­விட்டு எண்­ணக்­கூ­டிய மாண­வர்­களே பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றார்கள். இந்­நி­லையில் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் இம்­மா­ண­வர்­களும் பல்­க­லைக்­க­ழக கல்­வி­யினை கைவிடும் வாய்ப்­புகள் காணப்­ப­டு­கின்­றன. மலை­யக பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­ப­டு­மி­டத்து பல்­வேறு சாதக விளை­வு­களும் உரு­வாகும். மலை­யக பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பாட­நெ­றிகள் பலவும் ஏற்­ப­டுத்­தப்­பட்டு எம்­ம­வர்கள் கற்கும் வாய்ப்பு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். முதியோர்களுக்கான கல்வி வாய்ப்புகள் உலக நாடுகளில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. இதனடிப்படையில் மலையக மக்களுக்கும் கல்வி மேம்பாட்டு அல்லது ஏனைய துறைசார் வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள பல்கலைக்கழகம் ஒன்று ஏற்படுத்தப்படுமானால் அது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

 நவீன யுகத்தில் தொழில் தேர்ச்சிகளை அபிவிருத்தி செய்யக்கூடிய பல்வேறு பாடநெறிகள், கல்வி நடவடிக்கைகள் காணப்படுகின்றன. பெருந்தோட்டத்துறை தேயிலை கொழுந்தினை மட்டும் பறிக்கும் ஒரு இடமாகாது. இங்குள்ள பல்வேறு வளங்கள் தொடர்பில் பூரண விளக்கம் ஏற்படுத்தப்படுதல் வேண்டும். சுற்றுலா பயணிகள் ஊக்குவிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுதல் வேண்டும். விவசாயதுறை சார்ந்த கல்வி அபிவிருத்தி என்பன பற்றியும் கருத்திற் கொள்ளப்படுதல் வேண்டும். மலையக பல்கலைக்கழகத்தில் இவை குறித்த பாடநெறிகளும் தேவையாகும். இவற்றோடு மலையக பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படுமிடத்து கல்விசார் மற்றும் கல்விசாரா தொழில்வாய்ப்புகளையும் எம்மவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். சர்வதேச தொழிற்சந்தைக்கேற்ப மாணவர்களை பல்கலைக்கழகங்கள் தயார் செய்கின்றன. இத்தகைய வாய்ப்புகளை மலையக பல்கலைக்கழகத்தின் ஊடாக எம்மவர்களும் பெற்றுக்கொள்ள வழி செய்தல் வேண்டும். சர்வதேச கல்வியினையும் புலமைப்பரிசில் உள்ளிட்ட விடயங்களையும் எமக்கு சாதகமாக்கிக் கொள்ளவும் முற்படுதல் வேண்டும். பாடசாலைக் கல்வியில் வெற்றிபெறாத மாணவர்கள் ஏனைய துறைகளில் உயர் இலக்கினை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. ஆசிரியர்கள் தொழில் தலைமையினை மேம்படுத்திக் கொள்ள முடியும். இவற்றுக்கெல்லாம் மலையக பல்கலைக்கழகம் மிகவும் அவசியமேயாகும்.

 

திருமதி ஆர்.சோபனாதேவி (பேராதனை பல்கலைக்கழக,  சிரேஷ்ட விரிவுரையாளர்)  

மலையக பல்கலைக்கழகம் அவசியம். எனினும் இதற்குரிய மாணவர்களையும் நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். வருடா வருடம் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் தொகை குறைவாக உள்ளது. எனவே மலையக மாணவர்களின் தொகையை அதிகரிக்க வேண்டும். க.பொ.த. உயர் தரத்தில் பல்கலைக்கழகம் செல்லும் வகையில் பெறுபேற்று அதிகரிப்பினை ஏற்படுத்தல் வேண்டும். பாடசாலைகளில் ஆசிரிய வளங்கள் உள்ளிட்ட ஏனைய வளங்களை உரியவாறு பெற்றுக் கொடுத்தல் வேண்டும். கல்வி சம்பந்தமான விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

 

மலையக பல்கலைக்கழகம் குறித்த நோக்கங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். மலையக பல்கலைக்கழகத்தில் மலையகத்தின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்ற வலியுறுத்தல்கள் நியாயமானதேயாகும். இங்கு ஆரம்பிக்கப்படவுள்ள பெருந்தோட்டத்துறை சார்ந்த பல்வேறு பாடநெறிகளும் எம்மவர்களின் சகல துறைசார் இருப்புகளுக்கும் வலுசேர்ப்பதாக அமைதல் வேண்டும். மலையக பல்கலைக்கழகம் காலத்தின் தேவையாகும். இதற்கான அழுத்தங்கள் வலுப்பெற வேண்டும் என்பதோடு அதற்கான ஆயத்த நிலையிலும் நாம் இருத்தல் வேண்டும். 

 

துரை­சாமி நட­ராஜா –

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-03#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.