Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று சபைகளாகப் பிரிப்பதற்கு தமிழர்கள் அனுமதிக்கமாட்டார்கள் (கல்முனை மாநகரசபையின் எதிர்��

Featured Replies

6609_1480837069_DSCN0952.JPG

சாய்ந்தமருதுப் பிரதேசத்திற்குத் தனியானபிரதேசசபை வழங்கப்படுவதில் தமிழர்கள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை ஆனால் கல்முனைத்தொகுதியில் இருக்கின்ற தமிழ்க்கிராமங்களை மூன்றுசபைகளாக் கூறுபோடமேற்கொள்ளும் சதிவேலையினை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது என கல்முனை மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கென்றிமகேந்திரன் தெரிவித்துள்ளார்
கல்முனைத் தொகுதியில் பிரதேசசபைகள் பிரிக்கப்பட இருக்கும் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திர்ப்பு சனிக்கிழமை 3 ஆம் திகதி இரவு அவரது இல்லத்தில் நடைபெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார் 
இதில் கல்முனை மாநகரசபையின் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சித்தலைவர் ஏகாம்பரம் கல்முனை மாநகரசபை உறுப்பினர்அ.விஜயரெத்தினம் பிரபல ஒப்பந்தக்காரர் எஸ்.சந்திரசேகரம் கல்முனை தமிழர் மகாசங்க்தின் செயலாளர் இராமகிருஷ்ணன் முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி ஆ.விநாயகம்பிள்ளை ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
கல்முனைத் தொகுதியில் உள்ள தமிழர்களைப் பாதிக்கச்செய்யக்கூடிய தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கக் கூடிய விவகாரங்கள் பல இருந்தாலும் கூட தற்பொழுது எழுந்தள்ள கல்முனை பிரதேசசபை பிரிப்புத் தொடர்பான பிரச்சினை தொடர்பாக ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வரலாம் என நினைக்கின்றேன்
கல்முனைத்தொகுதிப் பிரதேசத்தில் பல வருட காலமாக கல்முனை மாநகரசபைப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிங்கள் 100 வீதம் வாழ்கின் சாய்ந்தமருதுப் பிரதேசத்திற்கான தனியான பிரதேசசபையினை உருவாக்கவேண்டும் என்பதில் அம்மக்களும் புத்திஜீவிகளும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர் 

இந்தக் கோரிக்கையினைப் பொறுத்தமட்டில் அது நியாயமான கோரிக்கை  அந்த மக்களுக்கான தனிப்பிரதேசசபை நிறுவுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை அதற்கு நாம் உடன்படுகின்றோம்  ஆனால் சாய்ந்தமருப் பிரதேசசபையினைப் பிரிக்கவேண்டும் என்று தற்போதய பிரதமமந்திரியால் கடந்த பாராளுமன்றத்தேர்தலின் போது வாக்குறுதி வழங்கப்பட்டதாகவும் அதை நிறைவேற்றித்தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் சனிக்கிழமை 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவதத்தில் கல்முனை பிரதேசசபை பிரிக்கப்படுவது சம்மந்தமாக அமைச்சர் றிசாட் பதுருத்தின் பேசியுள்ளார் அதாவது சாய்ந்தமருதுக்குத் தனியான பிரதேசசபையும் கல்முனைத்தொகுதியில் உள்ள கல்முனைக்குடி  கல்முனை ,நற்பட்டிமுனை ,சேனைக்குடியிருப்பு, துரைவந்தியமேடு ,பாண்டிருப்பு மருதமுனை ,பெரியநீலாவணைக் கிராமங்களை ஒன்றிணைத்து மூன்று சபைகளாகவும் அதாவது கல்முனைக்குடி கல்முனை இரண்டும் ஒரு மாநகரசபையாகவும் நற்பட்டிமுனை சேனைக்குடியிருப்பு துரைவந்தியமேடு ஆகிய கிராமங்கள் ஒருபிரதேச சபையாகவும் மருதமுனை பாண்டிருப்பு பெரியநீலாவணை ஆகிய கிராமங்கள் மற்றுமோர் பிரதேசசபையாகவும் பிரிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
கல்முனைப் பகுதியில் உள்ள தமிழ்மக்களைப்பொறுத்தமட்டில் சாய்ந்தமருதுக்குத் தனியான பிரதேசசபை பிரிக்கப்படுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை அதனை வரவேற்கின்றோம் ஆனால் ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழ்மக்களை மூன்றாகப்பிரித்து கூறுபோடுவதனைதமிழ்மக்களாகிய நாம் விரும்பவில்லை அவ்வாறு பிரித்தாள்வதனை முழுமையாக எதிர்க்கின்றோம் .
 சாய்ந்தமருது பிரிந்து தனியான பிரதேசசபையாக  மாறினாலும் கல்முனைத்தொகுதியில் வாழுகின்ற தமிழ்மக்கள் ஒரு சபையின்கீழே வாழவிரும்புகின்றோம்  ஆனால் இங்குள்ள 24 ஆயிரம் வாக்குகளைக்கொண்ட தமிழர்களையும் 35 தமிழ் மக்களினதும் எந்தவித சம்மதத்தினையும் அம்மக்களின் அபிப்பிராயத்தினைக் கேட்காது தமிழ்மக்களை மூன்று பிரிவாக பிரிப்பதற்கு இந்த அமைச்சரும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் செய்கின்ற சூழ்ச்சித்திட்டத்தினை கல்முனைத்தொகுதியில் வாழுகின்ற தமிழ்மக்களாகிய நாங்கள் விரும்பவில்லை 
நாங்கள் மூன்று சபைகளாக பிரிக்கவேண்டும் என்றகோரிக்கையும் வைக்கவில்லை இவ்வாறு இருக்கும்போது சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேசசபை பிரியும்போது கல்முனைத் தொகுதியில் 70 வீதமாக இருக்கும் முஸ்லிங்களும் 30 வீதமாக இருக்கும் தமிழர்களும் இருக்கின்றனர் இவ்வாறு இருக்கும் நிலையில் சாய்ந்தமருது பிரதேச சபை தனியாகப் பிரியும்போது தமிழர்கள் 40 வீதமும் முஸ்லிங்கள் 60 வீதமாகவும் குறைந்து விடுவார்கள் என்ற கணீப்பினை வைத்துக்கொண்டு தாங்கள் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருக்கின்ற அந்தச் செல்வாக்கினைப் பயன்படுத்தி தமிழர்களை இந்தப்பிரதேசத்தில் நசுக்குவதற்கும் இல்லாமல் செய்வதற்குமான சூழ்ச்சியாகவும் இந்தச் செயற்பாட்டைக் கருதவேண்டியுள்ளது.
 கல்முனைப் பிரதேசத்தினைப் பொறுத்தமட்டில் கல்முனைத்தமிழர்கள் சாய்ந்தமருது வேறாகப்பிரியும்போது  அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை ஆனால் ஏனைய கிராமங்கள் மூன்று சபைகளாகப் பிரிக்கப்படுவதனை நாம் விரும்பமாட்டோம். 
கல்முனைப் பிரதேசத்தில் ஒற்றுமையாக இருக்கும் தமிழர்களைக் கூறுபோட்டு தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசத்தில் இருந்துகொண்டிருக்கும் தமிழ்மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருக்கின்ற 1989 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையும் உப பிரதேசசெயலகமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற தமிழ்ப்பிரதேசசெயலகத்தைத் தரமுயர்த்தித்தரவேண்டும் என்றகோரிக்கையினை மழுங்கடிக்கவைக்கும் சதிமுயற்சியாகும் எனவே கல்முனை மாநகரசபையின் கீழ் உள்ள தமிழ்க்கிராமங்களை மூன்று சபைகளாக கூறுபோடமுனைவது தமிழர்களுக்குச் செய்யும் அநிதியாகும் என்றார்.

கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் அ.விஜயரெத்தினம் கருத்துத்தெரிக்கையில்
சாய்ந்தமருதுகிராமம் பிரதேசசபையாக பிரிவதை நாம் எதிர்க்கவில்லை கல்முனைத்தொகுதியில் உள்ள தமிழ்க்கிராமங்களான கல்முனை பாண்டிருப்பு பெரியநீலாவணை துரைவந்தியமேடு சேனைக்குடியிருப்பு நற்பட்டிமுனைக் மணல்சேனைக்கிராமங்களை கூறுபோடும் செயலை ஏற்கமுடியாது இந்த விடயத்தினை தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைமைகளுக்கு எத்திவைக்கவிரும்புக்கின்றோம்.
 அம்பாரைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்று மாகாணசபை உறுப்பினர்களும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்வேண்டும்
கிழக்குமாகாண சபையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் முஸ்லிம் காங்ரசிம் இணைந்து ஆட்சிசெய்துகொண்டிருக்கும் இந்தவேளையில் அம்பாரைமாவட்டத்தின் தமிழர்கள் அல்லல்படும் போது பாராமுகமாக இருக்கின்ற அந்த முதலமைச்சரை கூட மனவேதனையுடன் தெரிவிக்கின்றேன் வேலைவாய்ப்பு அபிவிருத்தியில் அம்பாரைமாவட்டம் புறக்கணிக்கப்படுவது வேதனையானது என்றார்

முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கு. ஏகாம்பரம் கருத்துத்தெரிவிக்கையில் 

கல்முனை என்றால் என்ன என்றுதெரியாத சிலர் தங்களுக்கு விரும்பியவாறு  சரித்திரம் அற்ற தரித்திரத்தினை பரப்பி இன ஐக்கியத்திற்கு இடையூறு பண்ணியதுதான் வரலாறாக உள்ளது
  கல்முனைத் தொகுதியில் தமிழர்களும் முஸ்லிங்களும் ஐக்கியத்துடன் அன்நியொன்னியமாக வாழ்ந்து வந்தனர் கால ஓட்டத்தில் அரசியலில் ஏற்பட்ட விரோதம் காரணமாக தங்களை வளர்த்துக்கொள்வதற்காக சகோதோர இன அரசியல்வாதிகள் கூறுபோட்டு தமிழர்களின்  இடங்ளை விட்டு வெளியேற்றிய வரலாறுகள் இருக்கின்றது அதனை ஞாபகப்படுத்த விரும்பவில்லை
தமிழர்கள் கடந்தகால இன்னல்களினால் உயிர்களை இழந்து உடமைகளை இழந்தும் இங்குள்ள முஸ்லிங்களுடன் ஐக்கியமாகத்தான் வாழ விரும்புகின்றோம் கல்முனைமாநகர சபையானது தரமான மாநகரசபை இதனை அரசியல் நலனுக்காக கூறுபோட பிற்போக்கான அரசியல்வாதிகள் முனைகின்றனர் .இதில் சாய்ந்தமருது பிரதேசசபை பிரிக்கப்படுவதனால் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை சாய்ந்தமருது சேர்ந்திருந்தால் ஒருபலமானமாநகரசபையாக இருக்கும் ஆனால் அவர்கள் அவர்களது பிரதேசத்தினை தங்களின் ஆளுகைக்குள் அபிவிரத்திசெய்ய வேண்டும் என்பதற்காக தனியான பிரதேசசபை கேட்பது நியாயம் ஆனால். அவ்வாறு பிரிக்கப்படும்போது சாய்ந்தமருது எல்லையாக இருந்து ஏனைய தமிழ் முஸ்லிம் கிராமங்கள்  ஒன்றிணைந்து தனியான மாநகரசபையாக இருக்கவேண்டுமே தவிர அக்கிராமங்களை மூன்று சபைகளாக கூறுபோடுவதற்கு நாம் அனுமதிக்கமாட்டோகம் இன ஐக்கியம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் சாய்ந்தமருது தனியான பிரதேசசபையாக பிரிக்கப்பட்டாலும் ஏனைய அனைத்துக்கிராமங்களும் ஒன்றிணைந்து மாநகரசபையாகவே இருக்கவேண்டும்
கடந்தகாலங்களில் தமிழ்மக்களின் போராட்டங்களினால் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களினால் தமிழ்மக்கள் ஓரங்கட்டப்படனர் இந்த சந்தர்ப்பத்தினைப்பயன்படுத்தி  தமிழ்மக்களுக்கு என்ன என்ன இன்னல்களைச் செய்யமுடியுமோ, அபிவிருத்திகளைத்தடுக்க முடியுமோ அதனை அரசாங்கத்துடன் சேர்ந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்துவந்தார்கள்
இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நல்லாட்சியினைக் குழப்புவதற்காக சதித்திட்டங்கள்செய்கின்றனர் இதனை நல்லாட்சியை நடாத்திக்கொண்டிருக்கும் பிரதமரும் ஜனாதிபதியும் நல்லதீர்ப்பு வழங்கவேண்டும் என்றார்

http://battinaatham.com/description.php?art=6609

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.