Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிற்சலாந்து நாட்டின் ஒரு வருட காலநிலைப் படங்கள்..

Featured Replies

படம் 1. 
சுவிற்சலாந்து நாட்டின் ஒரு வருட காலத்தில் ஏற்படும் காலநிலை மாற்றங்களின் போது படமாக்கிய காட்சிப்பதிவுகளை உங்கள் பார்வைக்குத் தருகிறோம். பொதுவாக வருடத்தின் மூன்றாம் மாத இறுதிப்பகுதியில் கோடை ஆரம்பித்து பத்தாம் மாத இறுதியில் முடிவடையும். இந்தப் பத்தாம் மாத இறுதிப்பகுதியிலிருந்து குளிர்காலம் ஆரம்பிக்கும். எனவே காட்சிப்பதிவுகளைக் கோடையிலிருந்து ஆரம்பிப்பதா? அல்லது குளிர் காலத்திலிருந்து ஆரம்பிப்பதா? எனும் சிக்கல் உள்ளதால் வருட ஆரம்பமாகிய ஜனவரியில் இருந்து ஆரம்பிக்கிறோம்.

 

15272221_1343956168972517_17394223987822

படம் 2. 
ஜனவரி மாதமென்பது டிசம்பர் மாதத்தின் விட்டகுறை தொட்டகுறை எனலாம். ஆம்.. டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த பனிப்பொழிவின் தொடர்ச்சி பெரும்பாலும் ஜனவரியிலும் நீடிக்கும். இரவிரவாகப் பொழிந்த பனியால் வீடுகள், மரங்கள் நிலம் என அனைத்தும் பனிப்பொழிவுக்குள் மூழ்கி வெள்ளைவெளேரெனக் காட்சியளிக்கும். 15370076_1343959112305556_54823320301179

படம் 3. 
பனிவீழ்ச்சியில் மூழ்கி அரைவாசி மாத்திரமே தெரியும் சில வாகனங்கள்.

15304080_1343961285638672_18203020083534

படம் 4. 
இதே காட்சி கோடைகாலத்தில் இவ்வளவு அழகாகத் தோற்றமளிக்கும். 15250864_1343957862305681_54759683097299

படம் 5. 
இங்கே உயர்ந்து நிற்கும் மரத்தில் எவ்வளவு பனிவீழ்ச்சிப் படிவு உள்ளது என்பதைக்காட்டும் படம். 15259688_1343963675638433_20962822785876

படம் 6. 
இதே காட்சி கோடையில் எப்படி என்பதை காட்டும் படம்.

15272254_1343956395639161_16091582920544

படம் 7. 
மரங்களின் கிளைகளில் படிந்துள்ள படிப்படைவின் சதமமீற்றர் அளவைக் காட்டும் கிட்டப் பார்வைக் காட்சி

15369972_1343957325639068_85099847779146

படம் 8. 
பல சந்தர்ப்பங்களில் மரங்களின் கிளைகள் பனிப்படிவின் பாரம் தாங்க முடியாமல் இவ்வாறு தலை சாய்ந்து நிற்பதைக்காட்டும் படம்.

15289135_1343959928972141_31082721230394

படம் 9. 
இங்கே நீங்கள் பார்க்கும் காட்சியில் ஒரு வாகனம் பயணிக்கும் பாதை அரைகுறையாகத் தெரிகிறது. இப்பாதையானது தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் பயணிக்கும் ஒரு பிரதான வீதி. இவ்வாறான வீதிகள் அதிக பனிவீழ்ச்சியின் போது எவ்வாறு போக்குவரத்துக்குக்காக இலகு படுத்தி சீர் செய்யப்படுகின்றன என்பதை அடுத்தபடத்தில் காணலாம்.

15304652_1343958985638902_68448120462490

படம் 10. 
நாடு தோறும் ஆயிரக்கணக்கில் இவ்வாறு முன்பக்கத்தில் வீதியை சேதப்படுத்தாமல் வீதியிலுள்ள பனிப்பொழிவை மட்டும் வழித்து வீதியோரமாகத் தள்ளி விட்டுச் செல்லும் வகையில் ஒரு தட்டினைப் பொருத்தி விட்டு வாகனத்தை ஏனைய வாகனம் போல ஒரு குறிப்பிட்ட பகுதி வரை துப்பரவாக்கிச் செல்வர்.

15288556_1343956162305851_57558296076178

படம் 11. 
இந்த வாகனத்தால் வீதி துப்பரவு செய்யப்படும்போது அதன் தகட்டினால் வீதியின் கரையோரம் தள்ளி எறியப்படும் பனிப்பொழிவு இவ்வாறு வீதியோரத்தில் சிதறிக் கிடப்பதையே படத்தில் காண்கிறீர்கள்.இந்த மாதத்தில் சூழல் வெப்பநிலை பூச்சியம் பாகைக்கும் குறைவாகி மிகக் குளிராக இருப்பதால், இந்தப் பனிக்கட்டிகள் நீண்ட நாட்களுக்குக் கரையாமல் கற்கள் போல உறை நிலையிலே இருக்கும்.

15271992_1343960675638733_57855839558464

படம் 12. 
இந்த வாகனத்தின் முற்பகுதியிலிள்ள தகடு, பனிப்படிவைத் துப்பரவு செய்யும் சமகாலத்தில், இவ்வாகனத்தின் பின்பகுதியில் உள்ள தாங்கியில் நிரப்பப்பட்டுள்ள ஒருவகை இராசயன உப்பானது தாங்கியின் விளிம்பில் வீதியின் பக்கம் நோக்கிப் பொருத்தப்பட்டுள்ள குழாய் வழியாக கீழ் நோக்கி வெளியே வர, குழாயின் விழிம்பில் பொருத்தப்பட்டுள்ள சுழல் சக்கரமானது இந்த உப்பை வீதியின் அனைத்து பாகங்களுக்கும் விசிறி எறிந்து விடும். இந்த உப்பானது வீதியில் எஞ்சிக்கிடக்கும் பனிப்படிவையும் கரைத்து நீராக்கி விடுவதோடு பனிப்படிவே இல்லாத ஒரு வீதியாக ஆக்கி விடும். அதிக போக்குவரத்து நிறைந்த வேகவீதிகள் மற்றும் பிரதான வீதிகளுக்கே இந்த இரசாயன உப்பு வீசுவார்கள்.

15289298_1343955978972536_39017470874453

படம் 13.
இந்த இரசாயன உப்பின் செயற்பாடும், தொடர்ச்சியான வாகனப்போகுவரத்தும் சேர்ந்து தொடர் பனிப்பொழிவிலும் வீதிகளைப் படத்தில் பார்ப்பது போல பெருமளவுக்கு பயணத்துக்குகந்ததாக வைத்திருக்க உதவுகிறது. இதேவேளை, வின்ரர் காலத்தில் பயணிக்கவென அனைத்து வாகனங்களுக்கும் வின்ரர் கால விசேட சில்லுகள் பொருத்தப்பட்ட படி தான் வாகனங்கள் பயணிக்கும். இது இங்கு கட்டாய நடைமுறையான ஒன்று. இந்தச்சில்லுகள் அதிக உராய்வு கொண்டவை என்பதால் பனிப்படிவின் வழுவழுப்புப்புத் தன்மையால் வீதியில் வாகனம் வழுக்கி ஏற்படும் விபத்துக்கள் மிக அதிகளவில் தவிர்க்கப்படுகின்றதெனலாம்.

15259616_1343958995638901_53732511662077

 

 

படம் 14. 
இந்தப்படத்தின் இடப்பக்கக்கீழ் மூலையிலிருந்து தொடங்கி குடியிருப்புக்களை நோக்கிச் செல்லும் பாதை வெறுமனே துப்பரவு வாகனத்தால் துப்பரவு செய்யப்பட்டுள்ளதோடு இரசாயன உப்பு வீசப்படாத நிலையிலுள்ளதையும், படத்தின் வலப்புற மேல் பக்கத்தில் உள்ள பிரதான வீதியொன்று இரசாயன உப்பு பாவிக்கப்பட்டு மிகச் சுத்தமாகவும் இலகுவான போகுவரத்துச் செய்யும் நிலையிலுள்ளதையும் விளக்கும் படம்.

15259307_1343963825638418_81001258166106

படம் 15. 
ஏறத்தாள பெப்ருவரி மாதமும் மார்ச் மாத நடுப்பகுதி வரைக்குமான காலப்பகுதியும் ஜனவரி மாதத்தின் நிலைப்பாடே மிகப்பெரும்பாலும் நீடிக்கும். மார்ச் மாத நடுப்பகுதியை அண்மித்த காலப்பகுதியில் சூழல் வெப்பநிலை கணிசமான அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும். இதன்போது நிலமெங்கும் பரவிக்கிடக்கும் படிப்படிவுகள் மெல்லமெல்லக் கரைய ஆரம்பிக்கும். இதன்போது மாதக்கணக்கில் பனிக்குள் சிக்குண்டு கிடந்த புற்களும் சூரிய தரிசனத்துக்காக வெளியே வருவதை விளக்கும் படம்.

15304619_1343964565638344_24009940201942

படம் 16. 
பனிப்படிவுகள் கரைய ஆரம்பித்தாலும், இக்காலகட்டத்தில் இரவு வேளைகளில் அதிகரித்த பனிப்புகார் இருக்கும். அனேகமாக இரவு வேளைகளில் சூழல் வெப்பநிலை கீழ்நோக்கிச் செல்வதால் ஏற்படும் குளிரால் மரங்கள் புற்கள் தாவரங்களில் படியும் பனிப்புகார் இறுகி உறைநிலையாகி இவ்வாறு காட்சியளிக்கும். பகலில் மீண்டும் சூழல் வெப்பம் அதிகரிக்க இப்படிவு கரைந்து விடும்.

15326311_1343967328971401_46241073921802

படம் 17. 
பனிப்புகார் உறைநிலையாகப் படிந்துள்ள ஒரு கிராமத்தின் அகன்ற காட்சிப் பதிவு.

15289165_1343962048971929_84351113612402

படம் 18. 
இந்தப்பனிப்புகார் உறைநிலையாகிப் படியும் தன்மையைத் துல்லியமாக விளக்கும் மிக அருகிலான பதிவு.

15325362_1343971178971016_29422403922610

படம் 19. 
மார்ச் மாத இறுதி வாரத்தில் வரும் ஞாயிறன்று அதிகாலை 2 மணிக்கு உத்தியோகபூர்வமாக கோடைகாலம் ஆரம்பிக்கும். அதாவது, அதிகாலை 2 மணி என்பது அதிகாலை 3 மணியாக மாற்றப்படும். இதை டொச் மொழியில் Sommer zeit என அழைப்பர். தமிழில் இதை கோடைநேரம் அல்லது பகல் ஒளி சேமிப்பு நேரம் என அழைக்கலாம். கோடைகாலம் எனக்கூறப்படும் இக்காலத்தில் தான் சூரிய ஒளி அதிகம் கிடைக்கும் காலமாகும். எனவே ஒருமணிநேரத்தை முன்னே கொண்டு செல்வதன் மூலம் சூரிய ஒளி சேமிக்கப்பட்டு மாலை நேரத்தில் ஓய்வு நேரப்பொழுது போக்கை மக்கள் இன்பமோடு உல்லாசமாகக் கழிக்கலாம் எனும் நோக்கில் தான் இவ்வாறு செய்கின்றனர்.

15370015_1343957348972399_47469607153884

படம் 20. 
கோடைகாலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து கோடையின் தன்மையை உணர ஆரம்பிக்கும் வகையில் மரங்கள் துளிப்பதையும் புற்கள் பச்சைப்பசேலெனெனத் தளைத்து வளர்வதையும் காணலாம். ஆனாலும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மலைப்பகுதிகளில் இன்னமும் சூழல் வெப்பம் பூச்சியம் பாகைக்கும் குறைவாகவே உள்ளதால் மலைகளில் ஏற்கனவே பொழிந்த பனிவீழ்ச்சி இன்னமும் கரையாமல் இருப்பதையும் காட்டும் படம்.

15326190_1343969822304485_66894502244170

படம் 21. 
ஏறத்தாள ஏப்ரல் நடுப்பகுதியை அண்மித்த காலப்பகுதியில் மரங்கள் இவ்வாறு அழகாகத் துளிர்விட ஆரம்பிப்பதைக் காணலாம்.

15326033_1343969185637882_41340841359928

படம் 22. 
மரங்கள் மட்டுமன்றி பூக்களும் துளிர்விட ஆரம்பிக்கும். அந்த வகையில் மிக விரைவாக கோடையை வரவேற்று பூக்க ஆரம்பிக்கும் Tulpen என அழைக்கப்படும் பூவினம்.

15369054_1343966152304852_44185394163941

படம் 23. 
மஞ்சள், வெள்ளை, வெள்ளை செம்மஞ்சள் கலந்தது என விதவிதமாகப் பூக்கும் இந்த Tulpen பூவினத்தின் அழகிய காட்சி.

15289108_1343957638972370_83512533309783

படம் 24. 
ஏப்ரல் மாதம் வந்து விட்டது என்பதைப் பார்க்கும் இடமெல்லாம் காட்டும் ஒரு மரம். இது ஆரம்பத்தில் மரம் முழுக்க இவ்வாறு மஞ்சளாகத் துளிர்த்து பின்னர் சாதாரண மரங்கள் போல பச்சை இலைகளாக மாற்றம் பெற்று விடும்.

15259562_1343969985637802_49615283006924

படம் 25.
பார்க்கும் இடமெல்லாம் கண்கொள்ளாக்காட்சியாகத் தெரியும் இந்த மரம், ஒரு அழகான பின்புலக்காட்சியோடு சேர்த்துப் பார்க்கும் போது தெரியும் மேலும் அழகான காட்சி.

15252599_1343972335637567_29608038763885

படம் 26. 
முதலில் பார்த்த மஞ்சள் மரம் போல மரம் முழுக்க இவ்வாறு அழகிய வர்ணத்தோடு பூக்க ஆரம்பித்து பின்னர் ஏனைய மரங்கள் போல பச்சை இலையாக மாறும் மரமொன்றின் அழகுக்காட்சி.

15304609_1343968022304665_55300607060291

படம் 27.
முதலில் பார்த்த மரம் போல மரம் முழுக்க இவ்வாறு அழகிய வெள்ளை வர்ணத்தோடு பூக்க ஆரம்பித்து பின்னர் ஏனைய மரங்கள் போல பச்சை இலையாக மாறும் மரமொன்றின் அழகுக்காட்சி.

15271786_1343963872305080_13499941502173

படம் 28. 
ஏப்ரல் மாதமென்பது சுவிசைப்பொறுத்தவரை ஒரு வித்தியாசமான ஒரு மாதமாகும். ஆம்.. கோடையின் அழகுகள் பல அசுர வேகத்தில் வெளிவரும் மாதமாக இருந்தாலும், இம்மாதத்தில் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதமாக வின்ரர் காலத்து நிகழ்வு நடைபெறுவது பெரும்பாலும் நடக்கும் ஒரு மாதமாகும். தமிழில் எதுகை மோனையோடு பழமொழிகள் சொல்வது போல இம்மாதத்துக்கு இந்நாட்டவர்கள் ஒரு பழமொழி போல ஒரு வசனம் கூறுவார்கள். அதாவது…Der April macht was er will (டேர் அப்றில் மாஹ்ற் வஸ் ஏர் வில்) என்பதே அந்த வசனத்தின் டொச் மொழி உச்சரிப்பாகும். ஏப்ரல் மாதமானது, தான் நினைத்ததைச் செய்யும்...... என இதைத் தமிழாக்கம் செய்யலாம். ஆம்.. அது உண்மை தான். அழகான கோடைக் காட்சிகள் அசுர வேகத்தில் வளர்ந்து செல்லும் போது திடீரென ஒரு நாள் பனிவீழ்ச்சி இடம்பெற்றது. அழகிய பச்சைப்பசேல் புல்வெளிகள் வெண்மணல் பரப்புக்கள் போலாகி மீண்டும் வின்ரர் காலத்துக் கசப்பான குளிரை ஞாபகப்படுத்திய பதிவு இது.

15259165_1343968862304581_19563704080067

படம் 29. 
இதுவரை பூத்த மலர்கள் அனைத்தையும் பெருமளவு நாசமாக்கி விடும் அளவுக்கு வின்ரர் காலத்துப் பனிப்பொழிவு போல அதிக சதமமீற்றர் அளவுக்குப் பொழிந்து தள்ளிவிடும். படம் 24 இல் உள்ள அழகிய மஞ்சள் பூவின் அழகியநிலை…….. இல்லை.. இல்லை….. அழும்நிலைக்காட்சி தான் இது.

15259350_1343964972304970_24481062195639

படம் 30. 
இந்த ஏப்ரல் மாதப் பனிப்பொழிவு தொடர்ச்சியானதல்ல. ஓரிரு மணிநேரம், அல்லது ஓரிரு நாட்களில் முற்றுமுழுதாக நின்று விடும். இதேவேளை சூழல் வெப்பநிலையும் கணிசமான அளவு வெப்பமாக இருப்பதால், பனிப்படிவு மிக வேகமாகக் கரைந்து நீராகி விடும். இதனால் திடீர் பனிவீழ்ச்சி காரணமாக தங்கள் தலைகளைச் சாய்த்து நின்ற பூக்கள் தாவரங்கள் அனைத்தும் சூரிய ஒளியின் உதவியோடு உத்வேகத்தில் மீண்டும் புத்துயிரோடு தலைதூக்கி கண்களுக்கு விருந்தளிக்க ஆரம்பித்துவிடும். அவ்வாறு பதிவாக்கிய ஒரு காட்சியே இது.

15370172_1343965085638292_53678091149919

 

படம் 31. 
ஏப்ரல் மாதம் முடிவடைந்து மே மாதம் வந்தது. மே மாதம் என்றாலே பூக்களின் மாதமென்றால் அது மிகையாகாது. பார்க்கும் இடமெல்லாம் பரவசமான பல்வேறு வகையில் பல்வேறு வர்ணப்பூக்கள் கண்களைக் கவர்ந்திழுக்கும். இது அவ்வாறான ஒரு பதிவு.

15370005_1343968975637903_52347942603724

படம் 32. 
எமது நாட்டில் கொண்டல் பூ என அழைக்கப்படும் ஒரு பூவினம் போலவே உள்ள ஒரு மே மாதப்பதிவு இது.

15304233_1343971268971007_57731752098745

படம் 33. 
மே மாதத்தில் பூக்கும் பல பூக்களில் வியப்பான ஒரு பூவினம் இது. பூவின் நடுவே ஒரு முகம் தெரிவது போல உள்ள இந்தப் பூவினத்தில் வெவ்வேறு வர்ணங்களின் கலவையாக எனக்குத்தெரிந்த வகையில் பத்துக்கும் மேற்பட்ட பூக்கள் இருப்பதானது, இந்தப் பிரபஞ்சம் உலகுக்குப் படைத்த இத்தகைய படைப்புக்கள் ஆச்சரியத்தையும், எமக்கும் மேலாக ஒரு சக்தி உள்ளதெனும் நம்பிக்கையையும் அதிகரிக்கிறதெனலாம்.

15271791_1343967825638018_85887320522283

படம் 34. 
சுவிஸ் மக்கள் தங்கள் வீடுகளின் சுற்றுப்புறம் உட்படத் தொங்கு மாடிகளின் சுவர்களிலும் பல்வேறு விதவிதமான பூக்களைத் தொங்க விட்டு ரம்மியமான காட்சியாக உள்ள ஒரு வீடாக வைத்திருப்பர். இது அவ்வாறான ஒரு காட்சிப்பதிவு

15289270_1343967915638009_36730903049010

படம் 35. 
இந்த மே மாதத்தில் நிலமெங்கும் பச்சைப் புற்களோடு சேர்ந்து வளரும் ஒரு அழகான புல்லினப்பூவொன்று பார்க்கு இடமெங்கும் அழகைக் கொடுப்பதாக உள்ளது. ஆனால் இது ஒரு சில நாட்களில் அதிகளவான மகரந்தத்தை சூழல் முழுக்கப் பரப்பிவிடும். இது பூத்த சில நாட்களில் வாகனங்கள், வீடுகளின் சாளர விளிம்புகள் என அனைத்து இடங்களிலும் இந்த மகரந்தத்தை மிகமிக அதிகளவில் காணலாம். இந்த மாதத்தில் ஏறத்தாள அனைத்துப் பூக்களும் பூப்பதால் மிகப்பெரிய மகரந்தப் பரப்புகை சூழலுக்கு ஏற்படுகிறது. இதனால் சுவிஸ் மக்கள் உட்பட பலர் மகரந்த ஒவ்வாமைக்கு ஆளாகின்றனர். இதன் வெளிப்பாடாக கண் கடித்தல், முட்டு அல்லது தொய்வு போன்ற சுவாசிக்கக் கடினமான நிலமை போன்ற துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.

15369965_1343970292304438_67986571186364

படம் 36. 
இந்தப் புல்லினப்பூவின் கிட்டப்பார்வையிலான பதிவு.

15271759_1343969558971178_68224039319281

படம் 37. 
தூர்ப்பார்வையில் இந்தப்படத்தைப் பார்க்கும் போது, முதலில் நீங்கள் பார்த்த படத்திலுள்ள புல்லினப்பூவைப் போலவே இருக்கும் இந்தப் பூ ஒரு பயன் தரும் தாவரம். நமது இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்படி சமையல் செய்ய உதவும் ஒரு வகை எண்ணை (Rapsöl) தயாரிக்க இத்தாவரம் பயன்படுகிறது.

15271976_1343970395637761_86551971153877

படம் 38. 
(Rapsöl) தாவரத்தின் கிட்டப்பார்வை.

15272310_1343970542304413_23935235864609

படம் 39. 
அனேகமாக மே மாத நடுப்பகுதி என்பது விவசாயிகளின் சுறுசுறுப்பான உழைப்பு ஆரம்பிக்கும் காலமெனலாம். அந்த வகையில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ள காட்சியே இதுவாகும்.

15252631_1343975552303912_15346549748374

படம் 40. 
இதே போல விவசாயிகளால் பயிரிடப்பட்டுள்ள தானியப்பயிர்.

15369109_1343976732303794_19128547962190

படம் 41.
இதே போல விவசாயிகளால் பயிரிடப்பட்டுள்ள சோளம் பயிர். இவற்றைப் போல பல்வேறு பயிரினங்கள் விவசாயிகளால் பயிரிடப்படுகின்றன.

15272221_1343975558970578_71444203844974

படம் 42. 
விவசாயிகள் பயிச்செய்கையில் ஏடுபடும் அதே சமயத்தில், தாமாகவே பலன் தரும் பழமரங்களும் மே மாதத்தில் பூக்க ஆரம்பித்து விடும். அந்த வகையில் பூத்துக் குலுங்கும் அப்பிள் மரச் சோலையின் காட்சியே இதுவாகும்.

15272306_1343969675637833_14255281540377

படம் 43. 
அப்பிள் பூவின் அழகிய அருகிலான தோற்றம்.

15259288_1343964305638370_18977932068283

படம் 44. 
இது பேரிப்பழ மரச் சோலையின் பூத்துக்குலுங்கும் மரங்களின் தோற்றம்.

15325421_1343970725637728_12699333673381

படம் 45. 
இது ஜூன் மாதக்காட்சி. அனேகமாக ஜூன் மாதத்தில் அதிகளவான சூரிய ஒளியையும் அதிகளவான வெப்பத்தையும் அனுபவிப்பதோடு எங்கு பார்த்தாலும் படத்திலுள்ளது போல பச்சைப்பசேல், நீல வானம், பல்வண்ண அழகிய பூக்கள் என்க் கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகளுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும்.

15271905_1343976622303805_40469061145155

படம் 46. 
ஜூன் மாதத்தில் பார்க்கும் இடமெல்லாம் பரவசம் நிறைந்த காட்சிகளுக்குப் பஞ்சமில்லை என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டாக இப்பதிவு.

15259347_1343975575637243_57680678883310

படம் 47.
ஜூன் மாதத்தில் பயிரிடப்படுவதும், சமையலுக்கு உபயோகிக்கும் எண்ணெய் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படும் சூரியகாந்திச்செடி.

15304598_1343966258971508_55957166099430

படம் 48.
படம் 39இல் உள்ளது போல மே மாதத்தில் பயிரிடப்பட்ட உருளைக்கிழங்குச் செடிகள் ஜூன் மாத இறுதிப்பகுதியில் செழிப்புடன் வளர்ந்து விட்டதைக்காட்டும் படம்.

15272222_1343971108971023_64294267022209

படம்.49. 
இதே போல மே மாதத்தில் பயிடப்பட்ட சோளம் பயிர்கள், ஜூன் மாத இறுதிப்பகுதியில் வளர்ந்து நிற்கின்றன.

15370038_1343964412305026_62755371251051

படம்.50.
மே மாதத்தில் அழகாகப் பூத்து நின்ற அப்பிள் பூக்கள் மரம் முழுவதும் காய்களாய்க் காய்த்துத் தொங்கும் காட்சி

15167452_1343966365638164_26555402153802

குறிப்பு: மேலே இணைக்கப்பட்ட படங்கள் மற்றும் படங்களுக்கான விளக்கங்கள் என்பன எனது நண்பன் ஒருவரது Facebookல்  இருந்து எடுத்து அவரது அனுமதியுடன் பதியப்படுகின்றது.

Edited by Surveyor

  • தொடங்கியவர்

படம்.51.
இதே போல மே மாதத்தில் பூத்துக்குலுங்கிய Kirschen எனும் பழமரம், ஜூன் மாத இறுதிப்பகுதியில் காய்த்துக்குலுங்கி நிற்பதை விளக்கும் படம்

15369165_1343967008971433_51186842008300

படம்.52. 
ஏறத்தாள நாவல் பழத்தின் சாயலையும், சுவையையும் கொண்ட இந்த Kirschen எனும் பழம் நன்றாகப்பழுத்துக் கறுப்பு நிறமாக மாறுவதற்கு முன் அதன் அருகிலிருந்தான பார்வை.

15369149_1343965185638282_63713158104001

படம்.53.
இவ்வாறாக கோடை காலம் களைகட்டிய படி நகர்ந்தபடி செல்லும் போது ஒவ்வொரு வருடமும் ஒரு அனர்த்தம் நடைபெறுவதுண்டு. ஆம்… ஆலங்கட்டி மழை என நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்கிறோம். ஏறத்தாள சிறுவர்கள் விளையாடும் மாபிளின் அளவிலிருந்து ஆரம்பித்து ஒரு தட்டுப்பந்தின் (Tennis ball) அளவு வரைக்குமான ஒரு உருவத்தில் பனித்துகள்களாக அல்லாமல் பனிக்கட்டியாக பனிக்கட்டிப் பொழிவு ஒரு சில நிமிடங்களுக்கு ஏற்படுவதுண்டு. ஏறத்தாள 30பாகை வெப்பநிலையும் நல்ல வெய்யிலும் இருந்தாலும், இந்த நிலை ஏற்படுவதற்கு முன் திடீரென வானமானது படத்தில் இருப்பது போல மிகவும் கரிய நிறத்தில் மாற ஆரம்பிக்கும்

15289079_1343957235639077_14771741001119

படம்.54.
படத்தில் இருப்பது போல ஒருசில நிமிடங்கள் பனிக்கட்டிகளைப் பொழிந்து விட்டு நின்று விடுவதோடு, கரு மேகமும் கலைந்து விடும்.

15252678_1343960678972066_70060305708110

படம்.55.
படம் 54இல் பார்க்கும் போது இந்த ஆலங்கட்டிகளின் தாக்கம் தெரியவில்லை. ஆனால் இதன் தாக்கத்தை அறியவே இந்தப்படம். இங்கே பிரதான வீதிக்கும் பாதசாரிகளின் நடைபாதைக்கும் இடையில் அழகுக்காகப் போடப்பட்டிருக்கும் கற்கள் இந்த ஆலங்கட்டிகளால் மோதியடித்துச் சிதறச் செய்யப்பட்டிருக்கும் இக்கோலத்தை வைத்து இந்த ஆலங்கட்டிகள் பொழியும் போது அவற்றின் வீரியம் எவ்வாறிருக்கும் என்பதைப் புரியலாம். இவற்றின் வீரியத்தால் வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் மகிழூந்து (car) போன்ற வாகனங்களின் மேல்த்தகடுகளில் பல அமிழ்ந்த குழிகளை ஏற்படுத்தி விடும். பின்பு வாகனங்கள் மீள் திருத்தம் செய்யப்பட்டு சரிசெய்யப்படும். இதற்காகவென்றே வாகன உரிமையாளர்கள் விசேட காப்புறுதி செய்து வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

15259736_1343976712303796_71555614025594

படம்.56. 
இப்படத்தில் இருப்பது ஆலங்கட்டி மழையினால் சிதைக்கப்பட்ட உருளைக்கிழங்குத் தாவரங்கள். அலுமீனியத்திலான வாகனங்களின் மேல்த்தகடுகளையே துவம்சம் செய்யும் இந்த ஆலங்கட்டிகள், இவ்வாறான சிறு தாவரங்களை எப்படித் தாக்கியிருக்கின்றன எனப் பாருங்கள்.

15325362_1343965632304904_57691697691082

படம்.57. 
இதே போல ஆலங்கட்டி மழையினால் சோளம் தாவரங்கள் சிதைக்கப்பட்ட விதத்தை விளக்கும் படம்.

15252712_1343961992305268_36702306295134

படம்.58. 
ஆலங்கட்டி மழையின் அடிக்கு ஆளானாலும் ஒரு சில நாட்களில் மீண்டும் தம்மைச் சுதாகரித்துக் கொண்டு மீள் வளர்ச்சி கொண்ட சோளம் தாவரங்கள்.

15259458_1343966032304864_14851593789713

டம்.59.
அதேபோல ஆலங்கட்டி மழையின் அடிக்கு ஆளானாலும் ஒரு சில நாட்களில் மீண்டும் தம்மைச் சுதாகரித்துக் கொண்டு மீள் வளர்ச்சி கொண்ட உருளைக்கிழங்குத் தாவரங்கள்.

15369991_1343964488971685_69373787017715

படம்.60.
அதேபோல ஆலங்கட்டி மழையின் அடிக்கு ஆளானாலும் ஒரு சில நாட்களில் மீண்டும் தம்மைச் சுதாகரித்துக் கொண்டு மீள் வளர்ச்சி கொண்ட தானியப்பயிர்.

15259611_1343969082304559_76150092762374

படம்.61.
படத்தில் உள்ளது போல பார்க்கும் இடமெல்லாம் பச்சைப்பசேல், நீலவானம், பல்வர்ணப்பூக்கள் எனக்கண்கவர் காலமாக ஜூலை மாத நடுப்பகுதி வரை நகரும் நிலைப்பாடு இருக்கும்.

15288651_1343971778970956_71162530539190

படம்.62.
ஜூலை மாத இறுதிப்பகுதியை அண்மித்த காலத்தில் பயிர்கள் அறுவடைக்குத் தயாராகும் நிலைக்கு வருவதைக் காட்டும் படம் அந்த வகையில் தானியப் பயிர் அறுவடைக்குத் தயாராகும் நிலையில்.

15272222_1343976725637128_68948375102030

படம்.63.
ஜூலை மாத இறுதிப்பகுதியை அண்மித்த காலத்தில் நாம் முதலில் படம் 38 இல் பார்த்த (Rapsöl) தாவரம் அறுவடைக்குத் தயாரான நிலையில்..

15271941_1343975605637240_35545741190579

படம்.64.
இதே போல ஜூலை மாத இறுதிப்பகுதியை அண்மித்த காலத்தில் நாம் முதலில் படம் 49 இல் பார்த்த சோளம் தாவரங்கள் பொத்தி போட்டு இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்குத் தயாரான நிலையில்..

15325146_1343962875638513_81528748923575

படம்.65.
ஜூலை, ஓகஸ்ட் மாதங்கள் அறுவடையில் கழிந்தாலும், சூழலி நல்ல வெப்பநிலையும் பச்சைப்பசேலும் பூக்களின் கண்கவர் காட்சியும் தாராளமாகவே இருக்கும் நிலையை விளக்கும் படம்.

15370042_1343967152304752_32932506717690

படம்.66.
செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் வெப்பநிலை மெல்ல மெல்லக் குறைய ஆரம்பிக்கும். அதேவேளை பசுமை நிறைந்த மரங்களில் சிலவற்றின் இலைகள் மெல்ல மெல்ல மஞ்சளாக ஆரம்பிக்கும்.

15271886_1343967955638005_97412611311305

படம்.67.
ஏறத்தாள ஒக்டோபர் மாத இறுதி வாரத்தை அண்மித்த காலப்பகுதியில் மரங்களின் இலைகள் முற்றாக மஞ்சளாகி விடும்.

15369295_1343967222304745_39098380638245

படம்.68.
மஞ்சளாக விழுந்த இலைகள் நிலமெங்கும் பரவி படத்தில் இருப்பது போலக் காட்சியளிக்கும்.

15288465_1343958425638958_83571216957742

படம்.69.
மஞ்சளாக விழுந்த இலைகள் மெல்ல மெல்ல நிறம் மாறி படத்தில் இருப்பது போலக் காட்சியளிக்கும். தேசமெங்கும் இவ்வாறு இலைகள் பரவிக்கிடக்கும் காட்சியும் சுவிஸ் நாட்டின் அழகை ஒருபடி அதிகரிக்கச் செய்கிறதென்றால் அது மிகையாகாது.

15369166_1343977068970427_24689561864936

படம்.70. 
ஒக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் வரும் ஞாயிறு தினத்தன்று படத்தில் உள்ளது போல அதிகாலை 3 மணிக்கு ஒருமணி நேரம் குறைக்கப்பட்டு அதிகாலை 2 மணியாக உத்தியோகபூர்வமாக மாற்றப்படும். இதை (Winter Zeit) என அழைப்பர். தமிழில் இதைக் குளிர்காலம் அல்லது பனிக்காலம் என அழைக்கலாம். இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருப்பதுடன், சில நாடுகளில் பனிமழையும் பெய்யும்.

15272111_1343957852305682_54659730529602

படம்.71.
ஒக்டோபர் மாதம் ஓடி மறைந்து நொவெம்பர் மாதமும் வந்நது. இந்த நொவெம்பர் மாதத்தில்குளிரும் அதிகரித்த பனிப்புகாரும் காணக்கூடிய மாதம் என்பதை விளக்கும் படம். பனிப்புகாரை Nebel என அழைப்பர்.

15325193_1343959935638807_22759335294301

படம்.72.
இந்தப்பனிப்புகாரானது பல சமயங்களில் மிகத் தடிப்பமாக இருப்பதோடு முன்னே உள்ளது என்ன என்பதைச் சரியாக அடையாளம் காண முடியாத அளவுக்கு நிலைமை இருக்குமென்பதை விளக்கும் படம். பனிப்புகார் இல்லாத சமயத்தில் இதே காட்சியின் தெளிவை அடுத்த படத்தில் காணலாம்.

15369240_1343957902305677_52814023125867

படம்.73.
பனிப்புகார் இல்லாத தருணத்தில் படம் 72 இன் காட்சி.

15271816_1343959932305474_19399705057456

படம்.74.
இவ்வாறான தடிப்பமான பனிப்புகார் உள்ள நாட்களில் வேகவீதி, பிரதான வீதிகளில் ஒன்றன் பின் ஒன்றாகப் பல வாகனங்கள் தொடர் மோதலுக்குள்ளாகும் விபத்துக்கள் கணிசமான அளவு சுவிசில் இடம்பெறுவதுண்டு.

15369917_1344049582296509_14563052330375

படம்.75.
நொவெம்பர் மாத நடுப்பகுதியில் பெரும்பாலான மரங்கள் இலைகள் முற்றாக உதிர்ந்து பட்டமரங்கள் போலாகி விடும்

15326092_1343961398971994_77705547333883

படம்.76.
அனேகமாக நொவெம்பர் மாத இறுதிப்பகுதி அல்லது டிசம்பர் மாத ஆரம்ப அல்லது நடுப்பகுதியில் பனிவீழ்ச்சி ஆரம்பிக்கும். அத்தோடு சூழல் கடும் குளிராக இருக்கும். சூரியனைக் காண்பது அரிதானதாக இருக்கும்

15259281_1343957318972402_11096214366475

படம்.77.
சில சமயங்களில் விட்டு விட்டும் சில சமயங்களில் தொடர்ச்சியாகவும் பொழியும் பனிவீழ்ச்சியால் மரங்கள் வீடுகள் வீதிகள் எங்கும் வெள்ளையாகப் பனி படிந்து விடும். இம்மாதத்தில் சூழல் மிகக் குளிராக இருப்பதால் பொழிந்த பனிப்படிவு விரைவில் கரையாமல் அப்படியே இருப்பதோடு மெல்ல மெல்ல இறுகி பனிக்கட்டியாக மாற ஆரம்பிக்கும்.

15370136_1343958592305608_24927062807765

 

படம்.78.
இந்நாட்டு மக்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பனியில் விளையாடுவதில் அலாதி பிரியமுடையவர்கள். அந்த வகையில் தங்களின் வீட்டு நுழை வாசலில் உள்ள பனிபடிவைக்கொண்டு ஒரு மனித உருவம் போல செய்து அதை Schneemann எனவும் அழைத்து மகிழ்வர். இதைப் பனிக்கட்டிமனிதன் எனத் தமிழில் அழைக்கலாம். தொடர்ச்சியான குளிரால் இந்தப்பனிக்கட்டி மனிதன் சில மாதங்கள் வரை கரையாமல் அப்படியே இருக்கும்.

15259787_1343959012305566_21201309542686

படம்.79.
இப்படத்தில் இருக்கும் காட்சி ஒரு வீட்டின் முன்புறத்தை அழகு படுத்துவதற்காகச் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு சிறிய நீர் விசிறியுடன் அமைந்த சிறு தடாகத்தின் கோடைகாலப் பதிவு. இதே தடாகம் வின்ரர் காலத்தில் எவ்வாறு உள்ளது என்பதை அடுத்த படத்தில் பாருங்கள்

15272202_1343962052305262_11825503210166

படம்.80.
ஆம்… டிசம்பர் மாதத்துக் கடும் குளிரால் விசிறப்பட்ட நீரானது விசிறப்பட்ட நிலையிலேயே பனிக்கட்டியாகி விட்டதைக் காணலாம்.

15304607_1343959968972137_74540882854405

படம்.81.
இப்படத்தில் தெரிவது கோடை காலத்தில் பதிவாக்கப்பட்ட ஒரு அழகிய குளத்தின் காட்சி. இக்குளத்தின் நடுவே ஒரு பெரிய மரம் உள்ளது. அந்த மரத்தின் ஓரளவு அருகிலான தோற்றத்தை அடுத்த படத்தில் காண்க.

15289227_1343960682305399_87858239535735

படம்.82.
இந்த மரத்தினதும் குளத்தினதும் கோடை காலத்து அழகிய தோற்றம் இந்த டிசம்பர் மாதத்தில் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதை அடுத்த படத்தில் பாருங்கள்.

15288568_1343958115638989_11734876078299

படம்.83.
ஏறத்தாள 7மீற்றர் ஆழத்தில் நீர் உள்ள இந்தச் சிறிய குளம் முற்றுமுழுதாக பனிக்கட்டியாக மாறி விட்ட நிலையில்

15288628_1343960632305404_64797433287962

படம்.84.
பெரிய பரப்பில் உள்ள இந்தக் குளத்து நீர் படிக்கட்டியாகி விட்ட நிலையில் பாறாங்கல்லுக்குச் சமமான திடத்தோடு உள்ளதால் அதன் மேல் மக்கள் நடந்து திரிவதோடு பனிச்சறுக்கு விளையாட்டிலும் ஈடுபட்டு மகிழ்வதையும் காணலாம்.

15304449_1343958395638961_13186132894557

படம்.85.
இவ்வாறாக டிசம்பர் மாதத்தில் அனேகமாக தொடர் பனிவீழ்ச்சி இருக்கும். அந்த நிலையோடு ஜனவரி மாதமும் வந்து விடும். இந்த விவரணம் தொடர்பாக நான் ஆரம்பித்த அதே ஜனவரி மாதத்துக்கு வந்து விட்டேன்.

15325375_1343958402305627_30519593765039

குறிப்பு: மேலே இணைக்கப்பட்ட படங்கள் மற்றும் படங்களுக்கான விளக்கங்கள் என்பன எனது நண்பன் ஒருவரது Facebookல்  இருந்து எடுத்து அவரது அனுமதியுடன் பதியப்படுகின்றது.

Edited by Surveyor

படங்கள். அத்தனையும் அருமை. மிகவும் அழகாக இருக்கிறது.படங்களை எடுத்து தொகுத்த, தங்கள் நண்பனுக்கும் இங்கு அதை இணைத்த உங்களுக்கும்  நன்றி surveyor.

உங்கள் அறிமுக விவரணத்தில்  ஒரு சிறு திருத்தம். மார்ச் மாத இறுதியில் இளவேனிற் காலம் ஆரம்பித்து ஜூன் 21 ம் திகதியே கோடைகாலம் ஆரம்பிக்கிறது. (சுவிற்சர்லாந்தில் மட்டுமல்ல பூமியின் வட அரைக்கோளத்தில் உள்ள எல்லா நாடுகளிலும்) 

  • தொடங்கியவர்
49 minutes ago, tulpen said:

 

உங்கள் அறிமுக விவரணத்தில்  ஒரு சிறு திருத்தம். மார்ச் மாத இறுதியில் இளவேனிற் காலம் ஆரம்பித்து ஜூன் 21 ம் திகதியே கோடைகாலம் ஆரம்பிக்கிறது. (சுவிற்சர்லாந்தில் மட்டுமல்ல பூமியின் வட அரைக்கோளத்தில் உள்ள எல்லா நாடுகளிலும்) 

தகவலுக்கு மிகவும் நன்றி. 

மேலே கூறப்பட்ட விபரணங்கள் என்னால் எழுதப்படாத காரணத்தினால் அதில் மாற்றம் செய்ய விரும்பவில்லை

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்
On 5.12.2016 at 7:45 AM, Surveyor said:

மேலே இணைக்கப்பட்ட படங்கள் மற்றும் படங்களுக்கான விளக்கங்கள் என்பன எனது நண்பன் ஒருவரது Facebookல்  இருந்து எடுத்து அவரது அனுமதியுடன் பதியப்படுகின்றது.

இயற்கையின்... வினோத மாற்றங்களை பொறுமையாக.... 
அழகிய படங்களாக எடுத்த,  சேர்வயரின் நண்பனுக்கு பாராட்டுக்கள்.:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.