Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கக்கூஸ்

கதையல்ல கலாய் ...

ஜீவநதிக்காக..சாத்திரி .

 

வாஷிங்டன் சிட்டிசியில்  வானுயர்ந்து  நிற்கும்  உலக வங்கி தலமையக  கட்டிடத்தின்  அறுபதியிரண்டாவது மாடியில் அமைந்திருந்த அலுவலகத்தில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம்   தனது இரண்டு கைகளையும் மடித்து தலையைப் பிடித்தபடி படு டென்சனாக அமர்ந்திருக்கிறார்.கட்டிடத்தின் கீழே சி.என்.என்..   பி.பி.சி .. சி.என்.பி.சி.. ஐ.பி .சி .. என்று உலகின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் நிருபர்கள் நித்தியானந்தாவின் வருகைக்காக காத்திருக்கும் பக்தர்களைப் போலவே உலக வங்கியின் தலைவர் எப்போ வருவார் என ஆவலோடு வாசலைப் பார்த்தபடியே பர பரப்பாக காத்திருந்தனர்.கட்டிடத்தின் உள்ளே நுழைய முயன்ற சில நிருபர்களை காவலர்கள் இழுத்துக்கொண்டு  வந்து வெளியே தள்ளிக்கொண்டிருந்தார்கள்.

கையில் ஒரு பைலோடு செயலாளர் தலைவர் ஜிம் யோங் கிம்   அறைக்குள் நுழைத்ததும்.கதிரையை காலால் தள்ளியபடி எழுந்த தலைவர் கோபமாக  "யோவ் என்னதான்யா நடக்குது .வழிக்கு வருவாங்களா இல்லையா"..

 

"இல்லை சார் ..அவங்கள் வழிக்கு வர மாட்டாங்களாம்.மன்னிக்கோணும் " என்றார்  பவ்வியமாக .

15250734_1529532440395776_6524711095951959641_o.jpg

 

இதை சொல்லவா உனக்கு கோட்டு சூட்டு வாங்கி தந்து.டிக்கெட்டும் போட்டு ஸ்ரீலங்காவுக்கு அனுப்பி வைச்சனான்.இது ஒண்டும் கந்து வட்டிக்கு காசு குடுக்கிற ஏரியா ரவுடியோ.. பணத்தை வாங்கிட்டு ஏமாத்திர பைனான்ஸ் கம்பனியோ அல்ல.. உலக த்தில உள்ள வங்கிகளுக்கே கடன் குடுக்கிற உலக வங்கி .188 நாடுளிலை கிளையும் ..88 நாடுகளில்லை வேரும் வைச்சிருக்கிறோம் தெரியுமா?".. என்று கத்தியபடி . மௌனமாக தலை குனித்து நின்ற செயலாளரின் "டை". யில் பிடித்து  யன்னலோரம் இழுத்துப் போனவர்."பார்   நல்லாப் பார் ..ஒட்டு மொத்த மீடியாவும் இங்கைதான் நிக்கிறாங்கள்."உலக வங்கியால் போடப்பட்ட திட்டம் படு தோல்வி"  என்று கொட்டை எழுத்திலையும், பிரேக்கின் நியூசிலையும்   போட்டு கிழி ,கிழி ,கிழி எண்டு கலா மாஸ்டரை விட மோசமா கிழிக்கப் போறாங்கள்.வெளியிலை தலை காட்ட முடியாது.பதவியை விட்டு விலகி பன்னி மேக்கப் போகவேண்டியதுதான்.

 

"சார் நீங்களே ஒரு தடவை நேரிலை போய் பார்த்தால் தான் உங்களுக்கு நிலைமை புரியும்.வரும்போதே என்னோடை பதவி விலகல் கடிதத்தை கொண்டு வந்திட்டேன்.நான் தோத்துப் போயிட்டேன் சார்.கடைசியா எனக்கு கொஞ்சம் கடன் கொடுத்தால் நானே சொந்தமா நாலு பன்னியை வாங்கி பிளைச்சுக்குவேன்"..என்றபடி கடிதத்தை நீட்டவே..அதை வாங்கி கிழித்து குப்பைக் கூடையில் போட்டவர் .."நானே ஸ்ரீலங்கா போறேன்.நான் வாறேன் எண்டு போன் பண்ணி சொல்லு"..  வேகமாக அங்கிருந்து வெளியேறினார் ஜிம் யோங் கிம் ......

000000000000000000000000000000000000000000

 

அன்றைய  தினக்கறள் பத்திரிகையோடு கழிப்பறைக்குள் புகுந்து கதவை சாத்திவிட்டு குந்தியிருந்தபடி பேப்பரை விரித்த அருணனுக்கு பேரதிர்ச்சி.."உலக வங்கி திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப் பட்ட நவீன கழிப்பறைத் திட்டம் கை விடப் படுமா?..உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் ஸ்ரீலங்கா விரைகிறார் ..வடமாகாண சபை முதலமைச்சர் முக்கினேஸ்வரன் அவர்கள் கழிப்பறை சம்பந்தமான முக்கிய பிரச்சனைக்கு தீர்வுகாண  அனைத்து கட்சிகளையும் அழைத்துள்ளார்"..செய்தியை படித்த அருணனுக்கு லேசாய் தலை சுற்றியது. அருகிலிருந்த தண்ணி வாளியைப்  பிடித்தபடியே அவசராம இருந்து முடித்து கழுவியவன். "ச்சே  போச்சு..என்னுடைய கனவு; கற்பனை;ஆசை எல்லாமே போச்சு"..என்றபடி அங்கிருந்து வெளியேறி வேகமாக வந்து சத்தி டி.வி யைப் போட்டான்.  "நவீன கழிப்பறைத் திட்டத்தில் இழுபறி"  என்று பிரேக்கின் நியூஸ் போய்க்கொண்டிருந்தது..

 

அருணனின் பள்ளித்தோழன் பாலன் இலங்கையில் பிரச்சனைகள் தொடங்கியதுமே ஆஸ்திரேலியா போனவன்தான். இப்போ பிரச்சனைகள் முடிந்ததும் ஊருக்கு வந்து சண்டையிலை இடிந்து போயிருந்த வீட்டை முழுதுமாக இடித்து மாடி வீடாக கட்டி முடித்து குடி பூருதலுக்காக அருணனையும் அழைத்திருந்தான்.அதிசயத்தோடு ஒவ்வொரு அறையாக சுற்றிப்பார்த்துக்கொண்டு வந்தவனுக்கு "இது தான் கக்கூசு".. என்று பாலன் கதவை திறந்து காட்டியதுமே ஆச்சரியம்.வெள்ளை வெளேரென்ற பளிங்கு கற்கள்  பெரிய காண்டிகள் பதித்து வண்ண விளக்குகளோடு இருந்த கழிப்பறையில் கொமேட்டுக்கு உறை வேறு போட்டிருந்தது.தொட்டுப் பார்ப்பதற்காக கையை பக்கத்தில் கொண்டு போனதுமே சர் ...என்று தண்ணீர் பாய திடுக்கிட்டு நின்றவனை ... "பாத்தது போதும் வாடா".. என்று கையில் பிடித்து இழுத்து வெளியே கொண்டு போய் விட்டான் பாலன் .

 

ஒரு தடவையாவது அதிலை ஒண்ணுக்கு அடிக்க வேணும் என்று அருணனின் மனது தவியாய் தவித்தாலும் அடக்கிக்கொண்டு அவனுக்குப் பின்னால் போய் விட்டான்.விருந்து சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது வயிற்றை தடவியபடி "டேய்  லேசா கலக்குது ஒருக்கா".. என்று கெஞ்சியவனிடம். "எல்லாமே புதிசாய் இருக்கு உனக்கு இந்த  வெஸ்டர்ன்  கக்கூஸ் எல்லாம் பழக்கமிருக்காது நாறடிச்சிடுவாய்  பின்னலை பெரிய பனங்காணி இருக்கு".. என்று அனுப்பி விட்டான்.அருணனுக்கு பெருத்த அவமானமாகிப் போய் விட்டது. ஒரு நாள் ..என்றைக்கவது ஒரு நாள் இதுக்காகவே கொழும்புக்கு போய் ஹோட்டேல் போட்டு ஆசையை தீர்த்துவிடுவது என்று சபதமெடுத்திருந்தவனுக்கு." உலக வங்கியின் நிதியுதவியோடு  முகமாலையில் நவீன கழிப்பறை திட்டம்".. என்கிற செய்தியைப் படித்த போது முப்பதாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்த முழு சுதந்திரத்தை அனுபவிப்பது போன்றதொரு உணர்வு. "அடே நண்பா உன்னை வெல்வேன்"..  என்று சத்தமாக கத்தியபடியே பத்திரிகையை கிழித்தெறிந்து ஆனந்ததில் துள்ளிக் குதித்தவன்

இரண்டு தடவை முகமாலைக்குப் போய் கழிப்பறை கட்டுவதற்காக ஒதுக்கப் பட்ட இடத்தைக் கூட சுற்றிப் பார்த்து கைத் தொலைபேசியில் படமெடுத்து  பேஸ் புக்கிலும் போட்டு விட்டிருந்தான் .அத்திவாரம் வெட்டப்பட்டு அபிவிருத்தி அமைச்சரால் அடிக்கல்லும் நாட்டப் பட்ட நிலையில் .. "கழிப்பறையை முகமாலையில்  கட்டக் கூடாது இயக்கச்சியில் தான் கட்ட வேண்டும்"..என்று தமிழ் தோசைக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் பிரச்சனையை கிளப்பியுள்ளதால் நவீன கழிப்பறைத் திட்டத்தில் இழுபறி.என்பதுதான் இப்போதுள்ள பிறேக்கிங் நியூஸ் .

0000000000000000000000000000000000000000000000000000

 

யாழ் நாவலர் கலாச்சார மண்டபம்  அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாலர்களாலும் நிரம்பியிருந்தது.மத்தியில் மேசைமீது நவீன கழிப்பறைக் கட்டிடத்தின் வரைபடமும் அதன் மினியேச்சர் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.கழுத்தில் மாலையோடு கையில் இருந்த செவ்விளநீரை ஸ்ட்ரா போட்டு உறுஞ்சியபடி நின்றிருந்த தலைவர் ஜிம் யோங் கிம் மிற்கு  .உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி விளக்கத்  தொடங்குகிறார். "சார் இதுதான் நாங்கள் கட்டப் போகும் கழிப்பறைகள்  .இதற்கான நீர் வழங்கலை இரணைமடுக் குளத்திலிருந்து கொண்டு வரப் போகிறோம் .இதன் கழிவுகளை குழாய் வழியாக பரந்தன் வரை கொண்டு சென்று அங்குள்ள இரசாயனத் தொழிற்சாலையில் சேமித்து எரி வாயுவாக மாற்றும் திட்டம் உள்ளது அதனை யேர்மனிய  பயர் நிறுவனம் பொறுப்பெடுத்துள்ளது.எரிவாயு எடுத்து முடிந்த மீதிக் கழிவுகள் கிளிநொச்சிவரை கொண்டு சென்று அங்கு வயல்களுக்கு பசளையாக பயன்படுத்தப்படும்" ..என்று சொல்லி விட்டு நிமிர்ந்தார் .

 

ஜிம் யோங் கிம் குடித்து முடித்த இளனிக் கோம்பையை  ஓடோடிப் போய் வாங்கிய கிரிதரன். "..ஐயா திட்டமெல்லாம் நல்லது ஆனால் முகமாலையில் வேண்டாம்.யாழ்ப்பாணத்தாரின்  கழிவுகளை வன்னியிலை கொட்ட அனுமதிக்க முடியாது.அதே நேரம் அவங்கள் கழுவுறதுக்கு இரணைமடுவிலையிருந்து தண்ணியும் குடுக்க முடியாது இயக்கச்சியிலை தான் கட்ட வேணும் என்று முடிக்க முன்னரே ." இது கழுவிற மேட்டர் இல்லை.துடைக்கிற மேட்டர்  இது கூடத் தெரியாமல் எம்.பி யாம்.தமிழனுக்கு குடிக்கிற தண்ணியால தான் பிரச்னை என்றால் கழுவுற தண்ணியாலும் பிரச்சனை "..என்று தாடியை தடவியபடி சிரித்தார்  தயானந்தா.

அதுவரை மினியேச்சரை உத்துபார்த்துக்கொண்டிருந்த சிவாஜிசிங்கம்   உரத்த  குரலில்.. "இது தமிழரின் கட்டிடக்கலை இல்லை,ஆரியக் கட்டிடக்கலை.கழிப்பறைக் கட்டிடம் என்கிற பெயரில்  இது திட்டமிட்ட கலாசார அழிப்பு இதற்கு அனுமதிக்க முடியாது .கக்கூஸ் என்பதே அடிமைச் சின்னம்.அதனால் தான்  1985 ம் ஆண்டே நாங்கள் சாவகச்சேரி போலிஸ் நிலையத்தை தாக்கும்போதே முதலாவதாக அங்கிருந்தத .கக்கூசை குண்டுவைத்து தகர்த்தோம்.எங்கேயும் எபோதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதே எமது கொள்கை.கடந்த தேர்தலில் மகிந்த்தாவையே எதிர்த்துப் போட்டியிட்டவன் .இந்த அமெரிக்க தேர்தலில் கூட ஒபாமா பெண்டாட்டி கிலாரி வெற்றிபெற நல்லூரில் ஆயிரம் தேங்காயை அசராமல் அடித்துடைத்தவன்".. என்றார்.

 

சிவாஜி சிங்கம் சொன்னதை அப்படியே ஜிம் யோங் கிம்  மிற்கு உதவியாளர் மொழிபெயர்த்து கூறி முடித்ததும் அவருக்கு வியர்த்து வழியத் தொடங்க கோட்டை கழற்றி கதிரையில் போட்டுவிட்டு"உண்மையிலேயே  இந்தாள் லூசா..இல்லை லூசு மாதிரி நடிக்கிறாரா. கக்கூஸ் கட்டிடத்திலை என்ன கலை வேண்டிக் கிடக்கு இனி என்னவெல்லாம் நடக்கப் போகுதோ ".என்று நினைத்தபடி முகத்தில் வழிந்த வியர்வையை  துடைத்துக் கொண்டார்.

அதற்கிடையில் கிம்  மிற்கு முன்னால் நின்றவர்கள் இரண்டாகப் பிரிந்து நின்று  "முகமாலையில் தான் கட்டவேணும் ..இலையில்லை இயக்கச்சியில் கட்ட வேணும்" என்று வாய் தர்க்கத்தில் இறங்கத் தொடங்கவே.அப்போதுதான் சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்த கனகேந்திரன் "வருகிற வழியிலை சைக்கிளுக்கு காத்து போயிட்டுது அதான் பிந்திட்டுது"..என்றவர் சைக்கிளை நிறுத்திவிட்டு.  "வெள்ளையனே வெளியேறு ..வெள்ளையனே வெளியேறு" ..என்று கத்திக்கொண்டிருக்க.அங்கு வந்த சமந்திரன் ."டேய்  வெள்ளைக்காரன் நாடைவிட்டுப் போய் 67 வருசமாச்சு"..

 

 நான் சொன்னது இந்த வெள்ளைக்காரனை ..

 

இவர் வெள்ளைக்காரன் இல்லை.ஜப்பான்காரன் ..

 

பார்க்க வெள்ளையாய் தானே இருக்கிறார் .."வெள்ளையனே வெளியேறு ..வெள்ளையனே வெளியேறு"..தொடர்ந்து கத்தினார் ..

 

"சைக்கிள் காத்துப் போனாலும் இவங்கள் திருந்த மாடான்கள்".. என்றபடியே சமந்திரன் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.இத்தனை களோபரங்களுக்கு மத்தியிலும் ஒருவர் மட்டும் ஒரு கதிரையில் சாய்ந்து அமைதியாக கொர் ...கொர் ..விட்டுக்கொண்டிருக்க அத்தனையையும் பார்த்த ஜிம் யோங் கிம்  கடுப்பாகி உதவியாளரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறவே  "சார் உங்கடை கோட்டை மறந்துவிட்டு போறிங்கள் "..என்று சத்தம் கேட்டது.திரும்பி பார்க்காமலேயே  "அதை நீங்களே போட்டு கிழியுங்கடா".. என்று விட்டு கிழம்பிவிட்டார் .

00000000000000000000000000000000000

 

மீண்டும் வாஷிங்டன் சிட்டியில்  வானுயர்ந்து  நிற்கும்  உலக வங்கி தலமையக  கட்டிடத்தின்  அறுபதியிரண்டாவது மாடியில் அமைந்திருந்த அலுவலகத்தில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம்   தனது இரண்டு கைகளையும் மடித்து தலையைப் பிடித்தபடி படு டென்சனாக அமர்ந்திருக்கிறார்.கட்டிடத்தின் கீழே சி.என்.என்..   பி.பி.சி .. சி.என்.பி.சி.. ஐ.பி .சி .. என்று உலகின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் நிருபர்கள்.கையில் எந்த பைலும் இல்லாமல் செயலாளர் தலைவர் ஜிம் யோங் கிம்   அறைக்குள் நுழைத்ததும்."சார் ஸ்ரீலங்கா போனிங்களே என்னாச்சு?வெளியே மீடியா எல்லாம் காவல் நிக்கிறார்கள் என்ன சொல்ல"...

 

சொல்லு ..போய் சொல்லு ..திட்டத்தை அமேசன் காட்டுக்கு மாத்தியாச்சு எண்டு போய் சொல்லு ...

 

அமேசன் காட்டுக்கா ?...அங்கைதான் மனிசரே இல்லையே ....

 

பரவாயில்லை அனகொண்டா இருந்திட்டுப் போகட்டும் ...

செயலாளர் அங்கிருந்து வெளியேறினார் ...

.......................................................................................................................................................

குமணன் வீட்டிலிருந்த பழைய கதிரை ஒன்றை எடுத்து அதன் நடுவில் ஓட்டை போட்டுக்கொண்டிருந்தான் ...

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

"கக்கூஸ்" கதையை... ஆரம்பத்தில் சில பந்திகள்  வாசித்தேன்.
மிக நன்றாக  இருந்தது.  சாத்திரி. :grin:

நிச்சயமாக நேரம் கிடைக்கும் போது , மறக்காமல் வாசிப்பேன்.:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.