Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டி கோரிக்கையை கைவிட்ட தமிழ்த் தலைவர்கள்! பகிரங்க சுதந்திரக் கட்சி அறிவிப்பு

Featured Replies

6681_1481212058_PhototasticCollage-2016-12-08-16-41-50.jpg

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சமஷ்டி கோரிக்கையை கைவிட்டு, ஒற்றையாட்சிக்குள் தீர்காண்பதற்கு தமிழ்த் தலைவர்கள் உடன்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

 
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை எவ்வாறு பகிர்வது என்பது தொடர்பில் சுதந்திரக் கட்சி சிந்திப்பதாகக் குறிப்பிட்டார்.தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பங்களிப்பு அவசியம் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
தயாசிறி ஜயசேகர “2000ஆம் ஆண்டு அரசியல் யாப்பிற்கு மஹிந்த    ராஜபக்ஸ உள்ளிட்ட அனைவரும் கையுயர்த்தினர். அந்த யாப்பில் ஒற்றையாட்சி முறைமை தொடர்பிலா முன்மொழியப்பட்டுள்ளது என இன்று விமர்சனங்களை முன்வைப்பவர்களிடம் கேட்க விரும்புகின்றேன்.

சந்திரிகா அரசாங்கம் கொண்டுவந்த அந்த யாப்பிற்கு அனைவரும் அங்கீகாரம் வழங்கினார்கள், ஐக்கிய தேசியக் கட்சியே அதற்கு தீமூட்டியது. ஆகவே அந்த யாப்பினை போல் அல்ல இது, ஒற்றையாட்சிக்குள் முடிந்தளவு அதிகாரத்தை பகிர்வது தொடர்பிலேயே நாம் சிந்திக்கின்றோம். இந்த செயற்பாட்டில் சுதந்திரக் கட்சி என்ற வகையில் எமது பங்களிப்பு அவசியம். அதிலிருந்து விலகிச் செல்ல முடியாது. அதிலிருந்து விலகி நாம் செயற்படுவதால் இந்த பிரச்சினையை மேலும் மேலும் வளர்த்துவிட்ட பங்காளியாக நாம் மாறுவோம். ஆகவே அதுவல்ல எமது நோக்கம்.
இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட பல முயற்சிகள் தோல்வியடைந்தன. யுத்தம் நிறைவடைந்துள்ள இந்த நிலையில் இந்த பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் தமிழ்த் தலைவர்களுடன் பேச வேண்டும். அவர்கள் தற்போது சமஷ்டி முறையில் இருந்து விலகி ஒற்றையாட்டிசிக்குள் இணைந்து செயற்பட அவர்கள் தயார். சிங்கள பௌத்தர்கள் என்ற வகையில் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும்.

http://battinaatham.com/description.php?art=6681

நீங்களா பார்தது ஊததுற கஞ்சிய குடிக்க தயாராகீட்டம் சாமி. உங்களுககு இப்ப சந்தோசம் தானே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.