Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகரித்து வரும் பெளத்த மதவாதம்

Featured Replies

அதிகரித்து வரும் பெளத்த மதவாதம்

 

இலங்கை அர­சி­ய­லா­னது ஒரு இரட்டைப் பிளவு  கொண்­ட­தா­கவே எப்­பொ­ழுதும் இருந்து வந்­துள்­ளது என்­பதை சுதந்­தி­ரத்­திற்­குப் பின்­னுள்ள வர­லாற்றுப் புள்­ளிகள்  எல்­லா­வற்­றிலும் காணக்­கூ­டிய ஒரு பொதுத்தன்­மை­யாகும். பௌத்த மத ஆதிக்கம்,  சிங்­களப் பேரி­ன­வாதம் என்ற இரு தண்­ட­வா­ளங்­களில் ஓடும் அர­சியல் தொடரூந்­தாக  அல்­லது இரட்டைப்  பிற­வி­க­ளாக இலங்கை  இருந்­து­ வந்­துள்­ளது  என்­ப­தனை  சுதந்­தி­ரத்­திற்குப்  பின்­னுள்ள அர­சியல்  போக்­குகள் மூலம் அறிந்து கொள்ள முடியும்

 

இலங்கை அர­சி­யலில் ஊடு­ருவிக் காணப்­படும் பௌத்த மத வாதமும் விகா­ரா­தி­ப­தி­களின் கடும் இன்று நேற்று உரு­வா­கிய ஒரு விட­ய­மல்ல. வர­லாற்றுக் காலம் முதல் இவை இரண்­டி­னது செல்­வாக்கிற்கும் உட்­பட்­ட­தா­கவே இலங்­கையின் அர­சியல் வர­லாறு நடந்து வந்­தி­ருக்­கி­றது என்­ப­தற்கு அண்­மைக்­கா­லத்தில் நடந்த பல்­வேறு சம்­ப­வங்­களே உதா­ர­ணங்­க­ளாக காட்­டப்­ப­டலாம்.

அதிலும் குறிப்­பாக விகா­ரா­தி­ப­தி­க­ளா­கவும் மகா­நா­யக்க தேரர்­க­ளா­கவும் இருந்து வந்­துள்ள குரு­பீ­டா­தி­ப­தி­களின் செல்­வாக்­குக்கும் ஆதிக்­கத்­துக்கும் உட்­பட்­ட­தா­கவே இலங்­கையின் வர­லாற்று கால ஆட்சி முறை­களும் நவீ­ன­ கால ஆட்­சி­மு­றை­களும் இருந்­து­ வந்­துள்­ளன என்­பதன் முற்­று­நிலைச் சம்­பவமே, அண்­மையில் மட்­டக்­க­ளப்பில் நடந்த விகா­ரா­தி­ப­தி­களின் அட்­டா­கா­சங்­களும் ஆர்ப்­பாட்­டங்­க­ளு­மாகும்.

மட்­டக்­க­ளப்பு நகரில் மங்­களராமய விஹா­ரா­தி­பதி மற்றும் பொது­ப­ல­சேனா ஆத­ர­வா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருந்த ஆர்ப்­பாட்­டத்­துக்கு நீதி­மன்றம் தடை உத்­த­ரவு விதித்­தமை அந்த நீதி­மன்றத் தடை உத்­த­ரவை உதா­சீனம் செய்து, புறக்­க­ணிக்கும் போக்கில் மட்­டக்­க­ளப்பு நகரில் ஆர்ப்­பாட்டம் நடத்த விகா­ரா­தி­பதி மங்­களராமய தேரர் முயன்­றது. அதனால் ஏற்­பட்ட பதற்ற நிலைகள் பற்­றி­யெல்லாம் பத்­தி­ரி­கை­களும் ஊட­கங்­களும் செய்­தி­களை வெளி­யிட்­டி­ருந்­த­மையை நாம் தெளி­வாக அறிந்­தி­ருக்­கிறோம்.

கடந்த 03.12.2016 ஆம் திகதி மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ராமய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டியே சுமணரத்ன, தேர­ருக்கு ஆத­ரவு தரும் வகையில் மட்­டக்­க­ளப்பு நக­ருக்குள் புகுந்த பொது­ப­ல­சேனா என்ற அமைப்­பினால் ஆர்ப்­பாட்டம் நடத்த முயன்­றமை, அதனால் உண்­டான களே­ப­ரங்கள் இந்த நிகழ்­வுக்­கு­ரிய மூல நிகழ்­வுகள் அனைத்தும் வாச­கர்கள் அறிந்த விட­யமே.

இலங்கை அர­சி­யலில், பௌத்த மத பீடா­தி­ப­தி­களும் விகா­ரா­தி­ப­தி­களும் பல்­வேறு காலங்­களில் செலுத்­தி­ வந்த செலுத்தி வரு­கின்ற செல்­வாக்கும் ஊடு­ரு­வல்­களும் இலங்கை அர­சி­யலின் போக்­கு­களை எவ்­வாறு மாற்­றி­ய­மைத்­துள்­ளன. சவால்­நி­லை­களை உரு­வாக்­கி­யுள்­ளன என்­பது பற்றி, வர­லாற்றுப் பாடங்­களில் நாங்கள் தெளி­வா­கவே கற்றுக் கொண்­டுள்ளோம்.

அர­சியல், பௌத்த மதச் செல்­வாக்கு என்­பது இலங்கை அர­சி­யலில் நாண­யத்தின் இரு­பக்­கங்­களைப் போல் பிரித்துப் பார்க்க முடி­யாத அள­வுக்கு இரட்டையு­றவு கொண்­ட­வை­யென்­பது நாம் தெரிந்து கொள்ள முடி­யாத ஒரு­வி­ட­ய­மல்ல.

தற்­பொ­ழுது வரை­யப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற அர­சியல் சாச­னத்தில் பௌத்த மதத்தின், முக்­கி­யத்­துவமும் முன்­னு­ரி­மையும் பாதிக்­கப்­ப­டாத வகையில், அமை­ய வேண்­டு­மென்ற விட­யத்தை சிங்­கள அர­சியல் தலை­வர்­களும் பௌத்­த­மத பீடா­தி­ப­தி­களும் வலி­யு­றுத்திக் கொண்­டி­ருப்­பதை நாளாந்தம் அவ­தா­னித்துக் கொள்ள முடி­கி­றது. இது சுதந்­தி­ரத்திற்­குப் பின்­னைய காலப்­ப­கு­தியில் இன்னும் வலி­மை­யு­டை­ய­தாக வளர்த்து எடுக்­கப்­ப­டு­கி­றது என்­ப­தற்கு உதா­ர­ணந்தான் சாச­னத்தில் பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்­டு­மென்ற வலி­யு­றுத்­தல்­க­ளாகும்.

இலங்­கையின் குடி­ய­ரசு யாப்பு ஒன்று வரை­யப்­பட்ட போதும் (1972) சோஷ­லிச யாப்­பொன்று கொண்­டு­வ­ரப்­பட்ட போதும் (1978) இவற்றின் பெறு­மதி தெளி­வா­கவே உணர்த்­தப்­பட்­டது. இதன் தொடர்பு நிலை­யா­கவே புதிய அர­சியல் சாச­னமும் கொண்­டி­ருக்க வேண்­டு­மென்­பதில் கண்ணும் கருத்தும் கொண்­ட­வர்­க­ளாக பௌத்­தர்கள் காணப்­ப­டு­கி­றார்கள் என்­பது யதார்த்தம்.

இலங்கை அர­சி­ய­லா­னது ஒரு இரட்டைப் பிளவு கொண்­ட­தா­கவே எப்­பொ­ழுதும் இருந்து வந்­துள்­ளது என்­பதை சுதந்­தி­ரத்­திற்­குப் பின்­னுள்ள வர­லாற்றுப் புள்­ளிகள் எல்­லா­வற்­றிலும் காணக்­கூ­டிய ஒரு பொதுத் தன்­மை­யாகும். பௌத்த மத ஆதிக்கம், சிங்­களப் பேரி­ன­வாதம் என்ற இரு தண்­ட­வா­ளங்­களில் ஓடும் அர­சியல் தொட­ருந்­தாக அல்­லது இரட்டைப் பிற­வி­க­ளாக இலங்கை இருந்­து­வந்­துள்­ளது என்­ப­தனை சுதந்­தி­ரத்­திற்குப் பின்­னுள்ள அர­சியல் போக்­குகள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.  

போர்த்­துக்­கீசர் இலங்­கையின் கரை­யோர மாவட்­டங்­களைக் கைப்­பற்றி இறு­தி­யாக 1815 ஆம் ஆண்டு மலை­யக கண்டி இராச்சி­யத்தை கைப்­பற்­றி­யது வரை­யுள்ள காலப்­ப­கு­தியின் ஆட்சிப் போக்­கு­களில் நிலப்பிர­புத்­துவ தலை­வர்­க­ளான மன்­னர்கள் பௌத்த பாரம்­ப­ரி­யத்தின் வாரி­சு­க­ளாக இருந்து கொள்ள முடிந்­த­மை­யி­னா­லேயே ஆட்சி அதி­கா­ரங்­களை அவர்­களால் சுவீ­க­ரிக்க முடிந்­தது. இவ்­வா­றான நிலை­க­ளை­யெல்லாம் உறு­திப்­ப­டுத்­தி­ய­வர்­க­ளாக பௌத்த பீடா­தி­ப­தி­களும் விகா­ரா­தி­ப­தி­களும் இருந்து வந்­துள்­ளனர். இன்னும் தெளி­வாக கூறு­வ­தானால் பௌத்த பீடா­தி­ப­தி­களின் அனு­ச­ர­ணை­யற்ற ஒருவர் ஆட்­சி­பீடம் ஏற முடி­யாத ஒரு நிலையே சுதந்­தி­ரத்­துக்கு அப்­பா­லுள்ள அர­சியல் முறை­களில் கண்­டி­ருக்­கிறோம்.

சுதந்­தி­ரத்­துக்குப் பின்­னுள்ள காலப்­ப­கு­தியில் இந்த நிலை­மை­களில் பெரி­ய­ளவு மாற்றம் நிகழ்ந்­த­தாகத் தெரி­ய­வில்லை. டி.எஸ்.சேனா­நா­யக்க தலை­மை­யி­லான சுதந்­திர நாட்டின் பாரா­ளு­மன்றம் அமைக்­கப்­பட்ட வேளையில் பிரித்­தா­னிய பிர­புக்கள் போல் தன்னைப் பாவனை செய்து கொண்ட டி.எஸ்.சேனா­நா­யக்­கவின் தலை­மை­யி­லான ஐ.தே.கட்சி அர­சாங்­கத்தில் பங்­கா­ளி­க­ளாக இருந்த ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன, எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க போன்றோர் பௌத்த மதப் பாரம்­ப­ரி­யங்­க­ளுக்கு வெளியே நின்­ற­வர்கள். தங்கள் எதிர்­கால அர­சியல் நலம் கருதி தம்மை ஒரு முழு­மை­யான பௌத்­தர்­க­ளாக மாற் றிக் கொள்ள வேண்­டிய தேவை ஏற்­பட்­டது.

 இதன் கார­ண­மா­கவே பின்னால் இலங்­கையின் பிர­த­ம­ராக பத­வி­யேற்றுக் கொண்ட எஸ்.டபிள்யு. ஆர்.டி.பண்­டார நாயக்க 1956 ஆம் ஆண்டு தேர்­தலில் தமது பிர­சா­ரத்தில் தேசிய உணர்ச்­சி­யையும் சிங்­கள மொழி­யையும் பௌத்த மதத்­தையும் முன்­னெ­டுத்துச் சென்றார். இக்­கட்­சியின் தேர்தல் வேட்­பா­ளர்­களில் பெரும்­பா­லானோர் பௌத்த மத அடிப்­படை வாதி­க­ளா­கவும் நடுத்­தர மற்றும் சாதா­ரண வர்க்­கத்தை சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­த­துடன் அநேகர் பௌத்­த­மத தேசிய உடை­ய­ணிந்­த­வர்­க­ளா­கவும் இருந்­தனர்.

கிரா­மங்­களில் செல்­வாக்கு செலுத்தி வந்த பௌத்த குருமார், வெத­மாத்­தையா, பள்­ளிக்­கூட ஆசி­ரியர் என்போர் தலை­மையில் கிராம மக்கள் திரண்­டெ­ழுந்து பண்­டாரநாயக்க தலை­மை­யி­லான மக்கள் ஐக்­கிய முன்­ன­ணிக்கு வாக்­க­ளித்து பௌத்த அடிப்­படை வாதத்தை வெற்றி பெற வைத்­தனர் என்­பது வர­லாற்றில் அறிந்து கொண்ட விடயம்.

1956 ஆம் ஆண்டு இலங்கை பாரா­ளு­மன்ற ஆட்­சியை பௌத்த அடிப்­ப­டை­வா­தத்தை முன்­னெ­டுத்து பெற்றுக் கொண்ட பிர­தமர் பண்­டாரநாயக்க அவர்கள் தனிச்­சிங்­களச் சட்­ட­மொன்றைக் கொண்டு வந்­ததன் எதிர் விளை­வாக தமிழர் தாயகம் உட்­பட்ட பல்­வேறு இடங்­களில் ஏற்­பட்ட தமிழர் போராட்­டத்தின் விளை­வாக பண்டா– செல்வா ஒப்­பந்தம் உடன்­ப­டிக்­கை­யா­னது மக்கள் ­பி­ர­தி­நி­திகள் சபையில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. இதனால் பெரும்­பான்மைச் சமூ­க­மா­கிய சிங்­கள மக்கள் மத்­தியில் மேற்­படி ஒப்­பந்­தத்­துக்கு எதி­ராக ஏற்­பட்ட எதிர்ப்பின் கார­ண­மாக மக்கள் பிர­தி­நி­திகள் சபையில் சமர்ப்­பிக்­கப்­பட்ட அவ்­வொப்­பந்­தத்தை பிர­தமர் பண்டா மீளப்­பெற்­றுக் ­கொண்டார்.

 இதனைத் தொடர்ந்து மே மாத­ம­ளவில் இனக்­க­ல­வரம். அவ­சர காலச்­ சட்­டத்தை பயன்­ப­டுத்தி கல­வ­ரங்கள் அடக்­கப்­பட்­டன. 05.06.1958 ஆம் ஆண்டு தமிழ் மொழி விசேட ஏற்­பா­டுகள் சட்டம் மக்கள் ­பி­ர­தி­நிதி சபையில் நிறை­வேற்­றப்­பட்­டது. இருந்த போதிலும் நாட்டின் பல­மு­னை­களில் ஏற்­பட்ட கடும் எதிர்ப்பின் கார­ண­மாக பண்டா –செல்வா ஒப்­பந்தம் கிழித்து எறி­யப்­பட்­டது மாத்­தி­ர­மல்ல தமி­ழரின் சிங்­கள ஸ்ரீ போராட்டம் உட்­பட பல போராட்­டங்கள் நாட்டின் அர­சியல் சூழ்­நி­லையில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­ய­து?

பிர­தமர் பண்­டாரநாயக்க அவர்கள் அவரின் உத்­தி­யோக வாசஸ்­த­ல­மான ரோஸ் மீட் இடத்தில் வைத்து 1959 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 25 ஆம் திகதி தல்­துவே சோம­ராம தேரர் என்­ப­வரால் சுட்­டுக் கொல்­லப்­பட்டார். இப்­ப­டு­கொ­லை­யுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளாக களனி ரஜ­ம­க­வி­ஹா­ரையின் விகா­ரா­தி­பதி மாப்­பிட்­டி­கம புத்­தி­ரகித் தேரோவும் மற்றும் ஹேமச்­சந்­திர பிய­சேன, ஜய­வர்த்­தன குற்­ற­வா­ளி­யாக நிறுத்­தப்­பட்­டனர். இதில் ஹேமச்­சந்­திர பிய­சேன என்­பவர் சுதந்­தி­ரக்­கட்­சியின் ஸ்தாப­கர்­களில் ஒருவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.  

இது ஒரு­புறம் இருக்க பண்டா –செல்வா உடன்­ப­டிக்­கைக்கு எதி­ராக ஜே.ஆர்.ஜெய­வர்­த்தன தலை­மை­யி­லான பௌத்த குருமார் பௌத்த அடிப்­ப­டை­வா­திகள் ஒன்று சேர்ந்து கண்டி பாத­யாத்­தி­ரை­யொன்றை மேற்­கொண்­டமை பற்றி இலங்கை வர­லாற்­றுப்­ப­தி­வுகள் எமக்கு தெளி­வாக எடுத்துக் காட்­டி­யுள்­ளன.

இதன் பின் நடை­பெற்ற அர­சியல் மாற்­றங்­களின் ஒரு பின்­ன­ணி­யாக ஸ்ரீமாவோ பண்­டாரநாயக்க தனது கண­வரின் படு­கொ­லையைத் தொடர்ந்து நாட்டின் பிர­த­ம­ராகப் பதவி வகிக்கும் வாய்ப்பு உரு­வா­கி­யி­ருந்­தது. இவரின் ஆட்சிக் காலத்தில் இடம்­பெற்ற அர­சியல் மாற்­றங்­களில் பௌத்த அடிப்­ப­டை­வாதம் எவ்­வ­ளவு செல்­வாக்கு செலுத்திக் கொண்­டது என்­ப­தையும் அறிந்து கொள்­வது வர­லாற்றைப் புரிந்து கொள்ள உத­வி­யாக இருக்கும்.

இலங்­கையின் முத­லா­வது பெண் பிர­த­ம­ராக பதவி ஏற்­றுக்­கொண்ட ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் ஆட்­சியை கவிழ்ப்­ப­தற்­கான சதிப்­பு­ரட்­சி­யொன்று 1962 இல் (27.01.1962) வகுக்­கப்­பட்­டது. இதன் பின்­ன­ணியில் ஐ.தே.கட்­சி­யினர் இருந்­த­தாக அன்­றைய தக­வல்கள் இருந்­த­ போ­திலும் இதன் சூத்­தி­ர­தா­ரி­க­ளாக பௌத்த அடிப்­ப­டை­வா­திகள் இருந்­துள்­ளனர் என்­ப­தற்கு ஆதா­ர­மாக 27.01.1962 நள்­ளி­ரவில் பிர­தமர் ஸ்ரீமா­வவை கைது செய்து பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­விட்டு புதிய ஆட்­சி­யொன்றை அமைக்க பாரிய திட்­ட­மொன்று வகுக்­கப்­பட்­டது. 

இதன்­ படி பிர­த­மரின் வாராந்த செயற்­றிட்ட அறிக்­கை­யின்­படி 26.01.1962 அன்று வெள்­ளிக்­கி­ழமை பிர­தமர் கொழும்­பி­லி­ருந்து கதிர்­காமம் சென்று (27.01.1962) அன்று விசேட பூஜை வழி­பாட்டில் கலந்து கொள்­வ­தெ­னவும் பேரா­தனை கெட்­டம்பே பௌத்த விஹா­ரையின் பிர­தம குரு தனது விஹா­ரையில் 27.01.1962 நடை­பெ­ற­வுள்ள விழா­வொன்றில் கலந்து கொள்­ளு­மாறு அழைப்­பொன்­றையும் பிர­த­ம­ருக்கு விடுத்­தி­ருந்தார். ஆனால் தெய்­வா­தீ­ன­மாக நிலை­மை­களை மணந்து அறிந்து கொண்ட பிர­த­மரின் செய­லாளர் மேற்­படி கதிர்­காம நிகழ்வை இரத்துச் செய்­ததன் பேரில் சதிப்­பு­ரட்­சியின் விளை­வுகள் புத்­தி­சா­லித்­த­ன­மாக தடுத்துக் கொள்­ளப்­பட்­டது.

இதே பிர­தமர் அவர்கள் 1972 ஆம் ஆண்டு குடி­ய­ரசு யாப்பை உரு­வாக்­கிய போது அர­சியல் சாச­னத்தின் இலங்கை குடி­ய­ரசில் பௌத்த மதத்­துக்கு முதன்மை நிலை வழங்­கப்­ப­டுதல் வேண்டும் என்­ப­துடன் பௌத்த சாச­னத்தை பாது­காத்தும் பேணி வளர்த்­தலும் அரசின் கட­மை­யாக இருத்தல் வேண்­டு­மென உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட அள­வுக்கு ஏனைய மதங்­களின் உரி­மை­களும் பேணு­தல்­களும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

யுத்­தத்­திற்குப் பின்­னுள்ள நிலை­மைகள் இந்த பௌத்த மத அடிப்­ப­டை ­வாதப் போக்கை இன்னும் துரி­தப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­துடன் சிறு­பான்மைச் சமூக மதங்­க­ளுக்­கெ­தி­ரான வாதங்­களை மோசப்­ப­டுத்தி வரு­வ­தையும் காணு­கின்றோம். இன­வ­ழிப்­பட்ட குடி­யேற்­றங்கள், விஹாரை அமைப்­புகள், விஸ்­த­ரிப்­புகள் என்­பன வேகப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற அதே­வேளை பள்­ளி­வா­சல்கள், இந்து ஆல­யங்கள், கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் என்­ப­வற்றை துவம்சம் செய்­கின்ற நட­வ­டிக்­கைகள் எவ்­வ­ளவு மோச நிலையை உரு­வாக்­கி­யுள்­ளது என்­பதை நாளாந்தம் பார்த்துக் கொண்­டி­ருக்­கிறோம். இலங்­கையின் இன­வாதக் கெடு­பி­டி­களில் பௌத்­த­ வா­தி­களின் செல்­வாக்கும் ஊடு­ரு­வல்­களும் எவ்­வ­ளவு அனர்த்­தங்­களை உரு­வாக்கி வந்­துள்­ளன என்­பது பற்றி தெரி­யாத ஒரு விட­ய­மல்ல.  

அண்­மையில் மட்­டக்­க­ளப்பில் இடம்­பெற்ற இன­வாத முறு­கல்­க­ளுக்கு மூல­கா­ர­ண­மாக இருந்­த­வர்கள் பௌத்த குருமார் என்­பது ஜீர­ணிக்க முடி­யாத ஒரு விட­ய­மாகும். இந்த விவ­கா­ரத்தில் பொது­ப­ல­சே­னாவின் முக்­கி­யஸ்­தர்கள் கைது செய்­யப்­ப­டா­மை­யென்­பது சட்டம் ஒழுங்கை மீறும் ஒரு செய­லென்­பதை சட்­டத்­து­றை­யி­னரும் நீதித்­து­றை­யி­னரும் உணர்ந்து கொள்­வ­தற்கு அப்பால் அர­சாங்கம், ஆட்­சி­யா­ளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

மட்டக்களப்பு முறுகல் நிலையில் பொலிஸ் தரப்பினர் நடந்து கொண்டவிதம் பாராட்டத்தக்க விடயம் மாத்திரமல்ல. அவர்களின் நீதியின் மாற்றுத் தன்மையையும் உணர்த்தி வைத்துள்ளமை பாராட்டுக்குரிய விடயம். பொதுபலசேனா அமைப்பினர் எவ்வழியிலும் நுழையாமல் தடுப்பு உத்தரவை பெற்றிருந்தமை இதேவேளை பொதுபலசேனாவின் உள் நுழைவைத் தடுக்க தமிழ் இளைஞர்களும் முஸ்லிம் இளைஞர்களும் கைகோர்த்து போராடியமையெல்லாம் நல்ல மாற்றத்துக்குரிய அறிகுறியாகவே பார்க்கப்பட வேண்டும். இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தை குறிப்பிட்டு ஆக வேண்டும்.

கிழக்குப் பல்கலைக்கழக வளாக த்துக்குள் மிக நீண்டகாலமாக பொலிஸ் பாதுகாப்பு சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இவற்றால் ஏற்பட்டு வரும் பக்க விளைவின் படிப்பினையை உணர்ந்து கொண்ட சிங்கள மாணவர்கள் எமக்கு இனி பொலிஸ் பாதுகாப்பு அவசியமற்றது என தமிழ் மாணவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தியிருப்பது நல்லமாற்றத்தை மாத்திரமல்ல புதியதொரு தேசத்தை நோக்கி இளைஞர்கள் கைகோர்க்கத் தொடங்கியுள்ளார்கள் என்பதற்கான குறியீடாகவும் இருக்கின்றது.

தேசத்தின் அரசியலிலும் சமூக நடவடிக்கைகளிலும் ஐக்கியத்திலும் மதவாதிகளின் கெடுபிடிகளைத் தவிர்த்து தூய்மையான நல்லாட்சியொன்றை நோக்கி இலங்கை செல்ல எல்லா இனத்தவரும் மதம், மொழி, இனம் என்பவற்றை தளர்த்து நாம் இலங்கையர் என்ற பாதையில் செல்ல அரசே ஆவன செய்ய வேண்டும்.

திரு­மலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-10#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.