Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹம்பாந்தோட்டையில்...

Featured Replies

ஹம்பாந்தோட்டையில்...
 
 

article_1481522100-2016-12-10%20magampur

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த, 483 ஊழியர்களையும் நிரந்தரமாகப் பணிக்கு அமர்த்துமாறு வலியுறுத்தி, சனிக்கிழமை (10) துறைமுக ஊழியர்கள் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட பதற்ற நிலையினை படங்களில் காணலாம்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதும், செய்திகளைச் சேகரிக்கச் சென்றிருந்தவர்கள் மீதும் கடற்படையில் குண்டாந்தடிகள் மற்றும் துப்பாக்கிகளின் பிடிகளின் மூலமாக தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

(படப்பிடிப்பு: சனத் கமகே)

article_1481522051-DSC06076.JPGarticle_1481522059-DSC06078.JPGarticle_1481522068-DSC06100.JPGarticle_1481522076-DSC06103.JPG

- See more at: http://www.tamilmirror.lk/187887/ஹம-ப-ந-த-ட-ட-ய-ல-#sthash.xC3yA150.dpuf
  • தொடங்கியவர்
சிவி்ல் உடையில் கடற்படைதளபதி ஊடகவியலாளரை தாக்கியது பாரதூரமானது-அரசாங்கம்
 
 
சிவி்ல் உடையில் கடற்படைதளபதி ஊடகவியலாளரை தாக்கியது பாரதூரமானது-அரசாங்கம்
அம்பாந்தோட்டை துறைமுகத்தில்  செய்தி சேகரிக்கச்  சென்ற ஊடகவியலாளர் ஒருவரை சிவில் உடையில் இருந்த  கடற்படைத் தளபதி தாக்கிய சம்பவம் மிகவும் பாரதூரமானது என்பதை  அரசாங்கம் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
 
அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை அகற்றுவதற்காக கடந்த சனிக்கிழமை கடற்படையினர் நடத்திய தாக்கு தலில் ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட அறுவர் காயமடைந்திருந்தனர். இதன்போது அங்கு சென்றிருந்த கடற்படைத் தளபதியினால் ஊடகவியலாளர் ஒருவர் மிகவும் மோசமாக தாக்கப்பட்டிருந்தார்.
 
எனினும் கடற்படைத்தளபதியின் நடவடிக்கையை  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரச தகவல்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் நியாயப்படுத்திவந்த நிலையிலேயே  நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கடற்படைத் தளபதி சிவில் உடையில் இருந்தது தொடர்பில் கரிசனையை வெளியிட்டிருக்கின்றார்.  
 
தங்களது நியமனங்களை நிரந்தரமாக்குமாறும், துறைமுக வளாகத்தில் சீனாவின் முதலீ டுகளைத் தடுக்குமாறும் கோரி கடந்த 7ஆம் திகதி முதல் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜ பக்ச துறைமுகத்தில் பணிபுரியும் 483 ஊழியர்கள் நுழைவாயில் முன்பாக பணி பகிஷ்கரி ப்பில் ஈடுபட்டிருந்தனர்.
Navy-Commander-attack-journalist.jpg
இந்த பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து கலைத்து இரண்டு சர்வதேச கப்பல்களை விடுவிப்பதற்காகவெனக் கூறி, குறித்தப் பகுதிக்குச் சென்ற  கடற்படையின் தள பதி தலைமையிலான கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
குறித்த சம்பவத்தின் போது தான் ஒரு ஊடகவியலாளர் என்பதை அடையாளப்படுத்திய சுயாதீன ஊடகவியலாளர் ரொஷான் திலீப் குமார கடற்படைத்தளபதியினால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.  
 
இந்த சம்பவத்திற்கு ஊடகவியலாளர் அமைப்புக்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ள நிலையில் இன்று கண்டிக்கு விஜயம்செய்திருந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் கட ற்படைத் தளபதி சிவில் உடையில் இருந்தது சிக்கலுக்குரியது என்பதை ஏற்றுக்கொண்டார்.
 
“ கடற்படைத் தளபதி ஊடகவியலாளர் என தெரிந்து தாக்குதல் நடத்தினாரா என்பது எமக்குத் தெரியாது. அதேவேளை ஊடகவியலாளர்கள் குறித்த இடத்திற்கு சென்று கடற்படையினரின் கடமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாலேயே தாங்கள் தாக்கியதாக கடற்படையினர் கூறுகின்றனர். எனினும் உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்வதற்காக குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
குறித்த விசாரணைகளின் முடிவுகள் வந்த பின்னரே சம்பவம் தொடர்பில் நாம் கருத்து க்களை கூற முடியும். ஊடகவியலாளர் தமது வரையறையை மீறி செயற்பட்டிருக்கும் பட்ச த்தில் கடற்படையினர் தமது அதிகாரத்தை பயன்படுத்தியிருப்பார்களாயின் எம்மால் அவ ர்களை குறை கூற முடியாது. எனினும் அவ்வாறான ஒரு நிலை ஏற்படாத பட்சத்தில் தாக்கு தல் நடத்தியிருந்தால் அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தப் பின்னணியில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது என்பது குறித்து இதுவரை கடற்படைத் தளபதி தெளிவு படுத்தவில்லை. எனினும் சிவில் உடையில் சென்று தாக்குதல் நடத்தியது பிரச்சனைக்குரிய விடையம்தான். அதனை மறுப்பதற்கில்லை - என்றார்.

http://www.onlineuthayan.com/news/21291

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.