Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாதிருப்பதால் அமைச்சர்கள் அதிருப்தியில் -அமைச்சர் அர்ஜுன ரணதுங்க விசனம்

Featured Replies

குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாதிருப்பதால் அமைச்சர்கள் அதிருப்தியில் -அமைச்சர் அர்ஜுன ரணதுங்க விசனம்
குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாதிருப்பதால் அமைச்சர்கள் அதிருப்தியில் -அமைச்சர்  அர்ஜுன ரணதுங்க விசனம்
கடந்த காலங்களில் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாதிருப்பது தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பெரும் அதிருப்தி அடைந்திருப்பதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
 
எதிர்காலத்திலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதிருந்தால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க நேரிடும் என்றும் அவர்  நல்லாட்சி அர சாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.
 
கொழும்பிலுள்ள துறைமுக அபிவிருத்தி அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் 
 
இன்று யாருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது? எனது அமைச்சின் கீழுள்ள துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் சிலர் பொலிஸ் நிதிமோசடி பிரிவுக்கு விசாரணைகளுக்காக சென்று வருகின்றனர். ஆனால் அதன் தலைவர் விசாரணைகளுக்கு அழைக்கப்படுவதில்லை. பறிமுதல் செய்யப்பட்டிருந்த அவரது கடவுச் சீட்டும் மீளளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நான் அமைச்சரவையிலும் குரல் எழுப்பியுள்ளேன். பெரிய திருடர்கள் அனைவரும் தப்பிச்செல்கின்றனர். இந்த அரசாங்கத்தில் எனக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினை இதுதான்.
 
நான் நாடாளுமன்றத்திலும் சில நிறுவனங்கள் தொடர்பாக பேசினேன். இன்று பணம் படைத்தவர்கள் தப்பிவிடுகின்றனர். இதற்கு அமைச்சர்களும் பொறுப்பு கூற வேண்டும். இதுதான் எனக்கு உள்ள அதிருப்தி. வரி குறைப்போ அல்லது பொருட்கள் சேவைகளின் விலைகள் குறைப்போ நாட்டு மக்கள் இன்று எதிர்பார்க்கவில்லை. கடந்த காலங்களில் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். இன்று அது நிறைவேறியிருக்கின்றதா? இல்லை. யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள். எனவே ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இதனை செய்யுங்கள் என கூறியுள்ளேன். அதைவிட மேலதிகமாக எதனையும் என்னால் செய்ய முடியாது. எதிர்காலத்தில் குழுக்களாக நாங்கள் கோரிக்கை விடுப்போம். செய்வார்களா இல்லையா என்பது எமக்குத் தெரியாது. ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அதற்கேற்ற வகையில் முடிவுகளையும் எடுக்க நேரிடும்” என்றார்.

http://onlineuthayan.com/news/21299

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.