Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பதவிவிலகத் தயார் – கடற்படைத் தளபதி

Featured Replies

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பதவிவிலகத் தயார் – கடற்படைத் தளபதி

raveenthira-gunaratna.jpg
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பதவிவிலகத் தயார் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

 

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து  அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைக் குழு ஒன்று விசாரணை நடத்தி குற்றவாளி என தம்மை அறிவித்தால் பதவியை  விலகுவதாக  தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் தாக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் அந்த இடத்தில் இடம்பெற்ற மெய்யான சம்பவங்கள் பற்றிய தகவல்களை வெளியிடத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வாகனப் போக்குவரத்தில் ஈடுபடும் உலகின் மூன்றாவது பெரிய கப்பலான ஹைபெரியான் ஹைவே என்னும் கப்பலை விடுவித்தமைக்காக தமக்கு சர்வதேச கடல் அமைப்பினால் சான்றிதழ் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு நாட்களாக குறித்த கப்பலையும் மற்றுமொரு கப்பலையும் ஹம்பாந்தோட்டை துறைமுக பணியாளர்கள் தடுத்து வைத்திருந்தனர் எனவும் நேரடியாக கடற்படையினர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ள அவர் தாக்குதல் நடத்தியதாக ஊடகவியலாளர் வழக்குத் தொடர்ந்தால் அந்த வழக்கில் ஆஜராகத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சார்பில் வீடியோக்கள் வெளியிடப்பட்டதாகவும் தமது சார்பிலும் காண்பிக்கப்படாத சில வீடியோக்கள் காணப்படுவதாகவும் அவை எதிர்காலத்தில் காண்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/10140

  • தொடங்கியவர்
யுத்த காலத்தில் சிறப்பாக செயற்பட்டவர் கடற்படைத் தளபதி -பாதுகாப்பு அமைச்சு
 
யுத்த காலத்தில் சிறப்பாக செயற்பட்டவர் கடற்படைத் தளபதி -பாதுகாப்பு அமைச்சு
ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட கடற்படைத் தள பதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன, கடந்த யுத்த காலத்தில் விசேட கரும மாற்றிய சிறப்புக்குரியவர் என பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.
 
கடற்புலிகளின் மிதக்கும் ஆயுதக் கப்பல் கடந்த 2007 ஆம் ஆண்டு அழித்தொழிக்கப்பட்டது. இதன்போது, ரவீந்திர கடற்படை நடவடிக்கைகளுக்கு பணிப்பாளராக இருந்துள்ளார்.அத்துடன், கடற்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகுகளை எதிர்ப்பதற்கு தயாரிக்கப்பட்ட விசேட பட குகளை உருவாக்கியவர் இவர் எனவும் கூறப்படுகின்றது

http://www.onlineuthayan.com/news/21325

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.