Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரெக்கார்ட் பிரேக்கிங்கில் கோஹ்லியின் சாதனை! #Infographics #Don'tMiss

Featured Replies

ரெக்கார்ட் பிரேக்கிங்கில் கோஹ்லியின் சாதனை! #Infographics #Don'tMiss

சாதனை

சாதனைகள் படைப்பதில் பெருஞ்சாதனை படைத்து சரித்திரம் படைத்தவர் சச்சின் டெண்டுல்கர். அப்பேர்ப்பட்ட சச்சினின் சாதனைகளையே ஒவ்வொன்றாக உடைத்துக் கொண்டிருக்கிறார் விராட் கோஹ்லி.  இந்த ஆண்டு விராட் கோஹ்லியின் பார்ம் உச்சக் கட்டத்தில் இருக்கிறது. ஒருதின போட்டிகள், டெஸ்ட் போட்டிகள், டி 20 போட்டிகள் என அத்தனையிலும் ஒரே சமயத்தில் அசத்திக் கொண்டிருக்கிறார்.

உலகிலேயே டெஸ்ட்,  ஒருதின போட்டிகள், டி 20 போட்டிகள் மூன்றிலும் ஐம்பது ரன்களுக்கும் அதிகமான சராசரியை வைத்திருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மட்டும் தான். கோஹ்லியின் இந்த உலக சாதனையை இப்போதைக்கு எந்த வீரரும் முறியடிக்கவே முடியாது. லிமிட்டட் ஓவர்ஸ் கிரிக்கெட்டுக்குத் தான் கோஹ்லி லாயக்கு, டெஸ்ட் போட்டிகளுக்கு கோஹ்லி சரிப்பட்டு வரமாட்டார் எனச் சொன்ன அத்தனை கிரிக்கெட் ஜாம்பவான்களும் இன்று கோஹ்லி தான் சிறந்த வீரர்ன் என புகழாரம் சூட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இயான் சேப்பல், இன்சமாம் உல் ஹக் என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோஹ்லிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வுப்பெற்றதற்கு பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் பாதியிலேயே கேப்டன் பொறுப்பை ஏற்றார் விராட் கோஹ்லி. 2014  டிசம்பரில் இருந்து ஒவ்வொரு தொடரிலும் அவரது பார்ம் வலுவாகிக் கொண்டே வருகிறது. இந்த ஆண்டு விராட் ஆடிய ஆட்டம், எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் கனவாகவே இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருதின தொடரில் ஆரம்பித்து, தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வரை கோஹ்லி தான் இந்தியாவின் பேட்டிங் கில்லி. டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லி படைத்து வரும் சாதனைகள் பற்றிய அலசல் இங்கே: -

1. அதிவேக 15வது சதம் :- 

virat kohli

52 டெஸ்ட் போட்டிகளில்  ஆடியிருக்கும் விராட், தனது 89வது இன்னிங்ஸில் பதினைந்தாவது சதத்தை விளாசியிருக்கிறார். இந்திய வீரர்களில் சச்சின் செய்த சாதனையை விராட் சமன் செய்திருக்கிறார். விராட்டை விடவும் மிக குறைந்த இன்னிங்ஸ்களில்  பதினைந்தாவது  சதம் விளாசியவர் கவாஸ்கர் மட்டும் தான். வெறும் 77 இன்னிங்ஸ்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். கோஹ்லிக்கு அடுத்தபடியாக ஷேவாக், அஸாருதீன், டிராவிட் போன்றவர்கள் இருக்கின்றனர்.

2. ஒரே ஆண்டில் அதிக  ரன் :-

virat kohli

கேப்டனாக  பொறுப்பேற்று விளையாடியவர்களில் ஒரே ஆண்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற பெருமைக்கு கோஹ்லி சொந்தக்காரராகியிருக்கிறார். இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி மிச்சமிருக்கும் நிலையில் கோஹ்லி எவ்வளவு ரன்களை அடிக்கப் போகிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு முன்னர் 2006 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் 22 டெஸ்ட் போட்டிகள் ஆடி 1095 ரன்கள் எடுத்திருந்ததே, இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ஒருவர் ஒரு ஆண்டில் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. விராட் கோஹ்லி இந்த ஆண்டு வெறும் 17 போட்டிகளில் 1112 ரன்களை விளாசியிருக்கிறார். 1997 ஆம் ஆண்டு சச்சின் 17 போட்டிகளில் 1000 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

3. ஒரு தொடரில் அதிகபட்ச ரன்கள்:- 

v3_07435.PNG

1978-79 காலகட்டத்தில் அப்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணியின் அசுரவேக வேகப்பந்தைச் சமாளித்து 9 இன்னிங்ஸ்களில் 732 ரன்களை எடுத்திருந்தார் கவாஸ்கர் . அது தான் இன்றளவும் ஒரு தொடரில்  இந்திய கேப்டன் ஒருவர் குவித்த அதிகபட்ச ரன்கள் ஆகும். தற்போது கோஹ்லி ஏழு இன்னிங்ஸ்களில் 552 ரன்களை குவித்திருக்கிறார். சென்னை டெஸ்டில் 181 ரன்களை எடுத்தால் கவாஸ்கரின் இந்தச் சாதனையையும் கோஹ்லி முறியடிப்பார்.

4. ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ரன் :-

virat

ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ரன் குவித்த  இந்திய கேப்டனும் கோஹ்லி தான். கேப்டனாக மூன்று முறை இரட்டைச் சதம் எடுத்த சாதனையும் கோஹ்லி வசம் தான் இருக்கிறது. இந்திய கேப்டன்களில் அந்நிய மண்ணில் இரட்டைச்  சதம் விளாசிய ஒரே வீரர்  கோஹ்லி மட்டும் தான். 

5. இந்தியா - இங்கிலாந்து தொடர் :- 

kohli

கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா அதிக டெஸ்ட் தொடர்களை விளையாடியது இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தான். இந்தியாவும் இங்கிலாந்தும் இதுவரை 982 டெஸ்ட் போட்டிகளில்  மோதியுள்ளன. 1990 ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடந்த  டெஸ்ட் தொடரில் ஆறு இன்னிங்ஸ்களில் 752 ரன்களை குவித்திருந்தார் கிரகாம் கூச். இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒரே தொடரில் அதிக ரன்களை குவித்திருப்பவர் கூச் தான். விராட் கோஹ்லி தற்போது ஏழு இன்னிங்ஸ்களில் 640 ரன்களை குவித்திருக்கிறார். சென்னை டெஸ்டில் 113  ரன்களை குவித்தால் கிரகாம் கூச்சின் இமாலய சாதனை உடைபடும். 

6.  கேப்டன் கில்லி :-

v6_07022.PNG

விராட் கோஹ்லி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அந்நிய மண்ணில் நடந்த  இரண்டு டெஸ்ட் தொடர் வெற்றி, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் வெற்றி என ஐந்து தொடர்களை தொடர்ச்சியாக வென்று சரித்திரம் படைத்திருக்கிறார் கோஹ்லி. அதே சமயம்  கோஹ்லியின் பார்மும் இந்த காலகட்டத்தில் வேற லெவலில் இருக்கிறது என்பதை புள்ளிவிவரம் சொல்லிவிடுகிறது. கேப்டன், பேட்ஸ்மேன் என இரட்டைச் சவாரியை சிறப்பாக செய்கிறார்  கோஹ்லி.

7. வலுவான அணிகளை விரட்டும் விராட்

virat kohli

டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு அணிக்கும் எதிராக விராட் கோஹ்லி எவ்வளவு சராசரியை வைத்திருக்கிறார் என  படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அறுபது ரன்களுக்கு மேல் டெஸ்ட் சராசரி வைத்திருக்கிறார். இந்த இரண்டு அணிகளுக்கு எதிராக அவர்களது மண்ணிலேயே சிறப்பாக  விளையாடியவர் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக நியூசிலாந்து மண்ணில் 70 ரன்களுக்கும் அதிகமான சராசரி வைத்திருக்கிறார் கோஹ்லி. இங்கிலாந்தில் மட்டும் தான் மோசமான சராசரி வைத்திருக்கிறார். வங்கதேசத்தில் ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டும் தான் ஆடினார் என்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. 

8. கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரே ஆண்டில்  இரண்டுக்கு மேற்பட்ட இரட்டைச் சதங்களை விளாசியவர்கள் ஐந்தே பேர் தான். டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங், பிரண்டன் மெக்குல்லம் ஆகியோருக்கு அடுத்தபடியாக இணைந்திருப்பவர் கோஹ்லி. மைக்கேல் கிளார்க் நான்கு இரட்டைச் சதங்களை விளாசியிருப்பது கவனத்தில் கொள்ளத் தக்கது. 

http://www.vikatan.com/news/coverstory/74847-virat-breaks-sachin-dravid-records-in-test-cricket.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.