Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓமந்தை சோதனை சாவடி காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்

Featured Replies

ஓமந்தை சோதனை சாவடி காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்
 
 
ஓமந்தை சோதனை சாவடி காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்
ஓமந்தை சோதனைச்சாவடி காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், பதிலீடாக வேறு 06 ஏக்கர் காணி இராணுவத்திற்கு வழங்குவதற்கு அரச அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறு ப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
 
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று ஓமந்தைச் சோதனைச்சாவடி அமைந்திருந்த இறம்பைக்குளம் காணி உரி மையாளர்களுக்கும் மேலதிக அரசாங்க அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
 
இச் சந்திப்பைத் தொடர்ந்து  பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
 
மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள ஓமந்தை, இறம்பைக்குளம் காணி உரிமையாளர்களுடன் சந்திப்பு இடம்பெற்றது.
 
இதன்போது ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த 06 ஏக்கர் காணியை எடுத்து விட்டு மிகுதி காணியை விடுவிக்க இராணுவம் இணங்கியுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் மக்களிடம் தெரிவித்திருந்தார்.
 
இதன்போது கருத்து தெரிவித்த மக்கள்,
 
அப்பகுதியில் சுமார் 65 குடும்பங்களுக்கு சொந்தமான காணி உள்ளதாகவும் கடந்த 23 ஆண்டுகளாக இராணுவத்தினர் அதனை தம்வசப்படுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். தமக்கு எல்லோரது காணியும் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என கோரியிருந்தனர்.
 
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதி காணி உரிமையாளர்கள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா ஆகியோரது கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அவர்கள் அம் மக்களுடனும் மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
 
இக்கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் கருத்து தெரிவித்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி,
 
ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த இறம்பைக்குளம் காணியை முழுமையாக விடுவிக்க இராணுவத்தினர் இணங்கியுள்ள தாகவும், அவர்களுக்கு பதிலீடாக 06 ஏக்கர் காணி ஏ9 வீதியில் வழங்கவேண்டும் எனவும் அரசாங்க அதிபரிடம் தெரிவித்திருக்கின்ற னர்.
 
இராணுவத்திற்கு ஏ9 வீதியில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேறு 06 ஏக்கர் காணியை வழங்குவதற்கு அரச அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளதுடன் மக்களின் காணியை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி ய ளித்துள்ளதாகவும் தெரிவித்தார்

http://www.onlineuthayan.com/news/21412

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.