Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

Featured Replies

யாழில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்
 
 
யாழில்   பெண் தலைமைத்துவ குடும்பங்களை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்
பெண் தலைமைத்துவ குடும்பங்களை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம்  காலை 11.00 மணியளவில் "விழுது" அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடைபெற்றது.
 
நிகழ்வில்  நாட்டில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களின் ,பொருளாதாரம்,சுகாதாரம்,கல்வி,பாதுகாப்பு, சார்ந்த பிரச்சினை கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
15591808_1229133440533512_623889333_n.jpg
அந்தவகையில் இன்றைய தினம் 14 மாவட்டங்களைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களின் தலைவர்கள் வருகை தந்தி ருந்தனர்.  
 
குறித்த கலந்துரையாடலில் காலி மாவட்டத்தில் 2004ம் ஆண்டு சுனாமி பேரலையின் பின்னர் உடமைகளை இழந்து பெண் தலை மைத்துவ குடும்பங்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.சுண்ணாம்புக் கைத்தொழில்,தும்புக் கைத்தொழில் போன்ற வற்றை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கை நடாத்தும்  குறித்த குடும்பங்கள்,தமது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த  வசதிகள் இல்லாத காரணத்தினால் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
15497850_1229133460533510_386264324_n.jpg
முல்லைத்தீவு மாவட்டம் தற்போது இராணுவமயமாக்கப்படுள்ளது.இதனால் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பாதுகாப்பு இன்மை காணப்படுகிறது.குறித்த குடும்பங்களின் பிரச்சினைகள் குறித்து  அந்த பகுதி காவல் துறையினருக்கு முறையிடப்படு கின்ற போதிலும் அவற்றிற்கான தீர்வு கிடைக்காத நிலை காணப்படுகின்றது.மேலும் குறித்த மாவட்டத்தில் 6000 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றன.ஆனால் குறித்த குடும்பங்கள் நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் கூலி சம்பளத்தில் வேலை பார்த்து வாழக்கையை நடாத்தி வருகின்றன..மேலும் நிரந்தர வீடுகள் இன்மையாலும் பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மிகவும் சிரமப்படுகின்றனர்.குறிப்பாக தேவையற்ற நேரங்களில் பாதுகாப்பு படையினர் வீடுகளில் வந்து தொலைபேசி இலக்க ங்களை பலவந்தமாக வாங்கிச் செல்கின்றனர்.
15497871_1229133457200177_803902648_n.jpg
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச மக்கள் 2010ம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்றப்பட்ட நிலையில் இவர்க ளுக்கான சுகாதார வசதிகள் இன்னமும் செய்து கொடுக்கப்படவில்லை.குறித்த பகுதியில் 87 பெண் தலைமைத்துவ குடு ம்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் இன்னமும் அவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை.இந்தியன் வீட்டுத் திட்ட செய ற்பாட்டின் கீழ் வீடுகள் அமைப்பதற்கான நிதிகள் வழங்கப்பட்ட போதிலும் அவற்றை நடைமுறைப்படுத்த யாரும் முன்வரவில்லை. என அவ ர்கள் தெரிவித்திருந்தனர்.
15555637_1229133453866844_1036951550_n.jpg
நிகழ்வின் வளவாளர்களாக வடமேல் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் விக்கிரமசிங்க,சுகாதார அமைச்சின் உதவிப்பணி ப்பாளர் ரவீந்திர ரட்நாயக்க,யாழ் மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மோகனேஸ்வரன்,பேராதனை பல்க லைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ரமேஷ்,வடமாகாண சமூக சேவைகள் பணிப்பாளர், நளாயினி இன்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
15554719_1229133443866845_647632931_n.jpg
குறித்த நிகழ்வில் பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள்,மாதர் சங்க தலைவர்கள்,பெண் தலைமைத்துவ குடும்ப அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.onlineuthayan.com/news/21411

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.