Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான்கு இலட்சம் டொலர்கள் நட்ட ஈட்டை செலுத்துவது யார்?

Featured Replies

நான்கு இலட்சம் டொலர்கள் நட்ட ஈட்டை செலுத்­து­வது யார்?

p27-793f277d1b6a97fd4d705e872f2911fd89a724ea.jpg

 

பிர­தமர் ரணில் கேள்வி: அம்­பாந்­தோட்­டையில் நிரந்தர கடற்­படை முகாம் அமைக்­கு­மாறும் பணிப்பு
(ஆர்.ராம்)

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் கப்பல் நிறுத்­தப்­பட்­ட­மையால் நான்கு இலட்சம் டொலர்கள் நட்ட ஈடு செலுத்­து­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நட்ட ஈட்டை செலுத்­து­வது யார்? என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கேள்­வி­யெ­ழுப்­பினார்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் நிரந்­தர கடற்­படை முகாம் அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்­வரும் ஜன­வரி மாதம் 7ஆம் திகதி துறை­மு­கத்தை சீன­ நி­று­வ­னத்­திடம் கைய­ளிக்­க­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

அம்­பாந்­தோட்டை துறை­முக ஊழி­யர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­போது அவர்கள் மீது கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­ரத்ன உள்­ளிட்ட கடற்­ப­டை­யினர் தாக்­குதல் நடத்­தி­யதால்

சர்ச்­சைகள் எழுந்­தி­ருந்­தன.

இந்­நி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும், கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­வர்த்­த­ன­வுக்கும் இடை­யி­லான சந்­திப்­பொன்று நேற்று வியா­ழக்­கி­ழமை அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்­றி­ருந்­தது. இதன்­போது குறித்த சம்­பவம் தொடர்­பான அறிக்­கை­யொன்றும் கடற்­படை தள­ப­தி­யினால் பிர­த­ம­ரி­டத்தில் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் இந்த நிகழ்வின் போது சட்டம் ஒழுங்கு மற்றும் தென்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரட்­நா­யக்­கவும் பங்­கேற்­றி­ருந்தார்.

இச்­சந்­திப்பின் போது கருத்து வெளியி­டு­கை­யி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,

அம்­பாந்­தோட்டை மகாம்­புர துறை­முக சேவை ஊழி­யர்­களின் போராட்டம் தற்­போது நிறை­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு மீண்டும் அவர்கள் பணிக்கு திரும்­பி­யுள்­ளார்கள். இவ்­வா­றான நிலையில் கடற்­படைத் தள­பதி அங்கு நடந்த சம்­பவம் தொடர்­பான பூரண அறிக்­கையை என்­னி­டத்தில் கைய­ளித்­துள்ளார்.

அம்­பாந்­தோட்டை சம்­ப­வத்தைப் பொறுத்­த­வ­ரையில், அம்­பாந்­தோட்டை மகாம்­புர துறை­முக சேவை குழுவில் இணைந்து பணி­யா­ளர்கள் கட­மை­யாற்றி வந்­துள்­ளனர். தற்­போது அம்­பாந்­தோட்டை துறை­முகச் செயற்­பா­டு­களில் சீனாவின் மேர்சன்ட் நிறு­வ­னத்­திற்கும் மற்­றொரு பகுதி துறை­முக அதி­கா­ர­ச­பைக்கும் முகாமை செய்­வ­தற்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

இவ்­வா­றான நிலை­யி­லேயே தொழி­லா­ளர்கள் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தனர். அச்­ச­ம­யத்தில் தொழி­லா­ளர்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக சீன நிறு­வ­னத்­துடன் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­து­வ­தாக அமைச்சர் சாகல கூறி­யி­ருந்தார். எனினும் அந்த ஊழி­யர்கள் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள்.

அச்­ச­ம­யத்தில் நான் சீன நிறு­வ­னத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினேன். அதன்­போது குறித்த ஊழி­யர்கள் எந்த ஒப்­பந்­தத்தில் இருக்­கின்­றார்­களோ அந்த ஒப்­பந்­தத்தில் சேவையை தொடர்ந்து மேற்­கொள்­வ­தற்கு இட­ம­ளிக்க முடியும் என கூறி­னார்கள். இருப்­பினும் அதனை ஊழி­யர்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

இவ்­வா­றான நேரத்தில் இரண்டு கப்பல் நிறு­வ­னங்கள் என்னைத் தொடர்­பு­கொண்­டி­ருந்­தன. தங்­க­ளு­டைய கப்­பல்கள் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் இருக்­கின்­றன. அவற்றை கொண்டு செல்ல முடி­யா­தி­ருக்­கின்­றது. அதற்கு சேதங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு இட­முண்டு. அது­தொ­டர்பில் கவ­ன­மெ­டுங்கள் எனக் கோரி­யி­ருந்­தனர்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தைப்­பொ­றுத்­த­வ­ரையில் இல­குவில் கப்­பல்கள் வரு­வது கிடை­யாது. ஒன்­றி­ரண்டு கப்­பல்­களே வரு­கின்­றன. முன்­னேற்­ற­ம­டைந்­ததன் பின்­னரே மேலும் கப்­பல்­களைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு எமக்கு வாய்ப்­புள்­ளது.

அந்­நி­லையில் தான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பாது­காப்புச் செய­லாளர், ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யா­டினேன். அதன் பின்­னரே அம்­பாந்­தோட்டை கடற்­ப­ரப்பில் தங்­கி­யுள்ள கப்­பல்­களை பாது­காப்­பாக வெளியேறிச் செல்­வ­தற்கு இட­ம­ளிப்­ப­தோடு துறை­மு­கத்தைப் பாது­காக்­கவும் வேண்­டி­யி­ருந்­தது.

குறிப்­பாக அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்தை எதிர்­வரும் ஜன­வரி மாதம் 7ஆம் திகதி புதிய நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைக்­க­வேண்­டி­யுள்­ளது. ஆகவே துறை­மு­கத்தில் சேதங்கள் ஏதும் ஏற்­ப­டு­மாயின் எதிர்­காலம் மிக­மோ­ச­மாக பாதிக்­கப்­படும். குறிப்­பாக கடன்­களை திரும்­பிச்­செ­லுத்­த­மு­டி­யாது போகும். அடுத்த பரம்­ப­ரம்­ப­ரைக்கு கடன்­சுமை சென்றுவிடும்.

அதன் அடிப்­ப­டை­யி­லேயே கடற்­படை தள­ப­தி­யி­டத்தில் கோரிக்கை விடுத்­தி­ருந்தேன். அவர் அங்கு சென்று நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்தார். விசே­ட­மாக கடற்­படை தள­ப­தி­யி­ன் அறிக்­கையின் பிர­காரம் துறை­மு­கங்­களை பாது­காப்­பது தொடர்­பாக சர்­வ­தேச ஒப்­பந்தம் காணப்­ப­டு­கின்­றது. அத­ன­டிப்­ப­டை­யி­லேயே கப்­பல்­க­ளையும் துறை­மு­கத்­தையும் பாது­காக்க வேண்­டி­யேற்­பட்­டது. அதன்­போதே பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டன. ஏவ்­வா­றா­யினும் கப்­பல்கள் பாது­காப்­பாக வெளியேற்­றப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் தற்­போது கே லைன் என்ற ஜப்பான் நிறு­வனம் தமக்கு நான்கு இலட்சம் டொலர்கள் நட்டம் ஏற்­பட்­டுள்­ள­தாக எமக்கு கடிதம் அனுப்­பி­யுள்­ளது. இந்தத் தொகையை யார் செலுத்­து­வது? குறித்த நிறு­வ­னத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­மாறு அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ர­ம­வுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளேன்.

அதே­நே­ரத்தில் இந்த சம்­ப­வத்­திற்கு பின்னர் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­வதால் அங்கு கப்­பல்கள் செல்­ல­மு­டி­யாத நிலைமை இருப்­ப­தாக கூறப்பட்டுள்ளது. அவ்­வா­றான நிலையில் அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்தை சர்­வ­தேச துறை­மு­க­மாக நிலை­நி­றுத்­த­வேண்­டி­யுள்­ளது. சீன நிறு­வ­னத்­திடம் பாது­காப்­பாக கைய­ளிக்­க­வேண்­டி­யுள்­ளது. எனவே அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் நிரந்­த­ர­மாக இருக்கும் வகையில் கடற்­படை முகா­மொன்றை அமைக்­கு­மாறு கடற்­படை தள­ப­திக்கு பணிப்­புரை விடுத்­துள்ளேன்.

இது குறித்து ஜனா­தி­பதி, பாது­காப்புச் செய­லாளர் ஆகி­யோ­ரி­டமும் கலந்­து­ரை­யா­டி­யுள்ளேன். சீன நிறு­வனம் உட்­பட வெ ளிநாட்டு நிறு­வ­னங்கள் பலவும் இந்த கோரிக்­கையை விடுத்­துள்­ளன. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தின் பாது­காப்பு கருதி அங்கு நிரந்­தர கடற்­படை முகா­மொன்று அமைக்­கப்­படும். அதே­போன்று மத்­தள விமான நிலை­யத்­திற்கும் விமானப்படையினரும் அனுப்பிவைக்கப்படவுள்ளனர். மேலும் துறைமுக சேவை ஊழியர்களின் எதிர்காலத்தை நாம் கருத்திற்கொண்டுள்ளோம். அவர்கள் தொடர்ந்தும் பணியில் ஈடுபடலாம்.

மேலும் செய்தி கேரிப்பில் ஈடுபட்டிருந்த ஒருவர் தங்காலை பொலிஸாரிடத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார். தங்காலையில் இருப்பது மீன்பிடி துறைமுகம். இந்த துறைமுகம் இருப்பது அம்பாந்தோட்டையிலாகும். ஆகவே எதிர்காலத்தில் சரியான இடங்களில் முறைப்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றேன். அதுமட்டுமன்றி துறைமுகப்பகுதி உயர்பாதுகாப்பு வலயம் என்பதால் அனுமதி பெற்றே வருகை தரவேண்டும். குறித்த ஊடகவிலாளர் அனுமதியின்றியே பிரவேசித்திருப்பதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது. ஆகவே அது தொடர்பிலும் ஆராயுமாறு பணிப்புரை விடுத்துள்ளேன் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-16#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.