Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்வுகாணும் வரையில் அரசிலிருந்து வெளியேறோம்

Featured Replies

தீர்வுகாணும் வரையில் அரசிலிருந்து வெளியேறோம்

p26-e8225f42a67ee5b3dba3607735e85ad43728f892.jpg

 

சுதந்திரக்கட்சி திட்டவட்டம்
(ஆர்.யசி )

நாட்டின் பிர­தான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும்­வ­ரையில் தேசிய அர­சாங்­கத்தில் இருந்து நாம் வெளி­யேற தயா­ராக இல்லை.ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சியல் கற்றுக்­குட்­டி­களின்

கருத்­துக்­க­ளுக்­காக நாம் வெளி­யேறமாட்டோம் என்று அக்கட்சியின் முக்கியஸ்தரும் இராஜாங்க அமைச்சருமான லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவித்தார். 

ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­ட­னான கூட்டு அர­சாங்­கத்தின் உறவு விருப்­ப­மில்­லாத கட்­டாயத் திரு­மணம் போன்­றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இரா­ஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் சென­வி­ரத்ன இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

தேசிய அர­சாங்­கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை வெளி­யே­று­மாறு தெரி­விக்க ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எந்த அதி­கா­ரமும் இல்லை. ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு உள்ள அதே அந்­தஸ்தும் உரி­மையும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் உள்­ளது. அதேபோல் கடந்த தேர்­தலில் பிர­தான இரண்டு கட்­சி­க­ளுக்கும் மக்கள் தனித்த அதி­கா­ரத்தை வழங்­க­வில்லை. ஆகவே பிர­தான இரண்டு கட்­சி­களும் தனிப் பெரும்­பான்மை பெறாத நிலையில் தேசிய அர­சாங்­க­மாக கொண்­டு­செல்­வதே இரண்டு கட்­சி­க­ளுக்கும் இருக்கும் ஒரே தெரி­வாகும். அதேபோல் இந்த அர­சாங்­கத்தில் நாம் விரும்பி கைகோர்க்­க­வில்லை. கட்­டா­யத்தில் நாட்டின் நலன்­களை கருத்­தில்­கொண்டு கூட்டு அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்றோம்.

எனினும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தான நபர்­களோ அல்­லது ஆட்­சியின் தன்­மையை உணர்ந்த எவ­ருமோ இவ்­வா­றான கருத்­துக்­களை தெரி­விக்­க­வில்லை. மாறாக இன்று பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வா­கி­யுள்ள அர­சியல் கத்­துக்­குட்­டி­களின் கருத்­துக்­களை ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிலைப்­பா­டாக கொண்டு நாம் வெளி­யேற மாட்டோம். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எம்மை வழி­ந­டத்தி வரு­கின்றார்.ஆகவே அவரின் தீர்­மா­னங்­க­ளுக்கு அமைய நாம் முடி­வு­களை எடுப்போம்.

மேலும் தேசிய அர­சாங்கம் பூர­ண­மாக எமக்கு சாத­க­மாக அமை­ய­வில்லை. பல்­வேறு முரண்­பா­டுகள் உள்­ளன. வரவு செலவு திட்­டத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி முரண்­பட்­டது. வரி அதி­க­ரிப்பு விட­யத்தில் நாம் மாற்று நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டோம் . எனினும் பிர­தான விட­யங்­களில் இரண்டு கட்­சியின் ஒத்­து­ழைப்­புகள் மூலம் பிரச்­சி­னை­களை தீர்க்க முயற்­சித்து வரு­கின்றோம். அவ்­வாறு இருக்­கையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேறப் போவ­தில்லை. ஒரு­சிலர் தமது பலத்தை காட்ட முன்­வைக்கும் தனிப்­பட்ட கருத்­துக்­க­ளுக்கு நாம் முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­போ­வ­தில்லை. நாட்டின் நன்­மை­களும் மக்­களின் நலன்­களும் எமக்கு முக்­கி­ய­மா­ன­வையாகும்.

அதேபோல் நாட்டை தனியார் மயப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் எதையும் நாம் ஆத­ரிக்கப் போவ­தில்லை. எனினும் தனியார் -பொது கூட்­டு­றவு செயற்­பா­டு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­க­வேண்­டிய தேவை உள்­ளது. குறிப்­பாக எயார் லங்கா , அம்­பாந்­தோட்டை துறை­முகம் மற்றும் மத்­தள விமா­ன­நி­லையம் ஆகி­ய­வற்றை நஷ்­டத்தில் இருந்து மீட்க நாம் தனியார் மற்றும் பொது உடன்­பாடு ஒன்றை கையாள வேண்­டி­யுள்­ளது. ஆகவே அதையும் நாம் சிந்­திக்க வேண்டும் என அவர் குறிப்­பிட்டார்.

அமைச்சர் பைஸர் முஸ்­தபா இங்கு கருத்து தெரி­விக்­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் இடையில் ஏற்­பட்­டுள்ள இந்த அர­சியல் உறவு காதல் திரு­ம­ண­மா­கவோ அல்­லது பேச்­சு­வார்த்தை திரு­ம­ண­மா­கவோ நடை­பெற்­ற­வில்லை. விருப்­ப­மில்­லாது நடை­பெற்ற கட்­டாயத் திரு­ம­ணத்­திற்க்கு ஒப்­பா­னது. ஆகவே நாம் கட்­டா­யத்தின் கார­ண­மா­கவே தேசிய அர­சாங்கம் என்ற கொள்­கையில் அங்கம் வகித்து வரு­கின்றோம் . பிர­தான இரண்டு கட்­சி­க­ளுக்கும் மக்­களின் ஆத­ரவு கிடைக்­காத கார­ணத்­தினால் நாட்டை முன்­னெ­டுக்க நாம் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கூட்­டணி அமைத்­துள்ளோம்.

மேலும் ஐக்­கிய தேசியக் கட்சி ஜனா­தி­பதி தேர்­தலில் தனித்து போட்டியிட முடியாத நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீது இருந்த பயம் காரணமாக எமது பொதுச் செயலாளரை நம்பி களத்தில் இறங்கினர். ஆகவே இந்த அரசாங்கத்தில் இரண்டு கட்சிகளுக்கும் சம பங்கு உள்ளது. ஆகவே மக்களாக தனி அரசாங்கத்திற்கான அங்கீகாரம் வழங்கும் வரைக்கும் தேசிய அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-16#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.