Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த,ரணில், மைத்திரி இரகசிய 'டீல்' மூலம் நாட்டை சீரழித்து வருகின்றனர்

Featured Replies

மஹிந்த,ரணில், மைத்திரி இரகசிய 'டீல்' மூலம் நாட்டை சீரழித்து வருகின்றனர்

p28-e204a48345f0e2bce13ffefcb9784cfd0082c76f.jpg

 

(ஆர்.யசி )

நாட்டின் வளங்களையும் சொத்துக்களை யும் சர்வதேச நாடுகளுக்கு விற்று அதன் மூலம் பொருளாதாரத்தை தக்கவைக்கும் மோசமான நகர்வுகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. மஹிந்த, ரணில்,

மைத்திரி இரகசிய 'டீல்' மூலமாக நாட்டை சீரழிக்கின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

ரணில்-, மைத்திரி ஆட்சிக்கு எதிரான போராட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத் தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்

அரசாங்கத்தை வீழ்த்தும் சகல நகர்வுக ளையும் மக்களுடன் இணைந்து மேற்கொள்

ளவுள்ளதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தி யாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கருத்து

தெரிவிக்கும் போதே கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கம் கையாண்டு வரும் பொருளா தார கொள்கைகள் மிகவும் மோசமானவை. நாட்டை சீரழிக்கும் பொருளாதார கொள்கை ஒன்றை கையாண்டு வருகின்றது. இந்த அரசாங்கம் நாட்டின் சொத்துக்களை விற்றும் தனியார் மயப்படுத்தியும் நாட்டை கட்டியெழுப்பலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து கையாளப்பட்டுவருகின்றது. ஆரம்பத்தில் தனியார் மயப்படுத்தல் என்று கூறியவர்கள் இப்போது அரச தனியார் கூட்டுறவு என்ற பெயரில் நாட்டின் சொத்துக்களை விற்க முயற்சிக்கின்றனர்.அதன் முதல் திட்டமாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பதற்

கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற னர். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் சகல பகுதிகளையும் விற்று வருமானம் ஈட்டவே அரசாங்கம் திட்டம் தீட்டி வருகின்றது. 99 வருடகால குத்தகைக்கு சீனா எம்மை உரிமை கோரப்போகின்றது. 99 ஆண்டுகள் முடிந்தவுடன் ஒப்பந்தம் செய்த ரணிலும் இல்லை எதிர்ப்பதற்கு நானும் இல்லை. ஆனால் மக்களுக்கே பிரச்சினைகள் ஏற்படப் போகின்றன . எமது மக்களின் இடங்களை சீன கம்பனிகளுக்கு வழங்கும் வேலைத்திட்டத்தை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இலங்கையை பொறுத்தவரையில் ஏற்றுமதி இறக்குமதியை விடவும் கப்பல் தரிப்பிட மற்றும் எண்ணெய் பரிமாற்றம் நடவடிக்கைகளுக்கே எமது துறைமுகங்கள் பிரசித்தி பெற்றுள்ளன. அவ்வாறு இருக்கையில் அந்த வருமானத்தையும் தடுக்கும் வகையில் எமது துறைமுகங்களை விற்கவே அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. இதில் 80 வீத வருமானம் ஏனைய நாடுகளுக்கே செல்கின்றது. அதேபோல் இலங்கையின் கனிய வளங்கள் மிகவும் பெறுமதியானவை. அவ்வாறு பெறுமதியான கனிய வளங்களை அழிக்க இந்த அரசாங்கம் திட்டம் தீட்டியுள்ளது. எமது கனியவளங்களை சர்வதேச நாடுகளுக்கு விற்க தீர்மானித்துள்ளது.

நாட்டின் சொத்துக்களை விற்க அரசாங்கம் மிகவும் வேகமாக செயற்பட்டு வருகின்றது. சர்வதேச நாடுகளுடன் வேகமான உடன் படிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆகவே, அதனை தடுக்க வேண்டும். அரசாங்கம் உடன்படிக்கை செய்துகொண்டு எதையும் செய்ய முடியாது. நாட்டு மக்கள் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக இருக்கும் வரையில் அரசாங்கம் எதையும் செய்ய முடியாது . இந்த காரணிகளை நாம் மக்களுடன் இணைந்து தடுக்கும் முயற் சிகளை மேற்கொள்வோம். ஆகவே எமக்கு எதிராக அரசாங்கம் அடக்குமுறைகளை கையாளும். ஆனால் நாம் அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு அஞ்சப்போவதில்லை. மக்களுடன் கைகோர்த்து போராடுவோம் .

எம்மை டீல் காரர்கள் என விமர்சிக்கும் அனைவரும் இந்த அரசாங்கத்துடன் இரக

சிய உடன்படிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மஹிந்த ராஜபக் ஷ தொடக்

கம் அனைவரும் இந்த அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொண்டுள் ளனர். ஆகவே இவர்கள் எவரும் எம்மை

விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை. இவர் கள் செய்யும் தவறுகள் அனைத்துக்கும் கண்

முன்னே ஆதாரங்கள் உள்ளன. ஆனால்

அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண் டுள்ளது. ஆகவே மக்கள் விடுதலை முன் னணிக்கு அரசாங்கத்துடன் எந்த இரகசிய உடன்படிக்கையும் இல்லை . நாம் மக்களுடன் உள்ளோம். ஆகவே எம்மை குற்றம் சுமத்தி அரசாங்கத்தின் தவறுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியாது.

ஆகவே நாட்டின் வளங்களையும் கனியவளங்களையும் சொத்துக்களையும் விற்று ஆட்சிநடத்த இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. நாட்டின் சொத்துக்களை விற்கும் இந்த அரசாங்கம் ஒரு தரகர் வேலையை மாத்திரமே செய்து வருகின்றது.ஆகவே ரணில் – மைத்திரி வியாபார ஆட்சியை வீழ்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆகவே ஜனவரி மாதம் இந்த நாட்டல் அரசாங்கத்துக்கு எதிரான போராட்ட மாதமாக ஆரம்பிக்கும். ஜனவரியில் இருந்து அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டம் தொடரும். மக்களை இணைத்து

இந்த அரசாங்கத்தை வீழ்த்தும் சகல நகர் வுகளையும் மக்கள் விடுதலை முன்னணி மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-16#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.