Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுடனான அதிகாரப் பகிர்வுக்கு அளவுகோல் உண்டு கூறுகிறார் பிரதமர் ரணில்

Featured Replies

தமிழர்களுடனான அதிகாரப் பகிர்வுக்கு அளவுகோல் உண்டு கூறுகிறார் பிரதமர் ரணில்
 
 
தமிழர்களுடனான  அதிகாரப் பகிர்வுக்கு அளவுகோல் உண்டு  கூறுகிறார் பிரதமர் ரணில்
 
தமிழர்களுடனான அதிகாரப் பகிர்வு சம்பந்தமான இணக்கப்பாட்டுக்கு கட்டாயம் ஒரு அளவு இருக்கின்றது. இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  
 
இந்தியாவின் 'தஹிந்து' ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
 
அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு அளவுகோல் இருக்கின்றதா ? என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பிரதமர், இணக்கத்துக்கு அளவுகோல் இருக்கத்தான் வேண்டும். இந்த விடயம் தொடர்பில் மாகாண முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆளுநர்களுடன் கதைத்து ள்ளோம். மேலும் கொழும்பு அரசுக்கும் - மாகாணத்துக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு எப்படி இருக்கவேண்டும் என்று ஆராய்வதற்கு மூவர் அடங்கிய உப குழுவை நியமித்துள்ளோம். 
 
மேலும், தமிழ்க் கட்சிகள் குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரப் பகிர்வு விடயத்தில் காத்திரமான பங்களிப்பைச் செய்கின்றது. எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் இறங்கியுள்ளோம். இதுவும் நல்லதுதான். 
புதிய அரசமைப்பில் அரசின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பது பெரிய பிரச்சினையாக இருக்காது என்று நான் நினைக்கின்றேன். எவ்வளவோ பிரச்சினைக்குரிய விடயங்களைத் தீர்த்துள்ளோம். 
 
புதிய அரசமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் விவாதம் நடைபெறும். இந்தக் காலப் பகுதியில் வழி நடத்தல் குழுவின் அறிக்கை சமர்பிக்கப்படும் - என்றார்
 
  • தொடங்கியவர்

தமிழர் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண வேண்டும் என்­பதை அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர்

Ranil2000-1d61d6a8d80fbe38c18aa9c078c0799589cfec12.jpg

 

 பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தன்னால் தலை­மை­தாங்கி வழி­ந­டத்திச் செல்­லப்­படும் தேசிய அர­சாங்கம் சிறந்த இலக்­கொன்றில் பய­ணிப்­ப­துடன் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து திட­மான அர­சியல் மற்றும் பொரு­ளா­தார ஆதா­யங்­களை மேற்­கொண்­டுள்­ள­தாக நம்­பிக்­கை வெளி­யிட்­டுள்ளார்.

பிர­த­மரின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­ல­மான அலரி மாளி­கையில் 'தி ஹிந்து' ஊட­கத்­துக்கு அண்­மையில் அளித்த விசேட செவ்­வியின் போதே அவர் இவ்­வாறு நம்­பிக்­கையை வெளி­யிட்­டுள்ளார்.

அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தத்­தி­னூ­டாக முன்­னெ­டுக்­கப்­படும் திட்டம் வெற்­றி­க­ர­மாக அமை­ய­வுள்­ளது எனவும் அந்த செயற்­கி­ர­மத்தின் அங்­க­மாக தமி­ழர்கள் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பதை அடிப்­ப­டை­யாகக் கொண்ட நிரந்­தர அதி­கார கைமாற்­றத்­திற்கு உரிய இடம்­கொ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் பிர­தமர் கூறினார்.

மேற்­படி பரந்­த­ள­வான பேட்­டியின் போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சியல் அபி­வி­ருத்­திகள், பொரு­ளா­தாரம் அதி­கார கைமாற்றம், தமி­ழர்கள் பிரச்­சினை, இலங்கை – இந்­திய உற­வுகள், வேறு சில சர்­வ­தேச விவ­கா­ரங்கள் மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் அர­சியல் எதிர்­காலம் என்­ப­ன­வற்றை உள்­ள­டக்­கியும் மேலோட்­ட­மாக தொட்டும் உரை­யா­டி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதன்­போது தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் அணு­கு­முறை குறித்து அவர் பாராட்­டு­களைத் தெரி­வித்தார். அவர்­க­ளது அணு­கு­முறை ஆக்­க­பூர்­வ­மா­ன­தா­கவும் நேர்­ம­றை­யா­ன­தா­கவும் உள்­ள­தாக அவர் கூறினார்.

பல்­வேறு முத­ல­மைச்­சர்கள் மற்றும் ஏனை­ய­வர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டல்கள் மூலமே இது தொடர்பில் குறிப்­பி­டத்­தக்க அபி­வி­ருத்தி நிலையை எட்ட முடியும் எனவும் தமிழர் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட வேண்­டிய தேவையை அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர் எனவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

இந்­நி­லையில் அதீத தேசி­ய­வாத போக்கு தோர­ணையை வெளிப்­ப­டுத்தி நாடு ஆபத்­தி­லுள்­ள­தாக கூச்­ச­லிடும் எதிர்க்­கட்­சி­யினர் தொடர்பில் பிர­த­ம­ரிடம் வின­வப்­பட்ட போது, “ நாங்கள் அனை­வரும் தேசா­பி­மா­னி­க­ளா­க­வுள்ளோம். நாங்கள் அனை­வரும் தேசி­ய­வா­தி­க­ளா­கவும் உள்ளோம். அதனால் மேற்­படி கூச்­ச­லி­டு­ப­வர்கள் எவ­ரையும் கையாள்­வதில் எமக்குப் பிரச்­சினை இல்லை. மக்கள் அதை ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டார்கள் என்­பதை அவர்கள் கண்­ட­றி­வார்கள். நாட்டின் போக்கு மற்றும் ஏனைய பிரச்­சி­னைகள் என்­பன தொடர்பில் அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வகையில் நாம் தீர்­மானம் எடுக்க வேண்­டி­யுள்­ளது. ஏனெனில் நாங்கள் அர­சி­யல்­வா­திகள்" என ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்குள் ராஜபக் ஷவிற்கு ஆத­ர­வான குழு­வி­ன­ருக்கும் மைத்­திரிபால சிறி­சே­ன­விற்கு ஆத­ர­வான குழு­வி­ன­ருக்­கு­மி­டையே நிலவும் பிளவு குறித்தும் ராஜபக் ஷ திரும்ப ஆட்­சிக்கு வரும் சாத்­தியம் குறித்தும் பிர­த­ம­ரிடம் வின­வப்­பட்ட போது, தனது மதிப்­பீட்டின் பிர­காரம் ராஜபக் ஷவைச் சுற்­றி­யுள்ள குழு­வினர் எதிர்­க்கட்­சியில் அமர்ந்­துள்­ளதால் அவர்­களால் அதி­க­ளவில் பிரச்­சினை இல்லை எனவும் அதனால் முன்னாள் ஜனா­தி­பதி மீளவும் ஆட்­சிக்கு வரு­வது சாத்­தி­ய­மில்லை எனவும் அவர் கூறினார்.

இரு பிர­தான கட்­சி­களும் ஒன்­றாக பணி­யாற்றி வாக்­கு­று­திகள் மற்றும் கொள்­கை­களில் உரிய விளைவைத் தரு­வதைப் பார்க்க மக்கள் விரும்­பு­கி­றார்கள் என்­பதைத் தவிர வேறு ஒன்­று­மில்லை எனக் குறிப்­பிட்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எமது கொள்­கைகள் வெற்­றி­பெறும் போது மஹிந்த ராஜபக் ஷ ஒரு தோல்­வி­யடைந்­தவர் என்­பதை மக்கள் உணர்ந்து கொள்­வார்கள். எனினும் அது­வரை நீங்கள் உங்­களின் ஒரு பக்­கத்தில் முள் ஒன்­றுடன் இருக்க வேண்­டி­யி­ருக்கும். அதனை எமது அர­சியல் கட்­சியினர் கையா­ளக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருப்­பார்கள் என நான் நினைக்­கிறேன்" எனவும் அவர் தெரி­வித்தார்.

இதன்­போது பிர­தமர் தற்போது கலந்துரையாடலில் உள்ள இந்தியாவுடனான பொருளாதார கூட்டு  றவு உடன்படிக்கையை எதிர்வ ரும் ஆண்டில் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முடிவு செய்வதற்கு மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியி ருந்ததாக 'தி ஹிந்து' கூறுகிறது. அத்துடன் இந்தியாவுடனான- விசேடமாக அந்நாட்டின் 5 தென் மாநிலங்களுடனான பரஸ்பர உறவுகள் மற்றும் பொருளாதார கூட்டுறவு தொடர்பிலும் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையா டியுள்ளார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-17#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.