Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை - மலேஷியாவுக்கிடையில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்து

Featured Replies

இலங்கை - மலேஷியாவுக்கிடையில் ஐந்து உடன்படிக்கைகள்  கைச்சாத்து

(கோலாலம்பூரிலிருந்து ரொபட் அன்டனி)

இலங்கைக்கும் மலேஷியாவுக்கும் இடையில் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாசார துறைகைளில்  ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. 

d1.jpg

இளைஞர்  ஒத்துழைப்பு,    சுற்றுலாத்துறை, விவசாயம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு கலாசாரம் ஆகிய துறைகளிலேயே குறித்த ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன   மற்றும் மலேஷிய பிரதமர் அப்துல் ரஸ்ஸாக் ஆகியோர் முன்னிலையில்  இரண்டு நாடுகளினதும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த  உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டனர். 

http://www.virakesari.lk/article/14449

  • தொடங்கியவர்

இலங்­கை–மலே­ஷி­யா­வுக்கிடையில் ஐந்து உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்து

p8-0880dae71047522ae778b59c4a2863120d8e0934.jpg

 

(கோலா­லம்பூ­ரி­லி­ருந்து ரொபட் அன்­டனி)

இலங்­கைக்கும் மலே­ஷி­யா­வுக்கும் இடை யில் பொரு­ளா­தாரம், வர்த்­தகம் மற்றும் கலா­சார துறை­களில் ஐந்து உடன்­ப­டிக்­கைகள் நேற்று கைச்­சாத்­தி­டப்­பட்­டன.  உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற் ­கொண்டு மலே­ஷியா வந்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று மலே­ஷிய பிர­தமர் அப்துல் ரஸ்­ஸாக்கை  சந்­தித்து இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதன் பின்­னரே இந்த ்ஐந்து உடன்­ப­டிக்­கைளும் கைச்­சாத்­தி­டப்­பட்­டன.  

இளைஞர் ஒத்­து­ழைப்பு, சுற்­று­லாத்­துறை , விவ­சாயம், வௌிநாட்டு வேலை­வாய்ப்பு கலா­சாரம் ஆகிய துறை­க­ளி­லேே்ய ஐந்து உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­பட்­டன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் மலே­ஷிய பிர­தமர் அப்துல் ரஸ்ஸாக் ஆகியோர் முன்­னி­லையில் இரண்டு நாடு­க­ளி­னதும் அமைச்­சர்கள் மற்றும் அதி­கா­ரிகள் இந்த உடன்­ப­டிக்­கை­களில் கைச்­சாத்­திட்­டனர்.  

இளைஞர் ஒத்­து­ழைப்பு,

இளைஞர் ஒத்­து­ழைப்பு தொடர்­பான உடன்­ப­டிக்­கையில் வௌிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர மற்றும் மலே ஷிய வௌிவி­வ­கார அமைச்சர் ஆகியோர் கைச்­சாத்­திட்­டனர்.

சுற்­று­லாத்­துறை

சுற்­று­லாத்­துறை குறித்த உடன்­ப­டிக்­கையில் வௌிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர மலே­ஷிய சுற்­று­லாத்­துறை அமைச்சர் ஆகியோர் கைச்­சாத்­திட்­டனர்.

விவ­சாயம்,

இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான விவ­சா­யத்­துறை தொடர்­பான உடன்­ப­டிக்­கையில் மலே­ஷி­யா­வுக்­கன இலங்கை உயர்­அர ஸ்தானிகர் இப்­ராஹிம் அன்சார் மற்றும் மலே­ஷிய நிறு­வனம் ஒன்றின் உயர் அதி­காரி ஆகியோர் கைச்­சாத்­திட்­டனர்.

வௌிநாட்டு வேலை­வாய்ப்பு

வௌிநாட்டு வேலை­வாய்ப்பு விடயம் தொடர்­பான உடன்­ப­டிக்­கையில் பிர­தி­ய­மைச்சர் மனுஷ்ய நாண­யக்­கார மற்றும் மலே­ஷி­யாவின் வௌிநாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் ஆகியோர் கைச்­சாத்­திட்­டனர்.

கலா­சாரம்

இலங்கை மற்றும் கலா­சார விட­ய­தானம் தொடர்­பான உடன்­ப­டிக்­கையில் இலங்­கையின் சார்பில் பிர­தி­ய­மைச்சர் பாலித்த தெவ­ரப்­பெ­ரும கைச்­சாத்­திட்டார். 

இது இவ்­வாறு இருக்க மலே­ஷி­யா­வுக்கு உத்­தி­யோ­க­புர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கோலா­லம்­புரில் இரண்டு நாடு­க­ளி­னதும் வர்த்­தக பிர­தி­நி­தி­களின் பங்­கேற்­பு­ட­னான வர்த்­தக மாநாடு நேற்று முன்­தினம் நடை­பெற்­றது.  

இந்த வர்த்­தக மாநாட்டில் இலங்கை முத­லீட்டு சபையின் தலைவர் ஏற்­று­மதி அபி­வி­ருத்தி சபையின் தலைவர் மற்றும் அர­சாங்­க­ததின் வர்த்­த­கத்­துறை சார்ந்த உயர் அதி­கா­ரிகள் என பலர் கலந்­து­கொண்­டனர். அத்­துடன் மலே­ஷ­யாவின் வர்த்­தக பிர­மு­கர்கள் அரச நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பலரும் இந்த வர்த்­தக மாநாட்டில் கலந்­து­கொண்­டனர் 

மேலும் இந்த வர்த்­தக மாநாட்­டின்­போது இரண்டு நாடு­க­ளி­னதும் வர்த்­தக பிர­தி­நி­திகள் மட்­டத்­தி­லான நேருக்கு நேர் இரு­த­ரப்பு சந்­திப்­புக்­களும் பேச்­சு­வார்த்­தை­களும் நடை பெற்­றன. இதில் உரை­யாற்­றிய மலே­ஷி­யாவின் சர்­வ­தேச வர்த்­தக அமைச்சர் முஸ்தபா மொஹம்மட் இலங்கையில் தற்போது பாரிய மாற்றங்கள் இடம்பெறுகின்றன. இலங்கையானது அடுத்த ்நிலைக்கு செல்கின்றது என்று கூறலாம். இலங்கையின் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. அதனை மலேஷிய வர்த்தகர்கள் பயன்படுத்தவேண்டும். எனது நாட்டின் வர்த்தகர்களை நான் ஊக்குவிக்கின்றேன் என்று குறிப்பிட்டிருந்தார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-17#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.