Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் எதிர்நோக்கும் நெருக்கடி

Featured Replies

அரசாங்கம் எதிர்நோக்கும் நெருக்கடி

 

முன்­னைய ஆட்­சியில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராகக் கிளர்ந்து எழுந்து வன்­செ­யல்­களில் ஈடு­பட்­டி­ருந்த பௌத்­த­வாத கடும்­போக்­கா­ளர்­களின் மத­வாதச் செயற்­பா­டு­களை இந்த அர­சாங்­கமும் ஊக்­கு­விக்­கின்­றதோ என்று சந்­தே­கப்­படும் அளவில் பொது­பல சேனா அமைப்பின் செயற்­பா­டுகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அந்த அமைப்பைப் பின்­பற்றி வேறு சும­ண­ரத்ன தேரர் போன்ற சில பௌத்த மத­கு­ரு­மார்­களும் மத­வாதச் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வதை அர­சாங்கம் கண்டு கொள்­ளாமல் இருப்­பது முஸ்லிம் மக்­களை அதி­ருப்­தி­ய­டை­ய­வும், ஆத்­தி­ர­ம­டை­யவும் செய்­தி­ருக்­கின்­றது. இதனால் முஸ்லிம் மக்­களும் இந்த அரசாங்­கத்தைச் சந்­தே­கத்­தோடு நோக்க வேண்­டிய சூழல் உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

நல்லாட்சி அர­சாங்கம் நெருக்­க­டி­களை நோக்கிப் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கின்­றதா என்ற  சந்­தே­கத்தை இப்­போ­தைய அர­சியல் நிலை­மைகள் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.  ஜன­நா­ய­கத்­தையும், நாட்டு மக்­களின் சுதந்­தி­ரத்­தையும் கேள்­விக்கு உள்­ளாக்­கத்­தக்க வகையில் முன்­னைய ஆட்சி அதி­கா­ரங்­களை துஷ்­பி­ர­யோகம் செய்­தது மட்­டு­மல்­லாமல், மிக மோச­மான ஊழல் செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுத்­தி­ருந்­தது. 

இதனால், மோச­மான யுத்­தத்தில் வெற்­றி­ய­டைந்து, உயிர் அச்சுறுத்தல்கள் நிறைந்­தி­ருந்த ஒரு சூழலில் இருந்து நாட்டைக் காப்­பாற்­றி­ய­மைக்­காக முன்­னைய அர­சாங்­கத்தின் மீது சிங்­கள மக்கள் பெரு மதிப்பு கொண்­டி­ருந்த போதிலும், ஜன­நா­யக விரோத நட­வ­டிக்­கை­களை அவர்­களில் ஒரு பகு­தி­யினர் ஏற்றுக் கொண்­டி­ருக்­க­வில்லை. 

இதன் கார­ண­மா­கவே ஜன­நா­யகத்தின் மீது மதிப்பும், விருப்பும் கொண்­டி­ருந்த சிவில் அமைப்­புக்கள், அர­சியல் தலை­வர்கள், அர­சியல் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து நாட்டில் ஓர் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. 

ஆயினும் நல்­லாட்சி அர­சாங்­கமும், முன்­னைய ஆட்­சியின் போக்­கி­லேயே பய­ணிக்­கின்­றதோ என்ற சந்தேகத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் அத­னு­டைய பல நட­வ­டிக்­கைகள் அமைந்­தி­ருக்­கின்­றன. இது நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்ந்து மக்கள் மத்­தியில் செல்­வாக்கு பெற்று நிலைத்­தி­ருக்­குமா என்ற கேள்­வியை எழுப்­பி­யி­ருக்­கின்­றது.

மத்­திய வங்­கியின் ஆளுநர் மீதான ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள், பெரும் தொகை­யி­லான நிதி மோச­டி­களில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் தொடர்பில் நட­வ­டிக்கை எடுத்த லஞ்ச ஒழிப்பு ஆணைக்­கு­ழுவின் நட­வ­டிக்­கைகள் அரச தலை­வர்­க­ளினால் விமர்­ச­னத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்­டமை, குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­மைக்­காக விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட கடற்­படைத் தள­ப­திகள் நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்­ட­மைக்­காக அதி­ருப்தி வெளி­யிட்­டமை போன்ற விட­யங்கள் ஊழல்­களை ஒழிப்போம் என்று உறு­தி­ய­ளித்து ஆட்­சிக்கு வந்­த­வர்கள், ஊழல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு இட­ம­ளித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்­களே என்று பல தரப்­பி­னரும் அதி­ருப்தி அடைந்த நிலை­மையை ஏற்­படுத்தியிருந்தது. 

அதே­நேரம் நல்­லாட்சி அர­சாங்கம் தமது பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்கும் என எதிர்­பார்த்­தி­ருந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களும் தமது எதிர்­பார்ப்­புக்கள் நிறை­வேற்­றப்­ப­டாத கார­ணத்­தினால் ஏமாற்­றத்­திற்கு உள்­ளா­கி­யி­ருப்­ப­தையும் காண முடி­கின்­றது.

அதே­வேளை, நாட்டில் நல்­லி­ணக்­கத்தை அர்த்­த­முள்ள வகையில் ஏற்­ப­டுத்தி நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்டும் வகையில் வடக்கு, கிழக்கில் இருந்து இரா­ணு­வத்தைக் குறைத்தல், இரா­ணுவம் கைப்­பற்­றி­யுள்ள பொது­மக்­களின் காணி­களைக் கைவிட்டு, இடம்­பெ­யர்ந்­துள்ள அந்தக் காணி­களின் உரி­மை­யா­ளர்­க­ளான மக்கள் சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யே­று­வ­தற்கு உரிய துரி­த­மான நட­வ­டிக்­கை­களை எடுத்தல்,  சிறைச்­சா­லை­களில் உரிய விசா­ர­ணை­க­ளின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­வித்தல், காணாமல் போயுள்­ள­வர்­க­ளுக்கு உரிய பொறுப்பு கூறுதல், வித­வை­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்­டுள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்­பங்­களின் வாழ்க்­கையை மேம்­ப­டுத்தல், மாற்­றுத்­தி­ற­னா­ளி­களின் புனர்­வாழ்வு போன்ற பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பதில் அர­சாங்கம் காட்டி வரு­கின்ற அச­மந்தப் போக்­கினால் தமிழ் மக்கள் ஏமாற்­ற­ம­டைந்­தி­ருக்­கின்­றார்கள். 

தொடரும் பயங்­க­ர­வாதத்  தடைச்­சட்­டமும் மத­வா­தமும் 

தேசிய பாது­காப்­புக்­காகக் கொண்டு வரப்­பட்ட பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் யுத்த மோதல்கள் இடம்­பெற்ற காலத்தில் குறிப்­பாக தமிழ் மக்­களை இலக்கு வைத்தே முழு­மை­யா­கவும், மோச­மா­கவும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது. இதனை உள்ளூர் மற்றும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும், ஜன­நா­ய­க­வா­தி­களும் கண்டித்தது மட்­டு­மல்­லாமல், அந்தச் சட்­டத்­தையே இல்­லாமல் செய்ய வேண்டும் என்று பல்­வேறு அரங்­கு­க­ளிலும் குரல் கொடுத்து வந்­தனர். 

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் நிறை­வேற்­றப்­பட்ட இலங்­கையின் பொறுப்பு கூற­லுக்­கான பிரே­ர­ணை­யிலும் இந்தச் சட்டம் நீக்­கப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆயினும் அதனை இல்­லாமற் செய்­வ­தற்கு அர­சாங்கம் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­க­ளையும் இது­வ­ரை­யிலும் எடுக்­க­வில்லை. மாறாக சாதா­ரண குற்­ற­வியல் சட்­டங்­களின் கீழ் நட­வ­டிக்கை எடுத்து, கட்­டுப்­ப­டுத்­தப்­படக் கூடிய குற்றச் செயல்­களில் ஈடு­பட்­டார்கள் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­ற­வர்­களைக் கைது செய்­வ­தற்கு, பொலிஸார் இந்தச் சட்­டத்தைப் பயன்­ப­டுத்தி வரு­வதைக் கண்டும் காணாத போக்கில் அர­சாங்கம் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. 

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை அதன் நோக்­கங்­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட வேண்­டி­ய­தொரு தேவை நாட்டில் இல்­லாத போதிலும் அந்தச் சட்­டத்தை அர­சியல் உள்­நோக்­கத்­திற்­கா­கவே அர­சாங்கம் அதனை இன்னும் நடை­மு­றையில் வைத்­தி­ருப்­ப­தாகத் தோன்­று­கின்­றது.

இந்த நோக்கம் என்ன என்­பது தெளி­வாகத் தெரி­யாத போதிலும், தொடர்ந்து அது சாதா­ரண குற்றச் செயல்­களில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளான தமி­ழர்கள் மீது மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது தமிழ் மக்கள் மத்­தி­யிலும் தமிழ் அர­சியல் வட்­டா­ரங்­க­ளிலும் பெரும் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

மறு­பக்­கத்தில் முன்­னைய ஆட்­சியில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராகக் கிளர்ந்து எழுந்து வன்­செ­யல்­களில் ஈடு­பட்­டி­ருந்த பௌத்­த­வாத கடும்­போக்­கா­ளர்­களின் மத­வாதச் செயற்­பா­டு­களை இந்த அர­சாங்­கமும் ஊக்­கு­விக்­கின்­றதோ என்று சந்­தே­கப்­படும் அளவில் பொது­பல சேனா அமைப்பின் செயற்­பா­டுகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அந்த அமைப்பைப் பின்­பற்றி வேறு சும­ண­ரத்ன தேரர் போன்ற சில பௌத்த மத­கு­ரு­மார்­களும் மத­வாதச் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வதை அர­சாங்கம் கண்டு கொள்­ளாமல் இருப்­பது முஸ்லிம் மக்­களை அதி­ருப்­தி­ய­டை­ய­வும், ஆத்­தி­ர­ம­டை­யவும் செய்­தி­ருக்­கின்­றது. இதனால் முஸ்லிம் மக்­களும் இந்த அரசாங்­கத்தைச் சந்­தே­கத்­தோடு நோக்க வேண்­டிய சூழல் உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

சட்டம் என்­பது அனை­வ­ருக்கும் பொது­வா­னது. சட்­டத்தை மீறு­கின்­ற­வர்கள் எவ­ராக இருந்­தாலும் சட்ட நடை­மு­றை­க­ளுக்கு அமைய அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது பொலி­ஸாரின் கட­மை­யாகும்.  ஆயினும் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­திலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்­டு­வ­திலும் பொலிஸார் பொது­மக்­களின் எதிர்­பார்ப்­புக்­க­மைய செயற்­ப­டாத ஒரு போக்கு யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் நல்­லாட்­சியின் கீழும் தொடர்­வது ஆரோக்­கி­ய­மா­ன­தாகத் தெரி­ய­வில்லை.  

சட்­டமும் ஒழுங்கும் ஒழுங்­காக நிலை­நாட்­டப்­ப­டா­மையும், உரிய முறையில் அவற்றை, பொலிஸார் கடைப்­பி­டிக்கத் தவறி வரு­வ­தாலும், பொது­மக்கள் பாது­காப்­பற்ற உணர்­வுக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.  குறிப்­பாக முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக படு­மோ­ச­மான மத­வா­தத்தைக் கிளப்­பியும், இஸ்லாம் மதத்தை நிந்­தித்தும் உரை­யாற்­றியும் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்தும் செயற்­பட்டு வரு­கின்ற பொது­ப­ல­சேனா அமைப்­பி­ன­ரையும், அவர்­க­ளு­டைய போக்கில் ஏனைய பௌத்த பிக்­கு­களும் செயற்­படத் தொடங்­கி­யி­ருப்­பதும், முஸ்­லிம்­களின் பாது­காப்பை கேள்­விக்­கு­றிக்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றது.  

இதனால், முன்­னைய எதேச்­ச­தி­கார ஆட்­சியில் எவ்­வாறு பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டி­ருந்­ததோ, அதற்கு ஒப்­பான நிலை­மை­யி­லேயே இந்த ஆட்­சி­யிலும் தாங்கள் பாது­காப்­பற்ற ஒரு நிலையில் இருப்­ப­தாக முஸ்லிம் மக்கள் உணர்­கின்­றார்கள். இதனால், அவர்கள் தமது எதிர்­காலம் குறித்து பெரிதும் அச்­ச­ம­டைய நேரிட்­டி­ருக்­கின்­றது. 

போதைப்­பொ­ருளின் ஆக்­கி­ர­மிப்பு 

நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லேயே வர­லாற்­றி­லேயே இல்­லாத அள­வுக்கு, போதைப் பொருள் கடத்தல் நட­வ­டிக்­கைகள் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் இடம்­பெற்று வரு­கின் ­றன.  வட­மா­கா­ணத்தில் யாழ்ப்­பா­ணத்தை மைய­மாகக் கொண்டு கேரள கஞ்சா கடத்தல் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றது. இடை­யி­டையே, ஹெரோயின் என்ற மோச­மான போதைப் பொருள் கடத்­தலும் பொலி­சா­ரினால் கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கின்­றது. இதை­விட நாட்டின் தலை­ந­க­ர­மா­கிய கொழும்­புக்கு கப்­பலில் கொண்டு வரப்­பட்ட கொள்­க­லன்­களில் கடத்தி வரப்­பட்ட பெரு­ம­ள­வி­லான ஹெரோயின் பல தட­வை­களில் ஊறு­கொ­ட­வத்த பகு­தியில் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­னரால் கைப்­பற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. அண்­மையில் 700 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான ஹெரோயின் கைப்­பற்­றப்­பட்­டி­ருப்­பது பல மட்­டங்­க­ளிலும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.  

போதைப் பொருள் பாவனை நாட்டில் அதி­க­ரித்­தி­ருப்­பதை மட்­டு­மல்­லாமல், இலங்கை சர்­வ­தேச போதைப் பொருள் கடத்தல் மைய­மாக மாறி­யி­ருப்­ப­தையே இது காட்­டு­கின்­றது. நல்­லாட்சி புரியும் அர­சாங்­கத்தின் கீழ் இத்­த­கைய சமூ­க­வி­ரோதச் செயற்­பா­டுகள் சர்­வ­தே­சத்தின் கவ­னத்தை ஈர்க்­கத்­தக்க வகையில் இடம்­பெ­று­வது நல்­ல­தல்ல. அதனை நல்­லாட்­சிக்­கு­ரிய இலட்­ச­ண­மா­கவும் கருத முடி­யாது.

போதைப் பொருட்­களைக் கடத்தி வரு­ப­வர்கள் பலர் கைது செய்­யப்­பட்டு சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். பலர் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு பிணை­யின்றி நீண்ட நாட்­க­ளாக விளக்­க­ம­றி­யலில் இருந்து வரு­கின்­றார்கள். இருந்த போதிலும் தொடர்ச்­சி­யாக போதைப் பொருட்கள் கடத்தி வரப்­ப­டு­வ­தையே பொலி­ஸா­ரினால் இந்தக் கடத்தல் சம்­ப­வங்கள் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­வதன் ஊடாகத் தெரி­கின்­றது.

வட­ப­கு­தியை பொறுத்த மட்டில் தேவை க்கு அதி­க­மா­ன­ அ­ள­வி­லேயே இரா­ணு­வத்­தினர் நிலை­நி­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். பாது­காப்பு கட­மையில் ஈடு­படும் அவர்கள் பொலி­ஸா­ருடன் இணைந்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்­டு­வ­திலும் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். அதை­விட அவர்­க­ளு­டைய புல­னாய்வு பிரிவைச் சேர்ந்த உத்­தி­யோ­கத்­தர்கள் சுதந்­தி­ர­மாக வெளியில் பல இடங்­க­ளிலும் நட­மாடி வரு­கின்­றார்கள். இதே­போன்­றுதான் கடற்­ப­டை­யி­னரும் வட­மா­கா­ணத்தின் பல இடங்­கிலும் நிலை­கொண்டு செயற்­பட்டு வரு­கின்­றார்கள். ஆயினும் போதைப் பொருள் கடத்தல் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­வதைக் கட்­டுப்­ப­டுத்­தவோ, அல்­லது அந்த நட­வ­டிக்­கை­களைக் குறையச் செய்­யவோ அவர்­களால் முடி­யா­தி­ருக்­கின்­றது. இதுவும் பல தரப்­புக்­களில் அர­சாங்­கத்தின் மீது பல்­வேறு சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. 

பொலிஸார் உட்­பட பாது­காப்புப் படை­யி­னரும் ஏதோ ஒரு வகையில் இந்தக் கடத்தல் சம்­ப­வங்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­பார்­களோ என்ற சந்­தேகம் சாதா­ரண மக்கள் மத்­தியில் இப்­போது அதி­க­மாக தலை­யெ­டுக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றது. இந்த நிலை­மையை நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும் மட்­டத்­திற்கு உயர்ந்து செல்­லாமல் பார்த்துக் கொள்­ள­வேண்­டி­யது அர­சாங்­கத்­தி­னதும், பாது­காப்புப் படைத்­த­ரப்­பி­ன­ரதும் பொறுப்­பாகும். இந்தப் பொறுப்பை அரசு அவ­ச­ர­மாக நிறை­வேற்ற வேண்­டிய ஒரு கட்­டாய நிலைமை படிப்­ப­டி­யாக உரு­வாகி வரு­கின்­றது என்­ப­தையும் இங்கு சுட்­டிக்­காட்ட வேண்­டி­யி­ருக்­கின்­றது. 

அர­சியல் ரீதி­யான நிலை­மைகள். 

இந்த நிலை­மைகள் ஒரு புற­மி­ருக்க, ஒற்­றை­யாட்­சியா, சமஷ்டி ஆட்­சியா அல்­லது தமிழ் முஸ்லிம் மக்­களின் தனித்­து­வத்தை அங்­கீ­க­ரிக்­கின்ற அள­வி­லான அதி­யுச்ச அதி­காரப் பகிர்வா எத்­த­கைய ஆட்சி முறையை உள்­ள­டக்­கி­ய­தாக புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும் என்ற கேள்வி இப்­போது மிகத் தீவி­ர­மாக எழுந்து நிற்­கின்­றது.

தமிழ் தரப்­பினர் சமஷ்டி ஆட்சி முறையை வலி­யு­றுத்தி வரு­கின்ற போதிலும், நாட்டின் இரு பெரும் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசிய கட்­சியும், சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் நாட்டில் ஒற்­றை­யாட்சி முறையே தொடர்ந்து பேணப்­படும் என்று அறு­தி­யிட்டு உறு­தி­யாகத் தெரி­வித்­தி­ருக்­கின்­றன. 

ஆனால் ஒற்­றை­யாட்­சியின் கீழ் வரு­கின்ற தீர்வு எதுவும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது என்ற போக்கில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு கூறி வரு­கின்­றது. இந்த விட­யத்தில் இரு தரப்­புக்கும் இடையில் இணக்­கப்­பாடு எட்­டத்­தக்­கதோர் அர­சியல் சூழ்­நி­லையைக் காண முடி­ய­வில்லை.  புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க வேண்­டிய அவ­சர நிலைமை நாளுக்கு நாள் தீவி­ர­மாக வளர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. 

குறிப்­பாக இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறும் விட­யத்தில், ஐ.நா. மன்­றத்­திடம் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­கான அர­சியல் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­படும் என்ற உறு­தி­மொ­ழி­யையும் அர­சாங்கம் வழங்­கி­யி­ருக்­கின்­றது.

உரிமை மீறல்கள் தொடர்பில் உண்­மையைக் கண்­ட­றிந்து, நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி, உரிமை மீறல் செயற்­பா­டுகள் மீண்டும் நிக­ழாத வகையில் உறுதி செய்­வ­துடன், நடந்­த­வை­க­ளுக்கு நீதியும் நிவா­ர­ணமும் வழங்க வேண்­டிய பாரிய பொறுப்பை நிறை­வேற்ற வேண்­டிய கட்­டாய நிலை­மைக்கு அர­சாங்கம் தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது.

அர­சாங்­கத்தின் ஒப்­பு­த­லுடன் கடந்த வருடம் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­களை 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்­திற்­கி­டையில் அர­சாங்கம் நிறை­வேற்றி முடிக்க வேண்டும்.  ஆனால் உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறு­வ­தற்­கான பொறி­மு­றை­களை உரு­வாக்­கு­வதில் அர­சாங்கம் இன்னும் ஆமை வேகத்­தி­லேயே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்­கான ஆணைக்­குழு விசா­ரணை பொறி­முறை என்­பன குறித்து பூர்­வாங்கச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்ற கட்­டத்தைக் கூட இன்னும் அர­சாங்கம் தாண்­ட­வில்லை. 

காணாமல் போனோரைக் கண்டு பிடிப்­ப­தற்­கான அல­வ­லகம் ஒன்றை அமைப்­ப­தற்­கான சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள போதிலும், அந்த அலு­வ­லகம் இன்னும் முறை­சார்ந்த வகையில் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. அதற்­கு­ரிய வடிவம் குறித்தோ இடம் குறித்தோ தெளி­வான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. 

நடை­பெற்ற பார­தூ­ர­மான சம்­ப­வங்­களை விசா­ரணை செய்­வ­தற்­கான பொறி­மு­றையை உரு­வாக்­கு­வது தொடர்பில் மேலோட்­ட­மான தீர்­மானம் மாத்­தி­ரமே எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அதற்­கு­ரிய கட்­ட­மைப்­புக்­களை உரு­வாக்­கவோ அதற்­கான சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களோ இன்னும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இதனால் யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்டு நிலை­மா­று­கா­லத்தில் நீதி கிடைக்கும் நல்­லி­ணக்கம் உரு­வாக்­கப்­படும், பாதிப்­பு­க­ளுக்கு ஏற்ற வகையில் இழப்­பீடு வழங்­கப்­பட்டு மீண்டும் உரி­மை­களை மீறு­கின்ற செயற்­பா­டுகள் இடம்­பெற மாட்­டாது என்­பதை உறு­தி­ய­ளிக்­கப்­படும் என்று எதிர்­பார்த்­தி­ருப்­ப­வர்கள் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களைச் சந்­தே­கத்­து­டனும் நம்­பிக்­கை­யற்ற விதத்­தி­லுமே நோக்கி வரு­கின்­றார்கள். 

பொறுப்பு கூறும் விட­யத்­திலும், அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்தின் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணும் விட­யத்­திலும் இன்னும் எத்­த­னையோ விட­யங்கள் செய்­யப்­பட வேண்­டி­யி­ருக்­கின்­றன. அவை எல்­லா­வற்­றையும் அர­சாங்கம் மூன்று மாத­கால அவ­கா­சத்­தினுள் செய்து முடிக்­குமா என்­பது சந்­தே­கமே. 

ஏனெனில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் விட­யத்தில் அர­சாங்­கத்தின் இரண்டு பெரும் கட்­சி­க­ளுக்கும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கும் இடையில் ஒறி­றை­யாட்­சியா சமஸ்டி ஆட்­சியா என்ற விட­யத்தில் வெளிப்­ப­டை­யான முறுகல் ஏற்­ப­டு­கின்ற ஒரு சூழல் உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பில் எத்­த­கைய ஆட்சி முறையை உள்­ள­டக்­கு­வது என்­பதைத் தீர்­மா­னிக்க வேண்­டிய தருணம் நெருங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. இந்த நேரத்தில் ஒற்­றை­யாட்­சியா இல்­லையா என்­பது குறித்து தீர்­மா­னிக்க வேண்­டிய நெருக்­க­டி­யான நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. 

ஐ.நா.பிரே­ர­ணையில் ஒப்­புக்­கொள்­ளப்­பட்ட  உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்றி முடிப்­ப­தற்­கு­ரிய 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்­திற்­கி­டையில் இது விட­யத்தில் தீர்க்­க­மான முடிவை எட்ட வேண்­டிய தேவையும் எழுந்து அரசாங்கத்தை அழுத்திக் கொண் டிருக்கின்றது.  

அரசாங்கத்திற்கும் ஆட்சி முறைமை குறித்த விடயத்தில் இணக்கப்பாடு எட்டப்படுவதில் இழுபறி நிலைமைக்கான அறிகுறிகள் வெளிப்படையாகத் தோன்றியிருக்கின்ற அதேவேளை, மாகாண மட்டத்தில் பொலிஸ் மற்றும் காணி விவகாரங்களில் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜேவிபி போர்க்கொடி உயர்த்தியிருப்பது அரசாங்கமும், தமிழ்ததேசிய கூட்டமைப்பும் அதிகாரப் பரவாலக்கல் விடயத்தில் ஓர் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு நிச்சயம் முட்டுக்கட்டையாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். 

அதேவேளை. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்தறி வதற்கான வெகுஜன வாக்கெடுப்பை நடத்தக் கூடாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூறி வருகின்றது. ஐக்கிய தேசிய கட்சி அதற்கு நேர்மாறான ஒரு நிலைப்பாட்டை கோடி காட்டியுள்ள போதிலும், அதிகாரபூர்வமாக அதன் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டள்ளதாகத் தெரியவில்லை. 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தனும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றது.  சிங்கள மக்கள் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அணியினர் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் சிங்கள மக்களுக்கும் நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற வகையில் அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுத்திருக்கின்றனர்.  

எனவே, இத்தகையதோர் அரசியல் சூழலில் அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, சிறுபான்மை இன மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்தல், ஐநா மனித உரிமைகள் பேரவையிடம் பொறுப்பு கூறுவதிலும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணல் ஆகிய விடயங்களில் அளித்த உறுதிமொழிகளை உரிய காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுதல் போன்ற விடயங்களில் மிகுந்த நெருக் கடியான நிலைமைகளையே எதிர்நோக் கியிருக்கின்றது.  இத்தகைய நெருக்கடி நிலைமைகளை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொண்டு சமாளிக் கப் போகின்றது என்பது தெரியவில்லை. 

செல்­வ­ரட்னம் சிறி­தரன்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-17#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.