Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதை மூலமான பேராபத்து; தடுத்து நிறுத்த வேண்டிய தருணம்

Featured Replies

போதை மூல­மான பேரா­பத்து; தடுத்து நிறுத்த வேண்­டிய தருணம்

 

உலகில் போதைப்­பொருள் பாவனை அதி­க­ரித்­துள்ள நாடுகள் எவை என நாம் எட்டிப் பார்த்துக் கொண்­டி­ருக்­கையில், நமது வீட்டின் கோடி­யி­லேயே அவை அதி­க­ரித்து வரு­வது நமக்குத் தெரி­யாமல் இருப்­ப­துதான் ஆச்­ச­ரி­ய­மா­னது. அண்­மைக்­கா­ல­மாக கோடிக்­க­ணக்­கான ரூபா பெறு­ம­தி­யான போதை வஸ்­துக்கள் சூச­க­மான முறையில் கொள்­க­லன்­களில் மறைத்தும் உணவுப் பொருட்­க­ளுடன் சேர்த்தும் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்ட நிலையில் அவை கண்­டு­பி­டிக்­கப்­பட்டு மீட்­கப்­பட்­டுள்­ளன.

அடுத்­த­டுத்து கைப்­பற்­றப்­படும் பெருந்­தொ­கை­யான போதைப் பொருட்­களை பார்க்­கையில் இதுவரை­காலம் போதைப் பொருட்­களை கடத்­து­வ­தற்கு இலங்கை இல­கு­வான மார்க்­க­மாக விளங்­கி­யதா? என்ற கேள்­வியும் கூடவே எழு­கி­றது. ஒரு­சில பண­மு­த­லைகள் இளம் வய­தினர் மத்­தியில் போதை­வஸ்து பழக்­கத்தை ஏற்­ப­டுத்தி அதன் மூலம் அவர்­களின் 'இரத்­தத்தை உறிஞ்சி' தங்கள் வயிற்றை வளர்க்­கி­றார்கள் என்­பதே உண்மை.

இதனால் ஒரு சமு­தா­யமே அழி­வது குறித்து அவர்கள் கிஞ்­சித்தும் சிந்­திப்­ப­தில்லை. அந்த வகையில் இன்று தோன்­றி­யுள்ள இந்தப் பேரா­பத்தை தடுத்து நிறுத்த வேண்­டிய முக்­கிய தரு­ணத்தில் இந்த நாடு உள்­ளது.

கடந்­த­வாரம் கூட 1200 கோடி ரூபா பெறு­ம­தி­யான 800 கிலோ கொக்கெய்ன் போதைப்­பொருள் கொழும்பு துறை­மு­கத்தில் தரித்து நின்ற வெளி­நாட்டுக் கப்­ப­லொன்றில் இருந்து கைப்­பற்­றப்­பட்­டது. இதற்கு முன்­னரும் பல­த­ட­வைகள் பல­கோடி ரூபா பெறு­ம­தி­யான போதைப் ­பொருள்கள் சுங்கப் பிரி­வினர் மற்றும் பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டி­ருந்­தன.

அது­போன்று நாட்­டிற்குள் கடந்த காலங்­களில் பெருந்­தொ­கை­யான கேரள கஞ்சா கடத்தி வரப்­பட்­ட­போது அவை பிடி­பட்­டுள்­ளன. கடந்த 14 ஆம் திகதி திரு­கோ­ண­மலை நிலாவெளியில் வைத்து ஒரு­கோ­டியே 40 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான 140 கிலோ கேரள கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. திரு­கோ­ண­மலை பிராந்­திய போதைப்­பொருள் ஒழிப்புப் பிரி­வி­னரால் இந்த கஞ்சா தொகை கைப்­பற்­றப்­பட்­டது.

சம்­ப­வ­தினம் அதி­காலை 3 மணி­ய­ளவில் வள்ளம் ஒன்றில் நிலா­வெளி 8ஆம் கட்டை கடற்­க­ரைக்கு கொண்டு வரப்­பட்ட கஞ்­சாவை வேன் ஒன்றில் கல்­மு­னைக்கு கொண்டு செல்­வ­தற்கு ஏற்­றிக்­கொண்­டி­ருந்த போது பொலிஸார் அதனைக் கைப்­பற்­றி­ய­துடன் சந்­தே­கத்தின் பேரில் மரு­த­முனை மற்றும் அம்­பாறை பிர­தே­சங்­களைச் சேர்ந்த மூவரை கைது செய்­துள்­ளனர்.

இதற்கு முன்­னரும் கடந்த சில தினங்­களில் யாழ். செம்­மணி மயா­னத்தை நெருங்­கிய பகுதி, பருத்­தித்­துறை குடத்­தனை மயானம் ஆகிய பகு­தி­களில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 60 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான கேரள கஞ்சா பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டது.

 யாழ்ப்­பாணம் - கொட்­டடி மீனாட்சி அம்மன் வீதிப் பகு­தியில் கஞ்சா வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டின் பேரில் 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்­யப்­பட்­ட­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் யாழ்.வட­ம­ராட்சி பகு­தியில் 30 கிலோ கேரள கஞ்­சாவும் யாழ். வட­ம­ராட்சி கிழக்கு உடுத்­துறை, மணற்­காடு ஆகிய பகு­திகளில் 130 கிலோ கேரள கஞ்­சாவும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. இது போன்­ற ­கஞ்சா கைப்­பற்­றப்­பட்ட பல சம்­ப­வங்கள் குறித்து ௬றிக்­கொண்டே போகலாம்.

 வடக்­கு, -­கி­ழக்கு கரை­யோரப் பிர­தே­சங்­களை இலக்­காகக் கொண்டே கேரள கஞ்சா கடத்தி வரப்­ப­டு­கி­றது. முன்னொரு போதும் இல்­லாத அள­வுக்கு தற்­போது வடக்­கு, -­கி­ழக்கு பகு­தி­களில் கேரள கஞ்சா மலிந்து காணப்­ப­டு­கி­றது. இது பல்­வேறு சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

வடக்­கு-­, கி­ழக்கு இளம் சமூ­கத்­தி­ன­ரையும்,மாண­வர்­க­ளையும் இலக்கு வைத்து திட்­ட­மிட்டே அவர்கள் மத்­தியில் கஞ்சா போன்ற போதைப்­பொருள் விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றதா?அல்­லது குறிப்­பிட்ட ஒரு குழு­வினர் இத்­த­கைய சமூக விரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ள­னரா? என்­பதே அந்த சந்­தே­க­மாகும்.

 சிலர் பணம் சம்­பா­திக்கும் பேரா­சை­யுடன் இவ்­வா­றான நாச­கார செயல்­களில் ஈடு­ப­டு­கின்­றனர். இவர்­க­ளுக்கு நாடு, சமூகம், மக்கள் என்ற அனைத்தும் பணத்­திற்குப் பின்னர் தான். பணத்தை மட்டும் குறிக்­கோ­ளாகக் கொண்ட இவர்கள் போதை­வஸ்து விற்­பனை, கடத்தல், கொலை, கொள்ளை போன்ற அனைத்­துக்கும் தயா­ரா­ன­வர்­க­ளா­கவே உள்­ளனர்.

 இது­போன்ற சமூக விரோத தீய­சக்­தி­க­ளுக்கு துணைபோகும் சக்­தி­களும் சமூ­கத்தில் இருக்­கத்தான் செய்­கின்­றன. இவ்­வா­றா­ன­வர்­களே இளை­ஞர்­க­ளுக்­கும் மாண­வர்­க­ளுக்கும் கஞ்­சாவை விநி­யோகிக்­கின்­றனர். இது­போன்ற நபர்­களை அடை­யாளம் கண்டு அவர்­க­ளுக்கு எதி­ராகக் கடும் நட­வ­டிக்கை எடுப்­பது அவ­சி­ய­மாகும். அதே­வேளை, ஒரு­சில மணி நேர இன்­பத்­துக்­காக கஞ்சா மற்றும் போதைப்­பொருள் பாவனைக்கு அடிமையாவோர் இறுதியில் அந்தப் பழக்­கத்­தி­லி­ருந்து மீள­மு­டி­யாமல் வாழ்க்­கையை நர­க­மாக்கிக் கொள்கின்றனர்.­

போதைப்­பொ­ருட்­களை ஒழிப்­ப­தற்கு அர­சாங்கம் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்­து­வ­ரு­கின்­றது. தேசிய போதைப்­பொருள் ஒழிப்புப் பிரி­வினர் கடும் நட­வ­டிக்­கை­களை எடுத்து­வ­ரு­கின்­றனர். அது போலவே சுங்­கப்­பி­ரி­வினர் விமான நிலையம் மற்றும் துறை­முகம் ஆகி­ய­வற்றில் சோத­னை­களை நடத்தி போதைப்­பொ­ருட்­களை கைப்­பற்­று­வ­துடன் அத­னுடன் தொடர்­பு­டைய நபர்­க­ளையும் கைது செய்­கின்­றனர்.

அதே­வேளை, வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து கடல்­மார்க்­க­மாக ஹெரோயின், கஞ்சா போன்ற போதைப்­பொ­ருட்கள் கொண்டு­வ­ரப்­ப­டு­வதை முறி­ய­டிக்க தகுந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். வடக்கு, கிழக்கு கடற்­க­ரை­யோ­ரங்­களில் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை மேலும் அதி­க­ரிக்க வேண்டும்.

இந்­தோ­னே­ஷியா, சவூதி அரே­பியா, ஈரான் போன்ற நாடு­களில் போதைப்­பொருள் கடத்­து­வோ­ருக்கு கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­ப­டு­கி­றது. அதா­வது, குற்றம் நிரூ­பிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு மர­ண­தண்­டனை விதிக்­கப்­ப­டு­கி­றது.

எமது நாட்டில் போதைப்­பொருள் கடத்தும் நபர்கள் சட்­டத்­தி­லுள்ள ஓட்­டையை நன்கு பயன்­ப­டுத்­தி தப்பிக்­கொள்­கின்­றனர். கடந்த காலங்­களில் போதைப்­பொருள் கடத்­தலில் தண்­டனை விதிக்­கப்­பட்ட பலர் சிறை­வா­ச­த்தின் பின்னர் மீண்டும் திரும்பி வந்து 'பழைய' தொழி­லையே செய்­து­வ­ரு­கின்­றனர்.

தண்­டனை பெற்ற சிலர் தமது செல்­வாக்கை பயன்­ப­டுத்தி சிறை­களில் சுக­மாக இருப்­ப­தா­கவும் தகவல் வெளி­யா­னமை குறிப்­பி­டத்­தக்­கது. போதை­ப்பொ­ருளை ஒழிக்க வேண்­டு­மானால் அது தொடர்­பான சட்­டத்தைக் கடு­மை­யாக்க வேண்டும். இதே­வேளை, கடத்­தல்­கா­ரர்கள் மற்றும் போதைப்­பொருள் வியா­பா­ரி­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­படும் போதைப்­பொ­ருள்­க­ளுக்கு என்ன நடக்­கின்­றன? அவை அழித்­தொ­ழிக்­கப்­ப­டு­கின்­ற­னவா என்­ற­தொரு கேள்­வியும் மக்கள் மத்­தியில் எழுந்­துள்­ளது. கைப்­பற்­றப்­படும் போதைப் பொருள்­களை பகிரங்கமாக தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று அரச தொழில் முயற்சி பிரதியமைச்சர் எரான் விக்கிரமரத்ன ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள் ஏதோ ஒரு வழியில் மீண்டும் கடத் தல்காரர்களிடமோ வியாபாரிகளிடமோ சென்றுவிடாமல் அவற்றை தீயிட்டு கொளுத்தவேண்டும் என்ற விடயம் கவனத்திற்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

நாட்டின் இளம் சமூ­கத்தை சீர­ழிக்கும் போதைப்­பொ­ருட்­களை ஒழிப்­ப­தற்கு அரசு எடுக்கும் முயற்­சி­க­ளுக்கு சமூக அமைப்­புக்­களும் பொது­மக்­களும் ஒத்­து­ழைப்பு வழங்­கினால் மட்­டுமே அதனை முற்­றாக ஒழிக்க முடியும். எனவே போதைப்­பொ­ருட்­களை ஒழிப்­ப­தற்கு அனை­வரும் ஒன்­று­பட்டு செயற்­ப­டு­வ­தற்கு திடசங்கற்பம் கொள்ள வேண்டும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-18#page-4

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரையில் 

யாழ் குடாநாட்டில் பொதைவஸ்து மற்றும் மது பாவனை அதிகரித்துக் காணப்படுவதில் அதீத மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு சந்ததி எப்படியெல்லாம் இருக்ககூடாது என்பதற்கான உதாரணமாக யாழ்குடாநாட்டின் தற்போதைய சந்ததியினர் மிக நல்ல உதாரணமாக எதிர்காலத்தில் காட்டக்கூடியவர்களாக இருப்பது எவ்வளவு பெருமையான விடையம்.

தவிர,
 இரண்டாயிரத்து ஒன்பது மே மாதம் வன்னிப்பெருநிலப்பரப்பில் மிகப்பெரிய மனித அவலம் நடந்துகொண்டிருந்தவேளையில் சினிமாப்பட இசையமைப்பளரும் தற்போதைய நடிகருமான விஜை ஆண்டனி சிறீலங்காவின் இராணுவ முகாம்களில் புத்துணர்ச்சி இசை நிகழ்ச்சி நடாத்தி அதை குடாநாடெங்கும் பொதுமக்களுக்கு மேடைபோட்டு நாக்கமூக்கப் பாடல்களை பாடி பரவசமாக்கியபோது சிறீலங்காவின் இராணுவத்தின் கட்டளைப்பீடங்களின் இலக்கங்களைக் கூறி இந்நிகழ்சியை உங்களுக்குப் பெருமையுடன் வழங்குபவர்கள் என கட்டளைப்பீட இலக்கம்கூறியவேளை அதே கட்டளைப்பீடங்களே அதே இனத்தின் இன்னுமொரு பகுதி மக்கள்மீது குண்டுகளைக்கொட்டியது.சிறப்பாக தென்னிந்திய யாழ்ப்பாணத்துச் சம்பந்தி (இளையதளபதி?) விஜையது தாயார் தனது மருமகள் வீட்டுச் சீதனங்களை பார்வையுட்டு ஒழுங்குபடுத்துவதற்காக விஜை ஆண்டனியுடன் வந்து கெட்ட பாட்டுக்குக் கெட்ட ஆட்டம் போட்டது வேறகதை.

அப்படி இருந்தும் எதுவித விவஸ்தையும் இல்லாது அப்பன் ஆத்தை மாமன் மாமி பேரன்பேத்தி இவைபற்றிய வேறுபாடு இல்லாது போய் கெட்டாட்டம் போட்டவர்களே இந்த அற்பங்கள். பத்தாக்குறைக்கு புலிகளை ஒழித்தால் சீக்கிரம் பாதை திறக்கும் சாமான்சட்டு மலியும் இவங்கள் துலையவேண்டும் எனக்கூறியவர்களே அதிகம்.

யாருக்காக இவர்கள் எல்லோரும் அன்று இப்படிக்கூறினார்களோ அதே சந்ததி அவர்கள் கண்முன்னாலேயே சீரளிகின்றதில் எனக்குச் சந்தோசமே.

இவர்களால் இராணுவப்புலனாய்வுத்துறை ஒட்டுக்குழு இவைபோன்றவைகளை மீறி ஒன்றும் செய்யமுடியாதிருந்தது என்பது வேறுவிடையம். சரி மெளனமாக இருந்தவர்கள் இந்த இசைநிகழ்ச்சியில் பங்குபற்றாதிருந்திருக்கலாம். (அதுதானே மெளனமாக யாழ்குடாநாட்டுமக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்திக்கொள்வதில் வல்லவர்கள் எனப்புழகாங்கிதம் அடைபவர்கள்) இந்த விடையத்தில் பங்குகொள்ளாதிருந்து கள்ளமெளனம் காத்திருக்கலாமே. 

இதில் ஒருசிலர்தான் காரணம் என்றால்கூடப் பரவாயில்லை எல்லொரும் குற்றவாளிகளே இவர்களுக்கும் புலம்பெயர்தேசத்தில் மக்களிடம் காசு சேர்த்து அதை ஆட்டையைப்போட்டு இப்போ ரெம்பவும் குளுக்ளுப்பாக வாழ்கிறார்களே புலம்பெயர் புலிப்பெயர் சொல்லும் பொறுக்கிகள் இவர்களுக்கும் அவர்களுக்கும் எதுவித வித்தியாசம் இல்லை. 

அதுக்காக எல்லொரும் அழியவேண்டுமெனக்கூறலாமா என நீங்கள் கூறலாம்
கண்ணகிக்குக் கயமை செய்தது பாண்டியன் மாத்திரமே அதற்காக மதுரை நகரம் தப்பிக்கவில்லையே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.