Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம்

Featured Replies

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 26 - “உதவ யாருமின்றி தவிக்கிறோம்!”

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

ஜெயலலிதாவுக்கு ஜெயக்குமார் எழுதிய கடிதம்!எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

‘‘மேகநாதனை சிறையில் அடைப்பதன் மூலம் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து அவருடைய அண்ணன் ஜெயக்குமாரைப் பிரித்துவிடச் சதி நடந்திருக்கிறது.’’ - ஜெயக்குமாரின் உதவியாளர் மேகநாதன், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட போது இப்படித்தான் விமர்சனம் எழுந்தது.

p16a.jpgமேகநாதனை எப்படியும் சிறையிலிருந்து வெளியில் எடுத்துவிட வேண்டும் எனப் போராடிக் கொண்டிருந்தார் ஜெயக்குமார். போயஸ் கார்டனை தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனார். ஒரு கட்டத்தில் ஜெயக்குமார் வீட்டின் டெலிபோன் இணைப்பே (தொலைபேசி எண் 444987) துண்டிக்கப்பட்டது. ஆனாலும் சளைக்காமல் வெளியே போய் போனில் பேசினார். கார்டனிலிருந்து நோ ரெஸ்பான்ஸ். ‘‘முதல்வரின் அண்ணன் பேசுகிறேன். அவசரமான விஷயம். முதல்வரிடம் பேச வேண்டும்’’ என ஒரு முனையில் ஜெயக்குமாரின் கதறல் கேட்டும் எதிர்முனையில் பதிலே இருக்காது. மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டால், ‘‘தகவலைச் சொல்கிறோம்’’ என்பார்கள். அடுத்தடுத்து பேசினால், ‘‘முதல்வரிடம் சொல்லிவிட்டோம். அவர்கள் எதுவும் சொல்லவில்லை’’ எனச் சொல்வார்கள். போயஸ் கார்டனுக்கு நேரில் போனபோதுகூட தங்கையைச் சந்திக்க முடியவில்லை. இப்போது தீபாவுக்கு ஏற்பட்ட நிலைதான் அன்றைக்கு அவரது அப்பா ஜெயக்குமாருக்கும் ஏற்பட்டது.

எல்லா முயற்சியும் அடைபட்ட நிலையில் கடைசியில் தங்கைக்குக் கடிதம் எழுதினார். ‘ஜெ.ஜெயக்குமார் BA, சந்தியா இல்லம், 9 சிவஞானம் ரோடு, தியாகராய நகர், சென்னை - 17’ என்ற முகவரியுடன் கூடிய தனது லெட்டர் பேடில் ஜெயக்குமார் விரிவாகக் கடிதம் ஒன்றை எழுதி அதை கார்டனுக்கு பேக்ஸ் அனுப்பினார். ஜெயலலிதாவை ‘அம்மு’ என்று ஜெயக்குமாரும், ஜெயக்குமாரை ‘பாப்பு’ என்று ஜெயலலிதாவும் அழைப்பார்கள். 1993-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதியிட்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது என்ன?    

p16b.jpg

பிரியமுள்ள அம்மு!

நீ நலமாய் இருப்பாய் என நம்புகிறேன். நானும் என் குடும்பமும் பெரிய சிக்கலில் இருக்கிறோம். உன்னுடன் தொலைபேசியில் பேசுவதற்காக மூன்று வாரங்களாக முயற்சி செய்கிறேன். நடந்தவை எதுவுமே எங்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்தவரையில் மேகநாதன் குற்றவாளி கிடையாது. அவன் அப்பாவி. அடுத்து என்ன நடக்கும் என புரியாமல் பீதியில் நாங்கள் உள்ளோம். என்னுடைய இந்த வேண்டுகோளுக்கு நீ செவிசாய்த்து, மேகநாதனை விடுவிப்பாய் என நம்புகிறேன். எதற்கும் நான் மேகநாதனையே சார்ந்திருக்கிறேன். எனக்கு மேனேஜர், உதவியாளர், டிரைவர் எல்லாமே அவன் ஒருவன்தான். கடந்த மூன்று வாரங்களாக எனக்கு உதவ யாருமின்றி தவித்து வருகிறேன். உன்னைச் சந்திக்கும் எல்லா வழிகளும் அடைபட்டுவிட்டன. வேறு வழில்லாமல்தான் கடைசி முயற்சியாக இந்தக் கடிதத்தை உனக்கு ஃபேக்ஸ் செய்கிறேன். என் வேண்டுகோளை நீ மதிப்பாய் என நம்புகிறேன். நன்றி!

உன் அன்புள்ள பாப்பு (ஜெயக்குமார்)

p16c.jpg

‘‘பல முயற்சிகள் எடுத்துவிட்டேன். அம்முவுடன் பேச முடியவில்லை. கடைசியாக ஒரு கடிதம் அம்முவுக்கு எழுதியிருக்கிறேன். அது அவளிடம் போய்ச் சேர்ந்தால் போதும். எங்கள் குடும்பம் இப்படி தவிப்பது தங்கைக்குத் தெரிந்தால் நிச்சயம் உதவி செய்ய ஓடோடி வருவாள்!” என தனது உறவினர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஜெயக்குமார். இந்தக் கடிதம் போயஸ் கார்டனைத் தொட்டது. கிடைக்க வேண்டியவர்கள் கையில் போய் சேர்ந்தது. அவர் ஜெயலலிதா அல்ல. சசிகலா.

குடும்பத்துக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் அதைக் கடிதமாக எழுதி முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைப்பார் ஜெயக்குமார். அந்தக் கடிதத்தை மேகநாதன்தான் கார்டனுக்கு எடுத்துப் போவார். அப்படி கடிதத்தைக் கொண்டு போனவரையே ‘காப்பாற்றுங்கள்’ என கெஞ்சும் நிலைக்கு போனது சூழல். போயஸ் p16.jpgகார்டனுக்குள் சகஜமாக போய் வந்து கொண்டிருந்த மேகநாதனுக்கு திடீரென பிரேக் விழுந்தது. கார்டனில் வேலை பார்க்கிற யாரையாவது வெளியிடங்களில் சந்திக்க நேரிட்டால் ஜெயக்குமார் குடும்பத்தினரை பற்றிய தகவல்களை அவர்களிடம் சொல்லி, முதல்வரிடம் சேர்க்கச் சொல்லி வந்தார் மேகநாதன். இது கார்டனில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மேகநாதன் கைதாவதற்கு முன்பு மீன் வளர்ப்புப் பண்ணை ஒன்றை ஆரம்பித்திருந்தார் ஜெயக்குமார். இதில் மேகநாதனை ஜெயக்குமார் சேர்த்துக் கொண்டார். மேகநாதனுக்கு மீன் பண்ணை வைப்பதற்கு எப்படி பணம் வந்தது என்கிற ரேஞ்சில் கார்டன் தரப்பு விசாரணையில் இறங்கியது. இதன் தொடர்சியாகத்தான் அவர் கைது செய்யப்பட்டார் எனப் பேச்சுகள் கிளம்பின.

ஜெயக்குமாரின் தி.நகர் வீட்டுக்கும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனுக்குமான ‘லிங்க்’கை ஏற்படுத்தும் மேகநாதனை ‘கட்’ செய்துவிட நினைத்தார்கள். அதன் எதிரொலிதான் மேகநாதன் வளைக்கப்பட்டது. இதையும் தாண்டி இன்னொரு காரணமும் உண்டு. இப்போது ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’யை ஆரம்பித்து அரசியலில் குதித்திருக்கும் தீபாதான் அந்தக் காரணம். அப்போது ப்ளஸ் 2 படித்துக் கொண்டிருந்த தீபா என்ன செய்தார்?

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

 

  • Replies 79
  • Views 26.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 27 - திகுதிகு தீபா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

p36a.jpgஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக் குமாரின் குடும்பம் கார்டனிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதற்கும், ஜெயக்குமாரின் உதவியாளர் மேகநாதன் மீது கஞ்சா வழக்கு பாய்ந்தற்கும் மையப்புள்ளி தீபா.

ஜெயக்குமார் மீது சசிகலா குடும்பத்துக்கு வெறுப்பு வரக்காரணமே ஜெயக்குமாரின் மகள் தீபாதான்! ஜெயக்குமார் குடும்பம் போயஸ் தோட்டத்தில் இருந்தபோது ‘செல்லப் பெண்’ணாக வலம் வந்தார் தீபா. அவரின் துடுக்குத்தனமும் குறும்பும் ஜெயலலிதாவுக்கு ரொம்பவே பிடிக்கும். ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்ததால் சசிகலா ஆட்களால், தீபா தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டார். சசிகலா குடும்பத்தினரை தீபா சட்டை செய்யவில்லை. தீபா மீது ஜெயலலிதா அளவு கடந்த பாசம் வைத்திருந்ததும் சசிகலாவுக்கு எரிச்சலை உண்டாக்கியது.

தி.நகர் வீட்டுக்கு வந்தபிறகும், போயஸ் கார்டனுக்கு அடிக்கடி போய்வந்து கொண்டிருந்தது ஜெயக்குமார் குடும்பம். அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். மேகநாதன் கைது செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பும், இப்படித்தான் ஜெயக்குமார் குடும்பம் கார்டனுக்கு போயிருந்தது. ஹைதராபாத் வீட்டில் சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு, ஜெயலலிதா கார்டன் திரும்பியிருந்தார். அந்த நேரத்தில்தான் ஜெயக்குமாரின் பிள்ளைகள் தீபா, தீபக் போயிருந்தனர். அவர்களுடன் ஜெயலலிதா வழக்கம் போலவே கொஞ்சிப் பேசிக்கொண்டிருந்தார். தீபாவை ‘டார்லிங்’ என்றுதான் ஜெயலலிதா அழைப்பது வழக்கம். அன்றைக்கும் அப்படித்தான் தீபாவுடன் பேசிக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. தீபா, தீபக் ஆகியோரிடம் ஜெயலலிதா, ‘‘உங்களுக்கு ஹைதராபாத்திலிருந்து நிறைய டிரஸ்கள் வாங்கிட்டு வந்திருக்கேன். எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு பேரும் நன்றாகப் படித்து வெளிநாட்டுக்கெல்லாம் போய் சம்பாதிக்க வேண்டும். உங்களுக்கு என்ன தேவையோ அதையெல்லாம் என்னிடம் உரிமையோடு கேட்கலாம். என்ன வேண்டுமானாலும் உங்களுக்குச் செய்து தருவேன்’’ என அவர்களிடம் சொன்னார். இதையெல்லாம் சற்று தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தன, ஒரு ஜோடி கண்கள்.

p36nn.jpg

இந்தச் சம்பவம் நடந்ததற்குப் பிறகுதான் மேகநாதன் மீது ஆக்‌ஷன் பாய்ந்தது. அப்போது தீபா, ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த சின்னப் பெண். மேகநாதன் கைது விவகாரம் தீபாவுக்கும் தெரியவந்தது. பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின. ‘‘உங்க ஃபேமிலிக்கும் சி.எம்-முக்கும் என்ன சண்டை? உங்க பேரெல்லாம் பேப்பர்ல வருதே’’ என ஸ்கூலில் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதனால் சில நாட்கள் பள்ளிக்கு அவர்கள் செல்லவில்லை.  ‘‘என்னிடமும் தீபக்கிடமும் எங்க அத்தை கொஞ்சிப் பேசாமல் இருந்திருந்தால் இந்த நிலைமை எங்களுக்கு வந்திருக்குமா? இவ்வளவு கஷ்டம் ஏற்பட்டிருக்குமா?’’ என அப்போதே தீபா உறவினர்களிடம் சொல்லி புலம்பினார்.

ஜெயலலிதாவுக்கும் அவரின் அண்ணன் ஜெயக்குமார் குடும்பத்துக்கும் நல்ல தொடர்பு இருந்து வந்தது. முதல்முறை ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில், உறவு அறுபட்டுப்போனது. அந்தக் காலகட்டத்தில்தான் போயஸ் கார்டனில் புது வரவுகளாக சசிகலாவும் அவரின் உறவுகளும் தங்க ஆரம்பித்தனர். ஜெயக்குமாரின் குடும்பத்துக்கும் சசிகலா குடும்பத்துக்கும் சிறுசிறு உரசல்கள் ஏற்பட ஆரம்பித்தன. அதிகாரம் செலுத்திக்கொண்டிருந்த சசிகலா குடும்பத்துக்கு, ஜெயக்குமார் குடும்பத்தைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. குறிப்பாக தீபாவை. காரணம், அவர் ஜெயலலிதா சாயலில் இருந்தது மட்டுமல்ல. இன்னும் வேறுவேறு காரணங்கள்.

சின்னப் பெண்ணாக இருந்த தீபா, போயஸ் கார்டனுக்குப் போனபோதெல்லாம் அங்கே ஜெயலலிதாவைப் போலவே நடை, உடை, பாவனைகளைப் பின்பற்றியிருக்கிறார். ஹேர் ஸ்டைல், கர்ச்சீப்பால் முகத்தைத் துடைப்பது, தொண்டையைச் செருமுவது, விரலால் தலை முடியைக் கோதுவது என அத்தையைப் போலவே ஜாலியாக செய்து காட்டியிருக்கிறார் தீபா. ஜெயலலிதாவின் அறைக்குள் உரிமையுடன் நுழைந்து, பீரோவில் இருக்கும் அவரது உடைகளை எல்லாம் எடுத்துப் பார்த்து அடுக்கி வைப்பார். ‘‘அத்தைக்கு இந்த டிரஸ் நல்லா இருக்கும். ரோஸ் கலர்ல புடவை கட்டலாம்’’ எனத் துடுக்குத்தனமாக பேசிக் கொண்டிருப்பார். ஜெயலலிதாவைப் போலவே ஹேர் ஸ்டைலையும் மாற்றிக்
கொண்டார். இதெல்லாம் பாசத்தின் வெளிப்பாடுதான். இதையெல்லாம் தோட்டத்தில் இருந்தவர்கள் ரொம்ப கூர்ந்து கவனித்தார்கள்.

p36.jpg

இப்படித்தான் ஒரு நாள் போயஸ் கார்டன் வீட்டில் முதல்வர் ஜெயலலிதா அமரும் நாற்காலியில் தீபாவும் அமர்ந்தார். அது, முதல்வர் மட்டுமே அமரும் பிரத்யேக நாற்காலி. அதில் அமர்ந்த தீபா, ஜெயலலிதாவைப் போல போஸ் கொடுத்து அமர்ந்தார். விவரம் அறியாத சின்னப் பெண்ணாக தீபா நடந்துகொண்டதை ஜெயலலிதாவிடம் வேறுமாதிரியாகக் கொண்டு சேர்த்தார்கள். விளைவு? ஜெயக்குமார் குடும்பம் வெளியேற்றப்பட்டது.

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 28 - உள்ளம் கொதித்தது உதடு சிரித்தது!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

ஜெயலலிதாவின் சாயலில் இருப் பதால், ஜெயலலிதாவைப் போலவே இமிடேட் செய்வதால், ‘தீபா, அடுத்த வாரிசு அவதாரம் எடுக் கலாம்’ என அச்சப்பட்டது சசிகலா குடும்பம். சின்னப் பெண்ணாக இருந்த தீபாவுக்கு அப்படியான ‘ஆசை’ இருந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால், சசிகலாவுக்கு ‘அச்சம்’ இருந்தது.

‘ஜெயலலிதா மட்டுமே உட்காரும் ஸ்பெஷல் சோபாவில், அவரைப் போலவே ஸ்டைலாக தீபா உட்கார்ந்திருந்தார்’ என்ற விஷயத்தை ஜெயலலிதாவின் காதுக்கு எப்படிக் கொண்டுபோனார்களோ, தெரிய வில்லை. ஆனால், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் குடும்பத்துக்கு அன்று ஆரம்பித்தது சரிவு.  இந்தச் சம்பவத்துக்கு முன்பாகவே நிறைய விஷயங்கள் நடந்தன. அதில் ஒன்றுதான், நேரு ஸ்டேடியம் திறப்பு விழா.

p32aa.jpg

ஜெயலலிதாவுடன் இருந்த காலத்தில் அவரின் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பத்துக்கு ஏக மரியாதை. முதல்வர் பங்கேற்கும் முக்கியமான நிகழ்ச்சிகளிலெல்லாம் ஜெயக்குமாரின் குடும்பமும் பங்கேற்றது. 1991 - 1996 ஆட்சிக் காலத்தில் பழைய நேரு ஸ்டேடியத்தை இடித்துவிட்டு புதிய ஸ்டேடியத்தை ஜெயலலிதா கட்டினார். திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவுக்கு அண்ணன் குடும்பத்தை அழைத்திருந்தார் ஜெயலலிதா. முதல்வரின் காரைத் தொடர்ந்து ஜெயக்குமாரின் குடும்பத்தினரும் சசிகலா குடும்பத்தினரும் தனித்தனி கார்களில் வந்தார்கள்.

p32.jpgஅந்த விழாவில் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் பங்கேற்றார். முதல்வரும் பிரதமரும் நடுநாயகமாக அமர்ந்திருக்க... பக்கவாட்டில் வி.ஐ.பி-க்கள் வரிசையில் இருந்த சோபாவில் சசிகலாவும், முதல்வரின் அண்ணி விஜயலட்சுமியும் (தீபாவின் தாய்) அடுத்தடுத்து அமர்ந்தனர். இப்படி சசிகலா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருடைய அக்கா வனிதாமணியும் பங்கேற்பார். இந்த நிகழ்ச்சிக்கும் அவர் வந்திருந்தார். சசிகலா பக்கத்தில் தான் வனிதாமணி அமர்வது வழக்கம். மூன்று பேர் அமரக்கூடிய அந்த சோபாவில், சசிகலாவும் விஜயலட்சுமியும் அமர்ந்த பிறகு, அக்கா வனிதாமணிக்காக இடத்தைப் பிடித்திருந்தார் சசிகலா. அப்போது சின்ன பெண்ணாக இருந்த தீபா, சட்டென்று வந்து, இருவருக்கும் நடுவில் உட்கார்ந்துவிட்டார். உள்ளுக்குள் கோபம் கொதித்தாலும், பக்கத்தில் அமர்ந்த தீபாவைப் பார்த்து சினேகமாய் சிரித்தார் சசிகலா. வேறுவழியில்லாமல், பின்னால் இருந்த இருக்கையில் போய் அமர்ந்தார் வனிதாமணி.

நிகழ்ச்சி டி.வி-யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. சசிகலாவுக்கு அருகில் அமர்ந்திருந்த சிறுமி தீபாவையே அடிக்கடி திரையில் காட்டிக்கொண்டிருந்தார்கள். ஸ்டேடியத்தில் இருந்த பிரமாண்ட திரைகளிலும் இந்தக் காட்சி தெரிந்தது. ‘முதல்வரைப் போலவே இருக்கும் இந்தப் பெண் யார்?’ எனப் பலரும் குழப்பத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார்கள். ‘சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கும், அதனால் தான் பக்கத்தில் உரிமையுடன் அமர்ந்திருக்கிறார்’ எனவும் நினைத்துக்கொண்டார்கள். சசிகலா, தன் பக்கத்தில் இருந்த தீபாவிடமும் அவரின் அம்மா விஜயலட்சுமியிடமும் பேசவில்லை. பின்னால் இருந்த வனிதாமணியிடம்தான் தலையைத் திருப்பி பேசிக்கொண்டிருந்தார்.

p32a.jpgஇதன்பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை சில நாட்களிலேயே அண்ணன் குடும்பத்தை கார்டனுக்கு வரச்சொல்லி, நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. அண்ணன் ஜெயக்குமாரிடம், ‘‘உனக்குப் பெண்ணை வளர்க்கத் தெரியவில்லை. அவளைப் பாதுகாப்பு இல்லாமல் டூ வீலரில் பள்ளிக்கு அனுப்புகிறாய். என்னைப் போலவே அவள் நடித்துக் காட்டுகிறாளாம். அவளைக் கண்டித்து வை’’ என உரிமையோடு சொல்லியிருக்கிறார். தீபாவையும் அழைத்து, ‘‘நீ என்னைப் போலவே இமிடேட் செய்கிறாயா? அத்தைக்கு நீ கொடுக்கும் மரியாதை இதுதானா? முதலமைச்சராக இருக்கும் என்னைப் போல நடித்துக் காட்டி கிண்டல் செய்வது நல்லதா?’’ எனக் கேட்டிருக்கிறார்.

‘‘உங்க ஜாடையில் நான் இருப்பதும், உங்களை மாதிரி நடந்து கொள்வதும்தான் நான் செய்த பாவமா? உங்களை எப்படி நான் கேலி செய்வேன். என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? உங்களை முன்பு போல அடிக்கடி சந்திக்க முடிந்தால், எங்களுக்கு வேறு குறையே இருக்காது’’ என அத்தையிடம் அழுதபடியே சொன்ன தீபா, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். பதறிப்போன ஜெயலலிதா, தீபாவைத் தாங்கிப் பிடித்து சோபாவில் கிடத்தியிருக்கிறார்! மெல்ல தீபா கண்விழித்ததும், ‘‘டார்லிங்... உன் மீது இருக்கிற அக்கறையில்தான் உரிமையோடு பேசினேன். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதே. உன் உடம்புக்கு என்ன? கவலைப்படாதே! நல்ல டாக்டரைப் பார்க்க ஏற்பாடு செய்கிறேன்’’ என ஆறுதல் சொல்லியிருக்கிறார். அப்போது தீபாவின் தம்பி தீபக்கும் இருந்தார். அவரை அழைத்து மடியில் உட்காரவைத்த ஜெயலலிதா, ‘‘நீங்க இரண்டு பேரும் எப்போது வேண்டுமானாலும் அத்தை வீட்டுக்கு உரிமையோடு வரலாம். உங்களுக்கு எது தேவையோ, அதை என்னிடம் கேளுங்கள். உங்க இரண்டு பேரையும் வெளிநாடு எல்லாம் அனுப்பிப் படிக்க வைக்க ஏற்பாடு செய்கிறேன்’’ எனச் சொல்லி, இரண்டு பேர் கன்னங்களிலும் முத்தங்களைப் பதித்தார்.

இந்தக் காட்சிகளை எல்லாம் தோட்டத்தில் இருந்தவர்கள் குழப்பத்துடன் கவனித்தனர்!

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 29 - “சசிகலா தொடுத்த பொய் வழக்கு!”

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

‘‘உங்களைப் போலவே தீபா இமிடேட் செய்கிறாள்’’ என ஜெயலலிதாவிடம் ‘வத்தி’ வைத்தப் பிறகுதான் தீபாவை அழைத்து ஜெயலலிதா கண்டித்தார். அப்போது தீபா மயங்கி விழ... சமாதானம்செய்த ஜெயலலிதா, ‘‘நல்ல டாக்டரைப் பார்க்க ஏற்பாடு செய்கிறேன்’’ என வாக்குறுதி கொடுத்தார். ஆனால், அது காப்பாற்றப்படவில்லை. ஜெயலலிதாவுக்கே இது தெரியுமா என்பதுதான் குழப்பம். நாளுக்கு நாள் தன் அண்ணன் ஜெயக்குமார் குடும்பத்துடன் குறிப்பாக தீபாவிடம் ஜெயலலிதா பாசத்தை வளர்த்துக்கொள்வதைத் தடுக்க, திரைமறைவில் போட்ட திட்டம் ‘ஒர்க் அவுட்’ ஆகிக் கொண்டிருந்தது.

p34a.jpg

நேரு ஸ்டேடியம் திறப்பு விழாவில் நடந்த விஷயம் மட்டுமல்ல. அதற்கு முன்பு நடந்த விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஜெயக்குமாரின் குடும்பம் முன்னிலைப்படுத்தப்பட்டதை சசிகலா குடும்பத்தினர் ரசிக்கவில்லை. 1991-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருந்தது அ.தி.மு.க. பிரசாரத்துக்கு வந்த ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுக்கு பலியானார். அனுதாப அலை வீச... அபார வெற்றியைக் குவித்து, முதன்முறையாக ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தார். அடுத்த ஆண்டு, ‘அ.தி.மு.க வீர வரலாற்றின் வெற்றி மாநாடு’ மதுரையில் நடைபெற்றது. 1992-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த அந்த மாநாட்டில்தான் ‘‘ராஜீவ் காந்தியின் ரத்தத்தால் நாங்கள் ஜெயிக்கவில்லை’’ எனச் சொன்னார் ஜெயலலிதா. இந்த மாநாட்டுக்கு ஜெயக்குமாரின் குடும்பமும் வந்திருந்தது. ஜெயக்குமார், அவரின் மனைவி விஜயலட்சுமி, மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சசிகலா குடும்பத்தினரோடு சரிநிகர் சமமாக மாநாட்டில் வலம் வந்தனர். முதல்வரின் அண்ணன் குடும்பம் என்பதால் அவர்களுக்கு மாநாட்டில் ஏக மரியாதை.

இப்படியான மரியாதைகளைத் தொடரவிடுவது எதிர்காலத்தில் ஆபத்து என நினைத்தார் சசிகலா. p34c.jpg‘ஜெயலலிதாவைப் போலவே தீபா இமிடேட் செய்கிறார்’ என திரி கொளுத்திப் போடப் பட்டதால் ஜெயலலிதாவிடமிருந்து ஜெயக்குமார் குடும்பம் பிரிக்கப்பட்டது. ஜெயக்குமாரின் உதவியாளர் மேகநாதன், கார்டனில் இருந்தவர்களோடு நல்ல தொடர்பில் இருந்தார். ஜெயலலிதாவுக்கும் தெரிந்தவர். ஜெயலலிதாவோடு ஜெயக்குமார் குடும்பத்தைச் சேர்க்க மேகநாதன் போராடிக்கொண்டிருந்த நேரத்தில்தான் அவர் மீது கஞ்சா வழக்குப் பாய்ந்தது. மேகநாதனின் மனைவி ரேணுகாதேவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் போட்ட ஹேபியஸ் கார்பஸ் மனுவில்தான் சசிகலாவின் சதி அம்பலமானது. அதில்தான் ‘தமிழக முதல்வரையும் அவரின் சகோதரர் குடும்பத்தையும் சேர்த்து வைக்கும் முயற்சியை என் கணவர் மேகநாதன் செய்துவந்தார். அதை சசிகலா தடுக்கிறார். அதனால்தான் என் கணவர் மீது கஞ்சா வழக்குப் போட்டிருக்கிறார்கள். சசிகலாவின் தூண்டுதலில்தான் இந்த வழக்கு போடப் பட்டிருக்கிறது’’ என ஹேபியஸ் கார்பஸ் மனுவில் குறிப்பிட்டிருந்தார் ரேணுகாதேவி.

ரேணுகாதேவி அப்படி என்னதான் சொல்லியிருந்தார்? ‘‘என் கணவர் சுந்தரேசன் என்கிற மேகநாதன் நீண்ட காலமாக முதல்வரின் சகோதரர் ஜெயக்குமாரின்  தி.நகர் வீட்டில் உதவியாளராக இருக்கிறார். அந்தக் p34cc1.jpgகுடும்பத்தில் ஒருவராகவே அவர் நடத்தப்பட்டு வருகிறார். ஜெயக்குமார் எம்.டி-யாக உள்ள ‘ஜெ.ஜெ. மெரைன் புராடெக்ட்ஸ்’ என்ற நிறுவனத்தில் என் கணவர் ஓர்  இயக்குநராக இருக்கிறார். இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான பண்ணை சுங்குவார் சத்திரத்தில் உள்ளது. அங்கு சென்றுவிட்டு 1993-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி இரவு வீடு திரும்பிய என் கணவருக்கு, பாண்டி பஜார் இன்ஸ்பெக்டர் பாபு போன் செய்தார். கொஞ்ச நேரத்திலே போலீஸ் ஜீப்பில் வீட்டுக்குவந்த பாபு, என் கணவரை வரச் சொன்னார். ‘ஜீப்பில் வர முடியாது’ எனச் சொல்லி மோட்டார் சைக்கிளில் சென்றார் என் கணவர். அவரை கஞ்சா வழக்கில் கைது செய்த விஷயம் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது. இது பொய்யான குற்றச்சாட்டு. முதல் தகவல் அறிக்கை ஜோடிக்கப்பட்டுள்ளது. அவர் அணிந்திருந்த நகைகள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. முதல்வர் ஜெயலலிதாவையும் அவரின் அண்ணன் ஜெயக்குமாரையும் சேர்த்துவைக்கும் முயற்சியில் என் கணவர் ஈடுபட்டு வந்தார். இது சசிகலாவுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதனால், அதிகாரிகள் ஒத்துழைப்போடு என் கணவரைப் பொய் வழக்கில் சிக்க வைத்திருக்கிறார் சசிகலா. முதல்வர் கவனத்துக்கூட வராமல் இதுபோன்ற காரியங்களை சசிகலா செய்து வருகிறார். பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட என் கணவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் விரிவாகச் சொல்லியிருந்தார் ரேணுகாதேவி.

நீதிபதிகள் வெங்கடசாமி, சாமித்துரை அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு மார்ச் 17-ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தது. மேகநாதனைக் கைதுசெய்த பாண்டி பஜார் இன்ஸ்பெக்டர் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது நீதிமன்றம். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது எதிர்பாராத திருப்பம் ஒன்று நடந்தது. வழக்கு விசாரணைக்கு வந்த நேரத்தில் சார்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் ஜெயக்குமாரின் மனைவி விஜயலட்சுமி. அதில் என்ன இருந்தது?

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 30 - எதிரிகளை வளைப்பதிலும் வல்லவர்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

ஞ்சா வழக்கில், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் உதவி யாளர் மேகநாதன் வளைக்கப்பட்ட பிறகு, ஜெயக்குமார் குடும்பத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே புயல் வீச ஆரம்பித்தது. மேகநாதன் கைதானதும் அவருடைய மனைவி ரேணுகாதேவி ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டார். அந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, எதிர்பாராத விதமாக ஜெயலலிதாவின் அண்ணி விஜயலட்சுமி சார்பு மனு ஒன்றை அளித்தார். ‘முதல்வருடன் என் குடும்பத்துக்கு நெருக்கத்தை ஏற்படுத்த மேகநாதன் போராடினார். இது பிடிக்காத சசிகலா, எங்கள் குடும்பத்தில் இருந்து மேகநாதனை வெளியேற்ற முயற்சிசெய்து வந்தார். அதன் ஒரு பகுதியாகத்தான், அப்பாவியான மேகநாதன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது’ என அந்த மனுவில் சொல்லியிருந்தார் விஜயலட்சுமி.

p40.jpg

ஜெயலலிதாவின் அண்ணியே இப்படி சசிகலாவுக்கு எதிராகக் கிளம்பியது, திடீரென எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. நேரிலும், தொலைபேசியிலும், கடிதம் மூலமாகவும் ஜெயலலிதாவை தொடர்புகொள்ளப் போராடி ஒரு பலனும் ஏற்படாத நிலையில்தான், மேகநாதனை மீட்க நீதிமன்றத்தை நாடினார்கள். அதே நேரம் மேகநாதனும் ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார். ‘வழக்கின் புலன் விசாரணை ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறது. மேகநாதனை ஜாமீனில் விட்டால் விசாரணை பாதிக்கும்’ என அரசு தரப்பு சொன்னதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதனால் ஜாமீன் கிடைக்கவில்லை.

தனக்கு எதிராக ஜெயக்குமார் குடும்பத்தினர் போட்ட வழக்கை சசிகலா நன்றாகவே பயன்படுத்திக்கொண்டார். 1993-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி மேகநாதன் கைது செய்யப்பட்டார். விஜயலட்சுமி நீதிமன்றத்தில் மனு செய்தது மார்ச் 17-ம் தேதி. அதன்பிறகு ஜெயலலிதாவுக்கும் ஜெயக்குமாருக்குமான உறவு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது. எவ்வளவோ போராடியும் ஜெயலலிதாவை ஜெயக்குமாரால் சந்திக்க முடியவில்லை.

p40b.jpgஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆனபோது அண்ணன் மகள் தீபா போராடியதுபோலவே, அவருடைய அப்பாவும் அன்றைக்குப் போராடிக்கொண்டிருந்தார். கோட்டையில்... கட்சி அலுவலகத்தில்... விழாக்களில்... எனக் காத்திருந்தும் ஜெயலலிதாவை அவரால் பார்க்க முடியவில்லை. அப்படியான சந்திப்புகள் நடந்துவிடக் கூடாது என்பதில் சசிகலா தெளிவாக இருந்தார்.

அந்த நேரத்தில்தான் காவிரிக்காக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஜூலை 18-ம் தேதி சென்னை கடற்கரையில் ஜெயலலிதா தொடங்கினார். மக்கள் சந்திக்கும் இடம் என்பதால், அங்கே எப்படியாவது தங்கையைப் பார்த்துவிடத் துடித்தார் ஜெயக்குமார். மகன் தீபக்கை அழைத்துக்கொண்டு போனார்.

எம்.ஜி.ஆர் சமாதி அருகே உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார் அன்றைய முதல்வரான ஜெயலலிதா. கடற்கரையைச் சுற்றிலும் போலீஸ் குவிக்கப் பட்டிருந்தது. இது திட்டமிடப் படாத உண்ணாவிரதம். கடைசி நிமிடம் வரையில் அதிகாரி களுக்கே விஷயம் தெரியாது. அதனால் அத்தியாவசிய ஏற்பாடுகளைச் செய்து முடிக்காமல் இருந்தார்கள்.

எம்.ஜி.ஆர் சமாதிக்கும் அண்ணா சமாதிக்கும் இடையே இருந்த புல்வெளியில் அவசரமாக மேடை தயாரானது. அங்கே தனது பிரத்யேக சோபாவில் அமர்ந்து, உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் ஜெயலலிதா. சுற்றிலும் அதிகாரிகள் இருந்தார்கள். மக்கள் உணர்ச்சி பொங்க கோஷமிட்டுக் கொண்டி ருந்தார்கள். ஜெயலலிதாவுக்கு உதவியாக சசிகலா பக்கத்திலேயே இருந்தார். ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு சொல்லிக் கொண்டே இருந்தார் சசிகலா. அவர் வந்து செல்லும்போதெல்லாம் அதிகாரிகள் விறைப்பாக சல்யூட் அடித்தார்கள்.

p40a.jpg

ஜெயலலிதா அருகே தற்காலிக டெலிபோன் இணைப்பு, ஃபேக்ஸ் மிஷின் ஆகியவை அமைக்கப் பட்டிருந்தன. மத்திய அரசிடம் இருந்து எந்த நேரத்திலும் அறிவிப்பு வரலாம் என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது. வந்த கடிதங்களை முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் பிரித்து ஜெயலலிதாவிடம் தர முயன்றபோது, அருகிலிருந்த சசிகலா அதையெல்லாம் வாங்கிக் கொண்டார். பிரித்துப் பார்த்துவிட்டுத்தான் ஜெயலலிதாவிடம் கொடுத்தார். அவருடன் சுதாகரனும் தினகரனும் இருந்தார்கள். முதல்வரை சந்திக்க வருபவர்களில் யார் யாரை உள்ளே விடலாம் என்று அதிகாரிகள் சசிகலாவிடம் ஆலோசனை செய்துவிட்டே அனுமதித்தார்கள்.

இப்படிப்பட்ட சூழலில்தான் அங்கே வந்தார் ஜெயக்குமார். உண்ணாவிரத மேடைக்குப் பின்புறம் தனது மகன் தீபக்குடன் வந்து நின்றபோது தடுக்கப்பட்டார். உடல்நலமில்லாத நிலையில் வந்திருந்த ஜெயக்குமாரை போலீஸார் அலைக்கழித்தனர். முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியிடம் ஓடிய சிறுவன் தீபக், “சீஃப் மினிஸ்டர் என் ஆன்ட்டி. அவங்கள பார்க்கணும்... ஹெல்ப் பண்ணுங்க சார்” என கெஞ்சினான். நோ ரெஸ்பான்ஸ். ஒரு கட்டத்தில் தூரத்தில் இருந்த ஜெயலலிதாவைப் பார்த்து ‘‘ஆன்ட்டி... ஆன்ட்டி...’’ என தீபக் கத்தியபோது அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். அந்த நேரத்தில் சசிகலா அங்கே இல்லை. கொஞ்ச நேரத்தில் தன் உறவினர்களோடு சசிகலா அங்கே வர... வேறுவழியில்லாமல் ஜெயக்குமார் பரிதாபமாகத் திரும்பிச் சென்றார். அங்கே கதறிய தீபக்தான் பிற்காலத்தில் சசிகலாவின் ஆதரவாளராக மாறிப்போனார். ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கை சசிகலாவோடு சேர்ந்து நடத்தி னார். இப்போது ‘‘சசி அத்தை’’ என உருகுகிறார். எதிரிகளை வளைப்பதிலும் வல்லவர் சசிகலா. அது தீபாவின் கணவர் மாதவன் வரையில் தொடர்கிறது.

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 31 - விபத்தால் சேர்ந்த உறவுகள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

ஜெயலலிதாவின் சாயலில் இருந்தது... அவரைப் போல இமிடேட் செய்தது... விழாக்களில் முன்னிலைப்படுத்திக்கொண்டது... போன்றவற்றையெல்லாம் தீபாவைத் துரத்தியடிக்க மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியில் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பம் வீழ்ந்தது. ஜெயக்குமாரின் உதவியாளர் மேகநாதன், கஞ்சா வழக்கில் கைதானதும் ஜெயலலிதாவின் அண்ணியே நீதிமன்றப் படியேறினார். ‘முதல்வருடன் எங்கள் குடும்பத்துக்கு நெருக்கத்தை ஏற்படுத்த முயன்ற மேகநாதனை சசிகலாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் மேகநாதன் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது’ என அதிரடி கிளப்பியிருந்தார் அண்ணி விஜயலட்சுமி. இதன் பிறகுதான் ஜெயலலிதாவுக்கும் ஜெயக்குமாருக்குமான உறவு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

p34a.jpg

இப்படியான சூழலில்தான் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே திடீரெனக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதற்கான காரணம் ஹைதராபாத்தில் விதைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பு சென்னையில் நடந்த விபத்தைப் பார்ப்போம். தீபாவுக்கு அவருடைய அப்பா ஜெயக்குமார் கைனடிக் ஹோண்டா ஒன்றை வாங்கி கொடுத்திருந்தார். அதில்தான் பள்ளிக்கும் மற்ற இடங்களுக்கும் தீபா போய்வந்துகொண்டிருந்தார். ஜெயலலிதாவுக்கும் ஜெயக்குமார் குடும்பத்துக்கும் இடையே பிணக்கு ஏற்பட்ட நிலையில், ஒரு நாள் தி.நகரில் கைனடிக் ஹோண்டாவில் போய்க் கொண்டிருந்த தீபா திடீரென விபத்துக்குள்ளானார். வேகத்தோடு வந்த மூன்று சக்கர வேன் ஒன்று கைனடிக் ஹோண்டாவை இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் பறந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த தீபாவை தனியார்        மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஒன்றரை லட்சம் ரூபாய் வரையில் செலவு செய்து ஒருவழியாக அவரைத் தேற்றினார்கள். தீபாவை இடித்துத் தள்ளிவிட்டுச் சென்ற டெம்போ வேனின் பதிவு எண்ணை சிலர் குறித்து வைத்திருந்தனர். போலீஸாரிடம் அந்த எண்ணை கொடுத்துப் புகார் கொடுத்தார் தீபா. ஆனால் போலீஸ் அந்த வழக்கைப் பதிவு செய்யவில்லை. அப்போதுதான் நடந்தது ‘விபத்தா... இல்லை சதிவேலையா?’ என்கிற சந்தேகம் ஜெயக்குமார் குடும்பத்துக்கு ஏற்பட்டது. ‘விபத்து என்றால் போலீஸ் ஏன் வழக்குப் பதிவுசெய்ய மறுக்கிறது’ என்கிற கேள்வியை எழுப்பினார்கள்.

இந்த விபத்து நடப்பதற்கு சில நாட்கள் முன்பு, தீபாவை மட்டும் அழைத்து ஜெயலலிதா பேசியதாக ஒரு தகவல் உண்டு. அண்ணன் ஜெயக்குமாருடன் பேச்சுவார்த்தை இல்லாத நிலையில், அவருடைய மகள் தீபாவை மட்டும் அழைத்து முதல்வர் பேசியது ஏன் என்ற கேள்வி போயஸ் கார்டனில் இருந்தவர்கள் மனதைக் குடைந்திருக்கிறது. ‘இந்தச் சந்திப்புக்கு பிறகுதான் தீபா விபத்துக்குள்ளாகி இருக்கிறார்’ என ஜெயக்குமார் குடும்பத்தினர் புலம்ப ஆரம்பித்தார்கள். அந்த விபத்தை போலீஸ் வழக்குப் பதிவு செய்யாமல் இழுத்தடித்தது, அதை உண்மை ஆக்குவது போல இருந்தது. தீபா விபத்தை போலீஸ் பதிவு செய்யாமல் மறுப்பது சக்தி வாய்ந்த உத்தரவினால்தான் என போலீஸ் வட்டாரத்தில் பேச்சுகள் கிளம்பியிருந்தன. தீபா விபத்துக்குள்ளான செய்தியை வழக்கம் போல கடிதம் மூலம் எழுதி கார்டனுக்கு ஃபேக்ஸ் செய்திருந்தார் ஜெயக்குமார். ஆனால், அது ஜெயலலிதாவின் கைக்குப் போய் சேரவில்லை. அதன் பிறகு கார்டனில் வசிக்கும் நபர் ஒருவர் மூலம் செய்தியை அனுப்பினார். அவர், கார்டனுக்குள்ளேயே காலடி எடுத்துவைக்க முடியவில்லை.

p341.jpgஜெயலலிதாவுக்கு ஹைதராபாத்தில் சொத்துகள் இருப்பது பலரும் அறிந்தது. அங்கே ஜெயலட்சுமி என்ற பெயரில் ஜெயலலிதாவுக்கு சித்தி ஒருவர் இருந்தார். பிறகு அவர் பெங்களூரில் வசித்து வந்தார். ஜெயலட்சுமியிடம் நடந்த விஷயங்களையெல்லாம் ஜெயக்குமார் சொல்லியிருக்கிறார். ஜெயலட்சுமி, ஜெயலலிதாவோடு தொடர்பில் இருந்ததால் விஷயம் ஜெயலலிதாவின் காதுக்குப் போய் சேர்ந்தது. அதுவரையில் தீபா விபத்துக்குள்ளான விஷயம் ஜெயலலிதாவுக்குத் தெரியாது என்பதுதான் ஆச்சர்யம். ‘‘சின்னப் பெண் தீபா யாருக்கு என்ன தீங்கு செய்தாள். அவளைத் துன்புறுத்த நினைத்திருக்கிறார்கள். இதை நீ தெரிந்தும் தெரியாது போல எப்படி இருக்கலாம்’’ என ஜெயலலிதாவிடம் சொல்லி வேதனைப்பட்டிருக்கிறார் சித்தி ஜெயலட்சுமி. விபத்தின் முழுக் கதையையும் ஜெயலலிதாவிடம் சொன்னார். அதன் பிறகு சசிகலாவை அழைத்து ஜெயலலிதா கண்டித்திருக்கிறார். ‘‘என் குடும்ப விஷயங்களில் தலையிட உனக்கு எந்த உரிமையும் இல்லை. அரசு நிர்வாகத்திலும் தலையிடாதே’’ என சசிகலாவை எச்சரித்திருக்கிறார் ஜெயலலிதா. இதன் பிறகு ஜெயலலிதாவின்  நடவடிக்கையில் கொஞ்சம் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. அதே நேரம் சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது. தீபா விபத்தின் காரணமாக மேகநாதன் விவகாரம் எல்லாம் ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போயிருக்கிறது.

ஜெயக்குமார் குடும்பத்தினருடன் ஜெயலலிதா பேச ஆரம்பித்தார். உறவுகள் மீண்டும் தொடர ஆரம்பித்தது. ஆனால், அது இரண்டு ஆண்டுகள்கூட நீடிக்கவில்லை. பெரிய சதித் திட்டத்துக்குச் சூழ்ச்சி வலைகளைப் பின்னிக்கொண்டிருந்தார் சசிகலா. அது என்ன?

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 32 - சித்தியா... சக்தியா?

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாருடைய குடும்பத்தை விரட்டியடித்த மகிழ்ச்சி, சசிகலாவுக்குக் கொஞ்ச காலம்கூட நீடிக்கவில்லை. ஜெயலட்சுமி பெயரில் புதிய தலைவலி உருவெடுத்தது.

ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவின் தங்கைதான் ஜெயலட்சுமி. ஜெயலலிதாவின் சித்தி. ஜெயலலிதாவோடு ஏற்பட்ட மனக்கசப்பால், பல வருடங்களாகப் பேசாமல் இருந்தார் ஜெயலட்சுமி. பெங்களூரில் கணவருடன் வசித்து வந்த ஜெயலட்சுமி, ஜெயலலிதாவுடன் ரொம்ப நெருக்கம் காட்டாமல்தான் இருந்து வந்தார். தன் கணவரின் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்னை அப்போலோ வந்தார் ஜெயலட்சுமி. அந்த நேரத்தில்தான், ஜெயலலிதாவிடமிருந்து ஜெயக்குமார் குடும்பம் பிரிக்கப்பட்ட விஷயம் அவருக்கு வந்து சேர்ந்தது.

இந்த நிலையில்தான் பிணக்கு மறைந்து ஜெயலலிதாவும் ஜெயலட்சுமியும் இணைந்தனர். ‘‘முதலமைச்சர் என்ற உயர்ந்த நிலைக்கு நீ வந்திருப்பதைப் பார்க்க உன் அம்மா இல்லையே!’’ எனக் கதறியபடி ஜெயலலிதாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டார் ஜெயலட்சுமி. ஜெயலலிதாவும் நெகிழ்ந்து போனார். இந்தக் காட்சிக்குப் பிறகு உறவு பலமானது.

p18.jpg

உறவுக்கும் நட்புக்கும் இடையே போராட்டம் தொடங்கியது. சசிகலாவின் பல்ஸ் எகிற ஆரம்பித்தது. ‘ஜெயலலிதாவுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்த ஜெயலட்சுமி எப்படி உறவைப் புதுப்பித்துக்கொண்டார்... எப்படி கார்டனுக்குள் கால் பதித்தார்?’ எனத் தோட்டத்துக்குள் செல்வாக்கு செலுத்திய சக்திகள், மண்டை குழம்பிப் போயிருந்தன. ‘பிரிந்து கிடக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் குடும்பத்தை, ஜெயலலிதாவுடன் திரும்பச் சேர்த்து வைக்கும் தூதராகத்தான் ஜெயலட்சுமி வந்திருக்கிறார்’ எனச் சந்தேகப்பட்டார் சசிகலா. உறவுகள் மலர்ந்தால், நட்பு இரண்டாம் பட்சமாகும்; காலப்போக்கில் நட்பு முறிக்கப்பட்டுவிடும். ‘சித்தி’யா, ‘சக்தி’யா... இரண்டில் ஒன்று பார்த்து விடலாம் எனச் சசிகலா களமிறங்கினார்.

ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலமான 1991-96-ல் சென்னை தரமணியில் ‘ஜெயலலிதா திரைப்பட நகர்’ உருவாக்கப்பட்டது. ‘ஜெ ஜெ ஃபிலிம் சிட்டி’ என அழைக்கப்பட்ட இந்தத் திரைப்பட நகரத்தை 1994-ம் ஆண்டு செப்டம்பரில் ஜெயலலிதா திறந்து வைத்தார். திறப்பு விழாவுக்கு ஜெயலலிதாவும் சசிகலாவும் வந்தபோது, அவர்களுடன் வயதான பெண்மணி ஒருவரும், தன் கணவருடன் வந்தார். அவர் வேறு யாருமல்ல, ஜெயலட்சுமிதான்! இப்படித்தான் ஜெயலலிதாவோடு நிகழ்ச்சிகளில் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பமும் பங்கேற்றது. அவர்களுக்குத் தரப்பட்ட மரியாதையைப் பார்த்து அந்தக் குடும்பத்தை விரட்டியடித்தார்கள். இப்போது சித்தி ஜெயலட்சுமி  மீண்டும் வந்திருக்கிறார். குழம்பிப் போனார் சசிகலா.

மாலையில் திரைப்பட நகர் திறப்பு விழா நடைபெற்றது, அன்றைய தினம் காலையில்தான் ஜெயக்குமார் மகன் தீபக்குக்குப் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மண்டபம் ஒன்றில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு ஜெயலட்சுமி போனார். முக்கியமானவர்கள் மட்டுமே பயன்படுத்தும் 7077 என்ற பதிவு எண் கொண்ட காரில், கார்டனிலிருந்து மண்டபத்துக்கு ஜெயலட்சுமி புறப்பட்டபோது, வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது சசிகலா குடும்பம். பூணூல் நிகழ்ச்சிக்கு ஜெயலலிதாவும் வருவார் என நினைத்தார் ஜெயலட்சுமி. ஆனால், வரவில்லை. பூணூல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு கார்டனுக்குத் திரும்பிய ஜெயலட்சுமி, ஜெயலலிதா வுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

‘‘தீபக்குக்கு நீ அத்தை. அவனுடைய பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அனுப்பியிருக்கிறார் அண்ணன். நான்கைந்து ஃபேக்ஸும் செய்திருக்கிறார். முதல்வராக உனக்கு நிறையப் பணிகள் இருக்கலாம். எத்தனையோ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நீ, ரத்த உறவான அண்ணன் வீட்டு விழாவில் தலையைக் காட்டிவிட்டு வந்திருக்கலாம்’’ என ஜெயலட்சுமி சொன்னபோது, ‘‘அப்படி எந்த அழைப்பிதழும் எனக்கு வரவில்லையே” என்று ஆச்சர்யத்தோடு சொன்னார் ஜெயலலிதா. அண்ணன் ஜெயக்குமார் அனுப்பிய அழைப்பிதழ் எதுவுமே ஜெயலலிதாவின் பார்வைக்குப் போய்ச்சேரவில்லை. பூணூல் நிகழ்ச்சிக்குச் சித்தி போய் வந்ததுகூட, அவர் திரும்பி வந்து சொன்னபோதுதான் ஜெயலலிதாவுக்கே தெரிந்தது. உடனே சசிகலாவை அழைத்துக் கேட்டபோது, ‘‘அப்படியா... எனக்கு எதுவுமே தெரியாதே’’ எனத் திகைத்தபடியே பதில் சொன்னார் சசிகலா. காரசார விவாதம், கண்ணீர்க் காட்சிகள் அரங்கேறின. நட்பை மீறி உறவை ஜெயலலிதா மதிக்க ஆரம்பித்தது, பலரின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது.

இந்த உணர்ச்சிக் காட்சிகளுக்குப் பிறகுதான் ஃபிலிம் சிட்டி திறப்பு விழாவுக்கு ஜெயலலிதா போனார். விழாவில் ஜெயலலிதா கொஞ்சம் கடுகடு என இருந்தார். மொத்தத் திரையுலகமும்  திரண்டிருந்த அந்த விழாவில், விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த விருந்தில்கூடக் கலந்துகொள்ளாமல் முதல்வர் கிளம்பிப்போனார்.

அடுத்தடுத்து இன்னும் பல விஷயங்களை ஜெயலலிதாவின் கவனத்துக்குச் சித்தி கொண்டு போக, நட்பு வட்டாரத்தின் அதிகாரம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. சித்தி ஜெயலட்சுமி பெங்களூரு சென்றுவிட்ட பிறகும், ஜெயலலிதாவுடன் தொடர்பில்தான் இருந்தார். அப்படி இருந்தபோதுதான், தீபாவுக்கு நடந்த விபத்தும் அதை போலீஸ் பதிவுசெய்யாமல் போனதும் அவர் மூலம் ஜெயலலிதாவின் கவனத்துக்கு வந்து சேர்ந்தது.

‘சித்தியின் ஆதிக்கம், அண்ணன் குடும்பத்தின் பாசம் ஆகியவற்றை முற்றிலும் துடைத்தெறிய என்ன செய்யலாம்’ எனச் சசிகலா யோசனை செய்து கொண்டிருந்தபோதுதான் உதித்தது அந்த ஐடியா!

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 33 - வாரிசு... வளர்ப்பு மகன் அரசியல்!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார், அண்ணி விஜயலட்சுமி, இவர்களின் பிள்ளைகள் தீபா, தீபக், சித்தி ஜெயலட்சுமி என ரத்த உறவுகள் மீண்டும் உயிர் பெறுவதை விரும்பாத சசிகலா எடுத்த அஸ்திரம்தான், ‘வளர்ப்பு மகன்’!

ஜெயக்குமாரின் குடும்பம் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாத நிலையில், சசிகலா அடுத்தடுத்து காய்களை நகர்த்திவந்தார். கடிதம், தொலைபேசி, நேரில் என எந்த வகையிலும் ஜெயக்குமாரின் குடும்பத்தினர் ஜெயலலிதாவைச் சந்திக்கவிடாமல் பார்த்துக்கொண்டார். ஆனாலும்கூட சித்தி ஜெயலட்சுமி மூலம் உறவுகள் கைகூட ஆரம்பித்தன. எத்தனை காலத்துக்குத்தான் ஜெயலலிதாவின் ரத்த உறவுகளைத் தடுத்து நிறுத்த முடியும்? ‘என்றைக்காவது ஒரு நாள் உறவுகளைத் தேடி ஜெயலலிதா போகலாம். அது தங்களின் வாழ்வுக்கு வெந்நீர் ஊற்றலாம்’ என அச்சப்பட்டது சசிகலா குடும்பம். எதிர்காலத்திலும் ஆபத்து வந்துவிடக் கூடாது என நினைத்து போட்ட திட்டம்தான் வளர்ப்பு மகன்.

p24a.jpg

ஜெயக்குமார் குடும்பத்தினர், வாரிசாக வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, தன் அக்கா வனிதாமணியின் மகன் வி.என்.சுதாகரனை ஜெயலலிதாவின் தத்துப்பிள்ளையாகக் கொண்டுவந்தார் சசிகலா. முதன்முறை முதல்வராக ஜெயலலிதா பொறுப்புக்கு வந்தபோது அவரது ஆட்சியின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இப்படியான சூழலில் திடீரென தன் தத்துப்பிள்ளையாக சுதாகரனை ஏற்றுக்கொள்ளப்போவதாக அவர் அறிவித்தார்.  ஜெயலலிதாவுக்குத் திருமணம் ஆகவில்லை பொது வாழ்வில் தீவிரமாகத் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், தத்துப்பிள்ளையாக சுதாகரனை அதிரடியாக அவர் அறிவித்ததை ஆச்சர்யத்தோடு பார்த்தது தமிழகம்.

ஜெயலலிதாவுக்கு வாரிசாக வருபவர்கூட தன் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என நினைத்தார் சசிகலா. நேரு ஸ்டேடியம் திறப்பு விழாவில் தன் அக்கா வனிதாமணியின் சீட்டில் அமர்ந்த தீபாவுக்குப் பாடம் புகட்ட, வனிதாமணியின் மகனையே ஜெயலலிதாவின் வாரிசாக்கினார் சசிகலா. தத்துப்பிள்ளைதான் பிறகு வளர்ப்பு மகனாக மாறினார். அந்த வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடந்த திருமணம், ‘பாகுபலி’ பட பிரமாண்டம். அப்படியான ஒரு திருமணத்தை அதுவரை தமிழகம் கண்டதில்லை. அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா, மகன் தீபக் மீது ஜெயலலிதாவுக்குப் பாசம் அதிகம். கார்டனிலேயே பிறந்து வளர்ந்தவர் தீபா. இவர்களைத் தாண்டி, சசிகலா குடும்பத்தில் இருக்கிற ஒருவரை வளர்ப்பு மகனாக ஜெயலலிதா தேர்வு செய்கிறார் என்றால், சசிகலாவின் சாமர்த்தியமும் சக்தியும் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம். மேகநாதன் கைது விவகாரம் நடந்தது 1993 மார்ச். அடுத்த இரண்டே ஆண்டுகளில் சுதாகரனை ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக்கிவிட்டார் சசிகலா.

p24.jpg

வளர்ப்பு மகன் சுதாகரனின் தடபுடல் திருமணம், 1995-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. வளர்ப்பு மகனாக அவரைத் தேர்வு செய்தபோது ஜெயக்குமார் குடும்பத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை. திருமணத்தை நடத்தியபோதும் அந்தக் குடும்பத்துக்கு அழைப்பு போகவில்லை. சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவித்த பிறகு, ஜெயக்குமார் குடும்பம் நொறுங்கிப் போனது. `ஜெயலலிதாவோடு இனி எந்தக் காலத்திலும் சேர முடியாது’ என்பது தெரிந்து போனது. ஏற்கெனவே உடல்நலம் குன்றியிருந்த ஜெயக்குமார், வளர்ப்பு மகன் திருமணத்துக்குப் பிறகு மேலும் பாதிப்படைந்தார். அந்தத்  திருமணம் நடந்த அடுத்த மாதமே, ஜெயக்குமாரின் மரணச் செய்தி வந்து சேர்ந்தது. மேகநாதன் கைதுக்குப் பிறகு ஜெயக்குமாரின் குடும்பத்தினரோடு நெருங்கிய தொடர்பே இல்லாமல் இருந்தார் ஜெயலலிதா. அப்படிப்பட்ட நிலையில் அண்ணனின் மரணம் ஜெயலலிதாவை அப்செட் ஆக்கியது. அண்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ஜெயலலிதா. கார்டன் திரும்பியபிறகும் சகஜநிலைக்கு வர முடியாமல் அழுது கண்ணீர் விட்டிருக்கிறார். இது சசிகலாவை கவலைகொள்ள வைத்தது.

ஜெயக்குமார் இறந்த 13 நாட்களுக்குள் தீபாவளி வந்தது. அண்ணன் மறைவால் தீபாவளியை ஜெயலலிதா கொண்டாடவில்லை. ‘‘முதல்வரின் அண்ணன் இறந்ததால் வளர்ப்புமகன் சுதாகரனுக்குத் தலைதீபாவளி வேண்டாம்’’ என குடும்ப புரோகிதர் சொல்ல, சசிகலாவுக்குக் கவலை தொற்றிக்கொண்டது. ஆனாலும் தலைதீபாவளியை சுதாகரன் கொண்டாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் சசிகலா. ‘‘சுதாகரன், அவன் மாமனார் வீட்டில்தானே தலைதீபாவளி கொண்டாடப் போகிறான். அதை எதற்குத் தடுக்க வேண்டும்’’ என வாதாடினார் சசிகலா. அதோடு, ‘‘அக்கா... ‘உங்கள் உறவே வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டுப் போனவர்களுக்காக ஏன் கலங்குகிறீர்கள்’’ எனக் கேட்டாராம். ஜெயலலிதா அவரை முறைத்துப் பார்க்க... அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார் சசிகலா.

காரியத்தில் கண்வைப்பதில் வல்லவர் சசிகலா!

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 34 - ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா... சசிகலாவுக்குப் பின்னால் நடராசன்!

 
 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

‘உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை
ஒளி மயமானதடி!
பொன்னை மணந்ததனால் சபையில்
புகழும் வளர்ந்ததடி!’


சசிகலாவைக் கரம் பிடித்த நடராசனுக்கு கண்ணதாசனின் இந்தப் பாடல் ரொம்பவே பொருந்தும்.

ஜெயலலிதாவுக்கு சசிகலா நேரடியாக அறிமுகம் ஆகிவிடவில்லை. அதற்கான விதையைப் போட்டவர் நடராசன். சசிகலா, ஜெயலலிதாவின் தோழியாகி, பிறகு உடன்பிறவா சகோதரியாக வார்த்தெடுக்கப் பட்டதில் நடராசன் காட்டிய வித்தைகளும் சூழ்ச்சிகளும் சூதுமதிகளும் காய் நகர்த்தல்களும் அதுவரை தமிழக அரசியலில் எழுதப்படாத புது தியரி.

p40.jpg

ஜெயலலிதாவை அரசியலில் வளர்த்தெடுக்க எம்.ஜி.ஆர் முயற்சி செய்து கொண்டிருந்த நேரம். அப்போது நடராசன், ‘மக்கள் தொடர்பு அதிகாரி’ (பி.ஆர்.ஓ) என்கிற அரசுப் பணியில் இருந்தார். சசிகலா வீடியோ கடை நடத்திக்கொண்டிருந்தார். இந்த முக்கோணக் கோடுகள்... ஒரு கட்டத்தில் நேர்க்கோடாக மாறின. அரசியல், ஆட்சி சூழல் எல்லாம் அதிகார போதையை நடராசனுக்குக் கண்ணில் காட்டியது. ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வந்த எம்.ஜி.ஆரே, ஜெயலலிதாவின் வளர்ச்சியைக் கண்டு கலங்க ஆரம்பித்த நேரத்தில்தான், போயஸ் கார்டனுக்குள் போய் வந்து கொண்டிருந்த சசிகலாவை ‘உளவாளி’ ஆக்கினார். சசிகலாவின் கணவர் அரசுப் பணியில் இருந்ததால் அது சாத்தியமானது. ஜெயலலிதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நடராசன் நடத்திய லீலைகள் நிறைய! ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியைக் கைப்பற்றி, ‘‘ஆம்... குடும்ப ஆட்சியைத்தான் நடத்துவோம்’’ என வீராவேசம் பேசும் அளவுக்கு நடராசன் ரோல் வகிக்கிறார்.

ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா இருந்தார். சசிகலாவுக்குப் பின்னால் நடராசன் இருந்தார். இந்த நடராசன் யார்? எப்படி வந்தார்?

“தஞ்சாவூர்க்காரன் புத்தி வேறு எவனுக்கும் கிடையாதுப்பா...” - நெருக்கமான நண்பர்களிடம் பெருமையுடன் அடிக்கடி நடராசன் உச்சரிக்கும் வார்த்தைகள் இவை.  அந்தப் புத்தியை வைத்து அவர் நடத்திய காரியங்கள் ஏராளம். நடராசனும் சசிகலாவும் நெருங்கிய உறவுகள் அல்ல. ஆனால், ஒரே மாவட்டத்துக்காரர்கள். நெருங்கிய ஊர்க்காரர்கள். மன்னார்குடிக்குப் பக்கத்தில் இருக்கிற விளார் கிராமத்தைச் சேர்ந்த நடராசன், சசிகலாவைக் கரம் பிடித்தபிறகு உச்சத்துக்குப் போனார். மருதப்பா ஏழை விவசாயி. கூரை வீடும் கூழும்தான் அவருக்கு வாழ்க்கை. அவரது மகனான நடராசனுக்குப் படிப்பில் ஆர்வம். தஞ்சாவூர் தூய அந்தோணியார் பள்ளியில் படித்தார். பள்ளிப் பருவத்திலேயே ‘‘நான் கலெக்டர் ஆவேன்’’ என நண்பர்களிடமும் உறவினர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ‘‘எல்லோரும் டாக்டருக்கு் இன்ஜினீயருக்குப் படிப்பாங்க... நீ ‘கலெக்டருக்குப் படிக்கப் போறே’னு சொல்லுறே’’ என அவர்கள் கேட்டபோது, ‘‘மினிஸ்டர்களுக்கு கார் கதவைத் திறந்துவிட்டு சல்யூட் அடிக்கற கலெக்டர்னா நினைச்சீங்க? நான் கலெக்டர் ஆனா, மினிஸ்டருங்க எல்லாம் என்னைப் பார்த்து சல்யூட் அடிப்பாங்க’’ என மாணவனாக இருந்தபோதே பதிலடி கொடுத்தார்.

அரசியல் மீது சிறுவயதிலேயே பார்வையைப் பதித்தார். தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் பி.ஏ படிக்கப் போனபோது அது துளிர்விட ஆரம்பித்தது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ கற்கப் போனபோது ‘இந்தி எதிர்ப்பு’ போராட்டத்தில் குதிக்கும் அளவுக்குப் போனது. 

நடராசனுக்குப் படிப்பில் வெகு ஆர்வம். கிட்டத்தட்ட முதல் ரேங்கை எட்டிப் பிடித்து விடுவார். பாடத்தில் என்ன சந்தேகம் வந்தாலும் அதற்கான விளக்கத்தை ஆசிரியர்களிடம் நடராசன் நேரடியாகக் கேட்க மாட்டார். அவருக்காக, பக்கத்தில் இருக்கிற மாணவர்கள்தான் கேட்பார்கள். சக மாணவர்களை விட்டு சந்தேகங்களைக், கேட்கச் சொல்லித் தெளிவு பெறுவதுதான் நடராசன் ஸ்டைல். நடராசனின் இந்த அணுகுமுறைதான் இன்று வரையில் தொடர்கிறது. அடிதடிக்கு ஒருவர், ஆர்ப்பரிக்க ஒருவர், ஆங்கிலத்தில் பேச ஒருவர், அழகாக எழுத ஒருவர் எனக் கல்லூரியில் நடராசனைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். காலேஜையே கலக்கிக் கொண்டிருப்பார் நடராசன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே தி.மு.க அனுதாபியாக மாறியிருந்தார்.  அப்போது தி.மு.க-வில் இருந்த எல்.கணேசன், எஸ்.டி.சோமசுந்தரம் (எஸ்.டி.எஸ்.) இருவரையும் அடிக்கடி சந்தித்துப் பேசுவார். எல்.கணேசனிடம் காட்டிய நெருக்கம், நடராசனுக்கு அரசுப் பதவியைத் தேடிக்கொடுத்தது. கருணாநிதி முதன்முறையாக முதல்வரான நேரத்தில்தான் செய்தித் துறையில் மக்கள்தொடர்பு பதவி, நடராசனுக்குக் கிடைத்தது.

உத்யோகம் கிடைத்துவிட்டது. அடுத்த புருஷ லட்சணம் வந்து சேர்ந்தது. மன்னை நாராயணசாமியின் உறவினர் மகளான சசிகலாவைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குத் தலைமை தாங்கி நடத்தி வைத்தவர், அன்றைய முதல்வர் கருணாநிதி.

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 35 - நடராசன் ஆட்டம் ஆரம்பம்!

 
 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

p24b.jpgரசின் மக்கள் தொடர்பு அதிகாரி (பி.ஆர்.ஓ) பதவிகளுக்கு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் எதுவும் கிடையாது. டிகிரி படித்திருந்தால் போதும். முதல்வரின் நேரடி சிபாரிசு மூலம் இந்தப் பதவிகள் நிரப்பப்படுவதால், அரசியல்வாதிகளின் உறவினர்கள்தான் இதில் அமர்த்தப்படுவார்கள். அதனாலேயே, அரசியல் சாயம் பூசப்பட்டவர்களாக பி.ஆர்.ஓ-க்கள் இருப்பார்கள். அரசுக்கும் பத்திரிகைகளுக்கும் தொடர்பை உண்டாக்கும் பணி இது. அரசின் சாதனைகள், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அறிக்கைகள் மற்றும் பேட்டிகளை ஊடகங்களில் வரவைப்பது, பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்வது, அரசு நிகழ்ச்சிகளுக்குப் பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்வது என மீடியாவோடு நெருக்கமான தொடர்பு வைத்திருப்பார்கள், பி.ஆர்.ஓ-க்கள். அரசியல் பின்புலத்தோடு ஆட்சியாளர்களிடம் நெருங்கி வேலை பார்க்கும் பதவி என்பதால், இந்தப் பதவிக்கு ‘பவர்’ அதிகம்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரசியல்வாதிகள் தொடர்பு, முதல்வர் கருணாநிதி தலைமையில் திருமணம் என இத்தனை அடையாளங்களைத் தாங்கி நின்ற நடராசன், பி.ஆர்.ஓ பதவியில் சும்மாவா இருந்திருப்பார்?

p24a.jpg

மாவட்டங்களில் பணியாற்றியபோது கலெக்டர்களுடனும் அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடனும் நடராசன் நெருக்கம் ஆனார். கடலூரில் அவர் வேலை பார்த்தபோது, அங்கே கலெக்டராக பணியாற்றிய சந்திரலேகாவுடன் இருந்த நட்புதான், ஜெயலலிதாவோடு நடராசன் நெருக்கம் ஆக அடித்தளமாக அமைந்தது. ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் அரசியல் சுற்றுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். முதல் கூட்டம், கடலூரில் நடைபெற்றது. அங்கே இருந்த கலெக்டர் சந்திரலேகாவிடம், ‘‘அம்முவுக்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து கொடுங்கள்’’ என்றார் எம்.ஜி.ஆர். ‘வினோத் வீடியோ விஷன்’ நடத்திக் கொண்டிருந்த சசிகலாவுக்கு சான்ஸ் வாங்கி கொடுக்கும் பணிகளை நடராசன் ஒரு பக்கம் செய்து கொண்டிருந்தார். ‘ஜெயலலிதாவின் கவரேஜ் ஆர்டர்’ கிடைப்பதற்காக சந்திரலேகாவை அணுகினார் நடராசன். பி.ஆர்.ஓ-வான நடராசன், ஜெயலலிதாவுக்கு நல்ல கவரேஜ் தருவார் என நினைத்த சந்திரலேகா, நடராசனுக்கு உதவினார். அப்போதுதான் ஜெயலலிதாவை முதன்முறையாக சந்தித்தார் சசிகலா. அதன்பிறகு அவருடைய வாழ்க்கையில் சுக்கிர தசை. கொஞ்ச நாளிலேயே ஜெயலலிதா, கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர், தமிழக அரசின் சத்துணவுத் திட்டக் குழு உறுப்பினர் எனப் பதவிகளில் அடுத்தடுத்து அமர, டூர் புரோகிராம்கள் அதிகமாகின. சசிகலாவுக்கும் ஆர்டர்கள் குவிந்தன. நெருக்கமும் கூடியது.

ஜெயலலிதாவோடு நெருக்கமாகிவிட்ட சசிகலா, நடராசனைப் பற்றி ஜெயலலிதாவிடம் சிலாகித்து பேசினார். ‘இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கிய ரோல் வகித்தவர், அண்ணா, கருணாநிதி போன்ற அரசியல் தலைவர்களோடு பழகியவர்’ என நடராசனைப் பற்றி சொல்ல... சசிகலாவைப் போலவே நடராசனும் ஜெயலலிதாவோடு நெருங்கினார். ஜெயலலிதாவோடு நெருக்கமாகி, எம்.ஜி.ஆருக்காக ஜெயலலிதாவையே உளவு பார்த்து, உச்சத்துக்குப் போய்க் கொண்டிருந்தார் சசிகலா. எல்லா நிலைகளிலும் நடராசன் பின்புலத்தில் இருந்தார். எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கும் சகஜமாக போய் வந்து கொண்டிருந்தார்கள் நடராசனும் சசிகலாவும். ‘‘அம்மு பற்றிய தகவல்களை எந்த நேரத்திலும் என்னிடம் சேர்க்கலாம்’’ என அன்றைக்கு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் சொன்னதால், சசிகலாவின் தலை ராமாவரம் தோட்டத்தில் அடிக்கடி தென்பட்டது. ‘‘எம்ஜி.ஆரை சந்திக்க ராமாவரம் போன சமயங்களில் நடராசன், சசிகலா ஆகியோரை பார்த்திருக்கிறேன்’’ என எழுதியிருக்கிறார் வலம்புரி ஜான்.

p24.jpg

அந்த நேரத்தில் நடராசன், அரசியல் கணக்கு ஒன்றைப் போட்டார். ‘எம்.ஜி.ஆருக்குப் பிறகு அரசியல் வாழ்வு இனி ஜெயலலிதாவுக்குதான்’ என கணித்தார். கட்சியில், ஜெயலலிதாவின் கிராஃப் உயர்ந்து கொண்டிருந்தது. இதை எம்.ஜி.ஆர் அவ்வப்போது கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார். இதனால் எம்.ஜி.ஆர் மீது மனவருத்தம் கொண்டார் ஜெயலலிதா. அதை நடராசன் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சிக்குப் ‘பலம்’ சேர்க்கும் காரியங்களில் ‘கணக்காக’ இறங்கினார் நடராசன்.

எம்.ஜி.ஆருக்காக உளவு வேலைகளைப் பார்த்தபோதும், ஜெயலலிதாவின் விசுவாசிகளாகவே இருந்தார்கள் நடராசன் - சசிகலா தம்பதியர். அதற்குக் காரணம், ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கு. ஜெயலலிதாவின் கூட்டங்களுக்குத் திரண்ட மக்களை நேரில் பார்த்ததாலும், அந்தக் கூட்டங்களை வீடியோ கவரேஜ் செய்ததாலும், எம்.ஜி.ஆருக்குப் பிறகு அடுத்த வாரிசாக ஜெயலலிதா வருவார் என நடராசன் நினைத்தார். அது பலித்தது. எதிர்கால ஜெயலலிதா ஆட்சியில் அதிகாரம் செலுத்த, ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரையே சமாளிக்க ஆரம்பித்தார் நடராசன். அதுவரை ஜெயலலிதாவைச் சுற்றியிருந்தவர்கள் எல்லோரும், ஒவ்வொரு காலகட்டத்தில் நடராசனால் வீழ்த்தப்பட்டனர். சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் மட்டுமே ஜெயலலிதாவைச் சுற்றி இருக்கும் நிலையைக் கச்சிதமாகக் கட்டமைத்தார் நடராசன்.

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 36 - பிரிந்தவர் கூடினால்...

 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

ஞ்சாவூர் தூய அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் நடராசன் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் இது! எம்.ஜி.ஆர் நடித்த ‘ஜெனோவா’ படத்தின் பாட்டு புத்தகத்தை பள்ளித் தோழன் ஒருவன் வைத்திருக்க... அதை ஆர்வத்துடன் வாங்கிப் படித்தார் நடராசன். ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் முடியுமோ?’ என்ற வாசகத்துடன் படத்தின் கதைச் சுருக்கம்,பாட்டுபுத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. ‘பிரிந்தவர் கூடினால் ஏன் பேச முடியாது’ என்கிற கேள்வி சிறுவனாக இருந்த நடராசன் மனதில் எழுந்தது. ‘ஜெனோவா’ படத்தைப் பார்த்து விடை தெரிந்துகொள்ள நினைத்தார். அப்பா மருதப்பா மண்ணையாரிடமும், தாய் மாரியம்மாளிடமும் பணம் கேட்கத் தயக்கம். காரணம், பொருளாதாரச் சூழல்.

அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் நடராசன் படிப்பார். ‘‘கணக்குப் பிள்ளை வேலைக்கா போகப் போறே... படிச்சு கிழிச்சது போதும், படுடா!’’ எனச் சொல்வார், நடராசனின் பாட்டி அப்பாயி. நடராசன் உடல்நிலை மீதான அக்கறை அல்ல அது. கிடைக்காத மண்ணெண்ணெய் வீணாகிறதே என்கிற கவலைதான் காரணம். மண்ணெண்ணெய் செலவுக்கே கணக்கு பார்க்கும் குடும்பத்தினர், சினிமாவுக்குப் போவதற்கு பணம் தருவார்களா? ஆனாலும், ‘பிரிந்தவர் கூடினால் ஏன் பேச முடியாது’ என்கிற கேள்விக்குப் பதில், வெண் திரையில்தானே இருக்கிறது. எப்படியோ பணத்தைத் திரட்டி, தஞ்சை யாகப்பா தியேட்டரில் ‘ஜெனோவா’ படத்தைப் பார்த்தார் நடராசன். காட்டுப்பகுதியில் துவண்ட நிலையில்     எம்.ஜி.ஆர் தள்ளாடி, ஊர்ந்து செல்வார். இன்னொரு பக்கம் கதாநாயகி ‘எனை ஆளும் மேரி மாதா... துணை நீயே தேவத் தாயே!’ என்று பாடி வருவார். திடீரென இருவர் மீதும் வெளிச்சம் பாய... பிரிந்திருந்த இருவரும் இணைவார்கள். மகிழ்ச்சிப் பெருக்கால் வார்த்தைகள் வராமல், இருவரின் கண்கள் மட்டும் பேச... படம் முடியும். ‘பிரிந்தவர் கூடும்போது பேச்சு வராது’ என்பதை, அந்தச் சின்ன வயதில் நடராசன் தெரிந்து கொண்டார்.

p30.jpg

‘பிரிந்தவர் கூடினால் ஏன் பேச முடியாது’ என சிறுவயதில் கேள்வி எழுப்பிய நடராசன், சசிகலாவை ஜெயலலிதாவால் பிரிந்திருந்தார். ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் இருவரும் சில நேரங்களில் சந்தித்துக்கொண்டாக பேச்சுகள் எழுந்தன. ஆனால், அவர்கள் அப்படி சந்திப்பு நடந்தற்கான அதிகாரபூர்வ படங்கள் ஏதும் வெளியாகவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் குன்ஹா தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தபிறகு, பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலா தள்ளப்பட்டார். அந்த நேரத்தில் சிறை வளாகத்தில் இருந்த நீதிமன்றத்தில்  சசிகலாவைப் பார்த்த நடராசன், கண்ணீர் சிந்தினார்.அங்கே இருவரும் பேச முடியவில்லை. ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் முடியுமோ?’ என நிழலுக்கு நேர்ந்தது, அன்றைக்கு நிஜத்திலும் அரங்கேறியது.

ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் சசிகலாவும் நடராசனும் பிரிந்திருந்தபோதிலும், இருவரும் தங்களின் ‘கடமை’களைக் கச்சிதமாக நடத்த ஆரம்பித்தார்கள். ஜெயலலிதாவோடு நெருக்கமான ஆரம்ப காலகட்டத்தில், கார்டனில் சசிகலாவும் கட்சியில் நடராசனும் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தார்கள். கார்டனில் அதுவரை வேலைப் பார்த்தவர்களை எல்லாம், சசிகலா விரட்டியடித்துக் கொண்டிருந்தார். அதே வேலையை நடராசன் கட்சியில் செய்து கொண்டிருந்தார்.

ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் அரசியலுக்குக் கொண்டு வந்ததை, ஆர்.எம்.வீரப்பன் போன்ற சீனியர்கள் ரசிக்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவுக்குத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தார். ஜெயலலிதாவுக்குக் கூட்டம் சேர்வதைப் பார்த்து, அமைச்சர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் ஆதரவு கொடுத்தார்கள். அதனால் அ.தி.மு.க-வுக்குள் ஜெயலலிதா ஆதரவாளர்கள், ஜெயலலிதா எதிர்ப்பாளர்கள் என இரண்டு பிரிவினர் இருந்தனர். அன்றைய அமைச்சர்களில் கே.ஏ.கிருஷ்ணசாமி (கே.ஏ.கே.), திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் போன்றவர்கள் ஜெயலலிதாவை ஆதரித்தனர். அதனால் அவர்கள் பக்கம் ஒதுங்கினார் நடராசன். ஜெயலலிதாவின் ஆதரவு வட்டாரத்தை கட்டமைக்கும் வேலையோடு, கட்சியில் ஜெயலலிதாவுக்கு எதிரானவர்களையும் கழற்றிவிடவும் காய்கள் நகர்த்தி வந்தார்.

p30a.jpg

தி.மு.க-வுக்கு ஆதரவாக ‘குங்குமம்’ பத்திரிகை வந்துகொண்டிருந்த நேரத்தில், அதற்குப் போட்டியாக ‘தாய்’ பத்திரிகை வந்தது. அது, தரமாக இருக்கவேண்டும் என நினைத்த         எம்.ஜி.ஆர், அதன் ஆசிரியராக வலம்புரி ஜானைக் கொண்டுவந்தார். எம்.ஜி.ஆரின் உறவினர் அப்புவின் மேற்பார்வையில்தான் ‘தாய்’ வெளியானது. ஜெயலலிதாவையும் வலம்புரி ஜானையும் ராஜ்யசபா எம்.பி ஆக்கி, டெல்லிக்கு அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர். ‘‘அம்முவை அரசியல் களத்தில் இறக்கியிருப்பதற்கு ஆழ்ந்த காரணம் உண்டு. அம்மு எழுதவும், பேசவும் நீங்கள் உதவ வேண்டும்’’ என வலம்புரி ஜானிடம் சொல்லியிருந்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்குப் புத்தகங்களைத் திரட்டித் தருவது, அறிக்கை எழுதிக் கொடுப்பது, நாடாளுமன்ற உரையைத் தயாரித்து வழங்குவது என வலம்புரி ஜான் உதவினார். ஒரு கட்டத்தில் ‘தாய்’ பத்திரிகையிலும் ஜெயலலிதாவின் தலையீடு ஆரம்பித்தது. அதற்குப் பின்னால் இருந்தது நடராசன். காரணம், வலம்புரி ஜான் மீது இருந்த வெறுப்பு!

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 37 - நடராசனும் நாகப்பாம்பும்!

 
 
 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

தொடக்கக் கல்வியை முடித்ததும் விளாரில் இருந்து தஞ்சாவூரில் இருக்கும் ‘தூய அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி’க்கு நடந்து போய் படித்துக் கொண்டிருந்தார் நடராசன். ‘உடல்நிலை பாதிக்கக் கூடாது. இடையூறும் இல்லாமல் படிப்பை மகன் தொடர வேண்டும்’ என்பதற்காக தஞ்சாவூருக்கு இடம்பெயர்ந்தார் நடராசனின் தந்தை மருதப்பா. ஆங்கிலம் தவிர, மற்ற பாடங்களில் முதல் மாணவனாக மதிப்பெண்களைக் குவித்தார் நடராசன்.

சிறு வயதில் நடராசன், கொஞ்சம் ஒல்லியாக சிவப்பு நிறத்தில் இருந்தார். ஒருநாள் வகுப்பாசிரியர், நடராசனைப் பாராட்டுகின்ற முறையில் முதுகைத் தட்டிக்கொடுத்து தடவிப் பார்த்தார். தன்னை ஊக்கப்படுத்த ஆசிரியர் இப்படிச் செய்கிறார் என நடராசன் நினைத்தார். ஆனால், அடுத்து வந்த தேர்வில் நடராசனின் மதிப்பெண்கள் குறைந்து போயின. பல ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை திலகர் திடலில், ஒரு கூட்டத்தில் பெரியார் பேசியதைக் கேட்டபோதுதான், அந்த ஆசிரியர் முதுகை ஏன் தடவிப்பார்த்தார் என்கிற அர்த்தம் நடராசனுக்குப் புரிந்தது. இந்தச் சம்பவத்தை நடராசனே குறிப்பிட்டிருக்கிறார்.

p16.jpg

அந்த நடராசன்தான், பிராமணரான ஜெயலலிதாவைச் சுற்றி வந்தார். தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஜெயலலிதா, ஆட்சியைப் பிடித்த நேரத்தில் ஆனந்தம் அடைந்தார்கள் பிராமணர்கள். அவரை நெருங்க வேண்டும் எனவும் சிலர் முயற்சி செய்தார்கள். ஆனால், இந்த முயற்சியை நடராசன் தடுத்து நிறுத்தினார்.

ஜெயேந்திரருக்கு எதிராக அறிக்கை ஒன்றை ஜெயலலிதா விட்டபோது, ஜெயந்திரரை வலம்புரி ஜான் சந்தித்தார். ‘வாயை மூடுங்கள்’ எனச் சொல்லி ஜெயலலிதா வெளியிட்ட அந்த அறிக்கைக்குப் பின்னணியில் இருந்தவரே நடராசன்தான். ‘‘ஜெயலலிதாவின் அறிக்கை பற்றி ஜெயேந்திரரிடம் கேட்டபோது, அவர் எதுவும் பேசாமல் இருந்தார். ‘அந்த அம்மாவைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் சசிகலாதான்’ என நான் சொன்னதும் அவரின் முகம் பிரகாசம் ஆனது’’ என்கிறார் வலம்புரி ஜான். ‘‘ஜெயேந்திரருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான இடைவெளியில் ஓர் அங்குலம்கூட குறைந்துவிடாமல் பார்த்துக் கொண்டவர் நடராசன். ஜெயலலிதாவிடம் தன் மனைவியைத் தவிர எவர் நெருங்கினாலும் தனக்கு ஆபத்து என்பதை நடராசன் நன்றாக உணர்ந்திருந்தார்’’ என தனது ‘வணக்கம்’ என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கிறார் வலம்புரி ஜான். ஆரம்பத்தில் சங்கர மடத்துக்கு அடிக்கடி போய் வந்துகொண்டிருந்த ஜெயலலிதா, பிறகு சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரையும் விஜயேந்திரரையும் உள்ளே தள்ளினார். இதற்குப் பின்னணி என்ன என்பது ஆராய்ச்சிக்கு உட்பட்டது.   

எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இருந்த திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருச்சி செளந்தரராஜன் போன்றவர்கள் ஜெயலலிதா ஆதரவாளர்களாக இருந்தார்கள். இவர்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே மீடியேட்டராக இருந்தார்கள் நடராசனும் சசிகலாவும். ஜெயலலிதா சொன்னவற்றையும், அவர் சொன்னதாக நடராசன் சொன்னவற்றையும் இவர்கள் செய்து கொடுத்தனர். ‘தன் உதவியில்லாமல் இவர்கள் ஜெயலலிதாவைச் சந்திக்கக் கூடாது’ என்கிற நிலைமையை உண்டாக்கினார் நடராசன்.

p16a.jpg

இப்படி காரியங்கள் சாதித்துக்கொண்டிருந்த நடராசனின் செல்வாக்கு, அன்றைக்கு செய்தித்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனிடம் பலிக்கவில்லை. அப்போது நடராசன், செய்தித்துறையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார். ‘தன்னுடைய பதவி உயர்வு பற்றி ஆர்.எம்.வீரப்பனிடம் பேச வேண்டும்’ என நடராசன், வலம்புரி ஜானிடம் கேட்டுக் கொண்டார். ஜானும் பேசினார். ‘‘நடராசனுக்கு உதவி செய்வதும் நாகப்பாம்புவுக்கு பால் வார்ப்பதும் ஒன்றுதான்’’ எனச் சொல்லியிருக்கிறார் ஆர்.எம்.வீரப்பன். ஆனால், தனக்குப் புரொமோஷன் வாங்கித் தருவதில் வலம்புரி ஜான்தான் கட்டையைப் போடுவதாக நடராசன் நினைத்துக் கொண்டார். இந்த விஷயத்தைச் சொல்லும் வலம்புரி ஜான், ‘என்னை ஒழித்துவிட வேண்டும் என்பதில் நடராசன் உறுதியாக இருந்தார்’ எனக் குறிப்பிடுகிறார்.

வலம்புரி ஜானுக்கு எதிரான விஷயங்கள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்தன. முரசொலியில் வந்த கட்டுரையில், ஜெயலலிதாவின் கார் கதவை போலீஸ் அதிகாரிகள் திறந்து விடுகிறார்கள் எனச் சொல்லி, ‘ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை’ என எழுதியிருந்தார்கள். அதற்கு வலு சேர்க்கும் வகையில், ஜெயலலிதா அமெரிக்கா செல்ல முயன்றதை கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்கள். இதுபற்றி விரிவாக முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம்.

‘சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன்’ என வருமானவரித் துறையிடம் ஜெயலலிதா கடிதம் அளித்திருந்தார். அந்தக் கடிதத்தை அப்புறப்படுத்தி, முரசொலியின் செய்தியை பொய்யாக்கும் முயற்சி நடைபெற்றது. ஃபைலில் இருந்த அந்தக் கடிதத்தை, வருமானவரித் துறை அதிகாரி ஒருவர் எடுத்து ஜெயலலிதாவிடம் கொடுத்தார். அந்த அதிகாரி தன்னிச்சையாக கடிதத்தை எடுத்து ஜெயலலிதாவிடம் அளித்திருக்க முடியாது. பின்னணியில் யாராவது இருக்க வேண்டும் என நினைத்தார் எம்.ஜி.ஆர்.

விசாரணையை முடுக்கி விட்டபோது, கடைசியில் அது நடராசன் என்று தெரிந்தது.

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 38 - ஜெயலலிதாவின் தனி ரூட்!

 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலேயே நடராசனின் வளர்ச்சியை ‘வீக்கம்’  எனச் சொன்னார், ஆர்.எம்.வீரப்பன். தன்னுடைய புரொமோஷனுக்கு உதவி கேட்டு உதவாத வலம்புரி ஜானும், செய்தித் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனும் நடராசனின் பரம வைரிகள் ஆனார்கள். ‘தாய்’ பத்திரிகை ஆசிரியர் வலம்புரி ஜானுக்கு ஜெயலலிதா மூலம் குடைச்சல்கள் ஆரம்பமாகின. ஜெயலலிதாவை அம்பாக வைத்து, வில் பூட்டி வந்தார் நடராசன்.

ஜெயலலிதாவுக்கு அறிக்கைகள் எழுதிக் கொடுப்பது வலம்புரி ஜான்தான் என மோப்பம் பிடித்த ஒரு பத்திரிகையாளர், அதைச் செய்தி ஆக்கிவிட்டார். ‘‘வலம்புரி ஜானே இப்படி வெளியே சொல்லிக் கொண்டிருக்கிறார். அதுதான் செய்தி ஆனது’’ என கார்டனில் பற்ற வைத்தார்கள். விளைவு... அறிக்கை எழுதிக் கொடுப்பதில் கட் விழுந்தது. அதன்பிறகு சோலை, அடியார் ஆகியோர் எழுதித் தர ஆரம்பித்தார்கள். ஜெயலலிதாவையும் வலம்புரி ஜானையும் ராஜ்ய சபா எம்.பி ஆக்கினார் எம்.ஜி.ஆர். இதில் வலம்புரி ஜான் எம்.பி ஆகிவிடக் கூடாது என முயற்சிகள் நடந்தன. ‘‘வலம்புரி ஜான், ‘தாய்’ பத்திரிகையை சிறப்பாக பார்த்துக் கொள்கிறார். அவரே ‘அண்ணா’ பத்திரிகையையும் பார்த்துக்கொள்ளலாம்’’ எனச் சொல்லி முட்டுக்கட்டை போட்டார்கள். ‘அண்ணா’வையும் பார்த்துக்கொண்டால் நாடாளுமன்றத்துக்கு அவரால் போக முடியாது என்பதுதான் திட்டம். ஆனால், எம்.ஜி.ஆரிடம் அது பலிக்கவில்லை.

p22.jpg

டெல்லியில் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும்’ என வேலைகளில் நடராசன் இறங்கினார். அண்ணா அமர்ந்த இருக்கை ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அது தற்செயலாக நடந்த நிகழ்வு. ஆனால், அதை மீடியாவில் ஊதிப் பெரிதாக்கியவர் நடராசன். நாடாளுமன்றத்தில் யார் யார், என்ன பேச வேண்டும் எனத் தீர்மானிக்கிற அதிகாரம் ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது. அதை வைத்து வலம்புரி ஜானுக்கு வாய்ப் பூட்டு போடப்பட்டது. உப்பு பெறாத விஷயங்களில் மட்டுமே அவர் பேச அனுமதிக்கப்பட்டார்.

நாடாளுமன்றம் சென்ற ஜெயலலிதா, அங்கே தனக்கான அரசியல் அடித்தளத்தைப் போட ஆரம்பித்தார். அதற்கு நடராசன் உதவிகள் செய்துகொண்டிருந்தார். ஜெயலலிதாவை டெல்லி அனுப்பியதற்காக எம்.ஜி.ஆர் வருத்தப்படும் அளவுக்கு அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறின. பிரதமர் இந்திரா காந்தியைப் போய்ப் பார்த்து, தன் செல்வாக்கை அதிகரிக்க நினைத்தார் ஜெயலலிதா. ‘‘எனது வளர்ச்சியைக் கண்டு எம்.ஜி.ஆர் பொறமைப்படுகிறார். என் வளர்ச்சிக்கு நீங்கள் உதவ வேண்டும்’’ என இந்திராவிடம் கோரிக்கை வைத்தார் ஜெயலலிதா. இத்தனைக்கும் இந்திராவின் காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க-வோடு கூட்டணியில் இருந்தது. இதையும் மீறி ஜெயலலிதா தனி ரூட் போட்டார். இந்திரா மறைவுக்குப் பிறகு, அது ராஜீவ் காந்தியிடமும் தொடர்ந்தது. ‘அ.தி.மு.க-வுக்கு, தான் தலைமை ஏற்க உதவ வேண்டும்’ என ஜெயலலிதா அன்றைய பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்குக் கடிதம் எழுதியதாக சர்ச்சைகள் எழுந்தன. 

இப்படியான சூழலில்தான் எம்.ஜி.ஆரின் உடல்நிலை பாதிக்கப் பட்டது. அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்தச் சமயத்தில்தான் 1984-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கும் தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர் உடல்நிலை பற்றி பல வதந்திகள் கிளம்பிக் கொண்டிருந்தன. அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஜெயலலிதா பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அதைத் தடுக்க ஆர்.எம்.வீரப்பன் முயன்றார். ஆனால் முடியவில்லை.

p22a.jpg

‘எம்.ஜி.ஆர் தேறிவிட்டார்’ என்பதை அறிவிப்பதற்காக மருத்துவமனையில் அவர் இருந்த போட்டோக்களும் வீடியோக்களும் அடுத்தடுத்து வெளியாகின. இந்த ஏற்பாட்டைச் செய்தவர், ஆர்.எம்.வீரப்பன். தேர்தலில் வீடியோவைப் பயன்படுத்த நினைத்தார்கள். வீடியோவைத் தயாரிக்கும் பொறுப்பு ஏ.வி.எம்.சரவணனிடம் ஒப்படைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் நடந்து வருவது, பேப்பர் படிப்பது, சாப்பிடுவது, நர்ஸ்களுடன் உரையாடுவது போன்ற காட்சிகளுடன் தயாரிக்கப்பட்ட அந்த வீடியோவுக்குப் பின்னணி பேசியவர் வலம்புரி ஜான். இந்த வீடியோ விஷயம் தெரிய வந்ததும், வலம்புரி ஜானிடம் பேசினார் ஜெயலலிதா. தான் பேசுகிற காட்சிகளை அந்த வீடியோவில் சேர்க்க வேண்டும் என்றார். ஆர்.எம்.வீரப்பன் இருந்ததால் அது முடியவில்லை. எனவே, எம்.ஜி.ஆரும் தானும் நடித்த சினிமாக் காட்சிகளைத் தொகுத்துக் காட்ட நினைத்தார் ஜெயலலிதா. இதற்கான முயற்சிகளை நடராசன் செய்தார். ‘‘சினிமா நடிகை என்கிற வளையத்தில் இருந்து மீண்டு, அரசியல் தலைவர் ஆகி வருகிறீர்கள். மீண்டும் சினிமா வாழ்க்கையை மக்களுக்கு நினைவுபடுத்துவது போல் ஆகிவிடும்’’ என வலம்புரி ஜான் சொன்னார். இதனால் அந்தத் திட்டத்தை ஜெயலலிதா கைவிட்டார்.

நடராசனின் மூளை வியர்க்கத் தொடங்கியிருந்தது.

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 39 - ‘எடிட்டர்’ நடராசன்!

 
 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

டராசனின் மூளை வியர்க்கத் தொடங்கியிருந்தது. ஜெயலலிதாவின் அரசியல் லிப்ஃட்டுக்குப் பக்கபலமாக உதவிக் கொண்டிருந்த நடராசன், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களை அப்புறப்படுத்தும் காரியங்களையும் ஒரு பக்கம் செய்து கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தார் வலம்புரி ஜான். அந்த நெருக்கத்தை உடைக்க ‘எம்.ஜி.ஆருக்கு விசுவாசமாக வலம்புரி ஜான் இல்லை’ என்கிற தோற்றத்தை உருவாக்க முயற்சிகள் நடைபெற்றன. எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் கவிதைகளை உலகம் முழுவதும் இருக்கிற கவிஞர்களிடம் இருந்து திரட்டி, ஆர்.எம்.வீரப்பனிடம் கொடுத்தார் கிருஷ்ணா சீனிவாஸ் என்கிற கவிஞர். அந்தக் கவிதைகளைப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது அவரின் விருப்பம். அதைச் சரிபார்க்கும் பணி வலம்புரி ஜானிடம் தரப்பட்டது. ‘‘அர்த்தமில்லாத புகழாஞ்சலிகளோடு கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றை எழுதியவர்கள், அந்தந்த நாடுகளில் அங்கீகாரம் பெற்ற கவிஞர்கள் அல்ல’’ என வலம்புரி ஜான் சொல்ல... கவிதை அச்சுக்குப் போகவில்லை. ‘எம்.ஜி.ஆரின் புகழை வலம்புரி ஜான் மறைக்கிறார்’ என நடராசன் சொல்ல ஆரம்பித்தார். அந்த நேரத்தில் ‘தாய்’ பத்திரிகையில் ‘அந்த நாள் முதல் இந்த நாள் வரை’ என்ற தலைப்பில் தொடர் எழுதிக் கொண்டிருந்தார் சிவாஜி. ‘எம்.ஜி.ஆர் பத்திரிகையில் சிவாஜி எப்படி எழுதலாம்?’ என சிண்டு முடிந்தார்கள். இப்படி வலம்புரி ஜானுக்கு எதிராகப் பல முயற்சிகள். அவை ஒவ்வொன்றும் முறியடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

p22.jpg

எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்று வந்தபோது நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார் எம்.ஜி.ஆர். அந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். கருணாநிதியின் பிரசாரம் வழக்கத்துக்கு மாறாக இருந்தது. ‘‘ஏழு ஆண்டுகள் என்னைத் தண்டித்தீர்களே... எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தால், ஆட்சியை அவரிடம் திரும்ப ஒப்படைப்பேன்’’ என்று கருணாநிதி பேசினார். அதற்கு கவுன்ட்டர் கொடுக்க வேண்டிய நிலையில்  ஜெயலலிதாவுக்கு காரசாரமாக உரை எழுதிக் கொடுத்தார் வலம்புரி ஜான். ஆனால், ஜெயலலிதா பேசும்போது அந்த உரை நிறைய மாறிப்போனது. உரையில் பாதி ‘எடிட்’ ஆனது. காரணம், ‘எடிட்டர்’ நடராசன். ‘‘நான் எழுதுவதை நடராசன் திருத்துவது என்றால், அதைவிட அவமானம் எனக்கு வேறு இருக்க முடியாது’’ எனச் சொல்லி, ஜெயலலிதாவுக்கு எழுதிக்கொடுப்பதையே நிறுத்தினார் வலம்புரி ஜான். அத்துடன், வலம்புரி ஜானும் ஒரு பக்கம் பிரசாரத்துக்குப் போய்க்கொண்டிருந்தார். அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஜெயலலிதா. ‘‘என்னை அரசியலில் அங்கீகரிப்பது ஆபத்தாக முடியும் என ஜெயலலிதாவுக்கு எடுத்துச் சொல்லி, என்னைப் பார்த்தாலே பிரச்னை எனச் சொல்லும் அளவுக்கு ஜெயலலிதாவின் மனதை மாற்றிவிட்டார் நடராசன்’’ என்கிறார் வலம்புரி ஜான்.

எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது தமிழகத்தில் அவருக்குத் தெரியாமல் நிறைய விஷயங்கள் நடந்துகொண்டிருந்தன. வேட்பாளர் பட்டியல் தொடங்கி, அடுத்த முதல்வர் யார் என்பது வரையிலும் பல தகிடுதத்தங்கள் அரங்கேறின. தமிழகத்தில் நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் போலீஸ் அதிகாரி மோகன்தாஸ் அமெரிக்காவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். தேர்தல் பணிகள் அனைத்தும் ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் நடந்துகொண்டிருந்ததால், அவரும் தன் பங்குக்கு தகவல்களை எம்.ஜி.ஆருக்குக் கடத்திக் கொண்டிருந்தார். இப்படி வந்த இரண்டு தகவல்களும் முரண்பட்டன. ‘எம்.ஜி.ஆர் தேற மாட்டார். அப்படியே தேறிவந்தாலும் ஆட்சி புரியும் அளவுக்கு அவர் உடல்நிலை இருக்காது’ என அமெரிக்காவில் இருந்து குழப்பமான தகவல்கள் வர... முதல்வர் நாற்காலியில் ஜெயலலிதாவை அமரவைக்கத் துடித்தார் நடராசன். ‘ஜெயலலிதா வந்தால் ஆபத்து’ என நினைத்த ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர்தான் முதல்வராக வர வேண்டும் என உறுதியாக இருந்தார்.

p22a.jpg

இப்படி தமிழகத்தில் அரசியல் சதிகள் அரங்கேறிக்கொண்டிருந்த சூழலில், எம்.ஜி.ஆர் சத்தமில்லாமல் ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பித்தார். நன்கு தேறிய நிலையிலும், உடல்நலம் குன்றியவர் போலவே நடித்தார். அவரைப் பார்க்க வந்த சிவாஜி போன்றவர்கள் கூட அதை நம்பினார்கள். நடராசனும் அமெரிக்காவில் நடப்பதை மோப்பம் பிடிக்க ஆரம்பித்தார். ‘எம்.ஜி.ஆர் திரும்பி வர மாட்டார்’ என்கிற மாதிரி தகவல் கிடைக்க... அதை ஜெயலலிதாவிடம் சொன்னார் நடராசன். இதனால் ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டார் ஜெயலலிதா. திருப்பதி கோயிலுக்குப் போய் வேண்டுதல்கள் நிரைவேற்றினார். இதனை எல்லாம் உயரமான போலீஸ் அதிகாரி ஒருவர் உளவுபார்க்க ஆரம்பித்தார். அவரின் ரிப்போர்ட் அமெரிக்காவுக்குப் போய்ச் சேர்ந்தது. தனக்கு எதிராக தமிழகத்தில் நடக்கும் சதியை முறியடிக்கும் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர்.

அது என்ன?

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 40 - எம்.ஜி.ஆர் நடிப்பு... சதிகள் முறியடிப்பு!

:

 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

னக்கு எதிரான சதியை எம்.ஜி.ஆர் எப்படி முறியடித்தார்?

‘‘படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்’’ எனக்  காமராஜர் சொன்னாலும், அதை சாதித்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர் மட்டும்தான். அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்துகொண்டே மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் எம்.ஜி.ஆர்.  அந்த நேரத்தில் தமிழகத்தில் நடந்த சதிகள் பற்றிய தகவல்கள் அவருக்கு வந்து சேர்ந்தன.

1984 டிசம்பர் 24-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது. ஆனால், பதவியேற்பு நடைபெற்றது, 1985 பிப்ரவரி 10-ம் தேதி. கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கழித்துதான் பதவியேற்பு விழாவே நடைபெற்றது? ஏன் இந்தத் தாமதம்? 

p16a.jpg

தேர்தலில் வென்று அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடித்ததாலும், முதல்வராகப் பதவியேற்க வேண்டிய எம்.ஜி.ஆர், அமெரிக்கா மருத்துவமனையில் இருந்தார். அப்போது தமிழகத்தின் கவர்னராக இருந்தவர் குரானா. அவர் அமெரிக்காவுக்குச் சென்று பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்றெல்லாம் செய்திகள் கிளம்பின. அன்றைக்கு சீனியர் அமைச்சராக இருந்த நெடுஞ்செழியனும், தமிழகத் தலைமைச் செயலாளர் சொக்கலிங்கமும் அமெரிக்காவுக்குப் போய் எம்.ஜி.ஆரிடம் ஆலோசனை நடத்திவிட்டு வந்தார்கள். ஆனாலும் ஆட்சி அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கவர்னர் மாளிகைக்குப் போவதும் டெல்லிக்குப் பறப்பதுமாக இருந்தார்கள் அ.தி.மு.க  சீனியர்கள். ஒரு கட்டத்தில் ‘‘சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருவரைத் தற்காலிகமாகத் தேர்வு செய்யுங்கள். அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறேன். எம்.ஜி.ஆர் திரும்பியதும் மற்ற விஷயங்களைப் பார்த்துக்கொள்ளலாம்’’ என குரானா ஐடியா கொடுத்தார்.

‘தேர்தல் முடிந்து, பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் மத்திய காங்கிரஸ் ஆட்சி பொம்மலாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது’ என காட்டமாக அறிக்கை விட்டார், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருக்கும் நிலையை வைத்து, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறது எனக் குற்றச்சாட்டுகள் கிளம்பின. இத்தனைக்கும் அ.தி.மு.க-வும் காங்கிரஸும் கூட்டணி வைத்துதான் தேர்தலைச் சந்தித்தன. இத்தனைக்கும் காரணம், எம்.ஜி.ஆரின் உடல்நிலையை வைத்துத் தமிழகத்தில் பின்னப்பட்டிருந்த சதிகள்தான்.

கவர்னர் குரானாவுக்கு, ‘பிப்ரவரி முதல் வாரம் சென்னை திரும்புகிறேன். பதவியேற்பு தேதியை அப்போது முடிவு செய்துகொள்ளலாம்’ என எம். ஜி.ஆர் கடிதம் அனுப்பினார். ஆனால் குரானா அதை ஏற்கவில்லை. எம்.ஜி.ஆர் பதவியேற்பதற்கான கால அவகாசத்தைக் குரானா கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில், ‘‘முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளும் வகையில் எம்.ஜி.ஆர் உடல் தகுதி பெற்றுவிட்டார் என ப்ரூக்ளின் மருத்துவமனையில் இருந்து சர்டிபிகேட் வாங்கி வாருங்கள்’’ என அடுத்த அதிரடி அஸ்திரத்தை வீசினார் குரானா.

சிகிச்சையில் இருந்தபோது எம்.ஜி.ஆரை போட்டோ மற்றும் வீடியோ எடுக்கவே ப்ரூக்ளின் மருத்துவமனை அனுமதிக்கவில்லை. இந்திய அரசு அமெரிக்க அரசோடு பேசி அனுமதி வாங்கித்தான் படங்கள் எடுக்கப்பட்டன. அவை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்டன. படங்கள் எடுக்கவே அனுமதி தராத மருத்துவமனை, ‘எம்.ஜி.ஆர் தேறிவிட்டார்’ என எப்படி சர்டிபிகேட் தரும்? ‘முடியாது’ எனக் கையை விரித்துவிட்டது. வேறு வழியின்றி, எம்.ஜி.ஆரை வீடியோ படம் எடுத்து வந்து காட்டினார்கள். ‘‘பேச முடியாத, முழுமையாகச் செயல்பட முடியாத ஒருவருக்கு எப்படி பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியும்?’’ என  மறுத்துவிட்டார் குரானா.

p16.jpg

கடைசியில் எம்.ஜி.ஆர் இந்தியா திரும்பிய பிறகு குரானாவைச் சந்தித்தார். ‘‘மனதளவிலும் உடல் அளவிலும் எம்.ஜி.ஆர். தேறிவிட்டார்். அதனால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறேன்’’ என்றார் குரானா.

இப்படி 40 நாட்கள் கழித்து எம்.ஜி.ஆர் பதவி ஏற்றதற்குப் பின்னணி இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து வந்த தகவல்களை எல்லாம் வைத்து ‘எம்.ஜி.ஆரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை’ என நினைத்தார் நடராசன். அதை வைத்து ஜெயலலிதாவும் ஒரு கணக்குப் போட்டார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ராஜீவ் காந்தியை ஜெயலலிதா சந்தித்தார். ‘எனது வளர்ச்சி எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கவில்லை. அ.தி.மு.க-வுக்கு நான் தலைமை ஏற்க உதவ வேண்டும்’ என ஜெயலலிதா ஏற்கெனவே ராஜீவ் காந்தியிடம் வலியுறுத்தி வந்த நிலையில்தான் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ராஜீவ் காந்தி, ‘‘எம்.ஜி.ஆர் நலமுடன் இருக்கிறார். விரைவில் நாடு திரும்புவார்’’ எனச் சொன்ன செய்தியைக் கேட்டு ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்தார். எம்.ஜி.ஆர் உடல்நிலையை காரணமாக வைத்து ஜெயலலிதாவை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்துவிட நடந்த சதிகளை, தன் நடிப்பால் தகர்த்தெறிந்தார் எம்.ஜி.ஆர்.

சதிகள் தொடர்ந்தன!

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 41 - எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்துக் கொண்டார்!

 
 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து திரும்பிய எம்.ஜி.ஆர், ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால், முன்பு போல ஆக்டிவாக செயல்பட முடியவில்லை. அதனால், எம்.ஜி.ஆரின் இடத்தைப் பிடிக்க ஜெயலலிதா ஆசைப்பட்டார். அதற்கு நடராசன் தூபம் போட்டார். ஆனால் அந்த முயற்சிகள் பலன் அளிக்காமல் போயின. ஆனாலும் டெல்லியின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருந்தார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சியின் இறுதிப் பயணத்துக்கான ஏற்பாடுகளை அருகில் இருந்தவர்களே செய்ய ஆரம்பித்தார்கள்.

p22a.jpg

‘முதல்வர் ஆசை’ நிறைவேறாத நிலையில் கேபினெட்டுக்குள்ளாவது கால் பதித்துவிட காய்கள் நகர்த்தப்பட்டன. எப்படியாவது ஜெயலலிதா துணை முதல்வர் ஆகிவிட வேண்டும் என நினைத்தார் நடராசன். அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் தொடர்ந்து இதை வலியுறுத்திக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. ‘‘வேலைப்பளுவால் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. உங்களுக்கு உறுதுணையாக ஒருவரை வைத்துக் கொள்ளுங்கள்’’ என கவர்னர் குரானா மூலம் மறைமுகமாக    எம்.ஜி.ஆரிடம் வலியுறுத்தினார் ராஜீவ் காந்தி.

‘‘சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், எத்தனை காலத்துக்கு உயிர் வாழ்வார்கள்’’ என டாக்டர்களை அணுகிக் கேட்க ஆரம்பித்தார்கள். இந்தநிலையில்  எம்.ஜி.ஆரின் உடல்நிலை மீண்டும் பாதிப்புக்கு ஆளானது. அதற்காக வெளிநாடு சென்றார்.அவருக்கு என்ன ஆகும் என்பதைத் தெரிந்துகொள்ள நடராசன் களமிறங்கினார். வெளிநாட்டில் இருக்கிற நண்பர்கள் மூலம், எம்.ஜி.ஆரின் உடல்நிலை பற்றிய தகவல்களைத் திரட்ட முயன்றார். கடைசியில் ‘‘எம்.ஜி.ஆருக்கு என்ன பயிற்சி கொடுத்தாலும் சரியாகப் பேச வராது’’ என்கிற தகவல் வந்து சேர்ந்தது.

p22b.jpg

p22c.jpg

இப்படியான காலகட்டத்தில்தான் ‘ஜெயலலிதாவைத் துணை முதல்வர் ஆக்க வேண்டும்’ என டெல்லியில் இருந்து பிரஷர் வந்தது. இதைச் சமாளிக்க உடனே எம்.ஜி.ஆர் டெல்லி சென்றார். ‘அமைச்சரவையில் ஜெயலலிதாவுக்கு இடம் தர வேண்டும்’ என்கிற மத்திய அரசின் மறைமுக மிரட்டலைக் கண்டு எம்.ஜி.ஆர் வெம்பினார். ‘ராஜீவ் காந்தியிடம் இருந்துதான் இப்படியான உத்தரவுகள் வருகிறதா... அல்லது அவரின் அலுவலகத்தில் இருக்கிற ஜெயலலிதாவுக்கு வேண்டப்பட்டவர்கள் இதனைச் செய்கிறார்களா’ என்கிற குழப்பம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. 

இந்த நிலையில்தான் நேரு சிலை திறப்பு விழாவில் சதி ஒன்று அரங்கேறியது. சென்னை கிண்டி கத்திபாராவில் நேருவுக்குச் சிலை அமைத்து, திறப்பு விழாவுக்குத் தேதி குறித்திருந்தார்கள். சிலையை, பிரதமர் ராஜீவ் காந்திதான் திறந்து வைத்தார். இந்த விழாவில் ஜெயலலிதாவையும் மேடையேற்றிவிட முயன்றார் நடராசன். ராஜீவ் காந்தியிடம் செல்வாக்கோடு இருக்கும் ஜெயலலிதா, ராஜீவ் காந்தி பங்கேற்கும் கூட்டத்திலும் தான் இருக்க வேண்டும் என நினைத்தார். எனவே, ‘நேரு சிலை திறப்பு விழாவில் என்னையும் சேர்க்க வேண்டும்’ என ஜெயலலிதா வலியுறுத்தினார். அந்த விழாவில் பங்கேற்பதன் மூலம் ராஜீவ் காந்தியிடம் தன் செல்வாக்கைக் காட்ட வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் நோக்கமாக இருந்தது. அந்த விழாவில், புரட்சியாளர் அருணா ஆஸப் அலியை, சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர் தேர்வு செய்திருந்தார். ‘அவருக்குப் பதிலாகத் தன்னைச் சேர்க்க வேண்டும்’ என எம்.ஜி.ஆரிடம் வாதிட்டார் ஜெயலலிதா.

p22.jpg

இப்படியொரு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டால், அது தனக்குத் தலைவலி ஆகிவிடும் என நினைத்தார் எம்.ஜி.ஆர். ராஜீவ் காந்தியோடு ஜெயலலிதா ரொம்ப நெருக்கம் ஆகிவிடக் கூடாது என்பதால், விழாவில் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் வாய்ப்பு தரவில்லை. விழா வி.ஐ.பி-க்கள் பட்டியலில் ஜெயலலிதாவைச் சேர்த்தே ஆக வேண்டும் என டெல்லி அடம் பிடித்தது. விழாவில் பங்கேற்கும் ராஜீவ் காந்தியின் உரையை முன்பே தயாரிக்க ஆரம்பித்தார்கள். அதில் ‘தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஜெயலலிதா’ என்பது போல ஜெயலலிதாவைப் புகழ்ந்து ஒரு பாரா எழுதப்பட்டு இருந்தது. ‘மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.ராமசந்திரன் அவர்களே’ என்றுதான் பிரதமர் உரை எழுதப்படுவது வழக்கம். ஆனால் தயாரிக்கப்பட்ட உரையில் ‘மாண்புமிகு தமிழக முதல்வர்’ மிஸ்ஸிங். இந்த விஷயங்களை எல்லாம் எம்.ஜி.ஆர் மோப்பம் பிடித்தார். டெல்லியில் இருந்து எம்.ஜி.ஆருக்கு போன். ஆனால் இந்த முறை எம்.ஜி.ஆர் சட்டை செய்யவில்லை. ஆர்.எம்.வீரப்பனைக் களமிறக்கினார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்குச் செல்வாக்கு இல்லை என்பதை ராஜீவ் காந்திக்குக் காட்டுவதற்காக மறைமுகமான வேலைகளில் ஆர்.எம்.வீரப்பன் இறங்கினார். விழாவில் ஜெயலலிதா பேசும் சூழல் வந்தால், அதை எதிர்கொள்ள ஏற்பாடுகளைச் செய்தார்.                 எம்.ஜி.ஆரின் மனவருத்தம் ராஜீவ் காந்தியிடம் பக்குவமாகச் சொல்லப்பட்டது. அதன்பின்,  ‘எம்.ஜி.ஆரின் விருப்பத்துக்கேற்ப சிலை திறப்பு விழாவில் ஜெயலலிதா பங்கேற்க மாட்டார்’ என்கிற உறுதிமொழி தரப்பட்டது. தலைநகர் தந்த வாக்குறுதியால் எம்.ஜி.ஆர் நிம்மதி அடைந்தார். ஆனாலும் நிம்மதி நீடிக்கவில்லை.

விழாவுக்கான அழைப்பிதழ்கள் ரெடி ஆனபோது அதில் ஜெயலலிதாவின் பெயர் இடம்பெற்றிருந்து. தமிழக அரசின் பொதுத்துறையின் மேற்பார்வையில்தான் அழைப்பிதழ்களைச் செய்தித் துறை அச்சடித்தது. விசாரித்தபோதுதான் இரண்டு வகையான அழைப்பிதழ்கள் தயாரானது தெரியவந்தது. அரசு போட்ட உத்தரவைத் தாண்டி போயஸ் கார்டன் ஒரு உத்தரவைப் போட... இன்னொரு அழைப்பிதழ் ரெடி செய்துவிட்டார்கள். இந்த வேலையைப் பார்த்தவர்கள் யார் என விசாரணையில் இறங்கினார்கள். எல்லோரின் விரல்களும் நடராசனைக் கைகாட்டின. அப்போது செய்தித் துறையில்தான் நடராசன் இருந்தார்.  எம்.ஜி.ஆரைப் பகைத்துக் கொண்டு, ஜெயலலிதாவின் கட்டளைகளை நிறை
வேற்றினார் நடராசன்.

நேரு சிலையைத் திறந்து வைத்து ராஜீவ் காந்தி பேசினார். ‘தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆர்.’ என சொல்லாமல் ‘மிஸ்டர் ராமச்சந்திரன்’ என்றார். அந்த மேடையிலேயே அவர்  எம்.ஜி.ஆரிடம் சொன்னார். ‘Mr. MGR, You are so sick. Handover the responsibility to some other person, or make somebody as Deputy Chief Minister and take rest’ என்றார்.

‘துணை முதல்வரை நியமித்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்’ என ராஜீவ் காந்தி சொன்னபடியே எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்துக்கொண்டார். எம்.ஜி.ஆர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி, இந்த நேரு சிலை திறப்பு விழாதான்! 1987 டிசம்பர் 21-ம் தேதி நேரு சிலை திறப்பு விழா நடந்தது. டிசம்பர் 24-ம் தேதி  எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தார்.

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 42 - நடராசனும் குருமூர்த்தியும்!

 

 

‘‘ஜெயலலிதாவை 30 ஆண்டுகளாக என் மனைவி சசிகலா தோளில் சுமந்தார். ‘குடும்ப அரசியல் செய்கின்றனர்’  என்று கூறுகின்றனர். அன்றைக்கு ஜெயலலிதாவை குருமூர்த்தியா காப்பாற்றினார்? எங்கள் குடும்பம்தானே காப்பாற்றியது! நாங்கள் குடும்ப அரசியல்தான் செய்வோம். பி.ஜே.பி-யில் எந்தப் பதவியும் வகிக்காத ‘துக்ளக்’ குருமூர்த்தி அரசியல் செய்யும்போது, ஜெயலலிதாவைப் பாதுகாத்த நாங்கள் அரசியல் செய்யக்கூடாதா? திராவிடர்களுக்கு எதிராக பிராமணர்களுடன் சேர்ந்து குருமூர்த்திதான் சதி செய்கிறார்.’’ - 2017 பொங்கல் விழாவில் இப்படிப் பொங்கினார் நடராசன்.

ஆடிட்டர் குருமூர்த்திக்கு எதிரான நடராசனின் இந்த சீற்றம் இப்போது ஆரம்பித்தது அல்ல. 1980-களிலேயே தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம். எம்.ஜி.ஆர் வரச் சொன்னதால் அவரைப் பார்ப்பதற்காக வீட்டின் வரவேற்பறையில் காத்திருந்தார் வலம்புரி ஜான். இப்படிப் பலமுறை எம்.ஜி.ஆர் அழைப்பதுண்டு. அப்போது, எம்.ஜி.ஆரைப் பார்த்துவிட்டு மாடிப்படிகளில் இருந்து மஞ்சள் புடவையில் சசிகலா இறங்கி வந்து கொண்டிருந்தார். தி.நகர் எம்.ஜி.ஆர் அலுவலகத்தில் சசிகலாவை இப்படிப் பலமுறை பார்த்திருக்கிறார். முதன்முறையாக ராமாவரம் தோட்டத்தில் அவரைப் பார்த்தும் வலம்புரி ஜானுக்கு அதிர்ச்சி.

p26b.jpg

யோசனையோடு மாடிக்குப் போனார் வலம்புரி ஜான். அவரைப் பார்த்ததும் தலையணைக்குக் கீழே இருந்த ஒரு பேப்பரை எடுத்து அவரிடம் நீட்டினார் எம்.ஜி.ஆர். ‘பத்திரிகைச் சுதந்திரம் பறிபோகிறது’ எனத் தலைப்பிட்டு வெளியிடப்பட்ட கண்டனக் கூட்டத்துக்கான விளம்பர நோட்டீஸ் அது. சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெறும் கூட்டத்தில் ‘பத்திரிகையாளர்கள் சோ ராமசாமி, அருண் ஷோரி, வலம்புரி ஜான் ஆகியோர் உரையாற்றுவார்கள்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் சில குறிப்புகளும் எழுதப்பட்டிருந்தன. அந்த எழுத்துகளைப் பார்த்ததுமே, ‘அது ஜெயலலிதாவின் கையெழுத்து’ என்பது வலம்புரி ஜானுக்குப் புரிந்துவிட்டது.

அதைப் படித்துவிட்டு நிமிர்ந்தபோது, ‘‘எதற்காக இந்தக் கூட்டம்?’’ எனக் கேட்டார் எம்.ஜி.ஆர். ‘‘இந்தியன் எக்ஸ்பிரஸ் குருமூர்த்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடத்தப்படுகிற கூட்டம்’’ என்றார் வலம்புரி ஜான். ‘‘இந்தக் கூட்டத்துக்கு உங்களை யார் அழைத்தது. நீங்கள் ஏன் போனீர்கள்?’’ எனக் கேட்டார் எம்.ஜி.ஆர். ‘‘சோ சார்... அழைத்தார். ஆனால், நான் போகவில்லை’’ என்றார் வலம்புரி ஜான். ‘‘நிச்சயமாக நீங்கள் கலந்துகொள்ளவில்லையா?’’ என்று திருப்பிக் கேட்டார் எம்.ஜி.ஆர். ‘‘நீங்கள் இந்த மாநிலத்தின் முதல்வர். எந்த ஏஜென்ஸி வழியாகவும் இந்த உண்மையை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்’’ என வலம்புரி ஜான் சொன்னதும், அதுவரை உஷ்ணத்தோடு கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் சாந்தம் ஆனார். ‘‘ஏன் கலந்துகொள்ளவில்லை?’’ என எம்.ஜி.ஆர் கேட்டதும், ‘‘சோ சார்... பேசுகிறார். அதில் கலந்து கொண்டால் அவர் பேச்சை மறுத்துப் பேச வேண்டி வரும் என்பதால் போகவில்லை’’ என்று பதில் சொன்னார் ஜான். ‘‘ஸாரி’’ எனச் சொல்லி வலம்புரி ஜானை அனுப்பி வைத்த எம்.ஜி.ஆர்,  மறக்காமல் அந்த நோட்டீஸைத் திரும்ப வாங்கிக் கொண்டார்.

ராஜீவ் காந்தி ஆட்சியில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் மூலம் குருமூர்த்தி அம்பலப்படுத்தினார். இதற்காக தேசத் துரோகக் குற்றச்சாட்டில், 1987 மார்ச் 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்துதான் கண்டனக் கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க எம்.பி-யும்  எம்.ஜி.ஆரின் ‘தாய்’ பத்திரிகை ஆசிரியருமான வலம்புரி ஜான் அழைக்கப்பட்டிருந்தார். அ.தி.மு.க-வும் காங்கிரஸும் அப்போது கூட்டணிக்கட்சிகள். மாநிலத்தில் எம்.ஜி.ஆரும் மத்தியில் ராஜீவ் காந்தியும் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள்.

p26.jpg

இந்தச் சூழலில் நடந்த அந்தக் கூட்டத்தை ஜெயலலிதா பயன்படுத்திக் கொண்டார். ‘போபர்ஸ் ஊழல் குறித்து எழுதிய குருமூர்த்தி மீது ராஜீவ் காந்திக்குக் கோபம் உண்டு. அப்படிப்பட்டவரின் கைதைக் கண்டித்து நடத்தப்படும் கூட்டத்துக்கு வலம்புரி ஜான் சென்றால், ராஜீவ் காந்தி உங்களைப் பற்றி என்ன நினைப்பார்? இந்தக் கூட்டத்துக்கு அ.தி.மு.க எம்.பி எப்படிப் போகலாம்?’ என எம்.ஜி.ஆரிடம் பற்ற வைத்தார் ஜெயலலிதா. அந்தக் கூட்டத்துக்கான நோட்டீஸில் தன் கைப்பட குறிப்புகள் எழுதி, உயிர்த்தோழி சசிகலா மூலம் அனுப்பியிருந்தார் ஜெயலலிதா. அந்தப் பேப்பரைக் கொடுக்கத்தான் சசிகலா அன்றைக்கு ராமாவரம் தோட்டத்துக்கு வந்து போனார்.

ஜெயலலிதாவுக்கு மந்திராலோசனை சொல்கிறவர் வலம்புரி ஜான் என நினைத்துக் கொண்டு இந்த இருவருக்கும் இடையே பெரிய தடுப்புச் சுவரை எழுப்பினார் நடராசன். அதற்காக வலம்புரி ஜானையும், பிராமணரான குருமூர்த்தியையும் ஒரே கல்லில் வீழ்த்துவதற்கு, கண்டனக் கூட்டத்தை வைத்து, சதுரங்கம் ஆடினார் நடராசன்.

2017-ம் ஆண்டுக்கு வருவோம். இப்போது குருமூர்த்தியும் நடராசனும் என்ன சொல்கிறார்கள்.

‘‘சசிகலா எதற்கும் தகுதியில்லாதவர்’’ - குருமூர்த்தி

‘‘குருமூர்த்தி அரசியல் செய்யும்போது நாங்கள் அரசியல் செய்யக்கூடாதா?’’ - நடராசன்

(தொடரும்)

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 43 - நடராசன் திருமணத்தை நடத்திய கருணாநிதி

 

‘‘தியாகச் செயல்களாலும் தீப்பொறி பேச்சுக்களாலும் தமிழ்ப் பற்றுக் கொண்ட இளைஞர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் கலைஞர். நாவலர் நெடுஞ்செழியனையும் பேராசிரியர் அன்பழகனையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு கலைஞர் முன்னேறியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, சுவை மிகுந்த திரைப்பட வசனங்களால் கிடைத்த மிகப்பெரிய விளம்பரம். இரண்டு, மேடைப் பேச்சுகளோடு நின்றுவிடாமல் சாதாரணத் தொண்டர்களோடும் பழகி அவர்களின் செயலாற்றலை ஊக்குவித்தது.’’ - கருணாநிதிக்கு நடராசன் சூட்டிய பாராட்டுரை இது!

பள்ளி மாணவராக இருந்தபோது, கருணாநிதியின் எழுத்திலும் பேச்சிலும் உள்ளத்தைப் பறிகொடுத்தவர் நடராசன். தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதுதான் 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நடராசன் பங்கேற்றார். மாணவர்கள் தன்னெழுச்சியாக நடத்திய அந்தப் போராட்டத்தில், அண்ணா தலைமையிலான தி.மு.க-வும் பங்கெடுத்தது. கருணாநிதி மீது அன்பு வைத்திருந்த நடராசனுக்கு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட கருணாநிதி மீது கோபம். நீதிமன்றத்தில் கருணாநிதி அளித்த   வாக்குமூலம்தான் நடராசனின் கோபத்துக்குக் காரணம்.

p22.jpg

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையொட்டி, 1965 பிப்ரவரி 16-ம் தேதி கருணாநிதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலை பெறுவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணாநிதி அளித்த வாக்குமூலத்தில், ‘என்னைக் காவலில் வைத்திருப்பது தவறான நோக்கத்தின் அடிப்படையில்தான். நானோ, எனது கட்சியோ மாணவர் கிளர்ச்சியைப் பற்றி எதுவும் சொன்னதில்லை’ எனக் குறிப்பிட்டிருந்தார். சிறை வாழ்க்கையை அஞ்சாமல் ஏற்று வந்த கருணாநிதி, சிறையிலிருந்து விடுதலைப் பெற மனு போட்டது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தஞ்சையில் தலைமையேற்று நடத்தி வந்த நடராசனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இந்த விஷயம் நடராசனை உறுத்திக்கொண்டே இருந்தது. கருணாநிதி மீது கோபத்தில் இருந்த நடராசனின் திருமணத்தை, கருணாநிதிதான் நடத்தி வைத்தார்.

மன்னர் சரபோஜி கல்லூரியில் பி.எஸ்ஸி பட்டத்தை வாங்கி வெளியே வந்த நடராசனுக்கு, அரசியல் ஆசை எட்டிப் பார்த்தது. கல்லூரிக் காலத்தில் கட்சி சார்பற்ற முறையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்ட நடராசன், பட்டதாரி ஆனபிறகு மொழிப் போரைத்  தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்த தி.மு.க-வில் இணைய முடிவெடுத்்தார். இதற்கு முக்கியக் காரணம், அப்போது தி.மு.க-வில் இருந்த எல்.கணேசன்தான். இந்தியை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் அண்ணா, 1967 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என நினைத்தார் நடராசன்.

அரசியலில் குதித்த நடராசன், இந்தி எதிர்ப்பு மாநாட்டை தஞ்சையில் நடத்த களமிறங்கினார். அதற்காக எல்.கணேசனின் உதவியை நாடினார். தஞ்சையில் இருக்கிற கல்லூரிகளின் மாணவர் தலைவர்களை எல்லாம் அழைத்துக் கூட்டம் போட்டார். சிறப்பு விருந்தினராக அண்ணா பங்கேற்க வேண்டும் என எண்ணி, அவரிடம் தேதி கேட்க முயன்றார். அப்போது தஞ்சை மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருந்த அண்ணா, தஞ்சை வ.உ.சி நகரில் இருந்த மத்திய அரசுச் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார். அண்ணாவைச் சந்தித்துத் தேதி வாங்கப் போனார் நடராசன். அண்ணா அருகில் இருந்த மன்னை நாராயணசாமி, ‘‘இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தஞ்சையில் நடத்திய மாணவர் தலைவர்களில் நடராசனும் ஒருவர்’’ என அண்ணாவுக்கு அறிமுகம் செய்தார்.

தி.மு.க உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் தஞ்சையின் தளகர்த்தர்களில் மன்னை நாராயணசாமி முக்கியமானவர். இவர் தலைமையில்தான் நடராசனின் திருமணம் 1973 அக்டோபர் 16-ம் தேதி நடைபெற்றது. சசிகலாவின் கழுத்தில் நடராசன் கட்டிய தாலியை எடுத்துக் கொடுத்தவர் கருணாநிதி. அந்தத் தாலியை அப்போது சுமந்த சசிகலாதான், தமிழக அரசியலில் பிறகு கோலோச்சுவார் என கருணாநிதி கிஞ்சித்தும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கருணாநிதி மீது வருத்தம் கொண்ட நடராசன், அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதியை வைத்துதான் தன் திருமணத்தை நடத்தினார். அந்த நடராசன் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி பிறகு விவரித்தபோது கருணாநிதியை என்ன சொன்னார் தெரியுமா? 

‘‘இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் அடித்தளத்தின் மீதுதான் கலைஞர் போன்றவர்கள் அமைச்சர்கள் ஆகக் கூடிய தி.மு.க ஆட்சி மாளிகை 1967-ல் அமைய முடிந்தது. இப்படி அமைந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தையே தமக்குச் சம்பந்தம்  இல்லாதது போல நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்து விடுதலை பெறத் துடித்த கலைஞர்தான், மாணவர் போராட்டம் தந்த உச்சக் கட்டப் பலன்களைத் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்.’’

(தொடரும்)

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 44 - நடத்தரசன் ஆன நடராசன்!

 

 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

தி.மு.க-வில் சேர்ந்த பிறகு தனக்கான தடத்தைப் பதிக்க நினைத்தார் நடராசன். அதற்கான தொடக்கப்புள்ளிதான் இந்தி எதிர்ப்பு மாநாடு. 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தி, தமிழகத்தையே கிடுகிடுக்க வைத்தார்கள் மாணவர்கள். மன்னர் சரபோஜி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நடராசன், தஞ்சையில் மாணவர்கள் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திக்கொண்டிருந்தார். மாணவர்கள் ஒத்துழைப்புடன் இந்தி எதிர்ப்பு மாநாட்டை 1966 ஜூனில் தஞ்சை திலகர் திடலில் நடத்தினார். அனைத்துக்கட்சி தலைவர்களையும் அழைத்து நடத்தப்பட்ட இரண்டு நாள் மாநாட்டில், அண்ணாதான் சிறப்பு விருந்தினர். ஜி.டி.நாயுடு, காயிதே மில்லத், அப்துல் சமது, பெருஞ்சித்திரனார், கருணாநிதி, எல்.கணேசன், விருதுநகர் சீனிவாசன், கே.ஆர்.ராமசாமி எனப் பலரும் பங்கேற்றனர். அண்ணா உரையாற்றுவதற்கு முன்பு கருணாநிதி பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

p34a.jpg

அன்றைய தினம் இலக்குவனாரின் ‘குறள் நெறி’ நூல் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. அதில் கருணாநிதி பங்கேற்றார். விழா முடிந்து நடராசனிடம் போனில் பேசிய இலக்குவனார், ‘‘தஞ்சை நோக்கி காரில் கிளம்பி விட்டோம். நாங்கள் வருவதற்குள் அண்ணாவைப் பேச அழைத்துவிடாதீர்கள். அவருக்கு முன்பு கலைஞர் பேச வேண்டும்’’ என்றார். ‘‘சரி... சீக்கிரம் வந்துவிடுங்கள்’’ என்றார் நடராசன்.

மாநாட்டுக்கு அண்ணா வந்தார். முதலில் மற்ற தலைவர்கள் பேசினார்கள். ‘‘கருணாநிதி வந்துவிடுவாரா?’’ என நடராசனிடம் அண்ணா கேட்க, ‘‘வந்துவிடுவார்’’ என்றார் நடராசன். இறுதியாக முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த அப்துல் சமது உரையாற்றிக் கொண்டிருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. அண்ணா, நடராசனிடம் ‘‘கருணாநிதி இனிமேல் வரவே மாட்டார்’’ என்றார். 

அப்படி அண்ணா சொன்னதற்கு அர்த்தம் இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு முன்பே அண்ணாவுக்கும் கருணாநிதிக்கும் பிணக்கு. அண்ணா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கருணாநிதி கலந்துகொள்வதைத் தவிர்க்கும் அளவுக்குக் கசப்பு முற்றியிருந்தது. அண்ணா ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பே தி.மு.க-வில் கோஷ்டி பூசல்கள் உருவாகின. அப்படித்தான் ஈ.வெ.கி.சம்பத் கட்சியைவிட்டுப் போனார். அதேபோல் கருணாநிதியும் போகலாம் எனப் பேச்சுகள் கிளம்பின. கருணாநிதியின் போக்கு அண்ணாவுக்கு எரிச்சலை ஏற்படுத்த, கசப்புகள் கூடிக்கொண்டே போயின. திருச்சி  தி.மு.க மாநாட்டில் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை. இதைவைத்து ‘அண்ணாவுக்கும் கருணாநிதிக்கும் லடாய்’ எனப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இந்தப் பின்னணியில்தான், ‘‘கருணாநிதி வர மாட்டார்’’ என்றார் அண்ணா. ‘தஞ்சாவூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த கருணாநிதி நிச்சயம் வருவார்’ என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

அப்துல் சமது பேசி முடித்ததும் அண்ணா உரையாற்ற ஆரம்பித்தார். அதே நேரம், கருணாநிதி, தஞ்சைக்கு அருகே வல்லம் என்ற ஊருக்கு வந்துவிட்டார். அண்ணா பேசத் தொடங்கிவிட்ட நிலையில் மாநாட்டுக்கு வந்தால் சரியாக இருக்குமா என கருணாநிதிக்குத் தயக்கம். இந்தத் தகவல் அன்றைக்குத் தஞ்சை நகர தி.மு.க செயலாளராக இருந்த நடராசனுக்கு (இவர் வேறொரு நடராசன்) வர, இரண்டு நடராசன்களும் வல்லம் நோக்கி காரில் போனார்கள். ‘‘இதற்கு மேலும் பிணக்கு நீடித்தால் தி.மு.க உடைந்தாலும் உடைந்துவிடும். மாநாட்டில் இருவரையும் சந்திக்க வைத்துவிட வேண்டும்’’ என சொல்லிக் கொண்டிருந்தார், சசிகலா கணவர் நடராசன். வல்லத்தின் எல்லையில் இருந்த பாலத்தின் அருகே காரில் கருணாநிதியும் இலக்குவனாரும் காத்திருந்தார்கள். ‘‘நாம் போவதற்குள் அண்ணா பேசி முடிச்சிட மாட்டாரா?’’ என கருணாநிதி கேட்க... ‘‘அவ்வளவு சீக்கிரம் அவர் முடிக்க மாட்டார். வாருங்கள் போவோம்’’ என அழைத்துப் போனார்கள்.

p34.jpg

மாநாட்டுப் பந்தலுக்குள் கருணாநிதி நுழைந்ததும், அண்ணா பேச்சை நிறுத்திவிட்டு கருணாநிதியை அருகில் அழைத்து, அவரது தலையில் செல்லமாகக் குட்டு வைத்தார். பேச்சைத் தொடர்ந்த அண்ணா, ‘‘இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் இறுதிப் பகுதியை இனி கருணாநிதி சொல்வார்’’ எனப் பேச்சை முடித்தார். மைக் முன்பு வந்த கருணாநிதி, ‘‘அண்ணா பேசி விட்டார் என்றால் தமிழ்நாடே பேசிவிட்டது என அர்த்தம். இந்தி எதிர்ப்பு உணர்ச்சி இன்றுபோல் என்றுமே வாழ்க’’ எனச் சுருக்கமாகத் தனது உரையை முடித்துக் கொண்டார்.

அன்றைக்கு அண்ணாவுக்கும் கருணாநிதிக்கு மான பிணக்கைப் போக்கியதில் நடராசனுக்கு முக்கிய ரோல் உண்டு. இரண்டு முக்கிய ஆளுமைகளின் பிணக்கைப்போக்க முடிந்த நடராசனால், ஜெயலலிதாவோடு தனக்கு ஏற்பட்ட பிணக்கை மட்டும் கடைசிவரையில் போக்க முடியவில்லை.

நடராசனை ‘நடத்தரசன்’ என்றுதான் அழைப்பார் இலக்குவனார். ‘‘எல்லோரையும் எல்லாவற்றையும் நன்றாக நடத்துகின்ற அரசன். அதனால்தான் நடத்தரசன் என்கிறேன்’’ என அதற்கு விளக்கம் கொடுப்பார் இலக்குவனார். நடராசன் அரசியலில் நடத்தரசன் ஆனார்! 

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan/

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 45 - ஆசிரியர் வேலை போனது... அரசியல் வேலை வந்தது!

டராசனும் மற்ற மாணவர்களும் சேர்ந்து தஞ்சையில் 1966-ம் ஆண்டு நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணா உரையாற்றுவதற்கு முன்பு எல். கணேசன் உரையாற்றினார். அப்போது அண்ணாவே எதிர்பார்க்காத ஒரு செய்தியை நடராசன் சொன்னார். ‘’வருகிற சட்டமன்றத் தேர்தலில் பேரறிஞர் அண்ணாவின் அனுமதியோடு போட்டியிடக்கூடிய எல்.கணேசன், அடுத்து உரையாற்றுவார்’’ என அறிவித்தார். அண்ணாவும் எந்த ரியாக்‌ஷனையும் காட்டவில்லை.

அந்த மாநாடு முடிந்ததும் ஆயிரம் ரூபாயை எல்.கணேசனின் சட்டைப் பாக்கெட்டில் திணித்தார் நடராசன். ‘‘எதுக்கு’’ என எல்.கணேசன் கேட்க... ‘‘மாநாட்டில் உரையாற்றிய பலருக்கும் தந்தது போல உங்களுக்கும் வழிச் செலவுக்குத் தர நினைத்தேன். அந்தப் பணம்தான் இது’’ என்றார் நடராசன். ‘‘எனக்கு வேண்டாம்’’ என எல்.கணேசன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க.. ‘‘பணத்தை வாங்க தயக்கமாக இருந்தால், அண்ணா எப்படியும் உங்களைத் தேர்தலில் நிற்க வைப்பார். தேர்தல் செலவுக்கு எங்களின் முதல் நன்கொடையாக வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார் நடராசன். ‘‘சரி’’ என அவரும் பெற்றுக் கொண்டார்.

p16.jpg

சொந்த ஊர் விளாரில் விவசாயம் செய்து கொண்டிருந்த நடராசனின் தந்தை, தஞ்சாவூர் நகருக்கு வந்து அரிசி, நெல் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். அவரோடு நடராசனின் சகோதரரும் சேர்ந்து கொண்டார். நன்றாக போய்க் கொண்டிருந்த வியாபாரத்தில் திடீர் நட்டம். தேர்தல் செலவுக்காக எல்.கணேசனுக்கு நடராசன் பணம் கொடுத்தது போல சூரக்கோட்டையை சேர்ந்த அரசியல் புள்ளி ஒருவருக்கு ஊராட்சி ஒன்றியத் தேர்தல் செலவுக்குப் பணம் கொடுத்தார் நடராசனின் சகோதரர். இந்தப் பணம் திரும்பி வராததால் நடராசன் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. வேறுவழியில்லாமல் பி.எஸ்ஸி பட்டதாரியான நடராசன் வேலைக்குச் சென்றார்.

இந்தி எதிர்ப்பு மாநாடு முடித்த சில மாதங்களிலேயே தற்காலிக ஆசிரியர் வேலை நடராசனுக்குக் கிடைத்தது. தஞ்சை பேராவூரணியை அடுத்த பெருமகளூர் ஊரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக 1966 செப்டம்பரில் சேர்ந்தார். கொஞ்ச காலத்திலேயே எல்லா பாடங்களையும் எடுக்க ஆரம்பித்தார். அப்போது நடராசன் வாங்கிய சம்பளம் 210 ரூபாய்.

ஆசிரியர் வேலையை நடராசன் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் 1967 சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அறிவிக்கப்பட்ட எல்.கணேசனுக்கு ஒரத்தநாடு தொகுதியில் ‘சீட்’ கொடுத்தார் அண்ணா. ஒரத்தநாட்டில் தேர்தல் அலுவலகத்தின்  திறப்பு விழா நடைபெற்றபோது நடராசன் பங்கேற்றார். பெருமகளூர் உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை செய்து கொண்டே விடுமுறை நாட்களில் ஒரத்தநாட்டுக்கு வந்து  எல்.கணேசனுக்குத் தேர்தல் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும் நடராசன் மீது எல்.கணேசனுக்கு வருத்தம்.

ஒரு நாள் திடீரென்று கோபத்தை நடராசன் மீது காட்டினார் எல்.கணேசன். ‘‘மம்பட்டியை எடுத்து வந்து என் தலையில் மண்ணை வாரிக் கொட்டிவிட்டு போங்க... என்னைத் தேர்தலில் நிற்க தூண்டிவிட்டுவிட்டு இப்ப நீங்க ஆசிரியர் வேலையைப் பார்க்க பெருமகளூரிலே உட்கார்ந்து கொண்டால் தேர்தல் வேலைகளை எல்லாம் யார் பார்ப்பார். எப்படி ஓட்டுக் கேட்பது.. தேர்தல் செலவுக்கு எங்கே நிதி திரட்டுவது’’ எனக் கொதித்தார் எல்.கணேசன். உடனே ‘ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்கிறேன்’ என விலகல் கடிதத்தை எழுதி அனுப்பிவிட்டு எல்.கணேசனுடன் தேர்தல் வேலைகள் பார்க்க ஆரம்பித்தார். அரசியல் கற்க ஆரம்பித்தார்.

ஆசிரியர் வேலை போனது. அரசியல் வேலை வந்தது.

(தொடரும்)


‘‘எனக்கு யாரும்  காது குத்த முடியாது!’’

நோய் இல்லாமல் வாழ்வதற்காக சிறு பிள்ளைகளுக்குக் காது குத்தும் வழக்கம் ஆரம்ப காலத்தில் இருந்தது. அந்த நாட்டுப்புற நம்பிக்கையில் சிறுவனாக இருந்த நடராசனுக்கும் காது குத்த நினைத்தார்கள். காது குத்தல் விழா ஏற்பாடாகி, தட்டார் வந்து நகை தயாரிக்க அளவு எல்லாம் எடுத்துவிட்டு போனார். மொட்டை அடித்து காது குத்துவது நடராசனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. காசவளநாடு புதூரில் இருக்கும் அத்தை வீட்டிற்கு ஓடிவிட்டார். பெற்றோர்கள் நடராசனை அழைக்க வந்தபோது ‘காது குத்த மாட்டோம்’ என உறுதி மொழி கொடுத்த பிறகுதான் நடராசன் ஊருக்குத் திரும்பினார். இந்தச் சம்பவத்தைச் சொல்லும் நடராசன், ‘‘அன்றைக்குக் காது குத்திக் கொள்ளாமல் தப்பிவிட்டேன். இது தெரிந்தோ தெரியாமலோ பலர் இன்றைக்கும் எனக்குக் காது குத்த முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றி பெறாது என்பது என்னைப் புரிந்தவர்களுக்கு தெரியும்’’ என்கிறார். அவர் மற்றவர்களுக்கு காது குத்துகிறாரா? என்பது ஊரறிந்தது?

http://www.vikatan.com/juniorvikatan/

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 46 - கருணாநிதியிடம் நடராசன் கறந்த கரன்சி!

 

 

ந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தலைமை... அண்ணா, கருணாநிதி என அரசியல் தலைவர்களோடு தொடர்பு... இந்தி எதிர்ப்பு மாநாடு என அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் ‘அரசியல் வாடை’யை நுகர ஆரம்பித்தார் நடராசன். தேர்தல் அரசியலுக்குள் அவர் கால் பதித்தது 1967 சட்டமன்ற தேர்தலில்தான். இந்தியைத் திணித்த காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட வேண்டும்; அண்ணா தலைமையிலான தி.மு.க, ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என ஆசைப்பட்டார் நடராசன். அவருடைய நண்பர் எல்.கணேசன் ஒரத்தநாடு வேட்பாளர் ஆனதால், அவருக்காகத் தேர்தல் வேலைகளில் பங்கெடுத்தார். மாணவர் குழுக்கள் அமைத்துத் தேர்தல் பிரசாரத்தைச் செய்து வந்தார்.

எல்.கணேசனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நின்றவர் தண்டாயுதபாணி; பெரும் பணக்காரர். எல்.கணேசன் நிலை அவருக்கு நேரெதிர். அதனால் தேர்தல் செலவுக்கு நிதி திரட்டும் வேலைகளிலும் நடராசன் இறங்கினார். தி.மு.க-வின் பொருளாளரான கருணாநிதி, ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று கட்சியின் தேர்தல் நிதியை தி.மு.க வேட்பாளர்களுக்கு அளித்து வந்தார். அப்படி ஒரத்தநாடு தொகுதிக்கு வந்தபோது பிரச்னை ஏற்பட்டது. எல்.கணேசனை அழைத்த கருணாநிதி, ‘‘தலைமை அலுவலக மேனேஜர் சண்முகத்திடம் 30 ஆயிரம் ரூபாய் தேர்தல் செலவுக்கு வாங்கிக்கொள்ளுங்கள்’’ என்றார். இந்த விஷயத்தை நண்பர்கள் நடராசன், ராஜமாணிக்கம், ஜெகதீசன் ஆகியோரிடம் சொன்னார் எல்.கணேசன்.

p32a.jpg

எல்.கணேசனைவிட நடராசனுக்கு ஆத்திரம் அதிகரித்தது. ‘‘மற்ற தொகுதி வேட்பாளர் களுக்கு எல்லாம் 50 ஆயிரம் ரூபாய். நமக்கு 30 ஆயிரமா? கலைஞர் ஓரவஞ்சனை செய்கிறார். ஒரத்தநாடு தொகுதியில் ஜெயிக்கப் போகிறோம். ‘கட்சிப் பணத்தில் ஜெயிச்சோம்’ என்கிற பெயர் எதற்கு? பணத்தை வாங்க வேண்டாம். அதைவிட இரண்டு மடங்கு நிதியை நாம் திரட்டலாம்’’ என நடராசன் சொல்ல... அதை எல்.கணேசன் ஏற்றுக் கொண்டார்.

‘பணம் வேண்டாம்’ என்பதைச் சொல்ல, கருணாநிதியைச் சந்திக்கப் போனார்கள். ‘‘கட்சியில் நிதியில்லை. இழுபறி தொகுதிகளுக்குக் கூடுதலாகவும், நிச்சய வெற்றி கிடைக்கும் தொகுதிகளுக்குக் குறைவாகவும் கொடுக்கலாம் என அண்ணா முடிவு செய்திருந்தார். அதனால் அவரைக் கேட்காமல் நான் ஒன்றும் செய்ய முடியாது’’ என்றார் கருணாநிதி. உடனே நடராசன், ‘‘வெற்றியோ தோல்வியோ எந்தத் தொகுதியாக இருந்தாலும், சில அடிப்படை செலவுகளைச் செய்துதான் ஆக வேண்டும். குறைச்சலான நிதியைப் பெற்றுக்கொண்டு மனச்சங்கடத்தோடு வேலை செய்வதைவிட, நாங்களே முடிந்த அளவுக்கு நிதியைத் திரட்டிச் சமாளித்துக்கொள்கிறோம்’’ என்றார்.

உடனே கருணாநிதி, ‘‘உங்களுக்குச் சங்கடம் வேண்டாம். உங்க தொகுதியில் ‘காகிதப் பூ’ நாடகம் போட்டு நடித்துக் கொடுக்கிறேன். அதை வைத்து நிதியை நீங்கள் திரட்டிக்கொள்ளலாம்’ என்றார். சொன்னபடியே ‘காகிதப் பூ’ மேடையேறியது. அதில் கிடைத்த 30 ஆயிரம் ரூபாயை எல்.கணேசனிடம் கொடுத்தார் கருணாநிதி. நடராசன் கறந்த கரன்சி இது! எல்.கணேசன் வென்றார், தி.மு.க-வும் ஆட்சிக்கு வந்தது.

p32.jpg

நடராசனின் அரசியல் நுழைவே, ‘சட்டமன்ற உறுப்பினர்’ என்கிற இலக்கை நோக்கித்தான் பயணித்தது. அண்ணா மறைவுக்குப் பிறகு நடைபெற்ற 1971 சட்டமன்ற தேர்தலில் கண் பதித்தார். சட்டமன்றத்துக்குள் கால் பதிக்க நினைத்த நடராசன், அதற்காகத் தேர்வு செய்திருந்த தொகுதி கந்தர்வக்கோட்டை. தேர்தலில் டிக்கெட் வாங்குவதற்காக நடராசனுக்கு இருந்த ஒரே சேனல் எல்.கணேசன்தான்.

‘தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்’ என்கிற விருப்பத்தை எல்.கணேசனிடம் சொன்னார் நடராசன். அந்த நேரத்தில் நடராசன் குடும்பம் சங்கடத்தில் சிக்கியிருந்தது. இது எல்.கணேசனுக்கும் தெரியும். ‘‘நீங்கள் நாட்டைக் காப்பாற்றப் போகிறீர்களா... இல்லை, வீட்டைக் காப்பாற்ற நினைக்கிறீர்களா? வீட்டைக் காப்பாற்ற விரும்பினால், முதல்வர் கலைஞரிடம் சொல்லி ஒரு நல்ல வேலையைப் பெற்றுத் தருகிறேன். நாட்டைக் காப்பாற்ற நினைத்தால் தேர்தலில் டிக்கெட் வாங்கிவிட முடியும். ஆனால் வெற்றி பெறுவது என்பது உறுதியில்லை. வீட்டைக் காப்பாற்ற வேலையா அல்லது நாட்டைக் காப்பாற்ற தேர்தலில் இடமா? முடிவு செய்து சொல்லுங்கள்’’ என்றார்.

‘‘யோசித்துவிட்டுச் சொல்கிறேன்’’ என்று திரும்பிய நடராசன், சில நாட்கள் யோசித்தார். குடும்பத்துக்காக வேலையில் சேர முடிவு செய்தார். முதல்வர் கருணாநிதி மூலம் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரி (பி.ஆர்.ஓ) பதவியை நடராசனுக்குப் பெற்றுக் கொடுத்தார் எல்.கணேசன்.

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 47 - நடராசனின் உடன்பிறவா சகோதரி!

 

 

ருணாநிதிக்கும் நடராசனுக்குமான முதல் சந்திப்பு எப்படி நடந்தது தெரியுமா?

பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, மன்னர் சரபோஜி கல்லூரியில் புதுமுக வகுப்பில் (PUC) சேர்ந்தார் நடராசன். தஞ்சாவூர் அருள் தியேட்டர் அருகில் ஒரு இடத்தில் நடராசனும் அவரது வகுப்புத் தோழர்களும் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். 1962-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பி.யூ.சி தேர்வுகள் நடைபெற்றன. அதற்காக மாணவர்கள் தயாராகி கொண்டிருந்தார்கள். தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடைபெற்றதால் பிரசாரம் வேறு களைகட்டியிருந்தது.

p40.jpg

ஒரு நாள் மாலை. நண்பர்களுடன் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தார் நடராசன். அப்போது ஓட்டுக்கேட்டு சிலர் வந்தார்கள். அதில் கருப்புக் கண்ணாடி, நேர் வகிடு எடுத்த சுருள் முடி, தோளில் பச்சை சால்வை, உடம்போடு ஒட்டிய ஜிப்பா இப்படியான காஸ்ட்யூமில் ஒருவர் நடுநாயகமாகக் காட்சியளித்தார். அவர் வேறுயாருமில்லை, மு.கருணாநிதிதான். தஞ்சாவூர் தொகுதி தி.மு.க வேட்பாளராகக் கருணாநிதி அந்தத் தேர்தலில் போட்டியிட்டார். வாக்குகள் கேட்பதற்காகத்தான் மாணவர்களை அவர் சந்தித்தார். அப்போதுதான் கருணாநிதியை முதல்முறையாக சந்தித்தார் நடராசன். நடராசனின் கிளாஸ்மேட் விக்டரின் அண்ணன்தான் கருணாநிதியை அழைத்து வந்தார். அவர், ‘‘இவங்க எல்லோரும் நம்ம பசங்கதான்’’ எனச் சொல்லி கருணாநிதிக்கு அறிமுகம் செய்தார்.

‘‘உங்க ஓட்டையெல்லாம் உதயசூரியன் சின்னத்துக்குப் போட்டு என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்’’ என மாணவர்களிடம் கருணாநிதி கேட்டுக் கொண்டார். உடனே நடராசன், ‘‘எங்களுக்கு ஓட்டு கிடையாது. ஓட்டுப்போடுற வயசு வரவில்லை’’ என்றார். கருணாநிதியோ, ‘‘உங்களுக்கு ஓட்டு இல்லையென்றாலும் உங்க வீட்டில் இருக்கிற பெரியவர்களை உதயசூரியன் சின்னத்துக்குப் போடச்சொல்லுங்க’’ எனச் சொன்னார். பதிலுக்கு நடராசன், ‘‘எங்களுக்குப் பரீட்சை இருக்கு... படிக்க வேண்டும்’’ என்று சொல்ல... ‘‘முதலில் தேர்தல் வேலை செய்யுங்கள். தேர்வு அப்புறம்தான் வருது. அப்ப படித்துக்கொள்ளலாம்’’ எனச் சொன்னார் கருணாநிதி.

கருணாநிதி கேட்டுக்கொண்டதால் நடராசனும் அவரது நண்பர்களும் கருணாநிதிக்கு வாக்குச் சேகரித்தார்கள். கருணாநிதியை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் பரிசுத்த நாடார் போட்டியிட்டார். பரிசுத்த நாடாரின் உறவினர் யாகப்பா நாடாருக்குச் சொந்தமான இடத்தில்தான் நடராசனும் அவரது நண்பர்களும் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். யாகப்பா நாடாரின் மகன்தான் விக்டர். இப்படியான சூழலில்தான் கருணாநிதிக்கு அவர்கள்  பிரசாரம் செய்தார்கள். தேர்தல் முடிவு வெளியானபோது, 1,928 ஓட்டுகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றிருந்தார்.

சரபோஜி கல்லூரியில் நடராசன் இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி படித்துக் கொண்டிருந்தபோது கல்லூரிப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பதவிக்கு செல்லதுரை என்பவரை நிறுத்தினார்கள் நடராசனும் அவரது நண்பர்களும். கலாட்டா, தகராறு, பணம் எனப் பேரவைத் தேர்தல் களைகட்டியது. கருணாநிதிக்கு வாக்குக் கேட்ட அனுபவத்தைப் பேரவைத் தேர்தலில் பயன்படுத்தினார் நடராசன். செல்லதுரையும் வெற்றிபெற்றார்.

p40a.jpg

நடராசனின் குலதெய்வம் வீரனார். ஆண்டுதோறும் வீரனாருக்கு ஆடு வெட்டிப் படையல் கொடுப்பார்கள். ஒரு பொங்கல் பண்டிகையின்போது வீரனாருக்கு ஆடு பலி கொடுத்தார்கள். இதை சிறு வயதில் பார்த்த நடராசன், ‘உயிரைக் கொல்வதுப் பாவம்’ எனச் சொல்லி எதிர்த்தார். திருக்குறளில் ‘புலால் மறுத்தல்’ பற்றி படித்த தாக்கத்தால் அசைவம் சாப்பிடுவதையே நிறுத்தினார் நடராசன். பிராமணர்களை நடராசன் எதிர்த்து வந்தபோதிலும் பிராமணர்களைப் போலவே சைவராக மாறிப் போயிருந்தார். சென்னையில் நடராசன் தங்கியிருந்தபோது சைவத்திற்கு சோதனை வந்தது.

ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரி சசிகலா என்பது உலகமறிந்த செய்தி. நடராசனுக்கும் உடன்பிறவா சகோதரி ஒருவர் இருந்தார். கோவிந்தராஜுலு என்பவரின் மகள் சரோஜாதான் அந்த உடன்பிறவாச் சகோதரி. ஒரு நாள் அவர் வீட்டுக்கு நடராசன் போனபோது சாப்பாட்டில் மீனைக் கலந்து நடராசனுக்குக் கொடுத்து விட்டார் சரோஜா. அப்போது நடராசன் ஒல்லியாக இருப்பார். அவர் உடல் தேற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த ஏற்பாட்டை சரோஜா செய்திருந்தார்.

இது தெரிந்ததும் நடராசன் ரொம்ப கவலைப்பட்டார். புலாலை மறுத்து வந்த தனக்கு இப்படி நடந்து விட்டதே என வருத்தப்பட்டார். உடனே சரோஜா, ‘‘பிராமணர்களே இப்போது கறி, மீன் எல்லாம் சாப்பிடுகிறார்கள். அசைவம் சாப்பிடா விட்டால் உன் உடம்பு தேறாது’’ எனச் சொன்னார்.

அன்று சைவம் செத்தது. அசைவம் உயிர் பெற்றது.

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 48 - ‘‘கவிதை அல்லாததைப் பிரசுரிக்க முடியாது!’’

 

 

மிழ்த் துறையைச் சேர்ந்தவர்கள்தான் கவிதை, கட்டுரைகளில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். ஆனால், கல்லூரியில் உயிரியல் படித்துக் கொண்டிருந்த நடராசனுக்குத் தமிழ் மீது கொள்ளைப் பிரியம். அதற்குக் காரணமாக இருந்தவர், புலவர் முத்துக்குமரன். பள்ளி, கல்லூரிக் காலங்களில் கட்டுரை, கவிதைகள் எழுதுவதில் நடராசன் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளியில் படிக்கும்போது ‘லிப்டன்’ டீ நிறுவனம் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வாங்கினார். பாரதியார், பாரதிதாசன் பாடல் வரிகளில் ஈர்ப்புகொண்டு கவிதைகள் எழுத ஆரம்பித்தார். கல்லூரி தமிழ்ப் பேரவை கவியரங்கங்களில் பங்குபெற்றார். கவிதையோடு நிற்காமல் பட்டிமன்றங்களிலும் தடம் பதித்தார்.

‘நான் ஆசிரியன் ஆனால்...’ என்ற தலைப்பில் ஒரு முறை நடராசன் கவிதைப் பாடினார். பிறகு உண்மையிலேயே ஆசிரியர் ஆனார். பெருமகளூர் பள்ளியில் சிறிதுகாலம் ஆசிரியர் வேலைப் பார்த்தார். அதன்பிறகு அரசு வேலையில் சேர்ந்து, அதையும் உதறிவிட்டு பல ஆண்டுகள் கழித்து ‘தமிழ் அரசி’ என்கிற பத்திரிகையை ஆரம்பித்து அதற்கு ஆசிரியர் ஆனார். ‘நான் ஆசிரியன் ஆனால்...’ என்ற தலைப்பில் நடராசன் பாடிய கவிதையில்,

‘மதம் - கட்சி இவையிரண்டுங் கல்விக் கென்ன
மாமன்மகள் உறவாநாம் கலந்து பேச?
இதமாகக் கவியொடு இவற்றைச் சேர்க்க
இனிக்கின்ற கத்திரிக்காய்க் கூட்டாக் கல்வி!’
எனக் கேள்வி எழுப்பினார்.

p16a.jpg

மதம் அரசியலை மட்டுமின்றி மொத்த சமுதாயத்தையும் சீரழிக்கும் என்பதுதான் அவர் பாடிய கவிதையின் சாரம். இப்படியாக மதம், கட்சி என அப்போதே நடராசன் அரசியல் பேச ஆரம்பித்தார். அந்த ‘மதம்’ பிரச்னையைக் கடைசி வரை தூக்கிப் பிடித்தார் நடராசன். அது 2017 பொங்கல் விழாவில் எதிரொலிக்க... மத்திய பி.ஜே.பி ஆட்சி வரை சூடேற்றியது. அது பன்னீர்செல்வத்துக்குச் சிவப்புக் கம்பளத்தையும் தினகரனுக்கு திகார் சிறைவாசத்தையும் பெற்றுத் தந்தது.

‘தாய்’ பத்திரிகையில் ஒரு முறை ‘கர்நாடக’ சிறப்பிதழ் வெளியிட்டார்கள். அந்த நேரத்தில் அதன் ஆசிரியர் வலம்புரி ஜான், ஜெயலலிதாவைப் பார்க்க போயஸ் கார்டன் போயிருந்தார். அவருக்காகக் காத்திருந்த நேரத்தில் ‘தாய்’ பத்திரிகையைக் கையில் வைத்துக்கொண்டிருந்த சசிகலா, ‘‘கர்நாடகச் சிறப்பிதழில் அம்மாவைப் பற்றி எதுவுமே இல்லையே. அக்காவே ரொம்ப வருத்தப்பட்டார்’’ என வலம்புரி ஜானிடம் தெரிவித்தார். ‘‘அம்மா கர்நாடகத்தைச் சேர்ந்தவர் எனத் தமிழர்கள் பேச மாட்டார்களா? அதனால்தான் அம்மாவின் கட்டுரை இதில் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டேன்.’’ என்றார் வலம்புரி ஜான். உடனே சசிகலா,

‘‘எம்.ஜி.ஆரை மலையாளிகள் என்றார்கள். அது எடுபட்டதா?’’ என்றார். இது எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற உரையாடல். எம்.ஜி.ஆரின் பத்திரிகைதான் தாய். அப்போதே எம்.ஜி.ஆர் ரேஞ்சுக்கு ஜெயலலிதாவை சசிகலா நிறுத்தியிருந்தார்.

p16.jpg

வலம்புரி ஜானுடனான அந்தச் சந்திப்பில் ஒரு கவிதையை அவரிடம் கொடுத்து, ‘‘இது அம்மா எழுதின கவிதை.’’ என்றார் சசிகலா. அதைப் படித்துப் பார்த்த வலம்புரி ஜானுக்கு, அது வேறொருவர் எழுதியது என்பது புரிந்துவிட்டது. அதாவது சசிகலா, தான் எழுதியதை ஜெயலலிதாவின் கவிதை எனச் சொல்லி வலம்புரி ஜானிடம் கொடுத்துப் பிரசுரம் செய்ய நினைத்தார். ஆனால், அந்தக் கவிதையை வலம்புரி ஜான் ‘தாய்’ இதழில் வெளியிடவில்லை. அதே சந்திப்பின்போது, ‘‘எனது கணவர் நல்ல எழுத்தாளர். அவர் ஏதாவது எழுதிக் கொடுத்தால் பிரசுரிக்க வேண்டும்.’’ என வலம்புரி ஜானிடம் கேட்டுக் கொண்டார் சசிகலா. ‘‘தகுதியாக இருந்தால் பிரசுரிக்கலாம்’’ எனச் சொன்னார் ஜான்.

சில மணி நேரத்திலேயே நடராசன் ‘தாய்’ அலுவலகத்துக்கு வந்து வலம்புரி ஜானைச் சந்தித்தார். ‘‘அண்ணாவின் நினைவு நாளுக்காக நான் எழுதியது.’’ எனச் சொல்லி ஒரு கவிதையை நீட்டினார். அது பிரசுரம் ஆகவில்லை. அதற்கு வலம்புரி ஜான் சொன்ன விளக்கம் இது.

‘‘கவிதை அல்லாததைப் பிரசுரிக்க முடியாது.’’

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 49 - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடராசன்!

 

 

பி.எஸ்சி முடித்து ஆசிரியர் வேலைக்குப் போய், அதையும் எல்.கணேசனுக்காக உதறிவிட்டுத் தேர்தல் வேலையைப் பார்த்த நடராசனுக்கு எம்.ஏ தமிழ் அல்லது ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்பது ஆசை. காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நடராசன் பங்கேற்றார். அதனால், அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு அடுத்து படிப்பதற்குக் கல்லூரிகளில் இடம் அளிக்கக் கூடாது என வாய்மொழி உத்தரவைப் போட்டிருந்தது காங்கிரஸ் அரசு. அதனால் முதுகலை படிப்பில் நடராசனால் சேர முடியவில்லை. அண்ணா ஆட்சி அமைந்தபிறகு கல்லூரியில் இடம் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை வகுப்பில் சேர விண்ணப்பித்து இருந்தார். ஒரத்தநாட்டில் ஜெயித்த எல்.கணேசனிடமும் இதனைத் தெரிவித்தார். ஆனாலும், மாநிலக் கல்லூரியில் நடராசனுக்கு சீட் கிடைக்கவில்லை.    

p26a1.jpg

மன்னர் சரபோஜி கல்லூரிப் பேராசிரியர்கள் விமலா நத்தம், கு.சிவஞானம் ஆகியோர் நடராசனின் விருப்பத்தை அறிந்து உதவினார்கள். அவர்களோடு பூண்டி புஷ்பம் கல்லூரி பேராசிரியர் காத்தையனும் சேர்ந்து, ஒரு காரில் நடராசனை அழைத்துக்கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார்கள். அங்கே இருந்த பேராசிரியர் வெள்ளைவாரணனாரைச் சந்தித்தார்கள். அவர் நடராசனிடம் ‘‘என்ன படிக்க விருப்பம்?’’ எனக் கேட்டார். ‘‘எம்.ஏ தமிழ் அல்லது ஆங்கிலம்’’ என்றார் நடராசன். ‘‘ஆங்கிலத் துறையின் அட்மிஷன் முடிந்துவிட்டது. தமிழ் எம்.ஏ-வைவிட மொழியியல் முதுகலைப் பட்டப்படிப்பு படியுங்கள். அறிவு வளர்ச்சிக்கு உதவும்’’ எனச் சொன்னார் வெள்ளவாரணனார். அதனால் மொழியியல் படிப்பில் சேர்ந்தார் நடராசன்.  

1969-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடராசன் படித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்தி எதிர்ப்புத் தியாகி மாணவர் ராஜேந்திரன் சிலை, சிதம்பரத்தில் திறக்கப்பட்டது. 1965 ஜனவரி 26-ம் தேதி, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச்சூட்டுக்கு மாணவர் ராஜேந்திரன் பலியானார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீப்பற்றி எரிய முதல் களப்பலி ஆனவர் ராஜேந்திரன். அவருக்குச் சிலை அமைப்பதற்காகக் குழு அமைக்கப்பட்டது. அதில் மற்ற மாணவர்களோடு நடராசனும் இடம்பெற்றார். சிலை அமைக்க நன்கொடை திரட்டப்பட்டது. முதலில் அண்ணாவைச் சந்தித்தது குழு. அண்ணா, நூறு ரூபாய் நிதி அளித்தார். பணம் சேர்ந்த நிலையில், சிலையைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கருணாநிதி, சிதம்பரம் வந்தபோது, அவரை மாணவர்களோடு போய்ப் பார்த்தார் நடராசன். பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் சாலை, நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது. அங்கே சிலை வைக்க கருணாநிதி ஒப்புதல் தந்தார்.   

p26b.jpg

1969-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதியன்று ராஜேந்திரன் சிலை திறக்கப்பட்டது. 1967-ல் ஆட்சியைப் பிடித்த அண்ணா, 1969 பிப்ரவரியில் மரணம் அடைந்தார். அதன்பிறகு முதல்வர் ஆன கருணாநிதிதான் அந்தச் சிலையைத் திறந்து வைத்தார். அமைச்சர் கே.ஏ.மதியழகன், எஸ்.டி.சோமசுந்தரம் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன்முடிதான் பிறகு தி.மு.க அமைச்சரானார் என்பது பலரும் அறியாதது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துவிட்டுத் தீவிர அரசியலில் கால் பதிக்க நினைத்தார் நடராசன். 1971 சட்டசபைத் தேர்தலில் கந்தர்வக்கோட்டை தொகுதியில் நின்று எம்.எல்.ஏ ஆக ஆசைப்பட்டார். ஆனால், அவருடைய ஆசைக்கு அணை போட்டு, செய்தித் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரி என்கிற அரசு வேலையை எல்.கணேசன் பெற்றுத் தந்தார். அதன்பிறகு நடராசனின் திருமணம் கருணாநிதி தலைமையில் நடந்து, மணவாழ்க்கை தொடங்கியது. தஞ்சாவூர், கடலூர், ஆவின், மெட்ரோ வாட்டர் எனப் பல இடங்களில் மக்கள் தொடர்பு அதிகாரியாக அடுத்தடுத்து பணியாற்றி வந்தார் நடராசன். எம்.ஜி.ஆர் ஆட்சியில், நடராசன் தனது லீலைகளை நடத்த ஆரம்பித்தார்.   

p26c1.jpg

சென்னையில் சசிகலாவுக்கு வீடியோ கடையை வைத்துக் கொடுத்தார் நடராசன். ஜெயலலிதா அ.தி.மு.க-வுக்குள் என்ட்ரி ஆனபோது அவரது நிகழ்ச்சிகளுக்கான வீடியோ கவரேஜ் வாய்ப்பு கிடைத்ததோடு, ஜெயலலிதாவோடு நெருக்கமும் ஆனார் சசிகலா. இந்த நெருக்கம்தான் ஜெயலலிதாவை உளவு பார்க்க சசிகலாவை     எம்.ஜி.ஆர் பணியமர்த்தவும் காரணமாக அமைந்தது. இதற்காக மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராசனிடம் ஒப்புதலும் பெற்றார்கள்.

ஜெயலலிதா அ.தி.மு.க-வில் நுழைந்தது முதல் எம்.ஜி.ஆர் மறைவு வரையில் நடராசன் நடத்திய அரசியலைக் கடந்த அத்தியாயங்களில் பார்த்துவிட்டோம். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு என்ன நடந்தது?

(தொடரும்)

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 50 - ராஜாஜி ஹால் அரசியல்!

 

 

ராமாவரம் தோட்டம். 1987  டிசம்பர் 24-ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு எம்.ஜி.ஆருக்கு நெஞ்சுவலி ஏற்பட... மயக்கமானார். டாக்டர்கள் அவரின் இதயத் துடிப்பை இயல்பாக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதிகாலை 3 மணிக்கு உயிர் பிரிகிறது. பொழுது விடிந்தபோது ‘முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மரணம்’ எனச் சோக கீதம் இசைத்தது வானொலி.

வெளியூருக்கே டிரங்கால் புக் செய்துதான் லேண்ட் லைனில் பேசக் கூடிய காலகட்டம் அது. எம்.ஜி.ஆரின் மரணச் செய்தி எல்லா திக்கிலும் உடனே எட்டவில்லை. இறுதிச் சடங்கு ஏற்பாட்டைச் செய்ய வேண்டிய அதிகாரிகளுக்கு மட்டும் தகவல்கள் உடனே போய்ச் சேர்ந்தன. ராஜாஜி ஹால் செய்தித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அந்தத் துறையில் அதிகாரியாக இருந்த நடராசனுக்கும் தகவல் வந்தது. உடனே சசிகலாவையும் தினகரனையும் ஜெயலலிதா வீட்டுக்கு அனுப்பித் தகவலைச் சொல்லி ‘ஜெயலலிதாவை உடனே ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்றார் நடராசன். கட்சிக்குள் தனக்கான ஆளுமையை ஜெயலலிதா செலுத்த முயன்றதால், எம்.ஜி.ஆரின் மரணச் செய்தி ஜெயலலிதாவுக்கு உடனே போகவில்லை. அந்த இடத்தில் நடராசன் ஸ்கோர் செய்தார். ‘எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஜெயலலிதாவுக்குத்தான் மக்களை வசீகரிக்கும் பண்பு இருக்கிறது’ என்பதை உணர்ந்த நடராசன், எம்.ஜி.ஆர் மரணத்தை வைத்து ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்த நினைத்தார். அது தனது எதிர்கால அரசியல் லாபத்துக்கு உதவும் என எண்ணினார்.

p34.jpg

ராமாவரம் தோட்டத்துக்கு ஜெயலலிதா சென்றபோது அவருடன் சசிகலாவும் தினகரனும் சென்றார்கள். அப்போது என்ன நடந்தது எனச் சசிகலாவின் சகோதரர் திவாகரன் சொல்வதைக் கேட்போம். ‘‘எம்.ஜி.ஆரின் உடலைப் பார்க்க ஜெயலலிதாவை அனுமதிக்க வில்லை. அவரை ஓர் அறையில் வைத்துப் பூட்ட நினைத்தார்கள். தினகரன்தான் அதை எதிர்கொண்டு ஜெயலலிதாவை அழைத்து வந்தார்’’ என்கிறார். அதன்பிறகு எம்.ஜி.ஆரின் உடல் வைக்கப்பட்ட ராஜாஜி ஹாலுக்கு ஜெயலலிதாவை அழைத்து வரும் ஏற்பாட்டை நடராசன் செய்தார். எம்.ஜி.ஆரின் உடலுக்கு அருகில் ஜெயலலிதாவை நிற்க வைத்தார். ‘‘சீனியர்களையும் அமைச்சர்களையும் சமாளித்து, சசிகலா மூலம் ஜெயலலிதாவை அழைத்து வந்து உடலுக்கு அருகில் நிற்க வைத்தேன். அப்போது ஜெயலலிதாவைப் பெண்கள் ஊக்கால் குத்தினார்கள். ஆண்கள் பூட்ஸ் காலால் மிதித்தார்கள். ராணுவ வண்டியில் இருந்து ஜெயலலிதாவைச் சேலையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளினார்கள். அப்போது கைப்பிடித்துத் தாங்கியவர் சசிகலா. அந்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கு நாங்கள்தான் கதி’’ என்கிறார் நடராசன். 

எம்.ஜி.ஆர் இறந்த துக்கத்தில், அவர் மனைவி ஜானகி அம்மாள் மயக்கமடைந்தார். ராஜாஜி ஹாலுக்குச் செல்ல அவரை டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. அங்கே எம்.ஜி.ஆரின் உடலுக்கு அருகே ஜெயலலிதா நிற்பதை சீனியர்கள் ரசிக்கவில்லை. அதனால் ஜானகியை ராஜாஜி ஹாலுக்கு அழைத்து வந்தார்கள். ‘எம்.ஜி.ஆரின் வாரிசு நான்தான்’ என்பதை இறுதிச் சடங்கின் மூலம் நிலைநிறுத்த முயன்றார் ஜெயலலிதா. எம்.ஜிஆரின் உடல் ராணுவ வண்டியில் கிடத்தப்பட்டபோது அதில் ஏற முயன்றார். இதை ஜானகி தரப்பினர் அனுமதிக்கவில்லை. அவரை வண்டியில் இருந்து தள்ளிவிட்டனர். இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் அன்றைக்கு தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. அதற்கு நேரடி வர்ணனை செய்து கொண்டிருந்த வலம்புரி ஜானிடம் ஒரு அதிகாரி, இந்தச் சம்பவத்தையும் சொல்லச் சொன்னார். ஆனால், அவர் சொல்லவில்லை. ‘‘வர்ணனை செய்து களைத்துவிட்டீர்கள். வேறோருவர் செய்தால் நல்லது’’ என்றார் அதிகாரி. அது, அந்த அதிகாரியின் கவலை அல்ல; நடராசனின் கவலை. எல்லாம் திட்டமிட்டு நடப்பதுபோல இருந்தது.  

ராஜாஜி ஹாலில் நடந்ததை அறிக்கையாக விட்டார் ஜெயலலிதா. ‘‘சொந்தக் கட்சியினரே என்னை மோசமாக நடத்தினார்கள். கண்ணியம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தேன். தலைவரின் முகத்தை பொதுமக்கள் பார்ப்பதற்கு வசதியாகத் திருப்பி வைக்க முயன்றேன். கே.பி.ராமலிங்கமும் நடிகர் தீபனும் என் நெற்றியில் அடித்தார்கள். ராணுவ வண்டியில் இருந்து அடித்துத் தள்ளப்பட்டேன்’’ என்றார். இதில் எங்கேயும் சசிகலாவின் பெயரை ஜெயலலிதா சொல்லவில்லை.

எம்.ஜி.ஆர் இருக்கும்போதே துணை முதல்வராக வேண்டும் என ஜெயலலிதா ஆசைப்பட்டார். அவரது அந்த ஆசையை நிறைவேற்ற, நேரு சிலை திறப்பு விழா வரை தனது தந்திரங்களை நடராசன் கையாண்டார். அந்தச் சிலைத் திறப்பு விழாவுக்கு இரண்டு நாள் கழித்துதான் எம்.ஜி.ஆரின் மூச்சு நின்று போனது. 1987 டிசம்பரில் ராஜாஜி ஹாலில் கற்ற வித்தைகளையும் பாடத்தையும் 2016 டிசம்பரில் அதே ராஜாஜி ஹாலில் நடத்தினார் நடராசன். ஜெயலலிதாவின் உடல் அருகில் யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் உடலைச் சுற்றி சசிகலா குடும்பம் அமைத்த அரணுக்குப் பெயர்தான் அரசியல்!

(தொடரும்) 

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.