Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரிவடைந்து செல்லும் தீர்வுக்கான சாத்தியம்

Featured Replies

சரிவடைந்து செல்லும் தீர்வுக்கான சாத்தியம்

 

இவையெல்லாவற்றையும் உற்று நோக்குகின்ற போது தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய விதத்தில் அரசியல் சாசனம் கொண்டுவரப்படுமா? அவ்வாறு இல்லையாயின் தமிழ் மக்களின் எதிர்கால நிலைமைகளும் நகர்வுகளும் எவ்வாறு இருக்கப் போகின்றன?

 

யுத்­த­கா­லத்தில் இலங்கை அர­சாங்­கத்­துக்கும் விடு­தலைப் புலி­க­ளுக்­கு­மி­டையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் போது, இல்­லாத எதிர்ப்பும் கண்­ட­னங்­களும் புதிய அர­சியல் சாசனம் உரு­வாகும் இவ்­வே­ளையில் காணப்­ப­டு­வதும் காட்­டப்­ப­டு­வதும் இலங்கை அர­சி­யலின் நெருக்­கடிப் போக்­கு­களை தெளி­வா­கவே விளக்­கு­கி­றது.

புதிய அர­சியல் யாப்பு தொடர்பில் இன்னும் தெளி­வான முடி­வுக்கு இலங்கை அர­சாங்­கமோ வழிப்­ப­டுத்தல் குழுவோ வராத நிலையில் அது­பற்றி ஊகங்­களும் ஆரு­டங்­களும் தாறு­மா­றா­கவே, வீசப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைக் கொண்டு பாரா­ளு­மன்றுக்­குள்­ளேயே புதிய அர­சியல் சாச­னத்தை நிறை­வேற்றப் பாருங்கள், இல்­லை­யாயின் சாசனம் சர்வசன ­வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­டு­மானால் தோற்று விடும். இதனால் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை எட்­ட­மு­டி­யாமல் போய்­விடும் என்ற எச்­ச­ரிக்­கையை ஆளும் அர­சாங்க கட்­சி­யி­னரே விடுத்துக் கொண்­டி­ருப்­பதை காண்­கின்றோம்.

அண்­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஊடகப் பேச்­சாளர் டிலான் பெரேரா இவ்­வாறு ஒரு எச்­ச­ரிக்­கையை விடுத்­தி­ருந்தார். புதிய அர­சியல் யாப்பு நிறை­வேற்­ற­மா­னது சர்­வ­சன வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­டு­மாயின் அது தோற்றுப் போய்­விடும் அபா­யமே அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது.

எனவே வாக்­கெ­டுப்­புக்கு செல்­லாமல் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் உயர்ந்த பட்ச அதி­காரப் பகிர்­வினை மேற்­கொள்­வது தான் பொருத்­த­மாக அமையு­மென்ற எச்­ச­ரித்­த­லுடன் ஆலோ­ச­னை­யையும் நல்­கி­யி­ருக்­கிறார் டிலான் பெரேரா.

த.தே.கூ.அமைப்பை பொறுத்­த­வரை ஏலவே, அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய அர­சியல் சாச­ன­மா­னது பாரா­ளு­மன்­றுக்­குள்­ளேயே மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றப்­பட்டு அது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வதே சாத்­தி­ய­மா­னது என்ற கருத்தைக் கொண்­ட­வர்­க­ளாக இருந்­த­ போ­திலும் அண்­மைக்­கா­ல­மாக கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யினால் அது நிறை­வேற்­றப்­பட்­டாலும் இலங்கை மக்கள் அனை­வ­ரது ஒப்பு­த­லு­ம் பெறப்­பட வேண்டும். எனவே புதிய சாச­ன­மா­னது சர்­வ­சன வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­டு­வதே உறு­தி­யா­ன­தா­கவும் உண்­மை­யா­ன­து­மாக இருக்­கு­மென்ற கருத்தை கூறி­வ­ரு­கின்றார் இரா.சம்­பந்தன்.

அவ­ரு­டைய இந்த நிலைப்­பா­டா­னது இரு விட­யங்­களை மையப்­ப­டுத்தி கூறிய கருத்­தா­கவே இருக்­கு­மென ஊகிக்க முடி­கி­றது. தமிழ் ­பேசும் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் தீர்வுத் திட்­ட­மா­னது நாட்டின் அனைத்துத் தரப்­பி­ன­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும்.

அனைத்துத் தரப்­பினர் மத்­தி­யிலும் இணக்­கப்­பாடு, ஏற்­படும் வகை­யி­லான தீர்வுத் திட்­ட­மொன்­றுக்கு செல்­வதே பொருத்­த­மாக அமையும் என்­பது ஒரு எதிர்­பார்ப்­பா­கவும் இன்­னொரு புறம் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யினால் நிறை­வேற்­றப்­ப­டு­கி­ற­போது, இன்­னு­மொரு சந்­தர்ப்­பத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை கொண்ட ஒரு அர­சாங்கம் அமை­யு­மானால் அவ்­ அ­ர­சாங்கம் தீர்வுத் திட்­டத்தை ஏற்­றுக்­கொள்­ளாத அர­சாங்­க­மாக மாறும் பட்­சத்தில் அது உடைக்­கப்­ப­டலாம் என்ற எதிர்­கால தீர்க்க தரி­சனம் கருதி அல்­லது எதிர்­கால பாதுகாப்பு கருதி இந்த தீர்­மா­னத்­துக்கு தமிழ்த் தரப்­பினர் வர நியா­ய­மி­ருக்­கலாம்.

சர்­வ­சன வாக்­கெ­டுப்­பென்­பது எதிர்­கால பாதுகாப்­பாக, சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அமை­வ­துடன் எதிர்­கா­லத்­திலும் சரி எக்­கா­லத்­திலும் சரி சிறு­பான்மை சமூ­கத்தின் ஆத­ர­வின்றி சர்­வ­சன வாக்­கெ­டுப்­பொன்றில் பெரும்­பான்மைச் சமூ­கத்­தவர் வெற்­றி­காண முடி­யாத எதிர்­கால தீர்க்க தரி­ச­னத்­து­டனும் சர்­வ­சன வாக்­கெ­டுப்பு நிலைப்­பாட்­டுக்கு கூட்­ட­மைப்­பினர் வந்­தி­ருக்க முடி­யு­மென ஊகிக்­க இ­ட­முண்டு.

ஆனால் இதே கருத்தை மாற்றிப் போட்டு பார்ப்­போ­மானால் சிறு­பான்மை சமூ­கத்தின் ஆத­ர­வின்றி எவ்­வாறு சர்­வ­சன வாக்­கெ­டுப்­பொன்றை நிறை­வேற்­ற­மு­டி­யாதோ அதே­போன்று பெரும்­பான்மை மக்­களின் நிறை­வான ஆத­ர­வின்றி சர்­வ­சன வாக்­கெ­டுப்­பொன்றை நடத்தி அர­சியல் சாச­னத்தை நிறை­வேற்­று­வது என்­பது எவ்­வ­ளவு கடி­ன­மா­னதும் ஆபத்­தா­ன­து­மான விட­ய­மாக இருக்க முடி­யு­மென்­பதை கற்­பனை செய்­து­பார்க்­கின்­ற­போது அதன் அபா­யத்­தன்மை புரியக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

பெரும்­பான்மை சமூ­கத்தைப் பொறுத்­த­வரை புதிய அர­சியல் சாசனம் என்ற வகையில் சர்­வ­சன வாக்­கெ­டுப்­புக்கு ஆத­ரவு தரு­ப­வர்­க­ளாகக் காணப்­பட்­டாலும் அது தமிழர் அபி­லா­ஷை­க­ளையும் கோரிக்­கை­க­ளையும் குறிப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கோரிக்­கை­களை பச்­சைத்­த­ன­மாக உள்­ள­டக்­கி­ய­தாக இருக்­கு­மானால் அந்த அர­சியல் சாச­னத்தை நிறை­வேற்ற பெரும்­பான்­மை­யினர் ஆத­ரவு நல்­கு­வார்­களா என்ற சந்­தேகம் இன்னும் இன்னும் வளர்ந்­து ­கொண்டு போகி­றது.

இன்­றைய அர­சாங்கம் பத­வி­யேற்ற காலத்­தி­லி­ருந்த நிலை­மை­க­ளு­டனும் போக்­கு­க­ளு­டனும் இன்­றைய சூழ்­நி­லையை ஆராய்ந்து பார்ப்­போ­மானால் நிலை­மைகள் சரிந்து கொண்­டு ­வ­ரு­கி­ன்றன என்­ப­தே உண்மை.

சர்­வ­சன வாக்­கெ­டுப்பு நடத்­தினால் புதிய அர­சியல் அமைப்பு தோற்­று­விடும் அபாயம் காணப்­ப­டு­கி­றது. கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கு ஏன் இது விளங்­க­வில்­லை­யென எச்­ச­ரிக்கை மணி அடித்துக் கொண்­டி­ருக்கும் சுதந்­திரக் கட்­சி­யி­னரே இலங்­கையின் ஒற்­றை­யாட்­சிக்கு எது­வித ஆபத்தும் ஏற்­ப­டாது பாது­காத்துக் கொள்­வ­துடன் ஒற்­றை­யாட்­சிக்கு உட்­பட்­ட­தா­கவே இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு அமையும்.

சமஷ்­டிக்கு இந்­நாட்டில் இட­மில்லை. மாகாண சபை அதி­கா­ரங்­களைப் பொறுத்­த­வரை ஆளு­நர்­களின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­ப­ட­மாட்­டாது. பொலிஸ், காணி அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­மு­டி­யாது என திட்­ட­வட்­ட­மாக கூறி­வ­ரு­கி­றார்கள்.

அவ்­வா­றாயின் இவர்கள் என்ன நினைக்­கி­றார்கள்? தமிழ் மக்­க­ளு­டைய எந்த அபி­லா­ஷை­க­ளுக்கும் கோரிக்­கை­க­ளுக்கும் இங்கு இட­மில்லை. நாங்கள் தரு­வதை ஏற்றுக் கொள்­ளுங்கள். இல்­லை­யாயின் எந்த தீர்வும் உங்­க­ளுக்கு கிடைக்­கப்­போ­வ­தில்­லை­யென்ற தொனியில் கருத்­து­களைக் கொட்டிக் கொண்­டி­ருப்­பதைக் காண்­கின்றோம்.

இதில் கவ­னிக்­கப்­பட வேண்­டிய விட­ய­மென்­ன­வெனில் பொது­ப­ல­சேனா, ஹெல உறு­மய போன்ற இன­வா­தக்­கு­ழுக்கள் வெளிப்­ப­டை­யாக கூறு­கின்ற கருத்­து­களை அர­சாங்கத் தரப்­பினர் மறை­மு­க­மாக கூறிக் கொண்­டி­ருப்­ப­தே­ உண்மை நிலை­யாகக் காணப்­ப­டு­கி­றது.

புதிய அர­சியல் அமைப்பில் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்வை பரி­சீ­லனை செய்து ஒற்­றை­யாட்­சியை நாச­மாக்க அரசு முற்­ப­டு­மாயின் அதற்கு எதி­ராக பொது எதி­ர­ணி­யா­னது மக்கள் சக்­தியைத் திரட்டி பாரிய போராட்­டங்­களை நடத்­து­மென மேற்­படி பொது எதி­ர­ணியைச் சேர்ந்­த­வர்கள் எச்­ச­ரிக்கை விடுத்து வரு­கின்­றார்கள். போகிற போக்­கு­நி­லையைப் பார்த்தால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அணியும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அணியும் இணையும் காலமும் நேரமும் நெருங்கிக் கொண்­டி­ருக்­கி­றது என்று ஆருடம் கூறப்­ப­டு­கி­றது.

அவ்­வாறு நிக­ழு­மாயின் பொரி­மாத்­தோண்­டியின் கதையைப் போல் தமிழ் மக்­களின் நிலையும் ஆகி­வி­டுமோ என்ற சந்­தேகம் வள­ரா­ம­லில்லை. இத்­த­கைய அதி­சயம் இலங்­கை ­அ­ர­சி­யலில் நடை­பெ­றாது என்று கூற­மு­டி­யாது.

இது இவ்­வாறு இருக்­கின்ற நிலையில் கடந்த 60 வரு­டங்­க­ளுக்கு மேலா­கவும் யுத்த முடி­வுக்குப் பின்­னரும் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்குத் தீர்­வாக சமஷ்டி முறை­யி­லான தீர்வே ஏற்­பு­டை­ய­தா­னது என்று கூறி­வ­ரு­கின்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சமஷ்டி முறை­யி­லான அர­சியல் தீர்வு பற்றி முன்­மொ­ழி­ய­வில்லை.

இது­பற்றி அவர்கள் மூடு மந்­திரம் கொண்­ட­வர்­க­ளா­கவே இருந்து வரு­கின்­றார்கள். சமஷ்­டிதான் அவ­சி­ய­மென புதிய அர­சியல் அமைப்பு தயா­ரிப்­புசார் கூட்­டங்­களின் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எது­வித கருத்­தையும் முன்­வைக்­க­வில்லை. எனவே அவர்கள் சமஷ்டி முறை­யி­லான தீர்வை கோர­வில்­லை­யென ஜே.வி.பி.யினர் கூறி­வ­ரு­கி­றார்கள்.

புதிய அர­சியல் சாசன நிறை­வேற்றம் தொடர்பில் இன்­றைய அர­சாங்கம் நடை­மு­றையில் எத்­த­கைய சவால்­களை சந்­திக்­கப்­போ­கி­றது என்­பதை ஒரு ஊகத்தின் அடிப்­ப­டை­யிலோ அல்­லது விமர்­சன ரீதி­யா­கவோ நோக்­கு­வோ­மாயின் அது­பற்­றிய தெளி­வான கருத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

1)ஆளும் அர­சாங்­கத்­துக்குள் உள்ள கருத்து வேறு­பா­டுகள், 2)தேசிய அர­சாங்­கத்­துக்குள் காணப்­படும் விரி­சலான நகர்­வுகள், 3)தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நம்­பிக்­கை­களும் எதிர்­பார்ப்­பு­களும், 4)தமிழ் மக்­களின் ஏகோ­பித்த அபி­லா­ஷைகள், 5)இன­வாதக் குழுக்­களின் கடு­மை­யான போக்­குகள், 6)பொது எதி­ர­ணி­யி­னரின் கடு­மை­யான விமர்­ச­னங்­களும் எச்­ச­ரிக்­கை­களும், 7)சர்­வ­தேச அளவில் காணப்­ப­டு­கின்ற அழுத்­தங்கள், 8)சிறு­பான்­மை­யி­னரின் வித்­தி­யா­ச­மான நகர்­வுகள், 9)சர்­வ­சன வாக்­கெ­டுப்பை வெற்றி கொள்­வ­தி­லுள்ள தேசிய செல்­நி­லைகள் என ஏகப்­பட்ட சவால்­க­ளுக்கு மத்­தியில் அகப்­பட்டுப் போயி­ருக்கும் ஒரு விவ­கா­ர­மாக இன்­றைய சூழ்­நி­லையில் அர­சியல் சாசன வடி­வ­மைப்பும் அதன் நிறை­வேற்­றமும் அகப்­பட்டுப் போயுள்­ளது என்­பது தெளி­வா­கவே புலப்­ப­டு­கின்ற விட­ய­மாகும்.

மேலே, சுட்­டிக்­காட்­டப்­பட்ட எல்லா விட­யங்­க­ளையும் ஆராய்­வது பொருத்­த­மான விட­ய­மாக இருக்­காது என்­பதைக் கவ­னத்தில் கொண்டு இரண்­டொரு விட­யங்களை மாத்­திரம் நோக்­கு­வது விட­யத்­தையும் உண்மை நிலை­யையும் விளங்கிக் கொள்ள உத­வி­யாக இருக்கும்.

புதிய அர­சியல் சாசன ஆக்கம் தொடர்பில் குறிப்­பாக அர­சியல் தீர்வு விட­யத்தில் எந்­த­வொரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் நேர்த்­தி­யான உடன்­பாடு இன்னும் காணப்­ப­ட­வில்­லை­யென்­பதே யதார்த்­த­மாக தெரி­கி­றது.

அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை எவ்­வகை தீர்வை உள்­ள­டக்­கி­ய­தாக அர­சியல் தீர்வு அமை­யப்­போ­கி­றது என்ற தெளி­வான சமிக்­ஞையை அவர்கள் இன்னும் வெளிப்­ப­டுத்­த­வில்­லை­யென்­பது தமிழ் மக்­களால் முன்­வைக்­கப்­ப­டு­கிற குற்­றச்­சாட்­டாகும். என்­னதான் மூடு மந்­திர விளை­யாட்­டு­களை மேற்­கொண்­டாலும் மலிந்தால் சந்­தைக்கு வந்­துதான் ஆக­வேண்­டு­மென்ற கருத்­துக்கு ஏற்ப இன்னும் காலம் கடத்­தாமல் தமது நிலைப்­பாட்டை முன்­வைக்க வேண்­டிய அவ­சியம் அர­சாங்­கத்­துக்கு உண்டு என்­பதை யாரும் மறுத்­து­ரைக்க முடி­யாது.

பேச்­சு­வார்த்தை, கலந்­து­ரை­யாடல், அபிப்­பி­ராயம் பெறல், வட்­ட­மேசை மகா­நாடு, அனைத்துத் தரப்­பி­னரின் ஆலோ­ச­னைகள், அனைத்து கட்­சி­க­ளு­டைய கலந்­து­ரைப்­புகள் என்­ப­வற்றின் மீது தமிழ் மக்கள் எப்­பொ­ழுதோ நம்­பிக்கை இழந்து போனார்கள் என்­பது அறி­யப்­பட்ட ஒரு விட­யந்தான்.

எனவே இன்னும் அவர்கள் காத்துக் கொண்­டி­ருப்­பதில் காலத்தைக் கழிக்­க­மாட்­டார்கள் என்­பது தெளி­வான உண்மை. இவ்­வா­றான தளம்­பிய சூழ்­நி­லையில் எதன் மீதும் நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளாக இருக்­க­மாட்­டார்கள் என்­பதும் உண்­மையே.

தமிழ் மக்­க­ளுக்­கான தீர்­வொன்றை வழங்­கு­வதில் ஆளும் அர­சாங்கத் தரப்­பி­னருக்­கி­டையில் ஒரு ஒரு­மித்த கருத்தைக் காண்­பது என்­பது சவாலாகவே இருக்­கின்­றது.

தேசிய அர­சாங்­கத்தில் அங்­கம்­பெறும் கட்­சி­யென்ற வகையில் காணப்­படும் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பி­னர்­க­ளுக்­கி­டையே ஒரு­மித்த கருத்­தையோ அல்­லது நெகிழ்­வுத்­தன்­மை­யையோ காண­மு­டி­ய­வில்லை.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்கு நேர்த்­தி­யான அர­சியல் தீர்­வொன்று காணப்­பட வேண்­டு­மென்ற நிறை­வான எண்ணம் கொண்­ட­வ­ராகக் காணப்­ப­டு­கிறார்.

அதற்­காக தன்னை ஈடு­ப­டுத்­தியும் வரு­கின்றார். இந்த நல்­லெண்­ணத்தின் வெளிப்­பா­ட­ாகவே புதிய அர­சியல் சாச­னத்தை உரு­வாக்க வேண்­டு­மென்ற ஆர்­வமும் அர்ப்­ப­ணிப்பும் கொண்­ட­வ­ராக அவர் காணப்­ப­டு­கிறார்.

ஆனால் அவரின் தலை­மையின் கீழ் உள்ள கட்­சியின் அர­சியல் பீடா­தி­ப­தி­க­ளி­டமோ, அடுத்த நிலைத் தலை­வர்­க­ளி­டமோ, அமைச்­சர்­க­ளி­டமோ ஒரு ஒரு­மித்த கருத்தை காண்­ப­தென்­பது முயல் ­கொம்­பா­க­வே­யுள்­ளது. அர­சியல் தீர்வு விவ­காரம் பற்றி ஒவ்­வொ­ரு­வரும் வேறு­பட்ட, மாறு­பட்ட கருத்­து­க­ளையே கூறிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இது­போ­லவே தேசிய அர­சாங்­கத்தின் தலை­வி­தி­யென்று வர்­ணிக்­கப்­ப­டு­கின்ற ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைமைப் பீடத்­துக்கும் கீழ்­நிலை மட்­டங்­க­ளுக்­கு­மி­டையில் சம­தன்­மை­யான கருத்து நிலைகள் அர­சியல் தீர்வு விவ­கா­ரத்தில் காணப்­ப­ட­வில்லை. ஒவ்­வொ­ரு­வரும் ஒவ்­வொரு திசை சார்ந்த கருத்­தையே கூறிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இது ஒரு­பு­ற­மி­ருக்க தேசிய அர­சாங்­கத்தின் பிதா­ம­கர்கள் என்று சொல்லிக் கொள்­ளப்­படும் ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகிய இரு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் கூட தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு விவ­கா­ரம் ஒரு நேர்­கோட்டு தீர்­மா­னத்­துக்கு இன்னும் வர­வில்­லை­யென்­பதே உண்மை. ஒன்­றுக்­கொன்று குழம்பிப் போன கருத்­து­களைக் கூறு­கின்­ற­வர்­க­ளா­கவே பலர் காணப்­ப­டு­கி­றார்கள்.

இன்னும் ஆழ­மாக நோக்கிக் கூறப்­போனால் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வா­னது ஒற்­றை­யாட்சி முறை கொண்­ட­தாக இருக்கப் போகின்­றதா அல்­லது சமஷ்டி வடி­வி­லான ஆட்சி அதி­காரப் பகிர்வு மேற்­கொள்­ளப்­ப­டுமா என்­பது பற்றி வாய்­தி­றக்­காமல் கட்­டி­யக்­கா­ரர்­களை பேச விடு­வது போல் ஒற்­றை­யாட்சி பகிர்வு, சமஷ்டி முறையை நினைத்துக் கூடப்­பார்க்க முடி­யாது, மாகாண சபை அதி­கா­ரங்கள், பொலிஸ், காணி அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்டும், வழங்­கக்­கூ­டாது என பக்­க­வாத்­தி­யக்­கா­ரர்­களைக் கொண்டு ஏலம் விட்டுக் கொண்­டி­ருக்­கி­றது இலங்கை அர­சாங்கம்.

தற்­பொ­ழுது தமிழ் மக்கள் மத்­தியில் இவ்­வா­றா­ன­தொரு கருத்து வேக­மாக விரவி வரு­வது இன்­னு­மொரு துர்ப்­பாக்­கி­ய­மான சம்­ப­வ­மா­கவே பார்க்­கப்­பட வேண்டும்.

சமஷ்டி மற்றும் இணைப்பு இல்லா ஒரு அர­சியல் தீர்வை நாம் ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்­லை­யென கூட்­ட­மைப்பு கூறி­வ­ரு­கின்ற நிலையில் இவை இரண்­டுக்கும் இந்­நாட்டில் இட­மில்­லை­யென ஆளும் தரப்­பி­னரும் எதி­ர­ணி­யி­னரும் இனத்­துவக் குழுக்­களும் கூறி­வ­ரு­கின்ற நிலையில் தமிழ்த் தலை­மை­க­ளுக்­கி­டையில் விரி­சலும் உடைவும் ஏற்­ப­டக்­கூ­டிய சூழ­லொன்று திட்­ட­மிட்­ட­மு­றையில் உரு­வாக்­கப்­பட்டு வருகிறது என்ற கருத்து மலிவு பெற்று வருவதைக் காண்கின்றோம்.

இந்தக் கைங்கரியத்தை அரசைச் சார்ந்த ஒரு கட்சி திட்டமிட்டு வடிவமைத்து வருகின்றது என்ற அபிப்பிராயம் வேகமாகவே விரவி வருகிறது. அண்மையில் வெளிவந்த ஒரு செய்தியொன்றைப் பார்ப்போமானால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, இவ் அரசாங்க காலத்தில் கிடைக்கப்போவதில்லை, ஏமாற்றத்தையே தமிழ் மக்கள் சந்திக்கப் போகிறார்கள்.

எனவே தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பாராளுமன்ற ஆசனங்களைத் துறக்க வேண்டுமென்ற பகிரங்கமான கோரிக்கை ஓர் அமைப்பினால் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும்.

இது ஒருபுறமிருக்க இன்னுமொரு அதிர்ச்சியான செய்தி வெளிவருகிறது. யுத்தம் முடி­வ­டைந்த பின்பும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அவர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவதால் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. மீண்டும் ஆயுதம் ஏந்தினால் என்ன என்ற விரக்தி சிந்தனை கொண்டவர்களாக இளைஞர்கள் யோசிக்கத் தொடங்கியுள் ளனர் என்றும் பரவலாக பேசப்படுகிறது.

இவையெல்லாவற்றையும் உற்று நோக்குகின்ற போது தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய விதத்தில் அரசியல் சாசனம் கொண்டுவரப்படுமா? அவ்வாறு இல்லையாயின் தமிழ் மக்களின் எதிர்கால நிலைமைகளும் நகர்வுகளும் எவ்வாறு இருக்கப் போகின்றன?

ஆச்சரியப்படும் வகையில் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் புதிய அரசியல் சாசனம் வடிவமைக்கப்படுமாக இருந்தால் அந்த அரசியல் சாசனம் சர்வசன வாக்கெடுப்புக்கு விடப்படுகின்ற போது ஏகோபித்த ஆதரவை எட்ட முடியுமா? வெற்றியடையுமா என்ற சந்தேகங்களுக்கு எப்பொழுது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

திரு­மலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-24#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.