Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடுவதன் அவசியம்

Featured Replies

அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடுவதன் அவசியம்

 

அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­று­வ­தற்கு எதிர்­பார்த்­தி­ருக்கும் அபி­வி­ருத்தி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­ல­மா­னது அர­சியல் கட்­சிகள் மத்­தி­யிலும் பல்­வேறு தரப்­பினர் மத்­தி­யிலும் பாரிய சர்ச்­சை­க­ளையும் முரண்­பா­டு­க­ளையும் தோற்­று­வித்­துள்­ளது. சட்­ட­மூ­லத்தை கொண்­டு­வந்­துள்ள ஐக்­கி­ய­ தே­சியக் கட்­சியைத் தவிர ஏனைய அர­சியல் கட்­சிகள் இந்த அபி­வி­ருத்தி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லத்தை எதிர்த்து வரு­கின்­றன.

 மாகா­ண­ச­பை­களின் விவ­கா­ரத்­துடன் சம்­பந்­தப்­பட்­டுள்ள சட்டம் என்­பதால் இதனை அனைத்து மாகாண சபை­களிலும் நிறை­வேற்­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஆனால், ஏற்­க­னவே கிழக்கு மாகா­ண­சபை தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து மாகா­ண ­ச­பை­களும் இந்த சட்­ட­மூ­லத்தை தோற்­க­டித்­துள்­ளன.

இந்­நி­லையில் மாகாண சபைகள் இந்த அபி­வி­ருத்தி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லத்தை தோற்­க­டித்­ததன் மூல­மாக பாரா­ளு­மன்­றத்தின் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­ற­வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி இந்த சட்­ட­மூ­லத்தை எதிர்ப்­பதன் கார­ண­மாக பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் இதனை நிறை­வேற்ற முடி­யுமா என்ற சிக்கல் நிலை தோன்­றி­யுள்­ளது. 

அது­மட்­டு­மன்றி தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் இந்த சட்­ட­மூ­லத்தை ஆத­ரிக்­க­வில்லை. இதன் கார­ண­மாக இந்த அபி­விருத்தி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூலம் விட­யத்தில் அர­சியல் கட்­சிகள் மத்தியில் குறிப்­பாக ஆளும் கட்­சியில் அங்கம் வகிக்கும் அர­சியல் கட்­சிகள் மத்­தி­யிலும் பாரிய சர்ச்சை நிலை தோன்­றி­யுள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யா­னது நாட்டில் துரித அபி­வி­ருத்­தியை மேற்­கொள்­ள­வேண்­டு­மென்றும் தொழில் ­வாய்ப்­புக்­களை உரு­வாக்­க­வேண்­டு­மென்றும் கோரியே இந்த சட்­ட­மூ­லத்தை முன்­வைத்­துள்­ளது. ஆனால் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியை தவிர்ந்த ஏனைய கட்­சிகள் இதனை எதிர்க்­கின்­றதன் கார­ண­மாக இது தொடர்பில் முதலில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி அனைத்து கட்­சி­க­ளு­டனும் ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வர­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

அதா­வது தற்­போ­தைய நிலை­மையில் நாட்டை விரை­வாக கட்­டி­யெ­ழுப்­பு­வதும் பொரு­ளா­தா­ரத்தை முன்­னேற்­று­வதும் புதிய தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வதும் மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும். அதற்கு புதிய சட்­ட­மூ­லங்கள் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­ப­டு­வதும் அவ­சி­ய­மாகக் காணப்­ப­டு­கின்­றது. ஆனால் அவ்­வாறு சட்­ட­மூ­லங்­களை நிறை­வேற்ற அர­சாங்கம் முயற்­சிக்­கும்­போது அனைத்து கட்­சிகள் மத்­தி­யிலும் இணக்­கப்­பா­டுகள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

 எவ்­வா­றெ­னினும் இந்த விவ­காரம் தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள ஐக்­கி­ய­ தே­சி­யக்­கட்சி அபி­வி­ருத்தி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லத்தை மாகா­ண­ச­பைகள் எதிர்த்­தாலும் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றியே தீருவோம் என்று தெரி­வித்­தி­ருக்­கி­றது. அத்­துடன் இச்­சட்­டத்­தால் சிறப்பு அமைச்சர் ஒருவர் உரு­வா­குவார் என கூறு­வ­தற்கும் சிறப்பு அமைச்­ச­ருக்கு பலம் குவிந்­து­விடும் என அக்­க­றைப்­ப­டு­வ­தற்கும் கூட்டு எதி­ர­ணி­யி­ன­ருக்கும், அமைச்சர் டிலான் போன்­ற­வர்­க­ளுக்கும் என்ன அரு­கதை உள்­ளது என தெரி­ய­வில்லை. 

கடந்த அர­சாங்­கத்தில் குவிந்­தி­ருந்த அதி­கா­ரத்தை விடவா தற்­போது அதி­காரம் குவிந்­துள்­ளது? இச்­சட்­ட­மூலம் பலத்தை நிரூ­பிப்­ப­தற்­காக கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. மாறா­க ­அ­பி­வி­ருத்­தியை மட்­டுமே இலக்­காக கொண்டு கொண்டு­வ­ரப்­ப­டு­கின்­றது என்றும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அத்­துடன் முன்­வைக்­கப்­படும் எதிர்ப்­புக்கள் கார­ண­மாக எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­ட­ப்போ­வ­தில்லை. 

இந்­நாட்டின் அபி­வி­ருத்­தியை கருத்­திற்­கொண்டு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள சட்­ட­மூ­லத்தை நிரா­க­ரிக்க ஐக்­கிய தேசிய கட்சி தயா­ரில்லை. இச்­சட்­ட­மூலம் சிறப்பு அமைச்­சரை உரு­வாக்­கு­வ­தற்கு கொண்­டு­வ­ரப்­பட்ட சட்­ட­மூலம் என பொய்­யான அபிப்­பி­ரா­யத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். அபி­வி­ருத்தி சிறப்பு ஏற்­பா­டுகள் சட்­ட­மூலம் சிறந்த நாட்டை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு கொண்­டு­வ­ரப்­பட்ட சட்­ட­மூலமென்­பதை அனை­வரும் புரிந்­து­கொள்ள வேண்டும் என்றும் ஐக்­கி­ய­ தே­சி­யக்­கட்சி குறிப்­பிட்­டுள்­ளது.

நாட்டின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு மாகாண அர­சாங்­கத்தின் அதி­காரம் தேவை­யில்லை. மத்­திய அரசு மகா­வலி அபி­வி­ருத்தி திட்­டத்தின் போதும் கல்­லோயா அபி­வி­ருத்தி திட்­டத்தின் போதும் செயற்­பட்­டதைப் போன்று அதி­கா­ரத்தை உப­யோ­கிக்க முடியும். மாகாண சபை­களில் இந்த சட்­ட­மூலம் தோற்­க­டிக்­கப்­பட்­டாலும் மத்­திய அர­சாங்­கத்­தினால் இச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த முடியும் என்றும் பிர­தான ஆளும் கட்­சி­யான ஐக்­கிய தேசி­யக்­கட்சி சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றது.

அந்­த­வ­கையில் மாகா­ண­ச­பைகள் என்­ன தான் அபி­வி­ருத்தி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட ­மூ­லத்தை தோற்­க­டித்­தாலும் அதனைப் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றியே தீருவோம் என்று ஐக்­கிய தேசி­யக்­கட்சி சூளு­ரைத்­தி­ருக்­கி­றது. ஆனால், நடை­மு­றையில் இந்த விட­யத்தில் பாரிய சிக்­கல்கள் உள்­ளன என்­பதை அனைத்துத் தரப்­பி­னரும் புரிந்­து­கொள்­ள­வேண்டும். குறிப்­பாக மாகா­ண­ச­பைகள் ஏன் இந்த சட்­ட­மூ­லத்தை தோற்­க­டித்­தன என்­பது குறித்து அதி­கா­ரத்தில் இருக்­கின்­ற­வர்கள் சிந்­திக்­க­வேண்டும். 

மாகா­ண­ச­பை­களின் அதி­கா­ரங்கள் இந்த சட்­ட­மூ­லத்தின் ஊடாக வலு­வி­ழக்கச் செய்­வ­தாக கூறியே மாகா­ண­ச­பைகள் இதனை தோற்­க­டித்­துள்­ளன. எனவே இது தொடர்பில் தெளிவு அவ­சி­ய­மாகும். இந்த சட்­ட­மூலம் தொடர்பில் ஏற்­க­னவே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நான்கு மாகாண சபை­களின் முத­ல­மைச்­சர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­கிறார். 

அதன்­போது இந்த சட்­ட­மூ­லத்தின் ஊடாக மாகா­ண­ச­பை­களின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­ப­ட­மாட்­டாது என்றும் திருத்­தப்­பட்ட சட்­டமூலம் விரைவில் முன்­வைக்­கப்­படும் என்றும் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். எவ்­வா­றெ­னினும் ஏற்­க­னவே முன்­வைக்­கப்­பட்ட சட்­ட­மூ­லமே தற்­போது கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகா­ணங்­களில் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது. அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் துரித அபி­விருத்­தியை மேற்­கொள்­ளவும், புதிய தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்கி மக்­களின் வரு­மா­னத்தை உயர்த்­தவும் அவ­ச­ர­மான வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

 அதற்­கா­க ­வேண்டி புதிய சட்­ட­மூ­லங்கள் அவ­சி­ய­மா­கின்­றன என்­பதை நாம் ஏற்­றுக்­கொள்ள­வேண்டும். அந்­த­வ­கையில் துரித பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுப்­ப­தற்­காக அவ்­வா­றான சட்­ட­மூ­லங்­களை நிறை­வேற்ற அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது அவசியமாகும். ஆனால், அவ்­வாறு அர­சாங்கம் முன்­கொண்­டு­வரும் சட்­ட­மூ­லங்கள் அனைத்து அர­சி­யல்­கட்­சி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டப்­பட்டு நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும். அல்­லது பரந்­து­பட்ட ரீதி­யி­லான கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி இவ்­வா­றான சட்­ட­மூலங்­களை கொண்­டு­வ­ர­வேண்டும். 

மாறாக தேசிய அர­சாங்­க­மொன்று பத­வியில் இருக்­கின்ற நிலையில் ஒரு கட்­சியினர் மட்டும் இவ்­வாறு திடீ­ரென சட்­ட­மூ­லங்­களை முன்­வைத்தால் அவை சர்ச்­சை­க­ளையும் முரண்­பா­டு­க­ளையும் தோற்­று­விப்­பது தவிர்க்க முடி­யாமல் போய்­விடும். தற்­போது தேசிய அர­சாங்­கத்தின் பிர­தான பங்­கா­ளிக்­கட்­சி­யான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி இந்த அபி­வி­ருத்தி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூலத்தை எதிர்த்­துள்­ளது. 

 அதன் கார­ண­மா­கவே மாகா­ண­ச­பைகள் இந்த சட்­ட­மூ­லத்தை தோற்­க­டித்­துள்­ளன. அது­மட்­டு­மன்றி அர­சாங்­கத்தின் வர­வு-­–செ­ல­வுத்­திட்­டத்­திற்கு கூட ஆத­ரவு வழங்­கிய பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லத்­திற்கு ஆத­ரவு தெரி­விக்­க­வில்லை. அது­மட்­டு­மன்றி தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஆளும்­கட்­சி­யாக உள்ள வட­மா­காண சபை ஏக­ம­ன­தாக இந்த சட்­ட­மூ­லத்தை நிரா­க­ரித்­துள்­ளது. மாகா­ண­ச­பை­களின் அதி­கா­ரங்கள் வலு­வி­ழக்கச் செய்­யப்­படும் என்ற அச்­சத்­தி­லேயே இவ்­வாறு வட­மாகாண­சபை சட்­ட­மூ­லத்தை ஏக­ம­ன­தாக நிரா­க­ரித்­தி­ருக்­கி­றது.

அந்­த­வ­கையில் அதி­க­மான அர­சியல் கட்­சிகள் சட்­ட­மூ­லத்தை முழு­மை­யாக எதிர்க்­கின்ற நிலையை அறிய முடி­கின்­றது. எனவே, ஐக்­கி­ய­ தேசி­யக்­கட்­சி­யா­னது அனைத்து அர­சியல் கட்­சி­க­ளு­டனும் இந்த சட்டமூலம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியமாகும். குறிப்பாக இந்த சட்டமூலத்தின் அவசியம் குறித்து தெளிவுபடுத்தல்கள் முக்கியமானதாகும்.

 அதுமட்டுமன்றி எக்காரணம் கொண்டும் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதாக இந்த சட்டமூலம் அமைந்துவிடக்கூடாது. மாகாணசபைகளுக்கான அதிகாரங்கள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே மாகாணசபைகளினால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலமும் மாகாண சபைகளின் அதிகாரங்களில் கைவைக்குமானால் அதனை மாகாணசபைகள் எதிர்ப்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்காது.

 எனவே, அரசாங்கம் இந்த விடயத்தில் தூர நோக்குடனும் அதேநேரம் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும். மாறாக ஏனைய கட்சி­­களுடன் கலந்துரையாடாமல் தனித்து சட்டமூலங்களை கொண்டு வந்தால் அவற்றை நிறைவேற்றுவது தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவில் மிகவும் கடினமானதாக அமைந்துவிடும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கம் விரைவில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமென எதிர்பார்க்கிறோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-31#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.